பிறந்த நாள்
---------------------
இன்று என் பிறந்த நாள் எண்பது ஆண்டுகள் பூர்த்தியாகிறது இது நம் வழக்கத்தில்
இருக்கும் ஆங்கில வருடக் கணக்கு
இம்மாதிரி நவம்பர் மாதம்
பதினொன்றாம்நாள் பிறந்த நாள் என்பது (11-11- 11-) என்பது நூறாண்டுகளுக்கு ஒரு
முறைதான் வரும் நான் விளக்கப் போவதில்லை
இந்த நாளை நான் என் வாழ்வை இன்ட்ராஸ்பெக்ட் செய்து பார்க்கப்
போகிறேன் நம் சமூகத்தில் எண்பது ஆண்டு
என்பது சற்றே விசேஷம் வாய்ந்தது ஆயிரம் பிறை கண்டவர் எனப் பேசப்படுபவர்கள் ஆனால் அதிலும் வித்தியாசமான கணக்குகள் எப்படி யானால் என்ன எண்பது ஒருநீண்ட காலம்தான்வலைதளத்தில்
எழுதவந்தபின் என் எண்ணங்களை
பதிவு செய்து வந்திருக்கிறேன்
என்
வாழ்வின் நாட்களை எட்டெட்டாகப் பிரித்து நான் அதிகம்ரசித்தகாலம் பற்றியும்எழுதி இருக்கிறேன் தொடரும் எட்டெடையும் பார்க்க
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..என்றெல்லாம் எழுதி இருக்கிறேன் திரு ரமணி அவர்கள் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை என்பார் திரு விஜு ஊமைக்கனவுகள் கவிதை அனாவசியஎழுதுக்களை ஒடுக்க வேண்டும் என்பார் அம்மாதிரி எழுதிய காலமும் உண்டு
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..என்றெல்லாம் எழுதி இருக்கிறேன் திரு ரமணி அவர்கள் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை என்பார் திரு விஜு ஊமைக்கனவுகள் கவிதை அனாவசியஎழுதுக்களை ஒடுக்க வேண்டும் என்பார் அம்மாதிரி எழுதிய காலமும் உண்டு
பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை
செத்தும் காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?
ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
செத்தும் காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?
ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
வாழ்வியலை ஒட்டக் காய்ச்சி எழுதியதாக நான் நினைக்கும்
வரிகள் இவை
ஆனால் இதெல்லாம் பழம்பெருமைபேசுவது போல் இருக்கும்
சில நெரங்களில் நான் எழுதியதை நானே ரசித்துப்பார்ப்பதும்
சரிதானே என்றும் தோன்றும் ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரி எழுத முடியும் என்று தோன்றவில்லை வயது
ஏற ஏற கற்பனை வளம் குறைகிறதோ என்னவோ
என்னைப் பற்றி நான் அதிகமாகவே பதிவிட்டு வந்திருக்கிறேன்
எது வரை என்றால் பதிவுலக வாசகர்களுக்கு என்னை விட என்னைப்பற்றி அதிகம் தெரியும் அளவுக்கு என்று சொல்லலாமா
இதில் ஒரு குறையும் இருக்கிறது பலருக்கும் என்னைப் பற்றி
தப்பு தப்பாகப் புரியும் அளவுக்கு யார்
குறை இது?
நிறை வாழ்வு வாழ்ந்தாகி விட்டது வாழ்ந்த வாழ்க்கை
வாழ்ந்தது தான் அதை இனி மாற்றி அமைக்கமுடியாது
ஆனால் இன்னொரு வாழ்க்கை அமையுமனால் நான் இதையே தேர்ந்தெடுப்பேன் நோ ரிக்ரெட்ஸ் என் குணம் நல்லது தான் என்று நம்புகிறேன் அனாவசிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதி இருக்கிறேன் நம்பெற்றோர் கடை பிடித்து
வந்ததால் அவை சரியாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறவர்கள் நடுவே நான் வித்தியாசமானவன்தான் எதையும் கேள்வி கேட்டுப்பழகியவன் சரியான பதில்வந்தால் ஏற்றுக் கொள்பவன்
எனக்கு ஒரு
ஆசை நான் இறந்தபின் என் உறுப்புகளை தானம் செய்ய
விரும்புகிறேன் ஆனால் நான் இறந்தபின் அது
கடைபிடிக்கப்படுகிறதா எப்படித் தெரியும்?
சில நேரங்களில் நான் எழுத்தில் தொடாத சங்கதிகளே இல்லையோ என்றும் தோன்றும்கதை கட்டுரை நாவல் நாடகம் கவிதை இலக்கியம் இன்னபிற சங்கதிகள் சிலவற்றைப் படிக்கும்போதுநான்
எழுதியதா என்றுகூடத் தோன்றும் எழுதத் தொடங்கி விட்டால் எழுதிக் கொண்டே இருப்பேன் முக்கியமாகஒரு பதிவு நினைவுக்கு வருகிறது என்னை நானே உணர வை https://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_27.html
பலருக்கும்
தெரிந்திருக்கலாம் என்மண நாளும் இன்றுதான் என்னை சகித்துக் கொண்டு 54 ஆண்டுகளாக என்னுடன் வாழும் என்மனவிக்கு வந்தனம் பாவைக்கு ஒருபாமாலையேசூட்டி எழுதி இருக்கிறேன்
உங்களை வாழ்த்தி வணங்கி கொள்கிறேன் சார்.
ReplyDeleteவாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!
உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.
இருவரையும் வணங்கி வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றிம்மா பதிவில் பலதம்பட்டங்கள் இருந்தாலும் பிறந்த நாளே முதலிடம்பிடிக்கிறது
Deleteநிறை வாழ்வு வாழ்ந்தாகி விட்டது வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தது தான் அதை இனி மாற்றி அமைக்கமுடியாது ஆனால் இன்னொரு வாழ்க்கை அமையுமனால் நான் இதையே தேர்ந்தெடுப்பேன்//
ReplyDeleteகண்ணில் நீர் துளிர்த்து விட்டது. இதுதான் நன்றாக வாழ்ந்த வாழ்க்கைக்கு நிறைவான வாக்கு.
நல்லவர்கள் சிலரது வக்கு சிலிர்க்க வைக்கிறது நன்றி மேடம்
Deleteகுழந்தைகள், பேரன் பேத்திகள் எல்லொரும் வருகிறார்களா?
ReplyDeleteசிறப்பான நாளாக இன்று இருக்கட்டும்.
எல்லோரும் வந்து போய் விட்டார்கள் இன்னும் சிலநாட்களுக்கு அந்த நினைவே இருக்கும் பதிவுப்பக்கம் வந்ததும் வாழ்த்துகள் மனம் நெகிழ வைக்கிறது நன்றி மட்டும்தான் சொல்ல முடியும்
Deleteஇந்த நாள் இனிய நாளாக அமையவும், பேரன், பேரன் மனைவி, பிள்ளைகள், மருமகள்கள், பேத்தி, பேரன்கள் ஆகியோருடன் மகிழ்ச்சியான நாளாகக் கொண்டாடவும் பிரார்த்தனைகள். இன்னும் ஒரு நூறாண்டு நோய் நொடி இல்லாமல் இதே உற்சாகத்துடன் இணையத்தில் எழுதவும் பிரார்த்தனைகள். உங்கள் பிறந்த நாளில் எங்கள் நமஸ்காரங்களும், வாழ்த்துகளும்.
ReplyDeleteஉற்றார் புடை சூழ இனிதாக நடந்தது பிறந்த நாள்விழா வாழ்த்துகளுக்கு நன்றி மேம்
Deleteநமஸ்காரங்களுடன் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
ReplyDeleteநன்றி ஸ்ரீ எங்கள் ப்ளாகிலும் பார்த்தேன்முக நூலிலும் வாழ்த்தி இருக்கிறீர்கள் நன்றி
Deleteஇனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteஉங்கள் இருவரையும் வணங்கி கொள்கிறேன் ஐயா.
ReplyDeleteதிருமண விழா நாளிலும் தாங்கள் இருவரும் எண்பதை கொண்டாட இறைவனிடம் பிரார்த்தனைகள்.
வயது 106
இன்னும் 26 ஆண்டுகள் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை நன்றிஜி
Deleteபிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்களாவது என் தம்பட்டங்களைப்பார்த்தீர்களா வாழ்துகளுக்கு நன்றி
Deleteசாரும் நானும் வணங்கி கொள்கிறோம், சார் வாழ்த்து சொல்ல சொன்னார்கள்.
ReplyDeleteதிரு அரசுக்கும் எ நன்றியைச்சொல்லுங்கள்
Deleteவணங்குகிறேன்...
ReplyDeleteநன்றி சார்
Deleteபிறந்த நாள் மற்றும் மணநாள் வாழ்த்துகள் 🎊 ஐயா.....
ReplyDeleteஇன்று போல் என்றும் இனிதாக அமைந்திடட்டும்......
வாழ்த்துகளுக்கு நன்றிசார்
Deleteஜி எம் பி ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்றுபோல் என்றும் பலகாலம் இதேபோல் நம்மோடும் பேசிக்கொண்டும் புளொக் எழுதிக்கொண்டும் சுறுசுறுப்பாகவும் நலமோடும் வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் இனிய திருமணநாளுக்கான என் பிரார்த்தனைகளும்.
ஞானியிடம்வாழ்த்ட்க்ஹு பெற்றது மகிழ்ச்சி தருகிறது நன்றிம்மா
Delete//எனக்கு ஒரு ஆசை நான் இறந்தபின் என் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன் ஆனால் நான் இறந்தபின் அது கடைபிடிக்கப்படுகிறதா எப்படித் தெரியும்? //
ReplyDeleteநீங்கள் அதுகென இருக்கும் முறையான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு முறைப்படி கை எழுத்திட்டு செய்து வைத்தால் அது நிட்சயம் நடக்கும். இதுபற்றிக் கொஞ்சம் ஆராட்சி பண்ணினாலே புரிந்துவிடும்..
இப்போ வெளிநாடுகளில், 40 ஆவது பிறந்தநாள் முடிந்த கையுடனேயே.. வீடுகளுக்கு மெயிலுக்கு.. அனுப்புகிறார்கள்.. உன் ஃபியூன்றலை நாங்க நடத்துறோம் இப்பவே இன்சுரன்ஸ் கட்டத் தொடங்கு என.. நிறையப்பேர் அதில் இணைந்து கட்டி வருகிறார்கள்..
இங்கெல்லாம் அதுபோல் இருப்பதாகத் தெரியவில்லைஎன் மக்களிடம் கூறி இருக்கிறேன்
Deleteஇருக்கிறது சார்.
Deleteகீதா
டிடெயில்ஸ் தெரிவிக்கலாமே
Deleteபிறந்த நாள் காணும் -
ReplyDeleteஅன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்!...
என்றென்றும் நலமாக வாழ்வதற்கு வேண்டிக் கொள்கிறேன்...
பிறந்த நாளுடன்மண நாளும் சேர்வதால் இரட்டிப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கு நன்றிசார்
Deleteஎங்கள் வணக்கங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் சார்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
லேட்டாக வ்ந்தாலும் வந்ததில் மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteபிறந்தநாள்: பல்லாண்டு நல்லாரோக்யத்துடன் வாழ பரந்தாமன் அருள் புரியட்டும்.
ReplyDeleteமணநாள்: Many, many happy returns of the day. May His nicest Blessings be showered on the young couple !
வாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteஇனிய பிறந்த நாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் சார்
ReplyDeleteமிக்க நன்றி ம்மா
Deleteஎன் வணக்கங்களுடன், இனிய பிறந்தநாள் மற்றும் மணநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிம்மா
Deleteஅன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கமுடன் ஹரணி. என்னுடைய சில தவிர்க்கமுடியாத நிகழ்வுகள். பணிகளின் நகரமுடியாத இறுக்கம். பல்வேறு அலுவலகப் பொறுப்புகள் என்னால் வலைப்பதிவிலும் முகநூலிலும் எழுத முடியாமல போனது. சில சமயம் முகுநூலில முடிந்தது. எனவே கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது நான் வலைப்பக்கம் வந்து. ஆகவே போனது போகட்டும் என்று வரும் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒன்று என்கிற கணக்கிலாவது தொடர்நது வலைப்பக்கமும் முகநூலிலும் இணையாக இயங்குவதென முடிவு செய்துள்ளேன். அது எத்தகைய இறுக்கமாக இருந்தாலும் சரி என்று. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய மன உறுத்தல். குறிப்பாக நான் மிக விரும்பி வாசிக்கும் மிகக்குறைந்த வலைப்பக்கங்களில் உங்களுடையது ஒன்று. அதனை இத்தனை நாள்கள் வாசிக்காமல் போன குற்றவுணர்ச்சி இன்று வந்துள்ளேன். தவிர எண்பதில் நிறைந்துள்ளீர்கள். எத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை வாழ்த்தலாம். அதற்கு முன்னர் பணிந்து வணங்குகின்றேன். என்னை உங்களின் எண்பதின் மனத்தால் வாழ்த்துங்கள். உங்களின் இடைவிடா முயற்சியையும் பதிவையும் எனக்கும் பரவ வாழ்த்துங்கள். நீங்கள், அம்மா, பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பெண் சக்திக்குழு என திரண்ட புகைப்படங்கள் நெஞ்சுக்கு நிம்மதியாக உள்ளன. இன்னும் ஆண்டுகள் பல கடந்து நீங்கள் உங்களின் பதிவுகளால் என்போன்றோர் மனத்திற்கு நிறைவைத் தரவேண்டும. வழிகாட்டவேண்டும். இனி கண்டிப்பாகத் தொடர்ந்து உங்களின் பதிவுகளை வாசிப்பேன். உங்கள் எல்லோருக்கும என்னின் பணிவான வணக்கங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எண்பது மலர்களின் வாசங்களோடு இன்னும் பூஞ்சோலையாகப் பூத்துக் குலுங்க இறைவனை வேண்டி நிற்பேன். வணக்கம்.
எத்தனை மகிழ்ச்சி என்பதை சொல்லி முடியாது பழைய பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்போதுதான் உங்களின் ஊக்கம் எத்தனை முக்கியம் என்பதும் தெரிகிறது உங்கள் வருகை என்னை நிச்சயம் ஊக்கப்படுத்தும் வருகைக்கு நன்றி ஐயா
Delete