Wednesday, August 16, 2017

பயண நினைவுகள்


                                            பயண நினைவுகள்
                                          ----------------------------------

பயணங்கள் பல மேற்கொண்டிருக்கிறேன் அப்போதே நான்  வலையுலகுக்கு வருவேன்  என்றோ பதிவெழுத எதுவும்  தோன்றாமல் திணறுவேன் என்றோ  நினைத்ததில்லை  அப்படி நினைத்திருந்தால் குறிப்புகள் பல எடுத்துக் கொண்டிருப்பேன் சிலர் பயணக் கட்டுரைகள் எழுதும்போது  எனக்கு ஆச்சரியமாய்  இருக்கிறதுநானும் பயணித்திருக்கிறேன்  இருந்தாலும் தகவல்களுடன்  எழுத முடிவதில்லை  ஒரு வேளை நான் என் நினைவின்  துணை கொண்டு மட்டும் எழுதுவதால் இந்தப்  பிரச்சனையோ
மந்த்ராலயாவில்
பெல்லாரியில் என்  மச்சினன் இருந்தபோது அங்கு 2005-ல்  சென்றிருக்கிறேன்  அங்கிருந்து மந்த்ராலயாவுக்கு அவன்  எங்களைக் கூட்டிச் சென்றான்  அந்த நினைவுகளின் எச்சமாக  சில புகைப்படங்கள் இருக்கிறது இருந்தாலும்  பதிவு எழுத அது போதுமா  முயற்சிசெய் என்கிறது மனம்
மந்த்ராலயாவுக்குப் போகும் வழி ஒரு வேளை ராமாயண கிஷ்கிந்தாவாக இருக்குமோ என்று ஐயம்வருமாறு  இருக்கிறது பஞ்சமுகி என்று அழைக்கப் படும்  இடம் எங்கும்  கருங்கல் மலைப் பாதைகுகைக் கோவில் 
பஞ்சமுகி கோவில்
பஞ்சமுகியிலொரு குகைக் கோவில் 
பஞ்சமுகியில்  விமான தோற்றத்துடன் ஒரு கல்

திருப்பதிக்கு பல முறை சென்றிருக்கிறோம் ஒவ்வொரு முறையும்  வரிசையில் நின்று தரிசனம்  காண்பதோ இல்லை வேண்டுதல்களை நிறைவேற்றுவதிலோதான்  நேரம்  சரியாகிறது ஒரு முறை அருகே இருந்த பாபவினாசம் என்னுமிடத்துக்கும்சென்றிருக்கிறோம் எங்களைப் போல்தான் பலரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ஒரு முறை அகில இந்திய விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள்சேர்ந்திசைக்கும் பாராயணம்  திருப்பதியில் நிகழ்ந்தபோது  என் மனைவிக்குத் துணையாக  உறவினர் சிலரும் வந்திருந்தனர் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் என்பதால் பொழுது போக்காக திருப்பதி மலையில் இருந்த சில இடங்களுக்குச் சென்றோம் அந்த அனுபவம் மகிழ்ச்சி அளித்தது  திருமலைமிகவும் தொன்மை வாய்ந்தது . பல்லாயிரக்கணக்கான பாறைகள் நிறைந்த இடம் என் உறவினர் பலரும்  பார்த்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை  ஒரு சில புகைப் படங்கள் ஒரு வேளை அதை விளக்கலாம் 








இந்த இடங்களை ROCK GARDENS என்கிறார்கள்  கோவிலிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது ராக் கார்டன் அருகே விஷ்ணுபாதம் என்னும்  இடமொன்றிருக்கிறது
---------------------------------------------------------------

இன்னொரு பயண நினைவு  நாங்கள் நஞ்சங்கோடுக்குச் சென்றதும்  பின்  நிமிஷாம்பாள்   கோவிலுக்குச் சென்றதும்தான் நஞ்சங்கோடு கபினி நதி (?) தீரத்தில் இருக்கிறது  அங்கு ஒரு காளையின் ( நந்தி) சிலை இருக்கிறது  அதுவே பிரார்த்தனைகள்செய்யும் இடம் நிமிஷாம்பாள் கோவில் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே இருக்கிறது அங்கே யார் பெயருக்கு அர்ச்சனை என்று கேட்டபோது ஸ்வாமி பெயருக்கே  செய்யச் சொன்னோம்  நாங்கள்பலர் யாரைச் சொல்லி யாரைவிடுவது  அர்ச்சகர்  அம்மாதிரி சொல்லக் கூடாது கடவுளுக்காக அர்ச்சனை செய்ய நாம் யார் என்று கேட்டு மறுத்துவிட்டார்  அவர் அம்மாதிரி சொல்லி கொண்டுவரும்போது  கை கட்டி பவ்யமாய்க் கேட்டுக் கொண்டோம்  அப்போதுஅவர் கோவிலில் கை கட்டி நிற்கக் க்கூடாது  என்றார் பல இடங்களில் பல  வழக்கங்கள் .......!






                                


                         













   


















  


34 comments:

  1. பயணத்தைப் பற்றி, படங்களைப் பார்த்து எழுதுவது கடினம். நான் நிறைய படங்கள் எடுப்பதால், வரிசைக்கிரமமாக என்ன என்ன இடங்கள் போனோம் என்று தெரியும். ஆனால், இடத்தின் பெயர், நாம ஒரு புத்தகத்துல குறித்துக்கொண்டால்தான் பயணத்தைப் பற்றி எழுதமுடியும்.

    நீங்கள் திருப்பதியில் பார்த்த இடம், 150 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புவியியல் வளைவு. இது 25 அடி நீளமும் 10 அடி உயரமும் உடையது. இப்போதும் அருகே செல்லவொட்டாமல், இரும்புக் கிராதிகளை வைத்து அந்தப் பகுதியை அடைத்துவைத்துள்ளார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் பாறைகளைக் கொண்டுதான் ஏழுமலையானின் சிலா ரூபம் செய்யப்பட்டதாம்.

    விஷ்ணு பாதத்தையும் இப்போது கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதனைக் கண்ணாடி வழியாகத்தான் காணமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. பழமையான அரிய புவி இயல் வளைவு . ஆனால் 150 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதே நெருடுகிறது நாம் இருக்கும் மண்ணும் கல்லும் எல்லாமே இந்தபூவுலகு தோன்றிய முதலே இருப்பவை நதிங் இஸ் மான் மேட் , நாங்கள் சென்றது 2005-ல் என்று நினைவு. அதன்பின் திருமலைக்கு ஓரிரு முறை சென்றிருக்கிறோம் விஷ்ணு பாதம் என்று அழைகப்படும் பாதச் சிலைகளை அப்போது கண்ணாடிக் கூண்டில் மூடவில்லை. படம்பார்த்தாலே விளங்கும்

      Delete
  2. பயணக்கட்டுரை எழுதுவது எளிது. பார்க்கும் இடங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டால் அந்த படங்களை பின்னர் எழுதும்போது பார்க்கும்போது நாம் பார்த்தது நினைவில் வரும், அதை வைத்து எழுதிவிடலாம். அப்படித்தான் நான் எழுதுகிறேன்.

    திருமலையில் பார்க்காத இடங்களை பார்க்கத்தூண்டியமைக்கு நன்றி! படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நிமிஷாம்பிகா மற்றும் நஞ்சன்கூடு கோவில்களுக்கு நானும் சென்றிருக்கிறேன். நிமிஷாம்பிகா கோவிலில் வேண்டிக்கொண்டால் நாம் நினைத்தது நிமிடத்தில் நடந்துவிடுமாம். அதனால் தான் அம்மனுக்கு நிமிஷாம்பிகா என்று பெயராம்.

    ReplyDelete
    Replies
    1. எதையும் எழுதி விடலாம் ஆனால் அதை வாசிப்பவருக்கு ஈடுபாடு வேண்டுமென்றால் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும் நான் வெளியிட்டு இருக்கும் படங்கள் டிஜிடல் அல்ல படச் சுருளிலிருந்து இப்போது டிஜிடல் செய்தது நிமிஷாம்பிகா கோவில் பற்றி எனக்கு நினைவு வந்தது அங்கிருந்தார்ச்சகர் சொன்ன விஷயங்களால் தான் வருகைக்கு நன்றிஐயா

      Delete
  3. திருமலையில் நீங்கள் சொல்லி இருக்கும் இடங்கள் பார்த்தது இல்லை. அதே போல் நிமிஷாம்பிகை கோயில் மற்றும் நஞ்சன்கூடு சென்றதில்லை. அருமையான படங்கள். சேகரம் அரியதாக உள்ளது. பஞ்சமுகி கோயிலை தூர இருந்து பார்த்தோம். எங்கள் சுற்றுலா ஏற்பாடு செய்தவர் அது பட்டியலில் இல்லை என்று சொல்லி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன் பலரும்கோவில்களுக்குச் செல்வது பிரார்த்தனைக்கு மட்டுமே சுற்றுலா அல்ல வருகைக்கு நன்றி மேம்

      Delete
  4. பயண நினைவுகளோடு தந்திருக்கும் படங்கள் அருமை. நஞ்சங்கூடு பஞ்ச ரதோத்ஸவா கர்நாடகாவில் புகழ் வாய்ந்த திருவிழாக்களில் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நஞ்சன்கோடுக்கு ஒரு முறை ஒரு திருமணத்துக்குச் சென்றேன் இன்னொரு முறை நண்பர் கூட்டிக் கொண்டு சென்றார் இரு முறையிலும் கோவில் விழாக்கள் இருக்கவில்லை வருகைக்கு நன்றி மேம்

      Delete
  5. அற்புதமான புகைப்படம் ஐயா மந்ராலிய தரிசனம் தங்களின் மூலம் கிடைத்தது வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மந்த்ரலயா படங்கள் மிக்ச் சிலவே வருகைக்கு நன்றிசார்/ மேம் ?

      Delete
  6. நினைத்தாலே இனிக்கும்

    ReplyDelete
    Replies
    1. நினைத்தாலே சுவைக்கும் நன்றி மேம்

      Delete
  7. பயணங்கள் என்றுமே இனிய நினைவுகள்.

    திருப்பதி திருமலை சென்று இருக்கிறோம்இந்த இடங்கள் பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை திருமலைசெல்லும் போது இது நினைவுக்கு வரட்டும் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  8. படங்கள் நமக்கு கட்டுரை எழுதும்போது நிச்சயம் உதவும். படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பழைய புகைப்படங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்த உதவலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  9. படங்கள் பழைய நினைவுகளை தரும்.
    நாங்களும் திருப்பதி கோயில் மட்டும் தான் பார்த்து இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அரேஞ்செட் சுற்றுலாவாகப் போகும் போது நாம் விரும்பும் இடங்க்சளை பார்க்க முடிவது கடினம் வருகைக்கு நன்றி உங்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் வரலாம் நீங்கள்தான் கோவில்களுக்கு அடிக்கடி செல்பவராயிற்றே

      Delete
  10. பஞ்சமுகி கோயிலும் படங்களும் மிக மிக் அழகாக இருக்கின்றன சார். படங்கள் நிச்சயமாகப் பதிவு எழுதப் பயன்படும்...அனைத்துப் படங்களும் அழகு!

    துளதி, கீதா

    ReplyDelete
    Replies
    1. இம்மாதிரி பழைய படங்கள் நினைவிருந்தால்தான் பதிவு எழுதப் பயன்படும் பாராட்டுக்கு நன்றி கீதா / துளசி

      Delete
  11. நினைவுகளும், படங்களும் அருயை ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி

      Delete
  12. படங்களும், பயண நினைவுகளும் சுவாரஸ்யம். அதுதான் நினைவிலிருந்தே இவ்வளவு எழுதி இருக்கிறீர்களே.. எழுதும் எண்ணம் இருக்கிறது என்றால் ஓரளவு மனதில் நிற்கும். அதற்கு முன்னாள் சென்று வந்த நினைவுகளைப்பற்றி போட்டோக்களைப் பார்த்தே இவ்வளவு சொல்ல முடிகிறதே.. அருமை. தம

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படங்கள் எடுக்கும்போது எழுதுவேன் என்ற எண்ணமே இருக்கவில்லை.போட்டோக்களே நினைவு படுத்தின வருகைக்கு தம வுக்கும் நன்றி ஸ்ரீ

      Delete
  13. பயணங்களும்
    பயண நினைவுகளும் அருமை ஐயா
    நினைவுகள் இனிமையானவை

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் பயணங்களும் நினைவுகளும் இனிமையா சார் வருகைக்கு நன்றி

      Delete
  14. திருமலையில் கல் பூங்காவிற்கும் ஸ்ரீ விஷ்ணு பாதத்திற்கும் சென்றிருக்கின்றேன்.. மிகத் தொன்மையான இடம் என்கின்றார்கள்..

    ReplyDelete
    Replies
    1. அங்கிருந்தபோது மிகவும் ரசனையாக இருந்ததுசார் வருகைக்கு நன்றி

      Delete
  15. இனி ஒருமுறை போகணும் என்ற இடங்கள் ஏராளமா இருக்கு! திருமலையில் நீங்க சொன்ன இடங்களைப் பார்க்கவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இனி ஒரு முறை போவீர்கள் அல்லவா அப்போதுபாருங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  16. மந்திராலயா பயணத்தின்போது பஞ்சமுகிக்கு சென்றுள்ளோம் ஐயா. கடந்த வாரம் மைசூர் பயணத்தின்போது நிமிஷாம்பாள் கோவிலுக்கும் சென்றோம் ஐயா. நீங்கள் நினைவுகூர்ந்து உங்களுடைய பயண நினைவுகளை எழுதுவது வியப்பாக உள்ளது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இந்த வயதில் நினைவுகள்கை கொடுப்பது நல்லதல்லவா வருகைக்கு நன்றி சார்

      Delete
  17. பயணங்களின்போது நீங்கள் நிறைய படமெடுத்திருக்கிறீர்கள். அவற்றை பத்திரமாக வைத்தும் இருக்கிறீர்கள். நினைவுகளிலிருந்து கொஞ்சம் கோக்கவும் முடிகிறது. இதுவே ப்ரமாதம்தான்.

    ReplyDelete
    Replies
    1. முன்பெல்லாம் படச் சுருளில் புகைப்படம் இப்போது டிஜிடல் அவ்வளவுதான் வருகைக்கு கருத்த்ப் பதிவுக்கும் நன்றிசார்

      Delete