Wednesday, August 6, 2014

இது என் AREA அல்ல.


                                        இது என் AREA அல்ல.( பட்டினத்தார்)
                                        -----------------------------


அவர் பிச்சை பெற்று வந்ததை கல் தரையின் மீது வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடமே வந்து ஒருவன் பிச்சை கேட்டான். அவர் சிரித்து கொண்டே ‘நான் ஒரு சன்னியாசி ஒன்றுமில்லாத ஆண்டி. என்னிடத்தில் உனக்குக் கொடுக்க ஏதுமில்லை. அதோ மேலைக் கோபுர வாசலில் இருக்கிறான் என் சீடன்.சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமல்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனிடம் போய்க் கேளுங்கள்என்று கை காட்டி விடுகிறார்.
இதைக் கேட்ட அவர் சீடன் ஓடிவந்து ‘சுவாமி, என்னைப் போய் சம்சாரி என்கிறீர்களேஎனக்கேட்டார். ‘உனக்கென ஒரு திருவோடும் நாயும் உடைமைகளாக உள்ளது.எனக்கென என்ன உள்ளது .?என்று வினவ அந்த சீடர் ‘குடும்ப வாழ்க்கையை வெறுத்து அரசையும் இன்ன பிறவற்றையும் துறந்து விட்டபின்னும் இந்தத் திருவோடும் நாயுமல்லவா என்னை சம்சாரியாக்கி விட்டதுஎன வருந்தி தன் கையிலிருந்த திருவோட்டைத் தூக்கி எறிய அது நாயின் மேல் பட்டுத் தெறிக்க திருவோடும் உடைந்தது நாயும் மடிந்தது.
இதில் முதல் ஆண்டி பட்டினத்தார் என்று அறியப் படுபவர். அவரது சீடன் எனப்படுபவர் பத்ருகிரி என்று பெயர் பெற்ற அரசன். உஜ்ஜயினியை ஆண்டு வந்தவர். லௌகீகம்,நீதி மற்றும் ஆன்மீக விஷயங்களில் கூர்மையான ஞானம் உள்ளவராக இருந்தார்.
மன்னனின் மாளிகையில் பொன்னும் மணியும் ரத்தினமும் மலிந்திருந்தன. கள்வர்கள் சிலர் இந்த அரண்மனைச் செல்வங்களைக் கொள்ளையிடதிட்டமிட்டனர். களவுப் பணிக்குச் செல்லும் முன் காட்டுப் பிள்ளையாரை வணங்கி விட்டுத் தம் களவுப்பணியினைச் செய்வர்.அவ்வாறாக அரண்மனைப் பொக்கிஷத்தில் கொள்ளையடித்த பொன் பொருளையெல்லாம் எடுத்துத் திரும்பும் வழியில் நள்ளிரவு நேரத்தில் அக்கள்வர் ஒரு முத்து மாலையை காணிக்கையாகக் காட்டுப் பிள்ளையாரை நோக்கி எறிந்து சென்றனர். அந்த முத்து மாலை குறி தவறி அங்கு தியானத்தில் ஆழ்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. தம்மை மறந்த மோன நிலையில் இருந்த பட்டினத்தார் இதை உணரவில்லை. பிறகென்ன.? களவு போன பொருட்களைத் தேடிவந்த காவலர்கள் பட்டினத்தாரின் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கண்டு அவரது தியானத்தைக் கலைத்து முத்துமாலை பற்றிக் கேள்விகள் கேட்க ஏதும் கூற முடியாமல் தவித்த பட்டினத்தாரே கள்வரின் தலைவர் என்று அரசனிடம் அழைத்துச் சென்றனர். பட்டினத்தாரின் மௌனம் அரசனை அவரே கள்வன் எனத் தீர்மானம் செய்ய வைத்தது. அவரைக் கழுவிலேற்ற ஆணையும் பிறப்பித்தார்.
பட்டினத்தாரை விடிந்தால் கழுவிலேற்றப் போகும் விபரத்தைத் தன் பட்டத்து ராணியிடம் தெரிவிக்கச் சென்றவர் ராணியைக் காணாததால் ஏதோ ஒரு உந்துதலால் குதிரைலாயத்தின் பக்கம் சென்ற மன்னரின் பார்வை அங்கு அசுவபாலன் என்னும் குதிரைக்காரன் மடியில் ராணி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.மேலும் ராணி குதிரைக்காரனிடம்தான் அவனுக்குக் கொடுத்த கனியை உண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவன் தான் உண்ணவில்லை என்றும் அதை அவன் ஆசை நாயகிக்குக் கொடுத்துச்சாப்பிடச் சொன்னதாகவும் கூறுகிறான். அந்தப் பெண் அந்தப்புர நாயகி என்ற முறையில் அதை அரசனுக்குக் கொடுதிருந்தாள். அக்கனியை முனிவர் ஒருவர் தனக்குக் கொடுத்து அதனை உண்டவர் நீண்டகாலம் இளமையுடன் இருப்பார் என்று தெரிவித்ததும், அதை அவர் ராணிக்குக் கொடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது

பட்டத்து ராணியின் வஞ்சகச்செயல் மன்னரை வெகுவாக பாதித்தது. மேலும் பட்டினத்தாரை கழுவேற்ற அவர் போட்டிருந்த உத்தரவும் அவரை உறங்க விடாமல் செய்தது.
விடிந்தது.கழுமரம் தயாராய் இருந்தது. பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றினார்கள். உலக சிந்தனை துறந்து சதா சிவ சிந்தனையில் இருக்கும் பட்டினத்தார் மனமுருகி சிவனை நினைத்து

‘என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே

எனத் தொடங்கும் பாடலைப் பாட கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அரசன் பட்டினத்த்தாரிடம் மன்னிப்புக் கேட்டான்.பட்டினத்தடிகளுக்கு பத்ருகிரியார் ஞான வழியில் பக்குவமடைந்து இருப்பது மற்றும் அவர் குறிப்புணர்ந்த பட்டினத்தடிகள் மன்னரின் பட்டத்து ராணி அவரை ஏமாற்றி வருவது தெரிந்தது.
வாரிசில்லாத உஜ்ஜயினி ஆட்சியை மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு ‘எல்லாம் துறந்தேன் இனி நான் உங்கள் சீடன்என்று கூறி அவரைத் தொடர்ந்தார்.
அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது பட்டத்து ராணியின் சடலம் ஒருகுதிரை மேல் வந்து கொண்டிருந்தது. ராஜத் துரோகமிழைத்த குற்றத்துக்காக மக்கள் ராணியைக் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள். பத்ருகிரியின் அருகில் வரும்போது அச்சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதை விட்டு விலகி அவர் பட்டினத்தாருடன் நிர்விகல்பமாக சென்று கொண்டிருந்தார். இருவரும் நடந்து செல்கையில் இரவு உஜ்ஜயினி காளி கோவிலை அடைந்தனர். அங்கு தங்கி இருந்த போது நாய்க்குட்டியின் சப்தம் கேட்கவே இருவரும் போய்ப் பார்த்தனர். பத்ருகிரியார் அந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும்  சுவாமி, இதை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்றார். தன் ஞானசக்தியால் அது பட்டத்து ராணியின் மறுபிறவியே என்று தெரிந்து கொண்ட பட்டினத்தடிகள் அதைத் தன் கையில் எடுக்கவே அது இறந்து போனது. ஞானியின் கைபட்டவுடன் பாவப் பட்ட ஜன்மம் புனிதமடைந்து விடுகிறது. குட்டியை இழந்த தாய் நாய் மட்டும் அவர்களைப்பின் தொடர்ந்து வந்தது.
கதைகள் கதைகள் கதைகள்...........! .ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது அவர் குறித்த கதைகள் முன் வந்து நிற்கின்றன. பட்டினத்தாரின் துறவு பற்றிக்கேள்விப்பட்டு அதை பற்றிய விவரங்களை அணுகினால் அவர் குபேரனின் பிறப்பு என்றும் சிவபெருமான் வெள்ளிப்பனிமலை மீது உமாதேவியுடன் இருந்த திருக்கோலத்தை குபேரனுக்கு பல இடங்களில் காட்சிதந்து வரும்போது குபேரன் திருவெண்காட்டுக்கு அருகில் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது அதன் செழிப்பில் மதி மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் சிவபெருமான் ‘நீ மானுடப் பிறவி எடுத்து திருவெண்காட்டில் உறையும் எம்மை வணங்கி வேதியர் ஒருவரிடம் தீட்சை பெற்று உரிய நேரத்தில் முக்தி அடைவாயாக என்று ஆணையிட்டார்.
‘பூவுலக மாந்தர்தம்  மையலில் சிக்குண்டு அழியா வண்ணம் அடியேனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் ‘ என்று குபேரன் வேண்ட். இறைவனும்
‘மோகத்தீயில் நீ சிக்குற மாட்டாய். பூவுலகிலும் குபேரனைப் போலவே வாழ்ந்து, அனைத்தையும் துறந்து ஞானம் பெற்று எம்மை அடைவாய்என்று கூறி மறைந்தார்.
பட்டினத்து அடிகளின் பாடல்களை ஆராய்ந்தவர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண்டிலும் இரு வேறு பட்டினத்தடிகள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். இது இப்படி இருக்க பன்னிரு திருமுறை வரிசையில் பதினோறாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படும் படைப்புகளின் நற்சிந்தனைக்காக அறியப் படுவதே நலம் என்று கருதி வாசிக்க முற்பட்டால் , மேலே சொன்ன கதைகள் சிந்தனையை இடருகின்றன.
ஆக பட்டினத்தாரின் வாழ்க்கையை அறிய முற்படுவதை விட அவர் எழுதிச் சென்ற பாடல்களை ரசிப்போம். அதில் இருந்து கிடைக்கும் சாரங்களை ருசிப்போம்.
பட்டினத்தாரைப் பற்றி படிக்கத் துவங்கும் முன் அவர் துறவு மேற்கொள்ளக் காரணமான ஒரு ஓலை நறுக்கில் கண்ட வாசகமே முன் நிறுத்தப் படுகிறது. “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கேஎன்ற இந்த வார்த்தைகளே அதிகம் கூறப்படுகின்றன. இன்றைய சிறார்களும் அறிந்து கொண்டிருப்பதே இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது என்று. இருந்தாலும் சில வார்த்தைகள் சிந்தனைகள் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குச் சக்தி பெறுகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அன்னை இறந்தபோது எல்லா உறவுகளையும் துறந்த பட்டினத்தடிகளால் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. பாசத்தால் ஆற்றமாட்டாமல் அனைவரும் தேம்பி அழும்படி பத்து பாடல்களை பாடினார். அதில் இலக்கியச் சுவையும் விஞ்சி நிற்கிறது அவையாவன:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

இங்கும் ஒரு கதை. பட்டினத்தடிகள் இந்தப்பத்து பாடல்களில் யானுமிட்ட தீ மூள்க மூள்கவே எனப் பாடியதும் தீ மூண்டதாம் அப்படியே இருந்தாலும் அந்நேரத்தில் பாடிய பாடல்களை படியெடுத்து வைத்துக் கொண்டது யார். ? கடைசிப் பாடலில் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள் என்கிறார். வழக்கப்படி வெந்து நீறானவளுக்கு பால் தெளிப்பது மறு நாள்தானே. ( பாடல்களைப் படிக்கும்போது இம்மாதிரியான நெருடல்கள் என்னுள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.)
ஆன்ம சுகம் பெற ஒருவன் எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பட்டினத்தார்.

ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல் வெங்கோப நெஞ்சில்
நாடாமல்நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே..

பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் பழுது சொல்லி
வாராமல் பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து
பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே.

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல் குத்திரம் கோள் களவு
கல்லாமல் கைதவரோடு இணங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே.

அவரது பாடல்கள்நேரான ஓட்டம் கொண்டவை. கற்பவர் மனசை வசப்படுத்தும். எளிமையும் தெளிவும் உடையவை. பட்டினத்தார் ஈசனிடம் சிந்தையை வைத்திருந்தாலும் இல்லற வாழ்க்கையையும் வாழ்ந்தவர்தான்
கடைசியாக அவர் பற்றிய ஒரு குறிப்பினையும் தருகிறேன். ஒரு முறை அவர் வயலொன்றின் வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தாராம் வரப்பில் நடந்து சென்ற இரு பெண்களில் ஒருத்தி ‘யாரோ மகான், களைப்போடு படுத்திருக்கிறார் ‘என்று கூறி வணங்கிச் சென்றாளாம். கூடவே வந்த இன்னொருத்தி ‘ இவர் பெரிய மகானா.?தலையணை வைத்துத் தூங்கும் சுகம் வேண்டி வரப்பைத் தலையணையாக வைத்திருப்பவரையா மகான் என்கிறாய்என்று கூறினாளாம்.  அவர்கள் சென்றதும் வரப்பிலிருந்து தலையை கீழே வைத்துப் படுத்துகொண்டாராம். சிறிது நேரத்தில் அதே வழியில் திரும்பி வந்த அவ்விரு பெண்களுள் முதலானவள் ‘பார் வரப்பை விட்டுக் கீழே படுத்திருக்கிறார் ‘என்றாள். அதற்கு இரண்டாமள் “ தன்னைப் பற்றி யார் என்னவெல்லாம் பேசுகிறார்களென்று தெரிந்து கொள்வதில் பற்று வைத்திருக்கிறாரேஎன்று கூறினாள் ஞான விளக்கம் பெற இன்னும் நிறைய இருக்கிறது என்று பட்டினத்தார் தெரிந்து கொள்ள இச்சம்பவமும் எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது.
ஒருமுறை பட்டினத்தடிகள் துறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி “ நீர் துறவறம் பூண்டதால் அடைந்த பயன் யாது .?என வினவ இவர் “ நீர் நிற்கவும் யாம்  இருக்கவும் பெற்ற தன்மையே அது        
        என்றாராம்....!(நிறையவே பாடல்கள் கண்டேன் நீளம் கருதி என் மனம் கவர்ந்தவற்றை மட்டும் பகிர்ந்திருக்கிறேன் )





      

.

54 comments:

  1. விக்கிரமாதித்தன் கதையிலும் இதே மாதிரி ஒரு பத்திரகிரி கதை வருகிறது.

    நீவிர் கூறியது போல் இந்தப் பாடல்களை படியெடுத்து வைத்தது யார் என்று யோசித்தால் விடை ஏதும் இல்லை.

    ReplyDelete
  2. பாடலகள்தான் எவ்வளவு எளிமை, இனிமை
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. உங்கள் மனம் கவர்ந்த பட்டினத்தாரின் பாடல்கள் எல்லாம் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. உங்கள் வழக்கத்துக்கு மாறாக சற்றே நீண்ட பதிவு. சில விஷயங்கள் கேள்விப் பட்டவை. பட்டினத்தார் குபேரனின் மறுபிறப்பு என்பது இப்போதுதான் தெரிகிறது.

    நம் புராணங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முன்கதை, பின்கதை எல்லாம் இருப்பது வெகு சிறப்பு. இப்படிக் கோர்வையாக எல்லாவற்றியும் கோர்க்கவும் எவ்வளவு உழைப்பு வேண்டியதிருக்கும்?

    பட்டினத்தார் பாடல்களில் 'முன்னை இட்ட தீ' மற்றும் பேரினை நேக்கிப் பிணம் என்று பெயரிட்டு' பாடலும் ரொம்பப் பிரபலம்!

    ReplyDelete
  5. அன்புடையீர்..

    தாங்கள் கூறுவது போல -
    சிந்தனையை இடறும் சில விஷயங்களைத் தவிர்த்து - பட்டினத்தாரின் பாடல்களும் -

    சில வார்த்தைகளும் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குச் சக்தி பெறுகின்றன என்பதே நிஜம்.

    சந்நியாசியும் சம்சாரியும் சம்பவம் நிகழ்ந்தது திருவிடைமருதூரில்!..

    வழிகாட்டும் வரலாற்றை - வகை காட்டி இனிய பதிவில் தந்தமைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete

  6. //பாடல்களைப் படிக்கும்போது இம்மாதிரியான நெருடல்கள் என்னுள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை//

    அவரது அன்னையின் உடலுக்கு தீ இட்ட பிறகு இந்த பாடல்களை பாடி இருக்கலாம். காலப்போக்கில் அவர் ‘தீ மூள்கவே’ என்ற பாடியபோது உடல் தீ பற்றி எரிந்ததாக சிலர் புனைந்து சொல்லியிருக்கலாம்.

    பட்டினத்தார் பாடல்களில் சிலவற்றை அறிந்திருந்தாலும் அறியாதவைகளையும் தந்தமைக்கு நன்றி.

    திரு ஸ்ரீராம் அவர்கள் குறிப்பிட்டுள்ள ‘பேரினை நேக்கிப் பிணம் என்று பெயரிட்டு' என்ற பாடலை திருமூலர் பாடி இருக்கிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. பட்டினத்தார் பற்றிய
    பகிர்வுகள் சிந்திக்கவைத்தன..

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    பாடல்களை படி எடுத்து வைத்தவர் நிச்சயம் கதைகளையும் சொல்லி இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  9. @ கரந்தை ஜெயக்குமார்
    பாடல்களின் எளிமையே என்னையும் கவர்ந்தது ஐயா. நன்றி.

    ReplyDelete

  10. @ கோமதி அரசு.
    பட்டினத்தார் பாடல்கள் சிலவற்றைத்தான் பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  11. @ ஸ்ரீராம்
    குபேரனின் மறு பிறப்பு என்கிறார்கள். குபேரனே கதை என்னும் போது இந்த மறு பிறப்பும் இன்னொரு கதையே. பட்டினத்தார் புராணத்தில் சேர்த்தியா.? பதிவு நீண்டதன் காரணம் கொடுத்திருந்த பாடல்களால் என்று நினைக்கிறேன். ‘பேரினை நீக்கி ‘பாடல் பட்டினத்தாருடையது அல்ல என்று தோன்றுகிறது. எனக்கும் நடனசபாபதி சொல்வது சரியென்று படுகிறதுவருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  12. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  13. @ வே.நடனசபாபதி
    புனைவுகள் என்று தோன்றுவதைத்தான் கதைகள் என்று சொல்லி இருக்கிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ இராஜராஜேஸ்வரி.
    சிந்திக்க வைக்கும் பதிவு என்பதற்கு நன்றி மேடம். படிப்பதில் நல்லதை உள்ளம் ஏற்பதைக் கொள்வோம் மற்றதைத் தவிர்ப்போம்.கருத்துப் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  15. ஆம், அது திருமூலரின் திருமந்திரம்தான். மன்னிக்கவும்.

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
    பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
    சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே-

    இதைத் தேடும்போது உங்கள் பழைய பதிவொன்றின் சுட்டிகூடக் கிடைத்தது ஸார்!

    http://gmbat1649.blogspot.in/2013/12/blog-post_11.html

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்
    எதையோ தேடப்போய் என் பழைய பதிவு ஒன்று வாசித்தீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் சில நேரங்களில் எங்கே படித்தேன் என்று தெரியாமல் இருப்பதும் உண்டு. மீள் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  17. பட்டினத்தார் ஒருவரா அல்லது மூவரா என்ற ஆராய்ச்சி உண்டு. ஆராய்ச்சி எப்படி இருந்த போதிலும் ஒரே பட்டினத்தாராக பாவித்துதான் அவரது வரலாற்றையும் பாடல்களையும் எல்லோரும் படிக்கின்றனர். அவரது நிலையாமைப் பாடல்கள் நெஞ்சை உலுக்கும் வண்ணம் உள்ளன. தாய் இறந்தபோது பாடும் பாடல்கள் நம்மையும் அறியாமல் கண்ணீரை வரவழைக்கும்.

    `பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல்
    ஆரும் துறக்கை அரிது`

    என்று பாடியுள்ளார் தாயுமானவர். அந்த பட்டினத்தார் வாழ்க்கையை வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவில் படித்தது ஒரு இலக்கிய சொற்பொழிவை கேட்டது போல் இருக்கிறது. ஒரு நீண்ட பதிவாகத் தந்தமைக்கு நன்றி!

    உங்கள் பதிவின் தலைப்பு ” இது என் AREA அல்ல.( பட்டினத்தார்)” என்பது. உண்மையில் ஞானத்தைத் தேடும்போதெல்லாம் அனைவருக்கும் – ஏன் உங்களுக்கும் - உரிய AREA தான்..

    ReplyDelete
  18. // நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
    எல்லோரும் வாருங்கள்//

    சரிதான். நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள். என்கிறார். இறந்த இரண்டாம் நாள் தீ மூட்டியதால் அன்றே இரண்டாம் நாள் பால் தெளிக்கும் சடங்கையும் சேர்த்துச் செய்திருப்பதால் அனைவரிடமும் அப்படியே சொல்லி இருக்கிறார்.

    பட்டினத்தார் குறித்து நான் எழுதியதன் சுட்டியைப் பின்னர் தருகிறேன்.

    ReplyDelete

  19. @ தி. தமிழ் இளங்கோ
    நான் எதிர்பார்த்ததுபோல் நீங்கள் பட்டினத்தாரிடம் அதிக ஈடுபாடு உள்ளவர் என்றே தெரிகிறது. அவரது பாடல்களால் கவரப்பட்டே அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன் பதிவாகவும் எழுதிவிட்டேன். இந்த மாதிரி பதிவுகள் நான் எழுதியது இல்லை என்பதால் இது என் ஏரியா இல்லைஎன்றேன். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ தி. தமிழ் இளங்கோ
    நான் எதிர்பார்த்ததுபோல் நீங்கள் பட்டினத்தாரிடம் அதிக ஈடுபாடு உள்ளவர் என்றே தெரிகிறது. அவரது பாடல்களால் கவரப்பட்டே அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன் பதிவாகவும் எழுதிவிட்டேன். இந்த மாதிரி பதிவுகள் நான் எழுதியது இல்லை என்பதால் இது என் ஏரியா இல்லைஎன்றேன். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ கீதா சாம்பசிவம்
    உண்மையில் எனக்குப் பட்டதைச் சொல்கிறேன். நன்றாகவே சமாளிக்கிறீர்கள். வருகைக்கும்கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  22. பாட்டினத்தார் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்தான் இன்றும் வேறு வேறு வடிவில் வேறு வேறு பிம்பத்துடனும், பிரச்சினைகளுடனும் வாழ்கிறார்கள். அறியாமை என்றுமே ஒழியப்போவதில்லை . Do human beings really evolve? I suspect as the ignorance always exist with them! :-)

    ReplyDelete
  23. ஐயா, சடங்குகளின் நியமம் குறித்து அறிந்திருப்பதாலேயே சொன்னேன். இதில் சமாளிப்பதற்கு எதுவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கட்டாயம் ஏதும் இல்லை. நியமங்கள் அறிந்தவருக்குப் புரிந்தால் போதுமானது.

    ReplyDelete
  24. வருண், மூடநம்பிக்கைகள் வேறு, பட்டினத்தாரின் கொள்கைகள் வேறு. மூட நம்பிக்கையை உண்மையாக பக்தி செலுத்துபவரோ ஆன்மிக ஈடுபாடு கொண்டவரோ ஆதரிப்பது இல்லை. ஆனால் பக்தியையே மூட நம்பிக்கை என்றால் என்ன செய்வது? :)

    ReplyDelete

  25. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படியோ சொல்லி விட்டு செய்து விட்டுப் போகட்டும் என விடாமல் அதிலே நெருடல்களை ஏன் பார்க்க வேண்டும்? :)

    ReplyDelete
  26. GS: I said, ignorance/ignorant! Not superstition/superstitious! :-)

    Human beings are ignorant always- no matter how much we are scientifically developed or culturally civilized. That's why, கற்றது கைமண் அளவுனு சொல்றோம் இல்லையா? :)

    ReplyDelete
  27. பட்டினத்தாரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது சார். ஆகையால் இந்த பதிவுக்கு எப்படி கருத்துரை எழுதுவது என்று தெரியவில்லை. This is not my area :))

    ReplyDelete

  28. @ வருண்
    நீங்கள் கேள்விப்பட்டதில்லையா.?
    Blessed are those that are ignorant. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  29. @ கீதா சாம்பசிவம்
    என் எழுத்துக்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்றே தோன்றுகிறது ‘யானுமிட்ட தீ மூள்க மூள்கவே என்று பாடியவர் அதே பாடல் வரிசைகளில் பாலுக்கும் அழைக்கிறார் என்றால் அவை simultaneous occuranses அல்ல என்றுதான் கூறி யிருந்தேன் அதையே நெருடல் என்றும் யார் படியெடுத்தார்களோ என்றும் எழுதி இருந்தேன்.மீள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  30. @ டி.பி.ஆர் ஜோசப்
    இப்போது ஓரளவு தெரிந்திருக்கும் அல்லவா.?வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  31. சில வார்த்தைகள் சிந்தனைகள் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குச் சக்தி பெறுகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.// உண்மைதான்!

    சரிதான் சார்! உங்கள் ஏரியாவை விட்டு கொஞ்சம் விலகி வந்துள்ளீர்கள் என்றாலும், நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு. பட்டினத்தாரைப் பற்றிபள்ளியில் படித்துள்ளோம். இப்போது தங்கள் பதிவு நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கின்றது.....மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  32. மிகவும் சுவாரசியமான விவரங்கள்.

    யார் குறிப்பெடுத்தார்கள் என்ற கேள்வி நெருடினாலும் எப்படியோ இத்தனை காலம் இவர் பாடல்கள் நிலைத்து நிற்கும் சிறப்பில் வியந்தும் நிற்கலாம்.

    ReplyDelete
  33. நேற்றிருந்து இன்று நீரானாள் - இதிலிருந்து இரண்டாம் நாள் என்று தானே பொருள் வருகிறது?

    ReplyDelete
  34. யானும் இட்ட தீ மூள்க மூள்கவே என்பது தான் நெருடலாகப் படுகிறது.

    ReplyDelete
  35. தீ என்பதே மூண்டதன் விளைவு.

    இங்கே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே என்பது சூட்சுமம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. http://geethasmbsvm6.blogspot.in/2012/04/2.html

    @அப்பாதுரை, பச்சை வாழைமட்டைகளை வைத்து எரிப்பதால் அக்னியை அழைக்கிறார். பச்சை வாழைமட்டையில் உடனடியாகத் தீ பற்றிக் கொள்வதாக வரும். :)

    ReplyDelete
  37. பட்டினத்தாரைப் பற்றி படித்துள்ளேன், கேட்டுள்ளேன். தங்களின் பதிவு மூலமாக பல புதியனவற்றை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  38. நன்றி கீதா சாம்பசிவம்.
    அப்போ யானும் இட்ட தீ சூட்சுமம் தானா?

    ReplyDelete
  39. //அப்போ யானும் இட்ட தீ சூட்சுமம் தானா?//

    அப்பாதுரை, ரொம்பவே நுணுக்கமான விஷயம். பிடிச்சுட்டீங்க. விடை கண்டு வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. இன்னைக்கு செத்தால் நாளைக்குப் பால் என்பது பிரபலமான வசனமாயிற்றே..!

    ReplyDelete
  41. உண்மையோ இல்லையோ , ஆனால் சுவாரசியாமாக இருக்கிறது,பட்டினத்தாரின் நிலையாமைப் பாடல்கள் இன்று வரை நின்றிருப்பது சிறப்பு

    ReplyDelete
  42. //மூட நம்பிக்கையை உண்மையாக பக்தி செலுத்துபவரோ ஆன்மிக ஈடுபாடு கொண்டவரோ ஆதரிப்பது இல்லை.

    ஆ! வாட் இஸ் திஸ்சு?

    ஆன்மீகத்துல பக்தி கிடையாது - ஆஸ்திகத்துல பக்தி இருக்குது.
    மூட நம்பிக்கையை பக்தி நிச்சயமா வளர்க்குது. ஆஸ்திகம் தான் ஆன்மீகம்னு ஒரு சிலந்தி வலைத் திரையை நைசா போத்திட்டு ஆன்மிகம் மூட நம்பிக்கையை ஆதரிக்கலேனு சொல்றது ஜகா வாங்குறாப்புல இருக்குதே? ஆன்மீகம் என்னைக்குமே மூட நம்பிக்கையை வளர்ப்பதில்லை. ஆன்மீகம் அறிந்தவர் ஆஸ்திகம் பக்கமே போக மாட்டார்கள் என்பது என் கருத்து.

    ReplyDelete

  43. @ மூன்று நான்கு நாட்கள் பயணத்தில் இருந்தேன். மீண்டு வந்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது ஆஹா... இதல்லவா நான் வேண்டி இருந்தது என்று தோன்றியது. என் ஏரியா இல்லாத இடத்திலும் நான் பிரவேசித்துப் பதிவு எழுதியது பல விதமான புரிதல்கையும் பொருண்மைகளையும் கொண்டு வந்திருக்கிறது. பதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. இந்த சூட்சுமம் பற்றி அறிய விரும்புகிறேன்.சூட்சுமம் என்றால் என்ன பொருள்.? மறைந்திருத்தல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் . பச்சை வாழை தீப்பிடித்து எரிந்தது என்பது அந்த யானும் இட்ட தீ மூள்க மூள்கவே என்னும் வரிக்கு விளக்கம் கொடுக்கும் கதையில் வருகிறது. ஆஸ்திகம் ,ஆன்மீகம், பக்தி நம்பிக்கை என்னவெல்லாம் வார்த்தை விளையாட்டுக்கள். நிலையாமை பற்றிய பட்டினத்தார் பாடல்களுக்கும் முன்பே அது பற்றி பலரும் அறிந்திருந்தது தானே. கருத்தாடல்களுக்கு நன்றி மீண்டும்.

    ReplyDelete
  44. ****ஆஸ்திகம் ,ஆன்மீகம், பக்தி நம்பிக்கை என்னவெல்லாம் வார்த்தை விளையாட்டுக்கள்.****

    இந்த ஆறாவது அறிவு வந்ததால் வந்த விணை!

    தன் மனதால் கெட்டு தன் மனக்குழப்பத்தை சரி செய்ய அவனே இதுபோல் வார்த்தைகளை உருவாக்கி, தன்க்கே சரியா புரியாதையும் புரிந்ததுபோல் விளக்கி, தானும் குழம்பி பிறரையும் குழப்பத்தில் ஆழ்த்தி..பிறகு தன்னைத்தானே மனச்சலவை செய்து கொள்ளுவதுதான் இதெல்லாமா?.:)))

    It is a pity..I think even the worst human being in the world also wants to feel good about himself/herself somehow to move on in their life. There is need for creating new words for describing the well-known feelings..:)

    ReplyDelete
  45. ஆன்மீகம் ஆஸ்திகம் - வார்த்தை விளையாட்டுக்கள் அல்ல. வெவ்வேறு பொருள் கொண்டவை.

    முறையே தன்னறிவு/உணர்வு, இறையறிவு/உணர்வு இரண்டையும் குறிப்பவை.

    இதை வார்த்தை விளையாட்டு என்பது கருத்தாடலையே கொச்சைப்படுத்துகிறது.

    ReplyDelete
  46. i think - therefore i am.

    rational words are a medium to express rational thoughts, right varun?

    human ignorance does not manifest in creating words - but in dismissing them as words :-)

    ReplyDelete

  47. @ வருண்
    @ அப்பாதுரை.
    நான் எழுதி இருந்த மறு மொழியே சில தவறான புரிதல்களுக்கு வழி வகுத்து விட்டது என்று நினைக்கிறேன் வார்த்தை விளையாட்டுக்கள் என்று நான் சொன்னது கருத்தாடல்களைக் கொச்சைப் படுத்த அல்ல. இந்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள் தெளிவு ஏற்படுத்த உபயோகமாவதைவிட பல நேரங்களில் கன்ஃப்யூஸ் செய்கிறது என்னும் பொருளில்தான் என்பதையே கூற வந்தேன். எனக்கு விளங்காத பின்னூட்டத்தில் வந்த இன்னொரு வார்த்தை ‘சூட்சுமம்’ அதை விளக்கினால் நன்றியுடையவனாய் இருப்பேன். பின்னூட்ட மறுமொழிகள் யாரையும் புண்படுத்த எழுதியவை அல்ல, என்றும் கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  48. ஹிஹி.. போகட்டும் சார்.. அப்படியெல்லாம் எதுவுமில்லை. (எல்லாத்தையும் ஆஸ்திகத்துல அடக்குறதுனாலே அப்படி கடுப்பாவுது.. என்ன செய்ய?)

    ReplyDelete
  49. இல்லை சார், நான் சொல்ல வந்தது, உணர்வுகள்தான் முதலில் வருவது. அதை வார்த்தைப் படுத்துவது ரெண்டாவதுதான். மற்றபடி ஒவ்வொருவர் நம்பிக்கையும் அவரவருக்கு மனநிம்மதி கொடுக்கிறது- அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து. பல நேரங்களில் ஒருவருக்கு அர்த்தமுள்ள வார்த்தைகளை்/"உணர்வுகளை' மற்றவர்களால் உணரமுடியாமலும் போகிறது.

    Let me go away from "belief" and "spirituality" now as it can hurt others..

    இதை வேற மாதிரி அனுகுவோம்..

    some people are empathetic and some others are not. These two kind can not understand each others' feelings

    Some people are happy when they make others happy. Some don't care about others' feelings. These two kind cant understand each others' feelings either

    In a bigger picture, We are all human beings with 46 chromosomes but we are not the same human beings.. :)

    ReplyDelete
  50. சூட்சுமம் - நீங்க சொன்னாப்புல மறைபொருள் தான்.

    சூட்சுமம் is its own converse - ஒரு வசதி. எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.உதாரணத்துக்கு ஆஸ்திகக்காரங்க சொல்றாப்புல - நல்லது நடந்தா கடவுளின் அருள், கெட்டது நடந்தா கடவுளின் சோதனை; இதில் அருளுக்கோ சோதனைக்கோ தகுதியை எந்த விதத்தில் எந்த வகையில் அளப்பது? சூட்சுமம் there you go!

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. ****தன்னை உணர்வதே ஆன்மீகம்.. தன்னை உணர்வதும் தனக்குள் உணர்வதும் ஆன்மீகம் தான்..***

    மேற்கோள் காட்டியுள்ளது

    ஒருவர் ஆன்மீகம் பற்றி பேசினார்.. அவர் மனதால் உணர்ந்துதான் மேலே சொல்லியுள்ள இதைச் சொல்லுகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    "தன்னை உணர்வது"??? எனக்கு என்னனு புரிந்தது.

    அப்புறம்..

    "தனக்குள் உணர்வது"???னு ஏதோ சொல்றாரு பாருங்க, அது சத்தியமா எனக்குப் புரியலை..புரியாததை புரியலைனு சொன்னா என்னை ஒரு மாதிரியாத்தான் பார்க்கிறாங்க.

    எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை பாருங்க..

    அவரு உணர்ந்த உணர்வைத்தான் வார்த்தைப் படுத்தி இருக்கிறார். அந்த வார்த்தைகளை மறுபடியும் உணர்வாக்கி என்னால் உணரமுடியவில்லை! :))

    ReplyDelete

  53. @ வருண்
    @ அப்பாதுரை.
    மீள்வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நான் பார்த்தவரை பதிவுலகில் வாசிப்பவர்கள் அநேகமாக புரிதல்களில் சற்று பின் தங்கியே இருக்கிறோம் இது எழுதுவதைவிட எழுதாமல் விட்டதையே அதிகம் நினைக்கச் செய்கிறது. எளிமையாக எல்லோரும் ஒரே மாதிரி புரிந்துகொள்ளும்படி எழுதுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. பல நேரங்களில் abstract எண்ணங்கள் அவரவருக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளப் படுகிறது எழுதுபவரின் எண்ணங்கள் சரியாகக் கடத்தப் படுவதில்லை. இருந்தாலும் who cares.?

    ReplyDelete
  54. உண்மை வருண். எல்லாவற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

    ReplyDelete