Friday, February 3, 2017

பல்சுவைப்பதிவா...?


                                                     பல்சுவைப்பதிவா...?
                                                    ----------------------------


எழுத ஒரு விஷயம் வேண்டும்  அதுவும்  ஒரு இடுகையாக இட சம்பவங்கள் வேண்டும் அது இல்லாத போதும்  இடுகை இட குட்டி குட்டி விஷயஙள் இருந்தாலும்  போதும்  தேற்றிவிடலாம்  அப்படித் தேற்ற முயன்றதன் விளைவே இப்பதிவு  ஒரு பல்சுவைபதிவு எனலாமா  உணர்ச்சிகளைப் பற்றி சொல்லும்போது முக்கியமாக பயம் கோபம்  சந்தோஷம் ஆச்சரியம் வெறுப்பு என்பதுபோல் கூறு கிறோம் ஆனால் அதற்குள்ளேயும்   எத்தனை எத்தனை பகுதிகள் என்பதை விளக்கும்   ஒரு படம் கிடைத்தது பகிர்கிறேன் பாருங்களேன் 
Emotions பள்ளியில் படிக்கும் பொது ( படித்ததே சொற்பம்தான் )கட்டுரை எழுதச் சொல்வார்கள் என்னைப் போல் இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை சமாளிக்கும் விதமே அலாதி  ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டு  வியாசத்தில் அவற்றைக் கொண்டு வருவதே நோக்கமாய் இருக்கும் என் ஆசிரியர் இம்மாதிரி இருக்கும் மாணவர்களை  பசுமாட்டுகதை தெரிந்தவர்கள் என்பார் உங்களுக்கும்  அதைச் சொல்கிறேனே
ஆசிரியர் பல தலைப்புகளைக் கொடுத்து கட்டுரை எழுிப் பழகச் சொல்வார் ஆனால் என் போல் ஓரிருவர் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு தயாராய் இருப்பார்கள் ஆசிரியர் தென்னை மரம் பற்றிய கட்டுரை எழுதச் சொன்னால்  இவர்கள் படித்திருக்க மாட்டார்கள் ஆனால் கட்டுரையும்  எழுதியாக வேண்டும் இவர்கள் படித்ததெல்லாம்  பசுமாடு பற்றி மட்டுமே  ஆனால் வியாசம்  எழுத வேண்டியது தென்னை மரம் பற்றி  சூட்டிகையானவர்கள் அல்லவா அவர்கள் தென்னைமரம் நெடிது ஓங்கி வளரும்   அதில் ஒரு பசுமாடு கட்டப்பட்டிருந்தது என்று தொடங்கி பசுமாடு பற்றி விலாவாரியாக எழுதுவார்கள் ஏனென்றால் அதுதானே அவர்களுக்குத் தெரியும் வாழ்க்கையில் இம்மாதிரி பசுமாடு பற்றி மட்டுமே தெரிந்திருக்கும்  பலரும்  உண்டு  அடியேனும்  அவர்களில் ஒருவனோ என்னும் ஐயமும்  வருவதுண்டு
கட்டுரை என்னும்போது அண்மையில் படித்த ஒரு மாணவனின் கட்டுரை பற்றிய எண்ணம்  எழுவதைத் தடுக்க முடியவில்லை
ஒரு வகுப்பில் அம்மா பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பணித்தார்கள்  ஐந்து நிமிட நேரம் கொடுக்கப்பட்டது  எல்லோரும் முனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்  அதில் ஒருவன்  சில விநாடிகளிலேயே எழுதி முடித்து விட்டான் ஆசிரியர் அவன் எழுதியதை வாங்கிப் படித்துப்பார்த்தார் வெகுவாக அவனைப் பாராட்டினார் அப்படி என்னதான்  எழுதி இருந்தான்  …?ஆங்கிலத்தில் உள்ள  26 எழுத்துக்களின்  எந்தகூட்டாலும்  வருணிக்க முடியாதவர்  அன்னை என்றிருந்ததாம்……!
வாழ்க்கை நிலை பற்றி என்னவெல்லாமோ கேள்விப்படுகிறோம்  எப்படி வாழ்ந்தாலும்  அவர்களுக்கும் தேவை வயிறார உண்ண உணவும்  மானத்தை காக்க சிறு துணியும் போதும் தானே அதில்லாமல் தன்  தேவைக்கு மீறி எவன் வைத்துக் கொண்டிருக்கிறானோ  அவன்  எங்கோ ஒரு பிச்சைக்காரனை அல்லது திருடனை உருவாக்குகிறான்   என்று காந்திஜி சொன்னாராம்  அவர் இந்தக் காணொளியைக் கண்டால்  என்ன நினைப்பார்  நமது குடியரசு தின முக்கிய விருந்தினராக  வந்திருந்த  அபு தாபியின்  இளவரசர் ( அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை பெரிய பெயர் ) அவரது தனி விமானத்தில் வந்தாராம் அது பற்றிய காணொளி இது  பாருங்கள்

  
   
மனம் அலைபாயாமல் இருக்க சில விஷயங்களில் அதைச் செலுத்த வேண்டும் அதுவே நான்  தஞ்சாவூர் ஓவியம் கண்ணாடி ஓவியம்  இவற்றைத் தீட்டக் காரணமாய் இருந்ததுகண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல் படாமல் போகவே கவனத்தை  வேறு திசையில் செலுத்த க்வில்லிங் மற்றும் டெரகோட்டா அணிகலன்கள்  செய்வதைக் கற்கத் தோற்றுவித்தது  அதிலும்  ஒரு பிரச்சனை என்னவென்றால்  நான்  ஆசையாய் செய்வதை அணிந்துகொள்ள  என் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லை வெறுமே செய்து இட மனமும் இல்லை  இருந்தாலும் செய்தவற்றை விரும்பும் சில பெண்குழந்தைகளுக்குக் கொடுக்கிறேன்   நான் செய்த சில அணிகலன்களைப் படமாக்கி இருக்கிறேன்  கடைசியாக சில்க் நூலில் சுற்றிய ஜிமிக்கி செய்யக் கற்றது

டெொட்டா அணிகன்கள் ஒரு பத்ிில்
க்வில்லிங்கில் ஒரு ிமிக்கி
சில்க் நூல் சுற்றியிமிக்கி


இந்தப்பதிவு எழுதும் நாள்ஜனவரி 30. தியாகிகள் தினம்  என்று நினைக்கப்படுவது இந்த நாளில் நாங்கள் அரக்கோணத்தில் இருந்தபோது காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ரேடியோவில் கூறிய செய்தியை அந்த தாசில்தார் தெரு முழுதும்  கூவித்தெரிவித்தோம்  எங்கள் வீட்டிலேயே இழவு விழுந்தது போல் என்  தந்தையாரும்  வீட்டில் உதவிக்கு இருந்த அம்மையாரும்  நிலை குலைந்து கதறி அழுதது நினைவில் இருக்கிறது இப்போதெல்லாம் காந்திஜி பற்றி வாய் புளித்ததோ  மாங்காய் புளித்ததோ என்னும்  பாவனையில்  அவதூறாகக் கருத்து கூறுவது அவர்களை அறிவு ஜீவிகளாகக் காட்டும்  திறனோ என்று சந்தேகப்பட வைக்கிறதுகாந்திஜியின்  அடிப்படைக் கொள்கைகளிலும்   அஹிம்சையிலும்  நம்பிக்கை அற்றவர்கள் காதி கேலண்டரில் காந்திஜி போல் ராட்டினம்  சுற்றும் போஸ் கொடுப்பது வருத்தமளிப்பதுடன்  நேரத்துக்குத் தகுந்தாற்போல்  தன்னை மாற்றிக்காட்டும்  குணமும் எச்சரிக்கை விடுக்கிறது
கீழே ஒரு ஆங்கில வாக்கியம்  இதைப்படித்ததும்  என்ன தோன்றுகிறது ஒரு ஆச்சரியமான நீள வாக்கியம்  இதன் முதல் வார்த்தை ஒரு எழுத்தில் இருக்கிறது இரண்டாம் வார்த்தை இரண்டு எழுத்தில் இருக்கிறது மூன்றாவது வார்த்தை மூன்று எழுத்து என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு வார்த்தையும் எண்ணிக்ையில்  கூடிக்கொண்டே போக கடைசி ார்த்இருபது  எத்ுக்கள் கொண்டது இந்த வாக்கியத்தை அமைத்தவர் ஒரு வொகாபுலரி ஜீனியஸாக இருக்க வேண்டும்

I DO NOT KNOW WHERE FAMILY DOCTORS ACQUIRED ILLEGIBLY PERPLEXING HANDWRITIING; NEVERTHELESS EXTRAORDINARY PHARMACEUTICAL INTELLECTUALITY CONTERBALANCING INDECIPHERABILITY TRANSCENDENTALISES INTERCOMMUNICATION”S INCOMPREHENSIBLENESS

 
 
                      

 

                       
                    


                   

 


42 comments:

 1. உண்மையிலேயே சொல்கிறேன் இது மிகவும் சுவையான பதிவுதான் ஐயா! பதிவர் சுரன் அவர்கள் கூட இப்படிக் குட்டிக் குட்டியாகப் பத்திகள், சொந்த வாழ்க்கை விதயங்கள், சுவையான காணொலிகள் எனக் கலந்து கட்டி எழுதுகிறார். இது படிப்பவர்களை அலுப்புறச் செய்யாமல், அதே நேரம் மிகச் சில நிமிடங்களில் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள வைக்கும் நல்ல வழி.

  குறிப்பாக, பெண் குழந்தைகள் இல்லை எனும் உங்கள் ஏக்கமும், சந்திக்கும் பெண் குழந்தைகளுக்கு உங்கள் கைவேலைப்பாட்டுப் பொருட்களைப் பரிசளித்து நீங்கள் மகிழ்வதும் கண்டு உருகுகிறேன். பெரும்பாலும் பெண்கள்தாம் இப்படியெல்லாம் செய்வார்கள். ஆணாகிய நீங்கள் செய்வது வியப்பு! அதே நேரம், விவரிக்க முடியாத ஓர் உணர்வு.

  காந்தியடிகளைப் பற்றி விமர்சிப்பவர்களை அவர்கள் பாணியிலேயே நீங்கள் போகிற போக்கில் விமர்சித்திருந்ததையும் ரசித்தேன். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார் இம்மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் பற்றி எழுதும் போது என் எண்ணங்களைக் கடத்துவதோடு அது குறித்து பிறர் என்ன எண்ணுகிறர்கள் என்றும் நினைப்பு வருகிறது ஆனால் பதிவுலகில் பலரும் பல்ல விஷயங்கள் பற்றிக் கருத்தே கூறுவதில்லை ஒருவேளை அதுவே மிக நீண்டு விடலாம் யார் அவற்றைப் படிக்கப் போவது என்றும் எண்ணலாம் என்குட்டிப்பதிவுகள் பலவும் பகிர்வே எங்கோ படித்தது கற்றது இம்மாதிரி இந்தப்பதிவில் அன்னை பற்றிய மாணவனின் எழுத்தை யாருமே கண்டு கொள்ளாதது வருத்தம் தருகிறது

   Delete
  2. அன்னை பற்றிய கருத்து உண்மையில் ஒரு நல்ல கவிதை ஐயா! கருத்துரை மிக நீளமாக இருக்க வேண்டாவே என்பதற்காக எல்லாவற்றையும் சொல்லவில்லை. மற்றபடி, அந்தத் தென்னை மரம் - மாடு கதை தவிர பதிவில் மற்ற எல்லாமே சுவையாகவும் புதிதாகவுமே இருந்தன ஐயா!

   Delete
  3. பசுமாட்டுக்கதை தான் பெரும்பாலும் காண்பது மீள்வருகைக்கு நன்றி சார்

   Delete
 2. பல்சுவைப்பதிவா? என வினாவை பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கத் தேவையில்லை. இது பல்சுவைப் பதிவுதான்.

  ஒரே கல்லில் பல மாங்காய்கள் கிடத்ததுபோல் பல தகவல்களை ஒரே பதிவில் தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

  தஞ்சை ஓவியம் முதல் க்வில்லிங் மற்றும் டெரகோட்டா அணிகலன்கள் எதையும் விட்டு வைக்கவில்லை போலும். அணிகலன்கள் அருமை!

  ‘காந்திஜி போல் ராட்டினம் சுற்றும் போஸ்’ பற்றி நினைக்கும்போது ‘கான மயிலாட’ என்ற பாடல் நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் பதிவின் தலைப்பு வாசகர்களை ஈர்க்குமா என்பதே தெரிவதில்லை.தலைப்பு குறித்து நான் அதிகம் சிந்திக்கவில்லை பதிவில் எழுதி இருப்பது போல் வேலையில்லாதவனின் பொழுது போக்குகள் தான் எல்லாவற்றையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்னும் குறி உண்டு சில அரசியல் வாதிகளைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் அரசியல் வியாதிகளாகவே காட்சி தருகின்றனர் பொறுக்க முடியாமல் சில சமயம் விமரிசிக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 3. தங்கள் கைவண்ணத்தை நேரில் கண்டிருக்கிறேன். காதணிகளும் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் என் வீட்டுக் குழந்தைகளுக்காக வாங்கி வந்திருப்பேன். அதனால் என்ன, அடுத்தமுறை நீங்கள்செ ன்னை வரும்போதோ, அல்லது நான் பெங்களூர் வரும்போதோ, நீங்கள் தயாரித்துள்ள அணிகலன்களில் ஒன்றிரண்டு நான் வாங்கிட உறுதி யளிக்கிறேன். பேரம் பேசுவதில் எனக்குத் திறமை இல்லை என்பதால் நீங்கள் கூறும் விலைக்கே வாங்கிக்கொள்கிறேன். கொஞ்சம் பார்த்து விலை சொல்லுங்கள். குடும்பஸ்தன்!

  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete
  Replies
  1. ஐயா அமெரிக்க இருக்கும் உங்களுக்கு இந்த காதணிகள் விலை அதிகமாக இருக்காது
   உங்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது இது பகடி தானே.

   Delete
  2. செல்லாபா சார் எதையும் ஒரு முறைமட்டுமே செய்கிறேன் ஸ்டாக் ஏதும் வைத்துக் கொள்வதில்லை மேலும் நான் ஒரு அமெச்சூர். என்னைவிட நன்கு செய்பவர்கள் பதிவுலகிலேயே உண்டு பாராட்டுகளுக்கு நன்றி

   Delete
  3. நாச்சியப்பன் நாராயணன் செல்லப்பா சார் என்னிடமுள்ள உரிமையில் எழுதினார் நான் எதையும் விலைக்கு விற்பதில்லை வருகைக்கு நன்றி சார்

   Delete
 4. ஜிமிக்கி - உங்கள் கைவண்ணம் அழகோ அழகு...

  பல்சுவைப்பதிவுகள் தொடரட்டும் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. பதிவுகள் எழுத விஷயங்கள் கிடைக்காவிட்டால் ஒப்பேற்ற வேண்டியதுதானே பாராட்டுக்கு நன்றி டிடி.

   Delete
 5. # அபு தாபியின் இளவரசர் ( அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை #
  எப்படி நினைவுக்கு வரும் ?அவரென்ன மக்களுக்காக வாழ்ந்த மகாத்மாவா:)

  ReplyDelete
  Replies
  1. மகாத்மாவையே மறக்கும் காலம் இது வருகைக்கு நன்றி ஜி

   Delete
 6. பகிர்வுக்கு நன்றி. கைவேலைகளில் நீங்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி மேம்

   Delete
 7. கலவையான சுவாரஸ்யமான பதிவு. கடைசி ஆங்கில வார்த்தையின் சிறப்பு ஸூப்பர். சத்தியசோதனை எடுத்து ஒருமுறை படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சத்தியசோதனை படியுங்கள் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி தமிழ்மண ஓட்டு ஒன்றுதான் வந்திருக்கிறது

   Delete
 8. கலவையான பதிவும்
  ஒரு சுவைதான் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வெரைட்டியும் ஒரு ஸ்பைஸ்தானே ஐயா நன்றி

   Delete
 9. பல்சுவை பதிவு அருமை.
  கைவேலை அருமை.
  ஜிமிக்கி, மாலை எல்லாம் அழகு.
  பன்முகதிறமை உள்ளவர் நீங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைகுடம் தளும்பாது என்பார்கள் நான் மிகவும் சலம்புகிறேனோ வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. பன்முகத்திறன் கொண்ட பல்சுவைப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 11. உங்களின் கைவண்ணம் வியக்கவைக்கிறது இந்த வயதிலும் அதை செய்து மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்க்க செய்யும் உங்கள் எண்ணம் பாராட்டுகுரியது

  பல செய்திகள் சொல்லும் பதிவும் சுவராஸ்யமாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு கற்றுக்குட்டி சார் வயதான கற்றுக்குட்டி பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 12. Replies
  1. இந்த ஐகான்கள் பாராட்டுகிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 13. ஜிஎம்பி சார் நல்ல கதம்பமான சுவையான பகிர்வுகள். முதலில் நீங்கள் சொல்லியிருக்கும் கட்டுரை விஷயம் எங்கள் இருவரின் அனுபவமும் அப்படி உண்டு...

  உங்கள் கைவண்ணம் வியக்க வைக்கிறது சார். அதுவும் இப்போதும் உங்களை லைவ்லியாக உற்சாகப்படுத்திக் கொண்டு செய்வது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்வது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம் சார். அருமையான கைவண்ணம். நன்றாகச் செய்கிறீர்கள் சார்.!

  அந்த லாஸ்ட் வாக்கியம் ஆங்கில வார்த்தைகள் வெகுசிறப்பு அதை எழுதியிருப்பவர் வொக்காபுலரி ஜீனியஸ்தான்...

  அனைத்தும் நன்று சார்.

  கீதா: மேலே சொல்லப்பட்ட எங்கள் இருவரின் கருத்துகளுடன்....சார் காந்தியைப் பற்றி இப்போதெல்லாம் யார் சார் பேசுகிறார்கள். சும்மா அக்டோபர் 2 ஆம் தேதி ஜனுவரி 30 அவ்வளவுதான் சார். //காந்திஜியின் அடிப்படைக் கொள்கைகளிலும் அஹிம்சையிலும் நம்பிக்கை அற்றவர்கள் காதி கேலண்டரில் காந்திஜி போல் ராட்டினம் சுற்றும் போஸ் கொடுப்பது வருத்தமளிப்பதுடன் நேரத்துக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்காட்டும் குணமும் எச்சரிக்கை விடுக்கிறது// சொல்லிச் செல்கையில் இப்படிச் சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன்...உண்மையான வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி கட்டுரை எழுதுவதுசிந்தனையைப் பின்னோக்கி செலுத்தியது சில தலைவர்கள் பற்றிக் கருத்து தெரிவிப்பது பலருக்கும் பிரியப்படாதது

   Delete
 14. பல்சுவைப் பதிவினை ரசித்தேன். நீண்ட சொற்றொடர் மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. அன்னையைப் பற்றி மாணவன் எழுதியதை ரசிக்கவில்லையா வருகைக்கு நன்றி சார்

   Delete
 15. ஜெயகாந்தன் அவர்களின் கதையை விட
  கதைக்காக அவர் எழுதிய முன்னுரை
  மிக மிக அற்புதமாக இருக்கும்

  அதைப் போலவே இன்றைய பதிவும்..

  மிகவும் இரசித்துப் படித்தேன்

  இறுதி ஆங்கில வாக்கியம் மிக மிக அற்புதம்

  பகிர்வுக்கும் இதுபோல் விஸ்தாரமாய்ப்
  பதிவுகள் தொடரவும் வேண்டி..

  நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. இதில் எது முன்னுரை ஐயா .வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

   Delete
 16. அருமையான தொகுப்பு. அணிகலன்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மேம் இவை ஒரு அமெச்சூரின் முயற்சிதான்

   Delete
 17. கைவேலைப்பாடுகளுக்கு அதிக பொறுமை வேண்டும் ஐயா உங்களின் பொறுமை வியக்க வைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. ஆம். மேலும் கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் வேண்டும் முதியவன் எனக்கு அதுவே பிரச்சனை வருகைக்கு நன்றி சார்

   Delete