Wednesday, July 26, 2017

ஒரு துணுக்குத் தோரணம்


                                           ஒரு துணுக்குத் தோரணம்
                                           -----------------------------------------
அம்மாவுக்கு
 உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால்தானோ என்னவோ எனக்கு வலி ஏற்படும்போது அம்மா என்று அழைக்கிறேன் 
                     -------------------------------------

இந்த தமிழ் மணம் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது, அதுவும்  இந்த ராங்கிங்  பற்றி நினைத்தால் புரிவதே இல்லை. கடந்த மூன்று மாதங்களில்  வாசித்தவர் எண்ணிக்கை கொண்டு ராங்கிங்  கொடுக்கப் படுகிறது நான் என்னவோ என்றும்போல்தான் எழுதி வருகிறேன்   போன இரண்டு மூன்று  பதிவுகளின்  போது 20/21 ராங்கில் இருந்த என்பதிவு கடந்த இடுகையின் போது 13 ஆக  உயர்ந்திருக்கிறது  வாசகர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம்  ஏதும் இல்லை
                       ------------------------------------------

ஒரு செய்திப்பகிர்வு
 மும்பையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அங்குள்ள ஒர் ரேடியோ ஜாக்கி கிண்டலடித்துப் பாட்டு இயற்றிப் பாடி இருக்கிறார்  தொலைக் காட்சியில் பார்த்தபோது பலரும் ரசிப்பதைக் காண முடிந்தது ஆனால் அதிகாரத்தில் இருப்பவரைக் கேலி செய்தால் என்ன பலன் கிடைக்கும்  தெரியுமா  அவர் வீட்டில் டெஙுகு கொசு வளர்க்கிறார்  என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் …….!
                   ----------------------------------------------  

மகனுக்கு பேண்ட் வாத்திய வரவேற்பு 
என் இரண்டாவது மகனை ஒரு கல்லூரி விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள் அழைப்பிதழ் கீழே  ஒரு தந்தையாக பெருமிதம் கொள்கிறேன்
மகனுக்கு வந்த அழைப்பிதழ்





மகன் பட்டம் வழங்குகிறான்

எங்கள் வீட்டில் மீண்டும்  மகளிர் சக்தியைக்கண்டேன்  பெண்கள் குழுவாக வந்து விஷ்ணு சஹஸ்ர நாமம் ஜபித்தார்கள் வழக்கம்  போல் நான்  என் அறையில் முடங்கிக் கிடந்தேன் 
வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்  (மகளிர் சக்தி )




ஒரு சிறுகதை
 அந்தப் பெரியவர் தன்னுடைய , ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த தோட்ட வீட்டில் தனியாக இருந்தார். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் நான்கைந்து பேர்களுடைய நடமாட்டம் இருந்ததை உணர்ந்தார். ஒரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு அவசர போலீசுக்கு போன் செய்தார்.
“ என் வீட்டில் திருடர்கள் நடமாட்டம் தெரிகிறது. நீங்கள் உடனே வந்து என்னையும் என் பொருள்களையும் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறினார். அவர்கள் அவரது இருப்பிடம் போன்றவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு
“ நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்.?என்று கேட்டனர். “ தோட்ட பங்களா வின் ஒரு கடைசி அறையில் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இருக்கிறேன் “ என்றார். “ நீங்கள் எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம், அங்கேயே இருங்கள். தற்சமயம் எங்களிடம் போதிய ஆட்கள் இல்லாததால் உடனே வர முடியவில்லைஎன்று கூறி தொடர்பைத் துண்டித்தனர். .

சரியாக ஒரு நிமிஷம் கழித்து மறுபடியும் போன் செய்தார். “ என் தோட்டத்தில் திருட வந்தவர்களை நான் சுட்டு விட்டேன். நீங்கள் அவசரமாக வரவேண்டும் “என்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ் படையுடன் பங்களா முன் வந்து திருடிக் கொண்டிருந்தவர்களைக்
கைது செய்தது. வெளியே வந்த பெரியவரிடம்நீங்கள் சுட்ட நபர் எங்கே .?என்று கேட்டனர். பெரியவர் “ நான் யாரையும் சுடவில்லை “ என்றார். “ பின் ஏன் சுட்டதாகப் பொய் சொன்னீர்கள் ?என்று கேட்டதற்கு “ நீங்களும்தான் இங்கு வர ஆட்கள் இல்லை என்று சொல்ல வில்லையா “ என்றார் அந்த அனுபவம் வாய்ந்த உலகம் தெரிந்த பெரியவர்.
                             ------------------------------------

மலர்களின் பெயர்கள்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?
மணிமேகலையில்  சாத்தனார் கூறி இருக்கும் பெயர்களாம்
                             ---------------------------------------

Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
                                                  ------------------------------------

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் 
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
பாடலின்  கடைசி வரிகள் இரண்டை நீக்கி இருக்கிறேன் 
இந்தப்பாடல் உங்களிடம்  ஏதாவது நினைவலைகளைத் தோற்று விக்கிறதா ?
              ------------------------------------------------------------------------               









41 comments:

  1. பெரியவர் பக்குவமாக பொய் சொல்லி காவலர்களை வரவைத்தது அருமை ஐயா.

    தங்களது மகனுக்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொய்யும் தவறில்லை நன்மை பயக்குமானால் நன்றி ஜி

      Delete
    2. தம வாக்குக்கு நன்றி ஜி

      Delete
  2. எல்லாம் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. இனி வரும் காலத்தில் போராட்டம் என்று சொன்னாலே நாடு கடத்தி விடுவார்கள் போலிருக்கின்றது..

    தனியே இருந்த பெரியவரின் சாதுர்யம் ஏற்புடையது..

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்தால்தானே தவறுகள் தெரிய வருகின்றன.சிறுகதையை ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  4. துணுக்குத்தோரணம் என்றாலும் தோரணம் அழகாய் இருக்கிறது. உங்களை பெருமை கொள்ள வைத்த தங்கள் மகனுக்கு வாழ்த்துகள்!
    நீங்கள் இறுதியில் தந்துள்ள பாடல் காமாட்சி அம்மன் விருத்தம் . இது பற்றி தாங்கள் ஏற்கனவே தங்கள் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.உங்கள் நினைவாற்றல் நன்றாகவே தெரிகிறது 2013ம் வருடத்தில் நாங்கள் காஞ்சி சென்றபோது காமாட்சியம்மன் கோவிலில் இருந்ததைப் பகிர்ந்திருந்தேன் கடைசி இரு வரிகள் தெரியப்படுத்தும் என்பதால் நீக்கி இருந்தேன் இப்போது அது/ அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
      அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! / பாராட்டுகளையா

      Delete
  5. #வாசகர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை#
    உங்கள் பதிவு,ஏழு வாக்குகள் மேல் பெற்று வாசகர் பரிந்துரையில் வந்ததை மறந்து விட்டீர்களா :)

    ReplyDelete
    Replies
    1. வாசகர் எண்ணிக்கை வேறு வாசகர் பரிந்துரை வேறு என்றுதான் எண்ணி இருந்தேன் பரிந்துரைதான் தரப்பட்டியலை உயர்த்துகிறதோ வருகைக்கு நன்றி ஜி

      Delete
  6. துணுக்குத் தோரணம் நன்று.

    தமிழ்மணம் பற்றி யோசிப்பதே இல்லை - ஏன் எனில் அது புரியாத புதிர்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அர்த்தம்கொள்ளச் செய்கிறது வருகைக்கு நன்றி சார்

      Delete

  7. ​நெல்லைத்தமிழன் கருத்தை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு கொடுத்த மறு மொழியைப் பாருங்கள் ப்ளீஸ்

      Delete
  8. அழகிய தோரணம், சூடான இடுகை, வாசகர் பரிந்துரை, இட்ட மறுமொழிகள், உங்களுக்கு வந்த மறுமொழிகள்ன்னு பார்க்குறாங்க

    ReplyDelete
    Replies
    1. பலதும் கன்ஃப்யூஷன்கொள்ளச் செய்கிறது மொத்தத்தில் நாம்சொல்ல வந்தது புரிந்து கொள்ளாமல் போய் விடுகிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  9. Replies
    1. ரசனைக்கு நன்றி சார்

      Delete
  10. எல்லாம் ரசித்தேன். அழகான காஞ்சியில் புகழோடு வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமை உட்பட! :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்ததுதான் நன்றி மேம்

      Delete
  11. சுவையான துணுக்குகள் . தமிழ்மணம் குறித்து நான் அக்கறை கொள்வதில்லை . உங்கள் மகனைப் பற்றி நீங்கள் பெருமிதம் அடைவது நியாயம் . காமாட்சி பாட்டை நான் இப்போதுதான் வாசித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. ஐயா ஞான சம்பந்தனுக்கு வணக்கம் தமிழ்மணம் குறித்து நானும் அக்கறை கொள்வதில்லை.இருந்தாலும் தமிழ்மணத்தில் இணைத்தால் வாசகர்கள் அதிகம்வாசிக்க வாய்ப்பு உள்ளது தெரிகிறது அதிலும் வாகுப் பெற பலரும்
      விரும்புவதும் தெரிகிறதுஅதன் தாத்பர்யம் இப்போது தெரிவது போல் இருக்கிறது பின்னூட்டங்களை வாசித்தால் புரியும் என்று நினைக்கிறேன் பெற்ற மகனின் பெருமையைப் பகிர்வதும் ஒரு சந்தோஷமே நான் காஞ்சிக்கு சென்றபோது காமாட்சியம்மன் கோவிலில் கண்ட பாட்டு அது முன்பே பதிவிட்டிருக்கிறேன் பதிவிட்டது வாசகர் நினைவுக்கு கொண்டு வருகிறார்களா என்பதற்காகவே இது. மற்றபடி எனக்கும் இந்தப் பதிகம்(?) குறித்து ஏதும் தெரியாது வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  12. GMB சார்! உங்கள் துணுக்குத் தோரணம் சுவாரஸ்யம்.உங்கள் பிள்ளைக்கு என் வாழ்த்துகள். உங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். மணிமேகலையின் மலர்கள் பட்டியலும் காமாட்சி பதிகமும் சிறுகதையும் ரசித்தேன்.இப்படி நிறைய எழுதுங்கள் ஜி

    ReplyDelete
    Replies
    1. இப்படித் துணுக்குகளாக எழுதினால் பலரும் ரசிக்கிறார்கள் ஆனால் நானோ ஒரு சீரியஸ் பேர்வழி என்ன செய்வது. மகனின் பெருமையைப் பகிர்வதும் மகிழ்ச்சியே ஆங்காங்கே படித்தது இந்தச் சிறுகதையும் மலர்கள் பட்டியலும் வருகைக்கு நன்றி ஜி

      Delete
  13. அருமையான தொகுப்பு. மகனுக்கு வாழ்த்துகள். பெரியவரின் சமயோஜிதம்..நல்ல சிறுகதை.

    ReplyDelete
    Replies
    1. மலர்களின் பெயர்களும் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன் வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

      Delete
  14. அருமையான துணக்கு தோரணம், உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
    கடைசி பாட்டு அம்மா எப்போது பாடுவார். கடைசி வரியை கீதா சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மனைவிக்கு மகிழ்ச்சிதர கடைசி வரிகளை நடன சபாபடிக்கான மறு மொழியில் கூறி இருக்கிறேன் கீதா மேம் அவர்கள் காமாட்சி அம்மன் பற்றியது என்று சரியாக கணித்தார்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம்

      Delete
  15. சார் உங்கள் மகனால் உங்களுக்குப் பெருமை! எங்கள் வாழ்த்துகள்!!

    தமிழ்மணம் புரியாத புதிர்.அதனால் அதைப்பற்றி க் யோசிப்பதில்லை....

    அம்மன் பாட்டு என்பது புரிந்தது...எந்த அம்மன் என்பது தெரியவில்லை....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அம்மன்பாட்டினைப் பற்றிபின்னூட்டங்கள் பார்த்தால் புரியும்

      Delete
  16. உங்கள் மகன் பெருமை சேர்க்கிறார். வாழ்த்துக்கள்.

    போலீஸ் கதை சுவாரசியம். நிஜத்தில் பயன்படுத்தினால் என்ன ஆகுமென்று யோசிக்க வைக்கிறது.

    புதிர் பாடல் இப்போது தான் படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சார்

      Delete
  17. ஒருவேளை உங்கள் பழைய பதிவில் இந்த பாடல் வந்திருக்கிறதோ?

    ReplyDelete
    Replies
    1. காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பார்த்து எழுதிய பாடல் 2013 ல் வெளியிட்டிருக்கிறேன்

      Delete
  18. உங்கள் பின்னூட்டம் படித்தேன்.. நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் படித்து தெரிந்து கொண்டதற்கு நன்றி சார்

      Delete
  19. சுவாரஸ்யம் கூட்டுவதற்கோ இந்தக் கதம்பப்பதிவு ! உங்கள் வீட்டில் மகளிர் சக்திதானே! மகளிர் மட்டுமல்லவே. நீங்களும் உட்கார்ந்திருக்கலாமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்தீர்களாஅந்தக் கூட்டத்தில் நான் தனிமையாக உணர்ந்தேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  20. "திருடனை சுட்டுவிட்டேன்"ரசனை.

    மகனுக்கு வாழ்த்துகள்.

    சக்தி ஓங்குக! :)

    ReplyDelete