திரை கடல் ஓடியும் திரவியம் தேடல்
-----------------------------------------------------------
அதுமட்டும்வாழ்வின் லட்சியமா
பல காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு புலம் பெயர்கிறோம்
இருந்தாலும் நம்பூர்வீகம்பற்றி
தெரிந்திருப்பது அவசியமென்று நினைக்கிறேன் எனக்கும் என்
சொந்த ஊருக்கும் எந்த தொடபும் இப்போது இல்லை முன்பே எழுதி இருக்கிறேன்
என்பெயரின் இனிஷியலில் இருக்கும் g என்
கிராமத்தைக் குறிக்கும் என் பிள்ளைகளின்
பெயரிலிருந்துஅதுவும் நீக்கப்பட்டு விட்டது இருந்தாலும் அவர்களதுபூர்வீகம்பற்றி
அவர்களுக்குத்தெரிய வேண்டுமென்று நினைத்து ஒரு முறை அவர்களை எங்கள் கிராமத்துக்கு
கூட்டிச் சென்றிருந்ததையும் குறிப்பிட்டு இருந்தேன்
ஊரை விட்டு பல
காரணங்களால் இடம்பெயர்ந்தவர்கள்
வேரில்லாதவர்களா எனும் கேள்வி எழுகிறது அதுவும் யாதும் ஊரே
யாவரும்கேளிர் என்று சொல்லப்பட்டதை மதிக்கும்
நாம் அவ்விதம் எண்ணத்தேவையில்லைஎன்னும் கருத்தும்
இருக்கிறது நம் வாழ்வின் மதிப்பீடுகள்
மாறி வருகின்றன
அந்நிய
நாடுகளில் வசிப்பவர்களை ( அடிமைகளாக இழுத்துச் செல்லப் பட்டவர்கள், அகதிகளாகப்
புலம் பெயர்ந்தவர்கள், நாடு கடத்தப் பட்டவர்கள், மற்றும் தன்னிலை உயர்த்திக்
கொள்ளத் தானாகச் சென்றவர்கள் ) எவ்வாறு அழைப்பது..? வேரற்றவர்கள் என்றா,
வேரறுந்தவர்கள் என்றா, சுயம் இழந்தவர்கள் என்றா, சுறுசுறுப்பானவர்கள் என்றா,? ஏதோ
ஒரு கட்டுக்குள் அடங்குகின்றனர். தங்களால் கட்டுப் படுத்த முடியாமல் கடல் கடந்து
சென்றவர்களைப் பற்றி இப்போது விவாதிக்க வில்லை. தாய் நாட்டில் கிடைக்காத ஏதோ
ஒன்றுக்காக, அயல் நாடுகளில் அடைக்கலம் நாடும் நம் நாட்டு மக்களைப் பற்றியே
நினைத்து இதை எழுதுகிறேன்.
இப்போது அம்மாதிரி புலம்பெயர்ந்தவர்களை இந்தியன்
டயொஸ்பரா என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்
அவர்களே நம் அரசுகளுக்கு வலு சேர்ப்பவர்கள்
வசதிகளும்
வாய்ப்புகளும் இல்லாத போது,”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கேற்ப,
பொருள் சேர்க்க அயல் நாடுகளுக்குப் போகிறவர்களில் பலர், தங்கள் சுயத்தை இழந்து,
அங்கேயே நிரந்தரக் குடிகளாக மாறுகின்றனரே, அவர்கள் நிலையிலிருந்து என்னால்
சிந்திக்க முடியவில்லை. ஆனால் அப்படிச் சென்ற சிலர்,இங்கு வரும்போது நடந்து
கொள்ளும் விதம் பற்றி சில ’ சாம்பிள்கள், ‘
தாய்நாட்டை தரிசனம் செய்ய வந்தவர் சிலரை சந்தித்திருக்கிறேன். அமேரிக்காவிலிருந்து வந்திருந்த ஒருவர், தன் வயதான தாயிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது..” அம்மி, ( அம்மாவும் அல்ல, மம்மியும் அல்ல) எங்கள் சிறு வயதில் செய்வாயே ரைஸ் கேக் அதை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது” அந்தத் தாய்க்கு முதலில் விளங்காமல் போக இவர் விளக்கிக் கூற “ அமெரிக்கா போனதும் இட்லி பெயர் கூட ரைஸ் கேக்காக மாறிவிட்டதா” என்று அம்மூதாட்டி வருத்தப் பட்டுக் கொண்டார்.
அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியா ஒரு பின் தங்கிய நாடு. பாம்புகளும் பாம்பாட்டிகளும் வித்தை செய்பவர்களும் நிறைந்த இடம் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து வரும்போது தங்கள் ஊரில் நல்ல சாலைகள் இல்லாதது குறித்தும் வெப்பத்தைக் குறித்தும் குறை படுவது காணும்போது, மிகையாகவே தோன்றுகிறது. திருமணத்தில் வீடியோ எடுத்து நேராகச் சின்னத்திரையில் ஒளிபரப் பாவது கண்டு “ இதெல்லாம் இங்கு வந்து விட்டதா “என்று அமெரிக்க ஸ்டைலில் ஆச்சரியப் படுகிறார்கள்.
இங்கிருந்து அங்கு சென்றவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அந்த தேசத்துக் குடி மக்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களா அமெரிக்கர்களா.? பார்ப்பதற்கு இந்தியர்கள். வாய் திறந்து பேசத் துவங்கினால் அமெரிக்கர்கள். ஒரு முறை என் நண்பனின் குடும்பத்தோடு தாஜ்மஹால் பார்க்கச் சென்றிருந்தோம்.. இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 25-/ (என்று நினைவு). வெளிநாட்டினருக்கு ரூபாய் 250-/நாங்கள் டிக்கட் எடுத்து உள்ளே செல்லும்போது, இவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட காவலாளி-கம்-டிக்கட் பரிசோதகர் அவர்கள் வெளிநாட்டினர்க்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி எங்களைத் தடுத்து நிறுத்தினார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் முரட்டுத்தனம்தான் அதிகரித்தது.அப்போது நண்பரின் மகன் ,அமெரிக்கக் குடிமகன். “ நான் ஒரு இந்தியன்;படிக்கச் சென்றிருக்கிறேன்” என்று தமிழில் தட்டுத் தடுமாறி கூற, பரிசோதகர் அனுமதி அளித்தார். ஆனால் அந்தப் பையன் தன்னை ஒரு இந்தியன் என்று கூறியதற்கு மிகவும் வெட்கப் பட்டான்.
என்னுடைய இன்னொரு நண்பன் மிகச் சாதாரணமான நிலையில் இருந்தவன்,துபாய் சென்று படிப்படியாய் உயர்ந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக வளர்ந்தான். அவனுக்கு மணமாகி இரு மகன்கள். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படிக்க வைத்தான். சற்று வயதான பின் இந்தியா வந்து செட்டில் ஆனான். ஒரு முறை அவனது மக்களைப் பார்த்துப் பேசும் அனுபவம் ஏற்பட்டது. சிறிதேனும் அன்போ பாசமோ அவர்கள் பேச்சில் தெரியவில்லை. வயதான பெற்றோரை அருகில் வைத்துக் கொள்ளவோ அல்லது அவர்கள் இங்கு வருவதோ அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவரவர் செயலுக்கு அவரவரே முடிவெடுக்க வேண்டும் என்றும் , உடல் நலமில்லாவிட்டால் டாக்டரைத்தான் நாட வேண்டும் என்றும் அவர்களை அல்ல என்றும் கூறினார்கள். எதிர்பாராமல் தந்தை இறந்து விட்டால் , முடிந்தால் கிரியைகள் செய்ய வர முயற்சிப்பதாகக் கூறினர். இதை நான் கூற வருவதன் நோக்கமே வாழ்வின் மதிப்பீடுகள் VALUES- மறைந்து கொண்டே வருவது குறித்த எண்ணத்தில்தான்
நான் என் மகனுடன் துபாயில் சில நாட்கள் தங்கி இருந்தபோது, அங்கே அடிமட்டத்தில் வேலை செய்யும் பலரைக் கண்டேன். அங்கே கிட்டத்தட்ட அடிமை மாதிரிப் பணி செய்யும் பலரும் , இந்தியாவில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்களா என்பதே சந்தேகம். வெளிநாடுகளில் இந்தியர்கள் அடங்கி ஒடுங்கி, எல்லா சட்டங்களுக்கும் கட்டுப் பட்டு வாழ்கிறார்கள். குப்பை போடுவதில்லை; எச்சில் துப்புவதில்லை. நான் துபாயிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இளைஞன் என்னருகில் அமர்ந்திருந்தான். நிறைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். அவன் ஊருக்கு அனுப்பியதுபோக சேமித்த பணத்தில் தங்கம் வாங்கிப் போவதாகக் கூறினான். கேட்க மகிழ்ச்சியாயிருந்தது. சென்னையில் விமானத்திலிருந்து வெளியே வரும்போது அவனால் இத்தனை நாள் கட்டுப் படுத்தப் பட்ட இயற்கை சுபாவம் பலமாக வெளிப்பட்டது. அவன் விமானத்திலிருந்து வெளியே வரும்போது காறி உமிழ்ந்து கொண்டே வந்தான்
.
வெளிநாடுகளில் தங்கி இருக்கும் நம் நாட்டவர்கள் இங்கு வரும்போது, அரை நிஜார் போட்டுக் கொண்டும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டும் அலங்கோலமாக நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். என் நண்பரின் குடும்பம் திரும்பிச் செல்லும்போது, அவர்களுக்கு நல்ல வேட்டி, பைஜாமா, குருத்தா, போன்றவற்றை வாங்கிப் பரிசாகக் கொடுத்தேன். இதை அங்கே உடுத்திக் கொண்டால் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்றும், அநேகமாக உபயோகப் படுத்த முடியாது என்றும் கூறினர். அயல் நாட்டினர் இங்கு வந்து நம் உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். நம்மவர் நம் பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்
.
என் அனுபவம் நான்
என் நண்பர்கள் சிலரை சந்தித்ததில்
இருந்து ஏற்பட்டது இவர்கள் எக்செப்ஷனாக இருக்கலாம் இவர்களை
வேரற்றவர்கள் என்பதா சுயம் இழந்தவர்கள்என்பதா
புரியவில்லை
அவரவர் அவரவருக்குப் பிடித்தமான முறையில் வாழ்வதே இப்போது சகஜமாகி விட்டது!
பதிலளிநீக்குசில நடைமுறைகளைப் பார்த்தவன் என்பதால் எழுதத்தோன்றியது பிடிதமான வாழ்வில் அவரவரை தாழ்த்திக் கொளல் சரியல்ல என்று தோன்றுகிறது
நீக்குபொருள் தேடிப் புறப்பட்டோரின் வாழ்க்கை முறை மாறித்தான் போய்விட்டது ஐயா
பதிலளிநீக்குபணம்தான் பிரதானம் என்று மாறிவிட்டபோது, உறவுகள் அன்பற்றுத்தான் போய்விடுகின்றன
இக்காலப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகவே சிறுவயதில் இருந்தே முயல்கிறார்கள்,
அன்பையும், உறவுகளையும் உறவின் பெருமையினையும் சொல்லி வளர்ப்பதில்லை
எல்லாம் காலம்செய்த கோலம்சார்
நீக்குஒரு சிலர் மட்டுமே இவ்வாறு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது... சுயம் இழந்தவர்கள் என்பதை விட சுயம் இழக்கப்பட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆட்பட்டவர்களாக கூட இருக்கலாம்...
பதிலளிநீக்குஎக்செப்ஷண்ஸ் எல்லா இடங்களிலும் உண்டுதானே
நீக்கு//ஒரு சிலர் மட்டுமே இவ்வாறு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது///
நீக்குதனபாலன் சொன்ன இந்த கருத்துக்கள் மிக சரி
சில அரைகுறைகள் மேல்நாடுகளுக்கு சென்று வந்த பின் மிகவும் அலட்டுகிறார்கள் அதுதான் உண்மை அப்படிப்பட்டவர்களை நீங்கள் சந்தித்தும் கேஏடும் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது
இந்த இட்லி கதை இட்டுகட்டிய கதை என்று நினைக்கிறேன்... என் ஆபிஸில் வேலை பார்க்கும் அமெரிக்கர்களுக்கு இட்லி என்றால் என்ன வென்று தெரியும்....அமெரிக்கர்களுக்கு தெரிந்த இடலி பற்றி இந்தியாவிற்கு வந்த் இந்தியன் தன் அம்மாவிடம் ரைஸ் கேக் என்று கேட்பது எல்லாம் ரொம்ப ஒவர்
நீக்குஎங்கள் வீட்டில் தினசரி காலை அல்லது இரவு உணவு இட்லி தோசை அடை தோசை ராகி புட்டு ராகி ரொட்டி இது போன்ற உணவு வகைகள்தான் அது போல நார்த் இண்டியன் வீடுகளிலும் அவர்கள் உணவு வகைகள்தான் செய்யப்படுகின்றன. என்ன காலேஜ் போகும் போது குழந்தைகளுக்கு அது போன்ற உணவு வகைகள் காலேஜ் உணவகத்தில் கிடைக்காததால் அவர்கள் அமெரிக்கன் உணவுகளை உண்கின்றனர்
உடைகள் பற்றி:: எங்கள் பகுதிகளில் மாலை நேரம் பார்த்தால் இந்தியாவில் இருந்து வந்த பெரியவர்கள் முன்பு வேஷ்டி கட்டி வாக்கிங்க் சென்றவர்கள் இப்பபோது கொஞ்சம் அட்வான்ஸாக மாறி கைலி கட்டியும் வாக்கிங்க் செல்ல ஆரம்பித்துவிட்டனர் சமிபத்தில் ஒருவர் கைலியை மடித்து கட்டி ஷாப்பிங்க வந்துவிட்டார்.
என் அனுபவத்தில் ஏற்பட்டததை சொல்லுகிறேன் கடந்த தடவை என் மனைவியுடன் இந்தியாவீற்கு வந்த போது அவருக்கு ஜாக்கெட் தைக்க சென்றோம் அந்த டெய்லரிடம் அளவு சட்டை கொடுத்து அது போல தைக்க சொன்னோம் அவர் பின் கழுத்தை இன்னும் கொஞ்சம் இறக்கி தைக்கட்டுமா நன்றாக இருக்கும் என்றார் என் மனைவியோ நோ நோ இது போலவே தையுங்கள் வேண்டுமானால் இன்னும் மேல் ஏற்றி தையுங்கள் என்ற போது அவர் அடுத்தாக கேட்ட கேள்வி நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிற்ரிர்களா எனப்துதான் ஏன் என்று அவரிடம் கேட்ட போது அங்கிருந்து வருபவர்கள்தான் ஏற்றி தைக்க சொல்லுகிறார்கள் இங்கே உள்ளவர்களோ மிக மிக் இறக்கி தைக்க சொல்லுகிறார்கள் என்று சொன்னார்...
இன்னொருவரின் பதிவுக்கு எழுதிய கருத்தில் ஒரு பகுதிதான் இது அதை இங்கேயும் இடுகிறேன்
நீக்குஇங்குவந்த இந்தியர்கள் நம் நாட்டின் கலாசாரத்தை பண்பாட்டை இந்தியாவில் உள்ளவர்களை விட மிக அதிகமாகவே பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லலாம் நிறைய கோயில்கள் இருக்கின்றன... இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் நீயூஜெர்ஸியை கோயில்கள் நிறைந்த மாநிலம் என்று கூட அழைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கீல்லை நமது வேவத்ங்களை கற்றுக் கொடுக்கும் பள்ளிகளும் இங்கு பல உள்ளன.
Sri Venkateswara Temple Bridgewater, NJ
Jain Center of New Jersey - Somerset, NJ
Ananda Mandir Hindu Temple Somerset, NJ
ISKCON of Central New Jersey Plainfield, NJ
BAPS Shri Swaminarayan Mandir Robbinsville, NJ
New Jersey Buddhist Vihara Buddhist Temple Princeton, NJ
Shree Swaminarayan Temple - Hindu Temple Secaucus, NJ
Shree Swaminarayan Hindu Temple Hindu Temple Colonia, NJ
Shree Swaminarayan Temple Hindu Temple Somerset, NJ
Durga Mandir Hindu Temple Princeton, NJ
Srivari Sri Balaji Temple Hindu Temple Somerset, NJ
Shri Krishna Vrundavana Hindu Temple Edison, NJ
Sri Guruvaayoorappan Temple Hindu Temple Morganville, NJ
Ved Mandir Milltown, NJ
Temple Har Shalom Warren, NJ
Dwarkadhish Temple Hindu Temple Parlin, NJ
Shree Swaminarayan Mandir Loyadham NJ
Hindu Temple Raritan, NJ
Shri Sanatan Mandir Hindu Temple Parsippany, NJ
ISKCON of New Jersey | Coming Soon Parsippany, NJ
BAPS Shri Swaminarayan Mandir Hindu Temple North Bergen, NJ
Sikh Sabha of New Jersey Gurudwara Lawrenceville, NJ
Shri Swaminarayan Hindu Temple Hindu Temple Weehawken, NJ
Shree Swaminarayan Hindu Temple Hindu Temple Parsippany, NJ
Guruji Ji Mandir NJ Hindu Temple Somerset, NJ
Hindu Samaj Temple of Mahwah Mahwah, NJ
Hindu Pandit Temple Iselin, NJ
Shri Siddhivinayak Temple Hindu Temple Toms River, NJ
Ganesh Shiva Mandir Hindu Temple Jersey City, NJ
Jain Center Jain Temple Essex Fells, NJ
BAPS Shri Swaminarayan Mandir Hindu Temple Parsippany, NJ
Shree Siddhi Dham Mandir(Hindu Temple) Hindu Temple Jersey City, NJ
Hindu Swaminarayan Temple Hindu Temple Lake Hiawatha, NJ
Nithyavibhuthi Hindu Temple Plainsboro Township, NJ
Shiva Shakti Center Hindu Temple Garfield, NJ
N J Arya Samaj Mandir Inc Religious Institution Jersey City, NJ
Closed ⋅ Opens 9AM Sun
India Cultural Society of NJ Wayne, NJ
Vrindavan Temple Hindu Temple Cranbury, NJ
Sri Radha Gopinath Mandir Hindu Temple Edison, NJ
Pujari Hindu Temple · Hindu Temple Berlin, NJ
Dharmachakra Buddhist Center Vauxhall, NJ
Shri Swaminarayan Hindu Temple Hindu Temple Riverton, NJ
Hanuman ji temple Hindu Temple Jersey City, NJ
BAPS Shri Swaminarayan Mandir Hindu Temple Cherry Hill, NJ
Ambaji Mandir Hindu Temple Garfield, NJ
Sri Rajaganapathi Temple Swedesboro, NJ
Nanak Naam Jahaj Gurudwara Gurudwara Jersey City, NJ
Sai Baba Temple Hindu Temple Lawrence Township, NJ
BAPS Hindu Temple Hightstown, NJ
SMVS Shri Swaminarayan Mandir Hindu Temple Cherry Hill, NJ
/அமெரிக்கர்களுக்கு தெரிந்த இடலி பற்றி இந்தியாவிற்கு வந்த் இந்தியன் தன் அம்மாவிடம் ரைஸ் கேக் என்று கேட்பது எல்லாம் ரொம்ப ஒவர்/ இது ஒரு ஷோ ஆஃப் வு என்பதே உண்மை வித்தியாசமாய் காண்படுபற்றியே பதிவு
நீக்குடிரு தனபாலன் சொல்வது போல் வித்தியாசமாய் தெரிபவர்களே கண்களுக்குத் தெரிகிறார்கள்
நீக்குநான் ஒரு இடத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது அயல் நட்டவர்கள் இங்கு வரும்போது கல்விக் கூடங்கள் அமைக்கிறர்கள் நம்மவர் அங்கு போகும்போடு கோவில்கள் கட்டுகின்றனர்
நீக்குஅருமையாக அலசி இருக்கிறீர்கள் ஐயா.
பதிலளிநீக்குஅவரவர் சூழல் மாறும்போது வாழ்க்கைப்பாதை அதனோடு கலந்து ஓடுகிறது. எந்த நிலையிலும் தன்னை இந்தியனாக, தமிழனாக நினைத்து வாழ்பவன் கலாச்சார பண்புகளை மறக்கவே மாட்டான்.
துபாயில் சட்டத்தை மதிப்பவன் (தவறு பயந்து வாழ்ந்தவன்) இந்தியா வந்ததும் மறந்து விடுவான்.
நான் இதில் விதிவிலக்கு அங்கு கற்ற ஒழுக்கத்தை இங்கும் தொடர்கிறேன் 90% வரை...
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
நீக்குவெளிநாடுகளில் அந்தெந்த நாடுகளின் சட்டத்தை மதித்து வாழும் இந்தியன் இந்தியா திரும்பி வந்த பின் இங்கே உள்ள சட்டத்தை மதிக்காதற்கு காரணம் இங்கே சட்டம் விலைக்கு போய் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் தவறு செய்பவர் அதிப்ரே ஆனாலும் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது
நீக்குவெளிநாடுகளில் பயந்தே வாழ்கிறான் இது அவர்களின் இரட்டை வேடம் அங்கு கல்ஃபில் ஒரு அயலவன் சட்டத்தின் கீழ்பிடிபட்டால் உறவினர்களுக்கு தெரிவதும் மிகவும் காலம் கடந்தே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇப்படிப் பலர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் - இந்தியாவில் இருந்ததை விட வெளிநாட்டில் இருந்த வருடங்கள் குறைவு என்றாலும், இந்தியாவில் மனிதன் இருப்பானா என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, இரண்டு விதமான மனிதர்களும் உண்டு.
வெளிநாட்டிலிருந்து இங்கே வந்தவுடன் தனது கட்டுப்பாடுகளை இழந்து, எங்கும் குப்பை போடும், தகாத பலதும் செய்யும் சுய ரூபம் காண்பிக்கும் சிலரை நானும் பார்த்ததுண்டு!
நானும் கண்டு பார்த்ததைத்தான் எழுதி இருக்கிறேன் என் எழுத்துகள் ஒருவேளை என் ஆதங்கத்தின் வெளிப்பாடோ என்னவோ
நீக்குதன் நாடு விட்டு அயல்நாடு சென்று அங்கேயே குடியமர்ந்தவர்களின் கலாச்சார மாற்றம் பற்றி அருமையாகச் சொன்னீர்கள். அவர்களை நினைத்து இங்குள்ளவர்கள் ஏங்குகிற அளவுக்கு அவர்கள் ஏங்குவதாக தெரியவில்லை. காரணம் அங்கேயுள்ள நடைமுறை வாழ்க்கை.
பதிலளிநீக்குபீ எ ரோமன் இன் ரோம் என்பதுபோல் இருந்தால் சரி ஆனால் இங்கு வந்தும் இங்கு இருப்பது எதுவும் சரியில்லை என்பதுபொல் பேசுவதுபுரிவதில்லை
நீக்குஎழுதியிருப்பதை முழுமையாகப் படித்தேன். பொதுவா புதுச் சூழல்ல புகுந்தபின்பு, இதற்கு முன் இருந்த சூழலின் குறைகள் மிக அதிகமாகத் தெரியும். அது மனித இயல்பு. மிகக் குறைவானவர்களே எல்லாவற்றையும் சரிசமமாகப் பார்ப்பார்கள். எழுதுவதைத் தவறாக எடுத்துக்காதீங்க.
பதிலளிநீக்கு1. உடை என்பது நம் சவுகரியத்துக்கும், சமூகத்துக்காகவும் போட்டுக்கொள்வது. பொதுவா பிராமணர்களில் கைலி உடுத்திக்கொண்டிருப்பவர்கள் அபூர்வம் (எனக்குத் தெரிந்தவரை). 25-30 வருடத்துக்கு முன்பு அது அபூர்வத்திலும் அபூர்வம். கைலி கட்டிக்கொள்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இப்போ நீங்களும் கைலி கட்டிக்கொண்டிருக்கிறீர்கள், பலரும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் (நானும் ஆசைப்பட்டு வாங்கி, அனுமதி இல்லாததால் கட்டிக்கொள்ளவில்லை. ஆனால் 4-5 செட் வெளிநாட்டில் ஆசைக்காக வாங்கினேன். இன்றும் அது என் பெட்டியில் இருக்கு ஹா ஹா ஹா). அதனால் அரை டிரவுசர் உடுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்வது தவறு. அதேபோல், வெளிநாட்டுக்குப் போய், வட இந்தியர் மாதிரி கச்சம் உடுத்திக்கவேண்டாமா, வேஷ்டி கட்டிக்கவேண்டாமா என்று கேட்பதும் அபத்தம்தான் என்று தோன்றுகிறது. இங்க இருக்கிற யார் வேஷ்டி கட்டிக்கொண்டு வெளியே வருகிறார்கள் (உங்களுடைய, வேஷ்டி உடுத்திய படத்தை நான் பார்த்த ஞாபகம் இல்லை. பேண்ட் தானே போட்டிருக்கிறீர்கள் பயணத்தின்போது). அதனால் உங்கள் எண்ணம் தவறுதான் என்று நினைக்கிறேன்.
2. அயல் நாட்டில் போனால் சுயத்தை இழக்கிறார்கள் - என்பது உண்மைதான். இதற்கு அயல் நாடு போகவேண்டாம். நாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறினாலே ஒவ்வொருவரும் சுயத்தை இழக்கிறார்கள். நான், என் கிராமத்தைவிட்டு வெளியே வந்து பலப் பல வருடங்களாகின்றன. அப்போதிருந்த நான், சென்னையில் இல்லை. சென்னையைவிட்டு, வெளிநாடு சென்று பல வருடங்கள் இருந்தேன். அப்போது, நான், சென்னையில் இருந்தவாறு இல்லை. 'மாற்றம் என்பது மானிடத் தத்துவம்'.
3. //அன்போ பாசமோ அவர்கள் பேச்சில் தெரியவில்லை. // - சார்.. இது குழந்தைகள் எங்க வளருது, அங்க என்ன கலாச்சாரம், அவங்க பழகுற இடத்துல (மற்ற பசங்க) எந்த கலாச்சாரத்தில் இருக்காங்க என்பதையெல்லாம் பொருத்தது. நீங்க குறிப்பிட்ட கேஸ்ல, பையன் எங்கேயோ ஒரு கலாச்சாரத்தில் படிக்கறான், அவனுக்கு வீட்டில் டிரெயினிங் இல்லைனா, எப்படி வீட்டு கலாச்சாரம் அவன் மனதில் தங்கும்? எப்போவுமே, போகம் என்பது வேறு, கர்மம் என்பது வேறு. போக பூமிக்குப் போயாச்சுனா, அந்தக் கலாச்சாரம்தான் மனசுல இருக்கும். அமெரிக்காவுல பையனை வளர்த்துட்டு, நாம சொல்ற பொண்ணைக் கட்டிக்குவான், அப்புறம் நம்மளோடு சேர்ந்து வாழ்வான் என்றெல்லாம் எதிர்பார்ப்பதே தவறு இல்லையா?
4. பெர்சனல் என்று தவறா எடுத்துக்காதீங்க. //பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்// - நீங்க எப்போ பஞ்சகச்சம் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றிருக்கிறீர்கள்? அதுதானே பாரம்பர்ய உடை (அதாவது 2-3 தலைமுறைகளுக்கு முன்பு). காலம் மாறும்போது விழுமியங்களும், நாம் இருக்கும் சமூகத்தைப் பொறுத்து மாறும். இதில் விசனிக்க ஒன்றும் இல்லை. நான் பெரும்பாலும் அரை டிரவுசர் அணிந்துதான் இருக்கிறேன். இப்போ, நடுத்தர, உயர் நடுத்தர குடும்பத்தில் பலர் இப்படியோ அல்லது முழு பேண்ட் அணிந்தோதான் வீட்டில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நம் கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்று சொல்லமுடியுமா?
5. // வேரற்றவர்கள் என்றா, வேரறுந்தவர்கள் என்றா// - இதுவும் அதீதமான கருத்து. இப்போ நான் நெல்லையிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்திருக்கிறேன் (35+ வருஷம்). அதனால் எனக்கு வேரில்லைதான், உங்களைப்போல. நீங்களும் பாலக்காட்டை (?) விட்டு பெங்களூரில் இருக்கிறீர்கள். அதனால் வேரற்றவர்கள் என்று சொல்வது தவறல்லவா? என் வேர் நெல்லைதான். ஆனால் வாழ்க்கையில் அந்த இடத்தைவிட்டு எப்போவோ வந்துவிட்டேன். நாளை பெங்களூரில் வாழ்ந்தாலும் உங்கள் அர்த்தப்படி, நானும் வேரில்லாதவந்தான்.
உங்கள் இடுகை, பெரும்பாலும் ஏற்கத்தக்கதாக இல்லை. (தவறா எடுத்துக்காதீங்க)
1நாம் உடுத்துமுடையை எப்பொழுதாவது ஊடுத்துவதுகூடகேலிக்குளாகும் என்பதை சீரணிக்க முடியவில்லை என்பதிவை முழுவதும் படித்ததாகக்கூறுகிறீர்கள் ஏதோபயசாக எண்ணி படித்ததுபோல் இருக்கிறது உடை விஷயத்தில்சௌகரியம் முக்கியம் என்னைப் பற்றி உங்களுக்குப் புரிந்ததுமிகக்குறைவே
நீக்கு2அயல் நாட்டில் போனால் சுயத்டை இழக்கட்டும் ஆனால் இந்தியனென்பதில் ஏனோ கௌரவக் குறைச்சல்
3எங்கு போனால் என்ன தாய் தந்தை அன்பு மாறுமா. எனக்குத்தெரிந்தாமெரிக்கர் நம்வாழ்வியல்கள்பற்றி உயர்வான எண்ணங்கள் கொண்ட்ருந்தார் அவர்களுக்கு நம்மேல் இருக்கும் மதிப்பு நமக்கு நம்மேலில்லையே என்பதே ஆதங்கம்
4முடலில் பஞ்சகச்சம்நம்பாரம்பரியௌடை என்று யார் சொன்னார்கள் அரை ட்ரௌசர் அணிந்து உக்கள் ஊரில் போவீர்களா எதற்கும் இடம் மதிப்பு என்று இருக்கத்தானே செய்கிறது
யாதும் ஊரே யாவரும்கேளிர் என்பது நம் வழக்கிலுள்ள சொல் நான் பலக்காட்டை விட்டு பெங்களூரில் இருக்கிறேன் ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்பூர்வீகம்பாலக்காடு என்பதுதவிர வேறு எந்தவேரும் இல்லாதவன்நான் நான்பிறந்ததுபெங்களூர் எனது உமக்கு நான் கூறும் ஒரு உபரி தகவல் இருந்தும் பூர்விகஎந்த ஊர் என்பதை காண்பிக்க என் மக்களை பாலக்காட்டுக்குக் கூட்டிப்போனவன் நான்
எனிடுகை ஏற்கத்தக்கதா இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை என்னைநான் வேருள்ளவன் என்று கூறவில்லையே
எழுதுவதை பெர்சனலாகப்பார்க்காமல் பொதுவாகப் பார்க்கப் பழகி கொள்ளுங்கள்
நிறைய தட்டச்சுப் பிழைகள் சரி செய்து படிக்கவும் நன்றி
நீக்குநானும் இது போன்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கையில் ஒரு வாட்டர் பாட்டிலுடனேயே அலைவார்கள். குப்பைகளை பற்றிப் பேசி மாய்ந்து போவார்கள்!!!
பதிலளிநீக்குவெளிநாடு சென்று வந்த சுவடே இன்றி இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாக மனதில் பட்டதைத்தான் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் சாலையோர டாபாக்களில்கார்ட் நீட்டும்பலரையும்தெரியும்
நீக்குஸ்ரீராம் - நீங்க சொல்றதைப் பார்த்தால், பரம்பரைப் பணக்காரனையும், திடீர் பணக்காரனையும் கம்பேர் பண்ணறமாதிரி இருக்கு. :-)
நீக்குஎனக்குமே, சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதுமே, நம்ம ஊர் நிலைமை, கட்டுப்பாடின்மை, அப்பட்டமாகத் தெரியும். இங்க பொதுவா கியூல நிற்பதே எப்படி, எதற்கு என்று பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் இங்கிருந்துதானே படித்து, வளர்ந்து போனவர்கள். அதனால் அலட்டுவது தேவையில்லாதது. ஆதங்கப்படலாம். ஹா ஹா.
ஆதங்கம் இருப்பது புரிகிறது
நீக்கு//தாஜ்மஹால் பார்க்கச் சென்றிருந்தோம்.. இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 25-/ (என்று நினைவு). வெளிநாட்டினருக்கு ரூபாய் 250-///
பதிலளிநீக்குஅன்று தொலைக்காட்சியில் தாஜ்மஹால் பார்க்க இப்போது கட்டணம் 1000 ரூபாய் மேல் உயர்த்த போவதாய் சொன்னார்கள்.
//நம்மவர் நம் பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்//
அமெரிக்காவில் வாழும் நம் குழந்தைகள் விருந்து விழாக்களில் பாரம்பரிய உடை அணிந்து தான் வருகிறார்கள்.
சொந்த ஊரில் உறவுகள் இல்லையென்றாலும் பிறந்த ஊர், சொந்த ஊர் என்றால் என் அப்பாவின் ஊர் பாளையம்கோட்டை என்றும் திருநெல்வேலி பூர்வீகம் என்று தான் சொல்கிறோம்.
குலதெய்வ கோவிலுக்கு அங்குதான் போகிறோம்.
பிழைக்க எந்த ஊருக்கு சென்றாலும் பிறந்த ஊரை பிறந்த ஊரின் பெருமையை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்கள் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் பாரம்பரியௌடை அணிவது கேலிக்கு உள்ளாக்கும் என்று ஒரு நண்பர் கூறியதையே எழுதி இருக்கிறேன்
நீக்குவெளிநாட்டில் இருக்கும்போது நம்முடைய விழாக்கள், உறவுகளுக்கு ஏங்குவதும், இங்க வந்தபின் அந்த ஊர் பெருமை பேசுவதும் பேஷனா போச்சுது.
பதிலளிநீக்குவேரற்றவர்கள்.. வார்த்தை நல்லா இருக்குப்பா
வேரற்றவ்ர்கள் என்பதை விட வேரை மறந்தவர்களென்பதே பொருத்தமாக இருக்கும்
நீக்குநண்பர் GMB யின் கருத்துகளை ஒரு கலாச்சார, வாழ்வியல் அலசலாக எடுத்துக் கொள்ளவேண்டும். அவர் உலமில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாறுதல்களைப் பற்றி தன் மன எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பதிலளிநீக்குவயதானவர்களின் பொதுவான குணம் “அந்தக்காலத்தில் நாங்கள்...” என்று ஆரம்பித்து இக்காலத்து இளைஞர்களுக்கு பண்பு, கலாச்சாரம், பெரியவர்கள் பேரில் மரியாதை இவை ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பது (அதாவது புலம்புவது) ஒரு வகையான மனத்திருப்தியைத் தருகின்றது. .
வாழ்வில் மாறுதல்கள் நிச்சயம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். இதை யாராலும் நிறுத்த முடியாது. இப்படி மாறிப்போச்சே என்று புலம்புவதால் தன்னுடைய மன அமைதி பாதிப்படைவதைத் தவிர வேறு ஒன்றும் ஏற்படப்போவதில்லை.
நான் சிறுவயதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துதான் சாப்பிட்டேன். அது ஒரு ஆரோக்யமான பழக்கம் என்று இன்று ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள். ஆனால் பல வருடங்கள் மேஜையில் சாப்பிட்டுப் பழகிய பிறகு கீழே உட்கார முடிவதில்லை.
இந்த மாற்றத்தைப் பற்றிப் புலம்புவதால் என்ன பயன்?
ஆனாலும் ஒன்று உண்மை. நானும் வயதானவன் என்ற முறையில் நான் நினைப்பது. இப்படிப் புலம்புவதால் மன நிம்மதி கிடைக்கும். அது வயதான காலத்தில் கட்டாயம் தேவை. ஜெருசலத்தில் உள்ள வெஸ்டர்ன் வால் போன்று ஒவ்வொரு ஊரிலும் வேண்டும். வயதானவர்கள் தினமும் அங்கு சென்று ஒரு மணி நேரம் அழுது புலம்பி விட்டு வந்தால் அவர்கள் மனம் பளிங்கு போல் தெளிந்து ஆரோக்யமாக வாழ்வார்கள். அதற்குப் பதிலாக நண்பருக்கு இந்த பிளாக் பயன்படுகிறது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து ப்ளாகில் பகிர்வது தவறில்லை
நீக்குஅங்கிருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை அவர்கள் இங்கு கொண்டுவருவதில்லை. அதைப்போல இங்கிருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கின்றார்களோ என புரியவில்லை. விதிவிலக்குகள் இருக்க வாய்ப்புள்ளது ஐயா.
பதிலளிநீக்குஎன் கருத்துகள் பார்த்து புரிந்து கொண்டது
நீக்குவெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்றவர்கள் அங்கேயே ஐக்கியமாவது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இதில் கல்ஃப், சிங்கப்பூர் போன்ற இடங்களை home away home எனலாம். அங்கு செல்பவர்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் விட்டு விடாமல் இருக்க முடிகிறது. மற்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் பல்வேறு காரணங்களால் முழுமையாக கடைபிடிக்க முடிவதில்லை.
பதிலளிநீக்குவெளிநாடுகளில் வளரும் குழந்தைகள் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்களா? அப்படி அவர்கள் விரும்பினாலும் பெற்றோர்கள் வர விடுவார்களா?
வெளிநாட்டில் இருந்த நீங்கள்தான் சரியாகச் சொல்லமுடியும்
நீக்குஎங்கள் நெருங்கிய உறவில் ஒரு பையன் ஐ.டி.பூமில் அமெரிக்கா சென்றான். அவன் அங்கு சென்றவுடனேயே சென்னையிலேயே அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவன் தந்தை சறிது நாட்கள் அங்கேயே இருக்கட்டும், இப்போது இங்கு வந்து என்ன செய்யப் போகிறான்? என்று கூறி வராமல் தடுத்து விட்டார். அமெரிக்காவில் இருக்கும் பையன் என்பதால் பெண் கொடுத்தார்கள். எப்படி வர முடியும்? மேலும் குழந்தைகள் பிறந்து பள்ளி செல்ல தொடங்கியவுடன் அவன்" இங்கு குழந்தைகள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் படிக்கிறார்கள், இந்தியாவில் கடுமையான ஸ்டெரெஸ், நான் வர மாட்டேன்" என்று கூறி விட்டான்.
பதிலளிநீக்குஇப்போது அவன் மகன்களுக்கு தமிழ் புரிந்தாலும் பேசுவதில்லை. அவனை இந்தியாவுக்கு வர விடாமல் தடுத்த அவன் தந்தை பேரன்கள் தமிழில் பேசுவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.
குழந்தைகள் தமிழில் பேசாதது பெற்றோரின் குறையால்தான் தமிழ்தெரியாதுஎன்பதும் இப்போதெல்லாம்ஃபேஷனாகி விட்டது
பதிலளிநீக்குநீங்கள் சொல்பவை அனைத்தும் உண்மைதாம் ஐயா! அதே நேரம், தங்கள் வேரை மறக்காமல், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பலரையும் கூடப் பார்க்கிறோம். ஆகவே இது குறிப்பிட்ட அந்தந்தத் தனிமனிதர்களின் குறைபாடுகள்தாமே தவிர, வாழ்க்கைமுறை வேறுபாட்டின் காரணமாக ஏற்படுபவை அல்ல என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல் வெளிநாட்டில் பணி கிடைத்ததால் இங்கிருக்கும் பெற்றோரை மறக்கும் பிள்ளைகள் இங்கிருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். இதற்குக் காரணம் அவரவர் தனிப்பட்ட மனப்போக்குத்தானே தவிர, நாடு மாறுவது காரணம் இல்லை என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குநான் என்னுடைய அனுபவத்தில் கண்ட என்னுடைய மூதாதையர் சிலரின் வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் திரும்ப இந்திய வாழ்க்கை என்பது ஏறக்குறைய பராசக்தி கதை தான்
இவை யாவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் நடை பெற்றவை.
என்னுடைய அம்மாவின் பெரியப்பா ரங்கூனில் இருந்தவர் ரங்கூன் to மாண்டலே கப்பலில் வேலை செய்தவர்.உலகப்போரின் போது இந்தியாவுக்கு திரும்ப வந்தவர். வந்தபின் கொண்டு வந்த பணத்தில் கொஞ்சம் வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டு அந்த வாடகையில் வாழ்ந்தவர். Tweed கோட் மற்றும் பேண்ட் அணிந்து தான் வெளியில் இறங்குவார். என்ன பயன், படிப்பில்லாத பிள்ளைகள், சொத்தை விற்று சாப்பிட வேண்டிய நிலை, முதுமை என்று, எல்லாம் இழந்து வீதியில் நடக்கும் போது கீழே விழுந்து இறந்தார்.
அதே போன்று இலங்கையில் இருந்து சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தப்படி இந்தியா வந்த ஒரு தூரத்து உறவனரும் எல்லாம் இழந்து வறுமையில் இறந்தார். இவர் கொழும்பு வில் சிங்கர் கம்பெனியில் இருந்தவர்.பிள்ளைகள் இல்லை.
இது போல் இன்னும் இரண்டு நெருங்கிய உறவினர்கள் பணக்காராய் திரும்ப வந்து பரம ஏழைகளாய் மடிந்தவர் உண்டு.
சொல்ல வந்தது என்னவென்றால் திரை கடல் ஓடி திரவியம் சேர்த்து திரும்ப இந்தியா வந்தவர்கள் பலரும் இங்கு வாழும் வாழ்க்கை பற்றி திட்டமிடாமல் குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்ற பழமொழிக்கு ஏற்றபடி வறுமையில்தான் இறக்கின்றனர்
இது இங்கேயே இருப்பவர்களுக்கும் பொருந்துமே என்று நீங்கள் கூறலாம். ஆனால் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களிடம் அதிகம்.
கில்லர்ஜி அவர்கள் துபாய் ரிடர்ன் பற்றி கூறக்கூடும்.
One of my friends used to say foreign money always go foreign.
Those who adjust for foreign life when they are in foreign lands find it difficult to revert to Indian life and thus lose everything including money and relatives.
Those who adjust for foreign life when they are in foreign lands find it difficult to revert to Indian life and thus lose everything including money and relatives.. அதனாலோ அவர்களுக்கு இந்தியா பிடிப்பதில்லை இங்குள்ளநிலையும் பிடிப்பதில்லை முதலில் வந்து கருத்திட்டு பின்நீக்கி மீண்டும்வந்திருக்கிறீர்கள் கனத்த மனதுடன் என்று தோன்று கிறது
நீக்கு