ஓணம் வாழ்த்தும் சில கேள்விகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓணம் வாழ்த்தும் சில கேள்விகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 செப்டம்பர், 2016

ஓணம் பண்டிகை ஒரு அவதாரக் கதையிலிருந்து

                    
                            ஓணம் பண்டிகை  ஒரு அவதாரக் கதையிலிருந்து
                          -----------------------------------------------------------------------



பகவத் கீதையில்  ஸ்ரீ கிருஷ்ணர்  அர்ஜுனனிடம் நான்காவது அத்தியாயம் ஞானகர்ம ஸன்யாச யோகம்  எட்டாவது சுலோகத்தில் பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ் க்ருதாம் , தர்ம ஸமஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்கிறார்
(நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8))
கடவுளின் தேசம் என்றறியபடுகின்ற கேரளத்தில்  ஓணம் பண்டிகை  விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது நற்பரிபாலனம் செய்து கொண்டிருந்த  மகாபலிச் சக்ரவத்தியை  அழிப்பதற்காக வாமனனாக அவதரித்து அவனை பாதாளத்தில் மிதித்துப் புதைத்தார்  அந்த நாளில் தன் பிரஜைகளைப் பார்க்க மகாபலி வருவதாக ஐதீகம் தங்கள் அரசன் தங்களைப் பார்க்க வரும்போது மக்கள் மகிழ்ச்சியைக் காண்பிக்க கொண்டாடப்படும்  பண்டிகையே ஓணம் கேரள மக்களுக்கு  எந்தன்   ஓணாஷம்சகள் .
மகாபலிச் சக்கரவர்த்தி நல்லாட்சி செய்துவந்த ஒரு அரசன்  அவனது மக்களும் சந்தோஷமாகவே இருந்தனர்  அந்த அரசனை அழித்து நல்லோரைக் காப்பதற்காக  எடுத்த அவதாரமே வாமன அவதாரம் எனப்படுகிறது
இந்த சமயம் வாமன அவதாரக் கதையையும்  தெரிந்து கொளல் அவசியம்

        ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
 
          
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
          
அசுவமேத  யாகம் நடத்தி, யார்
          
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
          
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

          
தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
          
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
          
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
          
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
          
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
          
அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
          
குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

           
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
           
அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
           
துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
           
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

          
கைகூப்பித் தலை வணங்கி
          
சொன்ன சொல் தவற மாட்டேன்
          
தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
          
வைக்க , யான் பெருமை கொள்வேன்
          
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
          
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
         
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
 வேண்டுவதைத் தருவேன்  என்பது ஆணவமென்பதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது  இந்த உலகில் கரந்தொடுக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருக்க வேண்டும்
தர்ம ஸமஸ்தாப நார்த்தாய என்பதெல்லாம் வெறும் கதையே இன்னும்  எத்தனை நாட்கள் எவ்வளவுபேர் இம்மாதிரிக் கதைகளை  நம்புவார்கள்  என்பது பெரிய கேள்விக்குறி 

வாமனாவதாரம் ( படம் இணையத்திலிருந்து)
என் மகன் எனக்குச் சொன்ன ஒரு நிகழ்வு........!?
-------------------------------------------------------------
“நான்துபாயில் இருந்தபோது என் அரபி நண்பர் ஒருவரை ஓணம் சத்தியைக்கு அழைத்தேன் வெஜிடேரியனா நான் வெஜிடேரியனா என்று கேட்டார்  வெஜிடேரியன் என்றேன்  நண்பரும் என் வீட்டுக்கு வந்தார் உணவு மேசையில் ஒரு தலை வாழை போட்டு  அருகில் ஒரு டம்ளர் நீரையும் வைத்து உணவுகளைக் கொண்டு வர உள்ளே போனேன்  உணவை எடுத்து வரும்போது நண்பர் அந்த வாழை இலை முழுவதையும் தின்று முடித்து நீரையும் பருகி விட்டார் என்னைக் கண்டதும் “ மாஷா அல்லா என்  வாழ்நாளில் இத்தனை பெரிய சாலாட் இலையைத் தின்றதில்லை” என்றாரே பார்க்கலாம் 
( இது எப்படி இருக்கு ?) 



-