Monday, August 1, 2016

போராட்டங்கள் ஏன் எதற்கு ஒரு ஆய்வு


  போராடங்கள் ஏன் எதற்கு ஒரு ஆய்வு
---------------------------------------------------------------
இன்று சனிக்கிழமை ஜூலை மாதம் 30-ஆம் நாள். கரநாடகாவில் பந்த் எனப்படும் வாழ்க்கை முடங்கல் கோவாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான  மஹாதாயி நதிப்பிரச்சனை  கர்நாடகாவின் இடைக்கால உத்தரவு வேண்டிய கோரிக்கையை ட்ரைப்யூனல் நிராகரித்தது உடனே எங்கும் போராட்டம் கடையடைப்பு  வாழ்க்கை முடங்கல். வடகர்நாடகாவில் பஸ் எரிப்பு, அரசு அலுவலகங்கள் சூரையாடல் என்பதெல்லாம் நியாயம் கோரி நடத்தப்படும்  வன்முறைப் போராட்டம்

 சில நாட்களுக்கு முன் ப்ராவிடெண்ட் நிதி எடுக்க சில தடைகள் விதித்த அரசாணைக்கு  எதிராக கார்மெண்ட் தொழிலாளர்கள் போராட்டம்  அந்த ஆணை பணம் எடுக்க வேண்டும் எல்லோருக்கும்  பொதுவானது ஆனால் பெங்களூரில்  கார்மெண்ட் தொழிலாளர்கள் திடீரெனப் போராட்டம் நடத்தி அதிலும் பஸ் எரிப்பு போன்ற  வன்முறைகள்


நடிகர் ராஜ்குமார் இறந்த போதும் போராட்டம் வன்முறை போன்ற சம்பவங்கள்நடந்தேறியது நடிகர் மேல் அளவற்ற பக்தி கொண்டவர்கள் அவர்களது துக்கத்தை திசை திருப்பிக் காண்பித்தனர் 

காவிரி நீர்ப்பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஒப்பாத ஒரு ஆணையால் இங்கிருக்கும் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட அராஜகப் போராட்டம்

 இதையெல்லாம் காணும்போது  இம்மாதிரிப் போராட்டங்களின் ANATOMY  பற்றின சிந்தனை எழுகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும் கட்சித் தலைவர்களோ அல்லது யாராவது முக்கியஸ்தர்களோ கடை அடைப்புக்கு அறைகூவல் விடுக்கின்றனர் என்றால் அதை முடித்துக் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. இந்தக் கூட்டத்தின் அடிப்படைக் குணங்களை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் இந்த மக்கள் ஜனநாயக நாட்டில் எந்த இரு தலைவருமே கொள்கைகளில் ஒத்துப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு தலைவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வேலை இல்லாதவர்களும் பொறுப்பு என்பது ஏதும் இல்லாதவர்களுமே இந்தக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் இவர்களில் பெரும்பாலோனோர்  கூலிக்கு மாரடிப்பவர்களே ஒரு அரசியல் தலைவன் பேசுகிறான் என்றால் அதற்குக்கூட்டம் சேர்ப்பது முதல் கோஷம் போடுவதுவரை ஏற்பாடு செய்ய அல்லக் கைகள் இருக்கிறார்கள் மீறி இவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்காவிட்டால் அங்கு வன் முறை வெடிக்கும் பெரும்பாலும் இம்மாதிரி வன்முறைகளுக்குப்பயந்தே முழுநேர அடைப்புகள் நடக்கின்றன இவர்கள் நாடுவது அல்லது குறி வைப்பது யாரை மற்றும் எப்படி என்பதை யோசித்துப் பார்த்ததில் எழுந்த எண்ணங்களே இந்தப் பதிவின் சாராம்சம்
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது ,தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம்.

நான் பயிற்சிப் பள்ளியில்  இருந்தபோது எங்களுக்கு அளிக்கப் பட்ட உணவு வட இந்திய உணவான  சப்பாத்தி மற்றும் சப்ஜியே ஹாஸ்டலில் அப்போதிருந்தவர்களில் பெரும்பாலோர் வட இந்தியர்கள் . எங்களுக்கு தென் இந்திய உணவு கோரி நாங்கள் போராடினோம்நாங்கள் கூட்டமாகக் கூடி யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும்  நிலையில் இல்லை  இதை mob mentality  என்று கூறலாமா பேசி தீர்வு காணலாம் என்று சொன்னதைக் கேட்கக் கூட நாங்கள் தயாராய் இல்லை. இரண்டு நாட்கள்  உணவைப் புறக்கணித்தோம் அங்கிருந்த ஹாஸ்டல் சமையல்காரருக்கு  தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது  என்னும்காரணம் கூறப்பட்டது அவருக்கு  சமையல் கற்றுக் கொடுக்க நாங்கள் தயார் என்றதும் போராட்டங்கள் முடிவுக்கு வர உதவியது
 
இப்போது அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் போராட்டம்  என்றாலேயே ஏதோ மனக் கசப்பை திருப்தி இன்மையை.
,கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
  
வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் ,ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  நிலையை விட  தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன
. " நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன், அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்  முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்  கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது .பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில் பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
              இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்க்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்   இருப்பவன்முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
 ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில் உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு  இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும் இருப்பது சமூக  நிலையா  ?
காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்  வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள் வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள் 
தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் ,எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால்ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம் இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும்
இந்தமாதிரி கடை அடைப்புகளும்  வன்முறைகளும் அடிப்படைக் காரணங்களை நீக்குகிறதா. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதுதான் மிச்சம் அரசாங்கத்தின் மீது குறைகள் இருந்தால் அவற்றை முன்னிலைப் படுத்திப் போராடுவதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத பொதுமக்களுக்கு துன்பம் தருவது எந்த விதத்தில் நியாயம்  அல்லது லாபம்
அடிமனதில் இருக்கும் சில கையாலாகத்தனங்களுக்கு வடிகாலாய் இருப்பதே இந்தப் போராட்டங்களும்  கடை அடைப்புகளும்  இவற்றில் யாரும் மனமுவந்து கலந்து கொள்வது கிடையாது அப்பேர்ப்பட்டவர்களை வன்முறையால் ஈடுபடச் செய்வதே அடிப்படை நோக்கம்
கூலிக்கு மாரடிக்க மக்கள் இருக்கிறார்கள் அவர்களை முன் நிறுத்தி ஆதாயம் பெறத் தலைவர்கள் இருக்கிறார்கள் இதுவே நான் அறியும் உண்மை.   

    
ந்த்  ( பம் இணையத்ிலிரந்து)
    




.












26 comments:

  1. இதுக்கெல்லாம் ஏற்றத்தாழ்வுகள் காரணமே அல்ல! மக்கள் தங்கள் தலைவரின் பேச்சில் மயங்கி விடுகிறார்கள் அல்லது தூண்டி விடப்படுகிறார்கள் என்று சொல்லலாம். பெரும்பான்மை மக்களோ அல்லது கடைக்காரர்களோ அன்றைய தொழிலில் நஷ்டம் என்று வருந்தத் தான் செய்வார்கள். என்ன செய்வது! இப்போதெல்லாம் போராட்டங்களே அதிகம் ஆகிவிட்டன.

    ReplyDelete
  2. பழகி விட்டது. காலம் பழக்கி விட்டது.

    ReplyDelete
  3. கர்நாடகமும் பெங்களூருவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வன்முறைப் போராட்டங்கள் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருந்தன. காவேரி பிரச்சினையில் தொடங்கிய வன்முறைப் போராட்டம் தற்போது சின்ன சின்ன காரணங்களுக்கும் வன்முறை போராட்டம் நடத்துவது என்று வழக்கம் ஆகிவிட்டது. வன்முறை என்பது ஒரு சிலரின் போதை ஆகிவிட்டது. அந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட அவர்கள் ஏதாவது ஒரு சாக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
    ​இதெற்க்கெல்லாம் காரணம் மக்கள் போற்றும் மஹாத்மா காந்தி போன்ற தலைவர்கள் யாரும் இல்லாதது தான். ​

    --
    Jayakumar

    ReplyDelete
  4. ஏற்றத் தாழ்வுக்கும் இதற்கும்
    சம்பந்தமில்லை

    இது பலவீனர்களை
    பயன்படுத்தத் தெரிந்தவர்களின் பலம்

    பெரும்பானமையாய் இருந்தும்
    அமைதி காக்கும் சிந்திக்கத் தெரிந்தவர்களின்
    பல்வீனம்

    ReplyDelete
  5. ///தலைவர்கள் வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் முன்னேறுகிறார்கள்
    தலைவர்களுக்கு தெரியும் எங்கே தட்டினால் பலன் கிடைக்கும் ,எந்த நிலை நீடித்தால் தாங்கள் மேலும் முன்னேறலாம் என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அதன் மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறார்கள் ///

    மிக மிக உண்மை.

    ReplyDelete
  6. பங்களூரில் நான் படிக்கும்போது, ஒரு கன்னடிகா என்னிடம் சொல்லுவார்..

    ஏன் தமிழர்கள் எல்லாம் இங்கே வந்து கஷ்டப்பட்டு, காய்கறி வித்து, கூலி வேலை பார்த்து, ஆட்டோ ஓட்டி பொழைக்கிறாங்க. தமிழ்நாட்டிலே இருக்க வேண்டியதுதானே? இது அவங்க பிரச்சினை.

    நம்மாளுங்க..

    பங்களூரில் கன்னடத்தில் எவனாவது ஏதாவாது கேட்டால் தமிழில் பதில் சொல்வார்கள். ஒரு சில நண்பர்களிடம் "ஏன்டா கன்னடத்தில் பேசுடா"னு சொன்னால்க்கூட தமிழ்லதான் பேசுவேன்னு சொல்வார்கள்.

    ---------------

    அவர்களுக்கு தன் மொழி அவர்கள் மாநிலத்தில் புறக்கணிக்கப் படுவதில் கோபம் எரிச்சல்..

    நம்ம மக்களுக்கு தமிழ்ல பேசினால்த்தான் பேசுனது போல இருக்குனு சொல்லுவாங்க..

    ரெண்டு பக்கமும் தவறு இருக்குனு நான் நினைக்கிறேன், சார். :)

    ReplyDelete
  7. >>> இத்தகைய போராட்டங்களை நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழும்போது - பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.. <<<

    அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் செய்வதுவும் ஒரு வல்லமை என்றாகி விட்டது..

    இனி யாரும் திருந்தப் போவதில்லை..
    வருங்காலம் எப்படியிருக்குமோ?.. யாரறியக் கூடும்!..

    ReplyDelete
  8. அன்பின் ஐயா..

    வணக்கம்.. எனது தளத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றிய பதிவில் தாங்கள் குறிப்பிட்டிருந்தது சரியே..

    பள்ளியில் படித்தவரை சரித்திரப் பாடத்தில் சாளுக்கிய மன்னர்களைப் பற்றி சிறிதளவு மட்டுமே சொல்லப்பட்டிருக்கும்.. கிராமிய நூலகங்களில் தேடினாலும் அவ்வளவாக விவரங்கள் கிடைக்காது..

    இணையத்தில் நுழைந்த பிறகு தான் நிறைய தெரிந்து கொண்டேன்..

    சில விஷயங்களை என்னளவில் தொகுத்து வைத்துள்ளேன்..
    விரைவில் தினங்களில் வெளியிடுகின்றேன்..

    தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  9. கபாலி என்ற குப்பையை பற்றி எப்போ எழுதப்போகிறீர்கள்? எழுதினா அந்த ஆள் வந்து இங்கு கழிவான்!

    ReplyDelete

  10. @ கீதா சாம்பசிவம்
    போராட்டங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் காரணமாகிறது என்று நான் சொன்னதல்ல. ஆனால் தன்னைவிட முன்னிலையில் இருக்கும் பலரைப் பார்க்கும்போது ஒரு subtle பொறாமை ஏற்படுவதாகவும் அந்த நேரத்தில் அம்மாதிரியான எண்ணங்களுக்கு வடிகால் தேட வன்முறை கையாளப் படுகிறது என்று உடற்கூறு வல்லுனர்கள் கூறுகிறார்கள்போராட்டங்களின் போது தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் என்று எண்ணுபவர் மீது கவனம் செல்கிறது. உதாரணமாக காந்தி படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதில் இந்துக்களும் முஸ்லிம் களும் இடம் பெயரும் சமயம் ஒருவன் மற்ற கூட்டத்தின் மீது கல் எறிவான் உடனேகலவரம் வெடிக்கும் இது ஒரு சைகாலஜி தான் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  11. @ ஸ்ரீராம்
    பழகிவிட்டது என்கிறீர்கள்பொதுமக்கள் அவதிப்பட்டுத்தான் தீரவேண்டுமா என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. ஏதும் செய்ய இயலாத நிலையில் எழுதுகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  12. @ ஜேகே 22384
    மஹாத்மாகாந்தி காலத்திலும் அஹிம்சை என்று கூறிக் கொண்டாலும் வன்முறைகள் இருந்திருக்கின்றன.மதம் இனம் மொழி போன்றவை டெலிகேட் ஆனவை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் அதை பலரும் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  13. @ ரமணி
    திருமதி கீதா சாம்பசிவத்துக்கு எழுதிய மறு மொழியை தயவு செய்து பார்க்கவும் ஏற்ற தாழ்வுகள் நேர் காரணங்களல்ல என்பது போல் தோன்றினாலும் மறைமுகமாக அவையே வேர்க்காரணங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ அவர்கள் உண்மைகள்
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  15. @ வருண்
    மதம் இனம் மொழி என்பவை எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டும் சக்தி உள்ளவை தவறு எது சரி எது என்றுகூறமுடியவில்லை. இங்கு எங்களுக்கே தண்ணீர் இல்லை இதில் நீங்கள் வேறு வந்து நீர் கேட்டால் எப்படி என்று என் வீட்டில் வேலை செய்பவரே எங்களிடம் கூறுவார் தமிழ் நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் கருத்து வேறுபாடு என்றால் கோபம் இங்கிருக்கும் தமிழர்களை குறி வைக்கும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    போராட்டங்களின் போது பெரும்பாலும் மந்தைக் குணமே விஞ்சி நிற்கிறதுநியாயங்கள் எடுபடுவதில்லை. ஆகவே வழி நடத்திச் செல்லும் தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  17. @ துரை செல்வராஜு
    ராஜேந்திர சோழன் வடக்கில் சென்று வெற்றிகளைக் குவித்தான் எனும்போது நமக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது அதுவே பல்லவனைப் புலிகேசி வீழ்த்தினான் என்றால் நமக்கு ரசிப்பதில்லை. நாம் ஏதோ கூட்டுக்குள் இருக்கிறோமோ என்னும் சந்தேகமே என்னை அந்தப் பின்னூட்டமிடச் செய்தது வெறுப்பு விருப்பின்றி எழுதுதல் முக்கியம் என்று தோன்றுகிறது இத்தளத்தில் வந்து மறு மொழி அளித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ yesterday and tomorrow
    கபாலி இன்னும்பார்க்கவில்லை. பார்த்தாலும் பதிவு எழுதுவேனா தெரியவில்லை. உங்கள் ப்ரொஃபைலைத் தேடினால் வரவில்லையே

    ReplyDelete
  19. //கூலிக்கு மாரடிக்க மக்கள் இருக்கிறார்கள் அவர்களை முன் நிறுத்தி ஆதாயம் பெறத் தலைவர்கள் இருக்கிறார்கள் இதுவே நான் அறியும் உண்மை//

    இந்த வார்த்தைகளில் அனைத்தும் அடங்கி விட்டது ஐயா இன்று நல்லவர்களைவிட வல்லவர்களின் கூட்டம் பெறுகி விட்டது.

    ReplyDelete

  20. @ கில்லர்ஜி
    ஒரு சிறு திருத்தம் உங்கள் கூற்றில் /இன்று நல்லவர்களைவிட வல்லவர்களின் கூட்டம் பெருகி விட்டது / என்கிறீர்கள் தலைவர்களில் என்று சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம், சாலை மறியல், கடையடைப்பு, பேரணி என்ற நிலை நிகழ்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள், தலைவர்களின் சொந்த நோக்கத்திற்காக இதுபோன்ற போராட்டங்கள் மக்களிடையில் தூண்டிவிடப்பட்டு நெருப்பாகப் பரவுகிறது.

    சமூக ஏற்றத்தாழ்விற்கும் போராட்டங்களும் நேரடித் தொடர்பில்லை என்பது என் கருத்து; மாறாக இது போன்ற போராட்டங்களில் கூட்டம் சேர்ப்பதற்காக ஏழைகளும், வறுமையிலிருப்பவர்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.

    அடிப்படை உரிமைகள், விழிப்புணர்வு, சுதந்திரம் மறுக்கப்பட்டதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டங்கள் இன்று எவ்வித சமூக நோக்கமும் இல்லாமல் தத்தம் சொந்த நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படும் அவல நிலையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் கூறியது போல், இது போன்ற போராட்டங்களால் நிச்சயம் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே ஆவர். இதுபோன்ற தேவையற்ற போராட்டங்களால் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை.

    ReplyDelete
  22. இயல்பற்ற நிலையை உண்டாக்கி அதனை நாம் இயல்பாக ஆக்கிக்கொள்ளும் அளவு ஆக்கிவிட்டார்கள் ஐயா. அதுதான் வேண்மை.

    ReplyDelete
  23. இன்றைய போராட்டங்கள் குறித்த விரிவான அலசல் மற்றும் ஆதங்கம். இப்போதெல்லாம் முன்பு போல போராட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் போன்றவைகளை யாரும் முன்னறிவிப்பு இன்றி செய்வதில்லை. திடீர் திடீரென்று செய்கிறார்கள். இதனால் திட்டமிட்டபடி இண்டர்வியூ, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் போன்ற வெளியூர் பயண காரியங்களை செய்ய முடியாது போலிருக்கிறது.

    ReplyDelete

  24. @ அருள்மொழிவர்மன்
    சமூக ஏற்றதாழ்வுக்கும் போராட்டங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாதிருக்கலாம் ஆனால் உடற்/மனக் கூறு வல்லுனர்கள் அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் மேலான கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  26. @ தி தமிழ் இளங்கோ
    முன் அறிவிப்போடு என்று இருந்திருக்க வேண்டுமோ வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete