வாழ்க்கை எட்டெட்டாக
---------------------------------------
எட்டெட்டாக வாழ்க்கை
முதல்
எட்டு (1938—1946)
------------------------
ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதை என்னதான் தேடியும் எடுக்க முடியவில்லை.
இருந்தால்தான் என்ன. நினைவிலிருந்து மீண்டும் எழுத முடிகிறதா பார்ப்போம் முதல்
எட்டு பற்றி அதிகம் பதிவில் எழுத வில்லையாததால் இப்போது சற்றே விரிவாக.
வாழ்க்கையை
எட்டு எட்டாகப் பிரித்துப் பாடும் ஒரு பாடல் திரைப் படம் ஒன்றில் வரும் அதுவே என் பதிவுக்கு வித்து. எனக்கு இப்போது 78 வயதாகிறது எட்டு எட்டாகப் பிரித்தால் என் பத்தாவது
எட்டில் இருக்கிறேன்எந்த எட்டை நான் மீண்டும் வாழ விரும்புவேன் என்பதைத்
தீர்மானிக்க
ஒவ்வொரு எட்டு வயதையும் திரும்பிப் பார்க்கும்
போதுமனதில் ஓடும் எண்ணங்களே இப்பதிவு முதல் எட்டில் ஏதும் சரியாக நினைவில்லை
அதிலும் முதல் ஐந்து வயதின் நிகழ்வுகள் ஏதோ
மசமசவென்றே வருகிறது என் மூன்றாவது வயதில் என் அன்னையை இழந்தேன் இப்போது அவர்களின் உருவம் சுத்தமாக நினைவில்
இல்லை.
புகைப்படத்தில் பார்த்து இப்படி இருந்திருப்பார்கள் என்பதே கணிப்பு அவருக்கு என் மேல் அலாதிப் பிரியம் என்று
சொல்லக் கேட்டிருக்கிறேன் அவர் சாகும்
தருவாயில் பெற்ற பிள்ளைகள்
அனைவரையும் அருகே வரவைத்துக்
காட்டினார்களாம் என்னைக் கண்டதும் “
பாலாவா” என்று கேட்டு ஆரத் தழுவினார்களாம் என் அம்மா இறந்த ஆறே மாதத்தில் என்
அப்பா மறு மணம் செய்து கொண்டாராம்
என் அம்மா |
நானும் என் சின்ன அண்ணாவும் எங்கள்
மாற்றாந்தாயிடம்தான் வளர்ந்தோம்அப்பாவுக்கு அப்போது திருச்சியில் வேலை நாங்கள் மன்னார் புரத்தில் இருந்தோம்வீட்டின் அருகே
ஒரு குளம் இருந்த நினைவு அப்போதெல்லாம் ஓட்டைக் காலணாக்கள் புழக்கத்தில் இருந்தன
அவற்றை மாலையாக்கி விளையாடுவோம் என் அண்ணா என்னை விட நாலரை வயது மூத்தவன்
என்னிடம் இருந்த காசைப் பிடுங்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்தில் போடுவதாகப் பாவனை
செய்வான் பிறகு குட்டிச்சாத்தானிடம் சொல்லி அதை வரவழைப்பது போல் காட்டுவான் எல்லாவற்றையும் நம்பும்
பிறவி நான் ஒரு வெண்கல யானையும் என் விளையாட்டுப் பொருள் . ஐந்து வயது வரை
பள்ளிக்கூடம் போன நினைவில்லைஆனால் எங்கள்
பெற்றோருடன் திருச்சியில் தங்க வரும் முன் பெங்களூரில் அலசூரில் என் பாட்டி
வீட்டில் இருந்து என்னை பள்ளிக்கு
அனுப்பியதும் ஒரு தலைப் பாகை
அணிந்த ஆசிரியர் என்னை பிரம்பால் விளாசியதும் லேசாக நினைவில் வருகிறதுஒரு முறை என்
மாமாவுடன் காரில் பயணிக்கும் போது நான்
என் தாத்தாவின் மடியில் அமர்ந்து கார் கதவை நோண்டியபடி
இருந்தேன் ஒரு வளைவில் கார் கதவு திறந்து
வெளியே விழுந்து விட்டேன் என் தாத்தாவும்
கூடவே விழுந்து இருவருக்கும் நல்ல காயம்
வீடு வந்து சேர்ந்தபோது பாட்டி முதல் எல்லோரும் அழுததைப் பார்த்த நினைவும்
நிழலாடுகிறது அப்போதெல்லாம் இரவில் சில
நாட்களில் எங்கள் வீட்டில் பஜனை நடக்கும் நடனமாடியபடி சுற்றி சுற்றி வருவார்கள் அதுதான் அகண்ட தார பஜனை என்றுபின்னர் அறிந்து கொண்டேன் அப்போது
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று சைரென் சப்தம் கேட்கும் விளக்கெல்லாம் அணைக்கப் பட்டு
விடும் சாலையில் இருந்தால்
குண்டடியிலிருந்து தப்பிக்க ஆங்காங்கே ஓடிப் பதுங்குவார்கள் சிறிது நேரத்தில் இன்னொரு சைரென் ஊத எல்லாம்
சரியாகி விடும் இதெல்லாமே வெகு லேசாகவே
நினைவில் இருக்கிறது
அப்பா
திருச்சியில் இருந்த போது மலைக் கோட்டைக்கு வந்து யானைமேல் ஏறியதும் ஒரு ட்ரங்க்பெட்டி
வாங்க பெரிய கடை வீதிக்குப் போனதும் மசமசஎன்று நினைவில் அவருக்கு மதராசுக்கு
மாற்றல் ஆகியதுஎங்கள் வீடு பைக்ராஃப்ட் சாலையில் என் சித்தப்பாவின் வீட்டருகே இருந்தது தெரு முனையில்
ஒரு சேரி மாதிரி ஏதோ இருந்த நினைவு.
வீட்டின் முன் பசுமாட்டைக்கட்டி பால் கறந்து தருவார்கள் காலையில் தயிர் விற்பவர்கள் ”கூ” என்று ஒருவித
ஓசை எழுப்பிக் கூவி விற்பார்கள் என் சித்தப்பாவீட்டில் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் ஏறத்தாழ ஒத்த வயதுடையவர்கள் என்
சின்ன அண்ணா சித்தப்பா பெண்களின் பின்னால் இருந்து அவர்கள் காலை வாரிவிடுவான்
சித்தப்பா பெண் ஒருத்தி எங்கள் வீட்டுக்கு வந்து ”இன்னிக்கி பூரியா சித்தம்மே”
என்று கேட்பது நன்கு நினைவில் இருக்கிறது
பெங்களூரில் என் தாத்தா பாட்டி வீட்டிலிருந்து என் தம்பி எங்களுடன்
மதராசில் இருக்க வந்தான் செக்கச்
செவேலென்று ஒரு சிறுவனைப் பார்த்ததுதான் நினைவில்
வருகிறது சில நாட்களுக்குப் பின் அப்பாவுக்கு
அரக்கோணத்துக்கு மாற்றல் ஆகியது அந்த நாட்களின் நினைவுகளை நான் என் அரக்கோணம் நாட்கள் என்னும் பதிவில்
பகிர்ந்திருக்கிறேன்
வாழ்க்கையின் முதல் எட்டு வருடங்களில் நினைவில் ஓடியதைப் பகிர்ந்திருக்கிறேன் (
அரக்கோண நாட்கள்) அரக்கோணத்தில்தான் நான்
டௌன் ஹால் பள்ளிக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது ஆறாம் வகுப்பு
படிக்கும் போது டைஃபாய்ட் ஜுரம் வந்து
மருத்துவமனையில் அட்மிட் ஆகவும் அப்போது என் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல்
ஆகவும் போன்ற விஷயங்கள் எல்லாம் என்
பதிவுகளில் இருக்கிறது
இரண்டாம் எட்டு(1946—1954)
-------------------------------
இரண்டாவது
எட்டு என்றால் என் பதினாறு வயது வரை.
என் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல்
ஆனபோது எங்களை( என்னையும் என்
தம்பியையும் பாலக் காட்டில்
என் அப்பாவழிப்பாட்டி வீட்டில் விட்டார்கள்
என் சின்ன அண்ணா பெங்களூர் சென்றான் ஏறத்தாழ ஒரு வருடம் பாட்டி வீட்டில்
கிராமத்தில் இருந்தோம் அந்த நாட்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறேன் பார்க்க……….
அதன் பின் அப்பாவுக்கு கோயமுத்தூருக்கு மாற்றல் ஆக நாங்கள் எல்லோரும் கோவைக்குக்
குடி பெயர்ந்தோம் கோவையில் ராமநாதபுரம்
முனிசிபல் உயர் நிலைப் பள்ளியில்
தேர்ட் ஃபார்மில் சேர்ந்தேன்
மூன்றுவருடங்களே பள்ளியில் படித்திருந்த நான் எப்படி எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன்
என்பது குறித்தும் எழுதி இருக்கிறேன் ( இது லஞ்சமா) ஃபோர்த் ஃபார்ம் முடிந்ததும் அப்பாவுக்கு வெல்லிங்டனுக்கு மாற்றல் ஆயிற்று புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி படிப்பை முடித்தேன் அப்போது என்
பதினாறாம் வயதுநடந்து கொண்டிருந்ததுபள்ளியிறுதிப் படிப்பு முடிந்ததும் நான் என் மாமா வீட்டுக்கு வந்தேன் அங்கே நான் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்த அனுபவத்தை “ பூர்வ ஜன்மகடன் “ என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன்
அந்த அனுபவத்துக்குப் பின் நான் மீண்டும் வெல்லிங்டன் வந்ததும் நான் வேலை தேடி அலைந்த அனுபவங்களையும் :” வேலை
தேடு படலம் என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன் ( சுட்டியில் இருக்கும் பதிவுகள் ஒரு நல்ல இன்சைட் தரலாம் ( தொடரும் )
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் சுட்டிகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும். இன்னும் ஒரு நாலைந்து எட்டுக்கள் உங்கள் வாழ்வில் சேர்ந்து கொண்டாட்டம் பெறட்டும் GMB சார்!
பதிலளிநீக்குநல்ல நினைவோடை!
பதிலளிநீக்குபழைய நிகழ்வுகளை சுகமாக அசை போட்டு சுவையாக எழுதி உள்ளீர்கள்
பதிலளிநீக்குஅட! இவ்வளவும் நினைவில் இருக்கே!!!!!
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவோட்டங்கள் அருமை ஐயா சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்கிறேன் சுட்டிகளுக்கும் சென்றேன்.
பதிலளிநீக்குஇப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லையே... தமிழ் மணம் வழியே வந்தேன்.
அருமை! அருமை! நின்று நிதானமாக ரசித்துப் படித்தேன். நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. முடிந்தவரை எட்டிய மட்டும் பின்னோக்கி பார்வையை சுழல விட்டு இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதிருச்சி மன்னார்புரத்தில் 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட அரசு ஊழியர்கள் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் பெயர் செங்குளம் காலனி. நீங்கள் குறிப்பிடும் மன்னார்புரம் குளத்தின் மீது இந்த குடியிருப்பு கட்டப்பட்டு இருக்கலாம். மேடம் வல்லிசிம்ஹன் அவர்களும், மன்னார்புரத்தில் குடியிருந்த நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்கு@ மோகன் ஜி
முதல் (முதலாக வந்ததற்கு ) வருகைக்கு நன்றி சார் இப்போதே என் பத்தாவது எட்டில் இருக்கிறேன் எல்லாபுலன்களும் உணர்வுகளும் சரியாக இயங்குமானால் இன்னும் ஒன்றிரண்டு எட்டுக்கள் இருக்கலாம். இருந்தவரை நிறைவோடு வாழ்ந்தாயிற்று ஆசை ஏதுமில்லை சுட்டிகளையும் படித்தால்தான் என்னைப் பற்றிய முழு இன்சைட்டும் கிடைக்கும் மீண்டும் நன்றி
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
அந்த நினைவோடையில்தான் தினமும் நீந்துகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ அபயா அருணா
இந்தமட்டில் நினைவுகள் இருப்பது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
நினைவில் இருப்பதே எழுத்தில்/ எத்தனையோ நிகழ்வுகள் மறந்திருக்கலாம் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வந்து ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
சுட்டிகளுக்கு சென்று வாசித்தால்தான் எட்டெட்டான வாழ்க்கை முழுதும் தெரியும் வருகைக்கு நன்றி சுட்டிகள் சில நீளமான பதிவாக இருக்கும் இருந்தாலும் வாசித்தால் ஏமாற்றம் இருக்காது
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
நிறையவே நினைவுகள் சில ஏற்கனவே பதிவானவை.சுட்டிகளில் இருப்பது சேர்தால்தான் பதிவு முழுமை பெறும் மிக லேசாக நினைவில் வரும் மன்னார்புர நிகழ்வுகள் எழுபது வருடங்களுக்கு முந்தையவை வருகைக்கு நன்றி ஐயா
ஆறாம் எட்டில் இருக்கும் எனக்கு முதல் எட்டில் நடந்த பல விஷயங்கள் நினைவில் இல்லை......
பதிலளிநீக்குஉங்கள் முதல் எட்டில் நடந்த விஷயங்களில் பல உங்களுக்கு நினைவில் இருப்பது ஆச்சரியம்.
தொடர்கிறேன்.
மிகவும் அருமையான மலரும் நினைவுகள். நீங்கள் மட்டுமல்ல இப்பதிவைப் படிக்கும் எல்லோருமே ஒரு முறை திரும்பிப் பார்ப்பார்கள் என்பது உறுதி. திரும்பிப் பார்க்கும் போது பல நினைவுகள் மனதில் வந்து முட்டி மோதுகின்றன.
பதிலளிநீக்குதிரும்பிப் பார்க்க வைக்கும் பதிவிற்கு நன்றி பாலு சார்.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வாழ்வில் நினைவில் நிற்பவை சொற்பமே நினைவில் நில்லாததுஏராளம் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ராஜ லக்ஷ்மிபரமசிவம்
வருகைக்கு நன்றி மேம் நினைவில் வருபவைகளை எல்லாம் அவ்வப்போது பதிவிட்டு வந்திருக்கிறேன் திரும்பிப் பார்த்து எந்த எட்டு நிறைவானது என்று தேடும் பணியே இது
சில வருடங்கள் முன்னர் எட்டு எட்டு ஆக வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதும்படி ஒரு தொடர் பதிவு இணையத்தில் ஓடியது. அதைப் போல் உங்கள் எட்டெட்டுப் பதிவும் உள்ளது. நான் கூட எழுதின நினைவு. சரி பார்க்கணும்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவாற்றலுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
மன்னிக்கணும் நான் எந்த தொடர் பதிவும் எழுதவில்லை உங்கள் பதிவும் படித்தநினைவில்லை. முடிந்தால் சுட்டி தாருங்கள் வாசிக்கிறேன் முன்பொரு முறை கடவுளின் வரம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன் அதைத் தேடக் கிடைக்காமல் போக இதை எழுதினேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்
அரக்கோணம், கோவிந்தராஜபுரம் 25 ரூபாய், தேடு படலம் அனைத்து சுட்டிகளுக்கும் சென்று கருத்துரை இட்டு வந்தேன் ஐயா
பதிலளிநீக்குதங்களது நினைவாற்றலுக்கு மீண்டும் ஒரு சல்யூட்
@ கில்லர்ஜி
இப்பதிவுகளைப் படித்ததன் மூலம் என் இளமைக் காலங்கள் பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள் மீள் வருகைக்கு நன்றி ஜி
தங்களின் பதிவுகள் எங்களை உங்களுடன் மிகவும் நெருக்கமாகக் கொணர்வதற்குக் காரணம் உங்களின் எழுத்து நடையும், நினைவாற்றலும் ஐயா. வாழ்த்துகள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
உங்கள் தொடர் வருகை மகிழ்வளிக்கிறது ஐயா என் நினைவுக்கு வருவதை விட நினைவுக்கு வராததே அதிகம் பாராட்டுக்கு நன்றி சார்
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு ஐயா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ உமையாள் காயத்ரி
மேடம் . எல்லோருக்கும் நினைவுகள் இருக்கிறது என் நினைவுகளை எழுத்தில் கொண்டுவருகிறேன் அவ்வளவுதான் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
மலரும் நினைவுகள் அருமை.மூன்று வயதில் தாயை இழந்தது வருத்தமே.
பதிலளிநீக்குநீங்களும் ஊர் ஊராக அப்பவுடன் பயணித்து இருக்கிறீர்கள். நாங்களும் நிறைய ஊர் அப்பாவுடன் பயணித்து இருக்கிறோம். மாற்றல் ஆகும் உத்தியோகம் என்றால் எத்தனை ஊர் அனுபவங்கள்!
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
தாயின் இழப்பை நான் வெகு நாட்களுக்குப் பிறகே உணர ஆரம்பித்தேன் என் சிற்றன்னை எங்களை நன்றாகவே கவனித்துக் கொண்டார் வருகைக்கு நன்றி மேம்
"என் சிற்றன்னை எங்களை நன்றாகவே கவனித்துக் கொண்டார்".... அப்படா பதிவை படித்தபோது இருந்த வேதனை இப்போதுதான் கொஞ்சம் குறைந்து நிம்மதி பிறக்கிறது... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
நீக்குவெகு சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவீர்களோ
நீக்குநீங்காத நினைவுகள். தொடருங்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி மேடம்
வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்டி, பழைய நிகழ்வுகளை மனதில் இருத்தி, அசைபோட்டு அவைகளை எழுத்தில் கொண்டுவருவது நமக்கு நாமே தரும் புத்துணர்ச்சி தெம்பூட்டி. அதை அழகாய், நிறைவாய் செய்திருக்கிறேர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குஇப்பதிவிலிருந்து உங்களைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன் சார். தொடருங்கள்! :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி
இந்தப்பதிவே ஒரு இண்ட்ராஸ்பெக்ஷன் தான்நான் எங்கிருந்துவந்தேன் எப்படி இருந்தேன் என்பதை எனக்கு நானே நினைவு படுத்திக் கொள்ள உதவுகிறது வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ வருண்
பதிவுலகில் பெரும் பாலும் அறிமுகங்களே இருக்கின்றன. நட்புகள் மலர ஒருவரை ஒருவர் அறிந்திருத்தல் அவசியம் நான் ஒரு திறந்த புத்தகம் . என்னிடம் நட்பு பாராட்ட விரும்புபவர்களூக்கு என்னுடைய நிறைவுகளும் குறைகளும் தெரிந்திருத்தல் அவசியம் என் பின்னூட்டங்களின் மூலமும் பதிவுகளின் மூலமும் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன் அடுத்த எட்டுகள் பற்றியும் தொடர்ந்திருக்கிறேன் வாருங்கள் வருகைக்கு நன்றி சார்