ஓணம் பண்டிகை ஒரு அவதாரக் கதையிலிருந்து
-----------------------------------------------------------------------
பகவத்
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் நான்காவது அத்தியாயம் ஞானகர்ம
ஸன்யாச யோகம் எட்டாவது சுலோகத்தில்
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ் க்ருதாம் , தர்ம ஸமஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி
யுகே யுகே” என்கிறார்
(நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை
நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8))
கடவுளின் தேசம் என்றறியபடுகின்ற கேரளத்தில்
ஓணம் பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்
படுகிறது நற்பரிபாலனம் செய்து கொண்டிருந்த
மகாபலிச் சக்ரவத்தியை அழிப்பதற்காக
வாமனனாக அவதரித்து அவனை பாதாளத்தில் மிதித்துப் புதைத்தார் அந்த நாளில் தன் பிரஜைகளைப் பார்க்க மகாபலி
வருவதாக ஐதீகம் தங்கள் அரசன் தங்களைப் பார்க்க வரும்போது மக்கள் மகிழ்ச்சியைக்
காண்பிக்க கொண்டாடப்படும் பண்டிகையே ஓணம் கேரள
மக்களுக்கு எந்தன் ஓணாஷம்சகள் .
மகாபலிச் சக்கரவர்த்தி நல்லாட்சி செய்துவந்த ஒரு அரசன் அவனது மக்களும் சந்தோஷமாகவே இருந்தனர் அந்த அரசனை அழித்து நல்லோரைக் காப்பதற்காக எடுத்த அவதாரமே வாமன அவதாரம் எனப்படுகிறது
இந்த சமயம் வாமன அவதாரக் கதையையும்
தெரிந்து கொளல் அவசியம்
ஆதிசிவனால் மூவுலகாள வரம் பெற்ற,
திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன்
மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )
பெற்றவரம் பலிக்க, வானவரையும் ஏனையவரையும்
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்.
வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
தன் மக்கள் நிலை கண்டு வருந்தி,
கச்சியப்ப முனிவரிடம் முறையீடு செய்ய,
அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு,
வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,
திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
அசுவமேத யாகம் நடத்தி, யார்
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான் பலி.
தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.
தான் ஒரு பிரம்மசாரிப் பார்ப்பனன்,
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
அழிப்பான் என்று அறிவுரை வழங்கினார்
குல குரு சுக்கிராச்சாரியார்.
சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே கூறிய மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
அறிந்த மாலும் தருப்பையால் அதன்
துவாரம் குத்த ,கண்ணொன்று குருடாகி
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.
மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம் வினவினான்.
கைகூப்பித் தலை வணங்கி
சொன்ன சொல் தவற மாட்டேன்
தங்கள் மூன்றாம் அடி என் தலை மேல்
வைக்க , யான் பெருமை கொள்வேன்
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
வேண்டுவதைத்
தருவேன் என்பது ஆணவமென்பதை ஏற்றுக் கொள்ள
மனம் மறுக்கிறது இந்த உலகில்
கரந்தொடுக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது எத்தனையோ அவதாரங்கள்
எடுத்திருக்க வேண்டும்
தர்ம ஸமஸ்தாப நார்த்தாய என்பதெல்லாம் வெறும் கதையே
இன்னும் எத்தனை நாட்கள் எவ்வளவுபேர்
இம்மாதிரிக் கதைகளை நம்புவார்கள் என்பது பெரிய கேள்விக்குறி
வாமனாவதாரம் ( படம் இணையத்திலிருந்து) |
என் மகன் எனக்குச் சொன்ன ஒரு நிகழ்வு........!?
-------------------------------------------------------------
“நான்துபாயில் இருந்தபோது என் அரபி நண்பர் ஒருவரை ஓணம் சத்தியைக்கு அழைத்தேன் வெஜிடேரியனா நான் வெஜிடேரியனா என்று கேட்டார் வெஜிடேரியன் என்றேன் நண்பரும் என் வீட்டுக்கு வந்தார் உணவு மேசையில் ஒரு தலை வாழை போட்டு அருகில் ஒரு டம்ளர் நீரையும் வைத்து உணவுகளைக் கொண்டு வர உள்ளே போனேன் உணவை எடுத்து வரும்போது நண்பர் அந்த வாழை இலை முழுவதையும் தின்று முடித்து நீரையும் பருகி விட்டார் என்னைக் கண்டதும் “ மாஷா அல்லா என் வாழ்நாளில் இத்தனை பெரிய சாலாட் இலையைத் தின்றதில்லை” என்றாரே பார்க்கலாம்
( இது எப்படி இருக்கு ?)
-------------------------------------------------------------
“நான்துபாயில் இருந்தபோது என் அரபி நண்பர் ஒருவரை ஓணம் சத்தியைக்கு அழைத்தேன் வெஜிடேரியனா நான் வெஜிடேரியனா என்று கேட்டார் வெஜிடேரியன் என்றேன் நண்பரும் என் வீட்டுக்கு வந்தார் உணவு மேசையில் ஒரு தலை வாழை போட்டு அருகில் ஒரு டம்ளர் நீரையும் வைத்து உணவுகளைக் கொண்டு வர உள்ளே போனேன் உணவை எடுத்து வரும்போது நண்பர் அந்த வாழை இலை முழுவதையும் தின்று முடித்து நீரையும் பருகி விட்டார் என்னைக் கண்டதும் “ மாஷா அல்லா என் வாழ்நாளில் இத்தனை பெரிய சாலாட் இலையைத் தின்றதில்லை” என்றாரே பார்க்கலாம்
( இது எப்படி இருக்கு ?)
கடைசியாச் சொல்லி இருப்பது முகநூலில் பரவி வருவது. மற்றபடி மஹாபலியைக் குறித்தும் வாமன அவதாரம் குறித்தும் சரியான புரிதல் இல்லையோனு தோன்றுகிறது! ஆனாலும் அவரவர் விருப்பம்.
ReplyDeleteஇப்போதுள்ள நிலைமைக்கு எத்தனையோ அவதாரங்கள் எடுக்கணும்னு சொல்லி இருக்கீங்க. இப்போதுள்ள நிலைமை ஏற்கெனவே கலி முற்றினால் என்ன என்ன நடக்கும் என்பதில் கூறப்பட்டுள்ளது. அப்படித் தான் நடந்து வருகிறது. ஆனால் ஒன்று, இதை விட மோசமாக எப்படி ஆகும்னு கவலையும் வருது! நல்லவேளையா அப்போ நாம இருக்க மாட்டோம்.
இப்போதெல்லாம் அரபிகளுக்கு வாழையிலையைப் பற்றியும் நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரியும்...
ReplyDeleteஉடன் வேலை செய்யும் எகிப்தியன் ஒருவன் தஞ்சாவூர் மதுரை குருவாயூர் வந்ததைச் சொல்லுகின்றான்..
இங்கே குவைத்தி கேரளத்துக்கு வந்து எண்ணெய் குளியல் செய்து கொண்டதை மறக்காமல் பேசிக் கொண்டிருக்கின்றான்..
இருந்தாலும் நம் ஊரில் சொல்லப்படும் அந்த காலத்து ஜமீந்தார் ஒருவருடைய கதையுடன் - இந்த கதையை இணைத்து சிரித்துக் கொள்ள வேண்டியது தான்..
மற்றபடிக்கு வாமன அவதாரக் கதைப் பாட்டு அருமை. தாங்கள் இயற்றியதா?..
இப்போதுள்ள நிலைமைக்கு பற்பல அவதாரங்கள் தேவையில்லை..
ஒரு சொல் - ஒற்றைச் சொல் போதும்.. கொடியோர் கொட்டம் அடங்கி விடும்..
ஆனாலும்,
கர்ம வினைகள் கழிய வேண்டுமே!..
நம்ம கீதா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். வரவர உலகம் போகும் நிலையைப் பார்க்கும்போது, நல்லவேளையா இருக்க மாட்டோமுன்னுதான் நானும் நினைக்கிறேன்.
ReplyDeleteஓணம் பண்டிகை ஒரளவு மலையாளிகளை ஒன்றுபடுத்துகிறது. இங்கெல்லாம் வேஷ்டி அணிந்து, பெண்கள் வெண்/கோடி வேஷ்டி கலரில் ஜரிகை பார்டருடன் குடும்பம் குடும்பமாக வெளியில் செல்வதைப் பார்க்கலாம் (இஸ்லாமிய நாடுகளில்). பெரும்பாலான ஹோட்டல்களில் ஓணம் சத்யா என்று ஸ்பெஷல் மதிய உணவு 20 ஐட்டங்களுக்குக் குறையாமல் 500 ரூபாயில்.
ReplyDeleteகீதா மேடம்/துளசி டீச்சர்- காலம் மோசமாகுதுன்னு மூணு தலைமுறைக்கு மேலா சொல்ற கம்ப்ளைன்ட் தானே..
ஜி.எம்.பி சார்... நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆரம்பத்தில் நம்பாதவரும் கஷ்டப்படும்போது automaticஆக கடவுளை நம்புவர். தனக்குமேல் ஒரு சக்தி உள்ளது என்பதை நம்பாமல் எப்படி இருக்கமுடியும்?
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
கலி முற்றினால் என்ன நடக்கும் அப்போது குதிரை மேல் பகவான் வந்து முற்றின கலியைச் சரி செய்வாரா. கதைகளில் சொல்லப்படுவதைத் தானே எழுதுகிறேன் கூடவே என் கருத்துகளையும் ஆங்காங்கே சேர்க்கிறேன் முன்பிருந்ததும் நமக்குத் தெரியாது இனி நடக்கப் போவதையும் நாம் பார்க்க முடியாது நம் எண்ணங்களிலேயே மகிழ்ச்சி காண்போம் வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ துரை செல்வராஜு
துபாயில் உணவகங்களில் சத்தியை நடக்கலாம் நடத்துவது நம்மவர் தானே. அரபிகள் நம் உணவகங்களுக்கு வருகிறார்களா எனக்குத் தெரியவில்லை. கடைசியில் சொன்னது ஜோக்குக்காக மட்டுமே
வாமன அவதாரக் கதை அடியேனின் கை வண்ணம்தான் இது மட்டுமல்ல. எல்லா அவதாரங்களைப்பற்றியும் எழுதி இருக்கிறேன்
அந்த ஒற்றைச்சொல் என்னவென்று சொல்ல வில்லையே நம்மால் தெரிந்து கொள்ள முடியாத வற்றுக்கு கர்மவினை என்று கூறித் தேற்றி கொள்ளலாம் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@துளசி கோபால்
அப்படிச் சொல்லியே தேற்றிக் கொள்வோமே தவிர இந்த மாதிரி அவதாரக் கதைகளை நம்பாமல் இருக்க மாட்டோம் வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ நெல்லைத் தமிழன்
கடவுள் நம்பிக்கை வேறு கதைகளில் நம்பிக்கை வேறு நீங்கள் சொல்லும் “ இங்கெல்லாம்” எந்த இடம் புரியவில்லை வளை குடா நாடுகளா. அங்கும் உணவகங்களில் சத்தியா செய்வது நம்மவரே . நல்ல காசும்பார்க்கின்றவரும் அவரே. அரபிகள் அங்கெல்லாம் வருகிறார்களா. நான் துபாயில் மூன்று வாரங்கள் இருந்தேன் அப்போது உணவகங்களில் அரபிகள் யாரையும் பார்க்க வில்லை. வருகைக்கு நன்றி சார் கஷ்டப்படும்போது கடவுள் நம்பிக்கை என்பது நீரில் மூழ்கும் போது பிடுஇக்கும் துரும்பு போல்தான் சொந்த வாழ்வில் பலகஷ்டங்களையும் பார்த்து வளர்ந்தவன் நான் என்நம்பிக்கை என்பது ஒரே மாதிரியானது
இதுவரை வராத கல்கியா இனி வந்து விடப் போகிறார்?!! எங்கள் வீட்டு பேப்பர்க்காரன் கூட கல்கி போடுவதை நிறுத்தி விட்டார்!
ReplyDeleteபாடல்கள் அருமையாகப் புனைந்துள்ளீர்கள்.
கலி காலம் முடிவுக்கு வர எத்தனை கோடி வருடங்கள் இருக்கின்றன? அப்போதுதான் வருவார் பகவான். இப்போதைக்குப் பின்னூட்டமிட பகவான்ஜிதான் வருவார்!
துபாயில் உள்ளூர் (locals) மனிதர்கள் இந்திய உணவகங்களுக்கு வருவது அபூர்வம். சௌதி தவிர மற்ற வளைகுடா நாடுகளிலும் அப்படித்தான். இந்திய பாகிஸ்தானி உணவகங்களில் அதிக மசாலாவை அவர்கள் விரும்புவதில்லை. ஆனாலும் அவர்கள் தோசை போன்றவை சாப்பிடுவதைப் பார்த்துள்ளேன். சௌதியில் முழு சைவுணவுக்கடை கிடையாது
ReplyDeleteநாம் வளர்ந்த அல்லது வளர்த்த வித்த்தில் கேள்விகளுக்கு, அதிலும் மத சம்பந்த கேள்விகளுக்கு இடம் இல்லை. (மீறிக் கேட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று chapterஐ close செய்துவிடுவார்கள்). வெகு சிலர்தான் அதீத விசுவாசம் வைத்துள்ளார்கள். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். என் பாஸ் மகாபாரதம் நடந்தது என்று நம்புவதில்லை. நான் நம்புகிறேன். இரண்டு சைடுக்கும் விவாதிப்பதற்கு நிறைய பாயிண்டுகள் இருக்கும், அடிப்படைக் கேள்வி எழாதவரை (அடிப்படைக் கேள்வி.. ஏன் round about wayல solve பண்ணணும். படைத்தவனக்கு அழிப்பது childs play அல்லவா? ஒரு little unconvincing பதில், அவனும் கர்மா, இயற்கை விதிகளை follow பண்ண வேண்டும்)
சில வரிகளில் எனினும்
ReplyDeleteமுழுக்கதை அறிந்த உணர்வு
கேட்டவன் இறைவனாயினும்
கொடுத்தவனை எதிர்பார்த்து
மக்கள் இருப்பதே
இந்த நாளின் சிறப்பு
//இன்னும் எத்தனை நாட்கள் எவ்வளவுபேர் இம்மாதிரிக் கதைகளை நம்புவார்கள் என்பது பெரிய கேள்விக்குறி ..//
ReplyDeleteநம்புவதற்காக கதைகள் இல்லை. வழி நடத்தல்களுக்காகவே கதை.
நம்பினால் தானே அதன் வழி நடக்க முடியும் என்பது அடுத்த கேள்வி. அந்த அடுத்த கேள்வியைக் கேட்கவே முடியாதபடி அநீதியின் கோரத்தாண்டவம் நம்மை பாதிக்கும் பொழுது அந்தக் கதை மாதிரி நீதி வென்றால் தான் நமக்கு நிம்மதி என்று பேசாமல் கதையை நம்ப ஆரம்பிப்பார்கள். அந்த நம்பிக்கை குறைந்தபட்சம் அப்படி நம்புபவரையாவது அதன் வழி நடத்திச் செல்லும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் கதைகளுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. அதுபாட்டுக்க சொல்பவர்களால் சொல்லப்பட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்!
அநீதிகள் இருக்கும் வரை காலாதிகாலத்திற்கு இந்தக் கதைகளும் இருந்து கொண்டு தான் இருக்கும். சொல்லப்போனால் அநீதிகள் வாழ்வது தான் நீதிக்கதைகளுக்கு உயிர் மூச்சு!
எல்லாக் கதைகளையும் பார்த்தீர்களென்றால் நீதி வெல்லும்; அநீதி தோற்கும். அப்படி இல்லாத பட்சத்தில் மக்கள் அதைக் கதை என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கதையில் அல்ல; கதை சொன்னதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று நினைப்பார்கள்.
கதைகளில் தான் அநீதி தோற்கும் என்று அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்!
வாழ்க்கையில் நீதி வெல்லும் என்று அவர்கள் நம்ப ஆரம்பித்து விட்டால் கதைகளுக்கு வேலையே இல்லாது போய் விடும்!
ஸ்ரீராம்ஜி யின் நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காக இதோ வந்து விட்டேன் !
ReplyDelete#அவனது மக்களும் சந்தோஷமாகவே இருந்தனர் அந்த அரசனை அழித்து#
லாஜிக் உதைக்குதே :)
பல வரலாறுகளிலும் சரி புராணங்களிலும் சரி விடைகள் தெரியாதவை தான் அதிகம். கலி காலம் என்பது பல தலை முறைகளாகச் சொல்லப்பட்ரு வருவதுதான். தேவி புராணம் என்று எப்போதோ 30 வருடங்களுக்கு முன்னால் சிறிது வாசித்த நினைவு. அதிலும் அப்போதே கலி முற்றியது என்று சொல்லப்பட்டிருந்த வருடங்கள் பல முன்னே. இயற்கைதான் நம்மை ஆட்கொள்கின்றது. ஆட்கொள்ளப் போகிறது. இதற்கு நாம் என்ன வடிவம் வேண்டும் என்றாலும் கொள்ளலாம் கொடுக்கலாம், அறிவியல் ரீதியாகவும், அவரவர் மத ரீதியாகவும்.
ReplyDeleteஉங்கள் பாடல்கள் அருமையாக உள்ளன சார்!
OK
ReplyDeleteபெரும்பாலான கதைகள் நம்புவதற்காக இல்லை ஐயா. நம்மை வழிப்படுத்துவதற்காக என்றே நினைக்கிறேன். பொதுவாக அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ என்றோ, அது சாத்தியமோ என்று எவரும்நினைப்பதில்லை.
ReplyDeleteமுனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் கருத்தே எனது கருத்தும் ஐயா
ReplyDelete
ReplyDelete@ ஸ்ரீ ராம்
இந்தமாதிரியான skeptikal எண்ணங்கள் தான் என்னை இம்மாதிரி எழுத வைக்கிறது வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@நெல்லைத் தமிழன்
நாம்வளர்ந்த அல்லது வளர்க்கப்பட்ட விதம் கேள்வி கேட்காமல் அடிபணிவது. இதையே நான் அடிமைத்தனமாக வளர்க்கப் பட்டு /வளர்ந்து இருக்கிறோம் என்கிறேன் சுதந்திரமாக எண்ணி எது சரி என்று படுகிறதோ அதைஃபாலோ செய்வதில் அர்த்தம் இருக்கும். இதிகாசங்களை எல்லாம் நல்ல கற்பனை வளம் பொருந்திய கதைகளாகவே நான் காண்கிறேன் அவற்றில் பல நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன ஆனால் அந்தோ பரிதாபம் நாம் சக்கையைத்தான் எடுத்துக் கொள்கிறோம் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ரமணி
கதையைப் பகிர்ந்ததே அவதாரத்தின் பொருள் இல்லாததைச் சுட்டிக் காட்டத்தான் இதில் மகாபலிக்குப் பெருமை. அவதாரத்துக்குச் சிறுமை. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவி
/
நம்புவதற்காக கதைகள் இல்லை. வழி நடத்தல்களுக்காகவே கதை./ இந்தக் கதையில் என்ன வழிநடத்தல் இருக்கிறது என்று புரியவில்லை ஐயா. கேள்வி கேட்பவன் வாயை மூடிவிடும் ஒரு யுக்திதான் இது என்று தோன்றுகிறது மத சம்பந்தப்பட்ட எதையும் கேள்வி கேட்டால் கதைகள் தொடரும் என்று பதில் எனக்கு விளங்காத ஒன்றை சரி இல்லை என்று தோன்றுவதை எழுதுகிறேன் கதைகளை நானும்படித்து இருக்கிறேன் . எனக்கு சரி இல்லை எனத் தோன்றுவதைப் பகிர்கிறேன் மேலும் எதையும் சரியாகப் புரிந்து கொள்ள இயலாதவன் என்னும் பெயரும் சேர்ந்து வருகிறது வருகைக்கு நன்றாஇ சார்
ReplyDelete@ பகவான் ஜி
அவதாரங்களின் காரணம் சொல்லப்படுகிறது ஆனால் அது செயல்பட்ட விதம் சரி இல்லை என்றுதான் நானும் கூறுகிறேன் லாஜிக் உதைக்கிறது. வருகைக்கு நன்றி ஜி
@ துளசிதரன் தில்லையகத்து
ReplyDeleteநேற்றைய ஹிந்து ஆங்கில தினசரியில் மாண்புமிகு அமைச்சர் அமித் ஷா கூறி இருப்பதை படித்தேன் மலையாளப் பத்திரிகை கேசரி எழுதி இருப்பதையும் வாசித்தேன் நான் புரிந்து கொண்டவரை வாமனனை மேல் சாதிக்காரராகவும் மகாபலியை தாழ்ந்த சாதிக்காரராகவும் சித்தரிப்பது போல் சொல்லப் படுகிறது இந்து மத நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கூறலாம் அதுவும் ஆட்சியில் இருக்கும் இந்துத்துவக் கட்சிக் காரர்களுக்கு இதுவே வேலையாகி விட்டது விடை தெரியாத பல விஷயங்களில் நான் நினைப்பதைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
/
உங்கள் பாடல்கள் அருமையாக உள்ளன சார்!/ பாராட்டுக்கு நன்றி உங்களுக்குத் தெரியுமா எல்லா அவதாரங்களைப் பற்றியும் நான் எழுதி இருக்கிறேன்
ReplyDelete@ கில்லர் ஜி
வருகைக்கு நன்றி ஜி.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
/பெரும்பாலான கதைகள் நம்புவதற்காக இல்லை ஐயா. நம்மை வழிப்படுத்துவதற்காக என்றே நினைக்கிறேன். பொதுவாக அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ என்றோ, அது சாத்தியமோ என்று எவரும்நினைப்பதில்லை./ பகுத்தையும் சக்தி உள்ள நாமாவது அவை பற்றி நினைத்துப்பார்ப்போமே திரு ஜீவிக்கு எழுதிய மறு மொழியையும் வாசிக்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@கரந்தை ஜெயக்குமார்
முனைவர் ஜம்புலிங்கத்துக்கு எழுதி இருக்கும் மறுமொழியே உங்களுக்கும் வருகைக்கு நன்றி சார்
வாமன அவதாரம் எனக்கு பிரியமான புராண நிகழ்வு. தர்மம் தலை துவளும் பொழுதெல்லாம் இறைவன் வருவான் என்றால், தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பதைக் கொள்ள வேண்டும். பூர்ண அவதாரங்கள் தங்கள் முழு இறைத்தன்மையை வெளிப்படுத்தி தோன்றுவது மிகவும் அவசியம் நேரிடும் பொழுதே.
ReplyDeleteஇப்போத் தான் வேறோரு பதிவிலே அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவருமே காஸ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள், சகோதர முறை உள்ளவர்கள் என்பதைக் குறித்துப் படித்தேன். இங்கே வந்தால் மஹாபலியை ஜாதிக்குள் அடைச்சுட்டதாகச் சொல்கிறீர்கள். வாமன ஜயந்தி என்று அமித் ஷா சொன்னது சரியா, தப்பா என்னும் விவாதத்துக்குள் வரலை. அவர் சரியானன் புரிதலுடன் சொல்லவில்லை! ஆனால் மஹாபலிச் சக்கரவர்த்தி இந்திரனோட பதவிக்குக் குறி வைத்து யாகங்கள் நடத்தியதால் அவன் இந்திரப் பதவியை அடைந்தால் மேலும் பிரச்னைகள் என்பதாலும் அவனுக்கும் மோக்ஷம் கிடைக்க வேண்டிய தருணம் நெருங்கியதாலுமே அவனைப் பாதாளத்துக்குள் தள்ளினதாகச் சொல்லப்படுகிறது. ஏழு சிரஞ்சீவிகளில் மஹாபலியும் ஒருவன். ஆஞ்சநேயர், பரசுராமர், வியாசர், அஸ்வத்தாமன்,மஹாபலி, விபீஷணன், மார்க்கண்டேயன் ஆகிய ஏழு பேருமே சிரஞ்சீவிப் பதவி அடைந்தவர்கள். மஹாபலியின் ஜாதியைப் பார்த்தா சிரஞ்சீவிப் பட்டம் கிடைத்தது அவனுக்கு? ஜாதியெல்லாம் கடந்த நானூறு, முந்நூறு வருடங்களில் தான் ஆரம்பித்தது. அதற்கு முன்னர் மன்னராட்சி இருந்தபோதோ அதன் முன்னரோ ஜாதி குறித்து யாரும் பேசியதாகத் தெரியவில்லை!
ReplyDeleteஒரு பேச்சுக்கு மஹாபலியைக் கீழ்ஜாதி என்றே வைத்துக் கொண்டாலும் அவனுக்கு சுக்ராசாரியார் என்னும் பிராமணர் எப்படிக் குலகுருவானார்? சொல்லப் போனால் அசுரர்கள் அனைவருக்குமே அவர் தான் குல குரு! :)
ReplyDelete
ReplyDelete@ ஷக்தி பிரபா
தர்மம் தலை துவளும்போதெல்லாம் ..... வாமன அவதாரத்தில் எந்த தர்மம் தலை துவண்டது வருகைக்கு நன்றி மேம்
மஹாபலியின் கதையைப் படித்தால் தர்மம் தவறியது தெரியும்! :)
ReplyDeleteஅதோடு நெல்லைத் தமிழனின் கருத்தை இப்போது தான் கவனித்தேன். காரண, காரியங்களோடு புராணக் கதைகளைச் சொல்லிக் கொடுத்த பெரியோர்களும் இருந்திருக்கிறார்கள். எங்க வீட்டில் எல்லாம் சாமி கண்ணைக் குத்தும்னு பயமுறுத்தியதில்லை!
இதை இப்படிச் செய்யக் கூடாது. அதுக்கான காரணம் இது. அப்புறம் உன்னிஷ்டம் என்பார்கள். இத்தனைக்கும் கட்டுப்பாடுகள் அதிகமே!
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
/ வாமன ஜயந்தி என்று அமித் ஷா சொன்னது சரியா, தப்பா என்னும் விவாதத்துக்குள் வரலை. அவர் சரியானன் புரிதலுடன் சொல்லவில்லை! ஆனால் மஹாபலிச் சக்கரவர்த்தி இந்திரனோட பதவிக்குக் குறி வைத்து யாகங்கள் நடத்தியதால்அவன் இந்திர பதவியை அடைந்தால் மேலும் பிரச்சனைகள் என்பதாலும் அவனுக்கும் மோக்ஷம் கிடைக்க வேண்டிய தருணம் ......... தேவர்கள் அசுரர்கள் அனைவருமே காஸ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள் என்ன ஒரு வித்தியாசம் வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்தவர் பங்காளிகள் தேவர்களி தாய் அதிதி இன்னொரு மனைவியை விட சக்தி வாய்ந்து விட்டார்விஷ்ணுவை நோக்கி வேண்டி வரம் பெற்றார் இந்தக் கதையில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த இடத்தில் தர்மம் தலை துவண்டது என்றாஉம் கூற வில்லை. இந்த அவதாரமே லாஜிக்குக்கு மாறாக இருக்கிறது இந்தக் கதைகள் நம்புவதற்காக அல்ல நல்வழிப்படுத்தவே என்று கூறப்படுவதையும் இக்கதையில் காணவில்லை.கதைகள் படிக்க சுவையாக இருக்கிறது என்பது மட்டுமே சரி மீள் வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@கீதா சாம்பசிவம்
நான் எங்கே மஹாபலியைக் கீழ்சாதிக்காரர் என்றேன் எனக்கு சாதிகளில் நம்பிக்கையே கிடையாது வேறு இடத்தில் படித்ததையும் அதன் விளைவுகளையும் பார்த்து எடுத்துக்காட்டினேன்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
மஹாபலியின் கதையைப் படித்தால் தர்மம் தவறியது தெரியும் / நான் இந்தக் கதையை “தசாவதாரக் கதைகள் ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத் குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் அருளா சியுடன் வெளியிடப்பட்டுள்ளது “ என்னும் குறிப்புடன் வந்த புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதினேன் அதில் மஹாபலியின் ஆணவத்தை அடக்க எடுத்த அவதாரம் என்றே கூறப்பட்டிருக்கிறது சகல சக்திகளும் பெற ஒரு அரசன் யாகம் செய்வதே தவறா இங்கு ஆணவம் எங்கிருந்து வந்தது. தயை கூர்ந்துஎன் பதிவை இன்னுமொரு முறை படியுங்கள்
சாமி கண்ணைக் குத்தும் என்பது போல் சொல்வது ஒரு பயமுறுத்தலே
இப்படிச் செய்யக் கூடாது என்பார்கள் பின் உன் இஷ்டம் என்று யாரும் கூறியதாக நான் கேட்டதில்லை.
ReplyDeleteரொம்ப கரெக்ட் ! " இதுவரை நான் கூறியவற்றை நன்கு கேட்டாயா ?நான் கூறியவற்றை பாக்கியில்லாமல் (அஸேஷேண )நன்கு விர்சனம் செய்து பார்த்துவிட்டு
( ஏதேச்சசி ததா குரு )என்ன ஆசைப்படுகிறாயோ அப்படியே செய் " என்று CHAP xviii -63-ல் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார் !
மாலி
@ வி மாலி
ReplyDelete/ மறை பொருளுக்கெல்லாம் மறை பொருளாகிய ஞானம் இங்ஙனம் உனக்கு இயம்பப் பட்டது. இதை முழுவதும் ஆராய்ந்து விரும்பியதைச் செய்.(63)/ விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதம் பின்னூட்டம் நன்றி சார்
மாலி சார், நீங்க சொல்லி இருப்பது கீதையில் இருக்கிறது இப்போது புரிந்து கொண்டேன். ஆனால் எங்க பெரியப்பா எல்லாம் அந்த மாதிரி விவரமாகச் சொல்லலை!பகவானே அப்படித் தான் சொல்வார். நமக்கு முன்னே நல்லது, கெட்டது இரண்டையும் காட்டுகிறார். கெட்டது பார்க்கக் கவர்ச்சியாக இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ளணும் என்பார்கள். ஆகவே யோசித்து முடிவு எடுக்கும்படி சொல்வார்கள்.
ReplyDelete//இப்படிச் செய்யக் கூடாது என்பார்கள் பின் உன் இஷ்டம் என்று யாரும் கூறியதாக நான் கேட்டதில்லை.//
ReplyDeleteஎங்க வீட்டிலே அப்படிச் சொல்வார்கள், உதாரணத்துக்கு இரவில் யாரும், மோரோ, பாலோ கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அப்படிக் கட்டாயம் கொடுக்கணும்னு இருந்தால் மோரில் உப்பும், பாலில் சர்க்கரையும் சேர்த்துக் கொடுப்பாங்க. வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் கேட்டால் கடன் கொடுக்க மாட்டாங்க! ஆனால் தவிர்க்க முடியலைனால் எண்ணெயைக் கிண்ணத்தில் ஊற்றி, சீயக்காய், மஞ்சள் தூளுடன் கொடுத்துடுவாங்க. அப்படி எல்லாம் நானே செய்திருக்கேன். ஆனால் உங்களைப் போல் என் மாமியார், மாமனாரும் இப்படி எல்லாம் செய்யணும்னு தெரியாது என்றே சொல்லி இருக்காங்க. இது அவரவர் குடும்பத்தின் வளர்ப்பு முறை! இப்படி எவ்வளவோ சொல்லலாம். இது எளிய உதாரணம் என்பதற்காக இங்கே எழுதினேன். மாலை வேளையில் விளக்கு வைத்த பின்னர் குளிக்கக் கூடாது. சாயந்திரம் விளக்கு வைக்கும் நேரம் சாப்பாடு சாப்பிடக் கூடாதுனு எத்தனையோ இருக்கு! :) எல்லாவற்றுக்கும் காரணம், காரியம் உண்டு.
// நான் புரிந்து கொண்டவரை வாமனனை மேல் சாதிக்காரராகவும் மகாபலியை தாழ்ந்த சாதிக்காரராகவும் சித்தரிப்பது போல் சொல்லப் படுகிறது இந்து மத நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கூறலாம்,//
ReplyDeleteஇதைத் தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். :) மற்றபடி நீங்கள் சொல்வது போல் இந்து மத நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். இங்கே இதை எழுதிய நீங்களும் ஒரு இந்து தானே! ஆகவே நீங்கள் எழுதி இருக்கிறதும் ஏற்கக் கூடியவையே! யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். :) இதுவும் ஒரு நம்பிக்கையே!
@ கீதா சாம்பசிவம்
ReplyDelete” எங்க வீட்டிலே அப்படிச் சொல்வார்கள்...............எல்லாவற்றுக்கும் காரண காரியம் உண்டு” நான் எனக்கு சௌகரியப்படும்போது செய்யும் செயல்களுக்குக் காரணங்களைச் சொல்லாமல் தடா போடுவது மன்னிக்கவும் மூட நம்பிக்கையின் ஒரு முனை. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு நான் திரு மாலிக்கு எழுதிய பின்னூட்டம் பார்க்கவும் நன்றி
ReplyDelete@Geethasambasivam
மாதங்கி சின்னக்குழந்தையாக இருந்த சமயம் முதலே , அவள் ஏதேனும் சாப்பிட வாங்கி தரச்சொன்னால் ,( அது சாப்பிட தகாது என்றால் ) இது சாப்பிடுவது நல்லதில்லை ,எதோ கேட்டுவிட்டாய் ,இப்போது வாங்கிதருக்குறேன் ஆனால் இதை மீண்டும் சாப்பிடுவதை தவிர்த்துவிடு ..என்று தான் advise பண்ணுவேன் ..strong -arm method என்றுமே கிடையாது ..
மாலி
//..எல்லாவற்றுக்கும் காரண காரியம் உண்டு” நான் எனக்கு சௌகரியப்படும்போது செய்யும் செயல்களுக்குக் காரணங்களைச் சொல்லாமல் தடா போடுவது மன்னிக்கவும் மூட நம்பிக்கையின் ஒரு முனை. //
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் காரண காரியங்கள் உண்டு என்று நான் எழுதியது உங்களுக்காக. மற்றபடி எங்கள் வீட்டில் எப்போதும் எல்லாவற்றுக்கும் காரண, காரியங்களைக் கூடியவரை சொல்லியே வளர்த்திருக்கின்றனர். எச்சில், பத்து கலப்பதின் சௌகரிய, அசௌகரியங்கள் கூடச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இவை குறித்து முகநூல் போன்ற தளங்களில் கூட அறிவியல் ரீதியானவை என்று பட்டியலிடப்படுகின்றன. :)
மாலி சார், சரியானபடி புரிந்து கொண்டீர்கள்! அதே, அதே! என் தாத்தா(அம்மாவின் அப்பா) அப்படித் தான் சொல்வார். எங்க அப்பாவை விடப் பெரியப்பாவும் அப்படித் தான் சொல்வார். வெளியில் சில பொருட்களை வாங்கிச் சாப்பிடுவது மட்டுமில்லாமல் சாப்பிட்ட இடத்தை ஏன் சுத்தம் செய்யணும் என்பதிலிருந்து சாப்பிட்ட பின்னரும், சாப்பிடும் முன்னரும் கை கழுவ வேண்டிய அவசியத்திலிருந்து பற்களைத் தேய்க்கவேண்டியதிலிருந்து கிட்ட இருந்து செய்து காட்டிச் சொல்லுவார் எங்க பெரியப்பா! சில விஷயங்கள் அதனால் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.
ReplyDelete
ReplyDelete@கீதா சாம்பசிவம்
பதிவின் விஷயங்களைத் தாண்டிப் போகிறது பின்னூட்டங்கள் சுகாதார விஷயங்களை நம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் அது குறித்து மூத்தோர் சொல்வதிலும்
அவற்றைக் கேட்பதிலும் ஆட்சேபணை இல்லை.அவரவருக்கு என்று ஒரு பென்ச் மார்க் உண்டு. எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிலும் அது குறித்துப் பேசுவது எனக்குப் புரியாதது
பதிவும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.
ReplyDelete
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
கருத்தாடல்களில் நீங்கள் பங்கு கொள்ள வில்லையே வருகைக்கு நன்றி
நல்ல பகிர்வு ஐயா...
ReplyDeleteஅந்த அரபி நகைச்சுவை வைரலாய் அப்போ அப்போ முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வந்து கொண்டு இருக்கிறது....
ReplyDelete@பரிவை சே குமார்
வருகைக்கு நன்றி சார் பல நகைச்சுவைகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
G.M.B. அண்ணா அவர்கள் ஓணம் பண்டிகை பற்றி எழுதியிருந்ததையும், அதற்கு வந்திருந்த பின்னூட்டங்களையும் இப்போதுதான் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தன. ஜீ,வீ. சாரின் பின்னூட்டம் அருமை!
ReplyDeleteநான் சொல்ல நினைப்பதை எல்லாம் கீதா அக்கா சொல்லி விட்டார். அதற்காக நான் என் வர்ஷனை சொல்லாமல் இருக்க முடியுமா?
வாமன அவதாரத்தை சுருக்கமாக பார்க்கலாம்:
அசுர குல அரசனான மஹாபலி நடத்தும் அஸ்வமேத யாகத்திற்கு ஒரு சிறுவனைப் போல் வந்த மஹா விஷ்ணு தன் காலடியால் மூன்றடிமண் கேட்டு, த்ரிவிக்ரமனாக வளர்ந்து,விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்க, மஹாபலி தன்னையேஆத்ம நிவேதனமாக கொடுக்க, அவனை பாதாள லோகத்தில் தள்ளுகிறார் மஹா விஷ்ணு!
ஒரு அரசன் அஸ்வமேத யாகம் செய்ய நினைப்பது தவறா?
நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று பண்பு, மற்றொன்று பயன்.
ஒரு விஷயம் நல்லதா இல்லையா என்பது அது எந்த நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்பதை பொருத்தே முடிவு செய்யப்படும்.
இங்கே மஹாபலியின் நோக்கமே தவறு. இந்திரப்பதவியை அடைய வேண்டும் என்ற தவறான நோக்கத்திற்காக ஆரம்பிக்கிறான் அஸ்வமேத யாகத்தை. நூறு அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரனாகி விடலாமா? பூ! என்ன பிரமாதம்? நான் செய்கிறேன் அஸ்வமேதயாகம் என்ற ஆணவத்தோடு ஆரம்பிக்கப்பட்ட விஷயம் எப்படி நல்லதாக இருக்க முடியும்?
இரண்டாவது, யார் வந்து எதைக் கேட்டாலும் தருகிறேன் என்பது ஆணவமா? என்று கேட்கிறார்.
அஸ்வமேத யாகம் செய்பவர்கள் யார் வந்து எதைக் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது விதி. அப்படி தரா விட்டால் யாகம் பங்கப்படும் அதனால்தான் அவன் கொடுக்க முன் வந்தானேயொழிய வேறு நல்ல எண்ணம் கிடையாது. நோக்கம் மறுபடியும் அடிபட்டு போகிறது.
உதாரணமாக பள்ளி சென்று படிக்க வேண்டிய வயதில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை பார்த்த ஒருவர்,"ஏம்பா ஸ்கூலுக்கு போகலையா?" என்று கேட்க, "நான் ஸ்கூலுக்கு போனால் யார் சோறு போடுவார்கள்?" என்று திருப்பி கேட்கிறான். சாப்பாட்டிற்காக கல்வி தடைபட கூடாது என்று உனக்கு நான் சாப்பிடு போடுகிறேன் நீ படிக்கச் செல்" என்று கூறி சாப்பாடு போடுபவரின் நோக்கம் புனிதமானது. அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் அவர் உனக்கு சாப்பாடு மட்டும்தானே போட்டார்,நான் முட்டையும் சேர்த்து போடுகிறேன் என்று போட்டால் அங்கு நோக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரரை விட தான் உசத்தி என்று காட்டிக் கொள்வதுதான், அங்கு விஞ்சி நிற்பது ஆணவம்தான்.
அடுத்தது மகாபலியின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள். அதே நேரத்தில் அதிதி அதாவது தேவர்களின் தாயார், என் குழந்தைகள் துன்பப் படுகிறார்கள் என்று மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டாள். இந்த இரண்டு முரண்பட்ட வாக்கியங்களிலிருந்து நாம் அறிந்து கொள்வது மகாபலியின் ஆட்சியில் ஒரு சாரார் சந்தோஷமாகவும், மற்றொரு சாரார் துக்கமாகவும் இருந்திருக்கிறார்கள். யார் சந்தோஷப்பட்டார்கள்? என்ன விதமான சந்தோஷம்?
ReplyDeleteஇப்போது நான் மறுபடியும் தற்காலத்திலிருந்து ஒரு எடுத்துக் காட்டு தர விரும்புகிறேன். நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் சிலர் மிகவும் சந்தோஷமாக இருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு கல்வி இலவசம், யூனிஃபார்ம் இலவசம், பேருந்தில் இலவச பாஸ், புத்தகம், நோட்டு எல்லாம் அரசாங்கமே வழங்கும். 11ம் வகுப்பு வந்தால் சைக்கிள் கிடைக்கும். இதை எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த விஷயம். எட்டாம் வகுப்பு வரை எதுவுமே படிக்க வேண்டாம் கம்பல்சரி பாஸ். இப்படிப் பட்டவர்கள் +2வில் 45% மார்க் வாங்கினாலே போதும் நகரின் மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் மிகச் சிறந்த கோர்ஸ் கிடைத்து விடும். தனியார் பள்ளிகளில் மூச்சுத் திணறத் திணற படித்து 97% மார்க் வாங்கிய மாணவனுக்கு கிடைக்காது. அரசாங்க உத்தியோகமும் கிடைத்து விடும். அது மட்டுமல்ல, அங்கு வேலை செய்கிறார்களோ இல்லையோ பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப் படும். இப்படி பட்டவர்கள் சன்தோஷமாகத்தானே இருப்பார்கள்.! அதே நேரத்தில் நன்றாக உழைத்து, படித்து, நேர்மையாக வேலை செய்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்களா? அந்த நல்ல குழந்தைகளின் தாய் அதிதியைப் போல அழத்தானே செய்வார்கள்?
//நாம் வளர்க்கப்பட்ட விதம் கேள்வி கேட்காமல் அடி பணிவது// . அது ஒரு நிலை. நமக்கு புரியாது. ஆனால் இந்து மதத்தைப் போல கேள்விகளை ஊக்கப் படுத்தும் வேறு மதம் இருக்கிறதா என்று தெரியவில்லை. உபநிஷத், பிரஸ்னோத்ர ரத்னா மாலிகா,எல்லாமே கேள்வி பதில்கள்தான். ஏன் நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் பகவத் கீதா அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் நடந்த உரையாடல். நம்மில் எதுவும் பிரசங்கம் கிடையாது. நம் புராணங்கள் எல்லாமே சில முனிவர்கள், நாரதரிடமோ, அல்லது வேறு யாரிடமோ கேட்கும் கேள்விகளாகத்தான் துவங்கும்.
ReplyDeleteஉங்கள் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப் பிடித்தாலும் அவற்றுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முயற்சிக்காத காரணத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அதனால்தான் உங்கள் தலைமுறையில் தன்னை பகுத்தறிவுவாதி என்று காட்டிக் கொள்வதில் ஒரு பெருமிதம் இருந்தது. மேலும் மெக்காலே கல்வி முறை நம் முன்னோர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று தவறாக நம் வரலாற்றை திரித்து கற்பித்ததால் நீங்கள் அதை உண்மை என்று நம்பினீர்கள். ஆனால் எங்கள் தலைமுறையில் எங்களுக்கு பதில் சொல்ல ஸ்வாமி சின்மயானந்தா போன்ற பெரியவர்கள் நம்முடைய நம்பிக்கைகள் குறித்து அளித்த விளக்கங்கள் எங்கள் அஞ்ஞானத்தை போக்கின. இன்றோ புத்தக கடைகளில் தொங்கி கொண்டிருக்கும் வாராந்தரி, மாதந்தரி போன்றவைகளில் பாதிக்கு மேல் ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை. தொலை காட்சியிலும் எக்கச்சக்க ஆன்மீக நிகழ்ச்சிகள். காதுள்ளவர் கேட்கக் கடவீர்! தவிர நம்முடைய நம்பிக்கைகள், புனித நீராடுதல், பிதுர் கடன் போன்ற பல விஷயங்கள் உண்மை என்று மேலை நாட்டினர் இன்று நிரூபித்து கொண்டு வருகின்றனர்.(அவர்கள் ஒப்புக் கொண்டால்தானே உங்களை போன்றவர்கள் ஒப்புக் கொள்வீர்கள்..)
கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தி விடும் என்று பயமுறுத்துவார்களாம். நாம் பயமுறுத்துவதோடு நிறுத்திக் கொள்வோம். மற்ற மதங்களில் மாற்று கருத்தை கூறி விட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தலை மறைவு வாழ்க்கைதான் வாழ வேண்டும்.
//கலி முற்றினால் என்ன நடக்கும்? அப்போது கடவுள் குதிரை மேல் வந்து சரி செய்வாரா?// மற்ற யுகங்களில் ஒரு இராவணன், ஒரு கம்சன், ஒரு ஹிரண்யகசிபு என்று இருந்தார்கள், அதனால் அவர்களை வாதம் செய்து விட முடிந்தது.ஆனால் கலி யுகத்தில் அந்த அரக்கர்கள் மனிதர்களின் மனதில் புகுந்து கொண்டு விட்டார்கள், எத்தனை பேரை சம்ஹாரம் செய்ய முடியும்? அதனால் அவர்களின் மனதை, எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று பகவான் சத்திய சாய் பாபா கூறி இருக்கிறார். குதிரை என்பது நம் மதத்தில் ஞானத்தின் அடையாளம். அஞ்ஞான இருள் சூழும் பொழுது அதை அழிக்கும் ஞான சூரியனாக இறைவன் வருவான் என்பதே அதன் பொருள்.
கடைசியாக ஒன்று, இறை என்பது பெரிய விஷயம். அதை ஆன்ம விசாரம் என்பார்கள். நாம் உள் முகமாக திரும்பி, நம்மில் நாம் ஆழ்ந்து கண்டு கொள்ள வேண்டியது. அவரவர் காண்பது, அவரவர்க்கு. இதைத்தான் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பார்கள். நாம் தனியாக முயல்வதை விட ஒரு குருவின் துணையோடு பயணிக்கும் பொழுது சீக்கிரம் பலன் கிட்டும். தேடல் உண்மையாக இருந்தால். பதில் கண்டிப்பாக கிடைக்கும். இன்று வரை பலருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல குரு கிடைத்து உங்களை வழி நடத்த என் குருநாதனை வேண்டுகிறேன்.
ReplyDelete@ பானுமதி வெங்கடேஸ்வரன்
முதலில் உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. இதற்கு நான் மறு மொழியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
காஸ்யப முனிவரின் பல மனைவிகளில் அதிதி மூலம் பிறந்தவர்கள் தேவர்கள் திதி மூலம் பிறந்தவர்கள் அசுரர்கள் என்பது கதைஇந்த தேவா அசுரப் பகையே சக்களத்திச் சண்டையின் விளைவே என்று எண்ணுகிறேன் வேண்டாம் போதும் . நிறையவே சிந்திக்க வேண்டும் மனதை ஒரு க்ளீன் ஸ்லேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி
பானுமதி வெங்கடேஸ்வரன், வாதத்தைத் தவிர்க்கச் சொல்லி எங்கள் ஆன்மிக குரு சொல்வார். ஆகையாலேயே நான் விளக்கமாக மட்டுமே நினைத்துக் கொண்டு சில விஷயங்களைச் சொல்லுவேன். ஆனால் அதுவே வாத, விவாதங்களுக்கு வித்திட்டு விடுகின்றது. :) ஆகவே தான் நான் அதன் பின்னர் யோசித்து விட்டுத் தொடரவில்லை. பிரபஞ்சத் தோற்றத்தின் தத்துவமே காஸ்யபர் பிரஜாபதியாக இருந்து அனைத்தையும் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே அதைப் புரிந்து கொண்டால் தான் காஸ்யபரிடமிருந்து எல்லாமும் வந்ததைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதன் பல மனைவிகளை மணந்து கொண்டு அவர்கள் மூலம் பல பிள்ளைகளைப் பெற்றான் என்று நினைத்துக் கொண்டால் எல்லாமே தவறாகத் தான் தெரியும், புரியும்! இதை விளக்க வார்த்தைகள் இல்லை! :)
ReplyDelete@ ஒருவரது கருத்துக்கு மறுப்பு சொல்லுதலும் தான் நினைத்ததையே நிலை நாட்டுதலும் வரவேற்கப்பட வேண்டியதுதான் ஆனால் சிறிதும் நம்பமுடியாத கருத்துகள் வைக்கப் படும்போது பகுத்தறியும் என் போன்றவர்கள் பாடு திண்டாட்டம்தான் பிரபஞ்சம் பற்றிய போதிய உண்மைகள் தெரியாத போது ஒருவரே அதைத் தோற்றுவித்ததாகக் கூறி அதற்கு மறுப்பு சொன்னால் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சரியா. சில கருத்துகள் காலங்காலமாக நம்பப்பட்டு வருபவைகளில் ஓட்டைகள் இருக்கிறது என்றுதான் கூறு கிறேன் இம்மாதிரிப் பதிவுகள் படிக்கும் போது மாற்றுக் கருத்துகள் இருக்கிறதுஎன்று தெரிவீப்பதேமுக்கிய நோக்கம்
ReplyDelete