Sunday, January 22, 2017

நன்றி நவில்கிறேன்


                                          நன்றி நவில்கிறேன்
                                           ---------------------------


 என் வலைப்பூவுக்கு வரும்  வாசகர்களுக்குப் புலப்படுகிறதா தெரியவில்லை.  என்  தளமே மாறி விட்டிருப்பதை கவனித்தீர்களா  என்  பதிவு ஒன்றில் சில புரியாத விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்  நண்பர் தனபாலன்  என்  தளத்தில்  இருந்த வலையக இணைப்பை எடுக்கச் சொன்னார்  எனக்குத்தான் ஏதும் தெரியாதே. அவரையே உதவக் கேட்டேன்   என்  தளத்துச் செல்ல அனுமதி அளிக்கும்   முகவரி மற்றும்  கடவுச் சொல் போன்றவை தேவை என்றார்.  கடவுச் சொல்லைக் கொடுக்க எனக்குத் தயக்கமாக இருந்தது  என்  ப்ரைவசியில் பிறரை அனுமதிப்பது என்றாகி விடுமே. இருந்தாலும்  நம்  நண்பர்தானே  என்று கொடுத்தேன் (இதற்குப் பின்  என்  கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்.....! )  ஒரே நாளில் ஏதேதோ மாற்றங்கள் செய்து  என்  தளத்தையே மாற்றிவிட்டார்மின் அஞ்சலில் என் பதிவுகளைப் பெற இப்போது இணைய முடியும்  மறுமொழி எழுதுவதில் மாற்றம்  கொண்டு வந்து விட்டார்  வேறு சில விஷயங்களும்  சேர்ந்திருக்கின்றன. சொல்ல மறந்து விட்டேனே டாட் இன் னை டாட் காமாக மாற்றி இருக்கிறார் தமிழ்மண வாக்குப்பட்டையும்  இருக்கிறது  இனி பார்க்க வேண்டும்  தமிழ் மண ராங்க் இப்போது இருக்கும்  24 ல்லிருந்து  மேல் நோக்கிப் போகிறதா என்று எனு சென்றிவிராலிழ்மத்ில் இணத்ிழ்மாக்கும்  கொடத்ு விட்டார்  ஆனல் என்  வைப்பூ பிவில் ிழ்மாக்குப் பட்டை காணோம்  ிழ் மத்ில் என் பிவில் இரந்து நான்  வாக்குப்போடுயன்று எனக்குஅு சத்ிியப்பில்ல என்னிரச்சையெரியில்லைஎனக்கெரியேண்டியு இன்னும்  நிறையே இருக்கிறு ஒரு பிரச்சை என்று உடன் வந்து உிய ாலன் இிலும் உுவார் என்று நினைக்கிறேன்
 இத்தனையும்  செய்து கொடுத்த நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்      

50 comments:

  1. ஐயா நன்றி தான் நன்றி சொல்லணும்... இது ஒரு வாய்ப்பு... நன்றி...

    (1)
    // தமிழ் மண ராங்க் இப்போது இருக்கும் // என்பதிலிருந்து வரிகள் படிக்க முடியாமல் உள்ளதால் இதோ கீழே :-

    தமிழ் மண ராங்க் இப்போது இருக்கும் 24 ல்லிருந்து மேல் நோக்கிப் போகிறதா என்று எனது சென்றபதிவை திரு தனபாலனே தமிழ்மணத்தில் இணைத்து தமிழ்மண வாக்கும் கொடுத்து விட்டார் ஆனல் என் வலைப்பூ பதிவில் தமிழ்மண வாக்குப் பட்டை காணோம் தமிழ் மணத்தில் என் பதிவில் இருந்தது நான் வாக்குப்போட முயன்றபோது எனக்குஅது சாத்திியப்படவில்ல என்ன பிரச்சனையோ தெரியவில்லைஎனக்கு தெரிய வேண்டியது இன்னும் நிறையவே இருக்கிறது ஒரு பிரச்சனை என்றபோது உடன் வந்து உதவிய தனபாலன் இதிலும் உதவுவார் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பதிவில் எழுத்துருக்கள் சரியாகத்தானே இருக்கிறது இந்தப்பதிவு தமிழ் மணத்திஹில் இணைக்கப்பட்டு விட்டது வாக்குப் பட்டையும் அதில் இருக்கிறது என்னால்வாக்குபதிய வைக்க முடியவில்லை மீண்டும் நன்றி.

      Delete
  2. (2)

    ஐயா... உங்களின் இந்தப் பதிவு browser-ல் URL இவ்வாறு இருந்தால் வாக்குப்பட்டை தெரியாது...
    https://gmbat1649.blogspot.com/2017/01/blog-post_22.html
    http://gmbat1649.blogspot.com/2017/01/blog-post_22.html <--- இவ்வாறு இருந்தால் வாக்குப்பட்டை தெரியும்...

    இன்னொரு விசயம் : வாசகர்கள் உங்கள் பதிவை வாசித்து விட்டு, ஓட்டுப் போட்டு விட்டு கருத்துரை சொன்னால், ஓட்டும் விழும்... கருத்துரையும் வரும்...

    அவ்வாறு இல்லாமல் கருத்துரை எழுதி விட்டு "publish" சொடுக்கிய பின், வாக்குப்பட்டையை தேடினால், அது இருக்காது... ஏனென்றால், மேலே சொன்னது போல் https://gmbat1649.blogspot.com/2017/01/blog-post_22.html-என்று மாறி விடும்... கவனியுங்கள்--->(https)

    ReplyDelete
    Replies
    1. view blog ஐ சொடுக்கினால் தமிழ் மணப்பட்டை காணோம் ஆனால் posts ல் view ஐ சொடுக்கினால் தமிழ்மண பட்டை வருகிறது கருத்துரை சொல்லும் முன்னும் வாக்கு அளிக்க முடியவில்லை https ஐ http ஆக மாற்ற இயலவில்லை

      Delete
    2. ஒவ்வொரு பதிவின் போது மட்டுமே ஓட்டுப்பட்டை தெரியும் ஐயா... முகப்பு (gmbat1649.blogspot.com) பகுதியில் வராது...

      Delete
    3. உங்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை... கருத்துரை இடும் நம் நண்பர்கள் இணைத்து விடுவார்கள்...

      உங்களின் இந்தப்பதிவின் வாக்குபதிவின் இணைப்பு கீழே உள்ளது :-

      http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1445094

      இதை அப்படியே copy செய்து இன்னொரு tab-ல் paste செய்து விட்டு, வாக்களித்து விடுங்கள்...

      முக்கியம் : தமிழ்மணத்தில் நீங்கள் இணையும் போது கொடுத்த பயனர் பெயர் / மின்னஞ்சல் மற்றும் கடவுச் சொல் ஞாபகம் இருக்க வேண்டும்... நன்றி ஐயா...

      Delete
    4. இதில்குறிப்பிட்டிருக்கும் லிங்கை காப்பி பேஸ்ட் செய்து இட்டால் தமிழ்மணம் பயனர் பெயர் மின் அஞ்சல் முகவரி கடவுச்சொல் கேட்கிறது அவற்றைக் கொடுத்தால் தவறானது என்று வருகிறதேபழைய கடவுச்சொல் புதிய கடவுச்சொல் எல்லாம்போட்டுப்பார்த்தும் சரியாகவில்லை

      Delete
  3. உங்கள் தளம் மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. தம வாக்கும் அளித்து விட்டேன்! எங்களுக்கும் இதே முறையில் தனபாலன்தான் உதவி செய்தார்.

    நான் எந்த தளம் சென்றாலும் தம வாக்கு அளித்து விடுவேன். சில சமயம் சில தளங்களுக்கு மொபைல் மூலம் தம வாக்கு அளிக்க முடியாது. கணினி மூலம் வரும்போதும் கூட பல தளங்களில் பின்னூட்டம் கொடுக்கும் முன்பு வாக்கு அழித்துவிட வேண்டும். ஏனென்றால் பின்னர் வாக்குப்பட்டை காணாமல் போய்விடும்!!


    ReplyDelete
    Replies
    1. // சில சமயம் சில தளங்களுக்கு மொபைல் மூலம் தம வாக்கு அளிக்க முடியாது. //

      அனைத்து தளங்களுக்கும் வாக்களிக்க முடியும்... மொபைல் குரோம் புரௌசரில், மேலே உள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கி, Request desktop site என்பதில் டிக் போடவும்...

      பிறகு URL பார்க்கவும்... அதற்கேற்ப edit செய்து enter தட்டவும்... உங்கள் எண்ணம் நிறைவேறும்... நன்றி...

      Delete
    2. நான் கணினியில் க்ரோம் ப்ரௌசரில் கண்ட மூன்று புள்ளிகளைச் சொடுக்கினேன் request desktop site என்பதே காண வில்லை

      Delete
  4. 3)

    /// கடவுச் சொல்லைக் கொடுக்க எனக்குத் தயக்கமாக இருந்தது என் ப்ரைவசியில் பிறரை அனுமதிப்பது என்றாகி விடுமே. ///

    ஹா... ஹா... ஒவ்வொரு நண்பர்களுக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து முடித்த பின், நானே கடவுச் சொல்லை மாற்ற சொல்லி விடுவேன்...

    இப்போது மூன்று மாதமாக வியாபாரம் சரிவர இல்லை என்பதால், பலருக்கும் உடனே உதவ முடிகிறது... சிலர் மெயில் முகவரி மற்றும் கடவுச் சொல் கொடுத்து விடுவார்கள்... 2-Step verification வைத்திருப்பார்கள்... அதனால் நேரம் கிடைக்கும் போது அவர்கள் தளத்திற்கு உள்ளே சென்று மாற்றம் செய்ய நினைத்தால் முடியாது... காரணம் : அவர்கள் Security Settings-ல் கொடுத்த அவரின் கைபேசிக்கு 6 இலக்க எண் வரும்... அதனால் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு, 6 இலக்க எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களின் தளத்திற்குள்ளே செல்வேன்...

    2-Step verification - என்றால் என்ன...? விரைவில் பதிவு எழுதுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. 4

      முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புகிறேன்... தமிழ்மணம் சரியாக வேலை செய்து பல வருடங்கள் ஆகி விட்டது... இது எல்லாம் சும்மா... வெறும் மாயை...

      பல தொழிற்நுட்ப பதிவுகளில் இதை குறிப்பிட்டுள்ளேன்... மீண்டும் உங்களுக்காக :-

      உங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றியது தான் மிகவும் முக்கியம்... ஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...

      http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

      நன்றி...

      Delete
    2. எனக்கும் பலவிஷயங்கள் புரிவதில்லை blogspot.com ஆக மாறி இருப்பது தெரிகிறது

      Delete
    3. எனக்கும் பலவிஷயங்கள் புரிவதில்லை blogspot.com ஆக மாறி இருப்பது தெரிகிறது

      Delete
  5. போற்றத் தக்கது டிடியின் உதவி. கடைசியில் எழுத்துரு சரியாக இல்லாமல் படிக்க முடியவில்லை. அதையும் டிடி போட்டு விட்டார். :)

    ReplyDelete
    Replies
    1. க்ரோம் ப்ரௌசரில் போனால் எழுத்துருக்கல சரியா வரவில்லை ஃபயர் ஃபாக்சில் பிரச்சனை இல்லை மீண்டும் டிடிக்கு நன்றி

      Delete
  6. திண்டுக்கல் தனபாலன் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. நானும் வாழ்த்துகிறேன்

      Delete
  7. அப்படி என்ன இருக்கிறது, தம பட்டையில்?.. நான் தமிழ்மணம் இணைப்பிலிருந்து வெளிவந்து பல ஆண்டுகள் ஆயிற்று. இதனால் என்ன பயன் என்றால் தேர்ந்தெடுத்த எனக்கென்று அமைந்த வாசகர்கள் தவறாது வந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. எனக்கான வாசக்ர் வட்டத்தை நானே நிர்ணயித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ள் முடிகிறது.
    அநாவசிய சர்ச்சைகள் இன்றி ஒருவரை ஒருஅர் புரிந்து கொண்ட உணர்வுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதனால் கிடைக்கும் மன மலர்ச்சி அனந்தம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் என்றோ இணைத்தது தம பட்டை இல்லாமல் இருந்தது இப்போது டிடியின் உதவியால் இருக்கிறதுஎன் வாசகர் வட்டம் இன்னும்கூடினால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும் வாசகர் வட்டம் என்பது பொதுவாக நாம் எங்கெல்லாம் போகிறோம் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது ஒருவரைஒருவர் புரிந்து கொள்ள அவர்கள் நம் பதிவுகளைப்படிக்க வேண்டும் அல்லவா என்றாவது வருகிறீர்கள் நன்றி

      Delete
  8. வலைச் சித்தரின் பணிகள் போற்றுதலுக்கு உரியவை

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் அதைப் பதிவாக்கினேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. வாழ்த்துகள் அய்யா! திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி. மீண்டும் வருவேன். த.ம.3

    ReplyDelete
    Replies
    1. எல்லாப்பதிவுகளுக்கும் வாருங்கள் நன்றி சார்

      Delete
  10. தனபாலன் - வலைப்பதிவர்கள் பலருக்கும் அவர் உதவி செய்வது பாராட்டுக்குரியது.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

      Delete
  11. வலையுலகம் போற்றும் திண்டுக்கல் தனபாலன் பணிகளை, நானும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் சேர்வதற்கு நன்றி சார்

      Delete
  12. திரு.. தனபாலன் அவர்களின் பணி மகத்தானது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவின் மூலம் தெரியாதவர் இருந்தால் தெரிந்து கொண்டிருப்பர் வருகைக்கு நன்றி சார்

      Delete
  13. த ம வாக்கு உடனே விழுந்து விட்டதே !என் தளத்தையும் ஒரு முறை இப்படி சீர்படுத்திக் கொடுத்த dd அவர்களுக்கு நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே டிடியின் தயவு வருகைக்கு நன்றி ஜி தொடர்ந்து வாக்களிக்க வேண்டுகிறேன்

      Delete
    2. நான் வாக்கு தவறமாட்டேன் ,நீங்கள் எப்படி :)

      Delete
    3. எனக்குத்தான் வாக்கு போடவே வரமாட்டேன் என்கிறதே
      நன்றி ஜி

      Delete
  14. நண்பர் எனக்கும் பலமுறை உதவி இருக்கின்றார் ஐயா வாழ்த்துகள் தமிழ் மணம் முதலிடம் பெற.....
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாக்குகள் பெற்றால் ஒருவேளை ராங்கில் முன்னேறலாம் வாழ்த்துக்கு நன்றி ஜி

      Delete
  15. Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  16. திரு தனபாலன் அவர்களின் அரிய உதவியும் பணியும் பாராட்டத்தக்கன. அதனை உங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்தோம் ஐயா. பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுவதில் நானும் உண்டு வருகைக்கு நன்றி சார்

      Delete
  17. நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனக்கும் உதவியிருக்கிறார். அவர் செய்கின்ற உதவி ஞாலத்தின் மாணப் பெரிது. அவருக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவின் மூலம் தனபாலன் உதவியவர்கள் பலரைத்தெரிகிறது நன்றி மறப்பது நன்றல்ல

      Delete
  18. டிடி ஆபத்பாந்தவன் அனாதரட்சகன்....அவர்தான் எல்லோருக்கும் டெக்னிக்கல் குரு......அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்...பாராட்டுக்கள் வாழ்த்துக்ள்...தளம் நன்றாக இருக்கிறது சார். மற்றும் எங்கள் மின் அஞ்சல் முகவரியைப் பதிந்துவிட்டோம் இதைத்தான் எதிர்பார்த்தோம்...இனி உங்கள் பதிவுகள் எங்கள் மின் அஞ்சலில் வந்துவிடும்....என்ன கொஞ்சம் நம் போஸ்டல் சர்வீஸ் போல கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். இப்போது ஃபாஸ்ட் கூரியர் செர்வீஸ் தமிழ்வலைப்பதிவகம் வாட்சப்பில் உள்ளது. ஆனால் நீங்கள் வாட்சப்பில் இல்லை இல்லையா சார்? எங்களுக்கு ரொம்பத்தான் பேராசை!!!.

    மின் அஞ்சல் பெட்டி இணைத்தமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. டிடிக்கு சளி பிடித்துவிடப்போகிறதுவழக்கம் பொல் என் பதிவுகளை உங்களுக்கு அனுப்புவேன் இதற்கு ஒரே தீர்வு என்
      ஃபாலோவர் பட்டியலில் இணைவதே பதிவிட்டவுடன் டாஷ் போர்டில் வரும் வருகைக்கு நன்றி

      Delete
  19. ’நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்ற குறளுக்கு பொருத்தமானவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். எனது வலைத்தளத்தில் Reply button என்ற அமைப்பை உருவாக்கித் தந்து, கருத்துரைப் பெட்டியில் மறுமொழி சொல்வதை எனக்கு எளிமையாக்கியவர் அவர்தான்.

    ReplyDelete
    Replies
    1. மழை பொழிகிறதோ இல்லையோ கணினியில் பிரச்சனை தீர்க்க தனபாலன் இருக்கிறார் வருகைக்கு நன்றி சார்

      Delete
  20. இன்சொல்லும், கேட்போர்க்கு கேட்ட உதவியை மனமுவந்து நல்குவதும் திண்டுக்கல்லாரின் பிறவிக்குணம். இறைவன் அவருக்கு நல்லனவெல்லாம் தந்து உயர்த்திடவேண்டும் என்பதே என் வாழ்த்து. - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. நானும் வாழ்த்தில் இணைகிறேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  21. திண்டுக்கல் தனபாலன் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன் வருகைக்கு நன்றி

      Delete