Sunday, July 30, 2017

படகுப் பயணங்கள்


                                          படகுப் பயணங்கள்
                                         -------------------------------
திரு வெ.நடனசபாபதி அவர்கள் காயலில் படகில் போனதாக எழுதி இருந்தார் திரு துரை செல்வராஜு அவர்கள் அண்மைய பின்னூட்டம் ஒன்றில் பதிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதுபற்றி எழுதி இருந்தார் சரிதான்  எனக்கு நான் மேற்கொண்ட படகு பயணங்கள் வரிசையாய் என்னைப் பற்றி எழுது என்னைப் பற்றி எழுது என்று கூறியது போல் இருந்தது. நேராக படகில்  பயணித்த அனுபவங்களூடே நிகழ்ந்த சம்பவங்கள் சில முக்கியத்துவம் பெறுகிறது1968 என்று நினைக்கிறேன்
 படகில்  கொடைக்கானல் 

திருச்சிகுடியிருப்பில் இருந்து நண்பர்கள் ஒரு பேரூந்து அரேஞ்ச் செய்து கோடைக்கானனலுக்கு உலா சென்றிருந்தோம் கொடைக்கானலில் ஏரியில்படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு  அதில் நண்பர்கள் பலரும் ஏறி அமர்ந்தோம் குடும்பத்துடன்   வந்திருந்தவர்கள் பலர் அது ஒரு துடுப்பு படகு சிறிது தூரம் சென்றதும் நண்பரொருவர் மீண்டும் கரைக்குப் போகச் சொல்லிக் கத்தினார் ஆரம்பமே சரியில்லையே என்று பலரும்  நினைத்தார்கள் விருப்பமில்லாமல் படகில் சவாரி செய்தால் ரசிக்க முடியாது என்று தெரிந்ததால் மீண்டும் கரைக்கு வந்தோம்  நண்பரும் அவர் மனைவி மகனும்  இறங்கிக் கொண்டார்கள் இறங்கும் போது ஏன் என்றுவிசாரித்தோம் எந்தநினைப்பு வரக்கூடாதோ அது வந்து அவர் பயத்தில் உறைந்துவிட்டார். அப்படி என்ன நினைப்பு.?ஒரு ஃப்லாஷ் பேக்( flash back)   போகவேண்டும்  சில நாட்களுக்கு முன் நடந்தசம்பவம் அது திருமணம் ஆன இரு இளம் ஜோடிகள் கல்லணைக்கு சுற்றுலா வந்திருந்தனர் / இரண்டு ஜோடிகளுமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்களில் ஒருவர் என்னுடன்  பணியில் இருந்தவர்
கரையில் மனைவிகள் அமர்ந்திருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கி இருக்கிறார்கள் அப்போது நீர் கால் கணுவளவே இருந்தது திடீரென்று பார்த்தால் அங்கு நின்றிருந்த இருவரில் ஒருவரைக் காணவில்லை பெண்கள் இருவரும் கதறி அழ நீரில் இருந்தவர் ஏதும்புரியாமல் விழித்திருக்கிறார்  கூட வந்தநண்பன் காணாமல் பொனது அப்போதுதான் அவருக்கும்தெரிந்தது தேட ஆரம்பிக்கிறார்கள்  களேபரமறிந்து எல்லோரும் தேட அவர்களுக்குப் புரியாதது  கூட வந்த நண்பர் ஏதோ புதைமணலில் சிக்கி இருக்கிறார்  அவரது உடல் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப் பட்டது  கொடைக்கானலில் படகில் வந்த நண்பருக்கு இந்த நினைவு வந்து தண்ணீரைப் பார்த்ததும்  தனக்கு நீச்சல் தெரியாததும்  நினைவுக்கு வந்து படகை கரைக்குத் திருப்பச் சொல்லி இருக்கிறார் கணுக்கால் அளவு கூட நீர் இல்லாதபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது என்றும் சிந்திக்க வைப்பதுதான்

கடல் தர்ப்பை எடுக்க ப் படகில் 

இன்னொரு படகுப் பயணம் நாங்கள் ராமேஸ்வரம் அருகே இருந்த நவபாஷாணக் கோவிலுக்குச் சென்றிருந்தோம் அப்போது அங்கிருந்த சிலர் கடலுக்குச் சென்று கடல் தர்ப்பை கொண்டு நவபாஷாணக் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்தது  என்று கூற கடலில் ஒரு படகுப் பயணம் ஆரம்பித்தது கடலில் சிறிது தூரம்சென்றதும்  நீரில் மிதந்து வந்த தர்ப்பைப் புற்களைப் பறித்து வந்து நவபாஷாண க் கற்களுக்கு வழிபாடு நடத்தினார்கள் எனக்கு கடலில் ஒரு படகுப் பயணம் அமைந்தது

வாரணாசியில் நாங்கள் என் பெரிய அண்ணா மனைவியுடன்  சென்றிருந்தபோது அண்ணா பித்ருக்களுக்கு  திதி கொடுக்க நினைத்தார் அவர் திதி கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை படகிலேயே  திதி கொடுக்கவும் பிண்டங்கள் வைக்கவும்  வசதி செய்யப்பட்டது திதியும்  கொடுக்கப்பட்டது
வாரணாசி படகில் திதி 
  அதன்  பின்  அலஹாபாதில் இருந்து திருவேணி சங்கமத்துக்கு படகில் சென்றதும் மறக்க முடியாதது படகில் துழாவிச் செல்லும் போது கங்கையில் இறந்த ஒரு மனித உடலும்   மாட்டின்  உடலும்  மிதந்துவந்ததை பார்த்ததும்  மறக்க முடியாத அனுபவம்  அப்போது மட்டும்  நீரில் விழுந்து விடுவோமா என்னும் நினைப்பு வராதது நல்லதற்கே
திருவேணி சங்கமத்துக்கு 
படகுப் பயணங்களில் இரு முறை கொச்சியில் சென்றதும் நினைவுக்கு வருகிறது கேரள டூரிச படகு. அவர்கள் படகில் செல்லும் போது விளக்கங்கள் கூறிக்கொண்டே வருகிறார்கள் படகில் போகும் போது  சைனீஸ் மீன்பிடி வலைகளையும் காண நேர்ந்தது ஜ்யூ டௌன் ( jew town)    பார்த்தோம் நிறையவே காணொளியில் இருக்கிறதுஒரு முறை நானும் மனைவியும்  இன்னொருமுறை அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பரின்  குடும்பத்துடன்
கொச்சியில்( காணொளியில் இருந்து )



நண்பரின் குடும்பத்தோடு குமரகம்  காயலில் படகில் சென்றதுமொரு இனிய அனுபவம் எல்லாவற்றையும்  வீடியோவாக எடுத்துள்ளேன்   பதிவிட முடியவில்லை
குமரகத்தில் படகு வீடு ( காணொளியிலிருந்து)


ஹொகனேகலில் பரிசலிலும்  சென்றிருக்கிறோம்  அப்போது எடுத்தபுகைப்படங்களை ஃபில்மில் எடுத்ததுதேடிக்கொண்டிருக்கிறேன் நான் மனைவி அண்ணா  அண்ணி அவர்களது பேரன் பேத்தி என ஆறுபேர் முதலில் பரிசலில் ஏற பயமாய் இருந்தது பரிசலில் போகும் போது சிறுவர்கள் மலை முகட்டுக்கு மேல் ஏறி அங்கிருந்து பரிசல் அருகே குதித்துகாசு கேட்டார்கள்  பயமறியா இளங்கன்றுகள்
கடைசியாக கன்னியா குமரிவிவேகாநந்தா குன்றுக்கு  படகில் சென்றோம்

                        காணொளி கன்னியாகுமரி 

           .






43 comments:

  1. நீங்கள் குறிப்பிட்ட படகுப் பயணங்களில், ராமேஸ்வரத்துக்கும், காசிக்கும் இன்னும் சென்றதில்லை.

    ஹொகேனக்கல்லில் திருமணத்துக்கு முன்பு, பரிசலில் சென்றிருக்கிறேன். ஆனால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பாதுகாப்புக்கு ஒரு வாய்ப்பும் இல்லை.

    என் மனைவியும் நானும் சிறிய படகில் (நாங்க உட்கார்ந்தபின், தண்ணீர் 4 அங்குலம் கீழேதான் இருந்தது. அதாவது படகு கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கினமாதிரி. அதுதான் அந்தப் படகுகளின் டிசைன்). பயம் ஏற்பட்டு, கரை ஏறிவிட்டோம் (இது வாடப்பள்ளியில் என்று ஞாபகம்). இதுபோன்ற படகில், நேபாளில், பொக்காரா ஏரியில் சென்றபோது, கரைக்குத் திரும்பும்போது எங்களுடன் பிரயாணித்தவர், கரைக்கு அருகில் தண்ணீரில் விழுந்துவிட்டார். (அதனால் காப்பாற்ற முடிந்தது)

    எல்லாம் நல்லா நடந்தா, நமக்கு அது ஒரு நல்ல அனுபவமா இருக்கும், படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இல்லைனா... துயரம்தான்.

    ReplyDelete
    Replies
    1. சில அனுபவப் பகிர்வுதான் இது எனக்கு நீச்சல் தெரியவே தெரியாது

      Delete
  2. எனக்கும் சிலபலப் படகுப்பயணங்கள் நினைவில் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நினைவில் வந்ததைப் பகிரலாமே நன்றி மேம்

      Delete
  3. படகுப் பயணங்கள் இனிமையாக இருந்தால் அருமை தான். பலபயணங்கள் இனித்தது.

    போர்காலத்தில் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு கிலாலிக்கடலை தாண்ட வேண்டும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து,மரணபயத்துடன் பிரயாணங்கள் செய்த அனுபவங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. திடுக்கிட வைத்தீர்கள். கற்பனை செய்யக்கூட முடியவில்லை இது போன்ற அனுபவத்தை.

      Delete
    2. படகுப் பயணங்கள் இன்பச் சுற்றுலாவானல் மகிழ்ச்சி. மரண பயத்துடன் பயணிப்பதுமிகவும்வேதனைக்குரியது என் நண்பர் பயத்தில் பயணத்தையே ரத்து செய்தார் உங்கள் அனுபவம் பகிர முடிந்தால் நல்ல பதிவாகும் வருகைக்கு நன்றி மேம்

      Delete
    3. அப்பாதுரை சார் சில நேரங்களில் நிஜ அனுபவங்கள் கற்பனையையும் தோற்கடிக்கும்

      Delete
  4. பல படகுப் பயணங்கள்!ஸ்டீமரில் பயணம், சின்னக் கப்பலில் பயணம் எனப் போயிருக்கேன். காசியில் நாங்களும் 64 கட்டங்களிலும் படகில் சென்று பிண்டப் பிரதானம் செய்து ஒவ்வொரு கட்டத்திலும் கீழே இறங்கிக் குளித்து மீண்டும் படகில் ஏறி அடுத்த கட்டம் பயணித்து எனக் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் சென்றோம்.

    ReplyDelete
    Replies
    1. கப்பல் தவிர மற்ற படகுப் பயணங்கள் செய்தாயிற்று அலஹாபாதிலிருந்து திருவேணி சங்கமத்துக்கு துழாவும் படகில் சென்றதுஇப்போது நினைத்தாலும் கிலி தருகிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  5. நான் சென்ற படகுப் பயணங்கள் நினைவில் இப்போது....

    நிறைய ஊர்களில் இப்படி படகுப் பயணங்கள் சென்றதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. பயண அனுபவங்களைப்பகிரலாமே

      Delete
  6. உங்கள் படகுப்பயண அனுபவங்கள் சுவாரஸ்யம்.படகுப்பயணம் நானும் ஒரே ஒருமுறை செய்திருக்கிறேன்! கன்னியாகுமரியில்! பயம் வந்து விட்டால் கஷ்டம்தான். ஒருமுறை மூக்கைப்பிடித்து ஆற்றில் மூழ்கியபோது படபடவென வந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. கன்னியாகுமரி கொச்சி, குமரகம் போன்ற இடங்களில் பயணம் இண்டெரெஸ்டிங் எதிர்மறை எண்ணங்கள் பயணத்தை ரசிக்க விடாது

      Delete
  7. உங்களது படகுப்பயண அனுபவங்கள் எனது வெளிநாட்டு நீர்ப்பயண அனுபவங்களின் நினைவுக்கோப்புகளைத்
    தூசிதட்டித் திறந்துவிட்டுள்ளன. நானும் ஒரு பதிவு போட்டுவிடவேண்டியதுதானா!

    ReplyDelete
    Replies
    1. அயல் நாடுகளில் பயணமென்று தலைப்பிட வேண்டியதுதான்

      Delete
  8. கொச்சின் படகு சவாரி சென்றிருக்கிறோம் மற்ற படகு சவாரிகள் சென்றதில்லை..

    கீதா: நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் சவாரிகளில் வாரணாசி தவிர மற்ற எல்லா படகு சாவாரிகளும் சென்றிருக்கிறேன் சார். கொச்சி படகு சவாரி துளசி குடும்பத்தினருடன் சென்றேன்...மற்றவை எல்லாம் எங்கள் குடும்பத்துடன்...சில படகுப் பயணங்கள் ரிஸ்க்தான்...

    ReplyDelete
    Replies
    1. நீரில் பயணிக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் கூடாது திருவேணி சங்கமத்தில் படகிலிருந்து மூங்கில் குச்சியில் நின்று குளித்ததுமறக்க முடியாதது

      Delete
  9. ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது மிகவும் வருத்தத்தை தருகிறது... மற்றபடி படகுப்பயண அனுபவங்கள் சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. என் நண்பர் நீரில் மூழ்கி இறந்தது படகு சவாரியின்போது அல்ல. நீரே இல்லாத இடத்தில் புதைமணலில் சிக்கி உயிர் விட்டிருக்கிறார்

      Delete
  10. நீச்சல் தெரியாத நண்பனுடன் படகில் போய், படகு கவிழ்ந்து, என்னையும் இழுத்துக் கொண்டு மூழ்கத் தொடங்கிய நண்பனிடமிருந்து மீண்டு அவனையும் மீட்டு.. ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. நீரில் மூழ்கிச் சாகாத நண்பன் கடனில் மூழ்கிச் செத்தது irony.

    ReplyDelete
  11. தேக்கடிக்கு போய் இருந்த போது ,எங்கள் போட் இன்ஜின் கோளாறு ஆனது ,இருட்டியும் விட்டது ,மாற்று போட் வரும்வரை பயத்துடன் காத்துக் கொண்டிருந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம்

      Delete
  12. மறக்க இயலா நினைவுகள் ஐயா

    ReplyDelete
  13. உங்களது சுவாரஸ்யமான மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை மீட்கச் செய்த திரு நடன சபாபதிக்கு நன்றி

      Delete
  14. அமைதியாக ஓடும் நதிகளின் சுழலும் புதை மணலும் நன்றாகப் பழகியவர்களுக்கே புதிரானவை...

    சிறுவயதில் நீர்ச்சுழலில் சிக்கி - தப்பித்தவன் நான்..

    பதிவு பலவிதமான இடர்ப்பாடுகளைச் சொல்லிச் செல்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பதிவு பலரது நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறது

      Delete
  15. உங்கள் பயண அனுபவங்களும், படங்களும் ஒவ்வொருவர் படகு பயண அனுபவங்களை சொல்ல தோன்றுகிறது.
    எனக்கும் நிறைய பயண அனுபவங்கள் உண்டு . சிறு வயதிலிருந்து வயதான வரை நிறைய பயண அனுபவங்கள்.

    மாதேவி சொன்ன பயண அனுபவம் பயங்கரம், உயிரைகையில் பிடித்துக் கொண்டு என்று சொல்கிற மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. மாதேவியின் அனுபவங்கள் அச்சம் தருபவை வருகைக்கு நன்றி மேம்

      Delete
  16. தொண்டியில் ஒருமுறை படகில் கடலுக்குள் சென்றோம் கால் கிலோ மீட்டர் சென்றதும் படகில் தண்ணீர் புகுந்து விட்டது நான் சட்டென வெளியில் குதித்து நீந்தி கரைக்கு வந்து விட்டேன்.

    மறற்றவர்கள் தண்ணீரை வெளியில் தள்ளி விட்டுக்கொண்டே கரை வந்து விட்டார்கள் எனது வேலை வெட்டியாகி விட்டது.

    தங்களது பதிவு எனது 1985 நினைவைக் கொண்டு வந்து விட்டது ஐயா,

    தமன்னா 6

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி.. தொண்டி என்றவுடன் என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. அங்குதான் நான் முதல் முதலில் கடலைப் பார்த்தேன். என் அப்பா, எனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும் என்று தெரியுமாதலால், கடல் தண்ணீர் ரொம்ப இனிக்கும் என்று சொல்ல, சிறுவயது பையனான நான் ஓடி கடல் நீரைச் சுவைத்துப்பார்த்தேன். அங்குதான் எங்க அப்பா, ஒரு கட்டுமரத்துல (சிறு படகு?) கடல்ல என்னையும் கூட்டிக்கொண்டு 20 அடி கடல்ல போனோம். (4-5 வயது இருக்கலாம்-69-70. ஆனால் நினைவில் இருக்கிறது)

      Delete
    2. ஹா... ஹா... ஹா... நன்றி நண்பரே

      Delete
    3. கில்லர் ஜி உங்கள் நண்பர்களுக்கு நீச்சல் தெரியாதா உங்களுக்கு உங்கள் சாகசங்களைக் காட்ட ஒரு சந்தர்ப்பம்

      Delete
    4. நெல்லைத்தமிழன்
      கட்டு மரத்தில் பயணிக்க அசாத்திய துணிச்சல் வேண்டுமல்லவா கடல் நீர் இனித்ததா அப்பா நெருப்பு சுடும் என்பதை ப்ராக்டிகலாக விளக்கி இருக்கிறார்

      Delete
    5. கில்லர் ஜி தம க்கு நன்றி

      Delete
  17. நான் எழுதிய காயல் பயணம் பற்றிய தொடர் தங்களை தங்களது படகுப் பயணங்கள் பற்றி எழுத உந்தியது என அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐயா! நீங்கள் சென்ற இடங்களில் இராமேஸ்வரம் மற்றும் ஹோகனக்கல் தவிர மற்ற இடங்களில் நானும் படகுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். கோட்டயத்தில் இருந்தபோது, கோட்டயத்திலிருந்து ஆலப்புழைக்கு படகில் சென்றதும், ஏற்காடு ஏரியில் படகில் சென்றதும் பிச்சாவரத்தில் படகில் சென்றதும் மனதில் நிழலாடுகின்றன.

    ReplyDelete
  18. நினைவுகள் சுகமானவை அதை மீட்டெடுப்பதில் உங்கள் பதிவு உதவி இருக்கிறது நன்றி ஐயா

    ReplyDelete
  19. எல்லோருக்கும் போலவே எனக்கும் நினைவுகளை மீட்டெடுக்கும் பகிர்வாக உள்ளது தங்களது பதிவு. பல முறை படகுகளில் பயணித்திருக்கிறேன் என்றாலும் கேரளா படகுப் பயணங்கள் மறக்க முடியாதவை.

    ReplyDelete
  20. கேரளத்தில் படகுகள் சில இடங்களில் ட்ரான்ஸ்போர்ட்டுக்கும் உபயோகிக்கப்படுகிறதாம் அதில் போய் வர விருப்பம் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete