Sunday, September 11, 2016

பாரதியாரும் ராமாயணமும்

இரண்டாண்டுகளுக்கு முன்  பாரதியின் நினைவுகளில் என்று ஒரு பதிவு எழுதினேன்  ( பார்க்க)

இந்த நாளில் எனக்கு பாரதியைப் பற்றிய முழுவிவரமும்  தெரியவில்லை. பாரதியின்  சுயசரிதையைப் படித்தால் அவரைப் பற்றிய தெரியாத விஷயங்கள் தெரியலாம் என்றெண்ணினேன்  ஆனால் மிகச் சுருக்கமாகவே இருந்தது சுய சரிதை.  சுய சரிதை எழுதவேண்டுமென்றால் அவரவருக்கு உண்மையாய் இருக்க வேண்டும்  தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் மனோதைரியமும் திடமும் வேண்டும் பாரதியைப் பற்றிய எதிர் மறைக்கருத்துகள்  பூடகமாக உலவி வருகிறது அவற்றை நான் நம்பத்  தயாராய் இல்லை .அவைகள் உண்மையாக இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன் I hold Bharathiyar on a high pedestal  பாரதியின் சில சிறு கதைகளைப் படித்தேன்  ராமாயணத்தையே parody செய்து மாற்றிச் சொல்லும்  திடம் அவரிடம் இருந்தது  அதற்காகவே இக்கதையைப் பகிர்கிறேன் 

மகாகவி பாரதியார்



                                                         குதிரைக் கொம்பு.
                                                                             -------------------------


சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக்கொண்டான்
இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி, "குதிரைக்கு ஏன் கொம்பில்லை?" என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சம்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுக சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்:
"கேளீர், ரீவண மஹாராஜனே, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான்" என்றார்.
இதைக் கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும்" என்றான்.
வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்:


இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர்
நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஓரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடனிருந்தார்கள்.

ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள்தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்களை நடத்தி வந்தார்கள். ஆட்டுக் கணக்கு மாத்திரம்தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி யிருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களை யெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர். அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன், தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டங்கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக்கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்திவிட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்துகொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களை யெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்; யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்துவந்த சூர்ப்பநகைத்தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கையாகையாலும், பிராமணகுலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்திரவு கொடுத்தாள். அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின்  சந்நதியில் கொண்டு சேர்த்தனர் 

அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால், இதுவரை செய்த துஷ்ட காரியங்களை யெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்விதமான காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கு மென்றும் சொல்லி, நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக்கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி இராவணன் ஆக்கினை செய்தான்
தண்டகாரண்யத்தில் இராமன் சூர்ப்பநகையிடம் 'சீதை எங்கே?' என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பிவிட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். 'எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?' என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, 'அட! சீதையைத்தான் மிதிலைக்கனுப்பி விட்டாய், என்னை நீ விவாகஞ் செய்து கொள்ளு' என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு 'நீ அழகான பிள்ளைதான், உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால், அண்ணா கோபித்துக் கொள்ளுவார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்' என்றாள்.
அப்போது ராமன்: 'சீதையை எப்போது மிதிலைக்கனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?' என்று கேட்டான்.
அதற்குச் சூர்ப்பநகை:'இனிமேல் சீதையின் நினைப்பை விட்டுவிடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக்கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்துவிடு' என்றாள்.

இதைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கவேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமயனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம்; இரண்டு பேரும் ஒரு பள்ளிக்கூடத்திலே கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று    சொல்லிவிட்டான் 

இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக்கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன் சுக்கிரீவனுக்குப் பின்வருமாறு ஓலையெழுதியனுப்பினான்:
"கிஷ்கிந்தையின் சுக்ரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது: நமது சிநேகனைக் கொன்றாய்; உன் அண்ணனைக் கொன்றாய்; அரசைத் திருடினாய். இந்த ஓலை கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்கவேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."
மேற்படி உத்திரவு கண்டவுடன் சுக்ரீவன் பயந்துபோய் அனுமானை நோக்கி 'என்ன செய்வோம்?' என்று கேட்டான். அனுமான் சொல்லிய யோஜனை என்னவென்றால் 

வாலியிடம் பிடித்துக்கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக்
கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்பவேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின்யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற்பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அவனைச் சமாதானம் செய்து கொள்ளவேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும் வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்' என்று அனுமான் சொன்னான் 
சுக்ரீவன் அப்படியே அடிமைப் பெண்களும், ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலை யெழுதித் தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும், சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்ப்பித்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர் அடிக்கடி தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள். ராவணன் தனது நண்பருடன் ஆடுமாடுகளையெல்லாம் அப்போதே கொன்று தின்று அந்தச் சாற்றையுங் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்துவிட்டதாகவும், அவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கியெடுத்துக் கொண்டபடியால், இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் ஆசிரமங்களிலிருந்து பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்தியெல்லாம் வேவுகாரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படை தயாரான பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்குப் படைகளைத் திரட்டிக்கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்
இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தார்கள். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணூற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.
இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணனன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதிர்த்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகஸ்யமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் 'ஹா! ஹா! ஹா! நமது நகரத்திற்குள் மனிதர் சேனை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா! ஹா! ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரியமண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.
மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராஜனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான 'ராமாயணக் கதை' என்று வக்ரமுக சாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.
அப்போது ரீவணன்: "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?" என்று கேட்டான்.

ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் ஹா* ஹா* ஹா* என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேன்னன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணனுடைய பாதத்தில் விழுந்து, என் குதிரைகள் சாகவரமுடையன. இவற்றை போல் வேகம் வேறு கிடையாது. இவற்றுக்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன் என்று அழுதுமுறையிட்டான். ராவணன் அநத சூரியனிடம் கிருபை கொண்டு பிரம்ம தேவனிடம் இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது. என்று சொன்னான். அது முதலாக இன்றுவரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்ம தேவன் படைத்துக் கொண்டு வருkகிறான்
 இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரிவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணி பரிசு கொடுத்தான்.








 
 :










 





 
.

53 comments:

  1. சரியான நாளில் பொருத்தமான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. இந்தக் கதையை இவ்விதமாக இக்கணம்தான் படிக்கலாச்சு. இதற்கு முன்னே கவி பாரதி கதையைப் படிக்கப் ப்ரமேயம் ஏதுமுண்டாகாமல் போச்சு. இதுகாறும் லோகத்தோர் கேட்ட புராணக் கதையில் இவ்விதமாக மாறுதல் செய்து கவி எழுதியிருப்பது ரஸிக்கும்படி இருந்தது. மனதுக்கு உத்ஸாகத்தையும் கொடுத்தது.

    ReplyDelete
  3. உங்கள் இடுகையும் நல்லா இருந்தது. அதைவிட ஸ்ரீராம் பின்னூட்டம் இன்னும் நல்லா இருந்தது. ஸ்ரீராம் அவர் பிறந்த (ஸ்ரீராம்) 1920களை ஞாபகம் வைத்து அதே மொழியை உபயோகப்படுத்தியிருக்கிறார். நான் இத்தனை நாள் ஸ்ரீராம் ஒரு 30-40 வயது உள்ளவர் என்று நினைத்தேன்.. பார்த்தால் அவருக்குக் கிட்டத்தட்ட 95 வயதாவது ஆகியிருக்கும்போல் தெரிகிறது.

    ReplyDelete
  4. ஶ்ரீராமை வழிமொழிகிறேன். நெல்லைத் தமிழன், விவிசி. விவிசி! :) த.வி.பு.சி!

    ReplyDelete
  5. மகாகவி எழுதிய இந்தக் கதையினை இதற்கு முன் படித்திருக்கின்றேன்..
    அசாத்தியத் துணிவு அவருடையது.. என்றென்றும் நிலைத்திருக்கும் புகழ்..

    தங்களுடைய பதிவில் மீண்டும் படிக்க நேர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    ReplyDelete

  6. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    ரசிக்க வைக்கும் பின்னூட்டம் உங்களது எழுத்து மகிழ்ச்சி தருகிறது இதே மாதிரி நான் எழுதி இருந்தால் வாசகர்கள் வெகுண்டெழுவார்கள் இல்லையா வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  8. @ நெல்லைத் தமிழன்
    நானும் ஸ்ரீராமின் வயது குறித்துமுன்பே ஒரு முறை அவரிடம் கேட்டிருக்கிறேன் என் இந்த இடுகையே பாரதியின் parody யை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால்தான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    பின்னூட்ட வரிகள் விவிசி விவிசி தவிபுசி எதுவும் புரியவில்லை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  10. @ துரை செல்வராஜு
    இதிகாசங்களைக் கேலி செய்து எழுதினால் நம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அவர் பாரதியார் அல்லவா துணிந்து எழுதி இருக்கிறார் இதிலிருந்து அவற்றை அவர் கதைகளாகத்தான் கண்டார் என்று நினைக்கத் தோன்று கிறது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  11. விழுந்து விழுந்து சிரித்தேன்= விவிசி = LOL
    த.வி.பு.சி= தரையில் விழுந்து புரண்டு சிரித்தேன். =ROTFL

    ReplyDelete
  12. சிலசமயம், நீங்கள் விரும்பும் ஏட்டிக்கு போட்டி கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. இராமாயணக் கதை பிரமாதம்.

    ReplyDelete
  14. பாரதியின் இராமாயணம் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. Ayya....i was already settled my post completelyh in abu dhabi...

    I was read other person post only in my mobile

    ReplyDelete
  16. அருமையான பகிர்வு ஐயா...
    பாரதியை நினைவில் வைப்போம்.

    ReplyDelete
  17. பாரதி பிறந்த இன் நன்னாளில்
    பாரதியின் நினைவுகளைப் போற்றுவோம்
    நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ கீதா சாம்பசிவம்
    விளக்கத்துக்கு நன்றி மேம்

    ReplyDelete

  19. @ தி தமிழ் இளங்கோ
    /சிலசமயம், நீங்கள் விரும்பும் ஏட்டிக்கு போட்டி கதை. பகிர்வுக்கு நன்றி./ ஐயா நான் விரும்புவதுமட்டுமல்ல. இதிகாசங்களை என்னைப் போல் கதைகளாகப் பாவிக்கும் ஒரு பிரபலம் இருந்ததை அறிவதே மகிழ்ச்சிதானே. ஏட்டிக்கு போட்டி என்பதால் அல்ல. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  20. @ டாக்டர் கந்தசாமி
    இராமாயணக் கதை அல்ல ஐயா அதன் parody வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

    ReplyDelete

  21. @ கோமதி அரசு
    மேடம் பாரதி அதை ராமாயணமாகப் பகிரவில்லை. குதிரைக்கு கொம்பு போனகதையாகத்தான் எழுதி இருக்கிறார் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  22. @ கில்லர் ஜி
    புரிந்து கொண்டேன் ஜி நன்றி

    ReplyDelete

  23. @ பரிவை சே குமார்
    பாரதியை அவன் எழுத்துகள் மூலம்தான் நினைக்க முடியும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  24. @ கரந்தை ஜெயக் குமார்
    ஐயா செப்டெம்பர் 11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அல்லவா, வருகைக்கு நன்றி

    ReplyDelete
  25. வித்தியாசமான கோணத்தில் ராமாயணம்... ரசித்தேன்.

    ReplyDelete
  26. குதிரையின் கொம்பு இல்லாமல் மறைந்த கதையும் பாரதியின் ராமாயணமும் படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது! மிகச் சிறிய வயதில் படித்த நினைவு. இத்தனை வருடங்கள் கழித்து புதிதாய் படித்தது போல இருந்தது!

    ReplyDelete
  27. அட! புதியதோர் ராமாயணக் கதை!! நம் கவியின் வரிகளில். வாசித்து ரசித்தோம் அவரது கற்பனையை...குதிரைக்குக் கொம்பு இல்லாததன் காரணத்தையும் இந்தக் கதை மூலமே அறிகின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  28. நெல்லைத் தமிழன் ஹஹஹஹஹஹ்ஹ்ஹஹ் சரி நீங்கள் எந்த ஸ்ரீராமின் வயதைக் கேட்கின்றீர்கள்? கதை நாயகனான ஸ்ரீராமா?!!!! இல்லை எங்கள் ப்ளாக் ஸ்ரீராமா??!!!!!

    ReplyDelete

  29. @ வெங்கட் நாகராஜ்
    எங்கே ரசிக்காமல் போய் விடப்படுமோ என்ற சந்தேகம் இருந்தது. ஏன் என்றால் இராமாயணம் கடவுளாகக் கருதப்படுபவரின் கதை அல்லவா. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @ மனோ சாமிநாதன்
    அத்தி பூத்தாற்போல வருகை மகிழ்ச்சி. இதே கதையை நான் எழுதி இருந்தால் ரசிக்கப் படுமா சந்தேகமே

    ReplyDelete

  31. @ துளசிதரன் தில்லையகத்து
    குதிரைக் கொம்பு பற்றி அறிய வெளியிட்ட பதிவு அல்ல இது ராமாயணத்தை உல்டாசெய்து எழுதி இருந்ததை ரசிக்க எழுதியது/ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  32. @ துளசிதரன் தில்லையகத்து
    எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் வயது தெரிந்து கொள்ளலாம் ராமாயண ஸ்ரீராமின் வயதை யாரே அறிவார் மீள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  33. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    Datain
    Mktyping

    ReplyDelete
  34. பாரதியைக் கவிஞனாகவே பார்த்து, கேட்டுப் பழகிவிட்டது. சிறுகதை எழுத்தாளராய், அங்கத எழுத்தாளராய் அவரது இன்னொரு முகம் பார்க்க மகிழ்ச்சி தருகிறது. இனி குதிரையைப் பார்க்கும்போதெல்லாம் பாரதி அவசியம் நினைவில் வருவார்!

    ReplyDelete

  35. @ பிரவீன்குமார் குமார்
    நன்றி

    ReplyDelete

  36. @ ஏகாந்தன்
    எனக்கு ராமாயணம் பற்றி நினைக்கும்போதெல்லாம் பாரதியின் பாரொடியே நினைவுக்கு வரும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  37. இது வரைய அறியாத ஒரு பாரதியின் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி. கவிதை தவிர பாரதியின் இதர படைப்புகளை படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிவிட்டது உங்கள் பதிவு

    ReplyDelete
  38. @ டி என் முரளிதரன்
    பாரதியின் கதையில் வரும் நையாண்டித் தனம் ரசிக்க வைத்ததால்தான் இப்பகிர்வு

    ReplyDelete
  39. இதுவரை படிக்காத கதை.பதிவாக்கி அறியத்தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. இராமயணக்கதை பாரதியின் வித்தியாசமான எழுத்துநடை ஐயா! பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

  41. @ ரமணி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  42. @ தனிமரம்
    பாரதியின் உரைநடை வித்தியாசமானதுதான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  43. அட! பாரதியார் இப்படியெல்லாமா எழுதி இருந்தார் !!!! :-)

    முதல்முறையாக வாசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  44. @ துளசி கோபால்
    வருகைக்கு நன்றி மேம் . பாரதியின் பன்முகங்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  45. Greetings to you potential client,We Have Effective and efficient PROVIDER.


    1. Instrument: Bank Guarantee (BG/SBLC)
    2. Total Face Value: Min of 1M Euro/USD (Ten Million Euro/USD) to Max of 5B Euro/USD (Five Billion Euro/USD).
    3. Issuing Bank: HSBC, London or Deutsche Bank Frankfurt or
    5. Leasing Price: 5.0% of Face Value plus (0.5+X)% commission fees to brokers.
    6. Delivery: SWIFT TO SWIFT.
    7. Payment: MT-103.
    8. Hard Copy: Bonded Courier within 7 banking days.

    All relevant business information will be provided upon request.

    If Interested kindly contact me via

    Contact : Mr.lee youngshik
    Email: leefinance11@gmail.com
    Skype: leefinance11

    ReplyDelete
  46. GENERIC FINANCIAL MANAGEMENT PLC is a British based financial consulting company with years of experience in the

    international and local finance market. Be it lease bank guarantee, Stand by letter of credit or any type of

    refinancing, talk to our team at GENERIC FINANCIAL MANAGEMENT PLC and certainly we will set your business on the right path

    with our sound and quality financial advice and services.

    Our bank instrument can be help you fund you projects in Trading, funding project(s) such as Aviation, Agriculture,

    Petroleum, Telecommunication, construction of Dams, Bridges, Real Estate and all kind of projects.Having years of

    professional, invaluable experience in the banking and finance industry, and having access to dozens of different

    prominent trusted and reliable providers, our Financial Services consultants will crawl through hundreds of

    products to find one that perfectly matches your needs.

    Purchase Instrument of BG/SBLC : 32%+2% Min Face Value cut =5M- 10B EUR/USD

    Lease Instrument of BG/SBLC : 4%+2% Min Face Value cut = 5M- 10B EUR/USD


    DESCRIPTION OF INSTRUMENTS:

    1. Instrument: Bank Guarantee (BG / SBLC) (Appendix A)
    2. Total Face Value: Eur 5M MIN and Eur 10B MAX (Ten Billion USD).
    3. Issuing Bank: HSBC Bank London, Barclays, Credit Suisse and Deutsche Bank Frankfurt.
    4. Age: One Year, One Month
    5. Leasing Price: 4% of Face Value plus 2% commission fees to brokers.
    6. Delivery: Bank to Bank swift.
    7. Payment: MT-103 or MT760
    8. Hard Copy: Bonded Courier within 7 banking days.


    Name;Stephen Donald

    Email;genericfinancialmanagementplc@gmail.com

    Skype;genericfianacialmanagementp

    ReplyDelete
  47. We can deliver financial services instrument(BG/SBLC/MTN/DLC/LC) at affordable price to our customers in other to derive maximum utility. We understand that finding the right company to provide financial instrument is not easy. We are certified financial company that delivers banking instrument for lease which we adhere to our terms and condition. Over 96% of our clients are satisfied with our work whether it is business or financial service.

    Once transaction is in progress, we ensure we keep you posted on the progress of your paper. We also get you connected to the provider for personalized service. Instead of stressing yourself out looking for financial instrument or company why not let professional like us deliver financial instrument to you within the time frame required by you.

    For further details contact us with the below information....

    Contact Email: info.amicusfinance@gmail.com

    skype;info.amicusfinance

    All relevant business information will be provided upon request.
    BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!

    ReplyDelete
  48. We can deliver financial services instrument(BG/SBLC/MTN/DLC/LC) at affordable price to our customers in other to derive maximum utility. We understand that finding the right company to provide financial instrument is not easy. We are certified financial company that delivers banking instrument for lease which we adhere to our terms and condition. Over 96% of our clients are satisfied with our work whether it is business or financial service.

    Once transaction is in progress, we ensure we keep you posted on the progress of your paper. We also get you connected to the provider for personalized service. Instead of stressing yourself out looking for financial instrument or company why not let professional like us deliver financial instrument to you within the time frame required by you.

    For further details contact us with the below information....

    Contact Email: info.amicusfinance@gmail.com

    skype;info.amicusfinance

    ReplyDelete
  49. We can deliver financial services instrument(BG/SBLC/MTN/DLC/LC) at affordable price to our customers in other to derive maximum utility. We understand that finding the right company to provide financial instrument is not easy. We are certified financial company that delivers banking instrument for lease which we adhere to our terms and condition. Over 96% of our clients are satisfied with our work whether it is business or financial service.

    Once transaction is in progress, we ensure we keep you posted on the progress of your paper. We also get you connected to the provider for personalized service. Instead of stressing yourself out looking for financial instrument or company why not let professional like us deliver financial instrument to you within the time frame required by you.

    For further details contact us with the below information....

    Contact Email: info.amicusfinance@gmail.com

    ReplyDelete
  50. We can deliver financial services instrument(BG/SBLC/MTN/DLC/LC) at affordable price to our customers in other to derive maximum utility. We understand that finding the right company to provide financial instrument is not easy. We are certified financial company that delivers banking instrument for lease which we adhere to our terms and condition. Over 96% of our clients are satisfied with our work whether it is business or financial service.

    Once transaction is in progress, we ensure we keep you posted on the progress of your paper. We also get you connected to the provider for personalized service. Instead of stressing yourself out looking for financial instrument or company why not let professional like us deliver financial instrument to you within the time frame required by you.

    For further details contact us with the below information....

    Contact Email: info.amicusfinance@gmail.com

    ReplyDelete

  51. We are direct providers of Fresh Cut BG, SBLC and MTN which are specifically for lease, our bank instrument can be engage in PPP Trading, Discounting, signature project (s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication, construction of Dams, Bridges, Real Estate and all kind of projects. We do not have any broker chain in our offer or get involved in chauffer driven offers.

    We deliver with time and precision as sethforth in the agreement. Our terms and Conditions are reasonable, below is our instrument description.

    The procedure is very simple; the instrument will be reserved on euro clear to be verified by your bank, after verification an arrangement will be made for necessary bank documents and stock testing expenses, the cost of the Bank Guarantee will be paid after the delivery of the MT760,

    DESCRIPTION OF INSTRUMENTS:

    1. Instrument: Bank Guarantee (BG/SBLC) (Appendix A)
    2. Total Face Value: Eur 5M MIN and Eur 10B MAX (Ten Billion USD).
    3. Issuing Bank: HSBC Bank London, Credit Suisse and Deutsche Bank Frankfurt.
    4. Age: One Year, One Month
    5. Leasing Price: 6% of Face Value plus 2% commission fees to brokers.
    6. Delivery: Bank to Bank swift.
    7. Payment: MT-103 or MT760
    8. Hard Copy: Bonded Courier within 7 banking days.

    We are ready to close leasing with any interested client in few banking days, if interested do not hesitate to contact me direct. wrightjames931@gmail.com

    Regards,
    Wright
    Skype;
    wrightjames931@gmail.com

    ReplyDelete
  52. Finding a genuine provider of financial instrument is very challenging but we are certified Financial Instrument providers in United Kingdom. Presently, we only focus on BG/SBLC for Lease and Sale transactions. However, our Lease BG/SBLC is 6+2% and Sale at 40+2%.

    Should you find this interesting and acceptable? Kindly, contact us and we shall review and respond with draft Contract/MOU within 48hrs maximum.

    Please request for full procedure details if interested.

    For further inquiry contact:Wright James
    Skype:
    wrightjames931@gmail.com
    Emai:
    wrightjames931@gmail.com

    ReplyDelete
  53. We are Providers of all types of BG and SBLC with the best workable procedures. Our BG/SBLC ranges from MT799, MT760,(Both two way confirmation), MT103/23, MT103 (Both can be one way confirmation and two way confirmation) in USD and EUROS. Issuing Bank ranges from Top world 25 banks with face value ranging from 1M EUROS/USD to 10B EUROS/USD

    BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
    Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and cases to our attention and in complete confidence we will work together for the benefits of all parties involved.

    Our BG/SBLC Financing can help you get your project funded, loan financing, please let me know if you are interested in any of our services, by providing you with yearly renewable leased bank instruments. We work directly with issuing bank lease providers, this Instrument can be monetized on your behalf for 100% funding.

    We are ready to close leasing with any interested client in a few banking days, if interested do not hesitate to contact me directly. [via Contact Form Below]

    Regards

    Dimitrij Conradi
    Email: dimi.conradi1970@gmail.com
    conradi.dimitrij@bk.ru
    Skype: conradi.dimitrij@bk.ru
    WhatsApp: +90 552 674 4696

    ReplyDelete