Saturday, November 17, 2018

ஆயிரம் பிறை கண்டவனின் ஆயிரமாவது பதிவு


                       ஆயிரம்பிறை கண்டவனின்  ஆயிரமாவதுபதிவு
                        ---------------------------------------
இது என் ஆயிரமாவது பதிவு  சற்றே வித்தியாசமாகப்பதிவுசெய்ய  விரும்புகிறேன் வெற்றியா  இல்லையா தெரியவில்லை
  பிறந்த நாளும்  மணநாளும் ஒரே நாள்  என் மண நாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று என் மகன் கேட்டிருந்தான்  அதற்கு நான்  என் மணநாளின்  விளைவுகள் கூட ஒன்றாய் நாளைக்கழிக்கவே  விரும்புகிறேன் என்றேன்  பூர்த்திசெய்ய வாக்குறுதி  கொடுத்திருக்கிறான்  எனக்கு  ஒரு செய்தியை என்மகன் அனுப்பி இருந்தான் அது கீழே


பத்திரிகை செய்தி n
        
 அதே செய்தியை  வேறு விதமாக என்  ஸ்டைலில் பதிவிட்டிருந்தேன்
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம்பரோல்.”
தமாஷ்போலத் தோன்றினாலும் இதுவே அப்பட்ட உண்மை  மண வாழ்வில் விட்டுக் கொடுத்துப்போகும்  மனப்பான்மை வேண்டும் யாருக்கு யார் விட்டுக் கொடுப்பது  பெரும்பாலும்  ஆண்களே மண வாழ்வின் துவக்கத்தில் என்  மனைவி ஒரு பச்சை மண்போல் இருந்தாள் ஆனால் நாட்பட நாட்பட என்னையே வனைபவள் ஆகி விட்டாள் எனகு நோ ரிக்ரெட்ஸ் வயதாக ஆக  நான் அவளையே சார்ந்திருப்பது கண்கூடு  வாழ்க்கையை அணுகும்  முறையில் நாங்கள் நேர் எதிர் நானும் என்கொள்கைகளும்   என்னோடுதான் நான்  திணிப்பதில்லைபதிவுகளிலும் அப்படித்தான் சொல்வேன் கேட்டுத்தானாக வேண்டுமென்றில்லை என் ம்னைவிக்கு என் கொள்கைகள் புரியும் பல முறை சொல்லி இருக்கிறாள் கோவில்களில் பலரது பிரசங்கங்களில்  என் பேச்சையே அவர்கள்  பிரதிபலிப்பதாகவும் கூறு வாள் 
இனி இரண்டு  exotic birds



  யார் இவர்கள்  வேற்று கிரக வாசிகளா

ஆயிரமாவது பதிவு அல்லவா  வித்தியாசமான  காணொளிகள்  அவசியம் பாருங்கள்


against gravity ?



53 comments:

  1. ஆயிரம் பிறை கண்ட தங்களுக்கு முதலில் வாழ்த்துகள் ஐயா.

    பிறகு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அயிரம்பிறைக்கு இன்னும் வாழ்த்துகள் வருகின்றன

      Delete
  2. தங்களது அனுபவக் கருத்துகள் பிறருக்கு பாடமாகும் ஐயா.

    காணொளிகள் பிரமிப்பு கடைசி காணொளி கண்டு இருக்கிறேன்.

    வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவக் கருத்துகள் அல்ல கேட்டறிந்தவையே வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. ஆயிரம் பிறை!..
    மேலும் ஓராயிரம் பிறை காண வேண்டும்!...

    ReplyDelete
  4. ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ஆயிரம் பிறை கண்ட தங்களுக்கு வணக்கங்கள்.

    வயதாகும் போல் மனைவி கணவனுக்கு தாய் ஆகி விடுகிறாள்.
    தாயாகி உங்களை கண்ணும் கருத்துமாய் பார்த்து வரும் தங்கள் துணைவிக்கும் வாழ்த்துக்கள்.
    காணொளிகள் எனக்கு தெரிய மாட்டேன் என்கிறது.
    மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தாரம் தாயாகும் அனுபவம்கிடைக்கிறதா காணொளிகள் வித்தியாசமானவை பாருங்கள்

      Delete
  5. வயதாகும் போது கணவனுக்கு தாய் ஆகி விடுகிறாள்

    ReplyDelete
    Replies
    1. மனைவிக்கு வயதாகும்போது கணவன் தாயாகிறானா

      Delete
    2. சிலர் இப்படியும் உண்டு ஐயா.

      Delete
    3. அது எக்செப்ஷனாக இருக்கலாம்

      Delete
  6. முதலில் ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகள். நிச்சயம் இது ஒரு சாதனையே. காணொளிகளைக் காலை வேளையில் பார்க்க உட்கார இயலாது. பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காணொளிகள் வித்தியாசமானவை அவசியம்பாருங்கள்

      Delete
  7. ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் அலப்பறை கூடி விட்டதோ

      Delete
    2. அதெல்லாம் இல்லை ஸார். காணொளிகளை ரசித்தேன்.

      Delete
    3. காணொளிகள் எனக்குப் பிடித்திருந்ததுநான் பெற்ற இன்பம்என்பதுபோல்

      Delete
  8. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவது எவன்...(?)

    ReplyDelete
    Replies
    1. புரிவடு சிரமமாய் இருக்கிறது

      Delete
    2. "இந்த உலகில் ஒழுங்காக மனைவிக்குப் பணிவிடை செய்து அதனால் இன்பத்தை அடைய முடிந்தால் போதும், சொர்க்கத்திற்குப் போய் என்னத்தை சாதிக்கப் போகிறாய்?" என்று பொருள் கொள்ளலாமே!

      இராய செல்லப்பா சென்னை

      Delete
    3. இப்படியும் புரிந்து கொள்ளலாமா

      Delete
  9. ஆயிரம் பதிவுகள் கடந்தாலும்
    பாவாயிரம் தாங்கள் பாடினாலும்
    எங்கள் உள்ளம் நிறைந்த அறிவுக்கரசே
    நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
    யாம் பெற்ற அறிவை
    இவ்வையகமும் பெறத் தாங்கள்
    பல்லாயிரம் பதிவுகள் பகிர வேண்டும்!
    நாம் தம் தளம் வந்து கற்றிட
    தாங்கள் நீடுழி வாழ வேண்டும்!
    தங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ
    இறைவனை வேண்டி நிற்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சில வரிகளைப் படிக்கும் போது கவிதைக்கு பொய் அழகு என்று எண்ணினேன்

      Delete
  10. ஆயிரம் இன்னமோர் ஆயிரமாக வளரட்டும்!!! மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆயிரமே எட்டாண்டுகளுக்கும் மேலான பதிவுகளால் இன்னும் ஆயிரம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை

      Delete
    2. (அடுத்த) ஆயிரமாவது இலக்கை இப்போது நினைக்க வேண்டாம். அடுத்த இலக்கை முடிக்க வேண்டும் என்கிற எண்ணமே போதும். அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்!!!

      Delete
    3. கற்பனை இருக்கும்வரை உடல் ஒத்துழைக்கும்வரை எழுத வேண்டும் என்பதே இலக்கு

      Delete
  11. ஆயிரத்துக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும் இன்னும் பல்லாயிரம் காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி

      Delete
  12. ஆயிரம் பதிவுகளுக்கும், ஆயிரம் பிறை கண்ட போதும் தொடர்ந்து எழுதும் உங்கள் உற்சாக மனநிலைக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ஆணின் பலவீனம், பெண்ணின் பெரும்பலம்... - இந்த மாதிரியான உங்கள் எழுத்து தவறு என்பது என் அனுபவம். எண்கள் எப்போதும் ஆண்களைவிட அதிக மெச்சூரிட்டியும் திறமையும் அறிவும்(நுண்) கொண்டவர்கள். அதனால் நம் 40-50 வயதுக்கு மேல் அவர்கள் நம்மை ஆளுமை செய்வதைத் தவிர்க்க முடியாது, தவிர்க்காமல் இருப்பதுதான் நம் நலனுக்கு நல்லது. பசங்களிடம் அவர்களுக்கு உள்ள அன்பும் அவர்களைப் பற்றிய அறிவும் நமக்குக் குறைவு. நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பது, பலவீனத்தால் அல்ல, அவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்பதை சரிவரப் புரிந்துகொள்வதால்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை உங்கள் கருத்துக்கு நன்றி...நல்ல கருத்து நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டீர்கள்.

      ஆனால் ஒன்றே ஒன்று இதில் எக்செப்ஷன்ஸ் உண்டு. நான் நிறையவே பார்க்கிறேன். பல விதங்களில்....ஆண்கள் டாமினேட் செய்யும் குடும்பங்கள்...உண்டு...மற்றொன்று கணவனும், மனைவியும் புரிந்து கொண்டு அத்தனை சார்ந்தில்லாமல் அதாவது அவர் இல்லையேல் என்றோ அவள் இல்லையேல் என்றோ இல்லாமல் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்....இல்லை மனைவி கணவனையே சார்ந்திருக்கும் குடும்பங்களும் பார்க்கிறேன்...நான் பார்த்தவைகளில் இவை அனைத்தும் கலந்து கட்டி...

      கீதா

      Delete
    2. @ நெத எல்லோர் அனுபவங்களும்ஒரே மாதிரி இல்லை மேலும் சரி தவறு என்பது எந்த அளவுகோலால் நிர்ணயிக்கப்படுகிறது நிச்சயமாக உங்கள் அனுபவம் அளவுகோலல்ல பதிவு பெரும்பான்மையோரால் உணரப்படுவதுமேலுமெனக்கு வந்தபேப்பர் கட்டிங் என்கருத்துக்கு பலம்சேர்க்கிறது

      Delete
    3. கீதா வழ்க்கம் போல் யராவதுஉங்கள் கருத்தை சொல்லி விடுகிறார்கள் அல்லது எதிர் கருத்து சொல்ல நீங்கள்விரும்புவதில்லையோ

      Delete
  14. ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. 1000 பதிவுகளின் மூலமாக நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை பல ஆயிரங்கள் ஐயா. உங்கள் மூலமாக தெரிந்துகொள்கிறோம், தெளிவடைகிறோம். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தெரியாத விஷயங்க்சள்பல என் பதிவுகளில் இருக்கிறது என்பதைக்கேட்கமகிழ்ச்சி சார்

      Delete
  16. வாழ்த்துக்கள்.

    ’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ - படப்பெயர் ஏனோ நினைவுக்கு வந்தது! பார்த்ததில்லை என்றபோதிலும்..

    ReplyDelete
    Replies
    1. முதலில் நானும் அதுபோல் தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன்

      Delete
  17. ஆயிரம் பிறை கண்டதற்கும், ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்கும் வாழ்த்துகள் சார்!

    துளசிதரன், கீதா

    கீதா: காணொளிகளை ரசித்தேன் சார். அந்த க்ரீச்சர்ஸ் ஏலியன் ஆக இருக்காது என்றே தோன்றுகிறது. பரிணாம வளர்ச்சியில் பின் தங்கியவையாக உருவானவையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது சார்...பரிணாம வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அனுமானிக்கலாம் எனக்கு ஏன் அதுபற்றி ஆராயவில்லைஎன்று தோன்றியது ஒரு வேஐ எனக்குத்தெரியாதஃபோடோஷாப் வேலையாக இருக்கலாமோ என்றும்தோன்றியது

      Delete
  18. ஆயிரம் ஒரிஜினல் பதிவுகள் என்று எப்போது ஆகும்? ஏனெனில் பலமுறை தாங்கள் republish செய்வதைப் பார்த்ததாக ஞாபகம்.
    என்றாலும் தாங்கள் ஒரு சாதனையாளர் என்பதை மறுக்க முடியாது. வாழ்த்துக்கள்!

    இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள் எல்லாமே ஒரிஜினல்தான் சிலபதிவுகள் ஒரு சில மாற்றங்களுடன் மீள் பதிவாக இருக்கலாம்

      Delete
  19. ஆயிரம் பதிவுகள்
    தங்களின் அயரா உழைப்பிற்கு என் வணக்கங்கள் ஐயா

    ReplyDelete
  20. அயரா உழைப்பு பலம்பெறுவது வாசகர்களின் ஊக்கத்தால்தான் சார்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. ஆயிரமாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்களும் ஐயா..

    மிக மகிழ்ச்சி ...

    ReplyDelete