Saturday, May 27, 2017

இதுவும் என் எழுத்துதான்

                          இதுவும்  என்  எழுத்துதான்    
                        ---------------------------------------------
ஒரு வாரகாலமாக நான் ரொம்பவே பிசி. பதிவு எழுத நேரமில்லை  இருந்தாலும்  தேனம்மையின்  சும்மா தளம் சாட்டர்டே போஸ்டுக்காக நான்  எழுதியது அங்கு வெளியாகி உள்ளது  அதுவும் நான் எழுதியதுதானே அந்த தலம் சென்று என்பதிவினை வாசிக்க  வேண்டுகிறேன்
iஇங்கே என்  எழுத்து 





Tuesday, May 23, 2017

இது ஒரு புதுக் கதம்பம்

                                            இது ஒரு புதுக் கதம்பம்
                                             ---------------------------------------
பதிவுகள் எழுதவே மனம்  ஒழுங்குபடுவதில்லை  கனமான தலைப்பில் எனக்குத் தோன்றியதை  எழுதினால்  பலரும் கருத்து சொல்லத் தயங்குகிறார்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று எண்ணுகிறார்களோ என்னவோ எழுதாமல் இருக்கவும் முடியவில்லை/ வாசிப்பவர்களுக்கு  இந்தமாதிரியும் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவருமே எப்படியும்  வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கினாலும்   கருத்து போய்ச் சேர்ந்து விடும்  அல்லவா.
இந்தமுறை ஒரு மொக்கைப்பதிவு.  இதை மொக்கை என்று ஏன்  கூறுகிறேன்  என்றால் இதில்  காணும் விஷயங்களும்  செய்திகளும்   என்னால் கற்பனை செய்யப்பட்டதல்ல  கண்டது படித்தது போன்றவற்றில் இருந்து பகிர்கிறேன்   இருந்தாலும்  என்  முத்திரையும்  இருக்க வேண்டும்  அல்லவா அதை நான் வாசகர்களை வரவேற்பதில் காண்பிக்கிறேன்   பாருங்கள் ரசிப்பீர்கள்


ஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை.  காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.
மண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர்  LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.?

 An apple a day keeps the doctor away. ஆனால் An apple a day costs Rs1000-/  a month டாக்டருக்கு  அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க வேண்டும்.

”நான் கரைந்தால் விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்து  மகிழ்வார்கள்” என்று கோழி சொல்லி வருந்தியது.
Two pieces of advice for married men 
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
  YOU ARE ONE OF THEM 
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
  YOUR WIFE IS ONE OF THEM 
 An amazing English sentence
 I do not know where family  doctors   acquired  illegibly perplexing  handwriting:  nevertheless extraordinary pharmaceutical  intellectuality  counterbalancing  indecipherability transcendentalises intercommunications  incomprehensibleness

The author of this sentence  must be a vocabulary genious . –Why?

 This is a sentence where the first word  is one letter long , the second word is two letters long  the third word is three letters long and so on  .The twentieth  word is  twenty letters long  !






              .



Friday, May 19, 2017

perception ஆ உண்மைகளா

                                                பெர்செப்ஷனா  உண்மையா
                                               ----------------------------------------------
 வாழ்க்கையில்  பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின்  பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை நல்லபடியும்  இருக்கலாம் தவறாகவும்   இருக்கலாம்  எதையோ எழுத நான்  பீடிகை போடுவது போல் இருக்கிறதா
சரி இத்தனை பீடிகைகளும் எதற்காக. சில விஷயங்களை முழுவதும்  தெரிந்து கொள்ள முடிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது
இப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல முடிவுகள் பலவற்றையும்  இவர்களே கொண்டு வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம்  ராஜிவ் காந்தியின்  முயற்சியால்  முன்னிறுத்தப்பட்ட  கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது முயற்சி போல்  காட்டிக் கொள்கிறார்கள் ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும்  ஆதாரை முன்னிறுத்துகிறர்கள்  ஜீஎஸ்டி என்று சொல்லப்படும்  கூட்ஸ் அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது  முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும்  பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும்  அமல் செய்யவில்லை. குறிப்பிட்டவர்களின்  ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ    லோக்பாலின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்  பொறுப்பு பிரதமர்  உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும்    சிலர் அடங்கிய  ஒரு குழு தீர்மானிக்க வேண்டும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும்  காரணத்தால் லோக்பால் நியமனம்  செய்யப்படாமல் இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை விசாரித்து நீதி வழங்குவதுதான்  இப்போது ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும்  இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா  இவர்கள் ஏன்  லோக்பால் நியமனத்தின்  மூலம்  அதை செய்யக் கூடாது / அப்போது இவர்களுக்கு ஏதுவாக செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை  திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ  நீதி  வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள் திணிக்கப் படுகிறதோ என்னும்  சந்தேகம் எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள் இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்ல  வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ்  டிலேய்ட்  இஸ்  ஜஸ்டிஸ் டினைட் என்பது போல் இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும்  போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட் செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும்   குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும்   சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு  விடுதலை கிடைத்ததை எதிர்த்து எந்த அப்பீலும்  இல்லை
முந்தைய அரசின் நல்ல முடிவுகள் பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு  ஒரு ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம்  குறைந்தபட்சம்  ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம்  ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே  முன்னுரிமை வழங்கப் படுவதாக  ஒரு பேச்சும்  இருக்கிறது  இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும்  இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை
 தகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன்  போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும் சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது
ஒரு கட்சிக்கு  என்று கொள்கை ஏதாவது இருக்க வேண்டும்  அந்தக் கொள்கையின்  அடிப்படையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும்  இப்போது இருக்கும் அரசுக்கு காவிமயமாக்குதலே கொள்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த  முக்கிய பதவிகளில் இவர்களின்  அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்
காங்கிரசின் முக்கிய தலைவர்களை இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும்  ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது  கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை  இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே இது
சரித்திரகாலங்கள் முதலே தமிழ்நாடு  ஆங்கிலேயர் ஆட்சி தவிர  எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை.  அசோகர் காலத்திலும்  சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது  மதம்  ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும்  கிழக்கு மேற்கிலும்  மதம்  ஒன்றுதான்  இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து ராஷ்ட்ரா  என்றெல்லாம்  பேச்சுகள் எழுகிறது
சாதாரணப்பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை  நரி வலம் ஓனால் என்ன இடம் போனால் என்ன  என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின்  பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா
( புள்ளி விவரங்களுடன்  எழுத ஆசைதான்   ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான நேரங்களில்  இந்த ஹன்ச் சரியாகவே இருப்பதும்  தெரிகிறது  அதனால்தான்  தலைப்பே அம்மாதிரி ) 
ஒரு மாறுதலுக்காக என் பழைய தஞ்சாவூர் பெயிண்டிங். ஒன்று 
இப்போதெல்லாம்   பெயிண்டிங் செய்ய முடிவதில்லை 
             .










         





Sunday, May 14, 2017

மீண்டும் சென்னையில்

                                    மீண்டும்  சென்னையில்
                                    ----------------------------------------
 மீண்டும்  சென்னையில்
 சென்றமாதம்  சென்னை வந்திருந்தபோது  சில பதிவர்களைச் சேர்த்து  உரையாடினேன்   என் ராசிப்படி மழை பெய்யும்  என்று நினைத்திருந்தேன்  மழை ஏமாற்றிவிட்டது  ஆனால் இந்தமுறை நல்லகத்திரிவெயில் சமயம்   சென்னை பற்றிய வெப்ப பயம் அதிகமாயிருந்தது ஆனால் இம்முறை என்  ராசிப்படி மழைபெய்து  வெப்பத்தின்  பாதிப்பு அவ்வளவு தெரியவில்லை
இம்மாதம் ஏழாம் தேதி பெங்களூரில்  என் மனைவியின்  நண்பி  ஒருவரது மகனுக்குப் பூணூல் போட்டார்கள் பிராம்மணனாய்பிறந்தவற்கு இரு பிறப்பாம் பூணூல்  போடும் முன்பு பூணூல் போட்டபின்பு அவன் பார்ப்பனனாகிறான்  பார்ப்பு என்றால் கோழிக்குஞ்சு.  கோழிக்கு இரு பிறவிகள் முட்டையாக ஒன்று முட்டை பொரித்துக் குஞ்சானபிறகு ஒன்று. அதுபோல இருப்பதால் பூணூல் போட்ட பிராம்மணன்  பார்ப்பனன் ( பார்ப்பு  அனன் ) ஆகிறான்
பூணூல் கல்யாணம் 

 காலை அங்கு வருகைப் பதிவு செய்து  என்  இளைய மகன் வீட்டுக்கு அவனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறச் சென்றிருந்தோம் அங்கு நாங்கள் சென்று மதிய உணவு அருந்தி அவனை வாழ்த்தி வந்தோம் ஏழாம்  தேதி முழுவதும்  அவன் பிறந்த அந்தநாளின் நினைவாகவே இருந்தது.
பிறந்த  நாள் கண்ட மகனுடன் 

எட்டம் தேதி மதியம் சதாப்தியில் சென்னை சென்றோம் ரயில் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு என்மகனும் மருமகளும் வந்திருந்தார்கள் வீடு சேரும்போது இரவு பத்தரைக்கும் மேலாகி இருந்ததுஏசி காரில் பயணம் வெளியே வந்தால்தான் வெப்பம்  தெரிந்தது  இரவு படுக்கையும்  ஏசி அறையில் . ஒன்பதாம் தேதி மாலை அவன்  வீட்டுக்குச் சென்றோம்  பெரும்பாக்கத்தில் இருக்கிறது எனக்கு அவன்  நகருக்கு வெகுதூரம்  வெளியே போவது போல் தோன்றியது.நான்கு அடுக்குகள் கொண்ட குடியிருப்பு. எல்லா வசதிகளும் இருக்கிறது எனக்கு அந்த தூரம் தான் பிரச்சனையாகத் தோன்றியது அவனைக் கேட்டால் வேளச்சேரி வீடு வாங்கும் போது அதுவும் இதைப் போல்தான் இருந்தது  இப்போது எல்லா வசதிகளும் கொண்ட சிறந்த குடியிருப்பாக மாறி இருக்கிறது இல்லையா என்கிறான் . இப்போதைய இளையவர்களின் சிந்தனையே வேறு மாதிரி இருக்கிறது எழுதிக் கொண்டே போகலாம் ஆனால் யாரும் ஒரேமாதிரி நினைப்பதில்லை. பத்தாம் தேதி அதிகாளையில் கிருகப் பிரவேசம் கணேச ஹோமம்  அத்தனை காலையில் வேளச்சேரியிலிருந்து போவது சிரமம் என்பதால் எங்களுக்கு குடீருப்பிலேயே ஏசி வசதி கொண்ட ஒரு கெஸ்ட் அறை ஏற்பாடு செய்திருந்தான்  என்  இளைய மகன்  ஒன்பதாம் தேதி இரவு வந்திருந்தான்   அவனது மகளுக்கு கடைசி செமெஸ்டர் பரீட்சை இருந்ததால் மற்றவர்கள் வர முடியவில்லை  எங்களுடன் என்மச்சினனும் அவன்மனைவியும்  வந்தனர்
அதிகாலையில் அண்ணா நகரில் இருக்கும்  நம்பூதிரியை அழைத்து வரவேண்டி இருந்ததுநான்  ஒரு புது வீடு வாங்குவதாயிருந்தால் ஒரு நாடாவைகட் செய்து எல்லோருடனும்  உள்ளே போகவே விரும்புவேன்.
இந்த கணேஅ ஹோமம் கூட நம்பூதிரிகள் செய்வதற்கும்   நம் பக்கத்து ஐயர்கள் செய்வதற்கும் வித்தியாசம் தெரிகிறது மாலை அஸ்தமித்த பின்  பகவதி சேவை என்னும் ஒரு பூஜை.  விவரமாக எழுதுதற்குப் பதில் புகைப்படங்கள் பேசட்டுமே
என்மகன்  குடிபோகும்  குடியிருப்பின் ஒரு தோற்றம்  
இன்னொரு தோற்றம் 
கழுகுப் பார்வையில் குடியிருப்பு (மாடல்)
கார் பார்கிங்
பூஜை அறையில் 
குழலூதும்  கண்ணன்  
கணபதி ஹோமம் 
வீட்டு பால்கனியில் இருந்து ஒரு தோற்றம் 
பால் காய்ச்சல்  சரளைக் கற்களை இரைத்த மாதிரியான சுவர் n
காலை உணவு 
ஒரு வித்தியாசமான வாஷ் பேசின் 
பகவதி சேவை 
மாலையில் ஒரு தோற்றம்   


வீட்டுக்குள் போகும்  ஒரு காணொளி 

   பால் காய்ச்சல் ஒரு காணொளி 
           பிள்ளைகள் விளையாடவும் நீச்சல் அடிக்கவும்( ஒரு காணொளி )
அன்று மாலை என் நண்பனும்  மனைவியின்  மாமனும் ஆகியவரின் பிள்ளையின்  வீட்டுக்கு போரூர் சென்றோம் பதினேழு மாடிக்கட்டிடத்தில் பதினைந்தாவது  தளத்தில்   இருந்தது  ப்ரெஸ்டிஜ் நிறுவனத்தார் கட்டியது எல்லாமே பரந்துவிரிந்து இருக்கிறது மாலை நேரமாகிவிட்டதால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை  எல்லாமே பாஷ்தான்     



  
    








 

Monday, May 8, 2017

சில பகிர்வுகள்


                   சில பகிர்வுகள்
 அண்மையில் ஒரு திருமணத்துக்கு சென்னை சென்றிருந்தோம்  திருமணங்களில்தான் பலநாள் காணாத உறவுகளைக் காண முடிகிறதுஇப்போதெல்லாம் திரு மண வைபவத்தின் போது அதைக் கொண்டு நடத்தும் புரோகிதர்கள் லெக்சர் கொடுப்பதைக் காண்கிறேன்  இந்தத் திருமணத்திலும்  புரோகிதர் திருமணம் பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி விட்டார்  அதை சிறிது காணொளியில் காணலாம்  என்ன வெல்லாமோ சடங்குகள் பலவற்றிலும் காம்ப்ரமைஸ் செய்கிறோம்  மணப் பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்து சில மந்திரங்கள் சொல்லப் படுகின்றன சென்னை போன்ற பெரு நகரில் நுகத்தடிக்குப் பதில் கட்டிலின் கால் ஒன்று உபயோகிக்கப்பட்டது  காசி யாத்திரை முடிந்து மணமக்கள் வரும்போது  மலர்களைப்பரப்பி  அதன் மேல் வெல்கம் என்று மலர்களாலேயே  அமைத்து அதன் மேல் மண மக்களை  நடந்து வரச்ச்செய்தனர் இதை பலமாக எதிர்த்து புரோகிதர் பிரசங்கம் செய்தார்

                                  **********************

ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போது  அங்கு ஒரு மழையாவது பெய்யும் ஆனால் இம்முறை ஒரு சிறு தூறல் கூட விழவில்லை
                                    ***********************.

சென்னையில் சென்றிருந்த நாட்களில் மகனின்  புது இல்லத்தைக் காண அவனுடன் சென்றது தவிர எங்குமே போக வில்லை, முடியவில்லை வயதாவதன் தாக்கம் நன்கு தெரிந்தது
                                   *************************************

புஸ்தகா டிஜிடல் மீடியா மூலம் எனதுமூன்று நூல்களை மின்னூலாக்கி இருக்கிறேன்  சிறு கதைகளின்  தொகுப்பாக ஒரு நூலும்   நினைவில் நீ என்னும்  பெயரில் ஒரு நாவலும்  பல நேரங்களில் எழுதி இருந்த கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளி இட்டிருக்கிறார்கள் நான் எழுதி இருப்பதை எல்லாம் சேமிக்க மின்னூல்கள்  உதவும்  என்றே தோன்றுகிறது புஸ்தகா பத்மநாபனை சந்தித்து இன்னும் சில படைப்புகளை நூலாக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இதற்கு முன்  மின்னூலாக செய்த முயற்சிகள் வீணானதற்குப் பிறகு  இப்போது அவை வெளியானதில் மகிழ்ச்சியே
                               *********************************
சில சிறு கதை போட்டிகள் பற்றிய அறிவிப்புகள்  வந்திருக்கின்றன. போட்டிக்காக எழுத மனம் வரவில்லை. மேலும்  எழுதியவை வருமா வராதா என்று காத்திருப்பதில் எனக்கு உடன்பாடுஇல்லை நான் எழுதுவதை எழுதியவாறே வெளியிட்டுக் கொள்ள எனது வலைப் பூ இருக்கும் போது பிற இடங்களுக்கு எழுதி அனுப்பி அவை வெளிவராமலே போக வாய்ப்புகள் அதிகம்  அதை மாற்ற  முடியுமா தெரிய வில்லை.  என்னதான் எழுதினாலும்  சில எண்ணங்களையும் கருத்துகளையும்  எழுத்தில் வராமல் தவிர்க்க முடிவதில்லை
                                    **********************************
சென்னையில் பதிவர் சந்திப்பின்  போது நான் ஏதாவதுதலைப்பில் டிஸ்கஸ் செய்ய விரும்புகிறேனா  என்று ஜீவி அவர்கள் கேட்டார்கள் சந்திப்பதே சொற்ப நேரம் அதில் நான் எதையாவது கூற  அதைப் பிறரால் ஏற்க முடியாததர்ம சங்கட நிலை உருவாவதை தவிர்க்கவே விரும்பினேன்  யார் யார் என்ன பேசுகிறார்கள் என்றுகவனித்துக் கணிப்பதே போதும்  என்று நினைக்கிறேன்  அவரவர்கள் பற்றிய செய்திகள் ஒன்றோ இரண்டோ வந்தது  மேலும் மேலும்  சந்திக்க முடிந்தால் இன்னும்  வெளிப்படையாக பகிர முடியலாம்
 புஸ்தகா மூலமும் எழுத்துகளிலும்  சந்தித்துக் கொள்ளலாம் என்று ஜீவி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்  ஆனால் பலரும்  எழுத்தில் தங்களை  வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்றே தோன்றுகிறது
                                  ********************************
எதை எழுதத் துவங்கினாலும் அதுபற்றி நான்  ஏற்கனவே எழுதி இருப்பதே முன்  வருகிறது ஆகவே தான் சிற்சில மாற்றங்களுடன்  எழுதும் போது  அவை முன்பே படித்ததுபோல் சிலருக்குத் தோன்றுகிறது ஆகவே இனி நான் எழுதி இருந்தவற்றையே மீள்பதிவுகள் ஆக்கலாம்  என்று தோன்றுகிறது  ஒரு சிலர் படித்திருக்கலாம் ஆனால் இப்போது என் வாசகர் வட்டம்தான் விரிந்து விட்டதே
                                  ********************************
 இன்னும்  ஒரு சென்னை விசிட் இருக்கிறது மேமாதம் பத்தாம் தேதி என் மகன்பெரும்பாக்கத்தில் வாங்கி இருக்கும்  மூன்றுபடுக்கையறை கொண்ட வீட்டுக்கு புதுமனை புகு விழா வைத்திருக்கிறான் டிக்கட்டுகள் கிடைப்பதே  சிரமமாய் இருக்கிறது போதாத குறைக்கு கத்திரிவெயிலின்  உக்கிரமான பகுதி அந்த நாட்கள்
 இப்போதெல்லாம் விசித்திரமான எண்ணங்கள் மனதை அரிக்கிறது எல்லோருடனும்  பகிரவும்  முடியவில்லை. அவற்றைக் கதையாக்கி  என்  ஆதங்கங்களை தீர்த்துக் கொள்ளலாம்  என்றுநினைக்கிறேன்
                                   ********************************
இந்த முறை எங்கள் வீட்டு மாமரத்தில்  காய்கள் மிகவும்  குறைவு  காய்த்தவையையும்  பக்கத்து வீடு புதிதாய் கட்டுவதில்  இருக்கும்  வேலையாட்கள் மாடியேறி வந்து பறித்துக் கொண்டு போகிறார்கள்
                              ***************************************

எங்கள் வீட்டு வெற்றிலைக் கொடி பற்றி எழுதி இருக்கிறேன் அது மாமரத்தைப் பற்றி கொண்டு மேலேறி இருக்கிறது  வெற்றிலை கேட்டு வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள் வெற்றிலையை  சும்மா கொடுக்கக் கூடாது என்கிறாள் மனைவி. ஒப்புக்காவது ஏதாவது காசு வாங்கிக் கொள்கிறாள் ஆனால் பூஜைக்கு என்று கேட்பவர்களுக்கு  தாராளமாய்க் கொடுக்கிறாள்  இங்கெல்லாம்  வெற்றிலை ஒரு இலை ஒரு ரூபாயாம்
                         ********************************************************************* 
வருடத்துக்கு ஒரு செடியில் ஒரு பூமட்டுமே மலரும்  எங்கள் வீட்டு ஃபுட்பால் லில்லியைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறே,ன் இந்த ஆண்டும்  மலர்ந்து பட்டுப்போகும் செடிகளில் ஒன்றி லிருந்து ஒரு பூ மலருகிறது ஆச்சரியம்தான்  மலர்ந்த பூ சுமார் ஒரு வார காலம் இருக்கும்   பிறகு செடிய்ம் பட்டுப்போய்விடும்   ஆனால் மே மாதம்  வந்தால் செடியும்வரும்  பூவும் மலரும்  அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லித்தெரியாதது 



                                 ********************************

 
மெழுகுவர்த்தியின் ஒளியில் கடவுள் பிரத்தியட்சமாவதைக் கண்டு மகிழுங்கள்


இனி ஒரு வாரகாலம் வலைப்பக்கம் வர முடியாதுஎன்று நினைக்கிறேன்  மீண்டும்  சந்திக்கும்  வரை விடை பெறுகிறேன்










Wednesday, May 3, 2017

எண்ணத் தறியில் எட்டுமணி நேரங்கள்





எண்ணத் தறியில் எட்டு மணி நேரங்கள்
-------------------------------------------------------------------------

 இந்தப் பதிவை நான் வலையுலகில்    இருந்த ஆரம்பநாட்களில் எழுதியது  ஒரு    தொழிலாளியின்  எண்ண ஓட்டங்களைப் பகிர்வது போல் எழுதி இருந்தேன்  அதுவே என் எண்ணங்கள் சிலவற்றையும் கடத்த உதவியாய் இருந்தது ஆரம்ப காலத்தில் நான் பணியில் இருந்தபோது பலரது எண்ண ஓட்டங்கள் இருந்த நிலையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்    இந்த முன்னுரை  இதைப் படித்தவர்கள்  ஒருவேளை ஏற்கனவே படித்தது என்று கூறினாலும்   எழுதி இருக்கும் செய்திகள் இப்போதும்  ரெலெவெண்டாக இருப்பதுபோல் இருக்கிறது  ஆகவே இதை மீள் பதிவாக்குகிறேன் 
    என்னுடைய  ஆங்கிலப்  பதிவான  RANDOM  THOUGHTS  IN  EIGHT HOURS - 
தமிழில்  மொழி  மாற்றம்  செய்து  எழுதியது.ஆங்கிலப்பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இன்னும் இங்கே   

             மனித இயந்திரங்களை இயங்க வைக்கும் ஆலைச் சங்கு ஊதுகிறது. ...! சங்கோசையால்  கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கையும்  ஒன்றா.? விரக்தி ஏற்படுவதால்  என்ன பயன். .?வேலையைத் துவங்க வேண்டியதுதான்....நடக்கட்டும்மெஷினை   ஆன் செய். கருவிகளை  சுத்தம்  செய். திருத்தப்பட  வேண்டிய  பாகம்  மெஷினில்   பொருத்தப்படட்டும். ஹூம்..!  " ட்ரேசர்ஊடுருவும்  வழியில் பாகமும்   கடையப்படும் .

            மாற்றங்கள் இல்லாத, கட்டாயப்  படுத்தப்படும்  சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால்  யாருமே  வேலை

செய்ய மாட்டார்கள். காலையில் "பஞ்ச" செய்வதற்கு ஓடிவரும் ஆட்களைப் பார்க்கிறாய். அந்தக் கட்டாயமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நேரத்துக்கு வேலைக்கு வருவார்களா.?"பஞ்ச" செய்ய வேண்டாத சூப்பர்வைசர்களும்   அதிகாரிகளும் எத்தனை முறை எவ்வளவு நிதானமாக வருகிறார்கள். நீள்பாதை  போட வேண்டியவர்களே  கிட்டப்  பார்வையினராகிறார்கள் . போதாக்குறைக்கு  "டிசிப்ளின்பற்றி  எல்லோரும் பாடம்  நடத்துகிறார்கள்.

            மெஷினில் வேகம் கூடுதலாக உள்ளது. சரிசெய். ஹூம் ! என்ன நினைத்துக் கொண்டிருந்தாய். டிசிப்ளின், ஒழுங்கீனம் அல்லது கட்டுப்பாடின்மை இதற்கு என்ன காரணம். ஒன்று தோன்றுகிறது. வேலைக்கு மூன்று நிலைகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தொழிலாளி, மேற்பார்வையாளர், அதிகாரி.-- இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்.கிட்டத்தட்ட ஒரே நிலையில்  இருப்பவர்கள்மொழிஇனம்கலாச்சாரம்பின்னணிவயசு  போன்றவற்றில்  மெத்த  மாறுதல்  இல்லாதவர்கள்வித்தியாசம்தான்  என்ன.? சிலபல  ஆண்டு  படிப்பறிவு. .-- இது  எவ்வளவு  பெரிய  மாற்றத்தை  ஏற்படுத்துகிறதுபுத்திசாலியானசூட்டிகையான

கடினமாக  உழைக்கும்   இளைஞர்கள்  கீழ்  மட்டத்தில்  நிறைந்த  அளவிலும், .- எல்லா
விதத்திலும்   சாதாரணமான  அல்லது  அதற்குச்  சற்றே  குறைவான, ஆனால்  கொடுத்து  வைத்த  இளைஞர்கள் உயர்  மட்டத்தில் நிறைந்த  அளவிலும் .-- இரண்டு   குழுவிலும்  அனுபவம்  இல்லாத, சூடான  இரத்தமுள்ள, மன  முதிர்ச்சியடையாத   இளைஞர்கள்இங்கு ஒழுக்கமும்  கட்டுப்பாடும்  எப்படி  காயப்படுத்தப்  படுகிறது.? தொழிலாளிக்கு  உள்ள  பிரச்சனைக்குத்  தீர்வு  கொடுக்க  வேண்டியது  மேற்பார்வை  யாளரின்  கடமை. அவருக்கு  ஏற்படும் தொல்லைகளுக்கு  தீர்வு  காண்பது  அதிகாரிகளின்   கடமை . ஆனால்  தொழிற்சாலைகளில்  மூன்றாண்டு , ஐந்தாண்டு  தொழிற்கல்வி  பட்டப்படிப்பு  வெறும்  ஏட்டுச்சுரைகக்காயதானே.? பிரச்சினைகளுக்கு  தீர்வு  காணும்  அனுபவம்  எங்கே.? அனுபவம்  ஏற்படும்  முன்னே உயர் பதவி --படிப்பின்  அடிப்படையில் அமர்த்தப் படுகிறார்களே. வேண்டுமானால்  பிரச்சினையை  எடுத்துச்  சொல்லும்  முறையில்  மாறுதல்  இருக்கலாம். தொழிலாளி  தமிழில்  சொன்னால்   அதிகாரி  ஆங்கிலத்தில்  சொல்லுவார். கீழ்மட்டத்  தொழிலாளிகளால்  சொல்லப்படும்  பிரச்சினைகள்  அநேகமாக  தொழில்  ரீதியில்  தீர்க்கப்  படாமலேயே  இருக்கும் . தேவைகள்   மாற்றி  அமைத்துக்  கொள்ளப்படும் . காம்ப்ரமைஸ்  செய்யப்படும் .தொழிலாளிக்கு  இது  புரிந்தாலும்  காட்டிக்கொள்ள  மாட்டான். அவனுக்கு  மேலதிகாரிகளின்  தயவு தேவை..தாமதமாக  வர, சீக்கிரம்  போக, ஓவர்டைம்   வேலை  கிடைக்க..- சலுகைகள் தேவை. தனிப்பட்ட  முறையில் அதிகாரிகளும்  ஆட்களை  இந்தச சில்லரைப் பிச்சைகள்  மூலம்  அடக்கி  வைக்கின்றனர். அதிகாரிகளிடம்  மதிப்பு, மரியாதை, விசுவாசம்  தேய்கிறது. அதிகாரிகுறி, இலக்கு இவற்றுக்கு  கொண்டு  செல்பவனாக  இல்லாமல்  உத்தரவு  பிறப்பிப்பவனாக  இருக்கிறான். எங்கிருந்து  ஒழுங்கு  வரும், எங்கிருந்து  கட்டுப்பாடு  வரும் . மேலிருப்பவன்  முன்  மாதிரியாக  இருக்கவேண்டும். எல்லோரும்  ஏனோதானோ  என்று  இருக்கிறோமே  தவிர, கட்டுக்கோப்பாக  சரியான  முறையில்  சிந்தித்து  செயல்படுவதில்லை.

          இவையெல்லாம்  விவாதத்துக்கு  உட்பட்டவையாக  இருக்கலாம்சில  நேரங்களில்  விவாதங்களினால்  நல்ல  தீர்வுகள்  கிடைக்கிறதோ  இல்லையோ , ஆற்றாமையை  வெளிப்படுத்திய  திருப்தியாவது  கிடைக்கும்இன்னுமொரு எண்ணம்.

பதவி உயர்வு..! எங்கிருந்துதான்   இவர்களுக்கு   இப்படி ஒரு கொள்கை கிடைத்ததோ.  இன்ன   பதவியில்  இவ்வளவு  வருடங்கள்  கழித்தால்  பதவி உயர்வு. அதுவும்  எப்படி?.
உயர்  மட்டத்தில்  மூன்று  நான்கு  ஆண்டுகளில்  பதவி உயர்வும்தொழிலாளிகளுக்கு  எட்டு  பத்து  ஆண்டுகளுக்குப் பிறக்குமாம்ஒரு தொழிலாளி  வேலை செய்து  குறைந்தது  நான்கு ஐந்து  பதவிகள்  பெற  முடிந்தால்தான்  ஒரு மேற்பார்வையாளராக   வர முடியும்.. இதற்குள்  அவன் தலை  நரைத்துபல்  போய  படு கிழவனாகி  விடுவான்இதற்கெல்லாம்  அடிப்படை  காரணம்  என்ன. ? மூன்று, ஐந்து  ஆண்டுகள்  படிப்பா.? என்ன இது. ? என்னதான்  வேலை செய்தாலும்  முன்னேற  முடியாத  முட்டுக்கட்டை.

             மெஷினில்   பொருத்தப்பட்ட   பாகம் முடிவடைந்து விட்டதுஅதை   எடுத்து   கருவிகளை   சுத்தம் செய். இன்னுமொரு  திருத்தப்பட  வேண்டிய   பாகம்   பொருத்தப்  படட்டும். " ட்ரேசர்ஊடுருவட்டும். கவனமாகப்   பார்த்துக்கொள்கொஞ்சம் இருஒரு  சிகரெட் புகைத்து  விட்டு  வரலாம்யாராவது   நண்பன்  கிடைப்பான். எவ்வளவோ   சங்கதிகளை   விவாதிக்கலாம். 


             கோவிலில் சிலைகளை கும்பிடுவது  பற்றி என்ன   எண்ணுகிறாய்.. விசேஷமாக   எதுவுமில்லைஇது  விவாதிக்கக் கூடிய  விஷயமல்லமுடிவு  ஏற்பட  முடியாத  விவாதங்களும்   பிரயோசனமில்லை. ஆனால் தனிப்பட்ட  முறையில்   சிலைகள் வணங்கப்  படுவது  குறித்து  எனக்கு  ஆட்சேபனையில்லைவணங்குதல்  அல்லது  தொழுதல்  அல்லது   வேண்டுதல்  என்றால்  என்ன.? யார்  யாரை  வேண்டுகிறார்கள்.? சுலபமானதுகோவிலில்  வேண்டுபவன்  அவன் ஆத்மா  விடுதலைக்காகவும்மன நிம்மதிக்காகவும்  தொழுகிறான்அவன் ஆத்ம  விடுதலை   யார் செய்ய  முடியும்.? அவனேதான். அவன் அவனைத்தான் அவன் விடுதலைக்காக   வணங்க  வேண்டும் .! குதர்க்கமாகத்  தோன்றலாம்ஆனால் அதுதான்   வேதங்களும்   ஞானிகளும்  கூறுவதாகத்  தோன்றுகிறதுஒரு சிலையோ  படமோ  ஒருவனின்  பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது. உண்மையில்  ஒரு பூவோ பழமோ  நிவேதனமாக   வைத்து   ஆராதிக்கையில்   வேண்டுபவனும்  வேண்டப்படுபவனும் ஒரே  நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். சிலையோ படமோ தன  உள்ளத்தின்  மெல்லிய திரையிடப்பட்ட  பிரதிபலிப்பேயாகும்அந்நிலையில்  எண்ணத்தின்  வாயிலாக  அகமும் புறமும்  ஒன்றோடோன்று  கலந்து  தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறதுஇந்நிலையில்  ஒரு  கண்ணாடி  முன் அமர்ந்து , " நீதான்  அது, " என்று   தன பிரதிபிம்பத்தைப்  பார்த்து  சொல்லமுடிந்தால் , படம் ,சிலை , பிம்பம்  எல்லாம்   ஒன்றுதான்.. ...! இதெல்லாம்  சற்று  கூடுதலோ. .நமக்கு  ஒத்து  வராதுசிலையை   வணங்குபவர்  வணங்கட்டும்மற்றவர்  வேண்டாம்.


            சிகரெட்   புகைப்பதில் நேரம் செலவாகி  விட்டது. வேலை தொடரவேண்டும். இரண்டாவது   பாகம் முடிந்ததா..? இன்று செய்து முடிக்க  வேண்டியது  ஏழு  பாகங்களா. ? முடிக்கலாம்.


            ஏன் சிகரெட் புகைக்கிறாய். ? உன்னையே  தெரிந்தவன்  படித்தவன்  பகுத்தறிவு   உள்ளவன்  என்று பீற்றிக்கொள்பவன் உடலுக்குக்  கெடுதல்  என்று   தெரிந்தும்  ஏன்   புகைக்கிறாய்.? புகைத்துச்  சாகிறாய்.?  புகை பிடிப்பவர்கள்  அனைவரும்  அதனால்  சாகிறார்களா.? ஆனாலும்  ஏன் புகைக்கிறாய் ? பழக்கத்துக்கு   அடிமை  ஆகிவிட்டாயா.? இல்லை.. ஏதோ  ஒரு சிறிய  இன்பம்நரம்புகளை கிளுகிளுக்கச் செய்து புத்துணர்வு  ஊட்டுகிறது. என்றைக்கானாலும் சாகத்தானே வேண்டும். இந்த சில்லறை   இன்பங்களையாவது   அனுபவிக்கக்கூடாதா.? .... எவ்வளவு   விந்தையான அடி முட்டாள்தனமான   எண்ணங்கள்உன்னை எப்படித்  திருத்துவதுஉன்னை நம்பி  எத்தனை  பேர்  இருக்கிறார்கள். நீ  ஒரேயடியாக   சாகாமல் நொடி நொடியாகச் செத்தால்  யார்  அவதிப்படப்  போவது..? உனக்கு  மன  உறுதியில்லைவெறும்  பேச்சுத்தான்கட்டுப்பாடு  கிடையாதுஉன்னை  நீயே  ஏமாற்றிக் கொள்கிறாய்இல்லை.  என்னால்  புகை  பிடிப்பதை  நிறுத்த முடியும்இது  சவால்.! பார்க்கலாம்.


             மெஷினில்  பொருத்தப்பட்ட  பாகம் முடிந்ததா, சரியாகப் போகிறதா என்று   பார்ப்பதுதான்  வேலை. எல்லாம்  இயந்திரத்தனமானது. வாழ்க்கையே   மாற்றமில்லாத   இயந்திர கதியில் ஓடுகிறது. இல்லை. ..வாழ்க்கை இயந்திரமானது   அல்லஅப்படி  ஒரு எண்ணம்  ஏற்பட சூழ்நிலையும்   அணுகுமுறையும்தான்   காரணம். வேலை  செய்பவன்  மாற்றமில்லை  என்று  ஏங்குகிறான். இல்லாதவன் வேலையே  இல்லை  என்று மறுகுகிறான். " கும்பி கூழுக்கு  அழுகிறது, குடுமி  பூவுக்கு   அழுகிறது."  பொருத்திய  பாகம்  முடிந்தது. மாற்று. 


             பஞ்சசீலம்  பாண்டுங்  மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது  என்பார்கள்இங்குள்ள  பஞ்சசீலம்  என்ன தெரியுமா.. காலையில்  பஞ்ச இன் ,காபி  இடைவேளைஉணவு  இடைவேளை, தேநீர்  இடைவேளை, மாலையில்  பஞ்ச அவுட். இந்த முக்கியமான  ஐந்து குணங்கள் வழிமுறைகளாக   அப்பழுக்கற்று   கடை பிடிக்கப்படுகிறது. 


             இதோ வருகிறார் குட்டி  அதிகாரி. ஏதாவது   கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு  வேண்டியது  ஒரு வணக்கம். அதுவும்  கூழைக்  கும்பிடாக  இருநதால்  இன்னும்  நல்லதுஇவர் அதற்குத்  தகுதி  உள்ளவரா.? மரியாதையும்  மதிப்பும்  கடைப்பொருளா   வாங்குவதற்கு. ? கொடுத்துப்  பெற  வேண்டியது  அல்லவா..?  மேலதிகாரி  என்ற  ஒரே  தகுதி  போறுமா. ? அடடா.. .. நீ கேள்வி  கேட்காத  இடமே  இல்லையா.? அவருக்கு  வேண்டிய  வணக்கத்தைக்  கொடுத்து  ஆளை  விடுவாயா.. அதில்லாமல்... .. மேலதிகாரிகள்  என்று  சொல்லும்போது  எத்தனை பேர். எத்தனை  வகை   இவர்களுக்கெல்லாம்  உண்மையிலேயே  என்ன  வேலை.. உற்பத்தி  ஏன்      பெருகவில்லை  என்று எல்லோரும்  கேட்கிறார்களே  தவிர  உண்மையான  காரண   காரியங்களை  ஆராய்ச்சி  செய்து  மாற்று  நடவடிக்கைகள்  எடுப்பதில்லைஎந்த   நேரத்திலும்  அவர்களைத்  தவிர   மற்றவர்கள்தான்  தவறுகளுக்குப்  பொறுப்பு.


            உண்மையிலேயே   உற்பத்தி  ஏன்  பெருகவில்லை.. அதிகாரிகள்   கூறும்   காரணங்கள் பணமுடக்கம், கச்சாப் பொருட்கள்  இல்லாமைஊழியர்களிடம்   ஒழுங்கின்மை  இத்தியாதி   இத்தியாதி . ஆனால்  நடைமுறையில்  நாம்  பார்ப்பது  ஒரு  வருடத்தில்  ஐம்பது  சதவீதத்துக்கும்  மேல் கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில்தான்   உற்பத்தியாகிறது. கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில் மட்டும் மூலதனமும்கச்சாப்பொருள்   தட்டுப்பாடும்   ஊழியர்களின்   ஒழுங்கீனமும்   மாயமாய்   மறைகிறதா. 

யார் காதில்  பூசசூடுகிறார்கள் ? இந்த அவசர  அடிவேலையில்  பாதிக்கப்  படுவது   உற்பத்திப்  பொருளின்  முக்கிய  அம்சமான  தரமல்லவா,?

             இந்த நிலையில் நாம் பீற்றிக்கொள்வதில்  மட்டும் எந்தக் குறையும்  இல்லைதொழில் நுட்ப தேர்வு  பெற்ற, உயர் கல்வி  பயின்ற  வல்லுனர்களை  மூலாதாரமாக   உபயோகித்து  முன்னேறுகிறோம்  என்று முழங்குகிறோம்ஆனால் நாம்  காணும்  தொழில் நிலையும் ஒழுக்க  நிலையும்உற்பத்தி   நிலையும் நமக்குச்  சொல்லும்  செய்தியே  வித்தியாசமாக  அல்லவா  இருக்கிறதுஇங்கு  வெடிக்கும்  உண்மைதான்  எது. ? ஆராயலாமா.?


              எங்குதான்  பிரச்சினை. ?  அரசாங்க  நிலையிலாநிர்வாக நிலையிலாஊழியர்கள் நிலையிலா, .?யார்தான்  இதற்குப்  பொறுப்பு.?  எங்குதான்  பாட்டில்நேக்

(BOTTLE  NECK ).? ஆம். . கேள்வியிலேயே   பதில் தெரிவதுபோல்  தோன்றுகிறதே. .சீசாவின்   கழுத்து  மேல்   பாகத்தில்தானே.. . புரிந்ததா..?  விவாதிக்கலாமா..?


              இதுவரை நான் என்ன செய்தேன்  என்று கேள்வி கேட்கிறார்   என்  மேற்பார்வையாளர . எண்ணிப்  பார்க்கிறேன் . ஏழு  செய்ய  வேண்டிய  இடத்தில்  எட்டு.  ஷொட்டு கொடுப்பாரா. ? ஊஹூம் ..! வீண்  எதிர்பார்ப்பு.. அனைவரையும்  இயக்கும்  ஆலைச் சங்கு  இனிமையாக  ஒலிக்கிறதுஆஹா .. வீடு  நோக்கி  ஓடு. .!     

===========================================