Thursday, November 2, 2017

சிந்தனைகள் இலக்கியங்கள் கலந்தது


                         சிந்தனைகள் இலக்கியங்கள் கலந்தது
                                            --------------------------
 பொழுது போக்க முடியாமல் திணரும்போது வாசலில்வந்து நின்றால் பொழுதே போதாது என்னும் வகையில் சிட்டுகளைக் கண்டு ரசிக்க முடியும்  எனக்கும் அவ்வப்பொது ஒரு சந்தேகம் வரும்  பெண்களை அழகாக்கிக் காட்டுவது எது  என் மனைவியிடம் கேட்டால் அவர்களது மனம்  என்கிறாள் ஆனால் மனதைப் பார்த்தா அழகை ரசிக்கிறோம்   நீயா நானா பகுதியில் பெண்களிடமே கேட்க வேண்டிய கேள்வி இது
பதிவை எழுதும் முன்  என்னையே நான் கேட்கும் கேள்வி இந்த ஆராய்ச்சி எதற்கு அதுவும் இந்தவயதில்  வயது பற்றிய நினைப்பு இருந்தாலும்  a thing of beauty is a joy for ever  என்பதையும்மறுப்பதற்கில்லைதானே
இன்று நான்  எண்ணிப்பார்ப்பது 

அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால்என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
 கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
இப்போது அந்த எண்ணம்  ஏன் 
சரி மீண்டும் ஆராய்ச்சிக்கு வருவோம் பெண்களின்  அழகு என்று சொல்லப்படுவது எது  என்மனைவி சொல்வது தவிர.  பொழுது போக வாசலில் நிற்கும் போது  வீதியில் செல்லும் பெண்கள் என்னை கவருகிறார்கள் எங்கள் பக்கத்தில் ஒரு பெண் மூக்கும்  முழியுடனும்  மார்பும் முலையுமாக இருந்தால் அழகு என்பார்கள்  அதிலும்  அழகுக்கு அழகூட்டும்  வகையில் பல்வேறு கூந்தல் அலங்காரங்களுடன்  பெண்கள் செல்லும் போது  அம்பிகாபதியின்  பாடலே நினைவுக்கு வருகிறது (இந்த நினைவை என்னவென்று சொல்ல)
 சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.
இப்போதெல்லாம் வரும்  ஒரு  விளம்பரத்தில் ஒரு பெண்புகைப்படமெடுக்க வருவாள் விதவிதமான கூந்தல் அலங்காரங்களுடன்  அவள் சொல்லுமொரு வாக்கியம்  எனக்கு கூந்தல் இருக்கும்  மகராசி அள்ளி முடிந்தால் என்ன கொண்டை போட்டால் என்ன என்னும்  சொல்வழக்கே  நினைவுக்கு வரவழைக்கும்  
அதுவும் இப்போதெல்லாம்  அள்ளி முடிவதில் கூட ஒரு ஸ்டைல் இருக்கிறது முடியின் நுனி வெளியே தெரிய வேண்டுமாம்  எனக்கு ஒருபதிவர் இட்ட பின்னூட்டம்  நினைவுக்கு வருகிறது அப்படித்தெரிவதை அவரது மக்கள் ஒரு ரிச் லுக் தருகிறது என்பார்களாம்
 கூந்தல் பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு சங்ககாலப்பாடல் நினைவுக்கு வருகிறது  திருவிளையாடல்திரைப்படம்  மூலம் புகழ்பெற்ற அவ்வரிகள் பலருக்கும்நினைவிருக்கும்   ஆனால் அதன்  காரண காரியங்களும் பொருளும் முழுவதும் புரிந்திருக்காது என்றே தோன்றுகிறது(இப்படித்தான்   நினைவுகள் குறுக்கே வருகிறது)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

தலைவன் தலைவி முதல் உடலுறவு தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான்.
 தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.) (அந்தப் பாடலின்  பதவுரை வேண்டாமா )
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
 அழகு என்பதே காண்பவர் கண்களைப் பொறுத்தது என்பார்கள் சிலருக்கு அழகாகத்தெரிபவைஇன்னும்  சிலருக்கு அப்படித்தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாத அழகை கூட்டிக் காண்பிக்க பெண்கள் நாடும்  வகைகளில் ஒன்றே இந்தக் கூந்தல் விவகாரம் படியவாரியத் தலையில் இருந்து ஒரு சுருள் காதருகே தனித்தாடும்   பின்னல் என்பதே மறந்துபொன சமாச்சாரம்  ஒரு காலத்தில் விரித்ததலை முடி நல்லதல்ல என்பார்கள் ஆனால் அதுதான் இப்போது ஃபாஷன் பெண்கள் முடியை கோதி  விடுவதும் ஓரக் கண்ணால் தன்னைப் பிறர்கவனிக்கிறார்களா என்று நோட்டம்விடுவதும்  போதுமடா சாமி. ஒன்றும் புரியவில்லை  ஆனால் நானும்  என் இளவயதில் அழகை ஆராதித்து இருக்கிறேன் பெண்ணக் கேசாதி பாத வருணித்து எழுதியும் இருக்கிறேன் நீங்களும்  எழுதி இருக்காவிட்டாலும்  ரசித்திருப்பீர்கள் அல்லவா
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
 எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில் 
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
 பாவையை  மட்டும் வருணித்துஎழுதவில்லை அந்தக் கண்ணனையும்   வருணித்து எழுதி இருக்கிறேன் ( இல்லாவிட்டல் பக்தர்களுக்கு  ரசிக்காதே)
கடவுளைப் பற்றியும் ( கேசாதி பாதம்  வருணித்து ) எழுத  எனக்கு முடிந்தது எல்லாம் அவனருள்.....!
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
 கண்ணன் கவிதை நாராயணீயம் நூல் படித்ததால் முடிந்தது
  பொழுது போக்க வாசலில் வந்த எனக்கு ஒருபதிவு எழுதவிஷயம்கிடைத்துவிட்டது




   


 







70 comments:

  1. ரிஷ்ய சிருங்க முனிவரும் கண்டு மயங்கினார் தானே!..

    எல்லாரும் கடந்து வந்த பாதை..
    யாரும் விதிவிலக்கல்ல!..

    நயமான பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. நயமாக ஒப்புக் கொள்ளும் உங்கள் எண்ணத்தை மதிக்கிறேன் வருகைக்கு நன்றி

      Delete
  2. //எனக்கு ஒருபதிவர் இட்ட பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது அப்படித்தெரிவதை அவரது மக்கள் ஒரு ரிச் லுக் தருகிறது என்பார்களாம்.// நான் தான் எழுதினேனோ? ஹிஹிஹி, ஏனென்றால் என் குழந்தைகள் அப்படிச் சொல்லுவார்கள். எனக்குத் தூக்கிக் கட்டிக் கொள்வதே வராது! பிடிக்கவும் பிடிக்காது! :)

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன் ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டீர்கள்

      Delete
  3. வெளி அழகை விட உள் அழகால் தான் பெண்ணோ, ஆணோ அழகாய்த் தெரிகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து! உள்ளம் பளிங்கு போல் இருந்தால் கண்களும், முகமும் பளிச்சென்று மலர்ந்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் கண்ணுக்குப் படுவது புற அழகுதான் அதுதான் ஈர்க்கும் உள் அழகு என்பது பழக்கப்பட்டால்தன் தெரியும் கண்டவுடன் கண்களைப் பார்த்து உள்ள அழகை பார்க்க முடியாது

      Delete
    2. தெரியலை! ஆனால் சிலர் முகத்தைப் பார்த்ததும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அழகு இல்லை என்றாலும் மனம் அவர்கள் பால் ஈர்க்கும்! பேசச் சொல்லும்.

      Delete
    3. குழப்புகிறீர்கள். மனம் அவர்கள் பால் ஈர்க்குமென்றால் அதென்ன ஒரு டாஞ்டிபில் பொருளா? மனத்தை பழகிப்பார்க்காமல் எப்படி கண்டுபிடிப்பீர்கள்.

      Pa Vinayagam
      https://throughalookingglassalaymanreflects.wordpress.com/

      Delete
    4. பழக வேண்டியது அவர்கள் மனதோடுஅல்லவா? நான் சொல்வது என் மனத்தின் ஈர்ப்பை! சிலரைப் பார்த்தாலே மனம் அவர்கள் பால் செல்லும்! பழகச் சொல்லும். நெருங்கிப் பேசச் சொல்லும்! whether it is tangible or not! it is a feeling and I felt it so many times!

      Delete
    5. ஒத்த மனங்கள் உண்டு. அது தானாகத் தெரியவரும். உணர்ந்து தான் புரிந்து கொள்ள முடியும்! :) எல்லோரிடமும் மனம் திறக்காது!

      Delete
    6. //பார்த்தாலே மனம் அவர்கள் பால் செல்லும்! ஒத்த மனங்கள் உண்டு. அது தானாகவே தெரியும்//

      கடவுளே! இது ஒரு ஆபத்தைத் தரும் ரெலிசேஷன்சிப் பிராப்ளம். கண்டதும் காதல் என்ற கதைகள் இவைதான். இளமை தொடங்கும் காலத்தில் வரும் ஈர்ப்பின் பெயர் க்ரஷ். அப்பருவம் செல்லசெல்ல தன்னிச்சை சிந்தனை வளரவளர, பார்த்தாலே மனம் செல்லவே செல்லாது. பார்த்தாலே பழகச்சொல்லும் பேசச்சொல்லும் என்றால், ஊரை ஏமாற்றி, குறிப்பாக பெண்களை ஏமாற்றி மணம் செய்து கொண்டு அவள் நகைகளையும் உடலையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும் ரோட் சைட் ரோமியோக்களின் நாடாகல்லவா ஆகி விடும்.!

      என்ன வியப்பு? கடவுளை வணங்குவது கூட சிந்தனை செய்தே என்கிறார்கள் தமிழர்கள். இதோ ஒரு தமிழரின் பாட்டு.

      சிந்தனை செய் மனமே…
      சிந்தனை செய் மனமே தினமே
      சிந்தனை செய் மனமே – செய்தால்
      தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
      சிந்தனை செய் மனமே – செய்தால்
      தீவினை அகன்றிடுமே
      சிவகாமி மகனை ஷண்முகனை
      சிந்தனை செய் மனமே – மனமே…..

      Pa Vinayagam

      Delete
    7. இப்படி எல்லாம் அதிகமாகச் சிந்திக்க வேண்டாம். மனம் ஒன்றாவது என்பது ஆண், பெண் இருபாலாருக்கான காதலில் தான் முடியுமா என்ன? ஒரு பெண்ணாக இருந்தாலும் அவங்களோட பழகணும்னு தோணினால் தான் பழகுவோம்! இதெல்லாம் க்ரஷைச் சேர்ந்தது அல்ல! பொதுவான மனப்போக்கைக் குறித்தே சொன்னேன். அதுக்கு இவ்வளவு கவலையா? உங்கள் கவலைக்கு நன்றி! :)))))) intuition என்ற ஒன்று உண்டு. அது ஆபத்து வரும்போது எச்சரிக்கும்! இல்லைனா சும்மா இருக்கும். பெரும்பாலும் அது தவறாது. உடனே இதுக்கும் ஏதானும் தர்க்கரீதியான விளக்கம் வேண்டாம். பார்த்ததும் மயங்குவது என்பது வேறே! பார்த்ததும் பழகணும்னு நினைக்கிறது வேறே! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகவே தெரியும்! :)))))))))))

      Delete
    8. பெண்களின் அழகு ஒரு கருத்தாடலுக்கு வழி செய்கிறதே

      Delete
    9. ஒரு திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது ஒருவரைப் பார்த்தால் பிடிக்கும் இன்னொருவரைப் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்

      Delete
    10. ஜி எம் பி சொல்வது யாதெனில் ---

      எல்லாவற்றையும் (மனமும்) போய் பார்த்து பின்னர்தான் அறிய முடியும். பார்தாலே தெரிவது உடல் அழகு என்கிறார்.

      பார்த்தால் ஈர்க்கும் எனப்தே ஆபத்தென்கிறேன். குறிப்பாக பெண்கள்; சிறார்கள். ஈர்ப்பென்றால் உங்கள் மூளையே வேலை செய்யவில்லை என்பதே. ஈர்த்தவனோ அல்லது ஈர்க்கப்பட்ட பொருள் உங்களை ஆதிக்கம் செய்துவிட்டது. You are falling into the hands of confidence tricksters delectably like a fruit falling in our hands from the tree w/o we trying to pluck it. He's the winner. You're the loser.

      (It's not personal message; but general observations)

      Delete
    11. எந்த விஷயத்தையும் அணுகும் முறை என்று இருக்கிறதுஈர்ப்பது சிந்தனைக்கே உலை வைக்கும் என்னும் உங்கள்கருத்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை மேலும் நான் சொன்ன கருத்து ஒரு திரைப்படத்தில் வந்தது i had just quoted that

      Delete
    12. Her point and yours are same. Attraction by seeing mere appearance. If people, that too, the adults (children can be excused) can fall easily in a few minutes, cheats in society will be more and unwanted pregnancies and abortions everywhere. That's my point.Lets encourage all to beware of attraction by first look

      Delete
  4. ஒருவருக்கு அழகியாக தோன்றுபவர் மற்றொருவருக்கு அப்படி தோன்றவில்லை இருவருக்குமே ஒரே அளவிலான விழிகள்தானே ?
    இதிலிருந்தே தெரிகிறது ஐயா மனம்தான் காரணம் என்று.

    அழகை கண்டவுடன் காதல் கொண்டால் அது காமத்துக்கான காதலே பழகி புரிதல் கொண்டு பிறகு காதல் சொன்னால் அது மனதிலிருந்து தோன்றும் உண்மையான காதலாக இருக்கலாம்.

    சிலர் பரிதாபப்பட்டு அவள் நிலையறிந்து காதல் கொள்ளலாம்.
    அதேநேரம் சினிமா நடிகை உண்மையாக காதலித்து திருமணம் செய்தாள் என்பதை ஏற்கவே முடியாது காரணம் ஒருத்திகூட கைவண்டிக்காரனை திருமணம் செய்யவில்லை எல்லோருமே கோடீஸ்வரர்களே...

    தமன்னா - 1

    ReplyDelete
    Replies
    1. @கில்லர்ஜி
      //சினிமா நடிகை உண்மையாக காதலித்து திருமணம் செய்தாள் என்பதை ஏற்கவே முடியாது //

      இல்லை கில்லர்ஜி.அது உண்மையில்லை. அவளது சொசைட்டியில் கைவண்டிக்காரனைச் சந்திக்கும் சந்தர்ப்பமே கிடையாது. தேவயானி, ராஜகுமாரன் உதாரணம் இருக்கிறதல்லவா? (ராஜகுமாரனுக்கு தேவயானி செட்டானதை எத்தனை பேரால் நம்ப முடிந்தது? ரஜினி/லதா,
      சூர்யா ஜோதிகா உதாரணம் போதாதா?

      Delete
    2. கில்லர்ஜி சினிமா நடிகர்களும் நடிகைகளும் நம்போன்றவர்தானே ஏனோ உங்களுக்கு அவர்கள் மேல் இந்த காழ்ப்பு

      Delete
    3. நெத . உங்களிடம் இருந்து கருத்து வேறு விதத்தில் வரும் என்று இருந்தேன் நீங்களும் மொக்கை போன்ற எண்ணங்களுக்கே முக்கியத்துவம் தருகிறீர்கள் மொக்கையான எண்ணங்களுக்கு நடுவே இலக்கிய எழுத்துகளும் கலந்து இருப்பதைக் கண்டு கொள்ளவில்லையே

      Delete
  5. //அவர்களது மனம் என்கிறாள்//
    //வெளி அழகை விட உள் அழகால் தான் பெண்ணோ, ஆணோ அழகாய்த் தெரிகிறார்கள்//

    சார் இதெல்லாம் கதை. நடைமுறை வாழ்க்கையில் முதலில் கண்ணில் படுவது அழகு மட்டும்தான். அப்புறம் பேச ஆரம்பித்தபின்பு, மன அழகுதான் முக்கியமாகும். புற அழகு இருந்து, மன அழகு இல்லையென்றால், நமக்கு உடனே கசந்துவிடும் (உதாரணம் பிக்பாஸ் ஜூலி, ஓவியா)

    ஆனால், சுமாரான பெண்ணிடம் நாம் பேச நேரிடும்போது, அவளது உள்ளம் உயர்வானதாக இருந்தால், நாமாகவே அந்தப் பெண்ணை ரசிப்போம், அப்போது புற அழகில் நம் மனம் செல்லாது.

    ReplyDelete
    Replies
    1. மிகவும்ப்ராக்டிகலான எண்ணம் பார்த்துப் பேசி பழகினால்தான் உள்ளம்பற்றி தெரிய முடியும்

      Delete
  6. அழகின் அளவீடு ஆளுக்காள் மாறுபடும்

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் ஆங்கிலத்தில் the beauty lies in tha eyes of the beholder என்பார்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. The proverb is misleading all. If someone opines an ugly person as beauty, or thinks a blobfish (pl see google image) the most beautiful creature in the world, will you allow the opinion liberally using the proverb? Apart from what an individual perceives to be beauty, there's, what's called, general consensus on what beauty means. The beauty (I mean exterior look) of a woman has been analysed by bio-pschycolosists. They drew the sketches of the faces of celebrated beautiful women and analysed them. The conclusion was that the features of the faces were proportionate to one another more or less similar. Yes, if a woman has proportionate shape - in the whole body - she will be definitely beautiful to look at for all. But it is rare to have such exact proportions, so I said, more or less. It is also true that even the most beautiful woman may lack something in one aspect of proportion. The winner in Miss World contest feels jealous of the runner-up because the runner-up has something which she lacks. :-). Her beautician, before sending her candidate to the ramp, or to act, or to participate in a beauty contest, takes special care to conceal that defect.

      Beauty therefore does not lie in the eye of the beholder, but in universally accepted norms. Cultural norms also play decisive role here but to explain it I'll have to take you on tour d'horizon of socio-psychology. Ilm already being derided as an arivu jeevi everywhere. I don't want to be one here.

      Pa Vinayagam
      https://throughalookingglassalaymanreflects.wordpress.com/

      Delete
    4. நான் எனக்கு த்ரிந்த அனுபவமொன்றை கூறுகிறேன் எங்கள் ஊரில் ஒரு வசதிபடைத்தஒருவர் பல திருமண வாய்ப்புகளை ஒதுக்கி வந்தார் கடைசியிலொரு வெகுஜனக் கருத்துபடி ஒரு அழகில்லாத பெண்ணை மனமுடித்து ஊருக்கு வந்தார் எல்லோரும் அவரிடம் எப்படி இந்தப் பெண்ணைத் திருமணம் செய்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் ( மலையாளி ) எனிக்கிப் பிடிச்சூ ஞான் கழிச்சு என்றாராம்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. I've also asked the same question; or w/o asking, wondered, how was it possible for him to select such a blobfish? But you can weigh these options. 1) The man who chose an average woman, finds her a great wife, loving and caring, and (if some of your readers desire, all that the poet wrote :-)) enhances the meaning and purpose (it's possible if a doctor marries a fellow doctor and both serve society, service being their ambition) of his life - and he loves her heartily and you may be pleased to know :-) they had a great sexual life and chubby children were born of the union making every one happy - the woman you and I you had wondered no man could marry but how he married her. In scenario no.1 the family or he selected from among 100s of alliances, giving priority, as you do here, only to beauty of her exterior - overriding all considerations - no education, no character, lazy, and demanding and nagging, creating chaos in family relationships etc. and his life has become a hell.

      One is the most beautiful. The other is an ugly Betty. My friends who have married average women (i.e. with so-so appearance of exterior) are having happy married lives and none of them have complained to me, I am now standing egg on my fact for my aforesaid Wonder. I have gone to their houses and marveled at those women feeling quite ashamed of myself within me.

      The better course for us: Lets not be rash to judge a woman by her body.

      Delete
    7. I would request you to read my post written earlier. Some times facts are stranger than fiction
      http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_25.html

      Delete
    8. I'm responding to your comment above. I've separately responded to your blogpost in another place here

      Delete
  7. நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர்.

    ReplyDelete
    Replies
    1. அதை நானே பலமுறை சொல்லி இருக்கிறேனே இல்லையென்றால் இலக்கிய எழுத்துகளும் கண்டுகொள்ளப்படும் என்று நம்பி இருப்பேனா

      Delete
  8. திரு தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தி தமிழ் இளங்கோ அவர்களுக்கு கொடுத்த மறு மொழியே உங்களுக்கும்

      Delete
  9. அழகு என்பது அவரவர் மனதைப் பொறுத்ததுதான். அழகும் கவர்ச்சியும் ஒன்றா? சிட்டுகள் என்று சொல்லும்போதே மனதின் உல்லாசம் புரிகிறது!


    ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே
    அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
    தத்தித்தச் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
    கத்திக்குத் தித்தின்னக் கண்டு

    எனும் பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. அழகு கவர்ச்சி என்பதெல்லாமே மிகச் சிறி அளவில்தான் வேறுபடுகின்றன நன் பதிவில் எழுதிய படி a thing of beauty is a joy for ever நான் சொல்லி விடுகிறேன் இளம் சிறிசுகள் கவர்கிறார்கள் ஏன் என்றால் இளமையில் கழுதையும் அழகாக இருக்கும் என்பார்கள் எல்லோரும் பட்டினத்தார் ஆக முடியாதே

      Delete
    2. மேலும் உடல் என்பது ஆராதிக்க வேண்டியது பட்டினத்தாருக்கு அது தெரிந்திருக்கவில்லையா

      Delete
    3. எல்லாம் ஆராதித்து, கடைசியில் சலிப்புற்று பேரின்பத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பிய பிறகு பாடப்பட்டது.

      உங்கள் பாடலையும் ரசித்தேன்

      Delete
    4. இந்தக் கருத்து பட்டினத்தார் பாடலுக்கானது என்று தெரிகிறது கருத்துக்கு நன்றி

      Delete
    5. //உடல் என்பது ஆராதிக்க வேண்டியது //

      No...it is not for worship. கோயிலகளின் பிரகார சிலைகள்; கஜ்ரோஹோ சிலைகள் கூட ஆராதிக்க அல்லவே அல்ல. அவை பார்த்து இரசிக்க. ஆண்-பெண் உறவில் உடல்கள் ஆராதனைகளுக்கல்ல. மெல்ல மெல்ல அனுபவிக்க. ஒருவேளை ஆராதனைகே என்ற ஒருவர் எடுத்தால் என்னதான் நடக்கும்ங்கே? அவ்வுறவு உடைந்து விடும். உடையாலிருக்க வேண்டுமென்றால், இராமகிருஸ்னர்-சாரதா தேவி உறவாகும். அவர்கள் ஒருவரையொருவர் - உடலையல்ல - மனங்களை - ஆராதித்தார்கள். பட்டணத்தாரின் வெறுப்பு - ஓர் ஆன்மிக வெறுப்பு - அவர் ஓர் ஆண்; பெண்ணில் உடல் அவரின் ஆன்மிக பயணத்துக்குத் தடைக்கல். ஆனால் தொண்டரிப்பொடியாழ்வாரைப்போல விழ்ந்தெந்தரித்து வேதனைப்பட்டிருப்பார் போலும், எனவே பெண்ணின் உடல் மீது வெறுப்பாகியது. எது நமக்கு இடைஞ்சலோ அதை வெறுப்பது சரிதானே? ஒரு பெண்ணும் இப்படி வெறுக்கலாம். ஆணின் மண உறவே எனக்கு இடஞ்சல் என்று போனவர்தானே மீரா? அவரின் ஆன்மிகத்துக்கு இடைஞ்சல் ஓர் ஆணின் உறவு. மணாளனின் உறவு என்றால் அவன் உடலும்தான். காரைக்காலம்மையாரின் கதையென்ன? ஆக, நாம் வேறு; அவர்கள் வேறு என்பதே என் தேர்ந்த முடிபு.

      Delete
    6. ஆராதனை என்பதை கடவுள் சார்ந்த விஷயமாகஎண்ணுவதால் இந்தப் பிரச்சனை ஆராதனை என்பது நேசிக்க வேண்டும் என்னும்பொருளில் சொல்லப்பட்டது உடலை நேசிக்காததால்தான் பட்டினத்தாருக்கு அப்படி தோன்றி இருக்கலாம் நமது உடல் நேசிக்கவே அது ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் பொருந்தூம் உடலை நேசிக்காதவர் இருக்கிறார்களா உடலி எந்த உபாதை வந்தாலும் ஏன்கவலை படவேண்டும்

      Delete
    7. English is a better language than Tamil here. It doesn't prevaricate. Tamil here does as you changed Worship to Nesithal. English word is desire. A wife desires her hubby and he desires her. The verb 'to desire' embraces everything: mostly the sensual part of it. Sex leads to love; and vice versa. Love and peform; and Perform and love - both possible. On the contrary, Nesithal is a week verb. It seems to exclude sensual love. At the same time, there's another word Asai. But I am doubtful whether it can serve your purpose. Because you have gone to Nesithal (karthar ungkalai nesikkirar - is anything sensual here?) Nesithal is inappropriate or not fully serving your purpose. If you desire your wife (bodily) - don't need to worry - such sensual desire will ipso facto (on its own) transform itself to your nesithal also.

      Delete
    8. நானெழுதும்போது வார்த்தைகளை வைத்துவிளையாடுவதில்லை நேசம் என்பது ஒரு பொருள் மேல் கொள்ளப்படும் ஆசையே என்று அறிகிறேன்

      Delete
    9. We differ in understanding both Tamil and English.

      Delete
  10. அழகு பார்ப்பவர் பார்வையை பொறுத்தது.
    கண்டேன் நான் கண்ணனை கவிதை அருமை.
    பாவை பாடல் பார்த்தன் பாடல் எல்லாம் எழுதுவது அவன்ருள்தான்.






    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒருவராவது பதிவின் இலக்கிய பாகத்தை ரசித்தீர்களே நன்றி

      Delete
  11. ஸார் பதிவை ரசித்தோம்! உங்கள் கவிதை வரிகளையும். உங்களுக்கு வயதாகவில்லை. மனதில்! நீங்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்.

    ------இருவரின் கருத்தும்.

    கீதா: ஸார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் அகம் அழகாய் இருந்தால் முகம் நன்றாக இருக்கும் அழகும்! எனவே மனம் தான் சார் அழகிற்குக் காரணம்.

    பெண்ணைப் பற்றிய உங்கள் வர்ணனை இளமை துள்ளல்! சிட்டு!! அதையும் ரசித்தோம் ஸார். நல்ல ரசனை!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக மொக்கை எண்ணங்களுக்கே கருத்து வருகிறது இலக்கிய எடுத்துக் காட்டும் என் கவிதை வரிகளும் கண்டு கொண்ட தற்கு நன்றி

      Delete
  12. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசவேண்டாம் பெரியவரே! பெண்களுக்கு அழகென்பது முகமும் மார்பகமுமே என்று காலகாலமாய் நிரூபித்திருக்கிறார்களே! எந்த வார, மாத, மாதமிருமுறை பத்திரிகைகளை பார்த்தாலும் மேலட்டையில் இதைத்தானே காண்பிக்கிறார்கள்! லட்சோபலட்சம் வாசகர்கள் அவைகளை வாங்கி ஆதரிக்கிறார்களே! அவர்கள் தவறு செய்வார்களா? ஆகவே, பெண்களின் அழகென்பது... (முதலில் இருந்து படிக்கவும்.)

    (அது சரி, பெண்களின் அழகை வர்ணிப்பதால் என்ன தவறு செய்துவிட்டீர்கள் நீங்கள்? எதற்காக பிராயச்சித்தம்போல் கண்ணனின் வடிவழகை வர்ணிக்கிறீர்கள்? அதற்கு வேறு பதிவு போடலாமே! )

    (தங்களைப் போன்ற அழகு-ரசிகர்கள் இடையே நான் வாழ்வது எனது பாக்கியமே! தங்கள் நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அடுத்து, பெண்களின் பாதாதி கேசம் என்று ஒவ்வொரு அங்கமாக வர்ணித்து, அனுபவபூர்வமான ஒரு பதிவு போட்டால் இன்னும் சில மாதங்களுக்கு வேறு content தேட வேண்டிய அவசியம் இருக்காதே! சிந்தியுங்கள் ப்ளீஸ்!)

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பதிவுலக வாசகர்கள் பெரும்பாலோர் உண்மையை உரைப்பதில்லை என்றே நினைக்கிறேன் பெண்ணின் அழகு பற்றி கேசாதி பாதம் வர்ணித்து இருக்கிறேனே நான் எழுதியதை மீண்டும்வாசித்துப் பாருங்கள் பதிவிலேயே கூறி இருக்கிறேனே வெறும் உடலை ஆராதித்தால் பக்தர்கள் விரும்பாததுபொல் காட்டிக் கொள்கிறார்கள் அவர்களும் மகிழ வேண்டாமா பிராயச் சித்தமல்ல.எல்லோருக்கும் பொதுவாகவே என்னை பற்றியே நான் எழுதுகிறேன் ஐ மீன் என் எண்ணங்கள் என்னைப் பற்றியது அதையும் எழுதுகிறேன்

      Delete
  13. //நான் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன் ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டீர்கள்//

    சொல்லி இருந்தாலும் கட்டாயமாய் ஒத்துக் கொண்டிருப்பேன். அதனால் என்ன? :)

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு எது பிடிக்கும் என்பதை நிச்சயம் சொல்வதற்கில்லை அதனால் தான் உங்கள் பின்னூட்டத்தை அப்ப்சடி எழுதினேன் நீங்கள் பெரிது பொஅடுத்த மாட்டீர்கள் என்பது இப்போது தெரிகிறது வருகைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி மேம்

      Delete
  14. கண்ணனைப் பற்றிய பாதாதி கேச வர்ணனை பாடலை முன்பே வெளியிட்டிருக்கிறீர்களோ? பெண்ணை வர்ணித்திருக்கும் இளமை துள்ளும் கவிதையும் நன்றாக இருக்கிறது.

    எல்லோரும் தோற்றம், மனம் என்பது பற்றியே பேசுகிறீர்களே..அறிவு என்று ஒரு விஷயம் இருக்கே..? பெண்ணுக்கு அறிவே தேவை இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டீர்களோ? அழகான பெண், வாயைத் திறந்தால் ஒரே உளறல் என்றல் அந்த அழகை ரசிக்க முடியுமா?

    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில மனிதர்களை புரிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
    அழகு கண்டு பெண்ணை மனிதன் அடிமை செய்தானே..!

    என்னும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது. அப்படி அடிமையாக விரும்பாது ஒருத்தி இளமையே வேண்டாம் என்று முதுமையை விரும்பி ஏற்றாள், அவளுக்கு எது அழகு?

    என்னைப் பொறுத்தவரை முண்டாசு கவிஞன் எழுதியது போல

    நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை
    அவனியில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்
    திமிர்ந்த ஞானச் செருக்கு..

    இதோடு செயல் திறன்.இவைகள்தான் பெண்ணை அழகாக்கும் விஷயங்கள்.

    லா.ச.ரா. எழுதியது போல பெண்களுக்கு அழகு, அறிவு, அதோடு அமரிக்கையும் சேர்ந்து விட்டால்..அடடா..!

    ReplyDelete
    Replies
    1. /எல்லோரும் தோற்றம், மனம் என்பது பற்றியே பேசுகிறீர்களே..அறிவு என்று ஒரு விஷயம் இருக்கே..? பெண்ணுக்கு அறிவே தேவை இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டீர்களோ? அழகான பெண், வாயைத் திறந்தால் ஒரே உளறல் என்றல் அந்த அழகை ரசிக்க முடியுமா?/ இதெல்லாம் பார்த்துப் பழகியபின் அறியக் கூடியவை முதலில் ஈர்ப்பது அழகே அது பற்றிய சிந்தனைகள் தான் பதிவே

      Delete
    2. //நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை
      அவனியில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்
      திமிர்ந்த ஞானச் செருக்கு..//

      அவர் எழுதிவிட்டு போய்விட்டார். நீங்கள் அதைப்பாடாய் படுத்துகிறீர்கள் ! பாரதி சொல்படி இருக்கும் பெண் - கண்டிப்பாக அழகாக இருப்பது அபூர்வம். தான் அழகில்லை; அல்லது மற்றவர்கள் மத்தியில் கவனிக்கப்பட மாட்டேன் தோற்றத்தினால் - என்ற உணர்வு அடிமட்டத்தில் போய் குடைந்து கொண்டேயிருக்கும். ஏதாவது செய் ஏதாவது செய் உன் அழகுக்குறையை நிவிர்த்தி செய்ய என மனம் உந்தும். ஆமை- முயல் கதை போல, அழகிகளுக்கு இவ்வுந்தலுக்கு வாய்ப்பில்லை. ஆமைகள் பந்தயத்தில் சாதிக்கின்றன. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, எவருக்கும் அஞ்சாத நெறி முறைகள் - all are ways to excel in order to fill the void left by lack of exterior beauty.

      நீங்கள்தானே அறிவு பெண்களின் அழகுக்கு அலகு என்றீர்கள். இன்னொரு மனம் என்றார். மனத்தில் ஆயிரமழுக்குகள் இருக்கும். எப்படி மனம் அலகீடாகும்? அதைப்போல அறிவும் குணமும் சேர்ந்தேயிருக்குமென்று வாழ்க்கை காட்டவே இல்லை. அபூர்வமே. அறிவுள்ளவந்தான் அணுகுண்டைத் தயாரித்தான். போட்டவனும் அவனே. பெண்களிடம் ஆயிரக்கணக்கான அறிவுள்ள அயோக்கியர்களைக் காட்ட முடியும்.

      அறிவு, அழகுக்கு அணி சேர்க்கும். அவ்வளவுதான். அழகில்லாமல் அறிவு தனித்தும் நிற்கும்.

      Delete
  15. /காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
    என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
    “உன் நாட்களைஎண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
    இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.//

    //ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
    கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
    வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
    நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.? //

    பெண்களை ரசிப்பது இத்தகைய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள உதவுகிறதோ?

    ReplyDelete
    Replies
    1. மனம் ஒடு குரங்கு எங்கெல்லாமோ தாவுகிறது அதுவே சிந்தனைகள் ஊடே இலக்கிய இன்பமும் சேர்த்தது
      அழகை ரசிப்பது இம்மாதிரி சிந்தனைகள் வரும் முன்னேயே உண்டு A THING OF BEAUTY IS A JOY FOR EVER

      Delete
  16. வயதானாலும் தளர்வற்ற தங்கள் எழுத்துப் பணி பாராட்டத் தக்கது

    ReplyDelete
    Replies
    1. என்னிலும் மூத்தவர் நீங்கள் உங்களிடமிருந்து இந்த பாராட்டு மகிழ்ச்சி தருகிறது நானெழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தவர்களுள் நீங்களும் ஒருவர் நன்றி சார்

      Delete
  17. அருமையான எண்ணங்கள்
    சிறந்த தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. எண்ணங்களை அருமை என்று சொன்னவர் நீங்களே எண்ணங்கள் ஊடே எழும் சிந்தனைகள் பதிவின் மீதி பாகம் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

      Delete
  18. //இளம் சிறிசுகள் கவர்கிறார்கள் ஏன் என்றால் இளமையில் கழுதையும் அழகாக இருக்கும் என்பார்கள் //

    ஒன்று குறையாமல் எல்லாக் கழுதைக்குட்டிகளும் அழகாக இருக்கும். ஒன்று குறையாமல் எல்லா மனித இளசுகளும் அழகாக இருக்க மாட்டார்கள்.

    I'll round off now. Your one and only point that physical charm of a woman attracts you first. Everything else come only thereafter. That éverything else'need time and examination whereas just a look is instantaneous and spontaneous. My question to you: How many seconds will it take for you to judge her as a beauty? Or minutes? Yes, it is just a glimpse or you can see for a few minutes if the person moves before like on a ramp. Even there, it takes a few minutes more. So, you judge her as beauty in a few minutes. Please remember even cinema director and moderl seleto calls for album of the aspiring actress or a model and look, look and look for a long time - before selection.

    The beauty of a woman on just a glimpse or her exterion appearance is the most disadvantageous to our lives. Recently a cineme director in his new film chose a Delhi girl ( a Miss something) - only last week - and dropped her after a few days. Why? She is unable to emote a normal human feeling. Unfit to be an actress for my film! ஆக, ஒரு சினிமா இயக்குனர் கூட பெண்ணை வெறும் அழகு மட்டுமே என்று பார்க்க முடியாததே வாழ்கை உண்மை.

    ReplyDelete
    Replies
    1. I WOULD ROUND OFF THE MESSAGES LIKE THIS / I heard a kerala court had ruled that staring at a woman (for whatever it is worth) for fourteen seconds will not be considered as an offence

      Delete
    2. The judgement was condemned by women groups and ridiculed by many in newspapers. Shouldn't we have our own judgment in deciding our personal matters. If ya feel a woman's physical charm, that comes only from her flesh and bones, is the only measurement to attract you over and above her intelligence, character traits like compassion and justice etc, you have the right to hold on to it. Why should a court come to validate it?

      Delete
    3. ஒரு பெண்ணை 14 செகண்டுகள் பார்த்தாலேயே அழகை ரசிக்கலாம் என்பதுமறை முகப் பொருள் மற்றபடி எத்தனை நேரம் தேவை என்பதெல்லாமவரவர் ஜட்ஜ் மெண்ட்

      Delete
  19. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் அழகாக தோன்றுகிறார் என்றால் அவளுக்கு எது அழகைத் தருகிறது என்னும் கேள்வியே அனாவசியம். எப்போது அந்த கேள்வி வருகிறதோ அப்போதே உடல் கவர்ச்சியைக் தாண்டி வேறு ஏதோ இருக்கிறது என்பது தெரிகிறது. என்னைப் பொருத்தவரை how a woman carrys herself என்பதுதான் அவளுக்கு அழகைத் தரும்.

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் வயதின் ஈர்ப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம் அழகு என்பதெல்லாம் அவரவர் ரசிப்பைப் பொறுத்தது யார் அழகாய் இருந்தால் என்ன எப்படி அழகாய் இருந்தால் என்ன நான் சொல்ல வந்ததை எப்படியும் அர்த்தம் கொள்ளலாம் பதிவின் பின்னூட்டங்களே சாட்சி

      Delete