வியாழன், 26 ஜனவரி, 2017

I ALSO RUN


                                             I ALSO RUN
                                           -----------------
 நானும்  பதிவிடுகிறேனே நண்பா
   ------------------------------------------


நான் 2010ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் பதிவுலகில் நுழைந்தேன்  ஏழாவது வருடம்  ஓடிக்கொண்டிருக்கிறது பதிவுலகம்  எனக்கு ஏராளமான முகமறியா நட்புகளை (அறிமுகங்களை ) சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என் எண்ணங்களை கடத்தவே எழுதத் தொடங்கினேன்  பலவித கருத்துகளைக் கூறி இருக்கிறேன்  அதன் மூலம் என்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான்  காட்டிக்கொண்டிருக்கிறேன்   என் எழுத்துகளை நேசிப்பவர்கள் இருக்கலாம்  அதில் குறை காண்பவர்களும்  இருக்கலாம்  ஆனால் பதிவுலகில் இருப்பவர்களில் நான்  வித்தியாசமானவன் என் கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்யாமல்  பிறர் எண்ணங்களையும் கவனித்து வருகிறேன்  ஆனால் இப்பதிவு அது பற்றி அல்ல,முகமறியா நட்புகள் கூடவே முகமறிந்த நட்புகளும்  நிறையவே உண்டு  அது நானாக முன்  நின்று பலப்படுத்தியவை எனக்கு ஆரம்பகாலத்தில் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களை நினைவு கூறல் அவசியம்
அப்படி ஆரம்பகாலத்தில் ஊக்கப்படுத்தியவர்களில்  முதலில் நான்  சந்தித்தது மின் மினிப் பூச்சிகள் என்னும் வலைத்தளத்தின்  சொந்தக்காரர்  திருமதி ஷக்தி பிரபாவும்  மன அலைகள் தள சொந்தக்காரர் டாக்டர் கந்த சாமியும்  முன்  நிற்கிறார்கள் இவர்களில் டாக்டர் ஐயா என் வீட்டுக்கே  விஜயம்  செய்திருக்கிறார்கள்  கோவையில் இருந்து வந்து என்னைப் பெருமைப் படுத்தினார்கள் பெங்களூரில்  ஒரு மினி பதிவர்கள் சங்கமம் நடந்தது  அதில் ஆறேழு பதிவர்கள் அறிமுகமானார்கள் ஆனால் இப்போது பலரிடம்  டச் விட்டுப் போயிற்று திருமதி ஷைலஜா ஷக்திபிரபா திருமதி ராமலக்ஷ்மி திரு ஹரிகிருஷ்ணண் திரு ஐயப்பன் எனும்  ஜீவ்ஸ் போன்றோரெ நினைவில் நிற்கிறார்கள் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சங்கமம் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏழெட்டு பேர்களே வந்திருந்த முதல் பதிவர் சந்திப்பு எனக்கு அது   அது மார்ச் மாதம்  பதினாறாம் நாள் 2013ல் நடந்தது அதை ஒரு காணொளியாக்கி இருந்தார் ஹரி கிருஷ்ணன்  அவர்கள் யூ ட்யூபில்   ஆங்கிலத்தில்  Bangalore sangamam  E group meet   என்று பார்த்தால் கிடைக்கும் ார்க்க
மதுரை சரவணன்  அவர்கள் பெங்களூருக்கு ஏதோ ஆங்கிலப் பயிற்சி பெற வரப்போவதாக அறிந்தேன்   அவரை அவர் பயிற்சி பெற்று வந்தயுனிவர்சிடி வளாகத்துக்கே சென்று பார்த்தேன் அது 2010ன் கடைசியில் என்று நினைவு. அவரை என்  வீட்டுக்கு அழைத்து வந்தேன் அவரே என்  இல்லத்துக்கு வந்த முதல் பதிவர் அப்போதெல்லாம் நான் தனித்தாளில் எழுதி வைத்துக் கொண்டு பிறகு பதிவாக்குவேன்   அவர் நேரே தட்டச்சு செய்வதாகக் கூறினார் பிற்காலத்தில் நானும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தேன்  சமுத்ரா என்று வலை யுலகில் எழுதி வரும் மது ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவரை என் இல்லத்துக்கு வருமாறு வேண்டினேன்  பௌதிகத்தில் கரை கண்டவர் என்று அனுமானித்திருந்த நான்  ஒரு நடுத்தர வயது சயண்டிஸ்டை எதிர் பார்த்தேன் எதிர்பார்த்தேன்  ஆனால் வந்தவரோ இளைஞர் திருமண மாகாதவர் ஐடி நிறுவம் ஒன்றில்  பணியில் இருந்தார்  கர்நாடக இசையும் தெரிந்தவர்  எனக்காக ஓரிரு பாட்டுகளும் பாடினார்  இப்போது அவர் சென்னைக்குப் போய்விட்டதாக அறிகிறேன்  ஃபேஸ்புக்கில் கலக்குகிறார்,
நான்  கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைக் காண வந்தவர்  மிகவும்  பிரபலமான அப்பாதுரை சிகாகோ வாசி ஒரு சில பதிவுகளில் பின்னூட்டம்  மூலமே தெரிந்திருந்த அவர் பெங்களூர் வந்திருந்தபோது சற்றும் எதிர்பாராத நிலையில் என்  வீட்டுக்கு வந்திருந்தார் ஒரு பதிவில் நான் கொடுத்திருந்த மிகக் கடினமான சுடோகு வுக்கு  சரியாக விடை கொடுத்த அவரை நானொரு ஜீனியஸ் என்பேன் இப்போதெல்லாம் பதிவுலகில் அவரைக் காண்பதில்லை மின்  அஞ்சல் அனுப்பினாலும்  பதில் இல்லை.
மது ஸ்ரீதர் மூலம் என்னைப் பற்றிக் கேல்விப்பட்ட திருமதி ஷைலஜா  வும்  என்வீட்டுக்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கூட வந்தவர் திரு ஐயப்பன். எப்போதாவது பதிவுகளில் பார்ப்பதுண்டு இவர்களுக்கும்  கர்நாடக இசையில் ஆர்வம்  உண்டு. எனக்காக சில பாட்டுகள் பாடினார் அவற்றை ரெகார்ட் செய்தும் வைத்திருந்தேன்  ஆனால் அவை பழைய டேப்பில் இருக்கிறது அவற்றை முடிந்தால்  கணினியில் ஏற்ற வேண்டும் திரு ஏகாந்தனும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். நியூ சிலாந்திலிருந்து திருமதி துளசி கோபாலும் அவர் கணவர் திருகோபாலும் என்னை என்வீட்டில் சந்தித்ு கௌரித்ர்கே   .
 இன்னொரு நண்பர் என் பெங்களூர் வீட்டுக்கும்  சென்னையில் என்  மகன்  வீட்டுக்கும் வந்து என்னை சந்தித்தவர் திரு இராய. செல்லப்பா யக்ஞசாமி.  இந்தியாவிலும்  அமெரிக்காவிலும்  வசிப்பவர் திரு துளசிதரனும்  கீதாவும்  ஒரு குறும்படத்தில் என்னை நடிக்க வைக்க என் வீட்டுக்கே வந்திரூந்தார்கள்
இவர்கள் எல்லாம்  பெங்களூரில் என் வீட்டுக்கு வந்தவர்கள் இது தவிர நான் சென்னைக்குப் போகும் போதும் மதுரைக்குப் போனபோதும் திருச்சிக்குப் போனபோதும் .  என் இருப்பிடத்துக்கே வந்து சந்தித்தவர் பட்டியலும்  உண்டு திரு பாலகணேஷ், திரு ஸ்ரீராம் கார்த்திக் சரவணன்  திடங்கொண்டு போராடு ஸ்ரீநிவாசன் டிஎன் முரளிதரன் கவியாழி கண்ணதாசன்  மைத்துளிகள் மாதங்கி அவரது தந்தையார் மாலி  எரிதழல் வாசன். தம்பட்டம்  பானுமதி திரு வே நடன சபாபதி ஆகியோர் சென்னையிலும்  திரு ரமணி திரு சீனா தமிழ்வாசி பிரகாஷ் சிவகுமாரன் மதுரைசரவணன்  போன்றோர் மதுரையிலும்
திருச்சியில் திரு வை கோபாலகிருஷ்ணன் தி தமிழ் இளங்கோ ஆரண்யவாஸ் ராமமூர்த்தி திரு ரிஷபன் ஊமைக்கனவுகள் திரு ஜோசப் விஜு போன்றோரும் என்னைக் காணவந்தவர்கள்
இது தவிர நானாகப் போய் சந்தித்தவர்கள் பட்டியலில் கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணி  சுப்புத்தாத்தா என்று அறியப்படுபவரும் திருமதி கீதா சாம்பசிவம் திருமதி கோமதி அரசு போன்றோரும் அடங்குவர்
இவர்கள்தவிர மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும் புதுக்கோட்டை சந்திப்பிலும்  பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்   தருமி பகவான் ஜி கில்லர் ஜீ சேட்டைக்காரன் திண்டுக்கல் தனபாலன் எஸ்பி செந்தில் குமார்  தென்றல் சசிகலா என்று பட்டியல் நீளும் 
 இருந்தாலும்  எனக்கு நான் பல பதிவர்களை சரியாகப் பரிச்சயப்படவில்லை என்னும்  ஆதங்கமும்  உண்டு வலை உலகு பல அறிமுகங்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது நான் சந்திக்க வேண்டியவர் பட்டியலும்உண்டு பூவனம்  ஜீவியை இதுவரை சந்திக்க இயலவில்லை  வானவில் மோகன் ஜி என்னைச் சந்திக்க பெங்களூர் வரப்போவதாகக் கூறி இருந்தார் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்  திரு வெங்கட நாகராஜும் பெங்களூர் வந்தால் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்
 இவ்வளவு எழுதும் எனக்குள் பதிவர் சந்திப்புகள் கூடி மகிழ ப்ளான்  செய்யப்பட்டு  நடத்தப்படுவதில் ஏதோ குறைகள் இருப்பது போல்  தெரிகிறது  குறைகள் என்று தோன்றியதைச் சொன்னால் நீயே முன்  நின்று நடத்து பார்ப்போம்  என்னும் ரீதியில் பதில்கள். அதைச் செய்ய  வயதும்  உடல் நிலையும்  என்னிடம் இல்லையே இருந்தால் செய்திருப்பேனோ என்னவோ
என்னைப் பற்றி பதிவுலகில் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம் ஆனால் யாரிடமும் வன்மம் பாராட்டாது எனக்குத் தோன்றுவதைப் பதிவிட்டுக் கொண்டும் பிறபதிவுகளில் பின்னூட்டம் எழுதியும் வருகிறேன்  என்னை விட அழகாக எழுதுகிறவர்கள் பலரும்  இருக்க நானும்  இருக்கிறேன்  என்னும்  ரீதியில் I ALSO RUN……..!  
இனி  நான்  சந்தித்தவர்களில் சிலர் 
சமுத்ராவுடன்
மதுரை சரவணனுடன்
                       

திருமதி ஷைலஜா ,ஐயப்பன்


        
இராய செல்லப்பா

அப்பாதுரையுடன்
              
டக்டர் கந்தசாமி ஐயாவுடன்
 கோமதி அரசும் கணவர் அரடும்   என்னுடன்
துளசிதரனுடன்
திரு முரளிதரனும்  செல்லப்பாவும்
கீதா(தில்லையகத்து க்ரோனிலிள்ஸ்) என் மனைவியுடன்

திரு ஏகாந்தனுடன்

திரு ஜெயக்குமார் ஹறணியுடன் 

திரு ஹரணியுடன் அவர் வீட்டில்
                                                                                                                                                                
இன்னும் பல புகைப்படங்கள் இருக்கின்றன. சிலவற்றை பிரசுரிக்க இயலவில்லை சந்தித்தவர்களில் சிஒல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்  உ-ம்  முனைவர் ஜம்புலிங்கம் கர்னல் கணேசன்   புலவர் இராமாநுசன் போன்றோர்  என் மறதியே காரணம் .








41 கருத்துகள்:

  1. பதிவர் சந்திப்புகளை பற்றியும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களுடன் பதிவிட்டது அருமை.
    நட்பு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவரம் வந்தபோது நீங்கள் கணவருடன் ரயில் நிலையத்துக்கே வந்து சந்தித்தது பற்றியும் பின் உங்கள் வீட்டுக்கு அழைத்து பூப்போல இட்லி கொடுத்ததும் மறக்க முடியுமா எல்லாவற்றையும் எழுதினால் இடுகையின் நீளம் நீண்டுவிடும் யாரும் வாசிக்க வர மாட்டார்கள்நன்றி மேடம்

      நீக்கு
  2. மனதில் ஊடுறுவி வெளியேறி இருக்கின்றீர்கள் நினைவோட்டங்கள் அருமை அதில் நானும் இருப்பதில் சந்தோஷமே....

    புகைப்படங்கள் அருமை வாழ்த்துகள் ஐயா
    காணொளி பிறகு காண்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரையும் சந்திக்கிறோம் ஆனால் அவர்கள் பற்றிய விஷயங்களை அவர்கள் பதிவைப்படிக்கும் போது வருகிற சொற்ப விஷயங்களில் இருந்தே யூகிக்க வேண்டி உள்ளது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  3. உங்களோடு நாங்களும் இந்த பதிவுலகில் ‘ஓடு’கின்றோம் என்பது பெருமையாய் இருக்கிறது ஐயா!

    இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் மீண்டும் சந்தித்து உரையாட அவா எழுகிறது சென்னை வரும்போது தெரிவிக்கிறேன் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. உங்களது நினைவாற்றலைக் கண்டு வியக்கிறோம். உங்களின் எழுத்து நடை உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன. உங்களின் ஓட்டத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் எழுத்தே என்பலமும் பலவீனமும் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. சந்தித்தவர்கள் குறித்தும் படப் பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டும் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அடுத்த முறை நீங்கள் சென்னை வரும் பொழுது சந்தித்து விடலாம். நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்தால்தானே. என்றும் நினைக்கிறேன் சென்னையில் சந்திப்போம் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. பதிவுலகத் தொடர் ஓட்டத்தில் நீங்கள்இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துகள் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளத்தோடு உடலும் ஒத்துழைத்தால் எழுத்து தொடரும் சாதனை செய்ய எந்த எண்ணமும் இல்லை. தம ஓட்டுப் போட்டீர்களா இதுவரை இரண்டுபேர்தான் வாக்களித்திருக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  8. பதிவுலகில் சந்தித்தவர்கள் பற்றி சொன்னது நன்று. எனக்கும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனாலும் ஏனோ இன்னும் வாய்ப்பு வரவில்லை. பெங்களூரு வருவதாக இருந்ததும் தடைபட்டுவிட உங்களைச் சந்திக்க முடியவில்லை. விரைவில் சந்திக்க முயல்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் சந்திப்போம் சார் வருகைக்கு நன்றி ஒரு முறை ஸ்ரீரங்கம் வருகிறேன் என்று எழுதியதும் ஏன் தெரியப்படுத்தவில்லை கோவில் அருகில்தான் வீடு என்று உங்கள் துணைவியார் பின்னூட்டம் எழுதியது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது நான் மறக்கவில்லை. வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  9. பதிவுலகம் ஒரு புது உலகம்ஐயா
    இனிய நட்புகளின் சங்கமங்கள் அறங்கேறும் அற்புதப் பதிவுலகம்
    எனக்கு இனிய உறவுகளை பெற்றுக் கொடுத்ததும் இவ்வலைதான்
    வலையுலக உறவுகள்தான் எதையும் எதிர்பாராநட்புகள்
    நட்பு போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் மாதிரி அனைவரையும் போற்றும் குணம் எனக்கில்லையே பதிவுலகில் நட்புகளை விட அறி முகங்களே அதிகம் நோ என்று சொல்ல நினைக்கும் பலரும் யெஸ் என்று சொல்வதுபோல் தோன்றுகிறது மீறி சில நட்புகளும் இருக்கலாம் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  10. மதுரை சந்திப்பில் உங்களை நானும் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை சந்திப்பில் நாம் உரையாடியது சொற்பமே பதிவுகள் மூலமே தெரிந்து கொள்கிறோம் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  11. நீங்கள் திறந்த புத்தகமாக உள்ளது தான் உங்களின் அதீத பலம் ஐயா...

    என்னதான் பதிவர் திருவிழாவில் சந்தித்தாலும், உங்கள் வீட்டில் சந்தித்து உரையாட வேண்டும் என்கிற எண்ணம் என்றும் உண்டு... எப்போது நிறைவேறும் என்பது தான் தெரியவில்லை... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தித்தால் மனம் திறந்து பேச நிறையவே இருக்கிறது தனபாலன் அந்தநாளுக்கு காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  12. சார் அனைவரையும் நினைவு கூர்ந்து இங்கு உங்கள் மனக்கிடக்கைகளையும் சொல்லி படங்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. எங்களுக்கும் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சந்திப்போம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லையகதார்களுக்கு நன்றி அனைவரையும் நினைவு கூறவில்லை. சந்திப்புகள் நெருக்கத்தை நீட்டிக்கும்

      நீக்கு
  13. வயதில் என்னைவிட நீங்கள் சீனியராக இருந்தாலும் பதிவுலகில் உங்களைவிட சில மாதங்கள் நான் சீனியர் ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகில் மட்டுமல்ல தமிழரே அநேக விஷயங்களில் எனக்கு நீங்கள் சீனியரே நன்றி

      நீக்கு
  14. ஒரு தடவை வாய்ப்பு கிடைத்த போது கிடைத்த சில மணிநேரங்களில் சில பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்புக்கள் கிடைக்கவில்லையென்றாலும் அவர்களின் பதிவுகளை படிப்பதன் மூலம் அவர்கள் என் நெருங்கிய உறவுகள் போலத்தான் என நான் உண்ர்கிறேன் வாய்ப்புக்கள் கிடைத்தால் அனைவரையும் சந்திக்க ஆசை பதிவுலகில் நான் வாய் ஆடுவது போல நேரில் வாயாட மாட்டேன் ஆனால் மற்றவர்களை பேச வைத்து கேட்டு மகிழ்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளைப் படிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி அறியக் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று தோன்று கிறது ஏனோ தெரியவில்லை. தங்களைடெண்டிடி தெரியக் கூடாது என்று நினைப்பவர்கள் பதிவுலகில் அதிகம் மேலும் பலரும் திறந்த மனத்துடன் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

      நீக்கு
  15. பதில்கள்
    1. என் தளத்தில் மட்டறுத்தல் இல்லை உங்கள் காமெண்டை காக்கா உஷ்ஹ்.......

      நீக்கு
  16. சரி. மீண்டும் அனுப்ப முயல்கிறேன்:

    பதிவுலகத்தினரோடு உங்களது சந்திப்புகள் குறித்து கொஞ்சம் விஸ்தாரமாகவே சொல்லியிருக்கிறீர்கள். கூடவே படங்களையும் சிரத்தையுடன் சேர்த்து மனத்திரையில் காட்சிகளை ஓடவிட்டிருக்கிறீர்கள். என்னைப்போன்ற சிறியோனைப்பற்றியும் அதிலிருக்கிறது.

    பதிவிற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு! மனதில் தோன்றியதை தோன்றியபடி ஆறு வருடங்களாய் எழுதிவருகிறீர்கள். தொடருங்கள் உங்கள் பாணியை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் இருக்கும் வலை உலகில் நானும் இருக்கிறேன் என்பதைத்தான் இப்படித் தலைப்பாக்கினேன் வலை உலகில் யாரும் சிறியோன் அல்ல யாரும் பெரியோனும் அல்ல வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

      நீக்கு
  17. பதிவர் சந்திப்பின் படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவையெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது எடுத்த படங்கள் நீங்கள் இந்தியா வரும்போது முடிந்தால் பெங்களூர் வாருங்கள் சந்திக்கலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. I love your honest writing, though I don't comment I read most of your posts. ( I read appadhurai ji s posts as well) shall meet you in my next Indian trip
    Are you in google plus ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you for the complement. I went to see your profile . Not much to learn I think I am in google plus Please see my mail to you Thanks

      நீக்கு
  19. ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது
    என்றோ எங்கோ எடுத்தப்படங்களை
    சேர்த்துத் தருவதற்கு
    பொறுமை மட்டும் போறாது
    திறனும் வேண்டும்

    கோர்வையாய்ச் சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  20. அருமையான பகிர்வு. பார்த்திராத பலரை படங்களின் மூலம் அறிய வருகிறேன். சந்திப்புகளை தொகுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன் நானும்.

    எனது பேச்சும் இடம் பெற்றிருக்கும் தமிழ் சங்க வீடீயோ தங்கள் பதிவில் சேமிப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மேம் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்தது மறக்க முடியாது ஆனால் பலருடனும் தொடர்பு இல்லை என்பதே நெருடுகிறது

      நீக்கு