Monday, May 2, 2016

யாருக்கு ஓட்டுப்போடுவது ?


                                            யாருக்கு ஓட்டுப்  போடுவது
                                            --------------------------------------------
         ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக உரிமை, கடமை. தேர்தல் 
நாளில் மட்டும் இந்நாட்டு மன்னராகி ,நம்மை ஆள்பவரை தேர்வு 
செய்யும் ஒரு மகத்தான பொறுப்பு நமக்குக் கிடைக்கிறது. நமது 
வாக்கின்  மதிப்பை நாம் உணர்ந்து வாக்களிக்க வேண்டியது நம் 
கடமை. .அது சரி, யாருக்கு வாக்களிப்பது.?வாக்களிக்கும் முன் 
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்  என்ன.? நம் 
தொகுதியில் வேட்பாளராக நிற்பவரைப் பற்றி நமக்கென்ன 
தெரியும்.?வாக்களிப்பது வேட்பாளருக்கா இல்லை அவர் சார்ந்த 
கட்சிக்கா.?நம் வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்களோ 
கட்சிகளோ எந்த விதத்தில் தகுதி உள்ளவர்கள்.?நம் ஒருவரது 
வாக்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.?இருக்கும் 
நிலவரம் திருப்திகரமாக உள்ளதா.?இல்லாவிட்டால் எதில் எதில் 
மாற்றங்கள் வரவேண்டும்.?மாற்றங்களைக் கொண்டுவர நம் 
பலம் என்ன.?மாற்றம் வந்தாலும் நிலவரம் மாறுமா.?ஆயிரம் 
கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அரசியல் அறிவு 
நமக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது.?இதையெல்லாம தெரிந்து 
நாம் ஓட்டுச்சாவடியில  பத்து நொடிகளுக்குள் ஓட்டுப் போடும் 
நேரத்தில் கடைசி நொடியில் தன்னிச்சையாக நம்மை அறியாமல்
வேண்டாதவருக்கே ஓட்டு போடும் பரிதாபம் நிகழக் கூடாது. நம் 
ஓட்டு நம் தலை எழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது.

            தேர்தலுக்கு நிற்கும்/ நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நாம்
ஒருவருக்குத்தான் ஓட்டுப் போடமுடியும். வேட்பாளரை நாம்
தேர்ந்தெடுக்கும் முன் நாம் சிந்திக்க வேண்டியதில்
முக்கியமானது மாற்றம் வேண்டுமா என்பதுதான். மாற்றம்
வந்தால் இதைவிட நல்ல ஆட்சி அமையுமா என்பதும்தான்.

             தற்போதைய ஆட்சி என்னவெல்லாம் செய்திருக்கிறது
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடாது ;தற்போதைய ஆட்சியின்
செயல்பாடுகளில் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன. தமிழ்
மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடக்க இருப்பதால் அது பற்றிக்
கொஞ்சம் அலசலாம்.
அரசு நலத் திட்டங்கள் என்று அறிவித்து ஏதேதோ gimmicks  செய்து வருகிறது அறிவிக்கப் பட்ட அல்லது செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மாநில மக்கள் அனைவருக்குமா இல்லை சென்னையில் வசிப்போருக்கு மட்டுமா 

           அரசாங்க நல திட்டங்களுக்கு வேண்டிய செலவுகளை 
எப்படி சமாளிக்கிறார்கள் மத்திய அரசின் பங்களிப்போடு 
டாஸ்மாக் மூலம் வருமானம், பெட்ரோல் விலையில் வரும் 
கணிசமான பங்கு,தவிர வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் 
வருமானம். 

         பாட்டாளியை  நல்ல  " குடி மகனாக்கி"அதன் மூலம் வரும் 
வருவாயில் இந்த நலத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறதா. ?
நலத்திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் ஊழல் இல்லாமல் 
செலவாக்கப்படுகிறதா.?
           கோடிக்கணக்கில் செலவு செய்து, பதவியில் அமருபவர்கள் 
செலவு செய்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்.?இதில் கட்சி 
வேறுபாடுகள் உண்டா.?

          இந்த நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மாற்றம் 
வேண்டுமா, வந்தால் நலமா என்றெல்லாம் யோசித்து மக்கள் 
வாக்களிக்க வேண்டும்.இன்னும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் எத்தனை சதவீதம் மக்களுக்குப் போகிறது எத்தனை சதவீதம் புறங்கையில் வழியும் தேனாகிறது
என்னதான்  நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும்கில்லர்ஜி எழுதியது மாதிரிசென்னையில் வெள்ள நேரத்தில்  சவப்பெட்டிகளிலும் தலைவியின் ஸ்டிக்கர் ஒட்டுவது முறையா?
மாற்றம் கொண்டுவருவதே சரி என்னும்  கட்சியில் நானும் ஒருவன் ஆனால் சரியான மாற்றம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி இப்போது மாற்றுக்கட்சியும்  வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் என்று நான் எழுதிய முந்தைய பதிவையும் நினைவில் கொள்ள வேண்டும் இவற்றுக்கும் மாறாக  மக்கள் நலக் கூட்டணி என்று கூறிக்கொண்டு சில கட்சிகள் அணிவகுக்கின்றன இந்தக் கூட்டணி வாக்குகளைச் சிதறவைக்குமோ என்னும்  அச்சம் எழுகிறது முன்பொரு திரைப்படத்தில் வரும் வசனம் போல் ஆளுக்கொரு தலைவன்  அவனவனுக்கு ஒரு பட்டினிப்பட்டாளம்  என்பதை மாற்றி  அவனவனுக்கொரு ஜாதிப்பட்டாளம்  என்று கூறத் தோன்றுகிறது
 இருக்கும்  நிலையை மாற்ற கட்சி என்றால் அதன்  தலைவரே  நினைவுக்கு வருவது நீக்கப்படவேண்டும் அண்மையில் திரு ரமணி அவர்கள் தலைவர்கள் தோற்கடிக்கப் பட வேண்டும் என்னும் கருத்தில் ஒரு பதிவு எழுதி இருந்தார்  தமிழகத்தின்  தலைவிதி மாற வேண்டும் என்றால்  இந்தத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்  ஆக இதை நிறைவேற்றும் கடமை இத் தலைவர்கள் நிற்கும் தொகுதிகளின் வாக்காளர்களையே சாரும்  இத்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும் 
          எது எப்படியாயினும் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும். 
அதன் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் ஆதரவு உள்ளவர் 
என்று கருதலாம். வாக்களிக்காமல் வீட்டில் இருந்து அரசியல் 
பேசுவது நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும் இந்திய சாமானியன் 
விவரமானவன். 
            அரசியல் ஆதாயத்துக்கு கட்சி மாறும் அல்லது ஆதரவை 
மாற்றும் பச்சோந்திகளை வாக்காளன் அடையாளம் கண்டு 
கொள்வான். 
            ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில்
மிகையானவர் கழுதையைக்  குதிரை என்றால் கழுதை
குதிரையாகத்தான் இருக்க வேண்டும். இது சாபமா வரமா புரிய  
வில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். 

  

27 comments:

  1. >>> ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில் மிகையானவர் கழுதையைக் குதிரை என்றால் கழுதை குதிரையாகத்தான் இருக்க வேண்டும். <<<

    நியாயமான வார்த்தைகள்..

    ஆனாலும், நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  2. தொகுதியில் நிற்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைப் பார்த்துக் கொண்டு ஓட்டளிக்க வேண்டியது தான்!

    ReplyDelete
  3. நல்லதே நடக்கும் என்று நம்பி ஆயுள் முடியப்போகிறது.

    ReplyDelete
  4. இத்தேர்தலில் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும் என்பதே எனது கருத்து ஐயா ஆனால் இதுவரை தலைவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில்தானே வெற்றி பெற்று இருக்கின்றார்கள் இந்த தேர்தல் பல இளைய தலைமுறைகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கின்றது பார்ப்போம்.
    என்னையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் வாக்களிக்கவேண்டியது அவசியம். இதனைத் தாங்கள் உணர்த்தியுள்ள விதம் அருமை.

    ReplyDelete
  6. எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்
    என்ற குழப்பம் எனக்குள்ளும் ஐயா...
    நல்ல கட்சியா நாற கட்சியா என்று
    பட்டிமன்றம் வைத்துதான் வாக்களிக்க
    வேண்டும் போல...

    ReplyDelete
  7. ஜனநாயகக் கடமை ஆற்றுவோம் ஐயா

    ReplyDelete
  8. நல்லதொரு கட்டுரை. நம் தொகுதியில் இருப்பவர் நல்லவரா என்று பார்த்து ஓட்டளிக்க முயல்வது நல்லது. தலைவர்களை தோற்கடிப்போம்.... இதுவும் நல்ல விஷயம் தான். புதிய தலைவர்கள் வரட்டும் - புதிய சிந்தனைகள் - நாட்டை நல்வழிப்படுத்தும் புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்....

    ReplyDelete

  9. @ துரை செல்வராஜு
    ஜனநாயகத்தின் ஒரு தோற்றத்தைக் கூறினேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  10. @ கீதாசாம்பசிவம்
    /தொகுதியில் நிற்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைப் பார்த்துக் கொண்டு ஓட்டளிக்க வேண்டியது தான்!/ நல்லவர்கள் என்று எப்படி அறிவதுபெரும்பாலானவர்களின் முகம் கூடத்தெரியாதுஎவ்வளவுதான் நல்லவர்கள் ஆனாலும் தனித்து அவர்களால் ஏதும் செய்ய முடியாதுஒரு அமைப்பின் கீழ் நின்றால்தான் ஏதாவது செய்ய முடியும்அந்த அமைப்பின் கொள்கைகளில் நமக்கு உடன்பாடு ஏற்பட வேண்டும் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  11. @ டாக்டர் கந்தசாமி
    யாருடைய ஆயுள் முடிந்தாலும் தேர்தல் நடக்கும்தானே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  12. @ கில்லர்ஜி
    மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா ஜி. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  13. @ சோழ நாட்டில் பௌத்தம்
    அனைவரும் வாக்களித்தால்மட்டுமே தேர்தலில் நிற்பவர்களிக்கு இருக்கும் ஆதரவு தெரியும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @அஜய் சுனில்கர் ஜோசப்
    தேர்ந்தெடுப்பவர் தெளிவாக சிந்திக்க வேண்டும் அதற்கு உதவவே இப்பதிவு/ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    ஜனநாயகக் கடமையை செவ்வனே ஆற்ற வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  16. @ வெங்கட நாகராஜ்
    நல்லவர்களை இனம் கண்டுகொள்வது சிரமம் என்னைக் கேட்டால் தனிப்பட்டவரைவிட ஒரு அமைப்பே செயலாற்ற முடியும் என்பேன் ஆனால் இப்போதிருக்கும் தலைவர்கள் ஆலமரம் போன்றவர்கள் தங்கள் நிழலில் யாரையும் வளர விடமாட்டார்கள் ஆகவே அவர்களைத் தோற்கடிப்பது முக்கியம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  17. கண்டிப்பாய் மாற்றம் வேண்டும். நான் ஓட்டுப் போட இயலாது. என் ஓட்டு கள்ள ஓட்டாக மாறாதிருக்க வேண்டும்.

    ReplyDelete

  18. @ சிவகுமாரன்
    வாக்களிப்போர் எண்ணிக்கையில் ஒருவர் குறைகிறார் வருகைக்கு நன்றி சிவகுமாரா

    ReplyDelete
  19. சரியான நேரத்தில்
    மிகச் சரியான அலசல்
    மற்றும் கோரிக்கை

    நல்லவர்கள் எல்லாம் அரசியலில் எதற்கும்
    லாயக்கற்றவர்களாக இருக்க

    வல்லவர்கள் எல்லாம் சுய நலம் மிக்கவர்களாக
    தலைவர்களாக இருக்க

    வருகிற குழப்படியே எல்லோருக்கும்

    ReplyDelete

  20. @ ரமணி
    குஅப்பங்களில் இருந்து விடுபடாவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அதன் பலனை அனுபவிக்க நேரும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  21. மேலே குழப்பங்களில் தவறாக தட்டச்சாயிற்று மன்னிக்கவும்

    ReplyDelete
  22. தொகுதி நல்லவர்களைப் பார்த்தால் தோற்கும் கட்சியில் இருப்பவரை இருப்பார். எப்படியும் நல்லாட்சி என்பது இனிவரும் காலங்களில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete

  23. @ ஸ்ரீராம்
    யார் நல்லவர் என்று அடையாளங்காண்பது. தோற்பவர்கள் நல்லவர்களா வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  24. ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.இவை எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. இதன் விளைவுகளை நினைத்து கவலை ஏற்படுகிறது.

    ReplyDelete
  25. ஓட்டு போடுவோம் நம் தேவையறிந்து.

    ReplyDelete

  26. @டிஎன் முரளிதரன்
    இந்த இலவசங்கள் யாருடைய பணம் . எப்படி வருகிறது என்று சிந்திக்கும் போது கவலை வரத்தானே செய்யும் வருகைக்கு நன்றி முரளி.

    ReplyDelete

  27. @Arrow Sankar,
    நம் தேவை ஒரு நல்ல அரசுதானே. ஊழலற்ற ஒழுங்கான சேவை செய்யும் அரசுதானே .வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete