Thursday, May 26, 2016

பெயர் சூட்டும் விழா


                           பெயர் சூட்டு விழா        
                          -------------------------------

யூல் ப்ரின்னர் ஸ்டைலில் இருக்கும் இவர் பெயர் சந்தீப் தந்தையார் சிவராம். என் பெரிய மச்சினன்  இவரைப் பற்றியே பல பதிவுகள் போடுமளவு சாதனையாளர் மிகவும் ஷை டைப். எதையும் முன் வந்து சொல்ல வராததால் பதிவிட முடியவில்லை.  இருந்தாலும் ஓரிரு விஷயங்களைச்சொல்லத்  தோன்றுகிறது தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரிலிருந்து வடகிழக்கு எல்லை வரை பயணித்தவர் யாருமே பயணிக்காத இடமெல்லாம் உண்டு  ஏறத்தாழ இரு மாதங்கள் பயணித்தவர்
நான் என்னுடைய காசெட் டேப்புகளில் பதிவாக்கி இருந்த  குரல்களை காசெட் ப்லேயர் கெட்டுப் போய் விட்டதால் கேட்க முடியாமல் இருந்த நேரம் எனக்கு ஆறுதல் தரும் விதத்தில் ஒரு கன்வெர்டர் கருவியை வாங்கிக் கொடுத்து அதை செயல் படுத்தவும் கற்றுக் கொடுத்தார்

தற்போது இன்ஃபோசிஸ்ஸில் கணினி நிபுணராகப் பணி புரிகிறார்  இவரது வீடு எலெக்ட்ரானிக் சிடியில் இருக்கிறது  . என் வீட்டிலிருந்து சுமார் நாற்பது கிமீ தூரம்  


சந்தீப் சிவராம்  குழந்தையுடன் 

இவருக்கு ஒருஆண்மகவு பிறந்து அதற்கு பெயர் சூட்டும்  விழாவை குழந்தை பிறந்த 28-ம் நாளில் மேமாதம் 19-ம் தேதி வைத்திருந்தார் எங்களையும் அழைத்திருந்தார் என்று சொல்லத் தேவை இல்லை.

அழைப்பு வந்த நாளிலிருந்து  எனக்கு ஒரே கவலை. போகவேண்டுமா வேண்டாமா  என்னும் டைலம்மா . ஒரு பக்கம் மனம் நீ போக வேண்டும் என்றது.  இன்னொரு புறம்  அது அவ்வளவு தேவையா என்றும் எதிர்க் கேள்வி கேட்டது. இவரது வீடு  அருகாமையில் இருந்தால் இந்தக் கேள்விகளே எழாது. இந்த வயதில்  பெங்களூரின்  புகழ் பெற்ற  ட்ராஃபிக்கில்  போவதை நினைத்ததாலேயே இத்தனை கேள்விகளும் .எனக்கோ எந்த விழாவுக்கும் சரியான நேரத்தில்  இருக்க வேண்டும் டாக்சி யில் போய்வர ரூபாய் ஆயிரம் ஆகிவிடும் இரண்டு மணிநேரத்துக்கும் குறையாமல் ஒரு வழிப் பயணம் இருக்கும்
இந்த நேரத்தில் என் உறவினர் ஒருவர் கூறியது  நேரங்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்தது ஒரு வேளை உணவுக்காகவோ காப்பிக்காகவோ இத்தனை தூரம் பயணிக்க வேண்டுமா என்று கேட்டே எங்கும் போக மாட்டார் அவர். ஆனால் நான் அவர் மாதிரி அல்ல அன்பால் கூப்பிடும்போது போகாமல் இருக்க முடியவில்லை எப்படிப் பயணிப்பது என்று திட்டமிடத் துவங்கினேன்  பேரூந்துப் பயணம் இல்லவே இல்லை என்று மனைவி கூறி விட்டாள் யாருடனாவது தொற்றிக் கொள்ளலாம் என்றால் போகக் கூடியவர்கள் எல்லோரும் தொலைவில் இருந்தார்கள் வார நாளானதாலும் என் மகன் டூர் போயிருந்ததாலும் அவன் மும்பையிலிருந்தே ஓலா டாக்சி புக் செய்கிறேன்  என்றான்  என் பேரன் தானே செய்து தருவதாகக் கூறினான் காலை பதினொரு மணிக்கு பெயர் சூட்டப்படும் என்று கூறி இருந்தார்கள். அதற்கு நான் என் வீட்டிலிருந்து  காலை எட்டரை மணிக்கே புறப்பட்டால்தான்  நேரத்தோடு போய்ச் சேர முடியும் இப்போது ஓலாவில் ஓலா மினி என்னும் சர்வீஸ் இருக்கிறது  அதில் கட்டணம் குறைவாக இருக்கும் எலெக்ட்ரானிக் சிடிக்கு  இரு வழிகளில் பயணிக்கலாம்  ஒன்று சற்றே சுற்று ஐம்பது கிமீ தூரம் இருக்கும் நைஸ் ரோட் வழியே போகலாம் ஆனால் போகும் வழியில் இரண்டு மூன்று டோல்கள் இருக்கும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் இன்னொரு பாதை நகரத்தின் ஊடே பயணிக்க வேண்டும்  நேரம் அதிகமாகும் நாற்பது கிமீ தூரத்துக்கும்  குறைவே
எப்படியும்  போவது என்று முடிவு செய்து விட்டோம்  . நான் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வர ப்ரிபெய்ட் ஆட்டோவை உபயோகிப்பேன்அதில் இரண்டு அட்வாண்டேஜுகள் உண்டு. ஒன்று கொடுக்க வேண்டிய தொகை முதலிலேயே தெரியும் இரண்டாவதுமீட்டரையே பார்த்துக் கொண்டு அதில் ஏறும் தொகையைப் பார்த்துக் கொண்டே வரும்போது எகிறும் பிபி தொல்லை இருக்காது. இந்த ஓலா செர்வீசில்  அந்த வசதி இல்லை. போய்ச் சேர்ந்தபின்தான் இவ்வளவு சார்ஜ் ஆயிற்று என்று தெரியும்  எனக்கோ எவ்வளவு தீட்டுவானோ என்னும்  கவலை.  ஓலாவில் வண்டி ஓடும்  நேரத்துக்கு நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்கள் இரண்டு மணிப்பயணம் என்றால்  ரூ 120 அதிகம் கட்ட வேண்டும் பெங்களூர் ட்ராஃபிக்கில் எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது இன்னொன்று நமக்கோ வழி தெரியாது  ட்ரைவர் கூட்டிக்கொண்டு போவதுதான் வழி.  அருகாமை வந்ததும்  தொலைபேசியில் மச்சினன் மகனிடம் ட்ரைவரிடம் வழி சொல்லக் கேட்டுக் கொண்டோம்
 எனக்குமட்டும்தான் இந்தப் பிரச்சனையா. செலவு செய்யும் பணம் பற்றி  அதிகம் யோசிக்கிறேனோ தெரியாது  இப்போது இருக்கும் தலை முறையினருக்கு ரூபாயின் மதிப்பு தெரியவில்லை என்றால் என் தலை முறை மக்கள் அது பற்றியே அதிகம் சிந்திக்கிறோம் ஒவ்வொரு ரூபாயும் எத்தனை மதிப்பு வாய்ந்தது என்று தெரியும்  இப்போது ரூபாய்க்கு மதிப்பேஇல்லை
நான் பணம் செலவு செய்யாத கஞ்சன் அல்ல.ஆனால் செலவு செய்யும் முன்  அந்தச் செலவு தேவைதானா என்று என்னையே கேள்வி கேட்பவன் பணத்தின்  அருமை தெரிந்தவன் 
ஒரு வழியாய் காலை 10-45க்கு  போய்ச் சேர்ந்தோம் நாங்கள்தான் முதலில் போய்ச் சேர்ந்தவர்கள் பதினொரு மணி அள்வில் பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன. இதுதான் முறை என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அரிசியும் அதன் மேல் தேங்காயும் வைத்து அருகில் விளக்கேற்றினார்கள் குழந்தையின் தாய் வழித் தாத்தா  மடியில் வைத்து கைக்கு கருப்பு வளையும்  காலுக்கு தண்டையும்  அணிவித்தார்கள் திருஷ்டிப் பொட்டும் வைத்தார்கள் நெருங்கிய சொந்தம் கொண்டவர்கள்  குழந்தைக்கு செயின் அணிவித்தார்கள் பிறகு தந்தை குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதலில் எனக்கு விளங்கவில்லை  பிறகு தெரிந்துகொண்டேன் ஷ்லொக்  நாயர் என்ற பெயர் என்று . எனக்கானால் பெயருக்கான காரணம் தெரிந்து கொள்ள ஆசை. என் மனைவி என் வாயை அடைத்து விட்டாள்யார் சொன்னது  சாதிகள் மறைகின்றன என்று.  பெயரிலேயே சாதியைக் குறிப்பிடும் புதிய தலை முறையினர் அதிகரித்து  விட்டனர் பெண்களின்  பெயருக்குப் பின்னாலும் பல இடங்களில் சாதிப்பெயர் காண்கிறேன் பனிரெண்டு மணிக்கெல்லாம் உணவு ரெடி சாப்பிடலாம் என்றார்கள்  மீண்டும் நெடுந்தூரப் பயணம் கருதி சீக்கிரமே உண்ண அமர்ந்தோம் ஒன்னாங் கிலாஸ் நாடன் சத்தியை வருவல் இஞ்சிப் புளி ஊறுகாய்  பப்படம் காளன் ஓலன் அவியல் எலிசேரி புளிசேரி பச்சடி பொறியல் இரு வகைப் பாயசம் சாம்பார் ரசம்  என்று பட்டியல் நீண்டது  நான் மிகவும் குறைந்த அளவே உண்பவன் அதிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்பவன்  முதலில் அமர்ந்து இலை எடுக்க ஆள் வரும்வரை உண்பவன் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பலரும் வரத் தொடங்கினார்கள் 
பெங்களூரில் ஒன்று கவனித்திருக்கிறேன்  ஏதாவது விழாவுக்குச் செல்வதே சாப்பிட மட்டும்தான் என்று தோன்றும் படி இருக்கும் ஆனால் வந்தவர்களில் பெரும் பாலோர் ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதாகக் கூறினர் நம்பாமல் இருக்க முடியவில்லை.
திரும்புவதற்கும் ஓலாவையே நாடினோம்  முதலில் வந்தவர் நைஸ் ரோட் வழிதான் போவேன் என்றார்  அவரைக் கான்சல் செய்து விட்டு சிறிது காத்திருப்பிக்குப் பின்  வேறொரு வண்டியில் பயணித்தோம் இந்த ட்ரைவரோ நம்மிடமே வழி கேட்டுக் கொண்டு ஓட்டினார்  ஆனால் பாதி தூரம் சென்றபின் யாரிடமோ வழிகேட்டு  நான் சொல்லாத பாதையில் சற்று சுற்றிப் போனார்  எதையும்  பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று  ஒரு வழியாய் வீடு வந்து சேரும்போது மணி  மூன்றரை ஆகி இருந்தது வீட்டுக்கு வந்தது ட்ரைவருக்குச் சில மாம்பழங்கள் கொடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னோம்  .நல்ல படி வீடு வந்து சேர்ந்தோம் என்று எல்லோருக்கும் தகவல் தெரிவித்தோம் 
குழந்தையின்  பெற்றோருடன்  நாங்கள் 
                
  
பெயர் சூட்டல் 

சத்தியை






44 comments:

  1. நல்ல விருந்து தான்! குழந்தைக்கும் தாய், தந்தைக்கும் எங்கள் ஆசிகள். பெண்களூரில் போக்குவரத்து நெரிசலில் நாங்களும் அவதிப்பட்டிருக்கோம். சென்னையிலும் தான்! :( மும்பையில் கேட்கவே வேண்டாம். கல்கத்தா மிக மிக மிக மோசம்! :( இதிலே தில்லி கொஞ்சம் பரவாயில்லை ரகம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நாங்களும் கணக்குப் பார்த்துத் தான் செலவு செய்வோம். அதிலும் என் கணவர் ரொம்பவே யோசிப்பார். குழந்தைகளுக்குக் கோபம் வரும்! கஷ்டப்பட்டதெல்லாம் போதும்னு சொல்வாங்க!

    ReplyDelete
  3. //நான் பணம் செலவு செய்யாத கஞ்சன் அல்ல.ஆனால் செலவு செய்யும் முன் அந்தச் செலவு தேவைதானா என்று என்னையே கேள்வி கேட்பவன் பணத்தின் அருமை தெரிந்தவன்//

    இதுதான் ஐயா எனது பாலிசியும்...
    குழந்தைக்கு எமது வாழ்த்துகளும் ஐயா

    ReplyDelete
  4. ஏற்கனவே இவரைப் பற்றிய நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.
    எவ்வளவு கடின பயணமாக இருந்தாலும் அன்புடன் அழைப்பவரை மதித்து சென்று சிறப்பித்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  5. சாப்பாட்டு ஐட்டங்கள் சிலதை கற்பனையில் எதுகை மோனைக்காகக் கூறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. கடினமான பயணமாக இருந்தாலும்
    தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  7. சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால்பணம் என்பார்கள். அப்படி ஆகிப் போகிறது சிலசமயங்களில்! வேறு வழியில்லை தவிர்க்க முடியாது என்றால் என்ன செய்ய முடியும்?!!

    ReplyDelete
  8. அவசியமெனைல் எவ்வளவு
    வேண்டுமானாலும்
    அவசியமில்லையெனில்
    ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டேன் என
    என நண்பர் சொல்வார்
    அந்தத் தியரி எனக்கும் உடன்பாடே
    படங்களுடன் பதிவு அருமை

    ReplyDelete
  9. குழந்தைக்கும்,பெரோர்களுக்கும் வாழ்த்துகளும் ஆசிகளும் பல.
    நீங்கள் சொல்வது போல் பெங்களூர் டிராபிக் மலைக்க வைக்கிறது. அதே போல் இக்காலத்தவர்க்கு பணத்தின் மதிப்புத் தெரியவில்லையா இல்லை நாம் அதிகம் கவலைப் படுகிறோமா என்கிற குழப்பம் எனக்கும் அடிக்கடி வருவதுண்டு.

    பலரும் என்னைப் போலவே என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.(LOL)

    ReplyDelete
  10. பெயர் சூட்டல் பதிவு படித்தேன். பெங்களூர் ட்ராஃபிக் உங்களுக்கு கொடுத்த மலைப்பு புரிகிறது.

    பெங்களூரில் கடந்த ஓராண்டுகாலத்தில், போக்குவரத்து நெரிசல், ஓலா, உபெர் அவஸ்தைகள் என நிறைய அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.ஓலா, உபெரின் காலை,மாலை peak hour surge-களை (1.4 times, 2 times, 2.4 times, sometimes even 3 times the normal charge) வேலைக்கு டாக்ஸியில் தினம் போய்வரும் என் பெண் நிறைய அனுபவிக்கிறாள்.These cab companies loot in Bangalore.

    டெல்லியில்கூட ஆட்டோ அல்லது மெட்ரோதான் எங்களுக்கு.பஸ்ஸில் பயணிப்பது மிகவும் அபூர்வம். பெங்களூரில் சில சமயங்களில் வோல்வோ பஸ்களில் பயணம்; (உங்கள் வீட்டுக்கு வருகையில் ஒருமுறை No.507 KSRTC அனுபவம்)

    ReplyDelete
  11. உங்களோடு வந்தது எங்களுக்கே டயர்ட் ஆகுது அய்யா ...

    ReplyDelete
  12. அழைத்தவர் தமக்கு மகிழ்ச்சியாக - சிரமங்கள் பலவற்றைக் கடந்து பெயர் சூட்டு விழாவினை சிறப்பித்த விதம் - உயரிய பண்பாடு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  13. அத்தனை உணர்வுகளும் போட்டி போடுகின்றன உங்கள் எழுத்தில்.
    இத்தனை சங்கடங்களையும் பொருட்படுத்தாமல் போய்வந்த
    உங்கள் பெருந்தன்மைக்கு வணக்கம்.
    இப்பொழுது இருக்கும் தலைமுறை வேறு மாதிரி தான் இருக்கிறது. ஒரு மாதிரி
    சிக்கனம்.ஒருமாதிரி செலவு என்றிருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. அதென்ன எலிசேரி? பாவம் இல்லையோ அந்த எலி:-) எரிசேரி என்று மாத்தணும், இல்லையோ!

    ஒவ்வொரு தலைமுறையும் வெவ்வேற மாதிரிதான். எதுக்கு முக்கியம் என்பதே தெரியறதில்லை.

    முந்தியெல்லாம் எவ்ளோ பெரிய வேலைன்னாலுமே சம்பளம் ரொம்பக் கம்மி. அதான் எண்ணி எண்ணி செலவு செய்தோம். இப்ப அப்படியா?

    ReplyDelete
  15. //பருப்பில் நேந்திரக்காயும்,சேனையும் போட்டு, தேங்காய் சேர்த்தும் ,வறுத்தும் ,செய்யும் கூட்டானுக்குப்பெயர்,
    எலிசேரி. இதுவே ஒவ்வொரு ஊருக்கும் விளி வேறுபட்டிருக்கும். //

    எலிசேரினும் சொல்வதுண்டு. அதோடு சாப்பாடு ஐடங்களைக் கற்பனையில் கூறவும் இல்லை. எல்லாம் பரிமாறுவது உண்டு. மேலும் திரு ஜிஎம்பி ஐயா அவர்கள் இலையைப் படம் எடுத்தும் போட்டிருக்கார். சொல்லி இருக்கும் ஐடங்கள் அனைத்துமே இலையில் இருக்கின்றன. :)))))

    ReplyDelete
  16. இப்போதெல்லாம் கல்யாணங்களில் காலை ஆகாரத்திலேயே வகை, வகையாகப் பலகாரங்கள். முன்னெல்லாம் வெறும் இட்லி, சாம்பார், சட்னியோடு ஒரே ஒரு ஸ்வீட் மட்டும் இருக்கும். மெல்ல மெல்லப் பொங்கல் இடம் பிடித்தது. பின்னர் வடை சேர்ந்து கொண்டு கூட்டணி அமைத்தது. அதன் பின்னர் வந்த நாட்களிலேயோ இட்லி, பொங்கல், வடை தவிர, ஊத்தப்பம், பூரி, கிழங்கு அல்லது மசால் தோசை, ப்ரெட் சான்ட்விச் போன்றவை இடம் பெறுகின்றன. கல்யாணத்திற்கு முதல்நாள் மாலை டிஃபனின் அடை, அவியல் கூட இடம் பெறுகின்றது. அடை, அவியல், சேவை, மோர்க்குழம்பு அல்லது கொத்சு, போண்டோ, அல்லது உ.கி. போண்டோ, காலிஃப்ளவர் மஞ்சூரியன், அசோகா ஸ்வீட் அல்லது பாதாம் அல்வா எனக் கொடுக்கின்றனர். நம்மால் சாப்பிட முடிவதில்லை என்பது தான் உண்மை! நிறைய உணவு வீணாகும்! :(

    ReplyDelete
  17. உறவுகளை வேண்டும் என்று நினைத்தால், உடல்நிலை என்ற காரணம் தவிர, மற்றபடி காசு, தூரம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. குழந்தை ஷ்லொக் நாயருக்கு வாழ்த்துக்கள். எந்தக் குழந்தையும் ஜாதியை சொல்லிக் கொண்டு பிறப்பதில்லை. நாம்தான் அடையாளப் படுத்துகிறோம்.

    ReplyDelete
  18. உங்களின் அன்பும், ஈடுபாடும் பதிவில் தெளிவாகத் தெரிகிறது. எழுத ஒன்றுமில்லை என்ற நிலையில் ஆரம்பித்து நிகழ்வினை கனகச்சிதமாகப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    மற்ற நகரங்களில் சாலைகள் சற்றே விசாலமானதாய் இருக்கிறது பெங்களூரில் குறுகிய சாலைகள் அதிகம் போக்குவரத்து வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்
    செலவு நம் கைக்குக் கட்டுப்பட்டதாக இருந்தால் சரி கைக்கு மீறின செலவு சிரமம் கொடுக்கும்

    ReplyDelete

  21. @ கில்லர்ஜி
    என்னோடொத்த கருத்து என்பது மகிழ்ச்சி தருகிறது. வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  22. @ டி என் முரளிதரன்
    போய் வந்ததில் எனக்கு பதிவு எழுத விஷயமும் கிடைத்ததே. வருகைகு நன்றி சார்

    ReplyDelete

  23. @ டாக்டர் கந்தசாமி
    இல்லை ஐயா. கூறி உள்ள பதார்த்தங்கள் எல்லாம் இலையில் உண்டு நேந்திர வறுவல் பப்படத்துக்கு அடியில் போய் விட்டது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  24. @ கரந்தை ஜெயக்குமார்
    பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @ ஸ்ரீராம்
    சுண்டைக்காய் எது சுமை கூலி எது புரியவில்லையே ஸ்ரீ வருகைக்கு நன்றி

    ReplyDelete

  26. @ ரமணி
    அவசியம் எது அல்லாதது எது என்பதை சில நேரங்களில் தீர்மானிப்பது நம் பெட்டர் ஹால்ஃப் தான் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  27. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    எல்லாமே நம் கையில் இருக்கும் பணத்தைப் பற்றியது வாழ்த்துக்கு நன்றி மேம்

    ReplyDelete

  28. @ ஏகாந்தன்
    பெங்களூர் போக்கு வரத்து has become notoriyous ஓலா செர்வீசில் மைக்ரோ என்று ஒரு வகை உண்டு. அது குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க உதவுகிறது நாங்கள் என் வீட்டில் இருந்து போக ரூ 365 -ம் வர 390-ம் கொடுத்தோம் நாற்பது கிமீ தூரத்ட்க்ஹுக்கு இது குறைவே என்று தோன்றுகிறது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர உபயோகப் படுத்தியரூட் 507 பி எம் டி சி

    ReplyDelete

  29. @ ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்
    எங்களுக்கு அவ்வளவு அசதி தெரியவில்லை. காரில் அமர்ந்துதானே வந்தோம் கார் ஓட்டவில்லையே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  31. @ வல்லி சிம்ஹன்
    இப்போதிருக்கும் தலை முறையோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது அந்தக் காலத்திலேயே சாக்ரடீஸ் இளைய தலை முறை பற்றி வருத்தப் பட்டாராம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  32. @ துளசி கோபால்
    அது எரிசேரியாய் இருக்கலாம்தான் மலையாள பதார்த்தம் இப்படி என் காதில் விழுந்ததோ என்னவோ சரியாய்ச் சொன்னீர்கள் அன்றைய நிலைக்கு ஒப்பிடக் கூடாதுதான் இருந்தாலும் ......அமெரிக்காவிலோ வளை குடா நாடுகளிலோ மனசுக்குள் அவ்வூர் செலவை மனதில் நம் நாட்டு ரூபாயுடன் ஒப்பிட்டு நோக்குவதில்லையா வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  33. @ கீதா சாம்பசிவம்
    உதவிக்கு வந்ததற்கு நன்றி மேம்

    ReplyDelete

  34. @ கீதா சாம்பசிவம்
    வீண் டம்பத்துக்கு செலவு செய்பவர்களும் உண்டு எனக்கு காந்திஜி சொன்னது நினைவுக்கு வருகிறதுதேவைக்கு மீறி செலவு செய்பவர் எங்கோ ஒரு ஏழையையோ பிச்சைக்காரனையோ உருவாக்குகிறார் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  35. @ தி தமிழ் இளங்கோ
    எந்தக் குழந்தையும் சாதியைச் சொல்லிக் கொண்டுபிறப்பதில்லை. நாம்தான் சாதியை வளர்க்கிறோம் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  36. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நிகழ்வுகளைக் கோர்வையாய்ச் சொல்ல கற்பனை வேண்டாமே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  37. //யார் சொன்னது சாதிகள் மறைகின்றன என்று. பெயரிலேயே சாதியைக் குறிப்பிடும் புதிய தலை முறையினர் அதிகரித்து விட்டனர்// - நூற்றுக்கு நூறு உண்மை!

    ReplyDelete
  38. இந்தக்காலத்தில் போக்குவரத்து நெரிசலில் மாட்டாமல் நேரத்திற்கு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் திட்டமிட்டு முன்பே கிளம்ப வேண்டும்.
    அதுவும் பெங்களூர் டிராபிக்ஜாம் அடிக்கடி ஆகும் இடம்.

    குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
    கஷ்டங்களை பொருட்படுத்தாமல் விழாவிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வாழ்த்தியது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  39. ola micro எங்களுக்கு நாங்கள் வேண்டும்போது கிடைத்ததில்லை. Ola cab. 14 கி.மீ.க்கு சராசரியாக ரூ.240- வரை எங்களுக்கு வருகிறது காலை அலுவலக நேரத்தில். ஒரு நாள் இதே தூரத்துக்கு ரூ.510 கொடுத்து அலுவலகம் போயிருக்கிறாள் என் மகள். இந்த மாதிரியான ola looting பற்றித்தான் நான் குறிப்பிட்டது. Ola has hidden charges too.

    BMTC என்கிற பெயரை நான் சரியாக கவனித்திருக்கவில்லை.

    ReplyDelete

  40. @ இபு ஞானப்பிரகாசன்
    ஐயா பெயர் வைப்பதும் கூப்பிடுவதும் அவர்கள் உரிமை. ஏதோ என் ஆதங்கம் பதிவில் வந்து விட்டது.வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  41. @ கோமதி அரசு.
    ஆம் மேடம் இந்தவயதில் அவ்வளவு தூரத்தில் இருந்து வர மாட்டோம் என்றே நினைத்திருந்தார்கள் எங்களை முதலில் கண்டதும் மகிழ்ச்சிதான் அவ்ர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete

  42. @ ஏகாந்தன்
    முன்பு ஒரு முறை ஓலா சர்வீஸ் பற்றி என் மனக் குமுறல்களை எழுதி இருந்தேன் ஆனால் கடந்த இரண்டு மூன்று முறையாக ஆட்டோவைவிடக் குறைந்த செலவே ஆகிறது அதையும் சொல்ல வேண்டும் அல்லவா/ இன்று கூட கமர்சியல் ஸ்ட்ரீட் சென்று வந்தேன் ரூ 220 - ஏ ஆயிற்று, பிஎம்டிசி பற்றி குறிப்பிட்டது தவறாக நினைக்க வேண்டாம் மீள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  43. //நான் பணம் செலவு செய்யாத கஞ்சன் அல்ல.ஆனால் செலவு செய்யும் முன் அந்தச் செலவு தேவைதானா என்று என்னையே கேள்வி கேட்பவன் பணத்தின் அருமை தெரிந்தவன்// அதே தான் சார் எங்கள் இருவருக்கும்...குழந்தைக்கு வாழ்த்துகள் சார்.

    கீதா: சார்...உபெர் டாக்சி நன்றாக இருக்கின்றதே அங்கு இல்லையோ? உபெரிலும் கூகுள் மேப் வைத்துக் கொண்டு ஓட்டுகின்றார்கள். இங்கு சென்னையில் நன்றாக இருக்கிறது. அடுத்துதான் ஓலா. ஓலா பெரும்பாலும் அவர்கள் இங்கு கூகுள் மேப் வைத்துக் கொண்டு ஓட்டுகின்றார்கள். நான் எங்கு செல்ல வேண்டும் அந்த அபார்ட்மென்ட், தெரு வரை சொல்லிவிட்டால் போதும். அது பதிந்து விடுகின்றது பின்னர் கூகுள் மேப்தான்.

    இப்படி இடையிடையே நம் உறவினர்கள், நண்பர்களை ஏதேனும் விழாவில்தானே சந்திக்க முடிகின்றது இப்போதெல்லாம். எனவே நீங்கள் உங்கள் சிரமம் பாராமல் அட்டென்ட் செய்தது மிகவும் நல்லதுதான் சார்...நல்ல விஷயம் சார்

    ReplyDelete

  44. @ துளசிதரன் தில்லையகத்து
    நன்றாகச் சொன்னீர்கள். இப்படி ஏதாவது விழாவில்தான் நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க முடிகிறது பொதுவாக நாங்கள் ஓலாவில்தான் போகிறோம் அதிக சிரமம் இல்லை உபேர் அனுபவம் இல்லை. ஆனால் பீக் அவர்ஸ் என்று சொல்லி சில சமயம் அதிகம் தீட்டி விடுகிறார்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete