ஒருகதையும் ஒரு கணக்கும்
------------------------------------------
பாடுபட்டு உழைத்து
சொத்து
பல லட்சம் சேர்த்தும் கூடவே
கொண்டா செல்ல முடியும்.
படுக்கையில் விழுந்தது பெரிசு
கேட்டதும் பதறிய பிள்ளைகள்
ஐயோ என்றலறி வந்தனர்.
ஐயோ என்றழைக்காதீர், அவள் கணவன்
வருமுன்னே என்சொல் கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு பல விளைக்காமல்
கட்டிக்காத்து பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.
மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
பண்டொரு நாள் பாகம் பிரிப்பதில்
பக்கத்து வீட்டில் ஏற்பட்ட சிக்கல்
இருவரும் அறிந்த ஒன்று
பல லட்சம் சேர்த்தும் கூடவே
கொண்டா செல்ல முடியும்.
படுக்கையில் விழுந்தது பெரிசு
கேட்டதும் பதறிய பிள்ளைகள்
ஐயோ என்றலறி வந்தனர்.
ஐயோ என்றழைக்காதீர், அவள் கணவன்
வருமுன்னே என்சொல் கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு பல விளைக்காமல்
கட்டிக்காத்து பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.
மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
பண்டொரு நாள் பாகம் பிரிப்பதில்
பக்கத்து வீட்டில் ஏற்பட்ட சிக்கல்
இருவரும் அறிந்த ஒன்று
இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப் பகிரப பசுவின்
முன்பாதி முன்னவனுக்கும்
பின்பாதி சின்னவனுக்கும்
தென்னையின் தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம் தம்பிக்கும் என்று
ஆளுக்கொரு பாகம் அழகாகப் பிரித்தனர்
முன்னவன் புல் கொடுத்து மாடு வளர்த்து
நீர் வார்த்து மரம் வளர்த்து
வந்த பலன் பின்பாகப் பாலும்
தலைப்பாக தேங்காயும பாங்குடனே
அலுங்காமல் பெற்றான் இளையவன்
நேர்ந்த கதை நன்றாக அறிந்திருந்தான் அண்ணனும்
சொத்ததனைப் பிரிப்பதில் இருக்காது சிக்கல்
இருப்பதென்ன ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப் பேச்சு வார்த்தை வேண்டாம்
இருப்பதோ ரொக்கம் சரிபாதி பிரிப்போம் என்றான்
மூத்தவன் நீ
பாவம் சம்சாரி –சொத்தில்
எனக்கு வேண்டாம் சரிபாதி.
இன்றொரு பைசா, நாளை இரண்டு,
மறுநாள் நான்கு,என்று நாளும் ,
இரட்டிப்பாக்கி தினம் தினம் ஒரு மாதம்
நீ தரும் பைசா போதும்
மற்றதைப் பாவம் நீயே அனுபவி
என்றே நைசசியம் பேசிய
தம்பியை நம்பி ஏமாந்த அண்ணன்
சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.
=========================================
இது ஒரு மீள்பதிவு கதையும் கணக்கும் என்று பதிவிடுகிறேன் வாசிப்பவர்கள் கணக்கைத்தெரிந்து கொண்டால் நலம்
கணக்கு போட்டுத்தான் பாருங்களேன்
தம்பி கெட்டிக்காரன்.
ReplyDeleteமூத்தது மோழை இளையது காளை என்பார்கள் வருகைக்கு நன்றி சார்
Deleteஇந்தக் கணக்கின்படி
ReplyDeleteஅவன் முழுச் சொத்தைக் கொடுத்தாலும்
கொடுத்து மாளாதே !
கேட்டக் கதைதான் ஆயினும்
சொல்லிப் போனவிதம்
சுவாரஸ்யம் கூட்டிப் போகிறது
வாழ்த்துக்களுடன்...
கதையில் ஒரு கணக்கு வருவது சிறு துளி பெருவெள்ளம் எனக்காட்ட உதவியது வாழ்த்துக்கு நன்றி சார்
Deleteகவிதை வழியே கதை அருமை ஐயா
ReplyDeleteத.ம.2
பாராட்டுக்கு நன்றி ஜி
Deleteசுவாரசியம்.
ReplyDeleteவந்து ரசித்ததற்கு நன்றி மேம்
Deleteஏமாறுபவர்கள் இருக்கும்வரை....! பாவம் அந்த அண்ணன்!
ReplyDeleteஎமாற்றுபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா கதை கணக்குக்காக எழுதப்பட்டது வருகைக்கு நன்றி ஸ்ரீ
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி சார்
Deleteஆசை... ம்ஹீம்... பேராசை...
ReplyDeleteஅப்ப்டியும் இருக்கிறார்களே நன்றி சார்
Deleteஅட கவிதையாய் ஒரு கணக்கு. அருமை பாலா சார் !
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி மேம்
Deleteஎத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்ட கதை..
ReplyDeleteஅழகிய பாடலாக.. அருமை..
என்றோ கேட்டதும் கற்றதும் இன்று கை கொடுக்கிறது வருகைக்கு நன்றி சார்
Deleteஒவ்வொருமுறையும் எதோ ஒரு புதுமை, உங்கள் தளத்தில்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
அதற்குத்தானே முயற்சிசெய்கிறேன் வருகைக்கு நன்றி சார்
Deleteகதையும் கணக்கும் அருமை.
ReplyDeleteநிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
பாரட்டுக்கு நன்றி மேம்
Deleteகதை அருமை! கணக்குதான் உதைக்கிறது. நீங்களே சொல்லிவிடுங்களேன்.
ReplyDeleteவணக்கம் ஐயா கணக்குப் போட்டுப்பார்க்கச் சொல்வதே முக்கிய நோக்கம் இருந்தால்தான் தெரியும் சிறு துளி பெரு வெள்ளம் என்று
Deleteஆகா
ReplyDeleteஆசை பேராசை அல்லவா
வருகைக்கு நன்றி சார் நீங்கள் கணக்கு ஆசிரியர் அல்லவா பள்ளி மாணவர்களுக்குச் சொல்லலாமே
Deleteஎத்தனை ஆசை......
ReplyDeleteகவிதையில் கணக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்
Deleteஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....ஐயா இப்படியும் கணக்கு போடமுடியுமா?
ReplyDeleteஅதனால் என்ன ஐயா. எனக்கு ஒரு ஐயம் . விக்கிபீடியாவில் என் வாழ்வின் விளிம்பில் நூல் எடுக்கப்பட்டு விட்டதா வருகைக்கு நன்றி
Deleteகதையில் கணக்கு அதுவும் கவிதை வடிவில்...மூத்தது எப்போதுமே கொஞ்சம் சாமர்த்தியம் இல்லாததாகத்தான் இருக்கும் என்பர். இளையவன் செம ஸமார்ட்...உலகத்தார் சொல்லுவதும் அதைத்தான்..
ReplyDeleteஏமாந்து விடக் கூடாது என்று எச்சரிக்கவும் சிறு துளி பெருவெள்ளம் என்பதைச் சுட்டவுமே எழுதியது வருகைக்கு நன்றி
Delete