நினைவடுக்குகளில் ஒரு பயணம்
-------------------------------------------------
இப்போதெல்லாம்
மிகவும் தெரிந்தவர்களின் பெயர்கள் உடனே
நினைவுக்கு வருவது இல்லை உணவு உட்கொள்ளும் போது பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளும்
ஏதொ ஒன்று போல் எடுக்காவிட்டால் அமைதி
இருப்பதில்லை. அதுபொல் தான் தெரிந்தவரின்
பெயர் நினைவுக்கு வராவிட்டால் மனம் அழுந்துகிறது இது பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன்
சில
பழைய புகைப்படங்களை நோக்கிக் கொண்டிருந்தேன்
கோயமுத்தூரில் ஒரு நண்பனின் மகளது
திருமணத்துக்குச் சென்றபோது எடுத்தவை
ஒவ்வொரு வரையும் அடையாளம் காட்ட மனம் விரும்பியது
அதில் ஒருவர் எனது நல்ல நண்பர் மிகவும்
தெரிந்தவர் பெயர் நினைவுக்கு வரவில்லை
இது எப்படி என்றால் நீலாம்பரி நினைவுக்கு வருவாள் அவளது இயற்பெயர்
நினைவுக்கு வராது நண்பர் குறித்த பல நினைவுகள் அலை மோதின. ஆனால் அவர் பெயர்
மட்டும் நினைவுக்கு வரவில்லை. பொதுவாக
இம்மாதிரி நேரங்களில் மனைவியின் துணை
நாடுவேன் ஆனால் இந்த நண்பர் என் மனைவிக்குப் பரிச்சயப்படாத அலுவலக நண்பர்
எனக்கோ திலகவதி அம்மையாரின் தம்பியின் பெயர்தானோ என்னும் சந்தேகம் எழுந்தது ஆனால்
ஒரு பெயர் பெற்ற படைத்தளபதியின் பெயர்
என்றும் நினைவுக்கு வந்தது ஏதோ சினிமாவில் ராதிகா தன் கிளிக்கு இப்பெயர் சூட்டி இருந்தார்
என்றெல்லாம் நினைவுக்கு வந்தது ஆனால் அந்தப் பெயர் மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை
இரண்டு நாட்களாக இதே நினைப்பு/ அந்தப் பெயர்
என்னை வாட்டிக்கொண்டு இருந்தது திடீரென்று யுரேகா என்று கத்த வேண்டும் போல்
இருந்தது பெயர் நினைவுக்கு வந்து விட்டது
அந்தப் பெயரை உங்களால் யூகிக்க முடிகிறதா நண்பர்களே பரஞ்சோதி
பெயர் நினைவுக்கு
வந்தபின் என்னால் நினைத்துப்பார்க்கப்பட்ட
வர்களின் கதைகளைத் தேடிப் பார்த்தேன்
திலகவதி அம்மையாரின் தம்பி பெயர் மருள் நீக்கி என்று அறியப்பட்ட
திருநாவுக்கரசர் பல்லவ மன்னனின்
படைத்தளபதியாக இருந்தவர் கருணாகரத் தொண்டைமான்
இவருக்கு பரஞ்சோதி என்னும் பெயர் இருந்ததா தெரியவில்லை. ராதிகாவின் கிளிக்குப் பெயர் பரஞ்சோதிதான்
அப்பாடா ஒரு வழியாகப் பெயரை நினைவடுக்குகளில்
இருந்து தேடி எடுத்துவிட்டேன்
இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்
இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்
'
அஹா எனக்கும் இது இருக்கே.. ஆமா உங்க வயசென்ன பாலா சார் :)
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteநினைவலைகளை ரசித்தேன் ஐயா
ReplyDelete
ReplyDelete@ தேனம்மை லக்ஷ்மணன்
என் வயசு ஊரறிந்த ஒன்றாயிற்றே அதிக்சமொன்றுமில்லை ஜஸ்ட் 78 YRS young.
AAADD யின் விரிவாக்கம் ( AAADD என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER.) இந்தவயதில் இது இருக்கலாமா நீங்கள் என்னைவி இளமையானவர்தானே வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
என் அவஸ்தைகள் உங்களுக்கு ரசிப்பு.....? வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@கில்லர்ஜி
அவை நினைவலைகள் அல்ல தடைபட்ட நினைவுகள் வருகைக்கு நன்றி ஜி
இது இந்த பதிவின் கடைசி வரிகள்... நன்றி ஐயா...
ReplyDelete// இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள் ///
புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்...
உங்களுக்கு நினைவாற்றல் அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும் ஐயா. எப்படியும் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறே கூறிவிட்டீர்கள். இல்லாவிட்டால் இந்த அளவு எழுதமுடியுமா? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்கும் உண்டு இந்த நோய். சமீபகாலமாய் கொஞ்சம் அதிகமாகவே.
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்த பதிவு பற்றி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏனோ அது வெளியாகவில்லை.
சில சமயங்களில் இப்படி மறந்து விடுகிறது. ஒரு முறை தில்லியிலிருந்து நெய்வேலி சென்றிருந்த போது மத்தியப் பேருந்து நிலையத்தில் ஒருவரைப் பார்க்க, அவர் என்னிடம் பெயர் சொல்லி அழைத்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கோ அவர் பெயர் நினைவில் இல்லை. எத்தனை நேரமாக யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.... இன்று வரை நினைவில் இல்லை! :(
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
ஏதோ ஒரு பெயர் சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் வருகைக்கு நன்றி டிடி
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஆனால் கண்டு பிடிப்பதற்குள் ஏற்படும் பதட்டமிருக்கிறதே வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ ஸ்ரீராம்
AAADD என்று சொல்லித் தேற்றிக் கொள்ளவும் உங்களுக்கு வயசாய் விட்டதா . நம்பமுடியவில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ
@ துரைசெல்வராஜு
ReplyDeleteவருகைக்கு நன்றி உங்களுக்கும் இப்புத்தாண்டு நலம் விளைவிக்கட்டும்.
ReplyDelete! வே நடன சபாபதி.
என்வலைப்பூவில் நான் மட்டறுத்தல் வைக்கவில்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
எந்த விஷயத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அதை மறந்து விட வாயொப்புண்டு என்று நான் கூறுவதுண்டு. ஆனால் பெயர்களை இப்போது மிகவும் மறக்கிறேன் எனக்கும் ஒரு சில இடங்களில் அசடு வழிந்த நிகழ்வுகள் உண்டு. வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி சார்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteநம்மை விட இளமையானவர்களுடன் பழகுவதால் (நெருக்கமாக அல்ல!) நமது வயது குறையும் என்று சிலர் கூறுவது உண்மையா?....புத்தாண்டு வாழ்த்துக்கள். - இராய செல்லப்பா, நியுஜெர்சியில் இருந்து.
ReplyDeleteபரஞ்சோதி என்ற உங்கள் கண்டு பிடிப்பு சரியானதே! ஒரு விஷயத்தைக் கண்டு பிடிக்கும்வரைக்கும் மனம் அதிலேயே இருக்கும். உங்கள் விடாமுயற்சிக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஆனால் கருணாகரத் தொண்டைமான் என்பவன் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன். இவனைக் கதாநாயகனாக வைத்துச் சரித்திரக் கதாசிரியர் சாண்டில்யன் கடல் புறா என்னும் சரித்திரத் தொடர் எழுதி இருக்கிறார். இவன் தான் கலிங்கத்தை வென்றவன். :) பரஞ்சோதி மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன் காலத்தவர். :)))))
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
ReplyDelete@செல்லப்பா யக்ஞசாமி
நமது வயது எங்கு குறையப்போகிறது சிலர் வேண்டுமானால் இளமையாக உணரலாம் ஆனால் நம்மை விட இளையவர்கள் நம்மிடம் பழக வேண்டுமே நியூ ஜெர்சியில் என்பது தெரிந்தது வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
பரஞ்சோதி என்பது என் கண்டுபிடிப்பல்ல. அவரது பெயரே நினைவுக்கு வராமல் தொல்லை கொடுத்த பெயர் எது எப்படியோ அவரது பெயர் நினைவுக்கு வந்து விட்டது வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கரந்தை ஜெயக் குமார்
வருகை பதிவுக்கு நன்றி உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்
சில தடவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது இந்த அனுபவம்:)
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete@ ராமலக்ஷ்மி
எப்போதாவது என்றால் அது பதிவாகி இருக்காது அடிக்கடி நேர்வதாலேயே எழுதினேன் வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி மேம்