Wednesday, September 19, 2018

சீரியசான தமாஷ்



                            சீரியசான தமாஷ்
                           -----------------------------

தமாஷ் 1/
                        தன் தாயிடம்  அடி வாங்கிய சிறுவன் ஒருவன் சோகமாக 
ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அதைக்  கண்ட அவன்  தந்தை 
அவனருகில் பரிவுடன் வந்துநடந்தது  என்ன என்று  விசாரித்தார்
கோபமும் , அழுகையும் ஒருங்கே  சேர  அந்த   சிறுவன்  “ அப்பா வரவர 
உன் மனைவியின்  தொல்லை அதிகமாகிறது. உன்னைப்  போல்  உன் 
மனைவியுடன் என்னால் ஒத்துப்போக  முடியவில்லைநான் ஒத்துப்
போக  எனக்கு ஒரு மனைவி  வேண்டும்  “ என்றான். 

தமாஷ் 2/- 


                       சிறுவன் ஒருவனுக்கு சின்ன சின்ன செலவுகளுக்கு  பணம் 
தேவைப் பட்டது. அப்பா, அம்மா  யாரிடம் கேட்டாலும் கிடைக்க வில்லை
பலவாறு சிந்தித்து  கடைசியில் ஒரு உபாயம் கண்டான். கடவுளிடமே 
பணம் கேட்க முடிவு செய்து  தன் கஷ்டங்களைக் கூறி  தனக்கு ரூபாய் 50/-
அனுப்புமாறு வேண்டி கடிதம் எழுதி --கடவுள்   இந்தியா--- என்று விலாசம் 
எழுதி தபாலில் போட்டான்..கடிதம் கண்ட தபால் துறையினர் அந்தக் 
கடிதத்தை  இந்திய ஜனாதிபதிக்கு  அனுப்பினார்கள்.
                      கடிதம் கண்ட ஜனாதிபதி பையனின் சாதுர்யத்தை  மெச்சி
அவனுக்கு  பணம் அனுப்ப  முடிவு செய்தார்.சிறுவனுக்குப் பணத்தின் 
அருமை தெரிய வேண்டுமென்று  கருதி கேட்ட பணம் ஐம்பதுக்குப் 
பதில்  ரூபாய் 20/- அனுப்பச் சொன்னார்பணம் கிடைத்த சிறுவன் 
மகிழ்ச்சி அடைந்து  கடவுளுக்கு  நன்றி  கூறி ஒரு கடிதம் எழுதினான்
கடவுளே, என் வேண்டுதலுக்கு இணங்கி நீங்கள் பணம்  அனுப்பியதற்கு 
மிக்க நன்றி. இருந்தாலும் நான் உங்களுக்கு  ஒரு விஷயம் தெரிவிக்க 
வேண்டும். ஜனாதிபதி  அலுவலகம் மூலமாக  நீங்கள்  அனுப்பச் சொன்ன 
பணத்தில்  ரூபாய் 30/- லஞ்சமாக எடுத்துக் கொண்டு  ரூபாய் 20/- மட்டுமே அனுப்பினார்கள் 
(சீரியசான பதிவுகளுக்குப் பின் சற்றே தமாஷாக)

25 comments:

  1. படித்த ஜோக்ஸ் ஆயினும் மறுபடி புன்னகைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புன்னகை என்ன விலை ஸ்ரீ

      Delete
    2. உங்கள் இதயம் சொல்லும் விலைதான்!!!

      Delete
    3. நன்றி நன்றி நன்றி ......!

      Delete
  2. இரண்டாவதை மிகவும் இரசித்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடித்திருக்குமென்று எனக்கு தெரியும் ஜி

      Delete
  3. ரசித்தேன் - மீண்டும் ஒரு முறை.....

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைகள் ரசிக்கப்பட வேண்டும்தானே சார்

      Delete
  4. ஹா... ஹா... ஹா... ஹா...

    ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  5. மறுபடியும் சிரித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  6. இரண்டும் ஏற்கனவே படித்ததுதான், வெவ்வேறு வடிவத்தில்.

    ReplyDelete
    Replies
    1. வெவ்வேறு வடிவங்களைச் சொல்ல வில்லையே நானும் ரசித்திருப்பேனே

      Delete
  7. ஹாஹாஹா இரண்டு ஜோக்ஸும் அருமை பாலா சார் :)

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றிமேம்

      Delete
  8. மீண்டுமொரு முறை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு நன்றி மேம்

      Delete
  9. இரண்டாவது நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  10. ரெண்டு ஜோக்ஸும் ரொம்பவே சிரித்துவிட்டோம் அதுவும் இரண்டாவது மிக மிக ரசித்தோம்..

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  11. நன்றி சார்/மேடம்

    ReplyDelete