தொடர் பயணம் ( மதுரை ) 1
---------------------------------------
காலையில் எட்டரை மணி அளவில் மதுரை வந்து
சேர்ந்த நாங்கள் முன் பதிவு செய்யப்பட்ட மேற்கு
ஆவணி மூல வீதியில் இருந்த ஹோட்டல் நம்பிக்கு வந்து சேர்ந்தபோது ஒன்பது மணிக்கும்
மேலாகி விட்டது அனைவருக்கும் ஊர்தி கிடைத்து அறைக்கு வந்து சேர நேரம்
ஆகிவிட்டது எல்லோரும் குளித்து காலை
உணவருந்தத் தயார் ஆகும் போது மணி பத்தாகி இருந்தது. அன்று என் கடைசி மச்சினியின்
பிறந்த நாள். மகிழ்ச்சியுடன் மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்கும் பாக்கியம்
என்றாள் எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயப் பட்ட
கோவில் அர்ச்சகர் ஒருவரைத் தொடர்பு கொள்ள அவர் நாங்கள் தரிசனம் செய்ய
உதவினார்.அவருக்காகக் காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த காவல் அதிகாரி எங்கள் குழு பற்றி விசாரித்தார் கோவிலில்சிற்பங்கள் நிறையவேஇருப்பதாகவும் கண்டும் புகைப்படமெடுத்தும் மகிழலாம் என்றும் கூறினார் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது எப்படித்தான் இவ்வளவு கூட்டம் வருகிறதோ …! ஒரே நெரிசல் அன்று
ஞாயிற்றுக்கிழமை என்பதாலா..? கோவிலில் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்
பட்டுள்ளது. ஆனால் உள்ளே வந்தால் ரூபாய்
ஐம்பது செலுத்தினால் மொபைல் காமிராவில் படம் எடுக்கலாம் என்று தெரிய வந்தது என்ன
பிரயோசனம் கைபேசிகளை வெளியில் வைத்து வந்திருந்தோமே என் மச்சினி ஒரு சாய் பாபா
விக்கிரகத்தை கைப்பையில் வைத்திருந்தாள் அதை எடுத்துவர அனுமதிக்க வில்லை யாதலால்
வெளியிலேயே விட்டு வந்தாள். தரிசனம் செய்யும் போது ஒரு அர்ச்சகரிடம் இன்னொருவர்
இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா என்று கேட்டார். அதற்கு அவர் இன்னும் போதிய
வருமானம் வரவில்லையே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்
தரிசனம் எல்லாம்செய்து முடித்து வெளியே
வரும்போது பன்னிரண்டரை மணிக்கும் மேலாகி
இருந்தது.கீதா மேடம் கோவிலில் இருக்கும் மியூசியம் பற்றி கூறி இருந்தார் அது பற்றிய நினைவே மறந்துவிட்டது வெயிலின் தாக்கம் தெரியத் துவங்கியது மதிய உணவுக்குச்
சென்றோம் அதன் பிறகு முதலில் திருமலை நாயக்கர் மகால் சென்றோம் நாயக்கர்
மகாலில் ஒலி ஒளி நிகழ்ச்சி மாலை நடப்பது தெரிய வந்ததால் மாலை மீண்டும் செல்லத்
திட்டமிட்டோம்எல்லோரும் மகாலைக் கண்டு மகிழ்ந்தனர். நிறையவே புகைப்படங்கள்
எடுக்கப்பட்டன
Add caption |
திருமலை நாயக்கர் மகாலில் மாலை நேரத்தில் ஒலி
ஒளி காட்சி நடைபெறு வதைக் காண வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள் ஆகவே நாளின் கடைசி நிகழ்வாக அதைப் பார்க்க
முடிவாயிற்று
நாயக்கர் மகாலை அடுத்து காந்தி மியூசியம் சென்றோம் அதை
ஒரு சுற்று வந்தால் ஏறத்தாழ இந்திய சரித்திரமே புகைப்படக் கண்காட்சியாக இருப்பது
தெரிகிறது ஆற அமரப் பார்க்க வேண்டுமானால்
அதிக நேரம் ஆகும் என்பதால்
மேலோட்டமாகப் பார்த்து வந்தோம்உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லையாதலால் ஞாபகார்த்தமாக வெளியே எடுத்த ஒரு காணொளி.
அங்கிருந்து அழகர் மலைக்குச் சென்றோம் மாலை
நேரமாகிவிட்டல் மலைப் பாதையில் பயணிக்க
அனுமதிக்க மாட்டார்களென்பதால் முதலில் மலைக்குச் சென்று பிறகு வரும்போது
கள்ளழகரைக் காணலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. மதுரைஸ்பெஷல் ஜிகிர் தண்டா பற்றித் தெரிவித்தேன்அனைவரும் ருசித்து அதன் சுவைக்கு அடிமை ஆகிவிட்டார்கள்
மலையில் நூபுர கங்கை நான் ஏற்கனவே பார்த்த இடமென்பதாலும் படி ஏறுவதைத் தவிர்க்கவும் குரங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் நானும் என் மனைவியும் வெ;ளியே போகாமல் வண்டியிலேயே அமர்ந்திருந்தோம் வண்டியிலிருந்தே சில காணொளிகள் படம் பிடித்தேன் முக்கியமாகக் குரங்குகளை குறி வைத்தே. ஆனால் நீளம் அதிகமாகி விட்டதால் பதிவிட முடியவில்லை. ராக்காயி அம்மன் கோவிலும் நூபுரகங்கையும் மற்றவர்களுக்குப் புதிது என்பதால் அவர்கள் படியேறிச் சென்று ரசித்தனர்
மலையில் நூபுர கங்கை நான் ஏற்கனவே பார்த்த இடமென்பதாலும் படி ஏறுவதைத் தவிர்க்கவும் குரங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் நானும் என் மனைவியும் வெ;ளியே போகாமல் வண்டியிலேயே அமர்ந்திருந்தோம் வண்டியிலிருந்தே சில காணொளிகள் படம் பிடித்தேன் முக்கியமாகக் குரங்குகளை குறி வைத்தே. ஆனால் நீளம் அதிகமாகி விட்டதால் பதிவிட முடியவில்லை. ராக்காயி அம்மன் கோவிலும் நூபுரகங்கையும் மற்றவர்களுக்குப் புதிது என்பதால் அவர்கள் படியேறிச் சென்று ரசித்தனர்
திரும்பி வரும்போது அறுபடை வீடுகளில் ஒன்றான
பழமுதிர் சோலைக் கோவிலுக்குச் சென்றோம் அங்கு ஒரு மரத்தைக் காட்டி அதுதான் குமரன்
ஔவைக்கு சுட்ட பழம் கொடுத்த நாவல் மரம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் என்னதான்
நாம்நவீன உலகின் வாரிசுகள் என்றாலும் இதையெல்லாம் நம்புபவர் எண்ணிக்கையும் குறைய
வில்லை. கேட்டால் நம்பிக்கைதான் முக்கியம்
என்று பதில்.!
பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் |
முருகனைத் தரிசித்துப் பின் கள்ளழகரைக் காண
வந்தோம் கள்ளழகரின் கோவில் வளாகத்துக்கு வெளியே
18-ம் படி கருப்பண்ணச் சாமி குடியிருக்கிறார். இந்த கருப்பண்ணச்
சாமியைத்தான் ஐயப்பனாக்கி விட்டார்கள்
என்று குறை கூறுவோரும் உண்டு. சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால் அது பற்றி வேண்டாம்
கருப்பண்ண சாமிக் கோவில் |
கள்ளழகர் கோவில் கோபுரம் |
பரந்து விரிந்து கிடக்கும் இடம் இங்கும்
குரங்குகளின் நடமாட்டம் அதிகம்ஆனால் நூபுரகங்கையில் இருக்கும் குரங்குகள் போல்
இல்லாமல் சாதுக்களாக இருக்கின்றன
கள்ளழகரைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் தெப்பக் குளம் மாரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம்
தெப்பக் குளம் மாரி அம்மன் கோவில் |
மீண்டும் நாயக்கர்
மகாலுக்கு ஒலி ஒளி காட்சி காணச் சென்றோம் இரவு எட்டுமணி அளவில் காட்சி துவங்கியது.
பலமுறை மதுரைக்கு வந்தும் இக்காட்சியை நான் காண்பது இதுவே முதல் தடவை எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றமும்
அதிகமாகும் இந்த ஒலி ஒளிக் காட்சி ஏதோ ஒழுங்காகக் கோர்வையாக சொல்லப்படாத வானொலி
நாடகம் கேட்பதுபோல் இருந்தது. நாயக்கரைப் பற்றியும் சரித்திர நிகழ்வுகள் பற்றியும்
ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.வானொலி நாடகம்
கேட்கும் போது வராத சில ஒளி வெளிச்சங்கள் இருக்கின்றன என்பதுதான் வித்தியாசம்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதே என் அபிப்பிராயம்
இரவு உணவுக்காக கோனார் கடைக்குச் சென்றோம் நான் என் மனைவி மற்றும் ஒருவர் தவிர்த்து மற்றவர்கள் அந்த இடத்துக்குப் பெயர் தேடிக் கொடுக்கும் கறி தோசை சாப்பிட்டனர், நாஙள் சைவ இட்லி மட்டுமே உண்டோம்
வெயிட்டிங் ஃபர் கறி தோசை. |
( தொடரும் )
விரிவான விபரங்களும் புகைப்படங்களும் அருமை ஐயா தொடர்கிறேன்
ReplyDeleteஅழகர் கோவிலிலிருந்து நீங்கள் தங்கியிருந்த மே ஆ மூ வீதி வரும் வழியில் மாரியம்மன் தெப்பக்குளம் இல்லை!!அது வேறு இடம்.
ReplyDeleteசிம்மக்கல் கோனார் கடை மதுரையில் ரொம்பவே பிரபலம்! ஆனால் அது சின்னக் கடையாக இருந்த போது இருந்த ருசி இப்போது இல்லை என்று நண்பர்கள் சொல்வார்கள். திருமலை நாயக்கர் மகால் காணொளி காட்சி வேஸ்ட்.
நல்ல குறிப்புகள்.
ReplyDeleteமதுரை பதிவர் சந்திப்பின்போது சில இடங்களை சுறிப் பார்க்க வேண்டும் நினைத்தேன் ஆனால் முடியவில்லை.மீண்டும் செல்லும்போது நீங்கள் குற்ப்பிட்டுள்ள இடங்களை பார்க்கவேண்டும்
ReplyDeleteதங்களை சந்திப்பதாக வாக்களித்திருந்தேன். எதிர்பாராத அவசர வேலை குறுக்கிட்டதால் பார்க்கமுடியவில்லை. தங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே!
ReplyDeleteபதிவு வழக்கம்போல் அருமையாக உள்ளது. தொடருங்கள். தொடருகிறேன். அய்யா!
விரங்கள், புகைப்படங்கள் என சிறப்பான பகிர்வு. இன்னமும் மதுரையில் நான் பார்க்காத இடங்கள் நிறையவே.... அங்கும் சென்று வர வேண்டும்.
ReplyDeleteதிண்டுக்கல்லில் சந்திக்க மனம் இல்லையோ...?
ReplyDeleteஅஹா... மதுரைச் சுற்றுலா...
ReplyDeleteஎங்கள் குலதெய்வம் அழகர் என்பதால் அடிக்கடி செல்வோம்....
அழகரை தரிசித்தால் மீனாட்சியையும் தரிசிக்க வேண்டும் என்பது எங்கள் வழக்கம்...
அதனால் முன்பெல்லாம் மதுரை போனால் முதலில் அழகர் அப்புறம் மீனாட்சி...
இப்ப மாமனார் வீடு மதுரை என்பதால் அங்கு போய் தங்கி இருவரையும் சந்தோஷமாக நினைத்த நேரத்தில் தரிசிக்கலாம்....
பதினெட்டாம் படிக் கருப்பன் நினைத்ததை நிறைவேற்றும் தெய்வம்...
அனைத்தும் நாங்கள் முன்னர் பார்த்த இடங்களே. இருந்தாலும் தங்களுடன், தங்களுடைய எழுத்துவழியாக பார்க்கும்போது, படிக்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமதுரையை திரும்பவும பார்க்கும் வாய்ப்பை நலகியமைக்கு நன்றி,
ReplyDeleteஉங்கள்கூடவே பயணிக்கும் ஒரு உணர்வு, கறிதோசைக்காக நாங்களும் வெயிட்டிங்.
ReplyDelete
ReplyDelete@ கில்லர்ஜி
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஜி
ReplyDelete@ ஸ்ரீராம்
எங்களுக்கு மதுரையில் வழிகள் தெரியாது. ஓட்டுனரிடம் இன்ன இடம் போகவேண்டும் என்றிருந்தோம் அவரும் ஒரு பெரிய தெப்பக் குளத்தைக் காட்டி அருகில் இருந்த கோவிலுக்கும் அழைத்துச் சென்று மாரியம்மன் கோவில் என்றார் கோனார் கடை மாறி இருப்பது பற்றியும் ஓட்டுனர் கூறினார் நீங்கள் கூறுவது நாயக்கர் மகலில் காட்டப்படும் ஒலி ஒளி காட்சி என்று புரிந்து கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ டி என் முரளிதரன்
இந்த இடங்களுக்கெல்லாம் போக ஆலோசனை கூறியதே எஸ்பி செந்தில் குமாரும் கீதாமேடமும்என்று முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன் வருகைக்கு நன்றி ஐயா.
@ எஸ்பி செந்திகுமார்
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.........! வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
திருப்பரங்குன்றத்தில் சில நிகழ்வுகள் பற்றி செந்தில் குமார் கூறியிருந்தார். காண இயலவில்லை. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
திண்டுக்கல் பயண நிரலில் இடம் பெறவில்லையே வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ பரிவை சே குமார்
மதுரை மட்டுமல்ல. இராமேஸ்வரமும் நாகர் கோவிலும் சுற்றுவட்டத்தில் இருக்கும் இடங்களுக்கும் போய் இருந்தோம் பின் வரும் கட்டுரைகளில் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி குமார்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
நான் பார்த்து ரசித்ததைப் பகிர்கிறேன் ஐயா. வருகைக்கு நன்றி
@ வே நடன சபாபதி
ReplyDeleteமதுரையிலேயே இன்னும் பார்க்க நிறைய இடங்கள் இருப்பது அறிகிறேன் நேரம் வசதி கருதி பல இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
கோனார் கடை பற்றியும் கறி தோசை பற்றியும் என் மூத்தமகன் பயணிப்பவர்களுக்குக் கூறி இருக்கிறான் அதுதான் நாங்கள் அங்கு செல்லக் காரணம் வருகைக்கு நன்றி உமேஷ்
மேலாவணி மூலவீதியில் ஏழாம் எண் வீட்டில் தான் நாங்கள் பல வருடங்கள் குடி இருந்தோம். நாங்க சென்ற வருடம் மதுரை போனப்போ தானப்பமுதலி அக்ரஹாரத்தில் தங்கினோம். :)
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மேம்
'போனோம், வந்தோம் என்கிற மாதிரி தெரிகிறதே? சிறப்பாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லையா?.
ReplyDelete
ReplyDelete@ ஜீவி
/ போனோம் வந்தோம் என்கிறமாதிரி தெரிகிறதே/சில கருத்துக்களை ஆங்காங்கே தெரிவிக்கிறேனே you may have to read between the lines வருகைக்கு நன்றி சார்
படங்களைப் பெரிதாக்கி பார்த்தேன். நாயக்கர் கால கட்டிடடக்கலை வியத்தகும் வண்ணம் உள்ளது.
ReplyDelete//தரிசனம் செய்யும் போது ஒரு அர்ச்சகரிடம் இன்னொருவர் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா என்று கேட்டார். அதற்கு அவர் இன்னும் போதிய வருமானம் வரவில்லையே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்//
ReplyDeleteகோயிலுக்குப் போனால் குதிரைக்கு பட்டை போட்ட மாதிரி தரிசனம் ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் போலிருக்கு. இதனால் எதற்காக எங்கே நுழைந்தோமோ அதை விட்டு விட்டு வேறு கவனத் தப்புதல்களுக்கு நாம் ஆட்படுகிறோம்.
இந்த குறைபாடு எனக்கும் உண்டு.
இதனால் நாம் சென்ற நோக்கம் பூரணமடையாமல் போகிறது. அக்கம்பக்கம் கவனம் செல்லாமல் பார்க்காமல் கேட்காமல் இருக்க வேண்டும் போன்ற சிந்தனைக் குவியலகள் சாத்தியப்படாமல் போகிறது.
போனோம் வந்தோம் என்று சொன்னது இதைத் தான்.
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
திருமலை நாயக்கர் மகால் உண்மையிலேயே வியக்க வைக்கிறது மேல் தளத்துக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. இதுவே முன்பு இருந்த கட்டிடத்தின் மிச்சம் என்கிறார்கள்வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவி
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா சார்பெரும்பாலும் கோவில்களுக்குப் போகும்போது என் மனம் தரிசனத்தில் ஈடுபடுவதில்லை. வரும் மக்களைக் கவனிக்கிறேன் அப்போது சில விஷயங்கள் ராஜாவுக்குக் கழுதைக்காது என்று சொல்ல வைக்கிறது வருகைக்கு நன்றி சார்