சபரிமலை யாத்திரை
-----------------------------------
சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களுக்கும் உரிமைஉண்டு என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்பு
என்னைஇப்ப்திவுஎழுதத்தூண்டியது வந்ததீர்ப்பு சரியா தவறா என்று அலசல் இல்லை சில அடிப்படைகளை நினைத்துப்
பார்க்கும் போது எழுந்த எண்ணங்களே
இப்பதிவின் சாராம்சம்
முன் காலத்தில் சபரி மலைக்குப் போவதே ஒரு சவாலாக இருந்தது ஏறத்தாழ 42 கி மீ தூரம்நடந்தே போகவேண்டும் அடர்ந்தகாட்டுப்பகுதி கரடு முரடான மலை
மேடுடனான காட்டுப்பாதை வெட்ட வெளியில் ராத்தங்கல் குடும்பத்தைவிட்டு
நீண்ட நாட்கள் பிரிந்துஇருக்க வேண்டும் விலங்குகளின் நடமாட்டத்தால் பயம் இவற்றைஎல்லாம்சரிகட்ட சில பழக்க வழக்கங்களை விட
வேண்டும் நம் நாட்டில்தான் எதையும் சரியாகச் சொன்னால் எடுபடாதே கடவுளின் பெயரால் சொல்லி சில நியமநிஷ்டைகளை
ஏற்படுத்தி இருக்க வேண்டும அப்போதுதான் மக்கள் அனுசரிப்பார்கள் அதற்குப் பழகிக்
கொள்ள சில விரத முறைகள் ஏற்படுத்தப்பட்டன/ எந்த முறைக்குமொரு காலகெடுவைத்து சொன்னால் தான் ஏற்கப்படும் ஒரு மண்டல காலம்
அனுஷ்டித்தால் அவை பழக்கத்துக்குவந்துவிடும்
காட்டுப்பகுதியில் காலணி இல்லாமல் நடப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடனிருப்பது நாம் அவ்வாறு இருப்பதை பிறர் அறிய கருப்பாடை
அல்லது காவியாடை கட்டுக்குள்செல்ல கை விளக்கு (டார்ச் லைட் ) எதிர்வரும் விலங்குகளை சமாளிக்க கத்தி கூட்டமாக ப் போவது சரண கோஷ்மிட்டு போவது எல்லமே ஏதோ ஒருகாரணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது
நீண்ட நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும் உடல் சார்ந்த விஷயங்களுக்கு
முக்கியத்துவம் தராது இருத்தல் உ-ம்
தாம்பதிய உறவு கொள்ளாது இருத்தல் தரையில்
படுத்து எழல் .இம்மாதிரி கட்டுப்பாடுகள்
இருந்தால் உடலும் பழக்கப்பட்டு
விடும் ஆனால் இவை எல்லாவற்றையும் கடவுள் பெயரால்சொன்னல் பயத்துடன் செய்வார்கள்
என்க்கு எதையும்
நானே என்னையே சோதித்து முடிவு காணுதல் வழக்கம் சபரிமலைக்கு யாத்திரை யாக மூன்று முறை சென்றிருக்கி.றேன் முதல் ஆண்டு 1970ல் என்று நினைவு விரதங்களை
மிகக்கடுமையாக அனுஷ்டித்தேன் சபரி மலையில் அங்கப்பிரதட்ஷிணமும் செய்தேன் ஜோதி தரிசனம் கண்டு உருகி இருந்ததும்
நினைவுக்கு வருகிறது வாரமிரண்டு நாட்கள் என்வீட்டில் பஜனை நடக்கும் அன்னதானமுமிருக்கும் ஆக முதல் ஆண்டு தரிசனம் கிடைத்ததில் சில படிப்பினைகளும் இருந்தது போற்றிசாமி என்றே அழைக்க[ப்[பட்டேன் இரண்டாம் ஆண்டும்மலைப் பயணமென்னை ஈர்த்தது .
இம்முறை என் மூத்தமகன் அப்போது ஐந்து வயது அவனயும் அழைத்துச் சென்றேன் அம்முறை யாத்திரை எனக்கு பல பாடங்களக் கற்பித்தது எந்த
விரதமும் இல்லாது வருவோரும் எல்லவற்றிலும்சொகுசு காண்போரும் கூட இருந்தனர் யாத்திரை முடிந்து திரும்பும்போது குருவாயூரில் சில கசப்பான அனுபவங்கள் (பார்க்க) கிடைத்தது
யாத்திரைபற்றிய என் கண்ணோட்டமும் சிறிது மாறத் தொடங்கியது அதன்பின் சபரி மலை செல்லும் ஆர்வம் குறைந்தது கடைசியாக
2007 அல்லது 2008 ம் ஆண்டுஎன்றுநினைக்கிறேன் என்மனைவிக்கு சபரி மலைக்கு செல்லும்
ஆசை எழுந்தது மலை ஏறும் போது என் மனைவி
மாதவிடாய் பருவத்தில் இருப்பவரா என்று கேட்டு வழியில் மடக்கினார்கள் அதெல்லாம் முடிந்து
விட்டது என்றுசொன்னோம் ப்ரூஃப் வேண்டுமென்றார்கள்
நாங்கள் மலைக்குச் செல்ல ஆர்வலர்கள் தடைவித்திப்பது எனக்குள் கோபமூட்டியது டாக்டர்
செடிஃபிகேட் கேட்காத குறைதான் ஒரு
வழியாக மலை ஏறிதரிசனம் முடித்து திரும்பினோம்
அப்போதே பெண்களுக்கு எதிராக பலர் செயல் படுவதும் புரிந்தது இவை எல்லாம்
சேர்த்து எனக்கு மலை ஏறி தசரிசனம் செய்வது வீண் என்றே நினைக்க வைத்தது எங்குமிருப்பதாகக் கூறப்படும் ஆண்டவனை
எங்கு தரிசனம்செய்தால் என்ன பழனி திருப்பதி குருவாயூர் சபரி மலை போன்ற இடங்களில் அந்த இடங்கள் பக்தர்கள் வரவால் அதிக சாங்க்டிஅடைவதாக
ஒரு நம்பிக்கை நம்பிக்கை குறித்து ஏதும்
கருத்து சொன்னால் பக்தர்கள் பொங்கி விடுகிறார்கள் இந்த நேரத்தில் உச்ச நீதி மன்ற
தீர்ப்பு அதில் சொல்லப்பட்டிருக்கும்
கருத்துகள் என்னைக் கவர்ந்தன பெண்களை அடிமைகளாகப்பாவிக்கும் ஒரு சமுதாயத்தில்
பெண்களே அதை அறிய முடியாமல்
ஆணாதிகத்தாரால் பழக்கப் படுத்தப் பட்டு
இருக்கிறாள் மாத விடாய் என்பது ஒரு
பயாலாஜிகல் நிகழ்வு அதையே தீட்டு என்றுஒதுக்குவது எனக்கு சரியாகப்பட வில்லை மாதவிடாய் சமயத்தில் இருந்தென்ன யாரும்புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை மாத
விடாய் காலத்தில் ஒதுக்கி வைக்கப்படுவது அவர்களுக்கு ஓய்வு கோவிலுக்குச்சென்றுவழிபடுவதும்
தவறல்ல என்னும்கொள்கை தேவைஎன்பதையும் மீறி
வேறு காரணங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை இப்போதெல்லாம்சுத்தமாயும்
சுகாதாரமாகவும் இருக்கவும் பல வழி முறைகள் புழக்கத்தில் இருகின்றது இதைவிட்டு மதக்
காரணமும் பழங்காலம் முதலே வழக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும் யும் காரணமாகச்
சொல்வதுநம் பாட்ரியார்கியல் பழக்கத்தையே சுட்டுகிறதுஆணும்பெண்ணும் சமமென்று இயங்கும் இக்காலத்தில் பெண்களை
பாரபட்சமாக நடத்துவதும் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை அப்படி இருப்பதே சரி என்னும் எண்ணமும் பெண்களிடையே கூட ஊறி இருப்பதைஅறிய முடிகிறது சபரி மலை வழிபாட்டில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் வழக்கம் இருப்பது சந்தோஷம் தருவது அனால் யாத்திரை முடிந்து வந்து
விட்டால் பழைய குருடிகதைதான் விரதபாவிப்புகளென்றுஏதும்
தெரிவதில்லை காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன
கதைதான்யாத்திரை சமயம் எல்லோரும்சாமிகள்
தான் ஆனால் இப்போதெல்லாம் விரதம் என்பது
எல்லாம்பெயரளவில்தான் இன்றுமாலை நாளைப்பயணம் என்னும்கதிதான்
ஒரு கடவுளை நைஷ்டிக பிரம்ம
சாரியாகக் காட்டுவதும் பெண்களுக்கு வழிபடும் உரிமையை மறுப்பதும் சரியல்ல, அதை
எடுத்துக்கூற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவைப்பட்டது Better late than never
உங்கள் கோணத்தில் பார்த்து அலசி இருக்கிறீர்கள். இதே போல் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்துக்கும் ஆதரவு தெரிவிப்பீர்களா? :(
ReplyDeleteஉச்சாநீதி மன்றத்தீர்ப்பு அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று நான் சொல்லவில்லை ஆனால் அந்ததீர்ப்பு நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது
Deleteகட்டுப்படுத்துகிறது என்பது வேறு்... அதை வரவேற்று ஒரு பதிவு செய்வது வேறு... உங்களது பதிவு இரண்டாவது வகை என்பது, பிறக்கப் போகும் குழந்தைக்கும் தெரியும் ஐயா...
Deleteகேரளத்திலேயே பெண்கள் மட்டும் வழிபடும் சில "காவுகள்" உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள் அல்லவா? இங்கே தமிழ்நாட்டில் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் காலம் காலமாகப் பெண்களே வழிபாடுகள் செய்வது தெரியுமா? நேபாளத்தில் சில சக்தி பீடங்களிலும் நேபாளத்து முக்திநாத் விஷ்ணு கோயிலிலும் பெண்களே வழிபாடு செய்வது தெரியுமா? சில கோயில்களுக்குள் ஆண்கள் நுழைவதற்குத் தடை உண்டு என்பதும் தெரியுமா?
ReplyDeleteநன்றி எனக்குத் தெரிந்திராத தகவல்கள் அதற்கும் இப்பதிவின் சாராம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா
Deleteஇதற்குள் 'உச்சா நீதிமன்றம்' வருவதே தவறு என்று தோன்றுகிறது...
ReplyDeleteபலரும் கேட்டுத்தா ந்நிதி மன்றத்துக்கு வந்திருக்கிறது உச்ச நீதி மன்றம் உச்சாவாக வந்து விட்டது உங்கள் பின்னூட்டத்தில்
Deleteதங்கள் பதிவு நிறைய விஷயங்களைச் சொல்கின்றது...
ReplyDeleteநமது இலக்கு ஸ்ரீ ஐயப்ப தரிசனம் தான் - என்னும் போது
திரிகரணமும் வேறெங்கும் செல்லாது...
ஒரு சில வருடங்களுக்கு மேல் சபரி மலைக்குச் செல்வதற்கு மனம் விரும்பவில்லையெனில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..
வீட்டு விலக்கான நாட்களில் -
நம் வீட்டு பூஜை மாடத்தில் கூட
நமது பெண்கள் திருவிளக்கேற்ற மாட்டார்கள்...
பால் காய்ச்ச மாட்டார்கள்...
தலைக்குப் பூ கூட வைத்துக் கொள்ள மாட்டார்கள்...
வாழ்வியலின் அர்த்தம் அனர்த்தம் ஆகிப் போனது...
சிரார்த்தம் போன்ற சில விஷயங்களைத் தவிர
இல்லத்துப் பூஜைகளில் பெண்களுக்கே முதலிடம்...
எங்களுடைய சம்பிரதாயத்தில்
எனது மாமனாரின் குல தெய்வக் கோயிலுக்குள்
நான் நுழைய முடியாது.. என் மகன் அவனுக்குத் திருமணம் ஆகும் வரை செல்லலாம்...
என்னை எனது மனைவி தான் - தலைக்கட்டு முறையுடன்
குடும்பப் பெயர் சொல்லி அழைத்துச் செல்ல முடியும்...
எனக்கு மட்டுமல்ல.. அந்தக் குல தெய்வ வீட்டில் பெண்ணெடுத்த எல்லாருக்குமே இது தான் விதி!...
எனக்கு ஆதரவாக எவனும் வழக்குப் போட வருவானா!?...
மாற்றார்களைக் கூட சிந்திக்க வைத்திருக்கின்றது -
வழக்கிற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு...
பதிவில் நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கின்றீர்கள்...
வாழ்க பெண்மை.. நலம் கொண்டு வாழ்க...
பதிவின் ஆரம்பத்திலேயே தீர்ப்பு குறித்த கருத்தல்ல என்று எழுதி இருக்கிறேன் பல சம்பிரதாயங்களின் காரணங்களை எனக்கு தெரிந்த மட்டில் கூறி இருக்கிறென்
Deleteதுரை செல்வராஜு சார் - //சிரார்த்தம் போன்ற சில விஷயங்களைத் தவிர// - அதிலும், ஹோமம் வளர்ப்பதற்கான அக்னியை பெண்ணிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். இன்றைக்கு ச்ராத்தம். பெண்கள் இல்லாமல் இது ஆரம்பமாவதில்லை. ச்ராத்த உணவு தயார் செய்ய ஒருவர் வந்திருக்கிறார். அப்போதிலிருந்து மனைவியின் பங்கு ஆரம்பமாகிவிட்டது.
Deleteஅந்த பரம்பரையின் முத்தச்சி மட்டுமே நிலவறைக்குள் சென்று
ReplyDeleteஸ்ரீ நாகராஜனுக்கு வழிபாடுகள் செய்யமுடியும்..
ஒரு எல்லைக்கு மேல் ஆண்களுக்கு அனுமதியே கிடையாது..
இப்படியான கோயிலும் அதே கேரளத்தில் மன்னார் சாலை என்னுமிடத்தில் உள்ளது...
வனத்தில் பற்றிக் கொண்ட தீயிலிருந்து தப்பிப் பிழைத்த நாகங்களை அந்தக் குடும்பத்துப் பெண்கள் காப்பாற்றியதால்
நாகராஜனே பிறந்து வளர்ந்ததாகவும்
அவர்களுடைய வீட்டிலேயே கோயில் கொண்டதாகவும்
நாகராஜனைப் பூஜிக்கும் உரிமை அந்தக் குலத்தில் பெண்களுக்கு மட்டுமே உரியது என்று வரையறுத்ததாகவும் ஐதீகம்...
நிலவறையினுள் முத்தச்சி மட்டுமே சென்று பூஜிக்கும் போது
மனித ரூபமாக நாகராஜன் எழுந்தருள்வதாக வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது..
பல நூற்றாண்டுகளாக இந்த சம்பிரதாயம் மாற்றப்படவேயில்லை..
ஆண்களுக்கு ஆதரவாக மாற்று சமயத்தினர் வழக்குத் தொடுக்கவும் கூடுமோ!..
தஞ்சை மாவட்டத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய்ப் பிள்ளையார் என்று கும்பிடுவார்கள்..
இரவு எட்டு மணிக்கு மேல் தான் மாவு இடிப்பார்கள்..
பெண்களுக்கு மட்டுமே அனுமதி... நாலு ஐந்து வயதிற்குக் மேற்பட்ட ஆண் குழந்தைகளைக் கூட விரட்டி விடுவார்கள்..
விடியற்காலையில் முடிவுறும் பூஜையின் பிரசாதம் கூட
ஆண் வர்க்கத்துக்குக் கிடையாது..
அங்கே நடப்பவை எல்லாம் ரகசியம்...
அதற்கும் அனுமதி வேண்டி
ஆண்களுக்கு ஆதரவாக மாற்றுச் சமயத்தினர் வழக்கு தொடுக்கக் கூடுமோ!..
ஐயா போன்று ஆட்கள் இருப்பதால் நடக்கும்...
Deleteபாம்புக் காவு என்பது மன்னார் சால்சையில்மட்டுமல்ல இன்னொரு இடமும் உண்டு பாம்பு மேக்காவு என்று நினைவு போயிருக்கிறேன்ஒவ்வொரு கோவிலுக்கும் ஒருகதை இருக்கத்தானே செய்கிறதுஆண்டவன் வழிபாட்டிலும் பேதமா
Delete//ஆண்டவன் வழிபாட்டிலும் பேதமா// - ஆமாம் ஆமாம் ஆமாம். எல்லோரும் சமமல்ல. சமம் என்று சொல்வது நம் அறியாமை. இது ஆண்டவன் வழிபாட்டில் மட்டுமல்ல எங்கேயும் அப்படித்தான்.
Deleteஅவரவரது, தகுதி மற்றும் பல்வேறு காரணிகள் அதனை நிர்ணயிக்கும்.
நீங்களே உங்கள் பழைய நண்பர்களோடு (கூட வேலை செய்பவர்களோடு) ஒரு கூட்டம் நடத்தினால், செய்த பணிக்கு ஏற்ப முன் வரிசை/மேடை/மரியாதைகள் தரவேண்டும் என்று நினைப்பீர்கள். இல்லை என்று பொதுவெளிக்காகச் சொல்லிக்கொள்ளலாம்.
ஆண்டவன் சன்னிதானத்தில் அவரவர் தகுதிப்படி வரிசை கிடைக்கிறது. இதில் வருத்தப்படவோ அசூயைப்படவோ தேவையில்லை (திருப்பதியில் முதலமைச்சர் அந்தஸ்து உள்ளவர்கள் குலசேகரன் படி வரை சென்று 2 நிமிடங்கள் வரை தரிசிக்க அனுமதி, கலெக்டர் லெவலில் 1 நிமிடம் என்றெல்லாம் கணக்கு இருக்கிறது. திருவரங்கத்தில் விஸ்வரூப தரிசனத்தில் கோவில் அலுவலர்கள் சொல்பவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள்... சாதாரண பக்தர்கள் பெரும்பாலும் லகு தரிசனம்/ஜரிகண்டிதான்)
கேரளக் கோவில்களில் சட்டையில்லாமல்தான் தரிசனத்துக்குச் செல்லவேண்டும். பெண்கள் பாரம்பர்ய உடை அணிந்துகொண்டு செல்லவேண்டும். நல்லவேளை, நீங்கள் முடிவு செய்யும் இடத்தில் இருந்திருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும்.......
சமம்தான் ஆனால் சமமாக பாவிக்கப்படவில்லை என்பதே சுடும் உண்மை
Delete>>> சபரி மலை வழிபாட்டில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் வழக்கம் இருப்பது சந்தோஷம் தருவது.. ஆனால் யாத்திரை முடிந்து வந்து விட்டால் பழைய குருடிகதை தான்!... <<<
ReplyDeleteவிரதத்தின் நியமங்களுள் ஒன்று பிரம்மச்சர்யம் - இல்லற சுகங்களைத் துறந்திருப்பது...
மலைக்குச் செல்பவர்கள் எல்லாருமே
நான் ஐயப்ப பக்தன்.. இனி நானும் இல்லறம் துறந்தேன்.. என்று சொல்லி விட்டால் அந்த சுமங்கலிகளின் கதி என்ன?...
உலக இயக்கம் தான் என்னாவது!?...
எனக்குத் தெரிந்து சில கட்டுப்பாடுகள் பழக்க்லத்ட்க்ஹுக்கு வர இம்மாதிரி விரதங்கள் உதவலாமானால் நம்மைக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குவதைத்தான் கூறி இருகிறேன் சிலவற்றைத் துறப்பது நம்மைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தான் என்றுதோன்றுகிறது
Deleteவணக்கம் ஐயா....
ReplyDeleteசபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற சம்பிரதாயம் உள்ளது இன்று, நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள விடயம் இதில் ஆணாதிக்கம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
நமது ஊரில் செவ்வாய் கொழுக்கட்டை என்ற பெயரில் இரவில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வணங்கும் ஒரு வழக்கம் உள்ளது இதை பெண்ணாதிக்கம் என்று சொல்வதா ?
ஐயப்பன் பிரமச்சாரி என்பது ஐதீகம் இறைவனை நம்பும் ஆத்திகவாதிகள் இந்த சம்பிரதாயங்களையும் ஏற்றாக வேண்டும்.
பெண்ணுரிமை கோருவதில் அர்த்தமில்லாமல் போய் விட்டது. இதிலும் அரசியல் உண்டு என்பதே எமது கருத்து அதாவது அதிக வருமானம் வருமிடம் சபரிமலை பெண்களையும் வரவைத்தால் மேலும் வருமானம் வரலாம் என்ற சிந்தையின் காரணமே இந்த நீதித்துறையின் இறக்குமதியாக இருக்கலாம்.
தங்களைப் போலவே நானும் நான்குமுறை சபரிமலை சென்றவன்.
ஜோதி கண்டு பரவசப்பட்டவன் (1988) மலையடிவாரத்தில் விபச்சாரப் பெண்களை கண்டவுடன் விரதத்தை பூர்த்தி செய்தவர்களை கண்டு இறைவனை ஓரங்கட்டி வைக்க நினைத்தவன்.
இந்த முடிவு ஐயப்பனை கலங்கப்படுத்துகிறது. இதோ கள்ள உறவு தவறில்லையாம் நீதி கிடைத்து விட்டது.
கமலும், கௌதமியும் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தமுறை தவறு இல்லை போலும்.
இந்தியாவை ஏதோவொரு இங்கிலீஷ்காரனுக்கு பேரம் பேசி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
சந்தி சிரிக்கப்போகும் இந்தியாவை சந்தியா என்று பெயர் மாற்றுவார்கள்.
சகோ கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.
/
Deleteஐயப்பன் பிரமச்சாரி என்பது ஐதீகம் இறைவனை நம்பும் ஆத்திகவாதிகள் இந்த சம்பிரதாயங்களையும் ஏற்றாக வேண்டும். இல்லவிட்டாலையப்பனின் பிரம்மசரியம் என்னாவதுஇத்தனை சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வருபவர் எல்லோரும் நல்ல வாழ்க்கையை வாழ்கிறர்கள் என்று சொல்லலாமாஎப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதுஅவரவர் உரிமை
இனி கருத்திட வரும் அனைத்து வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் :-
ReplyDeleteதங்களது வெவ்வேறு கருத்துரைகளை தனித்தனியாக, கருத்துரை இடவும்...
இல்லையெனில் நீங்கள் நினைக்கும் சிந்தனைக்கு ஏற்ற மறுமொழி வருவது கடினம்...
நன்றி...
யாருடைய பின்னூட்டமும் சிந்தனைகளில் நேராக இருப்ப்பவரை பாதிக்காது
Deleteநானும் சபரிமலைக்கு மூன்று முறை சென்று வந்தவன் தான் (1971, 1972, 1982) அவ்வளவு கூட்டத்தில் வசதி இல்லாத இடத்தில் பெண்கள் இயற்கை உபாதைகளுக்குக் கூட ஒதுங்கமுடியாத நிலையில் பெண்களை அழைத்து செல்வது சரியல்ல என்றே தோன்றுகிறது. பெணகளுக்கு அனுமதி உண்டென்றாலும் எந்த குருசாமியும் கொண்டு செல்ல மாட்டார். சட்டப்படி குற்றம் என்று மத நம்பிக்கைகளை எளிதில் மாற்ற முடியாது.ஆணும் பெண்ணும் சமம் எனபவர்கள் பெண்கள் என்ற பெயரால் கிடைத்த சலுகைகள் (உ-ம் ladies quota, maternity leave, separate queue) வேண்டாம் என்று சொல்வார்களா?.
ReplyDeleteசலுகைகளைப் போராடி பெறும் நிலையில் இருக்கும் பெண்களின் உரிமைக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தத் ட்க்ஹீர்ப்பு என்றே தோன்றுகிறது
Delete//எங்குமிருப்பதாகக் கூறப்படும் ஆண்டவனை எங்கு தரிசனம்செய்தால் என்ன //
ReplyDeleteஐயப்பனுக்கு சபரிமலை தவிர்த்து அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை போன்ற தளங்களிலும் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபட யாதொரு தடையும் இல்லை. ஆகவே, உங்கள் கருத்துப்படி அய்யப்பனை தரிசிக்க விரும்புகிற பெண்கள் நான் குறிப்பிட்ட மூன்று கோவில்களுக்கு சென்று வழிபடலாம் அல்லது வீட்டில் இருந்து கும்பிட்டாலும் பொதுமல்லவா?
ஐயப்பனை வழிபட நினைப்பவர்கள் எந்த கோவிலுக்கும்கூடப் போகாமல் வழிபடலாமே
Deleteநீங்கள் எழுதியிருக்கிற கருத்தோடு நீங்களே முரண்படுகிறீர்கள் என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். நான் 32 ஆண்டுகள் விரதமிருந்து சபரிமலை போனவன். ‘ஐயப்பனை வழிபட நினைப்பவர்கள் எந்தக் கோவிலுக்கும்கூடப் போகாமல் வழிபடலாமே’ என்பதுதான் உங்கள் நிலையாக இருந்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் ஆதரித்திருக்க மாட்டீர்கள். நாங்கள் சபரிமலைக்குத்தான் போய் ஐயப்பனை தரிசனம் செய்வோம் என்று சொல்கிறவர்களுக்கு உங்களது கருத்தைச் சொல்லிவிட்டுப் போயிருப்பீர்கள். மொத்தத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரிப்பதுபோல நீங்கள் எழுதியிருக்கிற பதிவு சும்மா லுல்லுலாயிக்கு என்று நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நன்றி! :-)
Deleteவீட்டுக்கு விலக்காகி இருக்கும் பெண்களை ஊறுகாய், சாம்பார் அல்லது உப்பு, புளி போன்றவற்றைத் தொடச் சொல்லுங்கள். அதில் தெரியும் மாற்றம் பின்னர் புரியும். என்னதான் காலம் மாறினாலும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தாலும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களால் உணவுப் பண்டங்கள், செடி, கொடிகள் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தான் செய்யும். பால் குடிக்கும் குழந்தையைத் தாய் தவிர்த்து வேறு வீட்டுப் பெண் வீட்டு விலக்கானால் எடுத்துக் கொஞ்சினால் அந்தக் குழந்தைக்குப் பால் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுக்கோளாறு ஏற்படும். இதெல்லாம் அனுபவபூர்வமாகப் பார்த்துத் தெரிந்து கொண்டது. பெண்களுக்கு சம உரிமை என்பது பிறரோ அல்லது நீதிமன்றமோ "இந்தா! வைச்சுக்கோ!" என்று கொடுப்பது அல்ல! நான் நானாக இருப்பது தான் என் உரிமை! அதே போல் மற்றப் பெண்களும். நான் பெண் என்பதை நான் மறக்காமல் அதற்கேற்ற பண்பாடுகளுடன் இருத்தல் தான் என்னுடைய முழு உரிமை! என் சிந்தனை, என் வேலை, என் உடை, என் திருமணம், என் குழந்தைகள், என் குடும்பம், என் சமூகம் என அனைத்திலும் பண்பாட்டைப் போற்றி அதன்படி நடப்பது தான் நாளைக்கு எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாகும்.
ReplyDeleteஅம்மா... இன்னும் அருமையான கருத்துக்களை பிரிக்கவும்...
Deleteநன்றி...
கீதா சாம்பசிவம் இப்படி எல்லாம் கூறியே மாற்று சிந்தனை வர விடாமல் செய்கிறார்கள் எத்தனையோ வீடுகளில் மாதவிடாய் தோறும் கூட எல்லா வேலைகளும் செய்கிறார்கள் இந்தப் பழக்கங்களைக் கடை பிடித்து வரும்குடும்பங்கள் மிகச் சிறந்த சமுஹாயமாகஎன்றோ மாறி இருக்க வேண்டாமா
Deleteடிடி மற்றவர்களிடம் கருத்து கேட்பதை விட்டு உங்களுக்குத் தோன்றுவதை கூறலாமே
Deleteஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் கள்ளக்காதலுக்காகக் குழந்தைகளைக் கொன்ற அபிராமிகள் தான் உருவாகப் போகிறார்கள்.
ReplyDeleteகள்ளக்காதல் என்றிலிருந்தோ இருந்துதான் வந்திருக்கிறது உச்ச நீதி மன்றத்தீர்ப்புகாரணமாகாது
Deleteஐயா உலகம் தோன்றிய காலத்திலிருந்தே (ராமன் மனைவி மீது ராவணன் ஆசைப்படவில்லையா)
Deleteகள்ளத்தனம் இருக்கிறது ஆனால் இனி மேலும் வலுப்படும். யாரும் யாரையும் கேள்வி எழுப்ப இயலாது.
பிக்பாஸ்கூட ப்ரேசில் நாட்டின் பிக் பிரதர் இறக்குமதிதான்.
இந்திய கலாச்சாரத்தை அழிப்பது ஒன்றே குறிக்கோள். எல்லாம் இலுமினாட்டிகளின் செயல்.
யாரும் யாரையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது இல்லுமினாட்டிகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேனே
DeleteTo, கீதா சாம்பசிவம் அவர்கள்
ReplyDelete//நான் நானாக இருப்பது தான் என் உரிமை//
ஸூப்பர்
உரிமையில் யாரும்தலை யிடுகிறார்களா
Delete// நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை அப்படி இருப்பதே சரி என்னும் எண்ணமும் பெண்களிடையே கூட ஊறி இருப்பதைஅறிய முடிகிறது //
ReplyDeleteஐயா... தங்களின் வீட்டில் அப்படித்தானா...?
// நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை அப்படி இருப்பதே சரி என்னும் எண்ணமும் பெண்களிடையே கூட ஊறி இருப்பதைஅறிய முடிகிறது //
ReplyDeleteஅந்த முன்னுரிமை கொடுப்பதே பெண் என்று உங்களின் கருத்து...
முதலில் இது சரி தானே...? மழுப்பி விடுவீர்கள் என்பதால் இந்த கேள்வி...(!)
சொல்லாத வார்த்தைகளுக்கு என்னை சொந்தக்காரர் ஆக்க அப்படிஎன்ன அவசியம் நான் சொல்ல விருப்புவதை பதிவில் எழுதி இருக்கிறேன்
Delete// நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை அப்படி இருப்பதே சரி என்னும் எண்ணமும் பெண்களிடையே கூட ஊறி இருப்பதைஅறிய முடிகிறது //
ReplyDeleteஊறி இருப்பது சரியா...? தவறா...?
// யாத்திரை முடிந்து வந்து விட்டால் பழைய குருடிகதைதான் விரதபாவிப்புகளென்றுஏதும் தெரிவதில்லை காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன கதைதான்யாத்திரை சமயம் எல்லோரும்சாமிகள் தான் //
ReplyDeleteஉங்களின் இத்தனை ஆண்டு வாழ்வில் நல்லவர்களையே பார்க்கவில்லையோ...?
ஏன் இல்லாமல் உங்களை பார்த்ட்க்ஹிருக்கிறேட்னே
Delete// யாத்திரை முடிந்து வந்து விட்டால் பழைய குருடிகதைதான் விரதபாவிப்புகளென்றுஏதும் தெரிவதில்லை காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன கதைதான்யாத்திரை சமயம் எல்லோரும்சாமிகள் தான் //
ReplyDeleteகாஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப் போவது சரியா...? தவறா...?
தி.த சார் ... குரங்கை நினைத்துக்கொண்டு மருந்து குடிக்காதீர்கள் என்றால், குரங்கையே நினைத்துக்கொண்டிருப்பதுபோல, விரதத்தின் காரணத்தைப் புரிந்துகொள்ளாமல், விலக்கப்பட்டவைகளையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சிலர் அப்படி இருப்பதால் எதையும் பொதுப்படையாக்க முடியாதில்லையா? அதுவும்தவிர விரதம் என்று ஒரு மண்டலம், அவர்களால் விலக்கப்பட்டவைகளைக் கட்டுப்படுத்த முடிகிறதல்லவா, நாளடைவில் அது அவர்களை நல்ல வழிக்கு இட்டுச் செல்லுமல்லவா, அதுதான் விரதமிருப்பதன் பலன்.
Deleteஜி.எம்.பி சார், அந்த ஒரு சிலரை மனதில் வைத்து இடுகை எழுதியிருக்கிறார், அதனால் பெரும்பாலானவர்களை காயப்படுத்துகிறோம் என்பதை அறியாமல்.
என் அனுபவப்ப்டி யாத்திரையின் போது கடை பிடிக்கக் கூறுவது அடுவே குணமாகவேண்டும் என்பதற்காக ஆனால் இந்த அவசரௌலகத்ட்க்ஹில் பெரும்பாலானோர் இவறைக் கடை பிடிப்பதுஇல்லை யாத்திரை ஒருஃபாஷனாகி வருகிறதுநான் சமூகத்ட்க்ஹில் நிலவும் சிலவிஷயங்களுக்கு எதிராக எழுதுகிறேன் அது என் எண்ணம் யாரையும்காயப்படுத்த அல்ல
Delete// காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன கதை //
ReplyDeleteஅந்த கதையை சொல்லுங்கள் (சரியான)
// உச்சாநீதி மன்றத்தீர்ப்பு அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று நான் சொல்லவில்லை ஆனால் அந்ததீர்ப்பு நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது //
ReplyDeleteகட்டுப்படுத்துகிறது என்பது வேறு்... அதை வரவேற்று ஒரு பதிவு செய்வது வேறு... உங்களது பதிவு இரண்டாவது வகை என்பது, பிறக்கப் போகும் குழந்தைக்கும் தெரியும் ஐயா...
// யாருடைய பின்னூட்டமும் சிந்தனைகளில் நேராக இருப்ப்பவரை பாதிக்காது //
ReplyDeleteஇது சரி தான்... ஆனால்...
நேராக இருப்பது வேறு... நேர்மையாக (மறுமொழி அல்லது பதில்) இருப்பது வேறு...
உங்கள் பின்னூட்டங்களே வம்புக்கு இழுப்பதுபோல் இருக்கிற்தே அதற்கு நான் தயார் இல்லை
Deleteசர்ச்சைக்குரிய பொருள் ஒன்று கிடைத்ததும் அதைப் பற்றி பதிவிடுவது உங்கள் வழக்கம். வரும் பின்னூட்டங்கள் யாவையும் மறுப்பது உங்கள் இயல்பு. இரண்டு நாட்களுக்கு உங்களுக்கு பொழுது போகும்.
ReplyDeleteஇந்தியாவின் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது அது குறித்து எழுந்த எண்ணங்களே பதிவின் சாராம்சம் சர்ச்சை எங்கே இருந்து வந்தது நனே எழுதி இருக்கிறேன் நம்பிக்கை குறித்து கருத்து சொன்னால் பக்தர்லள் பொங்கு கிறார்கள்என்று என்ன செய்வது நம்பிக்கை என்னும்பெயரில் என் மனதுக்குஒவ்வாத விஷயங்களை சர்ச்சைக்கு உரியது என்றுநினைக்கிறார்கள் பின்னூட்டங்களால் பிறர் கருத்துகளும் தெரிய வருகிறது நான் எழுதுவதெல்லாம் சர்ச்சைக்குரியது என்று எதிர்ப்பதும்
Deleteஆர்தோடாக்ஸ் பதிவுலக வாசகர்களின் குணமாகி விட்டது
இந்த பெண்களே இப்படித்தான். ஆதி காலத்து ஈவா முதல் இந்தக்காலத்து இந்திரா (இந்திரா ஜெய்சிங்) வரை சொன்ன பேச்சை கேட்க மாட்டார்கள். செய்தபின் பழியை எல்லாம் ஆணின் மேல் சுமத்தி விடுவார்கள்.
ReplyDeleteஎன்னுடைய பின்னூட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆணும் பெண்ணும் சம்ம் என்பவர்கள் பெண் என்று கிடைத்த சலுகைகளை ஏன் விட்டுக்கொடுக்கவில்லை.
வாசிப்பவர்கள் சில நொடிகளாவது என் எழுத்துகளின் தன்மையை புரிந்து கொள்வார்கள் பின்னூட்டமிடுபவர்களுக்குத் தெரியும் என் எழுத்ட்க்ஹுகளில் உள்ள உண்மைத்தனம் சலுகைகள் வேண்டுவோர் முதலில் மனதளவில் ஒப்புக் கொள்வது இந்தசமமென்னும் நிலை சரி யில்லை என்று
Delete//சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று கிடைத்ததும் அதைப் பற்றி பதிவிடுவது உங்கள் வழக்கம். வரும் பின்னூட்டங்கள் யாவையும் மறுப்பது உங்கள் இயல்பு. இரண்டு நாட்களுக்கு உங்களுக்கு பொழுது போகும்.//
ReplyDeletePrecisly
உங்களை என்பதிவில் பின்னூட மிட்டு இதற்கு முன் பார்த்ததில்லை இருந்தாலும் இன்னொருவாசிப்பவரின் கருத்தை ஏற்று கருத்து எழுதி உள்ளீர்கள் அல த்லைப்புகளில் எழுதி இருக்கிறேன் எனக்குச்சரியில்லை என்று பட்டதை எழுதத் தயங்கியதுஇல்லைநான் எழுதுவது என் எண்ணங்களைக் கடத்தவே பின்னூட்டம் எழுடு பவர் முதலில் பதிவைநன்கு படித்து உள்வாங்கிக் கொண்டால் நலமாக இருக்கும் சில பழக்கங்களின் காரண காரியங்களையும் பதிவிட்டிருக்கிறே முதலிலேயே தீர்ப்பு சரியா இல்லையா என்பது பற்றியது அல்ல பதிவுஎன்றும் எழுதி இருக்கிறேன்
Deleteyou have safely ignored reasoning by dissenting judge,a lady herself as it does not suit you
ReplyDelete"In her dissenting judgement, Justice Indu Malhotra said that the petitioners, the Indian Young Lawyers Association, were not directly affected by this and were not devotees. Therefore, the court was being made to decide on the entry of women into the temple “at the behest of persons who do not subscribe to this faith”
Justice Malhotra said that it doesn’t override Article 25, which allows one to practice a religion of their choice.
Justice Indu Malhotra stated that under Article 25, equality in matters of religion “must be viewed in the context of the worshippers of the same faith,” and that a judicial review of religious practices must not be undertaken."
In Hindu religion individual temples follow conventions established over a long time and presence of various deities and rituals observed over a long period of time establish some practices. "Belief" can never be questioned especially when the believer does not negate it and is happy and at home with such belief. Of the four pillars of democracy Judiciary is predominantly responsible for the sorry state of affairs. Look at the pace of dispensation of justice. Number of pending and prolonging cases. In fact it is the reward vs risk ratio that is the main reason for proliferation of crimes of enormous magnitudes. When so many vital suits are pending what is the need to admit cases of this type or deliberate on such issues. Obviously Time pass.sorry Long response. Just manifesting my views. No malice intended.
/you have safely ignored reasoning by dissenting judge,a lady herself as it does not suit you/ for that matter i have not quoted any portion from the judgement I have not gone into the merits or demerits of the case I have just analysed the practices from my experiences I do not know why this hue and cry
DeleteI have just tried to be practical / I have known many families who do not follow the menstrual practices they go about normally cleanliness is a prime necessity during menstruation May be the gentle sexmay not with stand the rigours of pilgrimage But nowadays women are more equal than men
I do not write for just time pass. my views expressed do not carry malice
//உங்களை என்பதிவில் பின்னூட மிட்டு இதற்கு முன் பார்த்ததில்லை//
Delete//பின்னூட்டம் எழுடு பவர் முதலில் பதிவைநன்கு படித்து உள்வாங்கிக் கொண்டால் நலமாக இருக்கும் //
சில சமயங்களில் உங்கள் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பாக (based on presumptions/surmises) உள்ளன. நான் உங்களின்நிறைய பதிவுகளை படித்துள்ளேன். சிலவற்றில் கருத்தும் இட்டிருக்கிறேன். இந்த பதிவையும் என் அறிவுக்கு எட்டியவரை முழுதும் படித்து உள்வாங்கிய பின் தான் கருத்திட்டேன்.My comprehension possibly did not match yours, given your exposure.
//I have not gone into the merits or demerits of the case //
DeleteYou have welcomed the judgement. When specfics were pointed out that the matter is not one to be decided by court, you do not wish to reply and take cover under your disclaimer. Does it not border on escapism?
//ஒரு கடவுளை நைஷ்டிக பிரம்ம சாரியாகக் காட்டுவதும் பெண்களுக்கு வழிபடும் உரிமையை மறுப்பதும் சரியல்ல//
If you meant that it was not right for the relevant scriptures to have described Lord Aiyappan as Naishtika Brahmachari, such a comment is offensive and unwarranted
babu/சில சமயங்களில் உங்கள் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பாக (based on presumptions/surmises) உள்ளன /இல்லை எனக்கு உண்ம்சைஎன்று தோன்றுவதுதான் என்பதிவில் நீங்கள் மாறாக நினைப்பது துர்லபம்
DeleteBABU உண்மையைச் சொல்லப் போனால் எனக்குப் புரியாத்சவிஷயம் இந்த scriptures எதையும் ஸ்க்ரிப்சர்ஸ் என்று சொல்வதேட் வழக்கமாகி விட்டது சாத்திரங்களைத் தானே அப்படிச் சொல்கிறீர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதைஉறுதி செய்யு ம்தீர்ப்பு நான்வர வேற்கிறேன் ஒரு தீர்ப்பை வரவேற்பதும் எதிர்ப்பதும் அவரவர் விருப்பம் ஆனால் உச்ச மன்றத் தீர்ப்பு நம்மைக்கட்டுப்படுத்துகிறது
Deleteதங்களின் பதிவினையும், பதிவு சார்ந்த கருத்துப் போரினையும் படித்து ரசித்தேன் ஐயா
ReplyDeleteஒவ்வொருவர் கையின் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருக்காது . அதைப்போல அனைவர் கருத்தும் ஒன்றே போல் இருக்காது.
ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும் ஐயா
விவாதங்களில் ஆரோக்கியம் தெரியவில்லை அக்ரி மோனியஸாகப்போகிறதோ என்றுதோன்று கிறது
Deleteஜி.எம்.பி சார்.... உங்க பதிவுல எல்லாம் நான் நீங்க பொதுக் கருத்துக்கு எதிராக எழுதுவதையும், அதில் நீங்கள் முரண் படுவதையும், கேட்டால், 'பெர்சனலாக எழுதாதீர்கள்' என்று சொல்வதையும் பார்க்கிறேன்.
ReplyDeleteஉச்ச நீதிமன்றம் சட்டம் சம்பந்தமாக மட்டும்தான் கருத்து சொல்லமுடியும். சமூக சம்பந்தமாக அதிலும் வழிவழி வந்துகொண்டிருக்கும் செண்டிமெண்ட்ஸ், அதுவும் தவறாக இல்லாதபோது, அதில் தலையிட முடியாது.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. அதனை மதிக்கவேண்டும். இதில் ஆண் பெண் பேதமில்லை. வட நாட்டில், மூலவரைத் தொட்டு வணங்கும் பழக்கம் இருக்கிறது. தென்னாட்டில் பொதுவாக இல்லை. எது சரியான வழக்கம் என்று ஆராய்வதை விட்டுவிட்டு, பழக்கங்களைத் தொடர்வது சரியாக இருக்கும். (தொட்டு பூசித்தால் என்ன ஆகும் என்றெல்லாம் விதண்டாவாதத்திற்காக கேட்கலாம்)
இந்தத் தீர்ப்பை யார் வரவேற்கிறார்கள் என்று பார்த்தாலே, இது யாருக்கு நன்மை என்பதைப் புலப்படுத்தும். மறந்தும் கோவில் பக்கம் போகாதவர்களும், கடவுள் இருக்கிறார்/இல்லை என்பதிலேயே தெளிவு இல்லாதவர்களும், ஊருக்கு ஒரு கருத்தும் தனக்கு ஒரு கருத்தும் இருப்பவர்களும்தான் இதனை வரவேற்கிறார்கள்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ரொம்பவும் 'ஏன் ஏன்' என்று கேள்விகள் கேட்பது அர்த்தமுடையதாகத் தெரியவில்லை. உங்களுக்கு 'சரி' என்று படுவது பலருக்கு 'சரியல்ல' என்று படும்.
அடுத்து, 'வளைகாப்பு' ஏன் பெண்களுக்கு மட்டும் நடக்கவேண்டும், அதற்குக் காரணமான ஆண்களுக்கு 'வாட்ச் காப்பு' நடத்தவேண்டும் என்ற உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
/நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ரொம்பவும் 'ஏன் ஏன்' என்று கேள்விகள் கேட்பது அர்த்தமுடையதாகத் தெரியவில்லை. உங்களுக்கு 'சரி' என்று படுவது பலருக்கு 'சரியல்ல' என்று படும்.எனக்கு சரி யென்று படுவதை நான் எழுதுகிறேன் இல்லை என்று தோன்றினால் அடு பற்றி மட்டும் எழுதலாம் நீ எப்படி உங்கள் வீட்டில் எப்படி என்றுகேட்பது சரியாகத் தோன்றவில்லை /அடுத்து, 'வளைகாப்பு' ஏன் பெண்களுக்கு மட்டும் நடக்கவேண்டும், அதற்குக் காரணமான ஆண்களுக்கு 'வாட்ச் காப்பு' நடத்தவேண்டும் என்ற உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன்./ இதைத்தான் விதண்டா வாதமென்பது
Deleteஉச்சா நீதி மன்றம் அடுத்து சொன்ன தீர்ப்பை பற்றி, நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தால் தான் 'பக்' என்றிருக்கிறது...!
ReplyDelete// உங்கள் பின்னூட்டங்களே வம்புக்கு இழுப்பதுபோல் இருக்கிற்தே அதற்கு நான் தயார் இல்லை //
இப்படி சொன்னபிறகு இனி பேசி பிரயோசனம் இல்லை... நன்றி ஐயா...
நன்றி
Delete//இவை எல்லாவற்றையும் கடவுள் பெயரால்சொன்னல் பயத்துடன் செய்வார்கள்//
ReplyDeleteமதங்கள் உருவாக்கப்பட்டதே.. இப்படியான நல்ல விசயங்களைக்கூறி மக்களை நல்வழிப்படுத்தவே..
சபரிமலை பற்றிய பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.
அப்படிச் சொல்லும்போதும் நல்வழிப் படுவதற்குப்பதில் தவறான கருத்துகளா பரப்புவது சரியா வருகைக்கு நன்றி
Delete