Thursday, December 22, 2016

காலைக் காட்சிகள்

                         காலைக் காட்சிகள்
                         ---------------------------


பொழுது புலரும்  வேளை. சேவல் கூவும்  நேரம்   பறவைகள் இரைதேடக் கிளம்பும்  நேரம் அதிகாலைத் தூக்கம்  சுகமானது  இருந்தாலும்  சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும். பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம் கேட்கும்
 நிச்சயம் விடிந்து விட்டது என்பது மனைவி குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின் பாட்டுகளைக் கேட்டால் தெரிந்து விடும்  
குளிப்பதுடன் கூடவே தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது

“ அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு
என்று அவள் கூறும் ஸ்தோத்திரமும் நான்  எழவேண்டியதை உறுதிப் படுத்தும்
நான்  எழுந்து காலைக்கடன்களை முடித்து நடக்கப் போகும்  முன்  மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி பிஸ்கட்களை தருவாள் வெறும்  வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம்   காஃபி குடித்து நான் நடக்கத் தயாராவேன்    
 மருத்துவர்களின் ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான்  தினமும்  சிறிது தூரம்  நடக்க வேண்டும் நல்ல வேளை வீட்டின்  அருகிலேயே ஒரு பூங்கா போன்றதொன்று இருக்கிறது  நடை பயில ஏற்ற இடம்  நீளவாக்கில் இருக்கும் அகாக்கில் இரு பைகள் சுமார் எட்டு அடி அகத்ில்.  ஒரு முறை சென்று வந்தால் ஒரு கிலோமீட்டர்தூரம்  வரும்  தினமும் நான் இரண்டு முறை சென்று வருவேன் அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம்  நடப்பேன்  இதே தூரத்தை முன்பெல்லாம் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்  இப்போது வேகம் குறைந்து விட்டது  சுமார் 35 நிமிடங்கள் ஆகின்றன
நடக்க வருபவர்களைக் கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு எழுத சில ஐடியாக்கள் வரும்  முன்பொரு முறை இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க) போய்ச்சேர் வீடு நோக்கி என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே  என்ன நான் நடப்பது காலை வேளையில் அதையே மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான் அந்த  இடுகை
நடக்கும்  பாதையில் நாய்களின் ராச்சியம் நடக்கும்  ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு மூன்று நாய்களும் நடக்கும்  அவர் அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு  நன்றி மறக்காதவை காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பென்சுகளில்  வயதான பெண்களின்  குழுக்களும்  இருக்கும் அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க வந்தவர்களா என்னும்  சந்தேகமும்  எழும் நடக்க வருபவர்களில் சிலர் ஓடுவதும்  உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள் என்னைக் கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னருத்தி பந்தையக் கிரை போல் இருப்பாள் செருகியொண்டையில் முடியின் நுனிஆடி அசந்து கும்  ஒருமுறை என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை  உதிர்த்தாள் பின்  அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம் புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன்  அவளது அந்தப் புன்னகை என்னை ஈர்த்தது



நடக்கும் பாதையில் முன்பு ஒரு எலி வளை இருந்தது  பின் அது எறும்புப் புற்றாக மாறியது  அதற்கு பாம்புப் புற்றின்  அந்தஸ்து அளிக்கப்பட்டு  சிலர் பாலூற்றி வழிபடவும்  தொடங்கினர் . அந்த இடத்கில் சில நாகர்களின் சிலைகள்பிரதிஷ்டை செய்யப்பட்ட  முன்பு ஒரு பதிவில் யார் கனவிலாவது கடவுள் தோன்றிஅங்கு கோவில் எழுப்பச் சொல்லலாம் என்றும்  எழுதி இருந்தேன் அண்மையில் அந்த இடத்தைச் சுற்றி சிமெண்ட் பூசப்பட்டிருக்கிறது  பல நேரங்களில்  பூசைகள் நடக்கின்றன. ஒரு முறை நான் நடந்து வரும்போது ஒரு நாய் அந்த நாகர் சிலைகள் மீது பின்னங்கால்களை தூக்கி உச்சா போய் அபிேகம் ெய்வைக் கண்டேன் நம் நம்பிக்கைகளின்  மேலும்  நம் கடவுளர்களின்  மேலும்  அனுதாபம் பிறக்கிறது  
நடக்க வருபவர்களில்தான் எத்தனை வகை  சிலர் நேரம் தவறாமல் வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள்.  சில வயதானவர்களுக்கு நடைபாதைப் பென்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது  எனக்குத்தான்  யாரும் நண்பர்கள் இங்கு இல்லை.  1994-ம் வருட வாக்கில்  என்  வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில் வாக்கிங்கும் ஜாகிங்கும்  செல்வேன்  அவர் என்னைவிட மிகவும்  இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல் ஜாகிங் செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும்  குறைகிறது இந்த நடை ஒன்றுதான் எனக்கிருக்கும்  ஒரே தேகப்பயிற்சி
 ஒரு முறை நடந்து செல்லும்  போது  பாதையில் ஒருவர் விழுந்து கிடந்தார்  அவரைப் பார்த்தால் குடித்து விழுந்தவர் போல் தெரியவில்லை.  அவருக்கு ஏதாவது உதவி செய்ய மனம் விழைந்தது. என்னால் என்ன உதவி ெய்ய  முடியும்  நான்  அங்கு நின்று கவனிப்பதைப் பார்த்து ஓரிருவரும் அங்கு நின்றனர் என்னால் அவருக்கு எந்த உதவியும்  செய்ய முடியாதென்று தெரிந்து நான் என் நடையைத் தொடர்ந்தேன்  திரும்பி அதே பாதையில் வரும்போது சிலர் அவரை அருகில் இருந்த பென்ச் ஒன்றில் அமரவைத்து என்னவோ கேட்டுக் கொண்டிருந்தனர் எல்லோரும் என்னைப் போல் அகன்று விடாமல் உதவி செய்ததைப் பார்க்கும் போ என்னைவிட நல்லவர்களிருக்கிறார்கள் என்னும்  நம்பிக்கை வந்தது மேலும் அங்கு விழுந்து கிடந்தவர் கதி எனக்கும்  வரா என்பது என்ன நிச்சயம்  என்னதான்  தைரிய சாலியாக இருந்தாலும்  நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன்  நான்  அந்த நிகழ்வு என்னில் என்ன என்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது  அதுவும்  ஒரு பதிவாகிறது அடுத்து       
.



38 comments:

  1. உங்கள் காலை பொழுதை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. உடற்பயிற்சி என்பது
    வயதைப் பொறுத்து ஒவ்வொரு
    வடிவம் கொள்ளும்
    அறுபதுக்கு மேல் எனில்
    நடை ஒன்றே முடியுமானதாகவும்
    போதுமானதாகவும் இருக்கிறது
    நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்
    நடையே பதிவானது அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. காட்சிகளை கண்டேன் ஐயா

    ReplyDelete
  4. >>> நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன் நான்..<<<

    இப்படியான எண்ணங்கள் எல்லாம் இரத்தத்துடன் ஊறிப் போனவை..

    தலைமுறைகளுக்குத் தொடர்கின்றனவா.. தெரியாது.. ஆனால்,
    பிறவிகள் தோறும் தொடர்ந்து வருபவை..

    விடியற்காலையின் எண்ணங்கள் விடியற்காலையைப் போலவே அழகு..

    ReplyDelete
  5. உங்களின் நற்சிந்தனைகள் அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. யதார்த்தமான எண்ணங்கள். சிலசமயம் நாம் உதவ முடியாத நிலை ஏற்படுகிறது என்ன செய்ய.

    புதுக்காற்றை சுவாசித்தது போல் இருந்தது இடுகை. நாகர்களின் நிலை நினைத்துச் சிரிப்பும் ஏற்பட்டது :)

    ReplyDelete
  7. # பந்தையக் குதிரை போல் இருப்பாள் செருகிய கொண்டையில் முடியின் நுனிீ ஆடி அசைந்து கவரும#
    பதிவில் இந்த வரிகள் புரியாதபடி என்னவோ போல் இருந்தது ,கமென்ட் பாஸ்சில் சரியாக தெரிகிறது !
    மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால் இதையே ஃபாலோ செய்யலாம் :)

    ReplyDelete
  8. அருமையான வழிகாட்டல்

    ReplyDelete
  9. உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இங்கே யு.எஸ்ஸில் காலைவேளையில் இப்படி உயிர்ப்புடன் விடிவதைக் காண முடிவதில்லை. காலை எழுந்து கொண்டு கணினி முன்னர் அமர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வீட்டுக்குள்ளேயே சில நிமிடங்கள் நடக்கிறேன். வெளியே செல்ல முடியாது! குளிர்! :)

    ReplyDelete
  10. நானும் உடன் வாக்கிங்க் வந்தது போல் உணர்ந்தேன்.

    ReplyDelete
  11. நம் ஊரில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது இப்படித்தான் வித்தியாசமான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் தினமும் நிறைய கிடைக்கும். அதை அழகாக, சுவைபட எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  12. தப்பாமல் -.சென்னை பாஷையில் சொல்வதானால் பால் மாறாமல்- நடைப்பயிற்சி மேற்கொள்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். எங்கள் ப்ளாக்கில் சில வருடங்களுக்கு முன்னர் நடக்கும் நினைவுகள் என்ற தலைப்பில் நானும் இந்த அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  13. நடையை ஒருபோதும் விடவேண்டாம். குறைந்த பட்சம் வீட்டுக்குள்ளாவது நடமாடவேணும். இதற்கு உடல் ஒத்துழைத்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவேணும்!

    ReplyDelete
  14. நடை நல்லது...

    தொடருங்கள்.

    உங்கள் நடையின் போது நாங்களும் நடந்த உணர்வு.

    ReplyDelete

  15. @கோமதி அரசு
    வருகை தந்துபதிவை ரசித்ததற்கு நன்றிகள் மேடம்

    ReplyDelete

  16. @ ரமணி
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  17. @ கில்லர் ஜி
    காட்சிகளில் கண்டதை ரசித்தீர்களா ஜீ

    ReplyDelete

  18. @துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

    ReplyDelete

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி டிடி

    ReplyDelete

  20. @ தேனம்மை
    நாகர்களின் சிலை குறித்து எழுதினது உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கிறது என் ஆதாங்கத்தின் வெளிப்பாடு அது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  21. @ பகவான் ஜி
    நடை பயிற்சி போது இவர்கள் ஒரு புத்து தெம்பைக் கொடுக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஜீ

    ReplyDelete

  22. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிரஜலிங்கம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  23. @ கீதா சாம்பசிவம்
    உள்ளதை உள்ளபடி எழுதுவதுதானே என் வழக்கம் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  24. @ டாக்டர் கந்தசாமி
    எனக்கும் அது தெம்பைத்தருகிறதுவருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @ மனோ சாமிநாதன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமேம்

    ReplyDelete

  26. @ ஸ்ரீராம்
    பால் மாறாமல் என்றால் கட்சி மாறாமல் என்றுதானே அர்த்தம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  27. @ துளசி கோபால்
    ஊக்கமூட்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் மேம்

    ReplyDelete

  28. @ வெங்கட் நாகராஜ்
    நடையைத்தொடர்வது எனக்கு நானே நம்பிக்கை ஊட்டிக்கொள்வதுபோல் உணர்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  29. தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள் ஐயா
    நடைப் பயிற்சியை விட்டுவிட வேண்டாம்
    இதன் பலன் பெரிது
    தாங்கள் அறியாதது அல்ல

    ReplyDelete

  30. @கரந்தை ஜெயக்குமார்
    அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  31. சில நாட்களில் எழுந்திருக்க நேரமானால் நடை போகத்தயக்கமாகிறது

    ReplyDelete
  32. உங்களுடன் ஒரு நடை போய் வந்தது போல் உணர்ந்தேன். அருமையாய் விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

    ReplyDelete
  33. நானும் உங்களோடு தொடர்ந்து வந்தது போன்ற உணர்வு. நடைப் பயிற்சியின் போது, நான் பார்த்த வகையில், ஒவ்வொருவரும் செய்யும் உடற் பயிற்சிகளைப் பார்க்கும் போதும், பெரும்பாலும் பலரும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  34. காலை காட்சிகளை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
    பெங்களூர் குளிரிலும் நடக்கிறீர்களா? என்னை என் எதிர் வீட்டு பெண்மணி நடக்க கூப்பிட்டு அலுத்து விட்டார்.

    ReplyDelete

  35. @வே.நடனசபாபதி
    நடக்கும் போதும் எண்ணங்கள் என்ன எழுதுவது என்று இருக்கும் அதன் விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  36. @ தி தமிழ் இளங்கோ
    புரியவில்லை. வயதானவர்கள் செய்வதைக் காணும்போது அப்படித் தோன்றுகிறதா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  37. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    எந்த ஒரு பயிற்சியும் அவரவருக்குத்தோன்றவேண்டும் சென்னையில் என் மச்சினனை ஜவஹர் நகரில் காலை ஐந்து மணிக்கு நடக்கக் கூட்டிபோவேன் அங்கே நான் இருந்தது சில நாட்கள்மட்டுமே நான் திரும்பி வந்ததுமஅவன் நடை போவதும் நின்று விட்டது பெங்களூரில் இந்த ஆண்டு குளிர் அவ்வளவாக இல்லை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete