Tuesday, September 28, 2010

ANUBAVI RAJA ANUBAVI-----------A SHORT STORY.

அனுபவி   ராஜா  அனுபவி --------- ஒரு சிறு  கதை

          "என்னடி  அம்மா இது ! இந்த  போஸ்ட்மேனை  இன்னும் காணலை. இவனும்  இவன் கொண்டுவந்து  கொடுக்கும்  பிச்சைக்காசும் ....எல்லாம்  சவம்டியோ ....."அவனைப்பார்த்ததும்  இந்த  டயலாக்தான்  சுந்தாவுக்கு  நினைவுக்கு  வந்தது .மேலத்தெருவில்  பக்கத்து வீட்டில்  இருந்த லட்சுமியம்மாளின்  மகனல்லவா  இது ? சதாசிவம்  என்ற பெயரை  வைத்துக்கொண்டு  சதா  எல்லோரையும்  சவமாகத்திட்டுவானே ---- ஒ  ! எத்தனை வருஷங்களாச்சு  இவனைப்பார்த்து .ஐம்பது  ஆண்டுகளுக்கு  மேலாகி  இருக்கும்.." சதா... சதா.. " என்று சற்று  உரக்கவே  கூப்பிட்டான்  சுந்தா.
        "எந்த சவம்டா  என்னை  சதான்னு கூப்பிடறது ?" என்று சற்று  உரக்கவே  கூறி திரும்பியவனைப  பார்த்ததும்  சுந்தாவுக்கு அவன்தான்  என்று நிச்சயமாகத  தெரித்தது .
        " ஐயாம்  ஸாரி..... நான்தான்  மேலத்தெருவில் ...உங்க  பக்கத்து வீட்டு ...."
        "சுந்தா ...!  அடடா ..! நீயா    அடையாளமே   தெரியலியே ..."
         பின்னே ... ஐம்பது  வருஷம்னா   சும்மாவா ..வாயேன் வீட்டுக்கு  பக்கத்திலேதான்  இருக்கு ..நிறையப்  பேசலாம் "
         "ஹூம் , என்னத்தப் பேசப் போறோம் , சரி வா ,"  என்று சற்றே  சலிப்புடன்  கூறிய
 சதாசிவம்  கொஞ்சமும்  மாறவில்லையோ  என்று தோன்றியது  சுந்தாவுக்கு
         மாசத்தின்   முதல் நாளே போஸ்ட்மேனின்  வரவை  எதிர் பார்க்க  ஆரம்பித்து  விடுவார்கள்  லட்சுமி  அம்மாளும்  பிள்ளைகளும் . அன்றைக்கு  இல்லாவிட்டால்  மறு  நாளாவது  கட்டாயமாக மணியார்டர்  வர வேண்டும் . கடன்காரர்களுக்கு  எவ்வளவு  நாள்  வாய்தா  சொல்ல முடியும் . கடன்  வாங்காமல்  இருக்கலாம்  என்றால்  முடியவா செய்யும் ? அந்த மட்டிலாவது  குடும்பம்  ஓடியது  அவர்கள்  வீட்டு  மூத்த பிள்ளை  கிச்சா
அனுப்பும்  ரூபாய்  நூறால்தான்..வீட்டிற்குப போகும்  வழியில்  பழைய  எண்ணங்களில் நினைவோடியது .
         "என்ன ஒரு சவமடி --மாத்திக்கட்ட  நல்ல வேஷ்டியும்  ஷர்ட்டும்  இல்லாம---சே ! நான் ஒரு நல்ல ஸ்திதிக்கு  வந்து  ஒரு  டஜன்  வேஷ்டி  ஒரு டஜன் ஷர்ட்  ஒரு டஜன் பேன்ட்  எல்லாம் வாங்கி  ஆசை தீரப  போட்டுக்கணும் ...இஷ்டப்படி  சாப்பிட வேண்டும் ..வாழ்க்கையை  நன்னா  அனுபவிக்கணும் ".
         சதாசிவம்  இப்போது  சுமாராக  உடுத்தியிருந்தான் . பார்த்தால் ஓஹோ  என்ற நிலைக்கு  வந்த மாதிரித  தெரியவில்லை .
         வீட்டிற்கு  வந்ததும் , "கமலா, இது சதாசிவம் . கிராமத்தில்  எங்கள்  வீட்டுக்கு  அடுத்த  வீடு . ஐம்பது  வருஷங்களுக்குப  பிறகு  பார்க்கிறோம் .நல்ல காப்பி  போட்டுக்கொண்டுவா ", என்று கூறி மனைவிக்கு  அறிமுகப்படுத்தினான் .
       " சொல்லு  சதா .உன்னைப் பார்த்ததும்  அந்தக் கால நினைவுகள்  வந்து தாக்குகிறது .வீட்டில் எல்லோரும் சவுக்கியமா ....குழந்தை  குட்டிகள் ....."
       "நிறுத்து .. நிறுத்து ..நானே  சொல்கிறேன் . எனக்கு  வேலை  கிடைத்த  கையோடு அம்மா  போய்ச் சேர்ந்து விடடாள். என்னோட  துரதிர்ஷ்டம்   நான்  நன்னா இருக்கிறதப்  பார்க்க  அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ,. என்ன  இருந்து  என்ன பயன் ? வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேணும் "
        சதா பேசப்பேச  அவனுடைய  அடிப்படைப் பிரச்சினை -- எதிலும்  ஒரு விரக்தி ...கொஞ்சம்   கூட  மாறாமல்  இருந்தது சுந்தாவுக்கு  ஆச்சரியமாக  இருந்தது.  இதற்கு  என்ன காரணம்  என்று அறியும்  ஆவலும் அதிகமாயிற்று .
       " என்ன சதா  சலிச்சுகறே....வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ! பெரியவனாகி  சம்பாதிக்கும்போது  அப்படி  இருப்பேன்  இப்படி  இருப்பேன்  என்றெல்லாம்  சொல்லுவாயே "
       "இல்லை சுந்தா . அது ஒரு கதை . நான் ஏன்  இப்படி  இருக்கிறேன்  என்று எனக்கே  புரியாத  சவம் ..டா ."
       சுந்தா  அவனே மேலும் சொல்லட்டும்  என்று மௌனமாக  இருக்க சதாசிவம்  தொடர்ந்தான்
       " பார் ,  எனக்கு வேலை  கிடைத்ததா ---வாழ்க்கையில்  முன்னேறணும்னு  அப்படி  ஒரு  வெறி .கண்  மண்  தெரியாமல்  உழைத்தேன் . சப்பாதிக்கும்போது  சரியாக  சாப்பிடாமல் , தூங்காமல்  வேலையே கதி என்றிருந்தேன் .அதற்கு நல்ல பலனும் கிடைத்தது .நான் இப்போது  ஒரு நல்ல நிலையில்  ஒரு கம்பெனியின் மேனேஜராக  வேலை  பார்க்கிறேன் .
         சதாசிவம் ஒரு கம்பனியின்  மேனேஜரா ? நம்பவே முடியவில்லை சுந்தாவுக்கு . ஒட்டிய கன்னமும்  கூன் விழுந்த  முதுகும இடுங்கிய கண்களும்  பஞ்சத்தில்  பரிதவிப்பவன்  போலல்லவா  இருக்கிறான் . உடை விஷயத்திலும்  வெகு  சுமாராகத்தான் இருக்கிறான்
          ஒரு கம்பனியின்  மேனேஜர் என்கிறாய் . பார்த்தால் ....."என்று சுந்தா சந்தேகம்  தெரிவிக்க ,
       "அதுதான்  சொன்னேனே   ,வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேண்டும் என்று "
       " அது  உனக்கு இல்லையா   ஏன்?
       "சுந்தா , கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமா ,  நமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் . அதுவுமில்லாமல்  யாராவது
நல்ல முறையில்  உடுத்தினாலோ  நன்றாக சாப்பிட்டாலோ எனக்கு என்னையும் அறியாமல்  அவர்கள் மேல் கோபம்  வருகிறது. கஷ்டப்பட்டிருந்தால்தானே  சுகத்தின்  அருமை  தெரியும் . இவர்கள் எல்லாம் கஷ்டப்படாமலேயே  அனுபவிக்கிறார்கள்  என்று பொறாமையாகக்கூட  இருக்கும் . எனக்கே இது அவ்வளவு  சரியில்லையோ  என்று கூடத்தோன்றும் . இருந்தாலும் வாழ்க்கையை  அனுபவிக்க   சவம் - மனசு  வர
மாட்டேன்  என்கிறது "
         சதாசிவம் சொல்லச்சொல்ல  சுந்தாவுக்கு  நினைத்துப்  பார்க்கவும்  முடியாத  ஒரு கோணம்  வாழ்க்கையில்  இருப்பதும் தெரிந்தது . ஆனால்   இப்படியுமா ?
                                                   ----------------------------------------------






    



























Monday, September 27, 2010

NAMBIKKAIGAL

                                                              நம்பிக்கைகள்
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.                            

Sunday, September 26, 2010

TAMIZHMANATHIL KARUVIPATTAI - INAIPPU

அப்பாடா!!  ஒரு வழியாக கடைசியில் தம்ழ்மணம்  கருவிப்பட்டையை என்னுடைய வலைப்பூவில் இணைக்க முடிந்தது என்று நம்புகிறேன்.என்னைப்போல் கணினி அறிவு மிகக் குறைந்தவர்கள் இதை செய்து முடிப்பது மிகவும் கடினம்.கருவிப்பட்டையை இணைப்பதற்கான வழிமுறைகளை இன்னும் எளிதாக்கி ஒரு சொடுக்கு மூலம் பெற முடிவதாயிருந்தால் மிகவும் நலமாக இருக்கும்.தமிழ்மணத்தில் உள்ள கணினி வல்லுனர்கள் ஆவன செய்வார்கள் என்று நம்பிகிறேன்.இதற்கிடையில் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் பேரன்  விபு மற்றும் செல்வி நாகரீதா திரு. ரமேஷ் திரு. அஜய் ஆகியோருக்கு என்  மனமார்ந்த நன்றி

Tuesday, September 21, 2010

PORATTANGAL ------ ORU KANNOTTAM

         
                               போராட்டங்கள்      ----    ஒரு   கண்ணோட்டம்
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது , தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ  எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய  போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம். இப்போது  அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் . போராட்டம் என்றாலே  ஏதோ   மனக்கசப்பை ,  திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
                     வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க  இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் , ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  
நிலையை விட   தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .   
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன .
                    " நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே  வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற  வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்   முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்   கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது . பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில்  பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
                 இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய  பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்  இருப்பவன் முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
                ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில்  உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு   இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும்  இருப்பது சமூக  நிலையா  ?
                காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப்  பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்   வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள்  வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள்
               தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் , எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம்
அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம்  இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும் .
             சாதி  அடிப்படையில்  ஒதுக்கீடு  கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான்  தோன்றுகிறது .
             கல்வியறிவும்   வாழ்க்கையின்  தரமும்  உயரும்போது சாதிகள் தானாகவே  மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன்  மேலும் மேலும் அதே அடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு  ஒதுங்கி வழி விட வேண்டும் .ஆனால் நடை முறையோ வேறு விதமாக உள்ளது .
             வாழ்க்கைச் சக்கரம்  உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி  காலத்தில் சமூகத்தை  நான்கு  வர்ணங்களாகப் பிரித்து  அவரவர்களுக்கு  இன்ன  வேலை என்று
பகுத்தளிக்கப்பட்டு  இருதது.----- க்ஷத்ரியர்கள்  பிராமணர்கள்  வைசியர்கள்  சூத்திரர்கள் ---மனித குணம்  எப்போதுமே மற்றவனை  அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில்  க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும்   சக்தி  உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும்  இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள் ( மதகுருக்கள் ) அரசர்களுக்கே  அறிவுரை சொல்லி அதன் மூலம் மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் . பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS)
கை  ஓங்கி எல்லா சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள் , இன்னும்  வாழ்ந்துகொண்டும்  இருக்கிறார்கள் .வாழ்க்கையின்  சுழற்சியில்  எஞ்சி நிற்பவன் சூத்திரனே ..அவனுக்குள்ள  வாய்ப்பும் கிடைக்கத்தானே  வேண்டும் ! ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்  சாதியின் அடிப்படையில்  மட்டுமல்ல  வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில்  அவர்கள் மேலே வரும்  காலம்தான்  நிகழப்போவது ,
               போராட்டங்களின்  முடிவு  ஒரு நல்ல தீர்வுக்கு  மக்களை  கொண்டுபோகுமானால்  அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள்  எதற்கு  போராடுகிறோம்   யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து    மந்தை குணம் நீக்கி   சிந்திக்க  தொடங்குவார்கள்  என்று நம்புவோம் .
                                              ------------------------------------------ --------------             





















 

Friday, September 17, 2010

YAARUM SERUKKOZHIYARGA

                            யாரும்      செருக்கொழியர்க 
வெண்ணிற  மேனியாள்  எனக்கு
       மிளிரும்  நீலவானம்   சரிதுகில்
பன்நிறம்  தெரியப   பதித்த  மணிகள்
       மின்னும்    தாரகை   நல்லணிகலன்
எனக்கு   நிகர்   யாரே    இப்புவிமீதே   எனவே
       உன்னாது  இயம்பும்   மதியும் --கிளியே
                            கறை   துடைத்த   மதி  வதனம்   அவள்  மேனிக்கணியும்
                             பட்டோ   மற்றோ   பொலிவுறும்  பேருண்மை ---ஆங்கு
                             இதழிலோடும்   புன்னகையும்   நன்னகையாம்
                             வண்டென    விரைந்தாடும்   மலர்  விழிகளும்
                             கண்டதும்   கவி  பாடத்தூண்டும் ---என்
                             காதல்   ஜோதி  ! கன்னல்  மொழியினள்---அவள்
                             காண்பார்   கண்   கூசும்   பேரெழில் ---கண்டும்
                             செருக்கொழிந்தாளிலை -- ஏன்  ?
சிந்தை    கவர்ந்த   என்  பூங்கொடியாள்  தன
நடை  குரல்  அதரம்  கண்டும் -ஈண்டு
தோகை    மயிலின்  களிநடம்   குறைந்திலை
கானக்குயிலின்  இன்னிசை  குறைந்திலை
கொவ்வைக்கனியதன்    செம்மையும்   குறைந்திலை --ஏன் ?
                              கட்டழகன்   எந்தன்   கொட்டமடக்க
                               வட்டமிடும்   கழுகன்ன   சுற்றி  வரும்
                              நான்முகன்    திட்டமெல்லாம்    தரை  மட்டம்
                              இயற்கையின்   படைப்பினில்   எனதவள்  சிறந்தவள்
                               கண்கூடு    தேவையில்லை   அத்தாட்சி   இதற்கு  !
                               யாரும்   செருக்கொழியர்க --  யானும்  ஒழிகிலேனே  .





    

Sunday, September 12, 2010

MARATHY POTRUVOM

                                                       மறதி       போற்றுவோம்                                                               
      அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்         
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள் 
       அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
       ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
        பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
        மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
        அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
        மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
        மூக்கறுந்த  பெண்ணும்   ஈ   மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
        என்ன செய்வது   , எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
       " ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
        வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
        காட்டுவோம்    உலகிற்கு
நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
        காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
         வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
        காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
        மறதி     போற்றுவோம்   !

Thursday, September 9, 2010

comment on thiru. chithranswriting on smoking

     திரு .சித்ரனின்  வலைப்பதிவுகளைப்  பார்த்துக்கொண்டிருந்தேன் . சிகரெட்  புகைப்பது  பற்றி  அவர்  எழுதியதைப் படித்தபோது  எனக்கு ஒரு சம்பவம்  நினைவுக்கு வந்தது .கோவாவில்  ஒரு நாள் நான்  ஒரு ஹோட்டல் லௌஞ்சில் புகை பிடித்துக்கொண்டிருந்தேன் . ஒரு பெரியவர்  நான் புகைப்பதை  சற்று நிறுத்த முடியுமா  என்று   கேட்டுக்கொண்டார் , நான் மன்னிப்பு  கேட்டு  சிகரெட்டை  அணைத்து. விட்டேன் அவர் யாரிடமும் சிகரெட் புகைக்கவேண்டாம்  என்று அறிவுரை  கூறுவது  இல்லை என்றார் . அதற்கு ஒரு கதையும்  சொன்னார் . ஒரு முறை அவர் ரயிலில்  பயணம்  செய்து கொண்டிருந்தபோது  ஒரு வாலிபன்  விடாமல் புகைத்துக்கொண்டிருப்பதை  பார்த்துக்கேட்டாராம் , ஒரு நாளில்  எவ்வளவு சிகரெட்  புகைக்கிறார்  என்று.. அவன் சுமார்   15  முதல்  20 வரை  இருக்கும் என்றானாம் . சிகரெட்டின்  விலையை  கேட்டு  அவர்  ஒரு நாளைக்கு சுமார் ரூ .50/-வரை செலவு செய்பவர் ஒரு மாதத்துக்கு ரூ 1500/- வீதம் வருடத்துக்கு ரூ 18000/- என்றும்  பத்து வருடங்களில்  அது சுமார் 18 லட்சம்  ஆகுமென்றும்  அதனை  சேர்த்து வைத்தால்  ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம்  என்றும் அறிவுரை கூறினாராம் . சற்று  நேரம்  ஒன்றுமே  பேசாமல்  இருந்த  அந்த வாலிபன்  பெரியவரிடம்  அவர் எவ்வளவு  வீடு கட்டியிருக்கிறார்  என்று கேட்டானாம் .தினப்படி  காலம் தள்ளுவதே  கடினமாக இருக்கும்போது  வீடு எங்கே  கட்டுவது  என்று பெரியவர்  கூறினாராம் . அதற்கு  அந்த வாலிபன்  தான் மூன்று வீடுகள்  கட்டியிருப்பதாக  சொன்னானாம .
              அதன் பிறகு பெரியவர்  யாரிடமும்  சிகரெட் புகைப்பது பற்றி  அறிவுரை  கூறுவதை  நிறுத்திவிட்டாராம் .










Monday, September 6, 2010

NAANUM NEEYUM.

            எந்தன்    உயிருக்குயிர்     நீயே
                 நாடும்    அன்பு     நானோ
            என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
                 கருத்தின்  ஒளியும்  நானோ
             நற்பண்பின்    சுவை    நீயே ---உன்
                 பாவின்   நயமும்   நானோ
             என்    எண்ணின்   பொருள்   நீயே
                  உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !
                               --------------------------

Sunday, September 5, 2010

RANDOM THOUGHTS IN EIGHT HOURS ( contd )

           Smoking has taken too much of a time. So what? We were not only smoking. Come on engage the tracer(tut-a-tut).and there goes you second part. By the by  how many should be completed in this shift? Seven. Oh! that is all!
           Think about smoking. Why should you? You think you are educated, know yourself, and boast that you can think rationally, but still what you do? You read the statutory warning, " smoking is injurious to health" and still without a thought, you pull out and puff. Puff to death? Oh! no! Do all the people who smoke die of that? But why do you want to smoke? Are you addicted? No! Then why dont you stop that habit? Oh, the little pleasure and a small tickle on the nerves,-  should you forgo that? After all one day you have to kick your bucket and why forgo small pleasures. Oh! how incorrigible. Who can correct such people? It is not only for you that you live. You have some people behind you , depend on you. Oh! come on ,no excuse..You dont have the will to stop smoking. Who said that? I shall stop smoking right from now and that is a challenge .You can go on thinking and challenging and
 your  job is completed.            
                 Seeing whether the job is completed is the only mental work. The rest are mechanical.Remove the part , clean the fixture, load again, engage the tracer( tut-a-tut) that is it. All mechanical and rather monotonous. The other day  some one was telling, that is not monotonous .Jobs in general electrics or ford motors in USA there it is.. Monotony is not in the job you do.. The environments and the hopeless routine work you do make you disgusted.
No one seems to understand and hence no use complaining also. People who work have to continue working and those who dont will be rewarded in order to make them work! What an ironic situation! Once you have put on the act of a dog ,you have to bark, and bark you well. That is all. The job is over.
           Panch shila was propagated at the Bandung conference. That is a different panchshila fromthe one learnt by us. .Punch in , coffee break , lunch break, tea break, and punch out. Real panch shila practiced in letter and spirit .With all the breaks etc the job should be completed,Ok?
           Here comes the boss. Is he going to ask any question ? No! He expects a salute. Yes ! Does he deserve it?
 Respect and regards can not be just bought. They are to be given and taken. Just  because he is the boss , does he deserve a salute? Oh ! come, wish him and be done with it. Are there any points on which you  never question? And dont  start justifying every action of yours.  Coming to think of,   how many bosses are there? Too many of them endlessly trying to find out  reasons  why production is not picking up .Too many of them doing the same  functions and always only the other man is at fault..
          Really why production is not picking up.No cash flow no raw materials et al are the reasons.. Still at the end of the year, you hear  we have achieved the targets,.  All know that more than 40% of the targets are  achieved during the last quarter of the year. During the rest of the months, work load is seen only during the month end. The inference  clearly is , we are able to get cash flow materials et al  during the month ends and year ends.and we achieve the targets working at an efficiency level, God alone knows what. And we boast of having any number of  highly qualified experts getting exploited in resource management. My theory  on the indiscipline front and the status in productivity--- What is the myth just getting exploded. We will debate it.
          Where is the trouble exactly? Is it on the governmental level  corporate level  unit level? Who is responsible? The corporate executives  first line officers   the supervisors  or the workers? Where is the bottle neck? Yes  ,the answer  seems to lie in the BOTTLE NECKS,! Got it ?
           The immediate boss is here at the end of the days  work asking me what I have done..Oh gosh 1  eight pieces in place of seven expected. Not even a smile of appreciation. Does it matter ?The remote control is just hooting and what a welcome siren.    
                                             ____________________________________________
















  .









Saturday, September 4, 2010

RANDOM THOUGHTS IN EIGHT HOURS

             And there goes the siren that acts as theremote control of so many man machines..Oh| What a life to be controlled by whistles.! No use feeling remorseful. You have to get started  with your work and there you go! Switch the machine on, clean  tue fixture, load the job,engage the tracer (tut-a-tut),and your job is being machined.
             A routine life and a monotonous one at that, controlled by whistles and asked to work under compulsion. Otherwise no one is likely to work. You have seen people come running to punch in time.If that compulsion is not there  and if one is not the rational thinking type  many will not be coming in time..Look , how many of the nonpunching staff, the executives come leisurely in. The persons who are supposed to set goals themselves areshortsighted. To top it all everyone talks about indiscipline at all levels.
             The feed appears to be too much; reduce it. Yes and now, thinking of  indiscpline-- what is the cause? I have a theory. There is induction in three levels, artisan supervisor and executive. Who are the people? All with similar background, socially culturally economically , and in the same age group ,.
             And what is the essential difference? A few years of academic study.And what a great leap that makes.! Intelligent industrious but unfortunate young men on one hand; average or even below average in all spheres but more fortunate  young men on the other hand occupying positions in the higher rung. Both the groups are young  inexperienced immature and hot in blood. Now how does discipline come to be the casualty here? One small example;The artisans problems or doubts  do not get solved as neither the supervisor nor the executive is in any better position, to solve it for the above said causes. What is not possible for the artisan remains mostly not possible at all levels,  withthe only difference being in the languages and jargons expressed. And so it happens that people working in heirarchy do not have the respect or esteem from the men below. "OH! heis no better than me" -or the people above are not able to lead. "Oh! I might
cut a sorry figure" But positional  strengths are equated by group and number strengths and so it goes on.The subordinate employee  knows this but he does not show it. .He needs the  patronage of his superiors for the fringe benefits he could get likeexcuses for  late attendance permission to go early  overtime benefits etc etc  The superior also keeps the subordinates in leash and control through these fringe benefits. The respect and regard for the leader is not there.only submission to the commander is there. From where can one expect  inherent discipline?
             These may be debatable points..But out of such debates if something good happens  the purpose will be served. And there can be one more point where a lot of steam can be vented out..Promotions!. Whoever has got the idea of time bound promotions?When are you due for a promotion? Is it not a funny question?Are promotions to be earned or given at set intervals?When it is given at particular intervals  where is the motivation to perform better?
             The job on the machine is over. Remove the part clean the fixture ,load another engage the tracer(tut-a-tut) Aye! wait! Why not go for a smoke? You can make up for the time.A friend is there always to give you company. What subject to talk about? Why  everything under the sun.What do you feel about idol worshipping? Particularly  no comments! It cannot be discussed.No discussions can be there on subjects where conclusions cannot be reached.But personnally even if I  donot worship idols  I can not  take objection to people worshipping. What is worshipping and who is worshipping whom? Simple! The worshipper wants
the liberation of his soul and peace of mind. Who could liberate his soul? Himself  he himself. One should worship  oneself  for salvation.. Absurd it might look but that  is how I have understood various teachings.
 Every idol in fact is meant to represent  oneself  and in offering a flower fruit or any form of sacrifice, the symbolism is meant to reveal the fact that the subject and the object are one and the same in the act of worship The idol in reality is to be looked upon as a subtle form of  mental equation between the self within and self without.If this worship is understood to be an equation between the two aspects of the self , the seeker and the sought , the subjective and the objective,  one can sit in front of the mirror and say ,"thou art that" and ones own image on the mirror can well serve  as the necessary idol. But this is too much for us. Let those who worship idols continue so and those  who do not ,,let them not.!

                                                                                                                 - to be continued-





,,


















                  

Thursday, September 2, 2010

MUSINGS

           The country is undergoing a sea change. New economic policies are announced, and many are on the anvil. Lots of talks go on about how the country has prospered and how it aims to become a super power.
            For senior citizens like me ,the progress seen is visible. A few days back the improvements  had been listed in a newspaper , like the average age and life expectancy, reduction in infant mortality rate, higher percentage of literates.better life styles etc etc .Also listed  was the higher population  growth, which seems to nullify  the better effects. A poor man remains a poor man even though  comparitively he might be enjoying a little better  life style, than his forefathers. The gap between the affluent and the poor is increasing. This gap is so much that it results in  a lot of disenchantment in the minds of the majority poor.This is getting manifested  in the behaviour pattern of the youth.
           Let us try to reason it out. All human beings are born same.The differances are they are born in different families ( very poor, poor,middle class,-there also lower middle and upper- and rich.) A child is born in a poor family or a child is born ina rich family and the child is not responsible for it. You may satisfy yourself
by saying it is the PRARABDHA KARMA.of the child. But that does not hold water in the minds of the children born.Their upbringing is entirely different and for that also the children are not responsible. A poor child does not get proper food ,clothes, education and other facilities  which the children of the rich enjoy. But one common factor is that both the types of children grow up in age and face life in totally different ways. But this anamoly  is faced by the poor children more.For no fault of him/her the poor has to face life grimly, trying to make both ends meet , whereas the rich and affluent grow up in an entirely different atmosphere.
             This leads the suppressed emotions of the poor being given vent in their violent and unruly  behaviour,at the slightest opportunity to show discontent. And there are any number of opportunities  presented in a platter to show  discontent. There are any number of people riding on the discontent of the poor, for their own benefits, and these poor gullible people are not able to  distinguish and understand the
machinations of the netas.
         Buses are burnt, shops are damaged ,stones are pelted ,resulting in lots of damage to property  and lives. The pent up emotions  of the already disgruntled youth  are further fuelled by the netas with delicate subjects like the caste ,creed , language ,religion etc where passions cah be easily roused.
         Where does the remedy lie? We hear a lot about right to food ,right to health ,right to education ,right to information  etc,But the resources for all these are being channelled through netas ,political netas because of which the means do not meet the ends. There is too much interference of the political bosses in effecting what good legislations promise..Accountability of the beauracrats is next to nothing, as they are pliable to the political bosses.
          The rich young should emphathise with his not so fortunate poor.The young should realise they are being manipulated and should not fall preyto the machinations of the netas. They should believe  only hard work will pay , and they should start aiming at the stars and they will surely reach at least the hree top.

பதிவுலகில் நான் ஆரம்பத்தில் எழுதிய ஆங்கிலப் பதிவு இது. இதில் எழுதியக் கருத்துக்களில் இன்றும் எனக்கு ஏதும் மாற்றம் இல்லை. அப்போது அது திரட்டிகளில் சேர்க்கப் படவில்லை. நானும் அறியப் படாதவனாக இருந்தேன். பதிவுகளில் முன்னூறு என்னும் இலக்கை தொட இருக்கிற இன்னேரம் இதை மீள் பதிவாக்குகிறேன்.










Wednesday, September 1, 2010

kandavanellaam

                              
                                                   
                                                              --கண்டவனெல்லாம்      
             பஸ்சுக்கு  காத்திருந்து  காத்திருந்து   வாழ்க்கையே  வெறுத்துவிட்டது  ஹரிக்கு ."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல்    நள்ளிரவு  வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம் .  சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு . "தவிர்க்க  முடியாததை          அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்
        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள் .  லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்.  அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                
 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார் .
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"
 கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "
 "உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்.