Monday, January 30, 2017

ஒரு கதையும் ஒரு கணக்கும்


      ஒருகதையும்  ஒரு கணக்கும்
      ------------------------------------------


           பாடுபட்டு  உழைத்து   சொத்து
          
பல  லட்சம்  சேர்த்தும்  கூடவே
          
கொண்டா  செல்ல  முடியும்.
          
படுக்கையில்  விழுந்தது   பெரிசு
         
கேட்டதும்  பதறிய  பிள்ளைகள்
          
ஐயோ  என்றலறி  வந்தனர்.

ஐயோ  என்றழைக்காதீர், அவள்  கணவன்
வருமுன்னே  என்சொல்  கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு  பல விளைக்காமல்
கட்டிக்காத்து  பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.

          
மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
           
பண்டொரு  நாள்  பாகம்  பிரிப்பதில்
          
பக்கத்து  வீட்டில்  ஏற்பட்ட  சிக்கல்
          
இருவரும்  அறிந்த  ஒன்று

இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப்  பகிரப  பசுவின்
முன்பாதி  முன்னவனுக்கும்
பின்பாதி   சின்னவனுக்கும்
தென்னையின்  தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம்  தம்பிக்கும்  என்று
ஆளுக்கொரு  பாகம் அழகாகப்  பிரித்தனர்

          
முன்னவன் புல் கொடுத்து  மாடு வளர்த்து
           
நீர்  வார்த்து  மரம் வளர்த்து
           
வந்த  பலன்  பின்பாகப்  பாலும்
           
தலைப்பாக  தேங்காயும  பாங்குடனே
           
அலுங்காமல்  பெற்றான்  இளையவன்

நேர்ந்த  கதை  நன்றாக  அறிந்திருந்தான்  அண்ணனும்
சொத்ததனைப்  பிரிப்பதில் இருக்காது  சிக்கல்
இருப்பதென்ன  ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப்  பேச்சு  வார்த்தை  வேண்டாம்
இருப்பதோ  ரொக்கம்  சரிபாதி  பிரிப்போம்  என்றான்
மூத்தவன்  நீ  பாவம்  சம்சாரி –சொத்தில்

            
எனக்கு  வேண்டாம் சரிபாதி.
            
இன்றொரு பைசா, நாளை இரண்டு,
            
மறுநாள்  நான்கு,என்று நாளும் ,
            
இரட்டிப்பாக்கி  தினம் தினம் ஒரு மாதம்
            
நீ  தரும் பைசா போதும்
            
மற்றதைப் பாவம் நீயே  அனுபவி
            
என்றே நைசசியம் பேசிய
            
தம்பியை  நம்பி  ஏமாந்த  அண்ணன்
             
சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.
      ========================================= 

இது ஒரு மீள்பதிவு கதையும் கணக்கும் என்று பதிவிடுகிறேன்   வாசிப்பவர்கள் கணக்கைத்தெரிந்து கொண்டால் நலம் கணக்கு போட்டுத்தான்  பாருங்களேன்   


                        
 

Thursday, January 26, 2017

I ALSO RUN


                                             I ALSO RUN
                                           -----------------
 நானும்  பதிவிடுகிறேனே நண்பா
   ------------------------------------------


நான் 2010ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் பதிவுலகில் நுழைந்தேன்  ஏழாவது வருடம்  ஓடிக்கொண்டிருக்கிறது பதிவுலகம்  எனக்கு ஏராளமான முகமறியா நட்புகளை (அறிமுகங்களை ) சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என் எண்ணங்களை கடத்தவே எழுதத் தொடங்கினேன்  பலவித கருத்துகளைக் கூறி இருக்கிறேன்  அதன் மூலம் என்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான்  காட்டிக்கொண்டிருக்கிறேன்   என் எழுத்துகளை நேசிப்பவர்கள் இருக்கலாம்  அதில் குறை காண்பவர்களும்  இருக்கலாம்  ஆனால் பதிவுலகில் இருப்பவர்களில் நான்  வித்தியாசமானவன் என் கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்யாமல்  பிறர் எண்ணங்களையும் கவனித்து வருகிறேன்  ஆனால் இப்பதிவு அது பற்றி அல்ல,முகமறியா நட்புகள் கூடவே முகமறிந்த நட்புகளும்  நிறையவே உண்டு  அது நானாக முன்  நின்று பலப்படுத்தியவை எனக்கு ஆரம்பகாலத்தில் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களை நினைவு கூறல் அவசியம்
அப்படி ஆரம்பகாலத்தில் ஊக்கப்படுத்தியவர்களில்  முதலில் நான்  சந்தித்தது மின் மினிப் பூச்சிகள் என்னும் வலைத்தளத்தின்  சொந்தக்காரர்  திருமதி ஷக்தி பிரபாவும்  மன அலைகள் தள சொந்தக்காரர் டாக்டர் கந்த சாமியும்  முன்  நிற்கிறார்கள் இவர்களில் டாக்டர் ஐயா என் வீட்டுக்கே  விஜயம்  செய்திருக்கிறார்கள்  கோவையில் இருந்து வந்து என்னைப் பெருமைப் படுத்தினார்கள் பெங்களூரில்  ஒரு மினி பதிவர்கள் சங்கமம் நடந்தது  அதில் ஆறேழு பதிவர்கள் அறிமுகமானார்கள் ஆனால் இப்போது பலரிடம்  டச் விட்டுப் போயிற்று திருமதி ஷைலஜா ஷக்திபிரபா திருமதி ராமலக்ஷ்மி திரு ஹரிகிருஷ்ணண் திரு ஐயப்பன் எனும்  ஜீவ்ஸ் போன்றோரெ நினைவில் நிற்கிறார்கள் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சங்கமம் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏழெட்டு பேர்களே வந்திருந்த முதல் பதிவர் சந்திப்பு எனக்கு அது   அது மார்ச் மாதம்  பதினாறாம் நாள் 2013ல் நடந்தது அதை ஒரு காணொளியாக்கி இருந்தார் ஹரி கிருஷ்ணன்  அவர்கள் யூ ட்யூபில்   ஆங்கிலத்தில்  Bangalore sangamam  E group meet   என்று பார்த்தால் கிடைக்கும் ார்க்க
மதுரை சரவணன்  அவர்கள் பெங்களூருக்கு ஏதோ ஆங்கிலப் பயிற்சி பெற வரப்போவதாக அறிந்தேன்   அவரை அவர் பயிற்சி பெற்று வந்தயுனிவர்சிடி வளாகத்துக்கே சென்று பார்த்தேன் அது 2010ன் கடைசியில் என்று நினைவு. அவரை என்  வீட்டுக்கு அழைத்து வந்தேன் அவரே என்  இல்லத்துக்கு வந்த முதல் பதிவர் அப்போதெல்லாம் நான் தனித்தாளில் எழுதி வைத்துக் கொண்டு பிறகு பதிவாக்குவேன்   அவர் நேரே தட்டச்சு செய்வதாகக் கூறினார் பிற்காலத்தில் நானும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தேன்  சமுத்ரா என்று வலை யுலகில் எழுதி வரும் மது ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவரை என் இல்லத்துக்கு வருமாறு வேண்டினேன்  பௌதிகத்தில் கரை கண்டவர் என்று அனுமானித்திருந்த நான்  ஒரு நடுத்தர வயது சயண்டிஸ்டை எதிர் பார்த்தேன் எதிர்பார்த்தேன்  ஆனால் வந்தவரோ இளைஞர் திருமண மாகாதவர் ஐடி நிறுவம் ஒன்றில்  பணியில் இருந்தார்  கர்நாடக இசையும் தெரிந்தவர்  எனக்காக ஓரிரு பாட்டுகளும் பாடினார்  இப்போது அவர் சென்னைக்குப் போய்விட்டதாக அறிகிறேன்  ஃபேஸ்புக்கில் கலக்குகிறார்,
நான்  கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைக் காண வந்தவர்  மிகவும்  பிரபலமான அப்பாதுரை சிகாகோ வாசி ஒரு சில பதிவுகளில் பின்னூட்டம்  மூலமே தெரிந்திருந்த அவர் பெங்களூர் வந்திருந்தபோது சற்றும் எதிர்பாராத நிலையில் என்  வீட்டுக்கு வந்திருந்தார் ஒரு பதிவில் நான் கொடுத்திருந்த மிகக் கடினமான சுடோகு வுக்கு  சரியாக விடை கொடுத்த அவரை நானொரு ஜீனியஸ் என்பேன் இப்போதெல்லாம் பதிவுலகில் அவரைக் காண்பதில்லை மின்  அஞ்சல் அனுப்பினாலும்  பதில் இல்லை.
மது ஸ்ரீதர் மூலம் என்னைப் பற்றிக் கேல்விப்பட்ட திருமதி ஷைலஜா  வும்  என்வீட்டுக்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கூட வந்தவர் திரு ஐயப்பன். எப்போதாவது பதிவுகளில் பார்ப்பதுண்டு இவர்களுக்கும்  கர்நாடக இசையில் ஆர்வம்  உண்டு. எனக்காக சில பாட்டுகள் பாடினார் அவற்றை ரெகார்ட் செய்தும் வைத்திருந்தேன்  ஆனால் அவை பழைய டேப்பில் இருக்கிறது அவற்றை முடிந்தால்  கணினியில் ஏற்ற வேண்டும் திரு ஏகாந்தனும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். நியூ சிலாந்திலிருந்து திருமதி துளசி கோபாலும் அவர் கணவர் திருகோபாலும் என்னை என்வீட்டில் சந்தித்ு கௌரித்ர்கே   .
 இன்னொரு நண்பர் என் பெங்களூர் வீட்டுக்கும்  சென்னையில் என்  மகன்  வீட்டுக்கும் வந்து என்னை சந்தித்தவர் திரு இராய. செல்லப்பா யக்ஞசாமி.  இந்தியாவிலும்  அமெரிக்காவிலும்  வசிப்பவர் திரு துளசிதரனும்  கீதாவும்  ஒரு குறும்படத்தில் என்னை நடிக்க வைக்க என் வீட்டுக்கே வந்திரூந்தார்கள்
இவர்கள் எல்லாம்  பெங்களூரில் என் வீட்டுக்கு வந்தவர்கள் இது தவிர நான் சென்னைக்குப் போகும் போதும் மதுரைக்குப் போனபோதும் திருச்சிக்குப் போனபோதும் .  என் இருப்பிடத்துக்கே வந்து சந்தித்தவர் பட்டியலும்  உண்டு திரு பாலகணேஷ், திரு ஸ்ரீராம் கார்த்திக் சரவணன்  திடங்கொண்டு போராடு ஸ்ரீநிவாசன் டிஎன் முரளிதரன் கவியாழி கண்ணதாசன்  மைத்துளிகள் மாதங்கி அவரது தந்தையார் மாலி  எரிதழல் வாசன். தம்பட்டம்  பானுமதி திரு வே நடன சபாபதி ஆகியோர் சென்னையிலும்  திரு ரமணி திரு சீனா தமிழ்வாசி பிரகாஷ் சிவகுமாரன் மதுரைசரவணன்  போன்றோர் மதுரையிலும்
திருச்சியில் திரு வை கோபாலகிருஷ்ணன் தி தமிழ் இளங்கோ ஆரண்யவாஸ் ராமமூர்த்தி திரு ரிஷபன் ஊமைக்கனவுகள் திரு ஜோசப் விஜு போன்றோரும் என்னைக் காணவந்தவர்கள்
இது தவிர நானாகப் போய் சந்தித்தவர்கள் பட்டியலில் கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணி  சுப்புத்தாத்தா என்று அறியப்படுபவரும் திருமதி கீதா சாம்பசிவம் திருமதி கோமதி அரசு போன்றோரும் அடங்குவர்
இவர்கள்தவிர மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும் புதுக்கோட்டை சந்திப்பிலும்  பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்   தருமி பகவான் ஜி கில்லர் ஜீ சேட்டைக்காரன் திண்டுக்கல் தனபாலன் எஸ்பி செந்தில் குமார்  தென்றல் சசிகலா என்று பட்டியல் நீளும் 
 இருந்தாலும்  எனக்கு நான் பல பதிவர்களை சரியாகப் பரிச்சயப்படவில்லை என்னும்  ஆதங்கமும்  உண்டு வலை உலகு பல அறிமுகங்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது நான் சந்திக்க வேண்டியவர் பட்டியலும்உண்டு பூவனம்  ஜீவியை இதுவரை சந்திக்க இயலவில்லை  வானவில் மோகன் ஜி என்னைச் சந்திக்க பெங்களூர் வரப்போவதாகக் கூறி இருந்தார் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்  திரு வெங்கட நாகராஜும் பெங்களூர் வந்தால் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்
 இவ்வளவு எழுதும் எனக்குள் பதிவர் சந்திப்புகள் கூடி மகிழ ப்ளான்  செய்யப்பட்டு  நடத்தப்படுவதில் ஏதோ குறைகள் இருப்பது போல்  தெரிகிறது  குறைகள் என்று தோன்றியதைச் சொன்னால் நீயே முன்  நின்று நடத்து பார்ப்போம்  என்னும் ரீதியில் பதில்கள். அதைச் செய்ய  வயதும்  உடல் நிலையும்  என்னிடம் இல்லையே இருந்தால் செய்திருப்பேனோ என்னவோ
என்னைப் பற்றி பதிவுலகில் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம் ஆனால் யாரிடமும் வன்மம் பாராட்டாது எனக்குத் தோன்றுவதைப் பதிவிட்டுக் கொண்டும் பிறபதிவுகளில் பின்னூட்டம் எழுதியும் வருகிறேன்  என்னை விட அழகாக எழுதுகிறவர்கள் பலரும்  இருக்க நானும்  இருக்கிறேன்  என்னும்  ரீதியில் I ALSO RUN……..!  
இனி  நான்  சந்தித்தவர்களில் சிலர் 
சமுத்ராவுடன்
மதுரை சரவணனுடன்
                       

திருமதி ஷைலஜா ,ஐயப்பன்


        
இராய செல்லப்பா

அப்பாதுரையுடன்
              
டக்டர் கந்தசாமி ஐயாவுடன்
 கோமதி அரசும் கணவர் அரடும்   என்னுடன்
துளசிதரனுடன்
திரு முரளிதரனும்  செல்லப்பாவும்
கீதா(தில்லையகத்து க்ரோனிலிள்ஸ்) என் மனைவியுடன்

திரு ஏகாந்தனுடன்

திரு ஜெயக்குமார் ஹறணியுடன் 

திரு ஹரணியுடன் அவர் வீட்டில்
                                                                                                                                                                
இன்னும் பல புகைப்படங்கள் இருக்கின்றன. சிலவற்றை பிரசுரிக்க இயலவில்லை சந்தித்தவர்களில் சிஒல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்  உ-ம்  முனைவர் ஜம்புலிங்கம் கர்னல் கணேசன்   புலவர் இராமாநுசன் போன்றோர்  என் மறதியே காரணம் .








Sunday, January 22, 2017

நன்றி நவில்கிறேன்


                                          நன்றி நவில்கிறேன்
                                           ---------------------------


 என் வலைப்பூவுக்கு வரும்  வாசகர்களுக்குப் புலப்படுகிறதா தெரியவில்லை.  என்  தளமே மாறி விட்டிருப்பதை கவனித்தீர்களா  என்  பதிவு ஒன்றில் சில புரியாத விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்  நண்பர் தனபாலன்  என்  தளத்தில்  இருந்த வலையக இணைப்பை எடுக்கச் சொன்னார்  எனக்குத்தான் ஏதும் தெரியாதே. அவரையே உதவக் கேட்டேன்   என்  தளத்துச் செல்ல அனுமதி அளிக்கும்   முகவரி மற்றும்  கடவுச் சொல் போன்றவை தேவை என்றார்.  கடவுச் சொல்லைக் கொடுக்க எனக்குத் தயக்கமாக இருந்தது  என்  ப்ரைவசியில் பிறரை அனுமதிப்பது என்றாகி விடுமே. இருந்தாலும்  நம்  நண்பர்தானே  என்று கொடுத்தேன் (இதற்குப் பின்  என்  கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்.....! )  ஒரே நாளில் ஏதேதோ மாற்றங்கள் செய்து  என்  தளத்தையே மாற்றிவிட்டார்மின் அஞ்சலில் என் பதிவுகளைப் பெற இப்போது இணைய முடியும்  மறுமொழி எழுதுவதில் மாற்றம்  கொண்டு வந்து விட்டார்  வேறு சில விஷயங்களும்  சேர்ந்திருக்கின்றன. சொல்ல மறந்து விட்டேனே டாட் இன் னை டாட் காமாக மாற்றி இருக்கிறார் தமிழ்மண வாக்குப்பட்டையும்  இருக்கிறது  இனி பார்க்க வேண்டும்  தமிழ் மண ராங்க் இப்போது இருக்கும்  24 ல்லிருந்து  மேல் நோக்கிப் போகிறதா என்று எனு சென்றிவிராலிழ்மத்ில் இணத்ிழ்மாக்கும்  கொடத்ு விட்டார்  ஆனல் என்  வைப்பூ பிவில் ிழ்மாக்குப் பட்டை காணோம்  ிழ் மத்ில் என் பிவில் இரந்து நான்  வாக்குப்போடுயன்று எனக்குஅு சத்ிியப்பில்ல என்னிரச்சையெரியில்லைஎனக்கெரியேண்டியு இன்னும்  நிறையே இருக்கிறு ஒரு பிரச்சை என்று உடன் வந்து உிய ாலன் இிலும் உுவார் என்று நினைக்கிறேன்
 இத்தனையும்  செய்து கொடுத்த நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்