Small things make perfection but perfection is no small thing
--------------------------------------------------------------------------
சின்னச் சின்ன விஷயங்கள்.......!
-----------------------------------------------
இந்த
ஆண்டு மே மாதம் 17-ம் தேதி என்னைக் காணச்
சில பதிவுலக நண்பர்கள் வருவார்கள் என்று அந்த தேதிக்கு முந்தைய பதிவில் எழுதி
இருந்தேன் நான் எதிர் பார்த்தபடியே
நண்பர்கள் வந்தனர் நான் எதிர்பார்த்தபடியே அவர்களை வரவேற்க என் வீட்டு ஃபுட்பால் லில்லி மலர்ந்து நின்று
வரவேற்றது. வந்தவர்களில் இருவர் பெண்கள் மூவர் ஆண்கள் யாரென்று நான் சொல்லப்
போவதுஇல்லை. படிக்கும் போது சிலரால் யூகிக்க முடியலாம்
நான்
சென்ற ஆண்டு பாலக் காட்டுக்குச் சென்றபோது என்னை நேர்காணல் செய்ய வேண்டும் அதற்கு
பெங்களூர் வருவேன் என்று நண்பர் கூறி
இருந்தார் அந்த நேர்காணலுக்காக அவர் தன்
குழுவுடன் வந்திருந்தார் ஆனால் நேர்காணல்
என்பது இங்கு வேறு கேள்விகள் கேட்கப்
பதில் சொல்வது அல்ல இது.நான் என்ன சொல்ல வேண்டும் என்று இவர்களாகவே முன் கூட்டியே
தீர்மானித்திருந்தார்கள்
அதுவும்
வார்த்தை பிறழாமல் அவர்கள் சொல்லித்தந்ததையே கூற வேண்டுமாம் அவர்கள் சொல்ல வேண்டுவதை உள்வாங்கி அதே
அர்த்தத்தில் நான் சொல்ல விரும்பினாலும் அது சரிவராது என்றனர்.என் குணம் அதற்குச்
சரியாக ஒத்துழைக்கவில்லைநான் சொல்வதைப் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள் பலமுறை. படமெடுக்கும்போது
பேசியதையே மீண்டும் தனியே பேச வைத்துக் குரலைப் பதிவு செய்தார்கள் எனக்கென்னவோ
இதெல்லாம் சற்று ஓவராகவே தெரிந்தது. ஆனால்
என் மனைவிக்கு அது தேவை என்றும் அந்த சின்னச் சின்ன விஷயங்கள் என்ன மாற்றம் காட்டும் என்று
புரிந்திருந்தது
நான் என் இளவயதில் நாடகங்களை இயக்கி இருக்கிறேன்
நடித்திருக்கிறேன் நடிகர்களுக்கு சில உரிமைகளைக் கொடுத்திருக்கிறேன் சொல்ல வந்தது
சரியாகப் போய்ச் சேர்ந்தால் போதும் என்னும் எண்ணம் கொண்டவன் ஆனால் இந்த அனுபவம் வேறு அதுதான் தலைப்பின்
செய்தி அதில் நண்பர் குறியாகவே இருந்தார்
இப்போது வாசகர்களின் திறன் காண ஒரு சோதனை கீழே உள்ள படத்தில் என்ன எழுதி இருக்கிறது நான் எதிர்பார்த்ததைவிட சுலபமாகவே இருக்கிறது
.
,
வந்திருந்தவர்கள் பற்றியும், நேர்முகம் காணப்பட்ட விதம் பற்றியும் ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க! விடுங்க...
பதிலளிநீக்குவந்தவர்கள் யார்? நேர்முகம் குறித்து மேலும் விபரங்கள் ஏதும் இல்லையா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு! @ ஸ்ரீராம்
வருகைக்கு நன்றி ஸ்ரீ. பின்னூட்டம் ரசிக்க வைத்தது
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
தலைப்புக்கு ஏற்ற மாதிரி பதிவு விளங்க வைக்க முயற்சி. யூகம் ஏதுமில்லையா
நண்பர் துளசிதரன் மற்றும் குழுவினர்தானே ஐயா
பதிலளிநீக்குஐயா உங்களை சந்திக்க வந்தவர்கள் வில்லங்கத்தார் என்பது நான் அறிந்த விடயமே சந்திப்புக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குயாரா இருக்கும் ?
பதிலளிநீக்குFEEL - என்று எழுதப்பட்டிருக்கின்றது..
பதிலளிநீக்குமற்றபடி - நேர்காணல் புது விதம் போல இருக்கின்றது!..
வாழ்க நலம்..
படித்தேன். ஒன்றும் புரியவில்லை.
பதிலளிநீக்குநல்ல தலைப்பு. இனிய சந்திப்பெனத் தெரிகிறது.
பதிலளிநீக்குஆம், தங்கள் கேள்விக்கான பதிலை அருமையாகச் சொல்லி விட்டார் ஸ்ரீராம்:).
எனக்கும் ஒன்றும் புரியவில்லை. படத்தில் இருப்பதும் என்னவென்று தெரியவில்லையே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
என் பதிவுகளைப் படித்த நினைவு உங்களுக்கு இருக்கிறது அதுவே துளசிதரன் குழுவினரை அடையாளம் காட்ட உதவி இருக்கிறது என்று எண்ணுகிறேன் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
அதென்ன வில்லங்கத்தார். ? வருகைக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்
யூகித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் . வந்த பின்னூட்டங்களைப்பாருங்கள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துரௌஇ செல்வராஜு
வார்த்தை சரியே. எளிதாக இருந்ததா? நேர்காணல் பற்றி விரிவாகப் பிறிதொரு சமயம் . வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
உங்களுக்குமா? வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
ஸ்ரீராமின் பதில் உங்களுக்கும் தெரிய வைத்து விட்டதா? வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தால் மிக எளிதாகவே தெரிந்திருக்கும். பிறர் பின்னூட்டங்களைப் பாருங்கள் ப்ளீஸ்
I still could not see the "feel" even after the puzzle is solved! :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வருண்
Sometimes it happens like that .....! Thanks for coming.
துளசிதரன், கீதா குழுவினரின் குறும்படத்தில் நடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
பதிலளிநீக்குஐயையோ, தெரிந்து விட்டதா....?யூகத்துக்குப் பாராட்டுக்கள் வருகைக்கு நன்றி சார்
அருமையான பதிவு
பதிலளிநீக்குகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
பதிலளிநீக்கு@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
கருத்து மோதலில் கலந்து கொண்டேன் வருகைக்கு நன்றி சார்
மதியூகி தளிர் சுரேஷுக்கு நன்றி. ஜீஎம்பி அவர்களே படம் எப்போது ரிலீஸ்?
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குவணக்கம் எப்போது என்பது தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டியது அல்லவா.?
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
வருகைஒக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
தலைப்பிலேயே அனைத்தையும் கூறிவிட்டீர்கள் ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
பதிலளிநீக்குதலைப்பை விளக்கவே பதிவு ஐயா வருகைக்கு நன்றி