Sunday, September 16, 2018

ஒன்றிலிருந்து ஒன்றாக



                                ஒன்றிலிருந்து ஒன்றாக
                               --------------------------------------
வீட்டின் புழக்கடைப் பக்கம்  மாமரம் மேல் தொற்றித்துளிர் விட்டிருக்கும் வெற்றிலைக் கொடியைக் கண்டவுடன்   நினைவுகள் மலரத் தொடங்கிற்று என்பெரிய அண்ணி மறைந்தது டெல்லியில் சாவுக்குப் போகமுடியவில்லை ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆகவே அவரதுமுதல் வருட திதிக்கு (எங்கள் பக்கம் ஆட்ட சிரார்த்தம்  என்பார்கள்)நானும்  என்  மனைவியும்பாலக்காட்டுக்குச்சென்றோம்சிரார்தத்துக்குப் ப்பலர் வந்திருந்தார்களண்ணியின்வீட்டில் தங்க முதலில் உத்தேசித்திருந்தாலும்  அதனால் அவர்களுக்குச்சிரமம் என்று தோன்றியதுஅருகிலேயே தங்கும் இடம் ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்கள்
கோவிந்தராஜ புரத்தில் இருந்து கல்பாத்தி போக ஒரு சந்து வரும் அங்கிருந்து புழைக்கு (ஆறுக்கு)வெகு சமீபம் ஆனால் நான்சின்ன வயதில் பார்த்த ஆறு வேறு இப்போது இருக்கும்  ஆறுவேறு  இப்போது வெறும் மணல் திட்டுதான்  அசிங்கப்பட்டு இருந்தது ஒரு இரவுதானே என்று அங்கே தங்க ஒப்புக் கொண்டோம் அன்று இரவு சரியான  சிவராத்திரியாக இருந்தது விளக்கு வைத்ததும்வீட்டுக்குள் பெரிய தவளைகள் வர ஆரம்பித்தன  கூரையில் எலிகள்  ஓடஆரம்பித்தனபடுக்க ஒரு பென்ச் அதன் மேல் படுத்து  எங்கே தவளையும்  எலியும்வருமோ என்று   காத்திருப்பதிலேயே  நேரம் கழிந்தது  விடிந்தும் விடியாதடுமாக அண்ணியின் வீட்டுக்குச்சென்றோம்  இரவில் நேர்ந்த அனுபவங்களை கூறிய போது வெகு எளிதாக அவற்றின் இடங்களை நாம் ஆக்கிரமித்தால் பாவமவை என்ன செய்யும் என்று பதில் வந்தது இதை எதிர்பார்த்திருந்தால்  ஏதாவது ஓட்டல்களில் தங்கி இருக்கலாம்  ஆனால் இந்த அனுபவம் கிடைத்திருக்குமா அண்ணியின்  சிரார்த வேலைகள்நடந்துமுடிந்தன அண்ணாவின் பெண்கள் டெல்லியில் இருந்து வந்தவர்கள் அண்ணிபற்றி  ஒருகவிதை பாடினார்கள் அண்ணியின் சகோதரர்வீட்டில் காரியம் நடந்தது அவர்கள்வீட்டு முன்னால் ஒரு வெற்றிலைக்கொடி இருந்ததுஎன் மனைவி எப்படி வைத்தால் வெற்றிலைக் கொடி வளரும்  என்று கேட்டுக் கொண்டாள் அவர்கள் அந்தச் செடியில் இருந்து ஒரு கிளையைவெட்டி வீட்டில் வைக்கச் சொன்னார்கள் அப்படிவைத்த  கொடிதானின்றுஎங்கள்வீட்டுமாமரத்தையே  பற்றிக் கொண்டு வளர்ந்திருக்கிறது  ஒரு வெற்றிலைக் கொடி என்னென்னவோ நினைவுகளைக் கிளறி விட்டது  
அன்று அங்கு தங்கியது  சிறுவயது நினைவுகளைதாங்கிச்சென்றது கோவிந்தராஜ புரத்தின் கீழ்க்கோடி தாழத்தெரு  என்று அழைக்கப்பட்டது அப்போது அங்கு தெருவி மத்தியில் ஒருகிணறுஇருந்தது அது இப்போதுஇல்லை அந்த கிராமமே இப்போது பார்க்கும்போது வெகு சிறியதாகத்தோன்றியது அந்தத் தெருதான் எங்கள்சிறுவயதில்மிகப் பரந்து விரிந்த இடமாய் இருந்திருக்கிறது வயதுசெய்யும் மாற்றமோ என்னவோ மிகப்பெரியதாயிருந்தது இப்போது சிறியதாய்  காட்சி தந்தது கலபாத்தி ஒரு அக்கிரகாரம் அதைச்சுற்றிலும்  ஏகப்பட்ட அக்கிரகாரங்கள் எல்லாம்  கிராமமென்று அழைக்கப் பட்டது கிராமத்தின்  நினைவுகளை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்   ஒரு முறை என் இளைய மகன்மருமகள் பேத்தி பேரனுடன் ஊர் கும்பாபிஷேகத்துக்குச் சென்றதும்நினைவுக்கு வருகிறது எங்கள் குலக் கோவில் என்று  சொல்லப்பட்ட மணப்புளி காவுக்கும்  சென்றது நினைவிலாடுகிறது
காசியில் பாதி  கல்பாத்தி என்று சொல்வார்கள் அந்தக்கல்பாத்தி சிவன்கோவில் ஒரு

 பள்ளத்தில் இருக்கிறதுஅங்கு திருவாதிரையின்போது ஒரு வாழை மரத்தை ஒரே

 வெட்டில் சிவன் வெட்டுவதுபோல் பாவனை செய்வார்கள் அதன் காரண கதைகளை

 அப்போதெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை ஆனால் கோவிலுக்கு மேலே ஒரு

 ஓட்டல் இருந்தது சச்சு கடை என்பார்கள் அங்கு சேவை மிக நன்றாக இருக்கும்

 அந்தக்கடை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை  கல்[பாத்தி தேர் புகழ் பெற்றது ஒரே

 சமயம்சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்தும்தேர் வரும் என் மனைவிக்கு

 கல்பாத்திதேர்காட்டக் கூட்டிப் போயிருக்கிறேன் பெரிய தேர் ஒரு யானை பின்னால்

 வந்துமுட்டித்தள்ளும்  யானையின் மிக  அருகில் இருந்து  அதைக்கண்ட என்

 மனவிக்கு பயமதிகமாயிற்று
மாமரம்தொற்றும்  வெற்றிலைக் கொடி 

பூர்விக வீட்டின்  முன்னால் 
கோவிந்தஎ ராஜபுரம் பூவிக வீடில்  தற்போது வசிப்பவருடன் 
குலதெய்வக்கோவில்  மணப்புளிக்காவு 

கல்பாத்தி ஸ்ரீ விஸ்வநாதர் கோவில் 
கல்பாத்தி கோவில்  சாலையில் இருந்து 
கல்பாத்தி  புழை (நதி)





26 comments:

  1. சிறு விடயம்கூட பல நினைவுகளை மீட்டிவிடும் ஐயா.

    படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  2. வெற்றிலைக்கொடி நானும் என் மாமா கேஜிஎஸ் வீட்டிலிருந்து எடுத்து வந்து இரண்டு மூன்று முறை எங்கள் வீட்டில் வைத்துப் பார்த்தேன். அதிருஷ்டமில்லை. வரவில்லை.

    தூக்கமில்லா இரவு மட்டுமல்ல பீதி நிறைந்த இரவு! படங்கள் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு செடி வளர ராசி வேண்டும்போல அந்த இரவு மறக்க முடியாது வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  3. பழைய நினைவுகள் என்றென்றும் மனதில் நினைத்து நினைத்து மகிழ்த்தக்கன ஐயா
    படங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் நினைவுகளே வாழ்க்கையாகி விட்டது

      Delete
  4. தூக்கமில்லா இரவு - நல்ல அனுபவம்....

    ஒன்றிலிருந்து ஒன்றாக - பல விஷயங்கள் நினைவுக்கு வந்ததில் ஒரு சிறப்பான பதிவு. படங்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளுக்கென்ன தொடர்ந்து வரும் தூக்கமில்லா இரவு எப்படித்தாண் அங்கு மக்கள் தூங்க முடிகிறதோ

      Delete
  5. வெற்றிலைக்கொடி அழகு... இனிய நினைவுகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. செடி கொடிகள் எல்லாமே அழகுதான்வருகைக்கு நன்றிசார்

      Delete
  6. உங்கள் வீட்டிற்கு வந்தபோது இந்த வெற்றிலைக்கொடிகள் படர்ந்திருக்கும் விதம் கண்டு பிரமித்தேன். ஞாபகம் வருகிறது. இதன் பூர்வீகம் கேரளம் என இப்போது தெரிந்துகொண்டேன்.

    ஆறு, ஊர், கோவில் என்று படங்கள் அழகு. பூர்வீக வீட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். கேரளத்தில் உங்கள் இளம்பிராயம் பற்றி இன்னும் நினைவுகளை மீட்டெடுத்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கேரளத்தில் என்பாட்டியுடன் ஓராண்டு காலம்மட்டும்தான் இருந்திருப்பேன் எழுதியும் இருக்கிறேன்

      Delete
  7. வெற்றிலைக் கொடி அம்பத்தூரில் எங்க வீட்டிலேயும் இருந்தது. பின்னர் போய் விட்டது. பராமரிப்பும் நீரும் தேவை! :( உண்மையிலேயே வன விலங்குகளின் இடத்தை நாம் ஆக்கிரமித்தால் அவை நகருக்குள் வரத் தான் செய்யும்!

    ReplyDelete
    Replies
    1. அவற்றால் தொல்லை வரும்போது அபடி நினைக்க முடியவில்லையே

      Delete
  8. பொதுவாகவே இடம் மாறினால் தூக்கம் வராது. இம்மாதிரியான இடங்களில் சிவராத்திரி தான். எங்களுக்கும் இம்மாதிரிப் பல அனுபவங்கள். சமீபத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்தமாதிரி எல்லாம் இல்லை தவளைகளுடனும் எலிகளுடனும் உறங்கமுடியவில்லை

      Delete
  9. உங்கள் கல்பாத்தி அனுபவம், நான் அங்கு ஒரு முறை சென்றிருந்ததை நினைவுபடுத்தியது. என் மனைவியுடன் வாடகை ஊர்தியில் ஒரு ரவுண்டு சென்றிருந்தேன், பாலக்காடு சென்றிருந்தபோது. கோவிலுக்கு அருகே இருந்த கடையில்தான் வடாம், ஊறுகாய் எல்லாம் வாங்கினோம். கோவிலுக்குள் செல்லவில்லை.

    சிறுவயது நினைவுடன் செல்லும் ஊர்கள், வீடுகள் தற்போது மிகவும் சிறியதாகத் தோன்றுவதை நான் அனுபவித்திருக்கிறேன். இவ்வளவு சிறிய வீட்டிலா அத்தனைபேர் வாழ்ந்தோம் என்று தோன்றியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பாலக்காட்டில் நிறையவே கோவில்கள் உண்டு என் அனுபவம் புதிதல்ல என்கிறீர்கள்

      Delete
  10. நாங்கள் பாலக்காட்டில் ஹரிஹரன்(?) உணவகத்துக்குச் சென்றிருந்தபோது மாலை 6.30 மணிக்கு, அப்போதுதான் சேவை தீர்ந்துவிட்டது என்று சொன்னார்கள். பாலக்காடு, திருவனந்தபுர சேவை நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நானும்பாலக்காட்டுக்கு ஒரு முறைக் சென்றிருந்தபோது அந்த ஓட்டலில் உண்டிருக்கிறேன் பேசப்படும் அளவுக்கு இல்லை என்பதே என் அபிபிராயம் நிங்கள் சென்றது பாலக்காடு டௌன்

      Delete
  11. மாமரத்தில் சிகப்பு எறும்புகள் பத்திரமாக இருக்கின்றனவா?

    ReplyDelete
    Replies
    1. அவை வரும் போகும் இப்போது இல்லை ஒருவேளை மரத்தில் பூ காயிருக்கும்போது மட்டும்தான் வருமோ நீண்ட இடைவெளிக்குப் பின் மகிழ்ச்சி தருகிறது பேரன் திருமணம் முடிந்ததுஇல்லையா முக நூலில் வாசித்த நினைவு

      Delete
  12. கோவிந்தராஜபுரம், கல்பாத்தி இரண்டில் ஒன்றை பெரிய கிராமம் என்றும் இன்னொன்றை சின்ன கிராமம் என்றும் சொல்கிறார்கள். எது பெரிய கிராமம், எது சின்ன கிராமம் என்று தெரியவில்லை.
    நாங்கள் கோவிந்தராஜபுரம் சென்ற பொழுது பூர்வீக வீட்டில் வசிப்பவர் வெளியூர் சென்றிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.
    புகைப்படங்கள் தெளிவாக இருக்கின்றன.

    ReplyDelete
  13. அப்ப்டி ஒன்றுமில்லை ஒரு வேளை பழைய கல்பாத்தி கிராமத்தோடு கன்ஃப்யூஸ் ஆகி விட்டதோ கல்பாத்தியின்சுற்று வட்டாரங்கள் எல்லாமே ஒவ்வொரு கிராமம்தான் ப்பெரியது சின்னது என்று இல்லை

    ReplyDelete
  14. ஒன்றிலிருந்து ஒன்றாக எழும்பிய நினைவுகளின் தொகுப்பு அருமை. படங்கள் நன்று.

    ReplyDelete
  15. ரசித்து எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி மேம்

    ReplyDelete