Tuesday, February 7, 2017

உலகம் புரிஞ்சுகிட்டேன்




வாழ்க்கையைப் புரிய வைத்த நிகழ்வுகள் (800)

என்னை நானே ஒரு ஆணாக  வாலிபனாக உணர வைக்க சில சம்பவங்கள் துணை நின்றன ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு அறிவைக் கொடுக்கிறது  அவற்றில் ஒரு சில சம்பவங்களைப் பகிர்கிறேன்
பள்ளி இறுதி முடிக்கும்போது நான்  பதினாறு வயது கூடத் தாண்டவில்லை.  என்னுள் நான்  ஏதோ சாதிக்கப் பிறந்தவன் என்ற எண்ணம் இருந்தது ஆனால் என் உருவமோ ஒரு பாலகனுடையதாய் இருந்தது  என் தந்தையார் மிகுந்த சிரமங்களுடன்  குடும்பப் பொறுப்பைத் தாங்கிக் கொண்டிருந்தார் எனக்கு அவருக்கு உதவவும் அவரது பாரத்தைத் தாங்குவதில் உதவவும்  எண்ணம் வலுத்தது அவரை நச்சரித்து எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தர வற்புறுத்திக் கொண்டிருந்தேன்  கோவையில் அவரது நண்பர் ஒருவரிடம் எஸ் எஸ் எல் சி படித்தமகன்  இருக்கிறான் அவனுக்கு அவர் நடத்திக் கொண்டிருந்த ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை தர முடியுமா என்று கேட்க அவரும்  என்னை அனுப்பச் சொன்னார்  வெல்லிங்டனிலிருந்து கோவை போனேன்  அவரது அலுவலகம்சென்று அவரைப் பார்த்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்  அவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து மகாதேவன்  தனக்கு ஒரு மகன் இருக்கிறான் வேலை ஏதாவது போட்டுத் தரும்படி கேட்டபோது ஒரு வளர்ந்த மகனை எதிர்பார்த்தேன்   நீ ஒரு குழந்தை உனக்கு இங்கு எந்த வேலையும் தரும்படியாய் இல்லை என்றார் எனக்கு அழுகை அழுகையாய் வந்தது என்னைப் போய் ஒரு குழந்தை என்கிறாரே  என்னும் நினைப்பே வருத்தியது என்னை அவர் ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்
 அதன் பின் பெங்களூருக்கு என் மாமா வீட்டுக்கு வந்தேன் என் அக்காவின்  மாமனார் என்னை ஒரு வேலையில் அமர்த்துவதாகக் கூறினார்  அந்த அனுபவம் பற்றி “பூர்வ ஜென்ம கடன்“  என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன்  பார்க்க
அந்த அனுபவத்துக்குப் பின்  மீண்டும் வெல்லிங்டன் வந்தேன்  மீண்டும் அப்பாவை நச்சரிக்க அவர் என்னை கூனூரில் இருந்த மைசூர் லாட்ஜ்  முதலாளி அவருக்கு அவர் ஹோட்டலைப் பார்த்துக் கொள்ள ஆங்கிலம்பேசும் ஒருவர் வேண்டும்  என்று சொல்லி இருந்தாராம்   அவரைப் பார்க்கச் சொன்னார் அந்த ஹோட்டல் கூனூர் ரயில்வே நிலையத்துக்கு நேர் மேலே இருந்ததுகிருஷ்ண போத்தி என்பது முதலாளி பெயர் என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார் காலை ஆறு மணி முதல் இரவு பத்துமணிவரை வேலை கல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் தங்கும் அறைகளில் இருப்பவர் சௌகரியங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்  அன்றாட வரவுகளை இரண்டு வித லெட்ஜர்களில் மெயின்டெயின் செய்ய வேண்டும்  ஒன்று சரியான கணக்கு மற்றது இன்கம் டாக்ஸ் காரர்களுக்கானது சுமார் 20%வரவே அதில் காட்டப்பட வேண்டும் அந்த ஹோட்டலில் மாதாந்திரமாகத் தங்குபவரும் உண்டு தினம் வருவோரின் பெட் ஷீட்டுகளை மாற்றி சலவை செய்ததை இடவேண்டும் ரூமுக்கு வரும் பெரிய மனிதர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்அப்போது மது விலக்கு அமலில் இருந்தது அறையில் யாரும் குடிக்கக் கூடாது என்பது ரூல்  ஆனால் வரும் பெரியமனிதர்கள் யாரும் மதிக்காத ரூல்  இது பற்றி நான் முதலாளியிடம் சொன்னபோது கண்டும் காணாமல் இருக்க புத்திமதி கூறினார் அதே மாதிரி இந்த இரட்டைக் கணக்கையும்  கண்டுகொள்ளாமல் இருக்கச் சொன்னார் கோவை போன்ற பெரிய ஊர்களில் இருந்து சிலர் வருவார்கள் உடன்  வருவது யாரோ பெண்மணியாக இருக்கும் நான் அவர்கள் மனைவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
மாதாந்திர வாடகையில் தங்குபவர்கள் என்னோடு அன்போடு பழகினார்கள் மேனேஜர் என்று மதிப்புடன் விளிப்பார்கள் ஒரிரு நாள் தங்க வந்திருந்தவர்களின்  மனைவிகளை மாதாந்திர  வாடகையில் தங்குபவர் சில நேரங்களில் சீண்டுவார்கள் போல் இருந்தது அந்தப் பெண்மணி ஒருத்தி என்னிடம் புகார் கொடுத்தாள் நான் ரெகுலராக இருப்பவர்களிடன்  விசாரித்தேன்   அதற்கு அவர்கள் வந்திருந்தோர் கணவன்  மனைவி அல்ல  விலைமாதர்கள் என்றனர்  நான்  எப்படி இருந்தாலும்  அவர்கள் சீண்டுவது தவறு என்று கூறினேன் அவர்கள் எனக்குச் சில பாடங்கள் எடுத்தனர்  அறையில் இருக்கும் பெட்ஷீட்களை மாற்றும்போதுஅவற்றில் கறைகள் இருக்கும் அது பற்றியும்  என் நண்பர்களால் விளக்கப்பட்டேன் எனக்கு என்னவோ சட்ட விரோதமாய் ரூம் போடுவதும் அங்கு குடிப்பதும்  இரட்டை வரவேடுகள் வைத்திப்பதும் உறுத்திக் கொண்டே இருந்தது  முதலாளியிடம் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை என்றேன்
 அது அப்படித்தான்  இருக்கும் என்றும் நான் கண்டுகொள்ளக் கூடாது என்றும் கூறினார்  அதன்  பின் ஒரு நாள் நான் வேலையை விடப் போகிறேன் என்றேன்   அதற்கு அவர் என் தந்தையிடம்  சொல்வேன்  என்று மிரட்டினார்  நான் எந்த முன்  அறிவிப்பும்  கொடுக்காமல்  வேலையை விட்டேன்  அது பற்றியும்  விலாவாரியாக வேலை தேடுபடலமென்னும் பதிவு எழுதி இருக்கிறேன் விவரம் வேண்டுபவர்கள் இங்கே பார்க்கவும்

 சில நாட்களில் எனக்கு எச் ஏ எல் நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளனாக வேலை கிடைத்தது பிறகு என்னை அம்பர்நாத் பயிற்சிப்பள்ளிக்கு  அனுப்பினார்கள். ஓராண்டுகாலத்துக்குப் பின் என்  தம்பிகளையும்  தாயாரையும் பார்க்க பாலக்காடு வந்தேன்  அங்கும் சில மறக்க முடியாத அனுபவங்கள் இருந்தன.
என்  தம்பி ஒருவன்  முதுகில் பெரிய கட்டிகள் வந்திருந்தது  அதற்கு மருந்தாக ஒரு எண்ணை ஒலவக்கோட் ஜங்ஷன்  அருகே கிடைப்பதாய்க் கூறக்கேட்டு ஒரு வாடகை சைக்கிளில் அந்த இடம்  தேடிச் சென்றேன் ஏதோ வயல் வரப்புகள் தாண்டி அந்த இடம் இருப்பதாய் அறிந்தேன்  அப்போது ஒருவர் எனக்கு வழிகாட்டுவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றார் நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவருடன்  சென்றேன்   ஓரிடத்தில் என்னை ஒரு வீட்டின் முன்  நிறுத்தி நான்  என்ன எதிர்பார்க்கிறேனோ அதுபோல் சரக்குகள் (பெண்கள்) இருப்பார்களென்று கூறினார் அப்போதே ஏதோ விபரீதம் என்று என்  உள்மனசு சொல்லியது  நான்  அவ்விடம்  விட்டு அகல முயன்றபோது அவன் என் சைக்கிளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என்னை அங்கு கூட்டி வந்ததற்கு பணம் கேட்டான் நான் ஏன்  எதற்கு என்று கேட்டதும் அவன் உனக்கு …………….இல்லையா என்று கேட்டான் எனக்கு அப்போதுதான்  கொஞ்சம் விளங்கிற்று  அவன் பிடியிலிருந்து மீண்டு சைக்கிள் ஏறி வந்து விட்டேன்  நான்  அப்போது வளர்ந்து வருவதைத்   தெரிந்து கொண்டேன் 
மைசூர் லாட்ஜில் நான் பணியில் இருந்தபோது எடுத்தபடம்  Add caption
 
அன்றையைசூர் லாட்ஜ் இப்ப


                   

 

26 comments:

  1. பின்னோக்கிய நினைவுகளை நாசுக்காக விள(ல)க்கிய விதம் நன்று
    சுட்டிகளுக்கு செல்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜி சுட்டிகளில் இப்பதிவில் இருக்கும் சில நிகழ்வுகள் இருக்கலாம்

      Delete
  2. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யாமல் தப்பித்தது பெரிய சாதனை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. சரியா தவறா என்ன என்பதே அறியாத பருவம் ஐயா வருகைக்கு நன்றி

      Delete
  3. ஹூம், பழைய கதைகள் இனிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இவற்றில் கதைகள் ஏதும் இல்லை ஐயா அக்மார்க் உண்மைகளே வருகைக்கு நன்றி .

      Delete
  4. சட்ட விரோத காரியங்கள் நடந்த இடத்தில் இப்போது நீதி மன்றம் நல்லாவே இல்லையே :)

    ReplyDelete
    Replies
    1. சட்ட விரோத காரியங்கள் நடக்காத இடமே இருக்காது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

      Delete
  5. சில ஏற்கெனவே படித்தவை. மலரும் நினைவுகள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. சில நிகழ்வுகள் பழைய பதிவுகளில் இருக்கலாம் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  6. பழைய நினைவுகள் என்றென்றும் எண்ணி எண்ணி மகிழத் தக்கவை ஐயா
    தவறு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைப் பயன்படுத்தாமை போற்றுதலுக்கு உரியது ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைவுகள் பாடங்கள் போதித்தவை வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சிலநிகழ்வுகளைப் படித்திருக்கலாம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  8. உருவமோ பாலகனாக.. ஐயா. இதைப்படித்ததும் என் இளமைக் கால நினைவு வந்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தபின் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக என்னை ஒரு கடையில் சேர்க்க அப்பா அழைத்துச் சென்றார். அப்போது நான் வழக்கமாக போட்டிருக்கும் டவுசரின்மேல் வேட்டி கட்டிக் கொண்டு சென்றேன். அதாவது நான் பெரியவனாகத் தெரிய வேண்டுமாம். என்ன சோதனை? கடைசியில் கடைக்காரர் என் முகத்தைப் பார்த்ததும் வேலை கிடையாது என்று திருப்பியனுப்பிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வேலை கிடைக்காததை விட என்னைக் குழந்தை என்று சொன்னதே பாதித்தது வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. இவற்றை ஏற்கனவே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா சார்? வாசித்த நினைவு இருக்கிறதே...சிறு வயது வாழ்க்கை நினைவுகள்!!!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் இந்த நிகழ்வுகள் குறித்து நான் எழுதிய எந்தபதிவிலும் நீங்கள் வந்தசுவடே இல்லையே (இந்தப் பதிவின் சுட்டிகளில் ஒன்றிரண்டு உண்டு)

      Delete
  10. சின்ன வயசு அனுபவங்களை நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருமா கதை?

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது வரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுதான் வருகிறேன் என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு என் வாழ்க்கை சரிதையே தெரிந்திருக்கும் வருகைக்கு நன்றி சார் எழுதியவை கதைகள் அல்ல உண்மை நிகழ்வுகள்

      Delete
  11. தலைவரே, உங்கள் அந்தக்காலப் படத்தைப் பார்த்தால் பால்மணம் மாறாத பாலகனாகத்தான் தெரிகிறீர்கள்! போகட்டும், "அவன் உனக்கு …………….இல்லையா என்று கேட்டான்" என்று சொல்கிறீர்களே, அந்த "......" உள்ள இடத்தில் "ஆசை" என்று தானே சொல்லவந்தீர்கள்?
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  12. செல்லப்பாவின் வருகைக்கு நன்றி யூகிப்பதில் ஒரு த்ரில் இருக்கிறது இல்லையா

    ReplyDelete
  13. நல்ல பதிவு ஐயா! சராசரிக் குடிமகனார் ஒருவர் இப்படித்தான் நடந்து கொள்வார். பொதுவாக, குறிப்பிட்ட அந்த வயதில் வேலைவாய்ப்புக்காகத் தேடித் திரிவோம். ஆனால், வேலை கிடைத்தவுடன் அதில் நடக்கும் அறத்துக்குப் புறம்பான விதயங்களைக் காணும்பொழுது முதலில் திகைப்பு ஏற்படும். பிறகு, நமக்குள்ளேயே 'இதற்கு நாம் ஒத்துழைப்பது சரிதானா' என்கிற போராட்டம் எழும். இந்தப் போராட்டத்துக்குச் சில நாள் உள்ளத்துக்குள்ளேயே விடையளித்து வந்து, முடிவில் வேலையே போனாலும் போகட்டும், சிரமங்கள் வந்தாலும் வரட்டும், மற்றவர்கள் தூற்றினாலும் தூற்றட்டும் என அறத்தின்பால் சார்ந்து முடிவெடுப்பவர்களே நல்லவர்கள். இதுதான் ஒவ்வொரு மனிதருக்கும் இங்கு நடப்பது. மாறாக, திரைப்படங்களில் வருவது போல அநியாயங்களைப் பார்த்ததும் எடுத்த எடுப்பில் தோளில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கிளம்பிப் போய்க் கொண்டே இருப்பது என்பது அனைவருக்கும் இயலக்கூடியது இல்லை. வாழ்வின் எல்லா வகை அனுபவங்களையும், உலக அறிவையும் ஓரளவு பெற்று விட்ட அதே நேரம் உறுதியான அறமனிதர்களாகவும் விளங்குகிறவர்களுக்கே அது இயலும். மற்றபடி, சராசரி மனிதர்கள் அனைவரும் நீங்கள் செய்தது போல, சில நாட்கள் உள்ளப் போராட்டத்துக்குப் பிறகே முடிவெடுப்பர். அப்படிப்பட்ட எளிய தமிழ் - இந்தியக் குடிமகனார் ஒருவரின் குரலாக நீங்கள் இதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை! உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இந்த அனுபவம் சிறு அளவில் எனக்கும் உண்டு என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி! வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவங்களை உங்கள் பார்வையில் விமரிசித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என் செயல்கள் சரியா தவறா என்றெல்லாம் நினைத்து எழுதவில்லை. நிகழ்வுகள் எனக்குச்சொல்லிக் கொடுத்தபாடமாகவே கருதி பகிர்ந்தேன் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  14. Replies
    1. இந்த பதிவைப் படிக்கும்போது, கூடவே நீங்கள் குறிப்பிட்ட உங்களது பழைய பதிவுகளுக்கும் சென்றேன். அவற்றை இரண்டாம் முறையாகப் படிக்கும்போதும், வாழ்க்கை அனுபவங்கள் என்பதால் பழைய சுவாரஸ்யம் குறையாமல் படித்தேன். உங்கள் வாழ்க்கை + வலையுலக அனுபவங்களைத் தொகுத்து மின்னூல் ஒன்று வெளியிடலாம்.

      Delete