நவராத்திரி தெய்வங்கள்
----------------------------------
சமயபுரம் மாரியம்மன் தஞ்சாவூர் ஓவியம் |
அணு
அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும்
சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை
என்ன சொல்லி அழைப்பேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகன் என்பேனா கண்ணன்என்பேனா- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும்
கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா,
அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும்
தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை
மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற,
அனைத்திலும் இருப்பவளே,
எனை
ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
( அண்மையில் நவராத்திரி பதிவுகளாக திருமதி கீதா சாம்பசிவம் நவராத்திரியின் போது வழிபடும் தேவியர்களின் பெயர்களை ஒவ்வோரு நாளுக்கொன்றாகக் கூறி எழுதி வருகிறார் . எனக்கு ஒரே கன்ஃப்யூஷன் நான் ஒருபாடல் எழுத முயற்சித்தேன் . விளைவு இப்பதிவு )
மூன்றாண்டுகளுக்கு முந்தைய எங்கள் வீட்டுக் கொலு ஒரு விண்ணப்பம் பிரதிலிபி நடத்தும் ஞாபகம் வருதே என்னும் போட்டியில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் அதில் ஒரு விதி. பரிசுக்காக வாசகர்களே படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே இதன் மூலம் என் தள வாசகர்களை கீழே கொடுத்திிருக்கும் சுட்டிக்குச் சென்று நான் எழுதி இருக்கும் “அரக்கோண நாட்கள் என்னும் படைப்பினை வாசித்துக் கருத்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன் போட்டிப் படைப்பு இந்தச் சுட்டியில் படைப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள் மிக்க நன்றி |
அனைத்தும் ஒரே பரம்பொருள் என்பதைச் சுட்டும் கவிதைக்கு நன்றி.
ReplyDeleteநீங்க கீழே கொடுத்திருக்கும் வேண்டுகோள் சரியாகப் படிக்க முடியலை. என்னவென்று பார்க்கவும்.
//ஒரு விண்ணப்பம் பிரதிலிபி நடத்தும் ஞாபகம் வருதே என்னும் போட்டியில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் அதில் ஒரு விதி. பரிசுக்காக வாசகர்களே படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே இதன் மூலம் என் தள வாசகர்களை கீழே கொடுத்திிருக்கும் சுட்டிக்குச் சென்று நான் எழுதி இருக்கும் “அரக்கோண நாட்கள் என்னும் படைப்பினை வாசித்துக் கருத்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்
போட்டிப் படைப்பு இந்தச் சுட்டியில் படைப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள் மிக்க நன்றி //
இது தான் நீங்க கேட்டிருப்பது அல்லவா? அதைக் கொஞ்சம் சரி பாருங்கள். நன்றி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ரசித்தேன். தாரமிருக்க வேறு தெய்வம் தேவையில்லை.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteதங்களின் பாடல் பாடுவதற்கு ஏற்ற தாளக்கட்டுடன் உள்ளது.
ரசித்தேன்.
நன்றி.
அருமை.
ReplyDeleteஅங்கு உள்நுழைய நிறைய விதிமுறைகள் சொல்கிறது ப்ரதிலிபி. சாதாரணமாக பின்னூட்டம் இடமுடியாது போலும்! லாகின் செய்ய வேண்டும் போல!
ReplyDeleteஶ்ரீராம், ஆமாம், உறுப்பினராக இருந்தால் தான் கருத்துச் சொல்ல இயலும். :)
ReplyDelete
ReplyDelete//ஶ்ரீராம், ஆமாம், உறுப்பினராக இருந்தால் தான் கருத்துச் சொல்ல இயலும். :) //
பேஜார்! நான் வர்லை இந்த ஆட்டத்துக்கு! ஆனால் கீதாக்கா.. நீங்கள் சுட்டி தந்த ஒரு கதைக்கு நான் கருத்திட்டிருந்தேனே... அப்போ இப்டி எல்லாம் கேக்கலையே...
அறிவாய் அனைத்திலும் இருப்பவளே,
ReplyDeleteஎனை ஈன்ற தாயின் தாயே - எல்லாம் நீயே!..
கவிதை சிறப்பு..
நவராத்திரி மங்கலம் அனைவருக்கும் ஆகட்டும்!..
வாழ்க நலம்!..
ReplyDelete@கீதா சாம்பசிவம்
வருகைக்குநன்றி மேம் கொடுத்துள்ள சுட்டிக்குச் சென்றால் படைப்புகளை வாசிக்கலாம் பின் அதற்கான கருத்துகளையும் பகிரலாம்சுட்டி எனக்குத் திறக்கிறதே
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
தாய் தெய்வம் என்றால் தாரமும் தெய்வம்தானே வந்து ரசித்ததற்கு நன்றி சார்
ReplyDelete@ஊமைக்கனவுகள்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
ReplyDelete@ஸ்ரீராம்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ
ReplyDelete@ ஸ்ரீ ராம்
போட்டிப்பதிவுகளை வாசிக்கலாமே விமரிசிக்கவும் செய்யலாம் பொதுவாக எந்தப் பதிவுக்கும் உள் நுழைய லாக் இன் செய்கிறோமே விதி முறைகள் பற்றி அவர்கள் எழுதி இருப்பதுதான் தெரியும் கடிதத்தில் இருக்கிறதேவாசகர்களின் தேர்வு என்று இருப்பதால்தான் அந்த விண்ணப்பம் வைத்தேன்
ReplyDelete@கீதா சாம்பசிவம்
வாசிக்கக் கூட உறுப்பினராக இருக்கவேண்டுமா. நான் எதிலும் உறுப்பினர் இல்லையே போட்டி பற்றிய செய்தி இருந்தது எழுதி இருக்கிறேன்
@ஸ்ரீராம்
ReplyDeleteஎனக்கு ஒன்றும் புரியவில்லை. பிரதிலிபியின் கடிதம் படித்தீர்களா
@துரை செல்வராஜு
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
ReplyDeleteஇயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லி அழைப்பேன் – (ஜீ.எம்.பி)
அருமையாகச் சொன்னீர்கள். இதுவே இறைத் தத்துவத்தின் முடிவு.
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
இத்தனை எளிதான தத்துவதுக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்கள் கதைகள். எளிதில் புரிய வைக்கத் தேர்ந்த கதைகளின் உட்கரு விளங்காமல் சுற்றிச் சுற்றி வரும் மக்களைப் பார்க்கும் போது சில நேரங்களில் வேதனை எழுகிறது வருகைக்கு நன்றி ஐயா
பக்தி பாடல்களும் நன்றாகத்தான் எழுதுகின்றீர்கள் ஐயா வாழ்த்துகள்
ReplyDeleteசுட்டிக்கு செல்கிறேன் நன்றி
@கில்லர் ஜி
ReplyDeleteபக்திப்பாடல்கள் எழுதுவதற்கு எளிது ஜி வருகைக்கு நன்றி
சமயபுரம் மாரி அழகு....
ReplyDeleteகவிதை நன்று.
பிரதிலிபி போட்டி குறித்த தங்கள் தகவலில் எழுத்துரு சரியாக அமையவில்லை....
சரி பாருங்கள் ஐயா...
பிரதிலிபியில் ஓட்டு போட்டு விடுகிறேன்...
@ பரிவை சேகுமார்
ReplyDeleteஎன் தளத்தில் எழுத்துருக்கள் சரியாகத்தானே வருகிறது பிரதிலிபிக்குசெல்வதாகக் கூறியதற்கு நன்றி சார்
அருமை சார்....உங்கள் படங்களும்...
ReplyDeleteபிரத்திலிபி உள் நுழைய கணக்கு கேட்கும். நம் ஜி மெயில் அல்லது முகநூல் கணக்கு வழி....ஆனால் இதற்கென்று.கடவுச்சொல் தனியாக வைத்துக்கொள்ளலாம்...ஏற்கனவே நாங்கள் பரிவை குமாருக்கு கருத்திடும் பொது தொடங்கியது...எனவே உங்களுக்கும் வாசித்துக் கருத்திட்டோம்..சார்.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதை அழகாக சொல்லும் கவிதை
ReplyDelete
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
மிக்க நன்றி சார் பதிவர்களுக்கு சில தயக்கங்கள் ஏனோ தெரியவில்லை.
ReplyDelete@ சிவகுமாரன்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சிவகுமாரா.
கவிதை வேந்தர் திரு ஜோசப் விஜூ அவர்களே பாராட்டிய பிறகு நான் என்ன சொல்ல? எப்படி அழைப்பது என்று கேட்டுவிட்டு இறுதியில் எல்லாம் நீயே என்று முடித்திருப்பது அருமை. கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDelete‘பிரதிலிபி’ நடத்தும் ‘ஞாபகம் வருதே’ என்னும் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் தங்களின் “அரக்கோண நாட்கள்” என்ற படைப்பை படித்து கருத்திட தாங்கள் தந்த அந்த சுட்டிக்கு செல்ல சொடுக்கியபோது படைப்புகள் வரவில்லை. திரும்பவும் முயற்சித்து எனது கருத்தை வெளியிடுவேன்.
ReplyDelete@ வே.நடனசபாபதி
அவர் கவிதை வேந்தர் ஆனால் நான் எழுதியது கவிதையில் சேருமா/ சுட்டிக்குச் சென்றால் பதிவுகள் தெரிகிறதே ஆனால் கருத்திட சில சங்கடங்கள் இருக்கிறது போல் தெரிகிறது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா
ஐயா! கருத்திட எந்த சங்கடமும் இல்லை. ஏனெனில் நீங்கள் எந்தவிதமான விமரிசனத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்பது எனக்குத் தெரியும்.உண்மையில் அந்த சுட்டியை சொடுக்கியதில் சரியாகத் தெரியவில்லை. நாளை திரும்பவும் முயற்சிப்பேன். எனது கருத்தை அவசியம் தெரிவிப்பேன்.
ReplyDelete
ReplyDelete@ வே நடனசபாபதி
ஐயா சங்கடங்கள் என்று நான் சொன்னதுகருத்திட உள் நுழைவதில்தான் என்னும் அர்த்தத்தில் ஸ்ரீராம் மற்றும் கீதா சாம்பசிவம் எழுதியதைத்தான் உங்களால் கருத்திட முடிந்தால் மகிழ்வேன் நன்றி
ரொம்பவும் இயல்பாக உங்களுக்கு இப்பா அமைந்தது. உருகி நீர் தளும்பும் அளவு சிரத்தையும் பக்தியும் இதனுள் ஆழ புதைந்திருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.
ReplyDeleteயாதுமானவளுக்கு என் அனைத்தும் சமர்ப்பணம்
ReplyDelete@ சக்திபிரபா
ஆயிரம் நாமங்கள் சொல்லி என்னால் வழிபட முடியவில்லை. அதன் விளைவே இக்கவிதை. வந்து ரசித்ததற்கு நன்றி மேம்