Monday, August 6, 2018

எண்ணங்கள் பலவிதம்

                                   எண்ணங்கள் பல விதம்
       என் உரையை மாணவர்களும் படிக்கிறார்களா  என்று ஒரு கருத்துக்கு மறு மொழி எழுதி இருந்தேன்
என் பதிவுகளை நான் முற்றிலும் எதிர்பாராத பலரும் படிக்கிறார்கள்  என்று தெரிய வரும்பொது மாணவர்களும் படிக்கிறார்களா  என்று கேள்வி கேட்க வைத்தது. என் சிறு கதை ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டி தீக்கதிர் இதழில் வெளி வந்ததைச் சுட்டிக்காட்டி என் நண்பர்  காட்டியிருந்தது ஒரு வேளை நான் அவ்விதம் மறு மொழி கொடுக்கக் காரணமோ ஒரு விஷயம் மகிழ்ச்சி தருகிறது எழுத்தின் ரசனை பலவிதம்   நான்முற்றிலும் எதிர்பார்க்காத வரிகள் சிலரைக் கவருகிறது ஆக என்  எழுத்துகள் சிலரை போய்ச் சேருகின்றன என்பது தெரிகிறது
தீக்கதிரில் வந்த மேற்கோள்
----------------------------------------------------------- 
திரைப்படங்களில் நெருக்கமாக  நடிக்கும்போது நடிப்பவர் மனநிலைஎப்படி இருக்கும் காட்சிகளில் ஒன்றி நடிக்கும்போது  உதாரணத்துக்கு  காதல் செய்யும்போது எப்படி இருக்கும் அதுவும் உடல் சார்ந்த நெருக்கக் காட்சிகள் அவர்கள்மனதை எப்படி பாதிக்கும் உண்மையிலேயே உடலில் பாதிப்புகள் ஏற்படுமா  இதெல்லாம்நடிப்புதானே என்று இருக்க முடியுமா முன் காலத்தில் மண விழாக்களில்  சிலசடங்குகள் மணமகனும் மணமகளும் தொட்டுச் சீண்டுவதுபொல் இருக்கும்  அதாவது தொடுதல் உடல் ஈர்ப்புக்கு உதவுமென்பதால் தானே  அப்படி. காதலிக்கும்போதும்  தொடாமல் காதலித்தால்  காதல் உண்மையாக காதலுக்காக மட்டுமே என்று இருக்கும்   தொடுதல் அதையும் மீறும்போது  நடிப்புக்காக  அதுவும் மனதை ஈர்க்கும்  உடைகளில் நடிக்கும்போது  எந்தவித பாதிப்புமில்லாமல் இருக்குமா நடிக நடிகையர் வெறுமே நடிப்புதான் என்றுஇருக்கமுடியுமா இப்போதெல்லாம் முத்தக் காட்சிகள் பெருகி விட்டன. உடல் ஈர்ப்பு இல்லாமல் ஜடம்போல் இருக்க முடியுமா  அதனால் தானோ என்னவோ  நடிகநடிகையர்களின் ஒழுக்க சமாச்சாரங்களில் கேள்விகள் எழுகிறது நாடகங்களில் நடிப்பவர்களுடன் நெருக்கம்  இருந்திருக்கிறது காதல் காட்சிகளில் நடிக்க ஆர்வம்காட்டும் பலரை நான் பார்த்ததுண்டு அதனாலேயே தொட்டுநடிக்கும் காட்சிகளை நான் வெட்டியதுண்டு ஒரு நிகழ்ச்சியை நான்பகிரலாம் என்று நினைக்கிறென் ஒரு நடிகை ரிகர்சலுக்கு  வந்தவர் என்னிடம் ஒரு சந்தேகம் கேட்டார் வேறு ஒரு நாடகத்தில் ஒருவசனம்வருமாம் அதில்  வில்லன் கதாநாயகியிடம் உன்னை பதம்பார்க்காமல் விட மாட்டேன் என்பானாம்  நடிகை தமிழ் அவ்வளவு தெரியாதவர்  என்னிடம்பதம்பார்த்தல் என்றால்  என்ன என்று கேட்டார்  நானும் அப்பாவியாக சுவைப்பது என்று கூறினேன்  நடிகை அடுத்து என்னிடம்கேட்ட வார்த்தை என்னை பயப்படச்செய்தது  நீங்கள் என்னை பதம்பார்ப்பீர்களா  என்றாளே பார்க்கலாம்   என்சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது
                   ---------------------------------------------------
எனக்கு ஓவியம் தீட்டுவதும் சில கைவினைப்பொருட்களைசெய்வதும்ஹாபி என்றுகூறி இருக்கிறேன்   ஆனால் நாட்கள் போகும்போது என்னால் எனக்கு திருப்தி செய்யும் விதத்தில் செய்யமுடிவதில்லை கைகளும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை  இருந்தாலும்  சும்மா இருக்கநேரம்கிடைத்தால் ஏதாவதுசெய்யலாமே என்று தோன்றும் அப்படி செய்ய முனைந்த சில கை வினைபொருட்கள் இதோ.  தனியாக அவற்றைப்பார்க்காமல் அதை யாராவது அணிந்து பார்க்க ஆசைப்படுவேன் எனக்கு பெண்குழந்தைகள் இல்லாததாலும்  என்மனைவிக்கு இம்மாதிரி பொருட்களை  யூஸ்செய்ய விருப்பமில்லாததாலும்   நான் செய்த பொருட்களுக்குஒரு மாடல் தேடி இருந்தேன் எங்கள் வீட்டுக்கு வரும்  ஒருபெண்மணி  எங்களுக்கு தத்துப்பெண்போல இருப்பவளும் அவற்றை அணிந்துகாட்டஒப்புதல் தந்தாள்  குவில்லிங்கில்  கை வினைப்பொருட்கள்  செய்து வந்தேன்  இப்போது அதில் ஈடு பாடு குறைந்து விட்டது டெரக்கோட்டவில் மாலையும் காதணியும் செய்தேன் காதணியாக சில்க் த்ரெடில் ஜிமிக்கி செய்து பார்த்தேன் கைகளும்கண்களும்  ஒத்துழைத்தால் என்னவெல்லாமோ செய்யலாம் 

டெரகோட்டா மாலை காதணியுடன்  

மாலை  காதணி 

டெரகோட்டா மாலை  சில்க் த்ரெட் ஜிமிக்கி


டெரகொட்டா மாலை சில்க் த்ரெட் ஜிமிக்கி 

டெரக்கோட்டா மாலையுடன்


ஒரு விஷயம்பற்றி கூறியே ஆக வேண்டும் நமக்கு நம் உடல்பற்றியும் அதன் நலம்பற்றியும்  கவலைகள்  அதிகம் இருக்கிறது என்னுடைய இந்த எண்பதுஆண்டுகாலவாழ்வில்  பலஉபாதைகளைப் பார்த்துவிட்டேன்  இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடமென்ன வென்றால்  நம்மனமே உடல் உபாதைகளை உபத்திரவமாகப் பார்க்கிறது உடல் பற்றிய சிந்தனைகளே உபாதைகளை அதிகரிக்கச் செய்கிறது எனக்கு உடல் பிரச்சனைகள் வரும்போது  என் உடலை நான் பகிஷ்கரிக்கக் கற்றுக் கொண்டேன் உடலே நீ என் கட்டுப்பாட்டில்தானிருக்கிறாய்   நான் உன்கட்டுப்பாட்டில் இல்லை  என்று கூறி அடக்குவேன்   இருந்தாலும்  சில உறுப்புகள் தன் இருக்கையைத் தெரியப் படுத்திக் கொண்டே இருக்கும்அதை மறக்கடிக்க வேறு செயல்களில் ஈடுபடுத்துவது பலன் தருகிறதுஒரு வேளை இதெல்லாம் சொல்ல நன்றாய் இருக்கிறதோ என்னவோ
-----------------------------------------

முதன் முதலில் மூன்றாம்  வகுப்பில் சேர்ந்தபோது கற்பிக்கப்பட்ட  பாடல் இப்போது மனதில்ரீங்காரமிடுகிறது எல்லா வரிகளும் நினைவில்லை இதுஒரு போர் முழக்கப்பாடல்

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம் 
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....

முன்பு ஒரு முறை எழுதி இதனை   ஒரு போர்முழக்கப்பாடலாக முடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தேன் நண்பர் சிவகுமாரன்கீழ்கண்டவாறுஎழுதிபூர்த்தி செய்துதந்தார்
 நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால் நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்.
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்

இந்த வரிகள் இந்தகாலபோர் முழக்கமாய் இருக்கிறது























                             

32 comments:

  1. அண்டன் சுரா -கேள்விப்பட்ட பெயராய் இருக்கிறது. எங்கே பார்த்திருக்கிறேன் என்று நினைவில்லை. தீக்கதிர் இதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். நம் பெயரை இப்படிப் பார்ப்பது மனமகிழ்வைத்தரும்.

    உங்கள் நாடக அனுபவம் புன்னகைக்க வைத்தது.

    உங்கள் கைவண்ணம் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால் பாராட்டுகள்.

    உடல் பற்றிய நினைவுகள் இல்லாமல் இருக்க முடியுமா? கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. முடியாதுதான் அதுவும் தன் இருப்பைத்தெரிவிக்கும் உபாதைகள் இருந்தால் இன்னும் கஷ்டம் அதை குறைக்கநான் எடுக்கும் சில முயற்சிகளே அவற்றுக்கு முக்கியத்துவம் தராதது வருகைகு நன்றி ஸ்ரீ

      Delete
  2. உங்கள் உடல், மனம் இரண்டும் இன்னமும் ஒத்துழைக்கிறது என்பது இறைவன் கொடுத்த வரமே! இந்த வயதிலும் இத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அலங்காரப் பொருட்களைச் செய்வதற்கு வாழ்த்துகள். தீக்கதிர் இதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் வாழ்த்துகள். நாடக அனுபவமும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒத்துழைப்பு குறைகிறது என்பதுதான் நான்சொல்ல முயன்றது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  3. உங்கள் பெயர் தீக்கதிர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். (ஆரோகணம்-தமிழ் இல்லை உண்மைதான். ஆரோகணம், அவரோகணம் இசை சம்பந்தப்பட்டது. ஏறுவதற்கு ஆரோகணம்)

    நாடக அனுபவம் நல்லா இருக்கு. (சின்ன வயசுல எங்க அம்மா, பெண்ணைத் தொட்டால் காது அறுந்துடும் என்று சொல்லி என்னை வளர்த்தது ஞாபகம் வருது)

    நுணுக்கமான வேலைப்பாடுகளை ரசித்தேன். அதற்கு ஒரு உத்வேகம் வரணும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆரோகணித்துவருதல் என்னும்சொல்லாட்சி இருக்கிறது ஏறுதல் என்னும் பொருளில்தான் எழுதப் பட்டது எத்தனையோ பயமுறுத்தல்களில் வளர்ந்தவர்கள் தானே நான் அனைவரும் உத்வேகத்தை உடல் நிலை குறைக்கிறது

      Delete
  4. உங்கள் கதையில் வரும் ஆரோகணித்து என்ற வரியை எடுத்து போட்டு இருப்பது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    நீங்கள் செய்த ஜிமிக்கி, மாலைகளை அணிந்து அழகாய் போஸ் கொடுத்து இருக்கிறார் உங்கள் த்த்துபெண்.
    போர் பாடல் அருமை.
    எண்ணத்தொகுப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. தத்து பெண்ணுக்கு நன்றி தொகுப்பை ரசித்ததற்கு நன்றி மேம்

      Delete
  5. தங்களின் கைவண்ணம் வியக்க வைக்கிறது ஐயா... எனது தந்தையும் "சும்மா" இருந்து பார்த்ததில்லை... ஏதேனும் ஒரு நுணுக்கமான வேலையை செய்து கொண்டு இருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தந்தைக்கு பாராட்டுகள்

      Delete
  6. கை வண்ணம் அருமை ஐயா.
    கவிஞர் சிவகுமாரனின் வரிகள் ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் வரிகள் பற்றி கூற வேண்டுமா . அவரிடம் நான் எழுதியதைக் கூறி அடை முடிக்க வேண்டி இருந்தேன் முதலில் அவர் எழுதியது ஏனோ எனக்கு திருப்திதரவில்லை போர் முழக்க மாக இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால் தற்காலப் போரின் முழக்கமாக எழுதிவிட்டார் நான் கொடுத்திருந்த வரிக அந்தக் கால போர் முழக்கம்

      Delete
  7. ஆண் இந்த மாதிரி கைவேலை செய்வதே அதிசயம். அதிலும் இந்த வயசில் செய்வது இன்னும் அதிசயம்.

    வாழ்த்துகள்ப்பா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும் வாழ்த்துகளுக்கு நன்றிம்மா

      Delete
  8. பத்திரிக்கையில் வந்தது சரி.இன்னொரு விஷயம் நான் சோர்ந்து விடாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது உங்கள் மற்றும் திருச்சி வை.கோ அவர்களின் பிரமிப்பூட்டும் தொடர் பதிவுகளை வைத்துத்தான் எனக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதுவதே என் எண்ணங்களைக் கடத்தவே ஆனால் கற்பனையில் நான் உங்களை விட பலபடிகள் கீழே

      Delete
  9. உங்கள் வார்த்தையில் சொன்னால் 77 years young and vibrant ...

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன திருத்தம் அது இப்போது 80 வயதுஎன்று இருக்க வேண்டும்

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நினைவுகளின் தொகுப்பு அருமை. காலத்துக்கும் இவ்வலைப்பதிவு நிலைத்திருந்து உங்கள் நினைவுகளை சுமந்து செல்லட்டும்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நிதானமாக வந்து பார்க்க வேண்டும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

      Delete
  13. 'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே' என்பது கவிஞன் {கண்ணதாசன்} வாக்கு. அவரவர் எண்ண ஓட்டங்கள் தாம் அவரவர்களை சமைக்கின்றன என்பது எனது கருத்து. அதனால், எப்படிப்பட்ட மனிதராய் வாழ நாம் ஆசைப்படுகிறோமோ அதற்கேற்ப நம் எண்ணங்களை சமைத்துக் கொண்டால் நாம் நினைக்கிற மாதிரியே வாழ்க்கை அமைய நிறைய வாய்ப்புண்டு.

    சிவகுமாரனின் கவிதை எண்ண ஓட்டம் 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' குறளை நினைவுறுத்தியது. குறிப்பாக, 'பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்; நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்' என்ற வரிகள் சிலிர்க்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னொரு வாய்ப்பு என்ற ஒன்று இருந்தால் இதே வாழ்க்கையையே வேண்டுவேன் சரியாகப் புரிந்து கொண்டேனா தெரியவில்லை சிவ குமாரனிடம் கேட்டது நான் கொடுத்திருந்த பாடலின் விடு பட்ட வார்த்தைகளின் முடிவு அவர் எனக்கு எழுதிக் கொடுத்தது இக்காலப் போர் முழக்க வரிகளாகி விட்டது

      Delete
  14. தீக்கதிர் நாளிதழில் தங்களின் பெயர்
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நான் எதிர்பாராத வர்களும் என் எழுத்துகளைப் படிக்கிறார்கள் என்பதைகாட்டியது மகிழ்ச்சியே

      Delete
  15. மேற்படி தீக்கதிர் நறுக்கினை நான் உங்களுக்கு அனுப்பியபின்னர், அதனடிப்படையில் நீங்கள் அவருக்கு எழுதிய கடிதத்தை அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், எனக்குத் தெரிவித்திருந்தார். உங்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்தியமை எனக்கு மகிழ்வினைத் தந்தது ஐயா.

    ReplyDelete
  16. தொடர்பினை தொடர விரும்புகிறேன் அவர் என் நூலின்பிரதி கேட்டிருந்தார் அதற்கு பதிலாக அதன் சூட்டியைஅனுப்பலாமா எனக் கேட்டிருந்தேன் பதிலை எதிர் நோக்குகிறேன் முகநூலில் என் தேடல் விரயமாகிப் போயிற்று நன்றி சார்

    ReplyDelete
  17. சின்னவயதுக் கவிதையைப் பிரமாதமாக தொடர்ந்தெழுதி முடித்திருக்கிறார் சிவகுமாரன்.

    அவர் ஏன் மேலும் எழுதாதிருக்கிறாரோ! வருடமாகப்போகிறது..

    ReplyDelete
  18. சிவகுமாரனின் எழுத்துகளுக்கு என்றும்நான் அடிமை மிக அழகாக தமிழில் எழுதக் கூடியவர் மதுரை வலைப் பதிவர் மாநாட்டில் ஒரு அறிமுக செய்து கொண்டார் அதை நான் காணொளியாக்கி மகிழ்ந்திருக்கிறேன் என்சின்ன வயது ரைம் எனக்கு முழுமையாக நினைவில் இல்லாததால் நினைவில் இருந்ததை எழுதி அதை முடிக்க வேண்டி இருந்தேன் முத்லில் எழுதியது எனக்கு திருப்திதர வில்லை போர் முழக்கமாக இருக்க வேண்டினென் எழுதிக் கொடுத்துவிட்டார் அதிலும் எனக்கு ஒரு குறை நானெழுதி இருந்த ரைம் அந்தக் கால போர் முழக்கமாய் இருக்க சிவகுமாரன் எழுதி தந்ததுஇக்காலப் போர் முழக்கமாய் இருந்தது இருந்தால் என்ன ஒரு நல்ல கவிதை கிடைத்ததே

    ReplyDelete