Sunday, January 3, 2016

புத்தாண்டை வரவேற்றோம்


                                      புத்தாண்டை வரவேற்றோம்
                                       --------------------------------------------
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்பது நான் ஓய்வு பெற்று வந்தபின் ஏறக்குறைய அறவே இல்லாது போயிற்று பணியில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி பிஎச்இஎல் ஆஃபிசர்ஸ்  கிளப்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சியோ  அல்லது வேறு ஏதாவது கலை நிகழ்ச்சியோ இருக்கும் இரவு டின்னரும் இருக்கும். நாங்கள் டின்னருக்குப் போகமாட்டோம் இளைஞர்கள் ஆர்க்கெஸ்ட்ரா  இசைக்கு ஆட அமர்க்களமாய் இருக்கும்  பெங்களூரு வந்தபின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டே இருப்போம்  12 மணி அடித்ததும் வீட்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டு உறவுகளைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறுவோம் . பிறகு அதுவும் குறைந்து போயிற்று.  பலருக்கும் 12 மணிக்குக் கூப்பிடுவது தொந்தரவாகத் தெரிந்தது( எங்களுக்கும் சேர்த்து)
ஆகவே இந்த ஆண்டு என் இளைய மகன் அவனது அபார்ட்மெண்டில் புத்தாண்டு கொண்டாட  அழைத்தபோது ஒரு மாற்றமாய் இருக்குமென்று போனோம் பல ஆண்டுகளுக்குப் பின் ஆட்ட பாட்டங்களுக்கிடையே புத்தாண்டை வரவேற்றோம்அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் சுமார் முன்னூறு பேர் பங்கெடுத்தனர். நான் அந்த நிகழ்ச்சிகளை என் காமிராவில் படமாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்து கொண்டேன் இந்த நிகழ்ச்சியின் பிரதம காம்பியர் என் மகன்  என் பேத்தியின் ஒரு நடனமும் இருந்தது. என் பேரன் ஃபாஷன் பரேடில்  பங்கு கொண்டான்  சில காணொளிகள் நீளம் அதிகமாய் இருப்பதால் பதிவில் அப்லோட் ஆக மாட்டேன் என்கிறது. படங்களில் சிலவற்றையும் நீளம் அதிகமில்லாத காணொளிகள் சிலவும் பதிவிடுகிறேன் பெங்களூர்க் குளிரில் இரவு நேரத்தில் விழித்திருந்து பங்கு கொண்டது ஒரு வித்தியாசமான அனுபவம் 
                 
 
விழா மேடை
என் பேரன் ஃபேஷன் பரேடுக்கு தயார்

     
என்மகன் பிரதான காம்பியர்
            
  
 
சிறு குழந்தைகளின் நடனம்
நாட்டியம் 
 


 
நடனம் 
பாட்டு
பாட்டு
பாட்டு

புத்தாண்டு விழாக் குழு

காணொளி -இறை வணக்கம் 





கடைசியாக டிஸ்கோ ஜாக்கி என்னும் நிகழ்ச்சி.  அதில் டிஸ்கோ ஜாக்கியால் போடப்படும் பாட்டுக்களுக்கு கூடியிருந்தோர் ஆடும் நடனம்

39 comments:

  1. அசத்தல் அனுபவம்தான் போங்கோ!

    ReplyDelete
  2. வேட்டியை நினைத்தால் அழுகையா வருது ,பேஷன் பரேடுக்கு மட்டுமே கட்டுவது என்றாகிப் போச்சே :)

    ReplyDelete
  3. வித்தியாசமான அனுபவப் பகிர்வுகள்..!

    ReplyDelete
  4. தங்களுக்குப் புத்தாண்டு அமர்க்களமாகப் பிறந்திருக்கிறது

    ReplyDelete
  5. தங்களுக்கு எல்லா நாட்களும் சிறப்புற வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  6. நல்லதோர் அனுபவம் உங்களுக்கு.....

    என்னைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் விழிந்த்திருந்து புத்தாண்டை வரவேற்பது குறைந்திருக்கிறது. இம்முறையும் அப்படியே.....

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  9. இப்பொழுது வேஷ்டி, சட்டை தான் ஃபேஷன். பேரனுக்கும், அவன் அப்பா--அம்மா, தாத்தா--பாட்டிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  10. அட! அனுபவம் புதுமை வித்தியாசமாகத்தான் இருந்திருக்கும் போல!

    ReplyDelete
  11. புதுமையான அனுபவம் ஐயா...

    ReplyDelete
  12. அய்யா G.M.B அவர்களுக்கு எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்! நீங்கள் சொல்வது சரிதான். பலரும் முன்புபோல் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவுநேரம், கண்விழித்திருந்து, வெளியில் “ஹேப்பி நியூ இயர்” கொண்டாட விரும்புவதில்லை. செல்போனைத் தூக்கிக் கொண்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் என்று தனிமைக்கு போய் விடுகிறார்கள். நாம் நம்காலத்து மகிழ்ச்சியான நினைவுகளை களிகூர்கிறோம். நமது பிள்ளைகள் அவர்கள் காலத்தைச் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  13. புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    முதல் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ பகவான் ஜி
    அப்போதாவது கட்டுகிறார்களே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ இராஜராஜேஸ்வரி
    இந்த ஆண்டு சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது வருகைக்கு நன்றி

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    ஆண்டு முழுவதும் அமர்க்களமாய் இருக்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ நண்டு @ நொரண்டு ஈரோடு
    உங்களுக்கும் குடும்பத்தாருக்குமெங்கள் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    உங்கள் வாக்கு பலிக்கட்டும் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  20. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  21. @ தளிர் சுரேஷ்
    உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ ஸ்ரீராம்
    ஆம் சற்றே வித்தியாசமான அனுபவம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  23. @ ஜீவி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  24. @ துளசிதரன் தில்லையகத்து
    புதுமை என்று தோன்றவில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இவ்விதம்தான் கொண்டாடுகிறார்களாம் எனக்கு வித்தியாசமான அனுபவம் வருகைக்கு நன்றி சார்/ மேடம்

    ReplyDelete

  25. @ பரிவை சே குமார்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  26. @ தி தமிழ் இளங்கோ
    நம் பிள்ளைகளுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு சொல்ல என்ன இருக்கும் என்று யோசிக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ டி என் முரளிதரன்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  28. எப்போவுமே ஆங்கிலப் புத்தாண்டுஆனாலும் சரி, தமிழ்ப் புத்தாண்டு ஆனாலும் சரி பனிரண்டு மணி வரை விழித்திருந்ததெல்லாம் இல்லை. வழக்கமான நேரத்துக்குத் தூங்கப் போயிடுவோம். :) இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்திலும் நிகழ்ச்சிகள் இருந்தன. குழந்தைகள், பெரியவங்க எல்லோருக்கான நிகழ்ச்சிகளும் இருந்தன. பனிரண்டு மணி வரை நடந்தது. ஆனால் நாங்கள் போய்ச் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துட்டோம். முடியலை! மற்றபடி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இங்கே வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

  29. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  30. அட்டகாசம்! வாழ்த்துக்கள்.

    இப்பல்லாம் வேட்டியிலேயே பிடிப்புக்காக வெல்க்ரோ லைனர், பக்க பாகெட்டு எல்லாம் வந்தாச்சு போலிருக்கே?

    ReplyDelete

  31. @ அப்பாதுரை
    முதலில் உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புத்தாண்டை வரவேற்கும் போதுபுத்தாண்டின் முதல் பதிவில் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆண்டிலாவது நம் சந்திப்பு மீண்டும் நிகழுமா? பேரன் கட்டி இருக்கும் வேட்டி அந்த வசதிகள் கொண்டதல்ல வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  32. நல்ல அனுபவம் தான்.இங்கு வேலையுடனே புதுஆண்டு தொடங்கிவிடுவதால் கொண்டான் எல்லாம் இல்லை ஐயா.தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வணக்கம் ஜிஎம்பி ஐயா. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் (சற்றுத் தாமதமான) இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.


    எங்களுக்கு இப்போது கோடை(!?) காலம். கூடவே விடுமுறை காலமும் என்பதால் வீட்டு வேலைகள் செய்துகொண்டு இருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31 இரவு வாணவேடிக்கை போய்ப் பார்ப்பதோடு சரி.

    ReplyDelete

  34. @ தனிமரம்
    ஐயா முதலில் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டை பெரியதாகக் கொண்டாடி வரவேற்கும் வழக்கமெல்லாம் இல்லை. இந்த ஆண்டு ஒரு மாறுதலுக்காக என் மகனுடன் கழித்ததில் கலந்து கொண்ட விஷயங்களே பதிவில்/ வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  35. @ துளசி கோபால்
    புத்தாண்டின் பொலிவு இன்னும் குறையவில்லை. நானும் சற்றே தாமதமானாலும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் டாஷ் போர்டைப் பார்த்ததும் என் பதிவுகள் பலவற்றை ஒரே மூச்சில் படித்து பின்னூட்டமெழுதியது தெரியவருகிறது என் மகனது அபார்ட்மெண்ட் கொண்டாட்டங்களில் வாண வேடிக்கைகள் இருக்கவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தில் நிறையவே இருந்தன. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  36. எனக்கு இப்பொழுதுதான் புத்தாண்டு பிறந்திருக்கிறது 😃 சென்ற வருடம் மகள் வீட்டில் இவ்வருடம் கிராமத்தில் கொண்டாட்டம்.
    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. எனக்கு இப்பொழுதுதான் புத்தாண்டு பிறந்திருக்கிறது 😃 சென்ற வருடம் மகள் வீட்டில் இவ்வருடம் கிராமத்தில் கொண்டாட்டம்.
    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. @ மாதேவி
    பரவாயில்லை புத்தாண்டு இன்னும் பொலிவுடந்தானிருக்கிறது உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete