தொடர் பயணம்........ துவக்கம்
-----------------------------------------------
2015-ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஒரு நீள் சுற்றுலா உறவினர்கள் சிலர் செல்லத் திட்டமிடுவது அறிந்தேன் நானும் என் மனைவியும் வர விரும்புவதாக என் மச்சினனிடம் கூறினோம் / அவன்தான் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு வழி நடத்திச் செல்பவன் போகத் திட்டமிட்டிருந்த இடங்கள் நாங்கள் ஏற்கனவே சென்று பார்த்ததுதான் இருந்தாலும் பயணிப்பது எனக்குப் பிடிக்கும் என்பதாலும் இந்த வயதில் இவ்வளவு நீண்ட பயணத்தை என் உடல் தாங்கும் என்று எனக்கு நானே நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளவுமே நானும் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்
இம்மாதம் 17-ம் தேதி துவங்கி 26-ம் தேதி முடிய
மதுரை, இராமேஸ்வரம் நாகர் கோவில் போன்ற
இடங்களில் தங்கி சுற்று வட்டார
இடங்களுக்குச் சென்று வருவதாகத் திட்டம்
இந்தப் பயண நிரல்களைத் தயாரிக்க உதவிய திருமதி
கீதா சாம்பசிவம் , திரு எஸ்பி செந்தில் குமார் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் பயணத்தில் பங்கு கொண்டோர்
அனைவருமே உறவினர்களே. அதில் நானும் என் மச்சினனும் மட்டுமே ஆண்கள் மற்ற எல்லோரும்
பெண்கள். ஒரு பெண்ணையே சமாளிப்பது எவ்வளவு
கஷ்டம் என்று பலரும் அறிவார்கள் இந்த நிலையில் என் மச்சினன் ஒன்பது பெண்களை
சமாளித்து சரியான மேய்ப்பனாக விளங்கினான் அவனுக்கு எங்கள் நன்றிகள் கலந்து கொண்ட
பெண்கள் அவனை ரிங் மாஸ்டர் என்றே அழைத்தனர் எந்த நேரத்திலும் கோபம் கொள்ளாமல்எல்லோர்
தேவையையும் பூர்த்தி செய்த அவன் பயணத்துக்குத்
தேவையான ரயில் முன்பதிவுகளையும்
தங்குவதற்கான அறை முன் பதிவுகளையும்
திறம்படச் செய்திருந்தான்
18-ம் தேதியும் 19-ம் தேதியும் மதுரையிலும் 20-ம்
தேதிதொடங்கி 23-ம் தேதி முடிய இராமேஸ்வரத்திலும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி
முடியநாகர் கோவிலிலும் தங்கினோம் எல்லோருக்கும் குளிரூட்டப் பட்டுள்ள வசதியுடன்
கூடிய தங்கும் அறைகள் பயணத்தின் போது ஏசி த்ரீ
டியர் ரயில் டிக்கட்டுகளும் எடுத்திருந்தான்
முதலில் பத்து பெண்கள் வருவதாக இருந்தது. அதில் இருவர் கடைசி நேரத்தில் வர
முடியாமல் போகவும் கடைசி நேரத்தில் வேறொரு பெண்மணியும் சேர மொத்தம் ஒன்பது பெண்கள் இரு ஆண்களுடன் சுற்றுலா தொடங்கியது
மைசூர் தூத்துக்குடி ரயிலில் 17-ம் தேதி இரவு
நாங்கள் ஏறிய போது எனக்காக ஒதுக்கப் பட்டிருந்த இருக்கை/ கிடக்கையில் ஏற்கனவே ஒருவர் படுக்கை விரித்துப் பயணித்துக் கொண்டிருந்தார் ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்றால் அவர் செல்ல
வேண்டிய ரயில் கொச்சுவேலி எக்ஸ்ப்ரெஸ்.
வண்டி மாறி பயணிக்கிறார் என்று சொன்னதும் பாவம்
என்ன செய்தாரோ தெரியவில்லை. மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கையைக் காலி
செய்தார். 18-ம் தேதி காலை எட்டரை மணி
அளவில் மதுரை வந்து சேர்ந்தோம் ( தொடரும்)
இடமிருந்து- என் மச்சினன் மதுரையில் வண்டி ஓட்டுனர் மற்றும் பயணித்த பெண்மணிகள் |
(சுமார் இரு வாரங்கள் பதிவுப்பக்கம் வராமல் இருந்து இன்று வந்து பார்த்தால் என் பதிவுகளைத் தொடர்பவர்களில் எட்டுபேரைக் காணவில்லை 162 ஆக இருந்தவர் எண்ணிக்கை 154 ஆகக் குறைந்து இருக்கிறது..! )
திட்டமிட்ட ஏற்பாடு... மச்சினன் அவர்களுக்கு பாராட்டுகள்...
ReplyDeleteவணக்கம் ஐயா வாங்க, வாங்க தங்களின் பயண விபரங்கள் தொடர்ந்து வரும் என்று எதிர் பார்க்கிறேன் வாழ்த்துகள்.
ReplyDeleteபயணப்பதிவு தொடரட்டும்.
ReplyDeleteஎங்கள் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை கூட இருநாட்களுக்கு முன் திடீரென பதினெட்டு உயர்ந்து, மறுநாள் மதியமே சட்டெனக் குறைந்து போனது! என்ன மாயமோ!
என்னால் சந்திக்க இயலாமல் போனது
ReplyDeleteஅதிக வருத்தமே
பயணப்பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...
நீள்பயணம் மேற்கொண்டது அறிந்து மகிழ்ச்சி. விரைவில் விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteபதிவைத் தொடர்வோர் கூடுவதும் குறைவதும் வழக்கமான் ஒன்றுதானே!
ஆரம்பமே சுவாரஸ்யம், தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteதொடர்கிறேன்
ReplyDeleteசிறப்பான துவக்கம்..... தொடர்கிறேன்.
ReplyDeleteபயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள ஆவல்.
விறுவிறுப்பான ஆரம்பம். உங்களுடன் வருவதற்குக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅழகான சுற்றுலா....தொடர்கிறேன்
ReplyDeleteஆனாலும், உங்களுக்கு எப்பவுமே தன்னம்பிக்கை அதிகம்! உங்கள் பதிவுகளில் பல இடங்களில் இதனை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் பயணக் குறிப்புகளோடு நானும் தொடர்கின்றேன்.
ReplyDeleteநானும் இந்தியப் பயணத்தில் இருக்கின்றேன். Wifi கிடைக்கும் வசதியைப் பொறுத்தே வாசிப்பு.
ReplyDeleteநானும் இந்தியப் பயணத்தில் இருக்கின்றேன். Wifi கிடைக்கும் வசதியைப் பொறுத்தே வாசிப்பு.
ReplyDelete
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
திட்டமிட்டு செயல் புரிவது என் பழக்கம் என்னிடம் வளர்ந்த என் மச்சினனுக்கும் அது இருப்பது வியப்பல்ல. வருகைக்கு நன்றி டிடி.
ReplyDelete@ கில்லர்ஜி
தொடர்ந்து வாருங்கள் நன்றி
ReplyDelete@ ஸ்ரீராம்
ஃபாலோயெர்ஸ் குறைவது பற்றி வருண் எழுதி இருந்தார் பதிவுகள் தொடரும் வருகைக்கு நன்றி
ReplyDelete@ ரமணி
சுற்றி முடித்து அறைக்கு வருவதற்கே இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டிருந்தது. பயண அனுபவங்கள் தொடரும் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வே நடன சபாபதி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா
ReplyDelete@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
பதிவுகள் தொடரும் தொடர்ந்து வாருங்கள் நன்றி
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
தொடர்ந்து வர வேண்டி நன்ற்யுடன்
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
பயணக் கட்டுரைகள் எழுதுவதில் நீங்கள் முன்னோடி. நானும் எழுதுகிறேன் தொடர்ந்து வாருங்கள் நன்றி
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள் ஐயா நன்றி.
ReplyDelete@ அனுராதா ப்ரேம்
உங்கள் தளத்துக்கும் வந்திருந்தேன் வருகைக்கு நன்றி
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
வாருங்கள் ஐயா உங்கள் ஊக்கமே என் பலம் தொடர்ந்து வாருங்கள் நன்றி
ReplyDelete@ துளசி கோபால்
இந்தியப் பயணத்தில் பெங்களூரு உண்டா. நன்றி மேம்
எல்லோரும் சுகமாகவும் சௌகரியமாகவும் பயணம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து தந்த உங்கள் மைத்துனருக்கு எங்கள் பாராட்டுகள். பயணம் நல்லபடி முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteபாவம், உங்கள் இருக்கையில் இருந்த மனிதர். அப்புறம் என்ன செய்தாரோ?
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
எங்கேடா மேடத்தைக் காணோமே என்றிருந்தேன் வந்து விட்டீர்கள் நன்றி. என் இருக்கையில் இருந்த மனிதர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அவரது ரயிலுக்காகக் காத்திருந்திருக்கவேண்டும்