பொங்கலை முன்னிட்டு
----------------------------------
ஒவ்வொரு பண்டிகைக்கும்
ஒரு கதை உண்டு
பொங்கலுக்கும் ஒரு கதை
கேளீர்
அந்தக் கால ஆயர்
பண்டிகை போகி
அது இந்திரனுக்கெ
உரித்தாயிற்று
அதுவே அந்தநாள் இந்திர
விழாவாயிற்று
மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,
மரம் நிறைந்த மலைக்கன்றோ விழா வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
பெருமழையுடன் இடியும் கூட்டி இ டர் கொடுக்கக் கோவர்தன
மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.
மரம் நிறைந்த மலைக்கன்றோ விழா வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
பெருமழையுடன் இடியும் கூட்டி இ டர் கொடுக்கக் கோவர்தன
மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.
செறுக் கொழிந்த இந்திரனுக்குத் தொடரும் விழா
போகி
அவனிடமிருந்து ஆநிரைகளையும் ஆயர்களையும்
காத்த நாள்
சூரிய நாராயண வழிபாடாயிற்று பயிர்காக்கும் பரிதிக்கு
நன்றி நவில அதுவே பொங்கலுக்கு வித்தாயிற்று
அறுவடை செய்த புது நெல் அரிசி கொண்டு பொங்கல்
படைத்து
மக்கள் மகிழும் நாளே பொங்கல் திருநாள்
உழவருக்கு உதவும் ஆநிரைக்கும் நன்றி நவில
அதன் அடுத்த நாளே மாட்டுப்பொங்கல்
மகரம் என்றால் சூரியன் அவன் தனுர் ராசிவிட்டு
மகர ராசிக்குள் நுழையும் காலம் உத்தராயணம் எனப்படும்
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளே மகர சங்கராந்தி
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளே மகர சங்கராந்தி
இது
ஒரு உழவன் திருநாள்
தமிழர்களுக்கே
உரித்தானது போன்ற
மயக்கம்
ஏனோ உழைக்கும் மக்கள்
மனம்
மகிழும் நந்நாள்
ஆண்டின் துவக்கமே இந்நாள் என்று
அரசாணை
இட்டு மாற்றவும் அந்தோ முயன்றனர்
நாளெல்லாம்
ஒன்றுபோல் இருக்க
நன்றி
நவிலக் கொண்டாடும் திருநாளில்
தைபிறந்தால்
வழி பிறக்கும்என்னும் நம்பிக்கையே ஆதாரம்
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடும் இந்நாளில்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடும் இந்நாளில்
அனைவருக்கு
மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteநேற்று பேசினோம், நலம் தானே? மீண்டும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
ReplyDelete@ ஸ்ரீராம்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
@செல்லப்பா யக்ஞசாமி
வருகைக்கும் வாழ்த்டுக்கும் நன்றி /
சில பிரச்சனைகள் காரணமாக இதையே மீள்பதிவாக பொங்கலுக்காக என்னும் தலைப்பில் பதிவிட்டிருக்கிறேன்
இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்!
ReplyDeleteநன்றிமேடம்
Delete