Saturday, October 15, 2016

இவன் இப்படித்தான்



                                           இவன்  இப்படித்தான்
                                           -----------------------------


இவன் எப்பவும்  இப்படித்தான்
 -------------------------------------------------------
பதிவு எழுதுவதற்கு விஷயங்கள் தேடுவதே ஒரு வேலையாய்ப் போய்விட்டது என் பதிவுகளில் நிறையவே அனுபவம் சார்ந்த பதிவுகளாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அதிரடி தாக்குதல் பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம் அந்த நேரத்தில் நான் முதன் முதலில் பள்ளியில் மூன்றாம் வகுப்பில்  சேர்க்கப்பட்டபோது அந்தக்காலத்துப் போர் பற்றிய (வீர ரைம்ஸ் என்று சொல்லலாமா) பாடல் கற்ற நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் அந்தமாதிரி பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறார்களா தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் என் நினைவில் ஆடும் அந்தக் காலத்தில் படித்த ஒரு போர் முழக்கம் பற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது பாடல் முழுவதும்  நினைவிலில்லை. நினைவுக்கு வந்ததை எழுதுகிறேன் என் போன்றோர் படித்த நினைவிருந்தால் பகிரலாம்

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
மாறி மாறி குதிரை ஏறி படையைத் துரத்துவோம் 
மீறி மீறி வெற்றி கூவி விரைந்து கலக்குவோம்
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....





இதற்குமேல் யாருக்கும்  நினைவுக்கு வரவில்லை என்றால்  இதன்  தொடர்ச்சியாக கற்பனை செய்தும் எழுதலாம்  நான் பதிவுலகுக்கு வந்த புதிதில் இதையே எழுதி இருந்தேன்  அப்போது ஒரு வாசக நண்பர் இங்ஙனம்  எழுதி பின்னூட்டமிட்டிருந்தார்
செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம்
புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
அருள்பொழிக்கும் அரன்பதங்கள் பணிந்து வேண்டுவோம்.
அப்போது இது எனக்கு அவ்வளவாக திருப்தி அளிக்க வில்லை போர் முழக்கம்  போல் இருந்தால் நன்றாயிருக்கும்  என்று மறு மொழி கொடுத்தேன். நண்பரும் அதையே சவாலாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சில வரிகளை எழுதி இருந்தார்  அவை
 நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால் நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்.
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்
(இந்த வரிகள் இன்றைய போர் வீரரின் நிலையைக் காட்டுவதுபோல்  இருக்கிறது அல்லவா)




 
என்ன நண்பர்களே ரசித்தீர்களா.பின்னூட்டமாகப் பாடல் எழுதியது யார் என்று சொல்ல முடிகிறதா  முயற்சித்துப் பாருங்களேன்  அன்று இருந்த மாதிரி பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் வருவதில்லைஎழுதுபவன் யாராய் இருந்தாலும்  எழுத்துக்கு மதிப்பு கொடுத்த காலம் அது என்று தோன்றுகிறது  இது குறித்து அடுத்தபதிவில் எழுதுவேன்
   

60 comments:

  1. நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் பழைய பதிவைத் தேடினேன்.கிடைக்கவில்லை. கவிஞர்கள் யாரேனும் எழுதி இருப்பார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் இல்லைனு நினைக்கிறேன். கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா நல்ல வரிகள்தான் பின்னூட்டம் எழுதியது திரு. சிவகுமாரன் அவர்கள் என்று நினைக்கிறேன் சரியா ?

    ReplyDelete
  3. அருமை. அந்தப் பாடலை எழுதியவர் யார் என்று யூகிக்க முடியவில்லை.

    ReplyDelete
  4. அருமையான பாடல் ஐயா! நன்றி!

    ReplyDelete
  5. எனக்குத் தெரிந்து இது போன்ற சந்த நயம் மிக்க கவிதைகளை எழுதுபவர்கள் இரண்டு பேர். ஒருவர் சிவகுமாரன். இன்னொருவர் ஊமைக் கனவுகள் விஜூ. விஜூ சமீபத்தில் எழுத வந்தவர் என்பதால் சிவககுமாரனாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. //எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் //
    என்ற வரிகளில் கடமைக்காக என்ற சொல்லுக்கு பதிலாக வேறு பயனபடுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தொன்று கிறது. ஒரு செயலை கடமைக்காக செய்வதும் ஈடுபாட்டோடு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. எழுச்சியுடன் என்று இருந்தால் நன்றாக இருக்கலாம்

    ReplyDelete
  7. நன்றி அய்யா.
    நன்றி கில்லர்ஜி
    நன்றி முரளி

    ReplyDelete
  8. @முரளி
    கொல்வது என்பது பாவச்செயல்.
    வெறித்தனம் மிகுந்து,கொல்லப்படுவரின் மீது கொண்ட வெறுப்பால் செய்யப்படுவது. ஆனால் போர்வீரனுக்கு எதிர்ப்படை வீரன் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பதில்லை. அவனைக் கொல்வது என்பது கடமை.

    ReplyDelete
  9. என்னை யோசிக்க விடாமல் செய்து விட்டீர்களே சிவகுமாரன் ஜி :)

    ReplyDelete
  10. நல்ல பாடல். முழு பாடலும் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

    பின்னூட்டத்தில் வந்த கவிதைகளும் நன்று.

    ReplyDelete
  11. //கொல்வது என்பது பாவச்செயல்.
    வெறித்தனம் மிகுந்து,கொல்லப்படுவரின் மீது கொண்ட வெறுப்பால் செய்யப்படுவது. ஆனால் போர்வீரனுக்கு எதிர்ப்படை வீரன் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பதில்லை. அவனைக் கொல்வது என்பது கடமை.//
    அற்புதமான விளக்கம்.

    ReplyDelete
  12. அன்புள்ள ஜிஎம்பி ஐயா.

    வணக்கம். உணர்ச்சிமிகுந்த நாட்டுக்கான கடமையாற்றும் பாடல் வரிகளில் வந்துவிட்டேன் உடனே. நான் சரியாக ஊகம் செய்தேன் சிவகுமரன் என்று. ஏனென்றால் சிவகுமரன் பயன்படுத்தும் சொற்கள் ஓரளவுக்கு எனக்குப் பரிச்சயம். முறையாக தமிழ் இலக்கணம் கற்ற அறிவியல் படைப்பாளி. தமிழுக்கான வரலாற்றை எழுதும்போது நான் நிச்சயம் சிவகுமரன் பற்றி எழுதுவேன். அவருக்குத் தமிழாசிரியன் என்ற வகையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
    நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்

    இந்த சிந்தனையும் வரிகளும் சிவகுமரனுக்கே சொந்தமானவை. வேறு யாரும் இப்படிச் சிந்திக்கமுடியாது. ஆனாலும் சிவகுமரன் அறியப்படவேண்டிய உயரம் இன்னும் அடையாளப்படுத்தப்படாமல் உள்ளது. அருமையான சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். உங்களின் பதிவுகள் காலதேச வர்த்தமானங்களைக்கடந்து எப்போதும் படித்தாலும் அன்றைக்குப் பொருந்தும் சிந்தனைகளை உள்ளடக்கியவை.

    கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம் ,
    நெடிய வாள்கள் பளபளவென நெருங்கித் தாக்குவோம்

    அருமையான அடிகள்.

    நன்றி இப்படியொரு பதிவினை எழுதி வரவழைத்தமைக்கு.

    ReplyDelete
  13. >>>
    கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம்..
    நெடிய வாள்கள் பளபளவென நெருங்கித் தாக்குவோம்!..
    <<<

    முதல்முறையாக இதனைப் படிக்கின்றேன்..
    பதிவில் வழங்கப்பட்டுள்ள போர் முழக்கப் பாடலில் வீரம் ததும்புகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  14. நண்பர் சிவகுமாரன் அவர்களின் பாடல் வரிகள் அருமை ஐயா

    ReplyDelete

  15. @ கீதாசாம்பசிவம்
    தேடிச் சிரமப்பட்டிருக்க வேண்டாமேமுதல் கவிதை நான் கூறி இருந்தபடி பள்ளியில் படித்தது அதை முடிக்கும் விதமாக என் வேண்டுகோள்படி மற்ற கவிதைகளை எழுதியவர் நம் வலைப்பதிவர் சிவகுமாரனே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  16. @கில்லர் ஜி
    பிடியுங்கள் பூங்கொத்தை முதலில் வந்து சரியாக கணித்ததற்கு வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  17. @ டாக்டர் கந்தசாமி
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  18. @ ஸ்ரீ ராம்
    அந்தப் பாடலை எழுதியது யார் என்று யூகிக்க முடியவில்லை பள்ளியில் படித்த பாடல் எழுதியது யார் என்று எனக்கும் தெரியாது மற்ற இரு பாடல்களை எழுதியவர் நண்பர் சிவகுமாரன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  19. @ தளிர் சுரேஷ்
    எந்தப் பாடலைக் குறிப்பிடுகிறீர்கள் சுரேஷ் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  20. @ டி என் முரளிதரன்
    உங்கள் யூகம் சரி என்று தெரிந்திருக்குமே. வருகைக்கு நன்றிசார்

    ReplyDelete

  21. @ டி என் முரளிதரன்
    சிவகுமாரனே தெளிவு செய்திருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா நன்றி முரளி

    ReplyDelete

  22. @ சிவகுமாரன்
    நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் நன்றி சிவகுமாரா

    ReplyDelete
  23. தங்களின் வீரமுழக்கம் கொட்டும் பாடல் வரிகளைப் படிக்கும்போது உடல் சிலிர்த்தது.அந்த வரிகளுக்கு சரியான ‘ஆதரவு முழக்கம்’ தந்திருக்கிறார் திரு சிவகுமாரன் அவர்கள். தங்களுக்கும் திரு சிவகுமாரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete

  24. @ சிவகுமாரன்
    நான் கீதை பதிவுகளுக்கு முன்னுரையாக எழுதி இருந்ததில் இருந்து சில வரிகள்/அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்/
    கீதை என்பதே ஒரு கொலை நூல் என்றும் சொல்லப்படுகிறதுநம்மில் எல்லோரும் கொலை செய்து கொண்டுதான் இருக்கிறோம் பாவச்செயல் என்பது எந்த ரெஃபெரென்சில் கூறப்படுகிறதோ அதுவே ஆராயப்பட வேண்டும்குறுகிட்டதற்கு மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. அய்யா, நான் இங்கு குறிப்பிடும் கொலையும் நீங்கள் சொல்வதும் வேறு. உணவுச்சங்கிலிக்காக செய்யப்படுவை கொலைகள் அல்ல. சிங்கம் மானைக் கொல்வதும், கொக்கு மீனைத் தின்பதும் கொலையாகா. சிங்கம் சிங்கத்தைக் கொன்றால் அது கொலை.
      எந்த நோக்கத்தில் செய்தாலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது பாவச்செயல் தான். போர்க்கொலைகள் நியாயப் படுத்தப் படுகின்றன. அவ்வளவே.
      நன்றி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

  25. @ பரிவை சே குமார்
    எதை ரசித்தீர்கள் என்றும் சொல்லி இருக்கலாமே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  26. @ பகவான் ஜி
    உங்களை யோசிக்க விடாமல் செய்தது கில்லர் ஜி அல்லவா வருகைக்கு நன்றி

    ReplyDelete

  27. @ வெங்கட் நாகராஜ்
    நினைவில் இருந்த அளவு பகிர்ந்திருக்கிறேன் அந்தக்காலத்தில் பள்ளியில் படித்தது வேறு யாருக்காவது நினைவில் வருகிறதா என்றே கேட்டிருக்கிறேன் பாடல் வரிகளை ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  28. @ டி என் முரளிதரன்
    நீங்கள் நான் எழுதி இருந்த கீதைப் பதிவுக்கு ஒரு முன்னுரை படிக்கவில்லை போல் இருக்கிறது கொலை என்பதை நியாயப்படுத்தும் கொலை நூலாகவே சிலர் கீதையை கூறுகின்றனர் உங்கள் சந்தேகம் தெளிந்தது மகிழ்ச்சி மீண்டும் நன்றி முரளிசார்

    ReplyDelete

  29. @ஹரணி
    சிந்தனைச் செறிவுள்ள இம்மாதிரிப் பின்னூட்டங்கள் உங்களிடமிருந்த வந்து எத்தனை நாட்களாகி விட்டதுஎன்ன செய்ய என் பதிவுகள் உங்களை ஈர்ப்பதில்லை போலும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  30. @ துரை செல்வராஜு
    நான் பள்ளியில் படிக்கும்போது கற்றது நினைவில் இருந்ததை எழுதினேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  31. @கரந்தை ஜெயக் குமார்
    வருகைக்கு நன்றி சார் அது சிவகுமாரனே

    ReplyDelete

  32. @ வே நடன சபாபதி
    வீரமுழக்கம் பாடல் நான் பள்ளியில் படித்ததின் எச்சம் பாராட்டுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  33. ஐயா வணக்கம்.

    முதலில் பேராசிரியர் ஹரணி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

    கவிஞர். சிவகுமாரன் அவர்கள் தமிழ் உலகு அறியப்பட வேண்டிய ஆளுமை என்பதில் ஐயமில்லை.

    படித்த பருவத்தில், இதழில் வெளிவந்த வெகு சில படைப்புகளுள் ஒன்றுள் நான் எழுதிய வரிகள் இவை,

    “ நல்லோர் பலரை நசுக்கி அழித்தபின்
    எல்லாப் புகழ்தரும்! ஏழைத் தமிழகம் ”

    அண்ணின் தமிழும் கவிதைகளும் காணுந்தோறும் இது மனதுள் எழும்.

    வாசிப்பில் இக்கவிதை யாருடையது என்று என்னால் அனுமானிக்க இயலவில்லை என்பதே உண்மை.

    அண்ணன் எழுதியது என்றறிந்து மீண்டும் மீண்டும் படித்தேன்.

    இது போன்ற பாடல்கள் சூழ்நிலையோடு பொருந்தும் போது மனதுள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சியை உணர்ந்தேன்.

    தங்கள் இருவர்க்கும் மீண்டும் என் வணக்கங்களும் நன்றிகளும்

    ReplyDelete

  34. @ ஊமைக்கனவுகள்
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  35. நல்ல சந்தம் மிக்க பாடல் வரிகள் மிகவும் ரசித்தோம் சார்.

    சிவகுமாரன் நினைவுக்கு வருகிறார். கூடவே விஜு ஜோசஃபும் நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
  36. சார் பேராசிரியர் ஹரணி அவர்கள் கருத்தை வழி மொழிகிறோம். எப்படி விஜு ஜோசஃப் அவர்களின் தமிழிற்கு ரசிகர்களோ அப்படியே சிவக்குமாரன் அவர்களின் ரசிகர்கள் நாங்கள்.
    இருவருமே அருமையான எழுத்தாளுமைகள்! வலையுலகில் அறியப்பட்டாலும் ஏனோ இன்னும் தமிழுலகில் அறியப்படவில்லையே என்று ஓர் ஆதங்கம் எழத்தான் செய்கிறது.

    ReplyDelete
  37. போரில்லா உலகம் சமைத்தல் சாத்தியமே,,,/

    ReplyDelete

  38. @ துளசிதரன் தில்லையகத்து
    சந்தம் மிக்க வரிகளைத் தொடர்ந்து உணர்ச்சி குன்றாமல் சிவகுமாரன் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது சிவகுமாரனின் தமிழுக்கு நான் அன்றிலிருந்தே அடிமை வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  39. @ துளசிதரன் தில்லையகத்து
    சிவகுமாரன் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார் எந்த ஆரவாரமும் இல்லாதவர் தனிப்பட்ட முறையில் பழக்கமானவர் அவரை குன்றின் மேல் ஏற்றுவது தமிழ் வலைப்பதிவர்களின் கடனாகும் சிவகுமாரனின் தமிழ் எளிமையானது ஒருஜினலானது மீண்டும் வந்ததற்கு நன்றி

    ReplyDelete

  40. @விமலன் பேராளி
    போரில்லா உலகம் சமைத்தல் சாத்தியமாக இருக்க வேண்டும் சாத்தியமாக்க வேண்டும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  41. சிந்திக்க வைக்கும்
    அருமையான பதிவு

    ReplyDelete

  42. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  43. நீங்கள் குறிப்பிட்ட கவிதையும், சிவகுமாரன் கவிதையும் அருமை.
    காஞ்சி தலைவன் படத்தில் இது போல் பாடல் வரும் போரில் வெல்ல பாடிக் கொண்டு போவார்கள்.சி.எஸ் .ஜெயராமன் பாடல்.
    இரத்ததிலகம் படத்திலும் இது போல் பாடல் வரும்.

    ReplyDelete
  44. நீங்கள் பள்ளியில் படித்த பாடல்,சிவகுமாரன் அவர்கள் புனைந்த பாடல் இரண்டுமே சிறப்பாக இருந்தன.

    ReplyDelete
  45. அப்பப்பா வரிகளனைத்தும் சிறப்பு, இக்கவி இயற்றிய நண்பருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

  46. @ கோமதி அரசு
    காஞ்சி தலைவன் மற்றும் இரத்தத்திலகம் பாடல்களிலும் சில வரிகள் குறிப்பிட்டிருந்தீர்களானால் நலமாய் இருந்திருக்கும் ஒரு ஒப்புமைக்காக. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  47. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  48. @ அருள்மொழிவர்மன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  49. @ சிவகுமாரன்
    நான் கீதைக்கு எழுதிய முன்னுரையின் சுட்டியை இத்துடன் இணைக்கிறேன் சுவாமி சித்பவாநந்தரின் விரிவுரையில் லிருந்து எடுத்தாளப்பட்டது மேலும் அதில் கண்ட கருத்துகள் என்னுடையது அல்ல என்றும் கூறி இருக்கிறேன் ) SURVIVAL OF THE FITTEST என்று கூறுவார்கள் விலங்கினம் உயிர் வாழக் கொல்கின்றன மனிதன் தன் இனம் வாழக் கொல்கிறான் யுத்தத்தில் கொலை செய்யாவிடில் கொல்லப்பட்டு விடுவோம் என்பது அறிந்ததே புண்ணியம் பாவம் எல்லாமே அணுகு முறையில்தான் இருக்கிறது நியாயப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் கொலை என்பதே உயிரைப் பறிப்பதுதானே கொலையில் வெறித்தனமான கொலை சாத்வீகமானகடமைக் கொலை என்றிருக்கிறதா. எதிராளியை வெறுத்தால்தான் கொலை செய்யமுடியும் எண்ணங்கள் எங்கெங்கோ போகின்றன. சுட்டியைபொ படியுங்கள் / http://gmbat1649.blogspot.in/2014/08/blog-post_25.html மீள்வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  50. ​​
    /அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்/

    ஐயா

    உயிர் என்பது என்ன என்பதிலேயே பிரச்சினை மிகவும் உள்ளது. இயக்கம் மற்றும் சுய பெருக்கம் (செல் டிவிசன்) போன்ற தன்மை உடையவை எல்லாம் உயிர் என்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதே போன்று ஆத்மா உள்ளவை மட்டுமே உயிர் உள்ளவை என்றும் கொள்ள முடியாது. தாவரங்களும் உயிர் உள்ளவை என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன.

    இந்த தாவரங்கள் எந்த உயிரையும் கொன்று விழுங்கி வாழவில்லை. கடலில் இருக்கும் நுண் உயிரிகளான plankton போன்றவையும் இது போன்றே. மண் நீர் காற்று சூரிய ஒளி போன்றவற்றை கொண்டே உயிர் வாழ்கின்றன.இவையே மற்ற உயிர்களுக்கு கடைசிப் படியில் இருக்கும் அடிப்படை உணவு.

    ஆகவே ஒரு உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழ முடியாது என்று வாதத்தை நான் மறுக்கிறேன்.

    சிவகுமாரன் அவர்களை நான் ஆமோதிக்கிறேன். உணவு என்று வரும்போது கொலை என்பது மறைந்து விடுகிறது. ஹலால் முறையும் இதுவே. மனிதனுக்கு கோழியோ ஆடோ மட்டும் உணவில்லை. வேறு பல உணவுகளும் உள்ளன. ஆனால் கோழியோ அல்லது ஆடோ கொல்லப்படும் முன் " நான் உணவுக்காக உன்னைக் கொல்கிறேன்" என்று ஹலால் கூறப்படுகிறது. இதுவே கிடாவிருந்தில் கிடா வெட்டும்போது பயன்படுத்தப் படுகிறது.

    எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிந்துவிட்டது. வீர எழுச்சி பாடலில் இருந்து கொலையில் முடிந்த்து விட்டது. ஆனாலும் வாதங்களும் மறுப்புகளும் சிறப்பாக இருந்தன. நன்றி
    --
    Jayakumar

    ReplyDelete

  51. @ ஜேகே 22384
    நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி. உயிர் பற்றியும் கொலை பற்றியும் கூறப்பட்ட கருத்துகள் எனதல்ல இப்படி கூறுவதால் நான் என்பொறுப்பைத் துறக்கிறேன் என்னும் பொருளல்ல எனக்கு உடன் பாடான கருத்துகளும் அறியாதவையும் எடுத்திட்டிருக்கிறேன் கருத்துகள் மாறுபடும் போது எடுத்துக் கூறுவதை நான் வரவேற்கிறேன் உயிர் உள்ளவை எல்லாம் சுவாசிக்கின்றன என்றே நான் அறிந்ததுஇந்த சிந்தனையின் அடிப்படையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் படிக்க வ்விருப்பமிருந்தால் சுட்டி தருகிறேன் இந்த ஹலால் ஒரு சாராரால் கூறப்படுகிறது என்று தெரிகிறது. மேலும் நான் குறிப்பிட்டுள்ள கருத்துகள் கீதைக்கு சுவாமி சித்பவாநந்தர் எழுதிய உரையிலிருந்து எடுத்தாண்டது.நீங்கள் மறுப்பதிலிருந்து தெரிவது எல்லாக் கூற்றையும் நாம் ஏற்பதில்லை என்று . அதுவே என் வழியும் நான் கேள்விகள் கேட்பேன் பதிலைத் தேடுவேன் அப்படிச் செய்வது யாரையும் புண்படுத்த அல்ல என்று விளங்கி இருக்கும் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  52. வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
    வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
    படைகள் செல்க செல்கவே

    தாயின் ஆணை கேட்பதுக்கு
    தலை வணங்கும் தங்கமே
    தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே
    சென்று வா வென்று வா

    குழலைப் போலை மழலை பேசும்
    குழந்தைகளின் முத்தம்
    கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
    கோல மொழி சத்தம்
    உன் குன்று தோளில் புது பலத்தை
    வழங்குமடா நித்தம்
    சென்று வா வென்று வா

    மகிமை கொண்ட மண்ணின் மீது
    எதிரிகளின் கால்கள்
    மலர் பறிப்பதில்லையடா
    வீரர்களின் கைகள் மாவீரர்களின் கைகள்
    சென்று வா வென்று வா

    ஓங்கிய வாள் போன்ற வடிவமடா -
    அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
    வேங்கைப் புலி மன்னனடா
    வீரர்களின் தலைவனடா -
    அவர் கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
    களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே


    இந்த பாடலை இயற்றியவர் கலைஞர் .கருணாநிதி அவர்கள் ..

    ஒரு முதல்வர் இயற்றிய பாடலுக்கு இன்னொரு முதல்வர் நடித்த நிகழ்வு

    திரை உலகிற்கே அதிசயம் தான்

    ReplyDelete
  53. பூங்குழலி போட்டு இருந்த பதிவிலிருந்து இந்த பாடல் .
    நீங்கள் கேட்டு கொண்டதற்காக

    http://mgrsongs.blogspot.in/2008/06/blog-post_8043.html

    ReplyDelete

  54. புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்மத் தாயின் மடியிலே போர்
    போர்...போர்...போர்....
    (புத்தன் வந்த திசையிலே...)

    பரத நாட்டுத் திருமகனே வா
    பச்சை ரத்தத் திலகமிட்டு வா
    பொருது வெண்தளத்தை நோக்கி வா
    பொன்னளந்த மண்ணளக்க வா
    வா...வா...வா...வா...வா...

    புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்மத் தாயின் மடியிலே போர்
    போர்...போர்...போர்....

    மக்களுக்கு புத்தி சொல்லி வா
    மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
    பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
    பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா
    வா...வா...வா...வா...வா...

    புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்மத் தாயின் மடியிலே போர்
    போர்...போர்...போர்....

    மக்களுக்கு புத்தி சொல்லி வா
    மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
    பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
    பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா
    வா...வா...வா...வா...வா...

    புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்மத் தாயின் மடியிலே போர்
    போர்...போர்...போர்....

    மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
    மரணமேனும் பெறுவதென்று வா
    பருவ நெஞ்சை முன்நிமிர்த்து வா
    பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா
    வா...வா...வா...வா...வா...

    புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்மத் தாயின் மடியிலே போர்
    போர்...போர்...போர்....

    இந்த பாடல் கவியரசு கண்ணதாசன் இரத்த திலகம் படத்திற்கு எழுதியது.

    முதலில் குறிப்பிட்ட பாடல் காஞ்சி தலைவன் படம்.

    ReplyDelete
  55. http://kaipullai.blogspot.in/2009/06/blog-post_24.html

    இரத்ததிலகம் பாடலை பகிர்ந்து கொண்டவர்.
    இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  56. @ கோமதி சரசு
    ஒப்புமைக்காக என்று கேட்டதற்கிணங்க எல்லாப் படப் பாடல்களையும் சிலருடைய பழைய பதிவுகளில் இருந்து சிரமப்பட்டுத் தேடிக் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றியும் மேடம் நன்றி

    ReplyDelete