Wednesday, January 31, 2018

கட்டவிழ்த்தோடும் கற்பனைகள்


                       கட்டவிழ்த்தோடு ம் கற்பனைகள் (900)
                   -----------------------------------------------------

முன்பொரு பதிவில் நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது எமனென்னை நெருங்கிவிட்டான்  என்னும் நினைப்பில் எழுந்தவுடன் அவனை நான் மிதித்து  விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன்   காலா என் காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் என்காலால்  என்ற பாரதியின் வரிகளைக் நினைத்தோ என்னவோ
  
  ஆனால் காலன்  என்ன கட்டியங்கூறியா வருகிறான்   மேலும் காலனைப் பற்றிய நம் உருவகங்கள் திசை மாறியவை ஏதோ எருமை மாட்டின் மீதேறி வந்து பாசக் கயிறு கொண்டு கட்டி இழுப்பான் என்றெல்லாம்  பயமுறுத்தியே  வளர்க்கப்பட்டிருக்கிறோம்  சாவு என்ன பயம்  தரக் கூடியதா ? சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா ? எல்லாமே கற்பனைகள் தானே

 ஏதோ ஒரு நாள் நாம் எல்லோரும்  இறக்க வேண்டியவர்களே  இறப்பின்  வேதனையோ மகிழ்வோ யாராவது சொல்ல முடியுமா  நம் இறப்பால் நமக்கு எந்த தீங்கும் இல்லை  நம்மை நாடி இருப்பவர்களுக்கே  வலி பயம் எல்லாம்  எனக்கு என்னவோ இதெல்லாமே அதீத கற்பனைகள் என்றே தோன்று கிறது இறப்பு தவிர்க்க இயலாதது வரும்போதுமகிழ்வுடன் ஏற்போமே  ஒவ்வொரு நாளும் உறக்கம் நீங்கி எழும்போது  வாழ்வில் ஒரு நாள் வரவு என்றும்  போகுமிடத்துக்கு கொஞ்சமருகே வந்துவிட்டோம் என்றும் மட்டுமே நினைக்கிறேன்   இதை எழுதிக் கொண்டே வரும்போது முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் எழுதிய வரிகளிலிருந்து
 நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்  சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார்மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “
சாவு என்று பாரதி கூறியது இந்த ஊன் உடம்பின் அழிவையே நானொரு முறை எழுதி இருந்ததும்  நினைவுக்கு வருகிறது
வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள்.

Intuition  என்னும் ஆங்கில வார்த்தையை உணர்வு என்று தமிழ்ப்படுத்தலாமா எனக்கு இந்த சாவு - அப்படிச் சொல்வதை விட இறப்பு என்று சொல்வது கொஞ்சம் வீச்சு குறைவாய் இருக்கிறதோ ? என்னவாய் இருந்தாலு ம் புரிந்து கொள்பவரைப் பொறுத்தது அது எண்பதாவது வயதில் இருக்கும்  நான் எப்பவும்  அதை எதிர் நோக்கி இருக்கிறேன்   ஒருமுறை நான்  எனது பிறந்த நாள் வரை இருக்க மாட்டேன்   என்னும் உள்ளுணர்வு  கூறியது  எனக்கோ  இதை  யாரிடமாவது பகிர ஆசை  ஆனால் உறவுகளில் என் மக்கள் அது பற்றி நினைக்கவே விரும்பமாட்டார்கள்  என் மனைவியோ என்னோடு குடும்பம்  நடத்தியவள்  என்பதால் இதுவும்  என்  பைத்தியக் காரத்தனம் என்றே கருதுவாள் அவளுக்கும்  ஏன்  எல்லோருக்கும் தெரியும்  யாரும் நிரந்தரம் இல்லை என்று இருந்தாலும்  எண்ணப்பகிர்வுகளை யாரும் விரும்புவதில்லை ஆனால் நானோ எல்லாவற்றிலும்   ஒரு படி முன்னதாகவே சிந்திப்பவன் 
நான்  நன் மாண்டபின்  என்னை எரிக்கவா புதைக்கவா  என்னும் கேள்வி வருமா வந்தாலும்  அவர்களென்ன செய்தாலும் எனக்குத் தெரியவா போகிறது எங்கள் பக்க வழக்கப்படி எரிப்பார்கள்  என்றே நினைக்கிறேன் எரித்த இடதில் ஏதாவது நினைவுச் சின்னம்  வைப்பார்களா  அடப் போடா உனக்கும்  இம்மாதிரி எண்ணங்களா  அதீதக் கற்பனைகளுக்கு எங்காவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தானே  நான்  இங்கே இப்போது வைக்கிறேன்  
(இந்த மதிரி கற்பனைகள் எனக்கு மட்டும்தானா என்னும் சந்தேகமிருக்கிறது)

இந்த பதிவுக்கும்  காணொளிக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை இது ஏன் என்றால் பதிவுகளில் வருபவற்றுக்கு சிலர் இல்லாத அர்த்தத்தை கற்பிப்பது  என் அனுபவத்தில் கண்டது  


       

Sunday, January 28, 2018

ஹைதராபாத்


                                                    ஹைதராபாத்
                                                     ---------------------
ஹைதராபாதுக்குப் பல முறை சென்று வந்திருக்கிறேன்  ஆனால் என்பதிவுகளில் அவை பற்றி இதுவரை எழுதவில்லை இப்போது எழுத உட்கார்ந்தால் எப்போதுபோன ட்ரிப் என்று புரிபடவில்லை ஆதலால் மொத்த அனுபவங்களையும்  நினைவுக்கு வந்தபடி எழுது கிறேன் 

ஹைதராபாத் என்றாலும் செகந்திராபாத் என்றாலும்  அதிக வித்தியாசங்கள் இல்லை ட்வின்  சிடிஸ்
இந்த ஹைதராபாதின் பின்னணிச் செய்திகள் பலரும்  நினைப்பதில்லைஇந்தியா சுதந்திரமடைந்தபோது இந்தியா பாகிஸ்தான்  என்று பிரிந்தது பலருக்குத் தெரியும் இந்தியாவில் இருந்தபல சமஸ்தானங்களுக்கு இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையும் சாய்ஸ் கொடுக்கப்பட்டதுகுட்டி குட்டி சமஸ்தானங்கள் மதவாரியாக இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்தன இவற்றில் ஹைதராபாத் ஹிந்துக்கள் அதிகமாக இருந்தும்  முஸ்லிம்  அரசால் ஆளப்பட்டு வந்தது ஜம்மு காஷ்மிர் இஸ்லாமியர் அதிகம் இருந்தும்   ஒருஹிந்து அரசால் ஆளப்பட்டு வந்ததுகாஷ்மீர ஹிந்து அரசர் இந்தியாவுடன் இணைந்தார் ஹைதராபாதரசர் நிஜாம் தனித்தியங்க விரும்பினார். ஆனால் இந்தியாவின்  நடுவே ஒரு முஸ்லிம்  அரசு இருப்பதை அன்றைய இந்திய அரசு விரும்பவில்லை  பேசிப்பார்த்து சரிவராத போது  இந்திய அரசுஒரு நடவடிக்கை எடுத்தது அதை போலிஸ் ஆக்‌ஷன் என்றார்கள் ஆனல் இந்தியப்படையே அதில் இருந்தது  நிஜாமின் படையில்  ரசாக்கியர்கள் என்று அறியப்பட்ட இஸ்லாமிய வீரர்கள் இருந்தனர் ஒரு சிறிய படையெடுப்பில் இந்தியா வென்று ஹைதராபாத் நிஜாம் தோல்வியைத் தழுவினார்  ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட உயிர்கள் பலகாலம் சொல்லப்படாமலேயே இருந்தது கிடைத்த தகவல்களின்படி  இருபது ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்று தெரிகிறது அப்போது இருந்த காஷ்மீர் பிரச்சனை இன்னமும் தீரவில்லை I am digressing  மீண்டும் ஹைதராபாதில் நான் என்னும்  தலைப்புக்கே வருகிறேன்
முதன்முதலில் நான் ஹைதராபாத் சென்றது என்பெரிய அண்ணாவைப் பார்க்க  அது ஆயிற்று ஏறத்தழ நாற்பது ஆண்டுகள் அப்போது அண்ணா லிபர்டிதியேட்டர் அருகே இருந்தார் எங்கள் அண்ணிதான்  எங்களுக்கு ஹைதராபாதைச்சுற்றிக் காட்டினார் அப்போது ஹைதராபாத் முத்துகளுக்கும் கார்நெட் கற்களுக்கும் பெயர் பெற்றிருந்தது முதலில் அங்குதான் முத்துகள் வாங்கினோம் பலருக்கும் முத்துகளாகவும்  மாலைகளாகவும் கொடுத்தோம் எனக்கு கடை கண்ணிகளுக்குப் போவதை விட அங்கிருக்கும்  முக்கிய இடங்களைக் காணவே விருப்பம்  ஆனால் என் மனைவி மற்றும் அண்ணி ஆகியோருக்கு அதில் அவ்வளவுநாட்டம் இல்லை
ஹைதராபாதில் உலகப்புகழ் பெற்ற சாலார் ஜங் ம்யூசியம்  உள்ளது  மூன்று மாடிக் கட்டிடம் என்று நினைவு எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கநேரம்  ஆகும்  இருந்தும்  என் மனைவி அண்ணி முதலானோர் ஒரு சுற்று சுற்றி பார்த்தோம்  பேர்வழி என்று வந்து விட்டார்கள் நானோ ஒவ்வொரு பொருளாக கண்டு ரசிக்க விரும்பினேன் கூட வந்தவர்களுக்கு விருப்பமில்லாவிட்டல் எதையும் பார்த்துர்சிக்கமுடியாதுஅங்கிருந்த ஒரு பளிங்கு சில என்னை மிகவும் கவர்ந்தது அது சிற்பக்கலையின் உச்சம் என்றே சொல்லலாம்  ஒரு பெண்முகத்தில் திரை அணிந்து இருப்பது போன்ற சிலை பளிங்கு கல்லின் கீழ் பெண்ணின் முகமும்திரைக்குக் கீழ் தெரியும்   மிகவும் ரசித்தேன் இன்னும்  எத்தனையோ பொருட்கள்நினைவில் இல்லை
ஹைதராபாத் என்றாலேயே நினைவுக்கு வருவது சார்மினார்தான்  நான்கு கோபுரங்கள் உள்ளடக்கிய மசூதியுடன் கூடியதுஅதனுள்ளே போய் பார்க்கவில்லை வெளியில் இருந்தே பார்த்ததுநம்மக்களுக்கு சார்மினார் என்றால்  வளைகள் கிடைக்குமிடம் என்பதே தெரிகிறது
ஹைதராபாதையும்  செகந்திராபாதையும் பிரிப்பது ஹுசெய்ன்  சாகர் ஏரியே இப்போ து ஏரி நடுவே ஒருபெரிய புத்தா சிலை வைக்கப்பட்டு இருக்கிறதாம் படகில் சென்று வரும் விதமாக இருக்கிறதாம் நாங்கள் பார்த்தபோது ஏரி நடுவே சிலைஇருக்கவில்லை
ஹைதராபாதிலிருந்து  சுமார் 20கிலோமீட்டர் தூரத்தில் கோல்கொண்டா கோட்டை இருக்கிறதுஅதுவே ஒரு காலத்தில் தலை நகராக இருந்ததாம்  கோட்டைக்கு போனபோது நாஙகள் கட்டுச் சோறுகொண்டுபோய் கோட்டையின் மேல் அமர்ந்து உண்டோம்  பழைய  புகைப்படம் இருக்கிறது அதை தேடிஎடுக்க வேண்டும்    கோல்கொண்டா கோட்டையின் மேல் தளத்தில் இருந்து சுற்றிலும் பார்க்க முடியும்  அந்தக் காலத்தில் எதிரிகள்வருவது தெரிந்தால் மேல் கொத்தளத்தில் இருந்து கை தட்டுவார்களாம்   அது கீழே கோட்டைகதவுகளை மூடுவதற்கான சமிக்ஞையாக இருக்குமாம்   நாங்கள் மேலிருந்து கை தட்டி அது கீழே கேட்பதை உறுதி செய்து கொண்டோம்  இன்னொரு விஷயம் என்னை ஆச்சரியப் படுத்தியது என்னவென்றால் நீரை மேலே கொண்டு செல்ல செய்திருந்த ஏற்பாடுகள் தான்  மெஷினரி ஏதுமில்லாமல் நீரை மேலேற்றும் செயல் தான்  அப்போதுஇது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமிருந்தாலும்  முடியவில்லை

ஹைதராபாதில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தயாதகிரி குட்ட என்னும் இடத்துக்கு எங்களை  அழைத்துப்  போனார் அண்ணி அங்கு கோவில் கொண்டிருப்பது லக்ஷ்மி நரசிம்மர்  ஒரு சிறிய மலை மேல் இருக்கிறது கோவில் அந்த பயணம்  மறக்க முடியாதது  ஏன் என்றால்  நாங்கள் மலையிலிருந்துஇறங்கும்போது எங்களது இருபக்கமும் வானரங்கள்கூடவெ வந்தன அவை எப்போது நம்மீது பாய்ந்து பிடுங்கும் என்னும் பயம் இருந்தது கூடவே வந்தபிச்சைக்கரரின் கோலை கையில் வாங்கி ஓரளவு  தைரியம் அடைந்து கீழே இறங்கினோம்
மற்றபடி ஹைதராபாதில் என்  மகன்களுக்கு ஜீன்ஸ் வாங்கினோம்  உடலில் தெம்பு இருந்த போது போய் வந்தது இப்போது நினைத்தாலும் முடியுமா தெரிய வில்லை  என் அண்ணாவின்  இரு மகள்களின்  திருமணத்துக்கும் சென்றிருக்கிறோம்   அவர்களது திரு மணங்களில்  அண்ணியின்  சகோதரர்கள் கூடி செய்தபல உதவிகள் எங்களை ஆச்சரியப்படுத்தும்
 இந்தப்பதிவைஎன் நினவுகளில்  இருந்தே எழுதுகிறேன்  மொத்தத்தில் ஹைதராபாத் அவசியம் பார்க்க வேண்டிய இடம்  போகிறவர்களுக்கு ஒரு சில டிப்ஸ் நேரம் பற்றி கவலைபடாமல் பார்க்க வேண்டிய  இடங்கள் நிறையவே உண்டு 

சார்மினார் 
         
சலார் ஜங் ம்யூசியத்தில்பளிங்கு சிலை 

( படங்கள் இணையத்தில் இருந்து )


         

Friday, January 26, 2018

நகைத்துச் செல்ல


                                    நகைத்துச் செல்ல
                                   -----------------------------

சென்றபதிவின்  பின்னூட்டத்தில்  அதிரா அவர்கள் என் நகைச்சுவை உணர்வு வெளிப்படுவதாகக் கூறி இருந்தார்  நானும் நகைச் சுவை உணர்வுடையவந்தான்  ஆனால் ஒரிஜினலாக சொல்லத்தெரியாது for that matter பலரும் பகிரத்தானே செய்கிறார் . அதுபோல் எனக்கு வந்த மின்னஞ்சல பகிர்வுகளில் சில இதோ

ஒருவன் ஒரு புதிய ரெஃப்ரிஜெரேடர் வாங்கினான். அவனுடைய பழைய ஃப்ரிட்ஜை வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்தில் வைத்து, “நல்ல நிலையில் உள்ளது. தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் என்று ஒரு அட்டையில் எழுதி அருகே தொங்க விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை. அடுத்த நாள்” ஃப்ரிட்ஜ் விற்பனைக்கு. நல்ல கண்டிஷன். விலை ரூ.200-/
என்று அட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ் திருட்டுப் போயிருந்தது.!
                             --------------------

ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவன் “அதோ ,அந்த செத்த பறவையைப் பார் “ என்று கத்தினான். அநேகமாக
 அனைவரும் வானத்தை நோக்கி “ எங்கே “ என்று கேட்டனர்.!
       
  குடி போக ஒரு வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். வீட்டு ப்ரோக்கரிடம்  வடக்கு திசை எது ?காலையில் எழுந்திருக்கும்போது சூரியக்கதிர் முகத்தில் அடிக்காமல் இருக்க வேண்டும் “ என்றான்.சற்று நேரம் கழிந்து அவன் மனைவி “ சூரியன் வடக்கில் உதிக்கிறதா “ என்று கேட்டாள். சூரியன் கிழக்கில்தான் உதித்துக் கொண்டிருக்கிறது “என்று பதில் சொன்னான் நண்பன். இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை நான் கண்டு கொள்வதில்லை “ என்று கூறினாள் நண்பனின் மனைவி.!

இக்கட்டான நிலையில் காரில் அகப்பட்டுக் கொண்டால் இருக்கை பெல்டை அறுத்து விடுவிக்கும் கருவி ஒன்று என் சகோதரியின் காரில் உள்ளது. அவள் அதை பத்திரமாக காரில் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாள்,!
                                                                         --------------------------------------------------------
         
விமானம் இறங்கி வெளியே வரும்போது என் லக்கெஜ் கன்வேயரில் வரவில்லைLOST LUGGAGE ஆஃபிஸுக்குச் சென்று புகார் கொடுத்தேன். அங்கிருந்த பெண்மணி ஆறுதலாகசரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள். நீங்கள் வரவேண்டிய விமானம் வந்துவிட்டதா?”  என்று கேட்டாளே பார்க்கலாம்.!
                                                       ---------------------
ஒரு PIZZA பார்லரில் பணியில் இருந்தபோது ஒருவர் தனியாக வந்து ஒரு PIZZA  ஆர்டர் செய்தார்.கடை சிப்பந்தி அதை நான்கு துண்டுகளாக நறுக்கவா இல்லை ஆறு துண்டுகளாக நறுக்கவா என்று கேட்டார். வந்தவர் சற்று யோசித்து ” நான்கு துண்டுகளாகவே நறுக்குங்கள். ஆறு துண்டுகளும் சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசி இல்லை” என்றார்.!

இது நான்சி பெலோசி என்னும் பிரபலம் பற்றிய உண்மைக் கதை என்று சொல்லப் படுகிறது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேச ஒரு பிரபல மனநிலை மருத்துவர் வந்திருந்தார். அவரிடம் நான்சிசாதாரணமாய்த் தெரியும் ஒருவர் மன நிலை பாதிக்கப் பட்டவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் ?” என்று கேட்டாராம். ” ஒரு சுலபமான கேள்வி கேட்போம். அவர் கூறும் பதிலில் அவரைப் பற்றித் தெரிந்துவிடும்என்றார்.
என்ன மாதிரியான கேள்வி.?”
காப்டன் குக் மூன்று முறை உலகை சுற்றி வலம் வந்தார். அதில் ஒரு முறை அவர் உயிர் விட்டார் எந்த முறை.?”
” வேறு மாதிரியான கேள்வி கேட்க மாட்டீர்களா. நான் சரித்திரத்தில் கொஞ்சம் வீக்
என்று கூறினாராம் நான்சி பலோசி.!
                                              -------------------------------
ஒருவன் காரில் ட்ரைவ் செய்து கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ட்ராஃப்ஃபிக் கேமரா மின்னியது. அதிக வேகத்துக்காக இருக்கும் என்று எண்ணிய அவன் சற்றுக் குறைந்த வேகத்துடன் அதே இடத்தை மறுபடியும் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. இன்னும் குறைந்த வேகத்தில் மூன்றாம் முறை யும் சென்றான். அப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. குழப்பமாகி நத்தை வேகத்தில் நான்காம் முறை அந்த இடத்தைக் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. ஐந்தாம் முறை சிரித்துக் கொண்டே மெதுவாக அவன் அந்த இடத்தைக் கடந்து சென்றான். இரண்டு வாரம் கழிந்து அவனுக்கு சீட் பெல்ட் போடாமல்  ஐந்து முறை வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்ட நோட்டிஸ் வந்திருந்தது
 (எனக்கு வந்திருந்த மின் அஞ்சலில் இருந்து தமிழாக்கம் செய்தது) 

        


Tuesday, January 23, 2018

எழுதாவிட்டால் என்னதான் நடக்கும்                    எழுதாவிட்டால்  என்னதான்  நடக்கும் 
                  --------------------------------------------------------------

மூன்று நாட்கள் வலைப்  பக்கமே வர முடியவில்லை  உள்ளூரில் இருக்கும் உறவுகளுக்கு  நாங்கள் அவர்களை சந்திக்க செல்வதில்லை என்னும்  ஆதங்கம்  ஒரு முறை வெளியே போகும் போது கூடியவரை  பல செயல்களையும்  க்ளப் செய்வது  வழக்கம்  மனைவிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார் அதற்கு இரண்டு முறை செல்ல வேண்டும்  காலி வயிறுடனும்   உணவு உட்கொண்டபின்னும்  பரிசோதனைக் கூடம்  வீட்டிலிருந்து சுமார் 25 கி மீ தூரம்   அங்கு செய்தால் செலவை பிஎச் இ எல் ஏற்கும் மனைவியின்  அக்கா வீட்டுக்குச் சென்றோம்   மதிய உணவு அங்கே மாலை வேலை முடித்து வரும் மகன் பிக் அப் செய்வான் மனைவியின் அக்கா  வீட்டில் ஹோம்  தியேட்டர் இருக்கிறது எல்லாமே இன்றைய சூழலுக்கு ஏற்ப அப் டு டேட்  பாடல்கள் பல கேட்டோம்  கர்நாடக சங்கீதம்   மேற்கத்ட்க்ஹிய இசையுடன்   மனைவியின்  அக்கா பையனுக்குப் பிடித்தது ப்யூரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் ஆனால் சங்கீத வாத்திய இசை துல்லியம்   இது குறித்து வலையில் கருத்துகள் இருந்தன எனக்கு திரையிசைப் பாடல்களில்  கர்நாடக இசையின்   சாயல் இருந்தால் ரசிப்பேன்  ஒரு மாற்றத்துக்கு நான்  ரசிக்கும் பாடல்
பாலமுரளி கிருஷ்ணா சுசீலா குரலில்  தங்கரதம் வந்தது

pஎன்ன எழுதுவது என்னும் சங்கட மிருந்தது எதை வேண்டுமானாலும் எழுதலாம்  என்றபடி பின்னூட்டங்கள் இருந்தன  ஒரு வேளை நான்  எழுதாவிட்டால் என்ன நடக்கும்   ஒரு சின்ன கற்பனை
 ஜீஎம்பி எழுதுவதில்லை  என்னும் செய்தி கேட்டவுடன்
செய்தி  வீட்டுப்பரண்மேல் ஏறியது  மனைவியும் குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் வீழ்ந்தனர் தொழுவத்தில் பசுவும் கன்றும்  கயிறு அறுத்து ஓடியது  காசியில் கங்கை  கலங்கி ஓடியது ஒரு காசின் பரப்பு வானம் ஓட்டையாகிற்று காரணம்  தெரியாமல் வலைஞர்கள் திடுக்கிடுகின்றனர் மெல்ல மெல்ல காரணம் புரியத்தொடங்க  ஜீஎம்பி வீட்டின் முன்   வலைப்[ பதிவர் கூட்டம்  தாள் வில்லை எழுதுங்கள் எழுதுங்கள் என்னும்  கோஷம் எங்கும் சட்டென்று ஒரு அடி விழ விழித்துப் பார்த்தால்  மனைவி என்னாச்சு என்னாச்சு என்று கேட்கிறாள்  கண்டது கனவில் வந்த நிமித்தங்கள் என்றதும்  சப்பென்று போயிற்று

எதை எழுதுவது என்று நினைத்தவன் இதையே எழுதத் துணிந்தேன்
என் மச்சினி வீட்டுக்குப் போனபோது அங்கு வைக்கப் பட்டு இருந்த விநாயகர் ஓவியம் என்னை ஈர்த்தது ஏன் என்றால் அது நான்  வரைந்து சகலைக்குக் கொடுத்தது இப்போது அவர் வீட்டில் அவர் இல்லை ஆனால் நான்  வரைந்த ஓவியம்  இருக்கிறது 
நான் வரைந்த ஓவியம் மேலே 

என் மனைவிக்கு இந்த ஆண்டு ஒரு காலண்டர் பரிசாக வந்தது  அதில் என்ன விசேஷம்  இது மத்ரையில் இருந்து கொண்டுவரப்பட்டு என் மனைவிக்கு  பரிசாகக் கொடுக்கப் பட்டது  அதைப் பார்த்ததும் என்கைகள் துறு துறுக்கத் தொடங்கியது அதில் இருந்த ஓவியங்களை தீட்ட வேண்டும் போல் இருந்தது ஒவ்வொரு பக்கமும்  மதுரைக் க்லோவில் மூர்த்திகள் அத்தனைஅழகு  அதில் ஏதாவது ஒன்றையாவது கண்ணாடி ஓவிய மாக்க வேண்டும் போல் ருக்கிறதுஆனால் இப்போதெல்லாம் ஓவியம்தீட்ட  கையும் கண்களும்  ஒத்த்ழைப்பதில்லைஇருந்தாலும்  முயற்சி செய்யலாம்  என்றிருக்கிறேன் 
எத்தனை காலண்டர்கள் வந்தாலும்   தேதி கிழிக்கும்படியான காலண்டர் வந்தால்தான் திருப்தி              

         

Friday, January 19, 2018

ஒரு சுய மதிப்பீடு


                                   ஒரு சுய மதிப்பீடு
                                   ---------------------------

 நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்  இருந்தாலும்  என் எழுத்துபற்றிய கணிப்பு இது
  
என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது என்ற நிலையில் நான் சென்ற வீட்டில் உறவினர் ஒருவருக்கு தமிழ் எழுதப் படிக்கத்தெரியும் என்று அறிந்தபோது  மகிழ்வுடன் நான் வலையில்தமிழில் பதிவிடுகிறேன் என்றும்  நான் சாதாரணன் ராமாயணம்  என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் என்றும் கூறி  படித்துப்பார்க்கச் சொன்னேன் ”ஒரே வாக்கியத்தில் ராமாயணமா எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றார் அப்போதுதான்  எனக்கு ஒரு உண்மை  உறைத்தது  நான்  எழுதியது  எனக்கு நினைவிருக்கவில்லை  வீட்டிற்கு வந்து படித்துப்பார்த்தேன்  அது எனக்கேஒரு பெருமித உணர்வைக் கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப்பட்டு சில நாட்கள்  அதற்காக மெனக்கெட்டு எழுதியதுஇப்போதும் அது மாதிரி எழுத முடியுமா  என்பது சந்தேகமே அப்போதுதான்விளங்கியது .என் நண்பன் ஒருவன்  என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு இதை எல்லாம்  நீ எழுதினாயா இல்லை உன்னுள் இருந்து ஏதாவது குறளி  எழுத வைக்கிறதா  என்றுகேட்டது.   சில பதிவுகளைப் படிக்கும் போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது உண்டு
 
சாதாரணன் ராமாயணத்தைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் அதை நான்  எழுதியது  என்பதை நம்பவில்லை
தங்களால் எப்பொழுதும் இப்படி எழுதமுடியுமாவென்று எனக்கு ஐயம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மையறியாமல், நம்பமுடியாத காரியங்களை முடித்திருப்போம். செயல் முடிந்த பிறகே இதனை நாம்தான் முடித்தோமா என்று ஐயம் ஏற்படும். அத்தகைய தருணமொன்றில் எழுதப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையாக தங்களுக்கு மொழியில் நல்ல புலமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒரே வரியில் இராமாயணத்தைக் கவிதையாக கூறுவதென்பது சாமானியர்களால் சாத்தியான செயல் கிடையாது. ஏதோ ஒரு காலத்தில் நான் கல்வி மாவட்டம் அளவில் மூன்று முறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது. ஒரே ஒரு வார்த்தையில் சிறிது சந்தேகம் உள்ளது.
சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து” 
இதில்வில்லைமுறித்துஎன்று வரவேண்டுமென்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை  சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன் 
 
.
இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப் போல் எழுத முடியுமா என்றும்  தோன்றுகிறது
.
 இன்னொரு நண்பர் என் எழுத்துகளைப் படித்து விட்டு முன்பு இருந்த ஃப்லோ இப்போது இல்லை என்றார் அதுவும் சரிஎன்றேநினைக்கிறேன் 

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்  என் பலபதிவுகள் தலைப்புகளில் இருக்கும்  முக்கியமாக மக்களின்  ஏற்ற தாழ்வு பற்றிய சிந்தனைகள் அவற்றுக்கான  காரணங்களைக் காண முயல்வதுமாக இருக்கும்  இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது  தேடுதலாக வெளிப்படும்    

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்  வாய்ப்பு இருக்கிறது  எதையும் எதிர் மறையாகச் சிந்திக்கும்  பலரைப்பார்க்கிறேன்  என்னைப் பொறுத்தவரை  நம்வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது   ஆனால் எதிர்பார்ப்புகள்  அதிகமாக  இருக்கும் போது அளவீடு எதிர்மறையாக இருக்கிறது

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர் அதிலிருந்து மாறுபட்டுஇருக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்  எது எப்படி இருந்தாலும்  கருத்துகளும்   வேறுபாடுகளும் உணர்த்தப்பட்டால்தான்  தேரிய வருகிறது வலையில் அதற்கு நிறையவே  வாய்ப்பு இருக்கிறது நல்ல கலந்தெழுத்தாடல்கள்  வலையில் அருகியே இருக்கின்றன
  
கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான்  மேலும் நான் எழுதும்போது அந்தக் கருத்து என்  உள்ளத்தைப் பிரதி பலிப்பதாக இருப்பது  ஆச்சரியம் இல்லை  குறிப்பாக கதைகள் எழுதும்போது நிகழ்வுகளைச்சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துகளும் ஊடுருவி நிற்கும் அதைத் தெரியப்படுத்தவே கதை கட்டுரை என்று நினைப்பவன் நான் ஏதாவது ஒரு கருத்துபற்றி  எழுத  வேண்டும்  என்ற உந்துதல் இருந்தால்தான் எழுதவே வருவேன் நான். பிறகு வந்து விழும்  எழுத்துகளும் கருத்துகளும்  உள்ளத்தில் இருந்து வருவதே  இப்போது நானெழுதுவதும்  ஒரு உந்துதலால்  நிகழ்வதே எல்லோருடைய உள்ளங்களிலும்  சிலகருத்துகள் இருக்கலாம் மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம்   இது இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம்   வரலாம் ஆனால் என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள் தானே      

எனது வாழ்வின்விளிம்பில் என்னும்சிறு கதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்டேன்  அதற்கு அணிந்துரை அளித்த தஞ்சை கவிராயர்  இவை எந்தப் பத்திரிக்கையிலும்  பிரசுரமானவை அல்ல  ஆகக் கூடியவையும் அல்ல என்று எழுதி இருந்தார் பத்திரிக்கை கதைக்கான  இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் தற்கால கதைகளைப் பற்றி சொல்வதற்கு வருத்தமாகத்தானிருக்கிறதுஒன்றும் பிரயோசனமில்லை அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான்  செய்கின்றன ஜீஎம்பி இந்த இரண்டுபிரிவிலும் அடங்காதவர் எழுத்தாளர் ஆக வேண்டும்  என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிது மின்றி தன்  எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் வாசகர்களின்  சுவாரசியத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை

இதை உயர்வு நவிற்சியாக  எடுத்துக் கொள்ளவா கூடாதா என்பது இன்னும் எனக்கு விளங்க வில்லை   

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவதுகுறளி  எழுத வைக்கிறதா   தெரியவில்லை  ஆனால் ஒன்று எனக்கு எழுதுவதற்கு  நிறையவே இருக்கிறது  அதைப் புரிந்து படிப்பதற்கு  வாசகர்களும்  இருப்பார்கள்  என்ற நம்பிக்கையுமிருக்கிறது  பதிவுநீளமானால்  படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும்தெரிகிறது  

.


.