Sunday, October 2, 2016

காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்


                                                            காந்திஜெயந்தி ஸ்பெஷல்
                                                            ------------------------------------





சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்தியவரின் ஒரு பிரத்தியேக குணம். எனக்குத் தெரிந்து  கீழை நாட்டவர் சுயசரிதை எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதுபவர் மேலை நாட்டினரின் வழக்கங்களால் ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். நீ என்னதான் எழுதுவாய்.?இன்று நீ கடைப்பிடிக்கும் கொள்கைகளில் இருந்து நாளை மாறுபட்டாலோ அல்லது மாற்றினாலோ  உன்னை பின் பற்றும் மனிதன் உன் கொள்கை மாற்றத்தாலோ, மாறுபாட்டாலோ குழப்பமடைய மாட்டானா.?

இந்த மாதிரியான எண்ணம் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால் நான் எழுt முற்பட்டது என் சுய சரிதை அல்ல..நான் என் வாழ்வில் மேற்கொண்டுள்ள சத்தியப் பரிசோதனைகளின் தொகுப்பாய்த்தான் அது இருக்கும். இந்த மாதிரியான சத்தியப் பரிசோதனைகள் வாழ்வு முழுவதும் , இருப்பதால் அதன் தொகுப்பே ஒரு சுய சரிதையாகிவிட வாய்ப்புள்ளது. அதுவே நான் எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் விரவி இருந்தாலும் நான் கவலைப் படமாட்டேன். இந்த சோதனைகளின் விவரங்கள் இதை வாசிப்பவருக்கு உதவாமல் போகாது என்று நினைப்பதில் பெருமைப் படுகிறேன்.அரசியல் துறையில் என் பரிசோதனைகள்  இந்தியாவில் மட்டுமல்ல நாகரீகநாடுகளிலும் ஓரளவுக்குத் தெரியப் பட்டதே.அதன் மதிப்பு பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.எனக்கு “மஹாத்மாஎன்ற பட்டம் பெற்றுத் தந்தது பற்றியும் நினைப்பதில்லை.ஆனால் சில சமயங்களில் வருத்தப் பட வைத்திருக்கிறது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த ஆன்மீகப் பரிசோதனைகளையும், அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் சக்தி எப்படி அரசியல் துறையிலும் உதவியாய் இருக்கிறது என்பது பற்றியும் எழுத விழைகிறேன். இம்மாதிரியான பரிசோதனைகள் உண்மையில் ஆன்மீகமாக இருந்தால் என்னை நானே புகழ்வது சரியாயிருக்காது. சிந்தித்துப் பார்க்கும் போது அது என் பணிவுக்குத்தான்  பலம் சேர்க்க வேண்டும்.கடந்து போன நிகழ்வுகளில் மனம் செல்லும்போது என் தகுதிகுறைபாடுகளே வெகுவாய்த்
தெரிகிறது
மேலே காண்பது காந்திஜியின் சுய சரிதையின்  முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருந்தது இனி அவர் தான்  மேற்கொண்டிருந்த  பிரம்ம சரியம் பற்றி எழுதியது  இந்த பிரம்மசரிய விரதமே பிற்காலத்தில் அவர் தேர்ந்தெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின்  வெற்றிக்கு அடிகோலியது என்றும் நம்பினார்  அவரே எழுதி இருந்த பிரம்ம சரிய விரதம்  பற்றிய சில பகுதிகள் பதிவின் நீளம் சற்றே அதிகமானாலும்  பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்
  இவ் வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப்
பற்றி நான்     தீவிரமாக நினைக்கத்      தொடங்கிய கட்டத்திற்கு
இப்பொழுது நாம்     வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில்
இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என்
மனைவியிடம்    உண்மையோடு     நடந்துகொள்ளுவது  என்பது,
சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின்   ஒரு பகுதியாயிற்று.
ஆனால்,    என் மனைவி    சம்பந்தமாகக்கூட  பிரம்மச்சரியத்தை
அனுசரிக்க      வேண்டியது     முக்கியம்          என்பதைத்
தென்னாப்பிரிக்காவிலேயே    நான்   உணர ஆரம்பித்தேன். இந்த
வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது
நூல்     என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியாது. ராய்ச்சந்திர பாயைக் குறித்துமுன்பே எழுதி இருக்கிறேன் அவருடைய நட்பே இதில்    முக்கியமான அம்சமாக இருந்திருக்கக்கூடும் என்பது
என் ஞாபகம். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன்,  தமது கணவரிடம் வைத்திருந்த
அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திரபாயிடம்
சொல்லிக் கொண்டிருந்தேன்.       ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக்
கூட்டத்தில் இருக்கும்போது கூட,    அவருக்குத் தம் கையினாலேயே
தேயிலைப் பானம்     தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர்
மனைவி வற்புறுத்தி வந்தார்    என்று நான் எங்கோ படித்திருந்தேன்.
புகழ்பெற்ற இத் தம்பதிகளின்    ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில்
இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம்.       இதைக் கவிஞரிடம் நான்
கூறியதோடு, சாதாரணமாக   சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும்
புகழ்ந்து பேசினேன்.      அதன் பேரில் ராய்ச்சந்திரபாய் என்னைப்
பின்வருமாறு கேட்டார்: ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன்,       மனைவி என்ற
முறையில் தம்           கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ
கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு     எதுவானாலும் அதைப்
பற்றிய சிந்தனையின்றி      ஸ்ரீமதி       கிளாட்ஸ்டன் அவருக்குப்
பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப்
பெரிது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய
சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ  வைத்துக் கொள்ளுவோம்.
இதே கவனிப்போடு அப்போதும்           தொண்டு செய்திருந்தால்
அப்பொழுது நீங்கள் அந்தச்  சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்?
இத்தகைய  அன்புள்ள  சகோதரிகளையும்   வேலைக்காரர்களையும்
பற்றி    நாம் கேள்விப்பட்டதில்லையா?   அதே    அன்பு நிறைந்த
பக்தியை



ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுவோம். அப்பொழுது    ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில்
திருப்தியடைவதைப் போல்       திருப்தியடைவீர்களா? நான் கூறிய
இக் கருத்தைக்கொண்டு, விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

     ராய்ச்சந்திரபாயும் விவாகம் ஆனவரே.      அவர் கூறியவை,
கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின
என்பது என் நினைவு. ஆனால், அவர்  கூறியவை என் உள்ளத்தில்
மிகவும் ஆழப்பதிந்துவிட்டன.     கணவனிடம் மனைவி கொள்ளும்
பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி,   ஆயிரம் மடங்கு
போற்றற்கு உரியது       என்று நான் எண்ணினேன். கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே        பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது.
ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி  கொள்ளுவதில் ஆச்சரியம்
எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால்,
எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான
ஒரு   பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது.
கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள விளங்கலாயிற்று
      அப்படியானால், எனக்கும்        என் மனைவிக்கும் இடையே
இருக்கும் உறவு, எப்படி இருக்கவேண்டும்?’ இவ்வாறு என்னை நானே
கேட்டுக்கொண்டேன். அவளிடம்   உண்மையோடு நடந்துகொள்ளுவது
என்பதில், என்னுடைய காம இச்சைக்கு     அவளைக் கருவியாக்கிக்
கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா?    காம இச்சைக்கு நான்
அடிமையாக இருக்கும் வரையில், மனைவியிடம்   நான் உண்மையான
அன்போடு இருக்கிறேன்          என்பதற்கு மதிப்பே இல்லை. என்
மனைவியைப் பொறுத்தவரை, நேர்மையாகச்   சொல்லுவதானால், காம
இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை
என்றே      கூறவேண்டும். ஆகையால்,   எனக்குத் திடமான உறுதி
மாத்திரம்  இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு
மிக எளிதான காரியம். எனக்கு   மன உறுதி இல்லாததுதான் அல்லது
காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.
.      இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி  விழிப்படைந்து விட்டபிறகும்
கூட,         இரு தடவைகளில்  நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத்
தூண்டுதலாக       இருந்த நோக்கம்,      உயர்வானதாக இல்லாது
போனதனாலேயே நான் தவறினேன்.மேற்கொண்டு    குழந்தைகளைப்
பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக
இருந்தது.      இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை
முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய
அத்தியாயத்தில் டாக்டர்  அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரச்சாரத்தை
குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால்  என் மனம்
செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில்     சிறிதளவு சென்றிருந்தாலும்,
அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை
உடனே மாற்றி விட்டது.      ‘வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள்
முயற்சியே, அதாவது புலன்       அடக்கமே சிறந்ததுஎன்று அவர்
கூறியது,      என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு,  நாளாவட்டத்தில்
மனத்தை ஆட்கொண்டும் விட்டது.      ஆகையால், மேற்கொண்டும்
குழந்தைகள் வேண்டும் என்ற    ஆசை எனக்கு இல்லை என்பதைக்
கண்டதும், புலனடக்கத்திற்கான    முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித்
தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம்.    நாளெல்லாம் நன்றாக
உழைத்துக் களைத்துப் போன பிறகே  படுக்கைக்குப் போவது என்று
தீர்மானித்தேன்.  இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன் தரவில்லை.
ஆனால், வெற்றி பெறாதுபோன இத்தகைய எல்லா     முயற்சிகளின்
ஒருமித்த பயனே, முடிவான        தீர்மானமாக உருவாகியது என்று,
அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது   எண்ணிப் பார்க்கும்போது உணர்கிறேன்
  இப்படியே காலம் கடந்து வந்து,    1906, ஆம் ஆண்டில்தான்
இறுதியான  தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம்
அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை.     அப்போராட்டம் வரும்
என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை.  போயர் யுத்தத்தைத்
தொடர்ந்து, நேட்டால்,         ‘ஜூலுக் கலகம்ஆரம்பம் ஆயிற்று.
அப்பொழுதுநான் ஜோகன்னஸ் பர்க்கில்    வக்கீல் தொழில் நடத்திக்
கொண்டிருந்தேன்.       அச்சமயம்     எனது சேவையைத் தேசிய
சர்க்காருக்கு அளிக்க  வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை
ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில்
கவனிப்போம். ஆனால், அவ்வேலை, புலன்      அடக்கத் துறையில்
என்னை       வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல
இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து  ஆலோசித்தேன்.
பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும்    குழந்தை வளர்ப்பும்
பொது          ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு
உறுதியாகப்பட்டது.        கலகத்தின்போது   சேவை செய்வதற்குச்
சௌகரியமாக இருப்பதற்காக        ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என்
குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான்
ஒப்புக்கொண்ட         ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு
வேண்டிய வசதிகளையெல்லாம்   நான் செய்து வைத்திருந்த வீட்டை
காலி     செய்துவிட வேண்டி வந்தது.         என் மனைவியையும்
குழந்தைகளையும் போனிக்ஸூக்குக்     கொண்டுபோய் விட்டுவிட்டு,
நேட்டால் படையுடன்     சேர்க்கப்பட்டிருந்த    இந்திய வைத்தியப்
படைக்குத்       தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன்
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அணி வகுத்துச் செல்ல நேர்ந்த
அச் சமயத்தில்தான், முடிவான எண்ணம் என் மனத்தில் பளிச்சென்று
உதயமாயிற்று. அதாவது,     சமூகத்தின் சேவைக்கே என்னை இந்த
வகையில் அர்ப்பணம்     செய்து கொள்ள விரும்பினால், பிள்ளைப்
பேற்றில்   அவாவையும் பொருள் ஆசையும் அறவே ஒழித்துவிட்டுக்
குடும்பக்     கவலையினின்றும்        நீங்கியதான வானப் பிரஸ்த
வாழ்க்கையை  நான்     மேற்கொள்ளவேண்டும் என்ற   எண்ணம்
உதயமாயிற்று.

     
அக்கலகம்சம்பந்தமாக எனக்கு ஆறு வார காலமே வேலை
இருந்தது. ஆனால், இந்தக் குறுகிய காலம்,  என் வாழ்க்கையில் மிக
முக்கியமானதாயிற்று.        விரதங்களின்   முக்கியத்துவம், முன்பு
இருந்ததைவிட எனக்கு இன்னும்     அதிகத் தெளிவாக விளங்கியது.
ஒரு விரதம், உண்மையான         சுதந்திரத்தின் கதவை அடைத்து
விடுவதற்குப்     பதிலாக அக் கதவைத் திறந்து விடுகிறது என்பதை
உணர்ந்தேன். போதிய   அளவு உறுதி என்னிடம் இதற்கு முன்னால்
இல்லை; என்னிடத்திலேயே எனக்கு நம்பிக்கை   இல்லை. கடவுளின்
அருளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.   என் மனம், சந்தேகமாகிய
அலை பொங்கும்     கடலில்     அங்கும் இங்கும்  அலைப்புண்டு,
அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதனாலேயே அச்சமயம்  வரையில்
நான் வெற்றியடையவில்லை. ஒரு         விரதத்தை  மேற்கொள்ள
மறுப்பதனால் மனிதன் ஆசை வலைக்கு இழுக்கப்பட்டு  விடுகிறான்.
ஒரு விரதத்தினால் கட்டுண்டுவிடுவது, நெறியற்ற வாழ்க்கையிலிருந்து
உண்மையான ஏகபத்தினி மண வாழ்வுக்குச் செல்வதைப்  போன்றது
என்பதை அறிந்துகொண்டேன்.        ‘முயற்சி செய்வதில் எனக்கு
நம்பிக்கை உண்டு. அதனால்    விரதங்களினால் என்னைக்  கட்டுப்
படுத்திக்கொள்ள விரும்பவில்லைஎன்பது     பலவீனத்தின் புத்திப்
போக்கு எதை விலக்க வேண்டும் என்று இருக்கிறோமோ  அதனிடம்
உள்ளுக்குள்          ஆசை இருந்து வருகிறது என்பதையே  இது
வெளிப்படுத்துகிறது. இல்லையானால், முடிவான தீர்மானத்திற்கு வந்து
விடுவதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? பாம்பு என்னைக்  கடித்து
விடும் என்பது     எனக்குத் தெரியும்.  அதனிடமிருந்து ஓடிவிடுவது
என்று விரதம் கொள்ளுகிறேன்.     அதனிடமிருந்து ஓடிவிட வெறும்
முயற்சி செய்வதோடு நான் இருந்துவிடுவதில்லை. வெறும் முயற்சிதான்
என்றால், பாம்பு என்னைக் கட்டாயம் கடித்துவிடும் என்ற நிச்சயமான
உண்மையை    அறியாமல்     இருக்கிறேன் என்பதுதான்  பொருள்.
ஆகையால் வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து
விடுவது, திட்டமான செயலின்          அவசியத்தை நான் இன்னும்
உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
   ‘வருங்காலத்தில்     என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று
வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில்  என்னை விரதத்தினால்
எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது?’       இத்தகைய சந்தேகமே
நம்மை    அடிக்கடி தடுத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக
வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும்    ஏற்படவில்லை
என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது.   இதனாலேயே, ‘ஒன்றில்
வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது’       என்று நிஷ்குலானந்தர்
பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ  அங்கே துறவின்
விரதம் இயல்பான, தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.


     
தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில்
நான் பிரம்மச்சரிய விரதத்தை    மேற்கொண்டேன். இது சம்பந்தமாக
எனக்கு இருந்த        எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என்
மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை.    விரதத்தை மேற்கொண்ட
சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு
எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால்,   முடிவான தீர்மானத்திற்கு
வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது.    அதற்கு வேண்டிய

மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது
எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப்
போக்கிக் கொண்டுவிடுவது      என்பது      விசித்திரமானதாகவே
அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின்   அருள் பலத்தில்
பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.

     
அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும்    இருபது ஆண்டு
காலத்தை நான்    இப்பொழுது   எண்ணிப் பார்க்கும்போது எனக்கு
அளவற்ற       ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன்
அடக்கத்தில் ஏறக்குறைய    வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும்
பயிற்சி 1901-ஆம்      ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால்,
விரதத்தை      அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும்
ஆனந்தத்தையும்         1906-ஆம்   ஆண்டிற்கு முன்னால் நான்
அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால்       எந்தச்
சமயத்திலும் ஆசைக்கு   அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில்
நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ    எந்த ஆசையினின்றும்
என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது.
பிரம்மச்சரியத்தின் அபார சக்தி,   நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி
வந்தது.     நான் போனிக்ஸில் இருந்தபோது,       இவ்விரதத்தை
மேற்கொண்டேன்.    வைத்தியப்          படைவேலை நீங்கியதும்
போனிக்ஸு க்குப்     போனேன். பிறகு     ஜோகன்னஸ்பர்க்கிற்குத்
திரும்பிவிட வேண்டியதாயிற்று.        நான் அங்கே திரும்பிய ஒரு
மாதத்திற்கெல்லாம்     சத்தியாகிரகப்            போராட்டத்திற்கு
அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத்     தெரியாமலே
என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல்
இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச்  செய்யப்பட்ட
திட்டம் அன்று நான் விரும்பாமலே அது தானாக வந்தது.  ஆனால்,
என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய்
விட்டன என்பதைக்   காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக
இருந்து வந்த வீட்டுச்    செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன்.
பிரம்மச்சரிய விரதத்தை  மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல்
போனிக்ஸு க்குச் சென்றேன்.



 

34 comments:

  1. பொறுமையாக தட்டச்சி இருப்பதற்குப் பாராட்டுகள்.

    37 வயதில் பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கத் தொடங்குவது அசுர சாதனைதான். என்னதான் மனைவியைக் கலந்தாலோசித்து இருந்தாலும், மனைவி கணவனுக்காக வலுக்கட்டாயமாக இதைக் கடைப்பிடிக்காத தொடங்கி இருக்கலாமோ! ஏனெனில் இது இவரின் ஐடியா, கொள்கை.

    ReplyDelete
  2. நீங்கள் தந்திருக்கும் மகாத்மா காந்தியின் சுயசரித மொழிபெயர்ப்பு யாருடையது? போனிக்ஸ், போனிக்ஸ் என்று சொல்லிக் குழப்புகிறார் வாசகர்களை. அது `ஃபீனிக்ஸ்`. தென்னாப்பிக்காவின் டர்பன் மாநகரின் வடமேற்கில் உள்ள இந்திய குடியிருப்புப் பகுதி (township).

    ReplyDelete
  3. அருமையான தகவல்
    நினைவில் உருளும் மகாத்தமா காந்தி

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா விரிவான விடயங்கள் தங்களது பிரமிப்பான தட்டச்சு முயற்சிக்கு வாழ்த்துகள்

    காந்திஜி திட்டமிட்டே 37வது வயதில் பிரமச்சர்யத்தை தொடங்கி இருக்கின்றார் இருப்பினும் அவரது மனைவிக்கு இது துரோகம் செய்து விட்டாரோ என்றே மனதில் சிறிதளவு தோன்றுகின்றது.

    திட்டமிடாத காலச்சூழல் எனக்கு 31வது வயதில் பிரமச்சர்யம் தொடங்கி வாழ்க்கையில் பல பிரச்சினைகளால், எனது செல்வங்களை மீட்டெடுக்கும் போராட்டங்களால் எந்த சிந்தனையும் வராமல் வருடங்கள் ஓடி விட்டது இதற்கு சாட்சி இறைவன் மட்டுமே... நிச்சயமாக இறைவன் சாட்சி சொல்ல வரப்போவதில்லை, எனது சாட்சி செல்லாது.

    ReplyDelete
  5. முழுவதும் படிக்க முடியலை! இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  6. வெள்ளையனே வெளியேறு என்று சொன்னதில் அர்த்தம் உள்ளது ,நியாயம் உள்ளது .கல்யாணம் செய்து கொண்டு பிரம்மச்சரியம் கடைப் பிடித்தது நியாயமாக தெரியவில்லை :)

    ReplyDelete
  7. காந்தியின் இந்த கொள்கையை விசித்திரமானதாகவே கருதுவர். கணவன் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காலத்தில் இருந்தது காந்தியின் அதிர்ஷ்டம்.
    காந்தி போன்றவர்கள் சராசரி வாழ்கைக்கு உகந்தவர்கள் அல்ல. அதனால்தான் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ள முடிந்ததது அவரதுமுடிவுகள் சொந்த நலன் கருதி அமைந்ததில்லை. அவரது குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாகி இருக்கக் கூடும்

    ReplyDelete
  8. தேசத்தின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர் - மகாத்மா..

    ஆனாலும் - கஸ்தூரிபாய் அவர்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது..

    ReplyDelete
  9. இதில் காந்தியை விட கஸ்தூரிபாய் உயர்ந்து நிற்கிறார். காந்தி எழுதிவிட்டார் தன் சுய சரிதையை. அவர் வித்தியாசமான மனிதர் தேச நலனிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எல்லாம் சரி கஸ்தூரிபாய் அவர்களின் மன நிலை.அவர் அதைப் புத்தகமாகத் தந்திருந்தால்....காந்தியை விட கஸ்தூரிபாய் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்!!!

    ReplyDelete
  10. // தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில்
    நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக
    எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என்
    மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட
    சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு
    எவ்வித ஆட்சேபமும் இல்லை.//

    எனக்கென்னவோ காந்தி அவர்கள் ஒரு சர்வாதிகாரி போல் இந்த விஷயத்தில் நடந்துகொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் ஒரு முடிவை தன்னிச்சையாய் எடுத்துவிட்டு பின்பு அவரது மனைவியிடம் ஆலோசித்தது சரியல்ல. அவரது மனைவியும் ஆசாபாசங்கள் கொண்ட ஒரு சாதாரண பெண்மணிதானே. அவரைக் கேட்காமல் முடிவெடுத்து விட்டு பின்னர் ‘கலந்து ஆலோசித்தது’ வெறும் சம்பிரதாயம் என் கருத்து.

    காந்தி பிறந்த நாளன்று அவரது சுயசரிதையின் (ஒரு பகுதியின்) தமிழாக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  11. @ ஸ்ரீராம்
    காந்தியின் சுயசரிதையில் அவர் கூறி இருந்ததுதான் எழுதப்பட்டிருக்கிறது அவர் வாழ்ந்த காலம் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறதுஇந்தக்கால சூழ்நிலையில் சிந்தித்துப் பார்த்தால் அவர்ப் ஏதோ தனிச்சையாகச் செயல்பட்டிருப்பது போல் தோன்றும் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  12. @ ஏகாந்தன் அவரது சுயசரிதையில் ஆங்கிலத்தில் PHOENIX என்று எழுதி இருப்பது அப்படியே உச்சரிக்கப் பட்டிருக்கிறது ஃபோனிக்ஸை ஃபினிக்ஸ் என்று உச்சரிக்க வேண்டும் என்பது தெரியாமல் எழுதப்பட்டிருக்கிறது இதில் குழப்பத்துக்கு ஏதுமில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  13. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    இன்றாவது காந்தியை நினைவு கொள்வோம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ கில்லர்ஜி
    பிரம்ம சரியம் உடலளவு மட்டுமல்லாமல் மனதளவிலும் இருக்க வேண்டும் அதை காந்திஜி தெளிவாக்குகிறார். வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  15. @ கீதா சாம்பசிவம்
    பதிவு சற்று நீளம்தான் அதைக் குறிப்பிட்டு பொறுமையாகப் படிக்க வேண்டி இருந்தேன் பிறகு அவரவர் சௌகரியம்

    ReplyDelete
  16. @ பகவான் ஜி
    காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் இக்காலகட்டத்தில் சரி தவறு சொல்வது எனக்குப் புரியாதது. பிரம்மசரியத்துக்கான வருகைக்கு நன்றி காரணங்களை முதலில் அவர் கடைப்பிடிக்க நினைத்ததே இன்னும் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கத்தான் ஆனால் அது எப்படி ஒரு குறிக்கோளாக மாறியது என்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  17. @ டி என் முரளிதரன்
    காந்தி அவரது குடும்ப்பத்தினர்களின் அதிருப்திக்கு ஆளாகியும் இருக்கிறார் பொது வாழ்க்கைக்கு இந்த விரதம் துணை போயிற்று என்றும் கூறி இருக்கிறார் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  18. @ துரை செல்வராஜு
    காந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது பரம ஹம்சருக்கு ஒரு சாரதா தேவி போல் காந்திக்கு ஒரு கஸ்தூர்பா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ துளசிதான் தில்லையகத்து
    எல்லோராலும் உண்மைகளை மறைக்காமல் சுய சரிதை எழுதிவிட முடியாது கஸ்தூர்பா சிறந்தவர்தான் ஒப்பீடு செய்ய முடியவில்லை வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. வழக்கம் போல அடுத்த காந்தி ஜெயந்திக்கும் இதையேத் தான் பதிவிடப்போகிறீர்கள்.
    (அந்த பிரம்மச்சரிய விஷயம்)

    காந்திஜியிடம் பிரமிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. பின்பற்ற வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவரைப் பற்றி வைரைட்டியாக கிடைக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் இளம் வாசகர்களுக்கு அது உபயோகமாக இரூக்கும்.

    காந்திஜி சமுத்திரம். அதில் ஒரு துளி எடுத்து விமரிசிப்பது அல்லது விமரிசனத்திற்கு உட்படுத்துவது உவப்பானதல்ல.

    ReplyDelete
  21. @ வே நடன சபாபதி
    காந்தி முதலிலேயே பிரம்ம சரிய விரதத்தில் வ்வெற்றி பெறவில்லை. அப்போது அவர் நோக்கம் வேறாயிருந்தது அப்போதும் அவர் மனைவியிடம் கூறி இருந்திருக்கிறார் பிறகுதான் நோக்கமும் செயலும் வெற்றி அடைந்தது அப்போதும் மனைவியிடம் பகிர்ந்திருக்கிறார் சர்வாதிகாரித்தனமாக தெரிந்தாலும் உண்மை அது வல்ல வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  22. @ ஜீவி
    ஏதோ பின்னால் நடக்கப் போவதை இப்போதே கூறி ஆச்சரியப்படுத்துகிறீர்கள் நீங்கள் எதையாவது கற்பனை செய்து கொண்டால் நானெப்படி பொறுப்பாக முடியும் அடுத்த காந்தி ஜெயந்திக்கு பதிவிடும் முன் உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன் இது இப்படித்தான் என்று எப்படி நினைக்கிறீர்களோ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  23. @ ஜீவி
    நான் சென்றமுறை நினைவுகளால் உந்தப்பட்டு என்னும் தலைப்பில் காந்தியின் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன் அதற்கு பின்னூட்டமாக நீங்கள் எழுதியது
    /
    மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத்தக்க தகவல்கள் நிறைய உண்டு. பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது, இந்தப் பதிவிற்கான செய்தியும்.

    மதுரை சிம்மக்கல் பகுதியில் தேசப்பிதாவை ஊர்வலத்தில் பார்த்திருக்கிறேன். அவர் மேடையில் பேசியதை மதுரை தமுக்கம் மைதானத்தில் காட்சியாய் கண்டிருக்கிறேன். அப்பொழுது சிறுவன் என்றாலும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது./
    பதிவையும் அதில் கண்ட செய்தியையும் வாசிக்காமல் கருத்திடுவது உங்கள் பாணியாகி விட்டது காந்தியைப் பற்றிய செய்திகள் பல இடங்களிலும் பகிரப் படுபவைதான் நைந்து போவதற்குஅது என்ன ஆடையாஅந்தப் பதிவுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டுசுயசரிதை பற்றிய அவரது கருத்துகள் இதிலும் எழுதி இருக்கிறேன்அது மட்டுமே ஒற்றுமை.

    ReplyDelete
  24. சற்றே நீண்ட பகிர்வு......

    காந்தியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி இங்கே தந்தமைக்கு நன்றி. அவரது சுயசரிதை படித்திருக்கிறேன்.....

    ReplyDelete

  25. @ வெங்கட் நாகராஜ்
    காந்தியின் சுய சரிதை பலரும் படித்திருக்கலாம்அதில் சில பகுதிகளை பதிவாக்கி வெளியிடுவதன் மூலம் சில செய்திகளின் நுணுக்கங்கள் தெரியப்படுத்துவதே முக்கிய நோக்கம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  26. காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சார்!

    ReplyDelete
  27. மகாத்மாவாக அவர் ஆவதற்கு அவருடைய துணைவியாரின் பங்களிப்பு அதிகம் இருந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
  28. காந்தி பிறந்த நன்நாளில் ஓர் அருமையான பகிர்வு ஐயா

    ReplyDelete

  29. @ மோகன் ஜி
    காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சார்/ இது ஒன்றும் நைந்துபோன செய்திகளைக் கொண்ட பதிவில்லையே மோகன் ஜி வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  30. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  31. @ கரந்தை ஜெயக்குமார்
    அவரே அவரைப் பற்றிச் சொல்லி இருந்ததிலிருந்து ஒரு பகுதிதான் ஐயா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  32. ji vanakkam
    i would like to request you regarding gandhijis habit of sleeping with nacked girls by his side to adopt /follow CELIBACY...
    is it true that the above incident did occur in gandhijis life...
    of course i had seen photos of gandhiji placing his two hands on the shoulders of young women...
    i request a reply
    i have to admit that i have not read much about gandhiji..

    ReplyDelete

  33. @Nat Chander
    நண்பருக்கு வணக்கம் உங்கள் கேள்விக்கு பதில் தருவது சிரமம் காந்தியே அவரைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் எழுதி இருப்பதுதான் சத்திய சோதனை காந்தியின் தந்தை இறக்கும் தருவாயில் காந்தி தன் மனைவிடன் உடலுறவில் இருந்ததாக எழுதி வருத்தப்பட்டிருக்கிறார் உடலால் பிரம்ம சரிய விரதத்தை பழகஎளிதாகலாம் ஆனால் மனதளவில் அதைப் பின் பற்றுவது மிகவும் சிரமம் தான் மனதளவிலும் பிரம்ம சாரியாக வாழ்கிறோமா என்னும் சந்தேகம் அவருக்கு இருந்திருக்கிறது அதை தீர்மானிக்க காந்தி தன் 77-வது வயதில் தன் பேத்தியின் வயதே உடைய மனு காந்தியுடன் நிர்வாணமாக மனுமேல் கையைப் போட்டுக் கொண்டு படுக்கும் வழக்கமுடையவராக காந்தி இருந்தார் என்று ராஜ்மோகன் காந்தி எழுதிய “ மோகன்தாஸ் “என்னும் நூலில் எழுதி இருப்பதாகப் படிக்கிறேன் காந்தி இதை எந்த மறைத்தலும் இல்லாமல் செய்தார் என்றும் இருக்கிறதாம் மேலும் காந்தியின் பேரன் இதை எழுத எந்த முகாந்திரமும் இல்லை.காந்தி சுடப்பட்டபோது கூட இரு பெண்களின் தோள் மீது கை போட்டபடி இருந்ததும் சரித்திரம் மனதளவில் பிரம்ம சரியம் பழக வேண்டும் என்னும் நினைப்புடையவர் காந்தி அதை சோதனை செய்ய சில முயற்சிகளில் ஈடு பட்டிருக்கலாம் ஆனால் காந்தியின் சுய சரிதையில் ஏதும் இருப்பதாக நினைவில்லை. காந்தியின் இமேஜுக்கு பங்கம்விளைவிக்க இம்மாதிரி சில சென் சேஷனல் செய்திகளை அவ்வப்போது சிலர் பரப்பலாம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  34. ji vanakkam
    thanks for your clarification..
    i have started reading about gandhijis biography his works books his participation in independence ....all
    thanks once again ji

    ReplyDelete