புதன், 1 செப்டம்பர், 2010
kandavanellaam
--கண்டவனெல்லாம்
பஸ்சுக்கு காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையே வெறுத்துவிட்டது ஹரிக்கு ."போக்குவரத்து துறைஎன்றால் தமிழ்நாடுதான் ஹேமா . விடியற்காலைமுதல் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்கும் . ஐந்து நிமிடத்துக்கு மேல் காக்க வேண்டாம் . சே | இந்த பெங்களூரில் இது மிகவும் மோசம் " ஹரிக்கு அலுப்பு . "தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும் .இல்லையென்றால் ஆட்டோவுக்கு செலவு செய்ய உங்களுக்கு மனசு வராதே " ஹேமா ஹரியின் வீக் பாயின்டைசற்றே குத்தினாள்
"அப்பாடா அதோ பஸ் வருகிறது . சாமர்த்தியமாக ஏறி இடம் பிடித்துக்கொள் . லேடிஸ் சீட் காலியாகவே இருக்கும் " ஹேமாவை முன்னுக்கு அனுப்பி ஹரி அடித்து பிடித்து பஸ்ஸில் ஏறி , முண்டியடித்து முன்னுக்குப் போனால் , அங்கே லேடீஸ் சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில் ஒரு அழகான வாலிபன் ஸ்டைலாக உட்க்கார்ந்து இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு மாதிரி ஒருத்தன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறான் . அதுவும் லேடீஸ் சீட்டில். அவன்தான் அப்படியென்றால் இவளுக்கு எங்கே போச்சு விவஸ்தை ? நாக்கைப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்க்க கூடாது ? இதே மாதிரி எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்வது ? இதுக்கு ஒரு முடிவு கட்டித்தான் தீரவேண்டும் "
இதற்குள் பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்க . "ஹேமா. வா இங்கேயே இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது என்று கேட்பதற்குள் ஹரி பஸ்ஸை விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த ஆட்டோவைக்கூப்பிட்டார் .
" இன்றைக்கு மழைதான் வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு செய்ய மனசு எப்படி வந்தது ?"
கண்டவனெல்லாம் என் பெண்டாட்டி பக்கத்தில் உட்க்காருவது எனக்குப் பிடிக்கலை .நீயும் பேசாமல் இருந்தது அதைவிடப் பிடிக்கலை "
"உங்களுக்கு என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
ஹேமாப்பாட்டி தன புருஷனை அன்புடன் கடிந்து கொண்டாள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உண்மை தான். :)) என்ன வயதானால் என்ன "என்னுடையது" என்ற எண்ணம் ஆணுக்கு பெண்ணின் மேல் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. vice versa is also true.
பதிலளிநீக்குஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க ஒவ்வொரு பதிவுக்கு பிறகு, கருவிப் பட்டையை சொடுக்கவும் ( click on submit to tamilmanam button) இம்முறை இப்பதிவுக்கு நான் சேர்த்துள்ளேன்.
It is heartening to see you go through my postings. Ido not know whether short stories will be read. thanks.
பதிலளிநீக்குanbana urimai ethanai vayathanalum marathu
பதிலளிநீக்குநல்ல கதை......
பதிலளிநீக்கு