புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
---------------------------------------------=
ஆண்டு
ஒன்று பிறக்கிறது வாழ்த்துகள் பரிமாறப்படுகின்றன். பல இடங்களில் கொண்டாட்டங்கள்
நடக்கின்றன.சரி என் நினைவைப் பிழிந்து
தேடினேன் இம்மாதிரி வாழ்த்துகள் பரிமாறப்படுவதும்
புத்தாண்டை வரவேற்பதும்
எப்போதிருந்து தொடங்கியது என் சிறிய வயதில் இவை எதுவும் நடந்த நினைவுகளே இல்லை மீறிப்போனால் தமிழ்ப்
புத்தாண்டில் கடவுளை வேண்டிக் கொண்டு விருந்து சமைத்து வக்கணையாகச்
சாப்பிடுவோம் கோவில்களில் ஆண்டு பலனாக
பஞ்சாங்கம் பார்த்து ஆண்டின் பலன்களைக்
கணித்துக் கூறுவார்கள் இது தவிர வேறுவிதக் கொண்டாட்டங்களை நான் கண்டதில்லை
திருச்சியில் குடியிருப்பில் வசித்தபோது
புத்தாண்டு விழாவாக கிளப்பில் ஆர்கெஸ்ட்ரா ம்யூசிக்குடன் டின்னர் வகைகளோடு குழுவாக புத்தாண்டினை
வரவேற்பார்க;ள் பின்னர் புத்தாண்டு
பிரதிக்ஞைகள் தொடங்கியது. பெரும்பாலும் அவை அடுத்த நாளிலேயே மறக்கப்பட்டு
விடும்
மேலை
நாடுகளில் புத்தாண்டை வாண வேடிக்கைகளுடன்
வர வேற்பார்கள் அவர்கள் செய்வதை நாமும்
செய்யாவிட்டால் எப்படி.?இந்த ஆண்டு மைசூர் பாலசில் புத்தாண்டு வாண
வேடிக்கைகளுடன் வரவேற்கப்பட்டது
ஆஸ்திரேலியா சிட்னியில் புத்தாண்டு வாணவேடிக்கை (உபயம் கூகிள் ) |
சென்ற ஆண்டு என் இளைய மகனுடன் அவனது அடுக்கு மாடிக்
குடியிருப்பில் புத்தாண்டுக் கோலாகலங்களில் பங்கேற்க வில்லையாயினும் கண்டு களித்தோம் சொந்தங்களில் பலரும் இளைய வயதினர்கள் யாராவது
ஒருவர் வீட்டில் கூடிக் குடித்து புத்தாண்டினை வரவேற்கிறார்கள் நமக்கெல்லாம் அழைப்பு இல்லை அவர்களது சுதந்திரம்போய்விடுமோ
என்னும்பயம் நான் எங்களை பனிரெண்டு மணிக்கு எழுப்பி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் பெங்களூரில் மஹாத்மா காந்தி
ரோட் ப்ரிகேட் ரோட் போன்ற இடங்களில் ஆண்களும் பெண்களும் கூடுகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று நான்பார்த்தது இல்லை. இந்த ஆண்டு கூட்டம் அதிகமாகி பெண்கள்
மிகவும் சீண்டப்பட்டதாகத்தகவல்
புத்தாண்டை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்
பிரத்தியேக கவனம் செலுத்துகிறார்கள்
பாட்டு டான்ஸ் உணவு போன்றவற்றுக்காக
கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது அந்த ஒரு நாள் கொண்டாட்டதுக்கு ஆகும் செலவு
மிகவும் அதிகம் சாதாரணர்
நினைத்துப்பார்க்க முடியாதது இருந்தும் செலவு
செய்ய அதற்கான மக்கள் தயாராய் இருக்கிறார்கள் அந்தச் செலவில் ஒரு ஏழைக் குடும்பம்
ஒருமாதம் நல்லபடியாய் குடும்பம் நடத்த முடியும்
இப்போது ட்ரெண்ட் மாறி வருகிறது குழுவாகச் சிலர் கூடி ஏதாவது காட் ஃபொர்சேக்கன்
(god forsaken) இடத்தில் டெண்ட் அடித்து (bon
fire )பான் ஃபைர் எழுப்பி புதிய அனுபவங்களோடு புத்தாண்டை
வரவேற்கிறார்கள்
என்
மகனின் ஃபேஸ்புக் கில் அவன் எழுதி இருக்கிறதும் பகிரப்பட வேண்டியதே
“ A new year, is new, only
for first 24 hours. Thereafter it's just a year that will pass by like any
other year. If u want to keep it fresh and if u want to keep it new, then
delete the day that passed by and think every next day is the beginning of a
new year. After all, calendar was designed by Mankind and when we can think
that way, we can think this way too..i.e.,let everyday be celebrated like 1st
January and let every night be celebrated like 31st December .Liveyour life by not pleasing others but by fulfilling your dreams. Let all your
dreams come true
அந்த பணத்தில் ஒரு ஏழைக்குடும்பம் வாழ்க்கை நடத்த முடியும்
ReplyDeleteஸூப்பர் ஐயா
நல்ல செயல்.
ReplyDeleteஇதுவே என் கருத்துகளும்.
ReplyDeleteவயதொன்றைக் கடக்கிறோம் என்னும் எண்ணம் தவிர வேறு புதிதாக ஒன்றும் தோன்றாது. அந்தக் காலத்தில் செல்போன், டிவி, மால் என்று எதுவும் கிடையாது. இப்போது அதெல்லாம் இருப்பதும் ஒரு காரணம். அவர்களுக்கும் பிழைப்பு நடக்க வேண்டுமே!
ReplyDelete//புத்தாண்டை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் பிரத்தியேக கவனம் செலுத்துகிறார்கள் பாட்டு டான்ஸ் உணவு போன்றவற்றுக்காக கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது அந்த ஒரு நாள் கொண்டாட்டதுக்கு ஆகும் செலவு மிகவும் அதிகம் சாதாரணர் நினைத்துப்பார்க்க முடியாதது இருந்தும் செலவு செய்ய அதற்கான மக்கள் தயாராய் இருக்கிறார்கள் அந்தச் செலவில் ஒரு ஏழைக் குடும்பம் ஒருமாதம் நல்லபடியாய் குடும்பம் நடத்த முடியும்.//
ReplyDeleteதொலைக்காட்சிகள் மூலமே புத்தாண்டுக் கொண்டாட்டக் கலாசாரங்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த டிமானிடசைசேஷனுக்குப் பின்னரும் புத்தாண்டை இப்படிச் செலவு செய்து கொண்டாடும்படியாக இருக்கு என்பது ஆச்சரியமாக இல்லை? இத்தனைக்கும் யாருக்கும் சம்பளம் கிடைக்கவில்லை. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. அரசு மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தி விட்டது. வியாபாரங்களே நடக்கவில்லை. எல்லோரும் கடையைக் கட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இம்மாதிரிக் கஷ்டமான சூழ்நிலையிலேயே இப்படிப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களா? இதில் சாமானியர்களும் அடங்குவார்கள். பணம் படைத்தவர்கள் ஐந்து நக்ஷத்திர ஓட்டல்களுக்குப் போனால் அவங்க அவங்களுக்கு ஏற்ற ஓட்டல்கள், பார், கடற்கரை போன்ற இடங்களுக்குப் போய்க் குடித்துக் கும்மாளமிடுகின்றனர். இதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது! அதிலும் இப்போதைய டிமானிடைசேஷன் கஷ்டத்தில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete@ கில்லர்ஜி
நிஜம்தானே வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ நண்டு@நொரண்டு
எது...?
@டாக்டர் கந்தசாமி
ReplyDeleteஎன் கருத்த்புகளோடு ஒத்துப்போவதற்கு மகிழ்ச்சி சார்
ReplyDelete@ ஸ்ரீராம்
இருந்தாலும் புத்தாண்டில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை
எதிர்பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதே
@ கீதா சாம்பசிவம்
ReplyDeleteபுத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இவால்வ் ஆனது பற்றிய என் கருத்துகளே பதிவு. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை வரவேற்பவர்கள் அல்லவா அது பற்றி கூற வேண்டும் நமக்கு இந்த தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகளே போதும் போதுமென்றாகிறது வருகைக்கு நன்றி மேம்
ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDelete!!! ???
ஆடம்பரமான கொண்டாட்டங்கள் இப்போதுதான். முன்பெல்லாம் வாழ்த்து தெரிவிப்பதோடு முடிந்து விடும். ஆங்கில
ReplyDeleteமாத கணக்கில்தாதா சம்பளம் வாங்குகிறோம் அதனால் இதையும் கொண்டாடத்தான் வேண்டும் என்று அம்மா இனிப்பு ஏதாவது செய்வாள்.
@கீதா சாம்பசிவம்: இந்த வருடம் டீ மானிடைசேஷனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறைந்து விட்டது என்று ஸ்டார் ஹோட்டல்கள் புலம்பியிருந்ததே
ReplyDeleteசெல்போனில் டைப் செய்வது கஷ்டமாக இருக்கிறது. ஓமன் நாட்டில் வசித்த பொழுது,அந்த நாட்டு மக்கள் ஆங்கில புத்தாண்டு அன்று வாழ்த்து தெரிவித்தால், இது எங்கள் புத்தாண்டு கிடையாது என்று கூறி விடுவார்கள்
ReplyDeleteஇனிய கொண்டாட்டம்.மனது நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅணமைக் காலமாகத்தான்இதுபோன்ற ஆடம்பர கொண்டாட்டங்கள் அதிகரித்துவீட்டன
ReplyDeleteபொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
>>> அந்த ஒரு நாள் கொண்டாட்டதுக்கு ஆகும் செலவு மிகவும் அதிகம் சாதாரணர் நினைத்துப்பார்க்க முடியாதது இருந்தும் செலவு செய்ய அதற்கான மக்கள் தயாராய் இருக்கிறார்கள்..<<<
ReplyDeleteஇருப்பவர்கள் அள்ளி முடிந்து கொள்கின்றார்கள்..
ஆனாலும் வீண் ஆடம்பரமும் வறட்டு கர்வமும் நம்மவர்களின் உடன் பிறப்பல்லவா!..
இந்தியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் சல்லியம் அதிகமாகிக்கிடக்கு இப்பெல்லாம்.... :-(
ReplyDeleteஇங்கே எங்க ஊரில் பரவாயில்லை. உள்ளூர் பொட்டானிகல் கார்டனில் மாலை 6 மணிக்குத் தொடங்கி நடக்கும் விழாவுக்கு இரவு பதினொன்னரை வாக்கில் போய்ச்சேருவோம். வாணவேடிக்கை பார்த்து முடிச்சவுடன் வீடு வந்தால் ஆச்சு புத்தாண்டு.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ஹஹஹஹா........ நன்றி
ReplyDelete@ பானுமதி வெங்கடேஸ்வரன்
இந்த வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் கூட எப்போதிலிருந்து என்று நினைவுக்கு வரவில்லை.
ReplyDelete@பானுமதி வெங்கடேஸ்வரன்
இந்த முறை எல்லாமே சப்ட்யூட் தான்
ReplyDelete@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிவு எழுதுவது செல் போன் மூலமா வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
எனக்கு எல்லா நாளும் ஒருபோல்தான் உங்களுக்கும் வாழ்த்துகள் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
வருடாவருடம் கொண்டாட்டங்களில் மாறுதல் ( முன்னேற்றம் )தெரிகிறதோ வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துரைசெல்வராஜு
/ஆனாலும் வீண் ஆடம்பரமும் வறட்டு கர்வமும் நம்மவர்களின் உடன் பிறப்பல்லவா!../ சரியாகச் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துளசி கோபால்
திருச்சியில் குடீருப்பில் இருந்தபோது க்ளப்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் போல என்று நினைக்கிறேன் அங்கு வாண வேடிக்கைகள் கிடையாது பதிவில் ஒரு வாணவேடிக்கை படம் போட்டிருக்கிறேனே வருகைக்கு நன்றி மேம்
இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்பது 70 களில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இருந்தது இன்று அநேகமாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது (?). தங்கள் மகன் சொல்லியிருப்பதுபோல் ஆண்டின் முதல் நாளும் மற்ற நாள் போல் தான். எனவே இதற்காக பணத்தை ‘தண்ணீராக’ செலவு செய்யவேண்டியதில்லை எனது கருத்து.
ReplyDelete
ReplyDelete@ வேநடனசபாபதி
பழக்கத்தில் ஆங்கில ஆண்டையே நாம் தொடர்கிறோம் ஆகவே அந்த ஆண்டின் துவக்கத்தில் வாழ்த்துகள் சொல்லிக் கொள்வது தவறாகாது என்பது என் கருத்து. ஆனால் எதிலுமே நம்மவர்கள் நினைப்பதற்கு மாறாகவே செய்வதில் தேர்ந்துவிட்டார்கள் வருகைக்கு நன்றி ஐயா
புதிது புதிதாய் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றிலும் வியாபாரம்.
ReplyDeleteதலைநகர் தில்லியிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வீண்/ஆடம்பர செலவுகள் உண்டு.
எல்லாத்திலும் வியாபாரம்....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
ஆண்டி ந் துவக்க நாளைக் கொண்டாட விரும்புகிறார்கள் எங்குதான் வியாபாரம் இல்லை. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ பரிவை சே குமார்
ஆமாம் சார். எல்லாஇடத்திலும் வியாபாரம்தான் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete@ மனோ சாமிநாதன்
உங்களுக்கும் எங்கள் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள் வருகைக்கு நன்றி மேம்
அனைத்திலும் வியாபார நோக்கம் மையம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தவிர, நம் சுயத்தையும் இழக்கிறோம்.
ReplyDelete
ReplyDelete@டாக்டர் ஜம்புலிங்கம்
நம் சுயத்தை நாம் ஏன் இழக்கவேண்டும் வருகைக்கு நன்றி சார்