Wednesday, May 18, 2016

ஆமேல நோடோனா......


                                                  ஆமேல நோடோனா........
                                                  -------------------------------------
1992-ம் ஆண்டு நான் எங்கள் வீட்டின் மேல் இன்னொரு தளமெழுப்பினேன்  அதற்கு ஆன மொத்த செலவு மூன்று லட்சங்களே  அதே வீட்டை புதுப்பிக்க எனக்கு ஆன செலவு இப்போது ஏறத்தாழ  மூன்று லட்சங்கள் வீடு புதுப் பொலிவுடன் விளங்குகிறது  அதில் குடிவருவோரும் அதை நல்ல படியாக மெயிண்டெயின்  செய்ய வேண்டும் என்ற கவலையால்  வாடகைக்கு இருத்துபவரைகவனமாக கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது வீடு வாடகைக்கு என்று போர்ட் மாட்டியதில் இருந்து பலரும் வீடு பார்த்துப் போக வந்தனர்  இவர்களில் ப்ரோக்கர்களும் வீடு தேவைப்படுபவர்போல் நடித்து வீட்டைப் பார்க்க வந்தனர் ஆனால் இவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததுபலரும் வீட்டைப் பார்க்கும்  முன்னர் வாடகை எவ்வளவு என்று அறிவதிலேயே கண்ணாய் இருந்தனர் வீடு யாருக்கு என்று கேட்டு அவர்கள் வந்து பார்க்கட்டும் என்று சொல்லியே அனுப்பி விடுவேன்  அவர்களை . வீடு வாடகைக்கு என்று எழுதியதைப் பார்த்தும் பலரும் லீசுக்கு  தருவீர்களா என்று கேட்டனர் லீசுக்கு இல்லை என்றதும் சிங்கிள் பெட் ரூம் வேண்டும் என்று சொல்லிப் போனவரும்  உண்டு. இத்தனைக்கும் வாடகைக்கு என்று எழுதிய போர்டில் இரண்டு பெட்ரூம்  இரண்டு ஹால்கள்  என்றும் எழுதி இருந்தேன் . நேரம் கெட்ட நேரத்தில் டெலிபோனில்  வீடு வாடகைக்குஎன்றால் என்ன வாடகை என்று கேட்டோரும்  உண்டு
 வந்தவர்களில் நிஜமாகவே சீரியசாக வீடு வேண்டி வந்தோரும் உண்டு  வருபவர்களில் நல்லவர்கள் யார் என்று கணிப்பதில் கவனம் தேவைசிலர் வாடகையைக் குறைத்து அட்வான்ஸ் அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள்  என்றும் கேட்டனர் ஒரு பார்ட்டி தொலை பேசி விட்டு வீடு பார்க்க வரலாமா என்று கேட்டார்கள் யாருக்கு வீடு தேவையோ அவர்கள் வரலாம் என்றேன்  வந்தவர் முதலில் கேட்ட கேள்வி முஸ்லிம் களுக்கு வீடு கொடுப்பீர்களா என்றது தான் எனக்கு எந்த ஆட்சேபணையும்  இருக்கவில்லை. ஆனால் என் மனைவிக்கு சில ரிசர்வேஷன்கள் இருந்தது நான் அவர்களை வீடு பார்க்க வரலாம் என்றேன்  எனக்கு ஒரு கண்டிஷன் இருந்தது. வீட்டில் குடி வருபவர்கள் எண்ணிக்கை ஐந்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதுதான்  அது இருக்கும் தண்ணீர் பிரச்சனையால் வந்த கண்டிஷன் இன்னொன்று குடிப்பக்கம் கூடு என்பும்ான். வந்த முஸ்லிம்  பார்ட்டி ஐந்து பேரே என்றனர்  அதிலும் ஒரு மகன் திருமணத்துக்குத்  தயார் என்றும் அவனது திருமணத்துக்குப் பின் ஆறு பேர்கள் என்றும் கூறினார்  நான் அவரது மனைவியையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன்  மறு நாள் வீடு பார்க்க வந்தபோது திருமணத்துக்கு இருக்கும் மகன் மகள் தவிர ஐந்து பேர் வந்தனர்  நான் அவர்கள் குடும்பத்தினரே  திருமணத்துக்கு  முன்பே ஏழுபேர் இருக்கிறார்களே என்று கேட்டேன் அவர் மகள் மணமாகிப் போய்விடுவார் என்று கூறினார் அப்படியும் இப்போதே ஆறு பேர் இருக்கிறார்களே என்று கேட்டேன்  திருமணத்துக்குப் பின் ஆறுபேர் இருக்கலாம் என்றால் இப்போது ஆறு பேர் இருப்பதில் என்ன தவறு என்றார் நான் திருமணத்துக்குப் பின்  ஏழு பேர் ஆவார்களே என்றேன்  அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அவருக்கு வீடு இல்லை என்று சொல்ல வைத்தது நான் கேள்வி கேட்டபோது அவர் அது குறித்து( ஆமேல நோடோனா” பிறகு பார்த்துக் கொள்ளலாம் ) என்றார் குடி  வைத்தபின்  அவர்களோடு மல்லுக்கட்ட என்னால் முடியாது என்று தோன்றியதாலும் வார்த்தைப் பிறழுபவரை  எனக்குப் பிடிக்காது என்றும் கூறினேன்  நான் அந்தப் பார்ட்டியை ரிஜெக்ட் செய்தது என் மனைவிக்கு மகிழ்ச்சி தந்தது
 இன்னொரு நாள் இரவு எட்டுமணி சுமாருக்கு  மூன்று பேர் வந்து நேரே மாடிக்குச் செல்லத் துவங்கினர் நான் அவர்களைத் தடுத்து யாருக்கு வீடு என்று கேட்டேன் மூவரில் ஒருவர் தனக்கு என்றார்  குடித்ிருந்தார் போல் இருந்தது. வீட்டில் எத்தனை மெம்பர்கள் என்று கேட்டேன்  அவர் மிகப் பெருமையாக பத்துபேர் என்றும் அவரது இரு மனைவிகளுடனும்  சேர்த்துக் கூட்டுக் குடித்தனம் என்றும் கூறினார்  நான் அவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது என்று அனுப்பி விட்டேன்
வீடு மிகவும் பிடித்துப் போய்  விடவும் முடியாமல்முடிவும்  எடுக்க முடியாமல் அவ்வப்போது வந்து இன்னும்  காலியாகவே இருப்பது அறிந்து சென்றவரும் உண்டு கார் பார்க்கிங் வசதியுடன் சற்றே விசாலமான புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு வாடகைக்கு வந்தாகி விட்டதுஒரு சற்றே வயதான தம்பதியர் ஒருமகன் இன்னும் திருமண மாகவில்லை என்று மூன்றே பேர் அடங்கிய காம்பாக்ட் குடும்பம்  வீட்டை நன்கு பர்ராமரிப்பார்கள் என்னும் நம்பிக்கையில் வாடகைக்கு கொடுத்திருக்கிறேன் . பார்ப்போம் புதுப்பிக்கப் பட்ட வீட்டின் புகைப்படங்கள் சில கீழே.         
 
வெளியில் இருந்து பார்வை
 
வீட்டு எண்ட்ரன்ஸ்
  
வெளி ஹால் ஒரு பகுதி
    
 
வெளிஹால் இன்னொரு வியூ 
.   
          
படுக்கை அறை  இதுபோல் இன்னொன்றும் உண்டு 

உள்ஹால் 
உள்ஹால் இன்னொரு வியூ
பூஜா அறை
சமையல் அறை 
ஸ்டோர் ரூம் 
குளியல் அறை  டாய்லெட்
பால்கனியிலிருந்து சாலை வியூ 
பின்புற கேட் 
கார் நிறுத்த
மாடிக்குச் செல்ல 



















49 comments:

  1. வீடு நல்லாவே இருக்கு. குளியலறைத் தரையில் என்ன? Door mat?

    ReplyDelete
  2. பல இடங்களில் வாடகைக்கு வரும் பலர் வீட்டு சொந்தக்காரர்கள் போல நடந்துகொள்கின்றார்கள். பல சிக்கல்களையும் உண்டாக்குகின்றார்க்ள்.

    ReplyDelete
  3. பல லட்சங்கள் செலவு செய்து வீட்டைக் கட்டிவிட்டு வாடகைக்கு கொடுத்துவிட்டு அவதிப்படுவது சரியில்லைதான். உங்களைப்போல தீர விசாரித்து நல்ல குடும்பங்களை அமர்த்திக்கொள்வதுதான் சரி. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வாடகை வீட்டில் குடி இருப்பதிலும், வாடகைக்கு வீடு விடுவதிலும்தான் எவ்வளவு விஷயங்கள். புதிய பொலிவுடன் இருக்கும் உங்கள் வீட்டின் பின்னணியில், வாசல் முன், நீங்களும் உங்கள் மனைவியும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வீட்டை நன்றாகப் புதுப்பித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வீடு நன்றாயிருக்கிறது. முன்னரே ஒருமுறை புகைப்படங்கள் போட்டிருக்கிறீர்கள் என்று நினைவு. எல்லாம் பார்த்துப் பார்த்துதான் செய்ய வேண்டி உள்ளது.

    ReplyDelete
  7. நிம்ம மனே தும்ப சன்னாகிதே ஸ்வாமி !

    ReplyDelete
  8. வீடு மிக அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  9. வீடு நன்றாக அழகாக இருக்கிறது..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  10. எல்லாப் படங்களும் திறக்கலை என்றாலும் படங்களை முன்னரே பார்த்த நினைவும் இருக்கு.வாடகைக்கு வருபவர்களைப் பார்த்து வைப்பது என்பது ஒரு பெரிய வித்தை! அப்படியும் ஏமாற்றுபவர்கள் உண்டு. :(

    ReplyDelete
  11. வீடு அருமையாக உள்ளது
    வாடகைக்கு ஆட்கள் வந்தது
    மகிழ்வளிக்கிறது

    வீட்டின் அருமை தெரிந்த
    வாடகைதாரர்கள் கிடைப்பது
    இக்காலத்தில் அபூர்வமே

    ReplyDelete
  12. வீடு அருமை ஏற்கனவே புகைப்படம் பார்த்த நினைவு பிரச்சினைகள் இல்லாமல் செல்லட்டும்....

    ReplyDelete
  13. வீடு அழகாக உள்ளது ஐயா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அழகிய வீடு. வாடகைக்கு ஆள் பார்ப்பது மிகப் பெரிய வேலை தான்.....

    ReplyDelete
  15. அழகான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கவும் பிரார்த்தம் செய்துஇருக்கனும். வீடமைப்பு மிகவும் அழகு ஐயா.

    ReplyDelete
  16. வீடு பிரமாதமாய் இருக்கிறது. பெங்களூரா?

    ReplyDelete
  17. வரும் வாடகையை விட பராமரிப்புக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது ,சில நேரங்களில் வாடகைக்கு விடுமளவுக்கு வீடு கட்டுவது தவறோ என்று நானும் நினைப்பதுண்டு !

    ReplyDelete
  18. வீடு அழகாக இருக்கிறது. நுழைவு வாயில் சற்று குறுகலாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

    ReplyDelete
  19. ஐயா வீடு அழகாக உள்ளது...
    வாழ்த்துகள் ஐயா...!

    ReplyDelete

  20. @ துளசி கோபால்
    வருகைக்கும் உன்னிப்பான கவனிப்புக்கும் நன்றி மேம் குளியலறையில் கையால் துணி துவைக்க வசதியாக க்ரானைட் கல் பதித்திருக்கிறேன்

    ReplyDelete

  21. @டாக்டர் ஜம்புலிங்கம்
    வாருங்கள் ஐயா. பலதரப்பட்ட குடித்தனக் காரர்களைப் பார்த்திருக்கிறேன் அவர்கள் சொந்த வீட்டைப் பராமரிப்பது போல் இருந்தால் நல்லதுதானே

    ReplyDelete

  22. @ தளிர் சுரேஷ் வாருங்கள் வருகைக்கு நன்றி குடித்தனத்துக்கு அமர்த்துபவர்களைக் கவனமாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்

    ReplyDelete

  23. @ தி தமிழ் இளங்கோ
    சரியாச் சொன்னீர்கள் இருபாலரும் கவனமாக இருக்க வேண்டும் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  24. @ டாக்டர் கந்தசாமி
    பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @ ஸ்ரீ ராம்
    உங்கள் நினைவு சரிதான் ஆனால் அந்தப் புகைப்படங்கள் 99ஏக்கர்ஸ் காரர்களால் எடுக்கப்பட்டது ஒரு சிலதே பதிவாயிருக்கும் இவை நான் எடுத்தவை வருகைக்கு நன்றி

    ReplyDelete

  26. @ மோகன் ஜி
    நன்றி ஐயா

    ReplyDelete

  27. @ கீதா சாம்பசிவம்
    ஏமாறாமல் இருப்பது நம் கையில் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  28. @ ரமணி
    பாராட்டுக்கு நன்றி ஐயா இப்போது குடி வந்தவர்கள் நல்லவர்களாக இருப்பார் என்பது நம்பிக்கை

    ReplyDelete
  29. @ கில்லர்ஜி
    வீடு வாடகைக்கு என்று விளம்பரம் கொடுத்தபோது 99 ஏக்கர்ஸ் நிறுவனத்தார் சில புகைப்படங்களை எடுத்தார்கள் அதை முன்பு பதிவிட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  30. @கரந்தை ஜெயக்குமார்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  31. @ வெங்கட் நாகராஜ்
    இரண்டு மாதக் காத்திருப்புக்குப் பின் தேர்ந்தெடுத்தவரே இப்போது குடி வந்திருப்பவர் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  32. @ தனிமரம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  33. @ கோமதி அரசு
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  34. @ ஸ்ரீ மலையப்பன் ஸ்ரீராம்
    முதல் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  35. @ துரை செல்வராஜ்
    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  36. @ டிஎன் முரளிதரன்
    ஆம் ஐயா பெங்களூரில்தான் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  37. @ பகவான் ஜி
    என்ன செய்வது வாடகைதானே எங்களுக்கு புவ்வா போடுகிறது செலவு ஒரு முதலீடு அவ்வளவே வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  38. @ எஸ்பி செந்தில் குமார்
    கூர்ந்த அவதானிப்புக்கு பாராட்டுக்கள். இருந்தாலும் சற்றே பெரிய பொருட்களை உள்ளே எடுத்துச் செல்ல அதன் பக்க வாட்டிலேயே இன்னும் அகலமான கதவும் உண்டு வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  39. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  40. மாடியில் ஒரு குடித்தனக்காரர் இருப்பது, தரைத் தளத்தில் வாழும் தங்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும் என்பது உறுதி. எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். அப்படி இல்லாத நிலைமை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டுமோ அப்படி எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு உண்டு என்பது எனக்கு தெரியும்! - இராய செல்லப்பா

    ReplyDelete
  41. இப்பொழுது தான் பார்த்தேன். இன்னும் சரியான குடத்தனக்காரர் அமையவில்லையா?.. தனி மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். விரைவில் வாடகைக்கு குடித்தனம் வர வழி சொல்கிறேன்.

    ReplyDelete
  42. //புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு வாடகைக்கு வந்தாகி விட்டது.. //

    சாரி, சார்! சரியாகப் படிக்கவில்லை. இப்பொழுது அதற்கான என் ஆலோசனையும் தேவையிருக்காது என்று தெரிகிறது.

    ReplyDelete

  43. @ செல்லப்பா யக்ஞசாமி
    அவர்களும் நாங்கள் கீழே இருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு என்று கூறினார்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  44. @ ஜீவி
    உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete

  45. வீடு நன்றாக இருக்கிறது. வீட்டை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது கடினம் என்பதால் நான் எனது வீட்டின் மேலே இன்னொரு பகுதியைக் கட்டவில்லை.

    ReplyDelete

  46. @ வே.நடனசபாபதி
    மேல் தளத்தில் கட்டிய வீடுதான் நமக்கு சோறு உத்தரவாதம் அளிக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  47. நல்லபடியாக ஒரு குடும்பத்தை வாடகைக்கு அமர்த்தியது உங்களுக்கு ஆசுவாசத்தைத் தந்திருக்கும் என நம்புகிறேன். நல்ல பதிவு சார்.

    ReplyDelete

  48. @ சித்ரன் ரகுநாத்
    வருகைக்கு நன்றி சார் ஆரம்பகாலத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்தவர் நீங்கள் அடிக்கடி வாருங்கள்

    ReplyDelete