ஐயப்பன் திருவிழா
---------------------------
வலைப்பூக்களில்
இப்போதெல்லாம் அதாவது இந்த மாதத்தில் பார்க்கும் பதிவுகள் அநேகமாகப் பக்திப்
பதிவுகளாகவே இருக்கின்றன நானும் என்
பங்குக்கு ஒன்று எழுதுகிறேன் ஆனால் இது
என் கண்ணோட்டமாகவே இருக்கும்
1998-ம்
வருடம் என் மனைவிக்கு சபரிமலைக்குப் போக
ஆசை எழுந்தது என் முந்தைய
அனுபவங்களை எல்லாம் கேட்டவள் அவள்.என்றைக்குமே நான் என் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்
அந்தயாத்திரைக்கு நான் என்மனைவி, என்
மூத்த மகன் என் மூத்த பேரன் மகனது
மாமனார் என்வீட்டில் குடியிருந்த கன்னடிக
நண்பர் ஒருவர் ஆகியோர் புறப்பட்டோம்
வழக்கம் போல் யாத்திரைக்கான வழிமுறைகளை
பின் பற்றினோம் இம்மாதிரி யாத்திரையில் கூறப்படும் விஷயங்கள் சில நம் மனதையும் உடலையும்
நம் கட்டுக்குள் கொண்டுவர உபயோகமாகும் முக்கியமாக எல்லாவிரதங்களும்
உதவுபவையே கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து சுமார் நாற்பது நாட்கள்
விரதமிருந்து யாத்திரைக்குத் தயாரானோம்
யாத்திரையின் போது
சரணம்
ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்
சுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்
என்று துவங்கி
மண்டல நுயம்பு நோற்று
அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு
புண்ய பாப சுமடுகளாம்
இருமுடிக் கெட்டும் ஏந்தி
பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
மண்டல நுயம்பு நோற்று
அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு
புண்ய பாப சுமடுகளாம்
இருமுடிக் கெட்டும் ஏந்தி
பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
பம்பையில் குளிச்சு
தோர்த்தி
உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே உணர்த்தி
பொள்ளையாயோர் ஒடுக்கமாய்
பேட்டை துள்ளிப் பாட்டு பாடி
பதினெட்டாம் படி செவுட்டாம்
வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
ஸ்ரீகோவில் திருநடையங்கள்
கற்பூர மலைகள் கை கூப்பி தொழுதிடும்போள்
பத்மராகப் ப்ரபவியர்த்தம்
திருப்பதங்கள் சும்பிக்கும்
கிருஷ்ண துளசிப் பூக்களாக வருந்நு ஞங்கள்(சரண்ம் ஐயப்பா)
என்னும் ரீதியில் வாயில் பாட்டெடுத்து மலை
யேறினோம்(பாட்டு வரிகள் மனைவி உபயம் ...!) உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே உணர்த்தி
பொள்ளையாயோர் ஒடுக்கமாய்
பேட்டை துள்ளிப் பாட்டு பாடி
பதினெட்டாம் படி செவுட்டாம்
வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
ஸ்ரீகோவில் திருநடையங்கள்
கற்பூர மலைகள் கை கூப்பி தொழுதிடும்போள்
பத்மராகப் ப்ரபவியர்த்தம்
திருப்பதங்கள் சும்பிக்கும்
கிருஷ்ண துளசிப் பூக்களாக வருந்நு ஞங்கள்(சரண்ம் ஐயப்பா)
இந்த நிலையில் நான் சொல்லிக் கொள்ள
விரும்புவது பல கோவில்களுக்கும் போகிறோம்
சிலர் பக்திப்பரவசம் அடைகிறார்கள்
ஆனால் சபரி மலைக்கு மகர ஜோதி தரிசனம்
காணச்செல்கிறோம் என்று சொல்பவர்களை நினைக்கும் போது அனுதாபமே எழுகிறது அந்த
ஜோதி மனிதர்களால் மலை உச்சியில் ஏற்றப்படும் தீப்பந்தம் என்பதை வெட்ட வெளிச்சமாக அறிந்தும் ஜோதி தரிசனம்
என்பதில் மகிழும் மக்களை
என்னென்பது….! அந்தக் கடவுள்தான் இவர்களைத்தெளிவிக்க வேண்டும்
எதைப்பற்றியும் கருத்து கூறும் முன் அது பற்றிய அனுபவம்
வேண்டும் என்று நினைப்பவன் நான் அது போகட்டும்
மார்கழி மாதம் முதல் தேதியில் எங்கள் ஊர் ஜலஹள்ளி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கொடியேற்றி
மண்டல பூஜை முடிந்து கொடி இறக்குவார்கள் நான்
இருக்குமிடம் ஒரு மினி கேரளா மலையாளிகள் கூட்டம் சற்று அதிகம் மலையாளிகள் இருந்தால் ஐயப்பனுக்கு
கோவிலும் இருக்கும் மார்கழி முதல் தேதி கொடி ஏற்றத்தை எங்கள் ஏரியா பூஜையாகக் கொண்டாடுகிறார்கள் கணிசமாகத் தொகை வசூலித்து பெரிய திருவிழாவாகவே
கொண்டாடுகிறார்கள் நாங்கள் இருக்கும் சாலை
வழியே ஊர்வலம் போகும் கேரள பாரம்பரிய
கலைகளைக் காண ஒரு சந்தர்ப்பமாகவே நான் நினைப்பதுண்டு சுமார் ஆயிரம் பெண் குழந்தைகள் தாலம்(தட்டு) ஏந்தி அதில் விளக்குடன் வருவார்கள் ஊர்வலம் ஒரு இடத்தைகடக்க சுமார் ஒரு மணிநேரம் ஆகும்
வாண வேடிக்கைகளுக்கும் குறைவிருக்காது
முன்பெல்லாம் யானையும் அதன்
மேல் ஐயப்பனும் உலா வருவார்கள்
இப்போது அதெல்லாம் தடை
செய்யப்பட்டிருக்கிறதாம் என் வீட்டு முன் செல்லும் ஊர்வலத்தைக் காணொளியாக்கி இருக்கிறேன் அவற்றில் சில உங்கள் பார்வைக்கும். பொறுமை
இல்லாமல் காணொளியைத் தாண்டிப் போகிறவர்களுமிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் அவற்றில் சிலவற்றைப் பகிர்கிறேன்
சரியாக வாசிக்க முடியவில்லை ஐயா... அதனால் உங்கள் பதிவிலிருந்து...
ReplyDeleteசுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்...
என்று துவங்கி
மண்டல நுயம்பு நோற்று
அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு
புண்ய பாப சுமடுகளாம்
இருமுடிக் கெட்டும் ஏந்தி
பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
பம்பையில் குளிச்சு தோர்த்தி
உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே உணர்த்தி
பொள்ளையாயோர் ஒடுக்கமாய்
பேட்டை துள்ளிப் பாட்டு பாடி
பதினெட்டாம் படி செவுட்டாம்
வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
ஸ்ரீகோவில் திருநடையங்கள்
கற்பூர மலைகள் கை கூப்பி தொழுதிடும்போள்
பத்மராகப் ப்ரபவியர்த்தம்
திருப்பதங்கள் சும்பிக்கும்
கிருஷ்ண துளசிப் பூக்களாக வருந்நு ஞங்கள்(சரண்ம் ஐயப்பா)
இனியதொரு பதிவு..
ReplyDeleteஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
காணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா.... நன்றி...
ReplyDeleteதங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
ReplyDelete
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
உருமாறிய எழுத்துகளை சரியாகப்படித்துப்போட்டதற்கு நன்றி டிடி. கூகிள் க்ரோம் உலவியில் இப்படியாகிறது ஃபைர் ஃபாக்சில் சரியாக வருகிறது மீண்டும் நன்றியுடன்
ReplyDelete@ துரை செல்வராஜு
பதிவு இட்ட சிறிது நேரத்துக்குள் வருகைக்கு நன்றி சார் காணொளிகளைக் கண்டீர்களா
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
காணொளிகளையும் கண்டு ரசித்ததற்கு மீண்டும் நன்றி டிடி
ReplyDelete@ கில்லர் ஜீ
உங்களுக்குப் பதில் எழுத்துகள் சரியாக தெரிந்ததா. வருகைக்கு நன்றி ஜி
நண்பர் டி.டி. அவர்களின் கருத்துரையில் படித்தேன்
Deleteகாணொளியை காணவில்லை காரணம் செல்பேசி
அருமையான பதிவு
ReplyDeleteரசித்தேன்.
ReplyDelete
ReplyDelete@கில்லர்ஜி
செல்பேசியில் காணொளி காணமுடியாதா பரவாயில்லை வருகைக்கு நன்றி
ReplyDelete@ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக்கு நன்றி சார்
@ டாக்டர் கந்தசாமி
ReplyDeleteரசித்ததற்கு நன்றி சார்
ஏற்கெனவே இந்தக் கோயில் மார்கழித் திருவிழா குறித்து நீங்களே எழுதிப் படித்த நினைவு இருக்கு. இம்மாதிரிப் பெண்கள் கையில் தாலப் பொலி ஏந்தி வந்த படங்களும் பார்த்திருக்கேன். உங்கள் பதிவில் தான் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅனுபவத்தை ரசித்தேன் ஐயா. ஐயப்பன் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. ஐயப்பன் கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். அங்கு செல்லும்போது நம்மையறியாமல் ஒரு சக்தி நம்மை ஆட்கொள்வதை உணர்ந்துள்ளேன்.
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
இது ஒன்றும் புதிதில்லையே ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை கோலங்கள் என்று பல பதிவுகளிலும் பார்க்கிறோமே கடவுள் என்பவரைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் தவறில்லையே வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
எல்லாக் கோவில்களைப்போல் அல்லவே சபரிமலை ஐயப்பன் கோவில் விசெஷ விரதங்கள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடை பிடித்து சபரி மலைக்குச் செல்பவர்கள் அரிதாகி விட்டார்கள் வருகைக்கு நன்றி சார்
இப்போதுள்ள சபரி மலை கோயில் புதிது என்றும் அங்கிருந்தும் இன்னும் பல மைல் தொலைவில் பயங்கரமான மிருகங்கள் வண்டுகள் நிறைந்த காட்டில் பழைய கோயில் உள்ளது என்றும் பலவருடங்கள் முன் அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் படித்துள்ளேன். மகரஜோதி தரிசனம் என்று மக்கள் குவிவது தேவையற்றதுதான்! முதலில் சில வரிகள் பாடல் வரிகள் சரியாக படிக்க முடியவில்லை! ஃபாண்ட் சரிபார்க்கவும் ஐயா!
ReplyDeleteகோட்டயத்தில் பணிபுரிந்தபோது நானும் சபரிமலை சென்று வந்திருக்கிறேன்.
ReplyDeleteகாணொளியை இரசித்தேன்! சரணம் ஐயப்பா பாடலை படிக்க உதவிய திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி!
சபரிமலைச் சென்று வந்தவன் என்கிற
ReplyDeleteவகையில் கூடுதலாய் இரசிக்க முடிந்தது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒரே ஒரு முறை சபரி மலைக்குச் சென்று வந்துள்ளேன் ஐயா
ReplyDeleteநன்றி
மாதங்களில் நான் மார்கழின்னு கண்ணனே சொல்லி இருக்கானாம். அதுதான் இந்த மாசம் பூராவும் பக்தியும் பரவசமும்!
ReplyDeleteமகரம் ஒன்னு , மகரஜோதி ன்னு இருக்கே. கூடவே ஒரு மண்டலம் விரதம் என்னும்போது கார்த்திகையிலேயே ஆரம்பிச்ச விரதம் மகரம் ஒன்னாம்தேதி முடியுது போல.
தாலப்பொலி எப்பவுமே பார்க்க அருமைதான். நீங்க சொல்றது போலத்தான் மலையாளிகள் அதிகம் இருக்கும் ஊரில் ஐயப்பன் கோவில் கட்டாயம் இருக்கும். சண்டிகரிலும் நல்லாவே கட்டி இருக்காங்க. அங்கே இன்னும் ஒரு விசேஷம், ஐயப்பன் யானை மேலேறி, நம்ம சண்டிகர் முருகன் கோவிலுக்கு வந்து, முருகனைப் பார்த்துட்டுப் போவார். அந்தக் கோவிலில் இருந்து இங்கே...பிறகு இங்கிருந்து அங்கேன்னு யானை ஊர்வலம், செண்டை மேளம், தாலப்பொலி எல்லாம் உண்டு!
எனக்கு அந்த வாழ்க்கை நினைவுக்கு வந்துருச்சு.
ReplyDelete@ தளிர் சுரேஷ்
வாருங்கள் ஐயா முதன் முதலாக நான் 1970ல் சபரிமலைக்குச் சென்றேன் அப்பொதே எனக்குத் தெரிந்தவர்கள் பலரும் 18 முறைக்கு மேலேயே சபரி மலைக்குச் சென்ற அனுபவம் கொண்டவர்கள் யாரும் வேறு புராதனக் கோவில் பற்றிக் கூறியதில்லை அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் இந்த யாத்திரை மீதே எனக்கு அவநம்பிக்கை கொள்ள வைத்தது அதன் பின் பல வருடங்கள் கழித்து மகர ஜோதி பற்றி அதிகார பூர்வமான செய்திகள் வந்தது சில நம்பிக்கைகளை நாம்கேள்விஏதும் கேட்காமலேயே ஏற்றுக் கொள்வது எனக்குள் சற்று அதிருப்தியை ஏற்படுத்துகிறது
உரு மாறிய எழுத்துகள் வேறு உலவியில் வராது. என் பதிவில் எல்லாமே சரியாகவே இருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ ரமணி
எந்தப் பொருள் பற்றியும் எழுதும் முன் அது பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டுதான் எழுதுவது என்வழக்கம் மலைக்குச் சென்ற அனுபவம் குறித்து நீங்கள் ஏதும் சொல்லவில்லையே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@கரந்தை ஜெயக்குமார்
மீண்டும் செல்ல ஆர்வம் இருக்கவில்லையா சார் வருகைக்கு நன்றி
ReplyDelete@ துளசி கோபால்
இங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவைக் காண்கிறேன் ஐயப்பன் கோவில்கள் ஒரு லாண்ட் மார்க் ஆகிவிட்டது வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ வே நடனசபாபதி
முழு ஊர்வலமும் ஒரு முறை காணொளியாக எடுத்திருந்தேன் பதிவிட முடியவில்லை. பதிவிட்டாலும் அத்தனை நீள காணொளியை யாரும் பார்ப்பதில்லை கோவில் சென்ற அனுபவம் பக்தியை ஊன்றியதா வருகைக்கு நன்றி ஐயா
நல்லதொரு பகிர்வு. நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென்று வந்தேன் - மகர ஜோதி சமயத்தில் அல்ல.....
ReplyDeleteகாணொளிகள் நன்று.
தலைநகர் தில்லியிலும் ஐயப்ப பூஜை கோலாகலமாக நடைபெறும். சில சமயம் செல்வதுண்டு.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete@ வெங்கட நாகராஜ்
நாங்கள் முதன் முதலில் சென்றபோது எடுத்துச் செல்லும் தேங்காய்கள் எத்தனையாவது முறை செல்கிறோமோ அதன்படி அந்தந்தப் படியில் உடைக்க வேண்டும் இப்போதெல்லாம் படிகளுக்குக் கவசம் சார்த்தி இருக்கிறார்கள் தேங்காய்களை கீழே படிக்கு அருகிலேயே உடைத்து விட வேண்டும் நிறையவே மாற்றங்கள் வந்து விட்டன. வருகைக்கு நன்றி சார்
சில இடங்களில் எழுத்துரு பிரச்சினை இருக்கு ஐயா...
ReplyDeleteஐயப்பனை தரிசிப்பது ஒரு சுகமே....
இருமுறை சென்றிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை ஐயப்பன் அழைப்பான் என்று காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி அய்யா
ReplyDeleteஇதுவரை நான் சபரிமலை சென்றதில்லை; செல்லும் எண்ணமும் தோன்றியதில்லை. அதிலும் தங்கள் மானிலத்துக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் கொட்டுவதும், அணையின் உயரத்தைக் கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் வளமையைச் சிதைப்பதும், அங்கிருப்பவர்களின் இயல்பாகிவிட்ட நிலையில் அந்த மானிலத்துக் கோவில்களுக்கு செல்வதை அனைவரும் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
ReplyDelete
ReplyDelete@ பரிவை சே குமார்
எழுத்துருப் பிரச்சனை என் பதிவில் இல்லை. ஒரு வேளை உபயோகிக்கும் உலவிதான் பிரச்சனை ஏற்படுத்துகிறதோ டிடி அவர்களின் பின்னூட்டத்தில் சரியானதை எழுதி இருக்கிறார் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ சிவகுமாரன்
உங்களுக்கு இன்னும் ஒரு முறை போக வேண்டும் என்று தோன்றும்போது போகலாம் அதுவே ஐயப்பனின் அழைப்பு என்றும் சொல்லலாம் வருகைக்கு நன்றி சிவகுமாரா
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
சபரிமலை உங்களை ஈர்க்கவில்லை என்பதே நிஜம் மற்றவை எல்லாம் காரணங்களாகக் கூறு கிறீர்கள். வருகைக்கு நன்றி சார் உங்களிடம் இருந்து இந்தக் கோபத்தை எதிர்பார்க்கவில்லை ஐயா. வருகைக்கு நன்றி
ஐயா, எழுத்துருப் பிரச்னை உள்ளது. அதை டிடி காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டிருக்கார்னு நினைக்கிறேன். நானும் டிடியின் பின்னூட்டத்தில் தான் படித்தேன். :)
ReplyDeleteசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா சுவாமி சரணம் ஐயப்பா
ReplyDeleteசுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்
என்று துவங்கி
மண்டல நுயம்பு நோற்று
அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு
புண்ய பாப சுமடுகளாம்
இருமுடிக் கெட்டும் ஏந்தி
பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
பம்பையில் குளிச்சு தோர்த்தி
உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே உணர்த்தி
பொள்ளையாயோர் ஒடுக்கமாய்
பேட்டை துள்ளிப் பாட்டு பாடி
பதினெட்டாம் படி செவுட்டாம்
வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
ஸ்ரீகோவில் திருநடையங்கள்
கற்பூர மலைகள் கை கூப்பி தொழுதிடும்போள்
பத்மராகப் ப்ரபவியர்த்தம்
திருப்பதங்கள் சும்பிக்கும்
கிருஷ்ண துளசிப் பூக்களாக வருந்நு ஞங்கள்(சரண்ம் ஐயப்பா) //
இதோ இங்கே நானும் வெட்டி ஒட்டி இருக்கேன் பாருங்கள். :)
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
என் பதிவில் எழுத்துரு மாறவில்லை அதையே இங்கு இடுகிறேன் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்
என்று துவங்கி
மண்டல நுயம்பு நோற்று
அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு
புண்ய பாப சுமடுகளாம்
இருமுடிக் கெட்டும் ஏந்தி
பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
பம்பையில் குளிச்சு தோர்த்தி
உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே உணர்த்தி
பொள்ளையாயோர் ஒடுக்கமாய்
பேட்டை துள்ளிப் பாட்டு பாடி
பதினெட்டாம் படி செவுட்டாம்
வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா )
ஸ்ரீகோவில் திருநடையங்கள்
கற்பூர மலைகள் கை கூப்பி தொழுதிடும்போள்
பத்மராகப் ப்ரபவியர்த்தம்
திருப்பதங்கள் சும்பிக்கும்
கிருஷ்ண துளசிப் பூக்களாக வருந்நு ஞங்கள்(சரண்ம் ஐயப்பா)