Saturday, March 30, 2019

மனைவி அமைவதெல்லாம்



                                              மனைவி அமைவதெல்லாம்
                                             -------------------------------------------------


நாம் வாங்கி வந்த வரமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்  திருமணம்  நடக்கிறது வாழ்வில் வசந்தம் வீசும் என்னு நம்பிக்கை எழுகிறது சில விஷயங்களை அனுபவத்தின் பேரில் சொல்வது சரியாய் இருக்கும் திருமணமென்பதே கனவாகி இருக்கும் சிலருக்கு.  எனக்கு திருமணமென்பதே என்னை  நானறிய ஒருகருவியாய் இருந்தது இருவருக்கும் பலப்பல  எதிர்பார்ப்புகள் ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுகிறதா அந்தகாலகட்டத்தில் நினைக்காத எண்ணங்கள் இப்போது வருகிறதுசிறுபிராயத்தில் அணிய நல்லஉடுப்பிருக்காது நல்ல உணவிருக்காது படிக்க புத்தகங்கள் இருக்காது ஆனால் இல்லாத வெறுமை இருந்த தில்லை இப்போது நினக்கும்போதுதான் எதையெல்லாம் அனுபவிக்காமல்  இருந்திருக்கிறோம்   என்று தோன்றும்  இதைதான்  வாழ்வின் அனுபவமென்கிறேன் திருமணமான புதிதில்  சென்னையில் நாங்கள்  குடித்தனம்  நடத்தத் துவங்கிய போது நம்பமாட்டீர்கள் சமையல் எல்லாம் மண்சட்டி பானையில்தான்  அந்த நிலையில் இருந்து இந்நிலைக்கு வந்ததை   நினக்கும்போது  கேட்பவர்களுக்கு ஐயோ பாவமென்றிருக்கும் என்மனைவிக்கு மெல்லாமிப்படித்தான் என்னும் எண்ணமே இருந்ததுஎதையுமே குறையாய் அப்போது எண்ணியதில்லை யாருடனும் ஒப்பிட்டு பார்த்ததில்லை  ஆனால் எனக்கு அவள் அவளுக்கு நான் என்னும் எண்ணமேமேலோங்கி இருந்தது  அவள் என்முதல் மகனை பிரசவிக்கச் சென்றபோது அவளுக்கு ஒரு கடிதம்கவிதையாய் தீட்டி இருந்தேன்   அதையெல்லாம் ரசித்தாளோ தெரியாது அப்போதே நான்சுமாராக எழுதுவேன் அதுவும் உண்மையாக

ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
 
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை  டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில்  வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி
எனக்கு என் மனைவி பற்றி ஒருபெருமிதம்  கர்வம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்  ஆனால் என்மனைவிக்கு இவற்றைச்சொல்வதில் உடன்பாடுஇல்லை  கண்பட்டு விடப் பொகுதையா என்பாள் இந்தவயதில் எனக்கு அவ்வாறு தொன்றுவதில்லை ரொம்பநாட்களுக்கு முன்  ஒருபாடல் எழுதி இருந்தேன்   யாரும்செருகொழியற்க  என்னும் தலைப்பில் எழுதியது  இதை நான்முன்பே பகிர்ந்திருக்கிறேன்

வெண்ணிற  மேனியாள்  எனக்கு
 
மிளிரும்  நீலவானம்   சரிதுகில்
பன்நிறம்  தெரியப   பதித்த  மணிகள்
 
மின்னும்    தாரகை   நல்லணிகலன்
எனக்கு   நிகர்   யாரே    இப்புவிமீதே   எனவே
உன்னாது  இயம்பும்   மதியும் --கிளியே 
கறை   துடைத்த   மதி  வதனம்   அவள்  மேனிக்கணியும்
 
பட்டோ   மற்றோ   பொலிவுறும்  பேருண்மை –ஆங்கு -
 தழிலோடும்   புன்னகையும்   நன்னகையாம்    வண்டென    விரைந்தாடும்   மலர்  விழிகளும்
 
கண்டதும்   கவி  பாடத்தூண்டும் ---என்
 
காதல்   ஜோதி  ! கன்னல்  மொழியினள்---அவள்
 
காண்பார்   கண்   கூசும்   பேரெழில் ---கண்டும்
 
செருக்கொழிந்தாரில்லை -- ஏன்  ?
சிந்தை    கவர்ந்த   என்  பூங்கொடியாள்  தன 
நடை  குரல்  அதரம்  கண்டும் -ஈண்டு 
தோகை    மயிலின்  களிநடம்   குறைந்திலை
கானக்குயிலின்  இன்னிசை  குறைந்திலை
கொவ்வைக்கனியதன்    செம்மையும்   குறைந்திலை --ஏன் ?
 
கட்டழகன்   எந்தன்   கொட்டமடக்க
 
வட்டமிடும்   கழுகன்ன   சுற்றி  வரும்
 
நான் முகன்    திட்டமெல்லாம்    தரை  மட்டம்
இயற்கையின்   படைப்பினில்   எனதவள்  சிறந்தவள் 
 
கண்கூடு    தேவையில்லை   அத்தாட்சி   இதற்கு  !
  
யாரும்   செருக்கொழியர்க --  யானும்  ஒழிகிலேனே 

மேற்கண்ட படைப்பில் வாசகர்கள் ஒன்றினை கவனிக்க வேண்டுகிறேன் எந்தநிலையிலும்  நான்  standing firm but never deprecated others  
பிறகு அண்மையில்  கண்ணனின்  கேசாதி பாதம் எழுதும் போதுஎன் காதலியின் கேசாதிபாதமும்  எழுதி இருந்தேன்   OF course that is a recent post
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட

எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில் 
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.


என் மனைவியைப் பற்றி எழுதத் துவங்கினால் எழுதிக்  கொண்டே இருப்பேன் படித்து சோர்வடைந்தவர்களுக்கு  கண்டு மகிழ காணொளிகள்  









Tuesday, March 26, 2019

ஸ்லைட் ஷோ

 dahong

 ஒரு ஸ்லைட் ஷோ பார்க்கிறீர்களா மேலே சுட்டுங்கள்

பாம்பின் தற்கொலை




Saturday, March 23, 2019

தென்னையை பெற்றால் ............


                           தென்னையைப் பெற்றால்
                          ------------------------------------------
அப்பாடா ஒரு வழியாய் எங்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது
பிரச்சனை என்னவென்று சொன்னால்தானே தெரியும்
ஒரு தேங்காயின் விலை என்ன
தெரியாது
ஒரு இளநீரின் விலை என்ன
இதென்ன விலை கேட்டுக் கொண்டு
பொதுவாக என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறாய் 
ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் விலை இருக்கும்  ஆனால் முன்பைவிட விலை அதிகம்தான் கோடைக்காலம் இள நீருக்கு டிமாண்ட்  ஜாஸ்தி தேங்காயை விட இள நீர் அதிகம்விலைஅது சரி உன்வீட்டில்தான்  தென்னை மரமிருக்கிறதே  உனக்கேன் அந்தக் கவலை
அதைதான் சொல்ல வந்தேன்  பிரச்சனை முடிந்தது என்று தென்னையில் இருக்கும்காய்களை  கீழே கொண்டு வர வேண்டாமா  இபோதெல்லாம் கூகிளில் தேடினால் காய் பறிப்பவர்  பற்றிய டிடெயில்ஸ் கிடைக்கும் என்று தேடினது தான்   மிச்சம்
 அவ்வளவு ஹை டெக் ஏன் 
சாதாரணமாக காய் பறிப்பவரின்  தொலை பேசி எண் என்னிடம் உண்டு  கூப்பிட்டால் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்கிறாரேதவிர வருவதில்லை மரத்தில் காய்கள் முற்றி சாலையில் காய்கள் விழுகின்றன நமக்கோ யார் தலை மீதாவது விழுந்துவைக்குமோ என்று பயம் இது போல் ஒரு முறை யாரோ  நிழலுக்காக காரை மரத்தின்  கீழே நிறுத்திவைக்க  ஒரு காய் விழுந்து காரின் முன்புறக்  கண்ணாடி உடைந்து விட்டது
ஒரெ சல்லியமாய் போய் விட்டது  (சல்லியம் =தொந்தரவு )
அது சரி வள வளவென்று சொல்லிக் கொண்டு இருக்காமல்  சுருக்கமாகச் சொல்லமாட்டாயா என்ன செய்ய வலைத்தளத்தில் பதிவுகள் படிப்பதன் விளைவோ என்னவோ
சுருங்கச் சொல்லப் போனால்  மரத்தில் இருந்து காய்கள்பறிக்கப்பட்டு விட்டது  ஆனால் அதற்கு மு  நன்பட்ட அவலங்க்சளை சொல்லலாம்  என்று நினைக்கிறேந்தேங்காய் விலை என்ன வென்று தெரியாது யாரோ ஒரு மகானுபாவன்   மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கவா என்றார் இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தாய் பால சுப்பிரமணியா
 மரமேறி காய்களை பறிக்க என்ன தரவேண்டும்
மரம் ஏறிக் காய் பறிக்க ரூபாய் நானூறு தரவேண்டும்  மரத்தில் சுமார் எத்தனை காய்கள் இருக்கும் 
சுமார் நூறு காய்கள்இருக்கலாம்
மனசு ஒரு கணக்குப்போட்டது
நூறு காய்களுக்கு நானூறு ருபாய் என்றால்  ஒருகாய்க்கு நான்கு ரூபாய் ஆகிறது கீழே வந்தபின்  அவற்றை வீட்டுக்குள்ளிருக்கும் பரணுக்குள் சேர்க்க வேண்டும்  பின்   மட்டை எடுக்க வேண்டும் அதற்கு ஒரு காய்க்கு ரூபாய் இரண்டு  தர வேண்டும்ஆகஒரு தேங்காய் அடக்க விலை ரூபாய் ஆறிலிருந்து ஏழுவரை ஆகும்காய் பறிக்க வந்தவர் இளநீர்க்காய்களை  அவரே எடுத்துக் கொள்வதாகக் கூறினார் எங்கள் சுற்று வட்டாரத்தில்  ஒரு இள நீர் ரூபாய் முப்பது ஆகிறதாம்  இந்தக் கணக்கு பார்க்கவே முதலில் தேங்காய் இளநீர் விலை பற்றிக் கேட்டேன்  இளநீர்க்காய்களை அவரே எடுத்துக் கொண்டால் ஒரு இள நீர் காய்க்குரூபாய் எட்டு தருவதாகக் கூறினார் இளநீர்க்காய்களை மரத்திலேயே விட்டால் அவை முற்றி தேங்காயாக இன்னும் மூன்று மாதங்களாகலாம் அதன்பின் நான் மரமேற யாரையாவது தேட வேண்டும்   போதுமடா சாமி இளநீர்க்காய்களை அவரையே எடுத்துக் கொள்ளச்  சொன்னேன்சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்தது எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்  சுமார் ஒரு மணிநேரம் நானோ என் மனைவியோ  வெளியில் வரவே இல்லை அவ்வளவு பயம்  எல்லா முடிந்து பார்த்தால் அவர் எங்களிடம்  ரூபாய் இருநூறு கொடுத்தார் தேங்காய்களை  வீட்டின் பின் புறத்தில் கொண்டு சேர்த்தார்  ஆகமொத்தம் எங்களுக்கு தேங்காய் பறிக்க எந்த செலவும்  ஆகவில்லை  என்ன    அவருக்கு சுமார் 75 இள நீர்க்காய்கள் கிடைத்தது எங்களுக்கு சுமார் நூறு தேங்காய்கள்  கிடைத்ததுஅவருக்கு ஒரு இளநீர் ரூபாய் முப்பது என்று விற்றால் நல்ல லாபம் தான்  மரம் ஏறவும்  காய்களை எடுக்கவும் இரண்டு பேர்களிருந்தனர் வயதானால் அதிகம் லாபம் நஷ்டம் பார்க்கக் கூடாதுமொத்தத்தில்  நோகாமல் நுங்கு பறிப்பது என்ன வெண்ரு தெரிந்து கொண்டேன் 
தேங்காய்  பறிப்பவரிடம் அருகில் இருந்தவர்களொர் இள நீரிர்க் காய்க்கு ரூபாய் 15 தருகிறேன் என்று கூறியும் அவர் தரவில்லை
வீட்டின் முன்புறத்தென்னை மரம் 







Wednesday, March 20, 2019

tதொடரும் நினைவுகள்

           

                                            தொடரும் நினைவுகள்
                                             -----------------------------------

 ஆனால் என்ன பிரச்சனை என்றால்  தொடர்ச்சியாக இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது ஓரொ சமயம் இடம்காலமெல்லாம் சரியாக நினைவில் வருவதில்லை  ஆகவே தொடர்ச்சி கிட்டுவதை மட்டும் பகிர்கிறேன் திருமணம் நடக்கும்போது நான் எச் எம்  டி  வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சியில் இருந்தேன்  அப்போதெல்லாம் சிவாஜி நகரிலிருந்து ஃபாக்டரிக்கு பஸ்ஸில் போவோம்   ஆனால் இந்த பஸ் பயணமே எனக்கு அலர்ஜி பேரூந்தில் ஏறியதும் கண்களை மூடிக் கொள்வேன் இல்லையென்றால் வாந்தி வரும்போல் இருக்கும்  ஆனால் பிற்காலத்தில் எங்கும் பஸ்ஸில் போய் வந்திருக்கிறேன் பழக்கப்பட்டு இருக்கும் சென்னையில் வில்லி வாக்கத்தில் இருந்தபோது இவருக்கு வாரம் தோறும்  ஷிஃப்ட் மாறும்  நல்ல வேளை  இவரது தம்பி கூட இருந்தார் அவருக்கும் ஷிஃப்ட் உண்டு  என்ன,,, இவர் டே ஷிஃப்டில் இருக்கும் போது மச்சினர் நைட்  ஷிஃப்ட்மச்சினர் டே ஷிஃப்டில் இவருக்கு நைட் ஷிஃப்ட் தனியாக இருக்கும் பயமில்லாமல் இருந்தது ஒரு உண்மையைச் சொல்கிறேன் நாங்கள் சென்னை வந்தபோதுஎனக்கு சமையல் செய்யவே தெரியாது மச்சினர் தான் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்து சாதம் வடிக்கவே கற்றேன்  இவரானால் எல்லா பொறுப்புகளையும்   என்னிடமே விட்டுவிடுவார்  அதுவும் ஓரளவுக்குச் சரிதானே நீரில் இறங்காமல் நீச்சல் கற்க முடியுமா நான் இப்படி என்றால் இவர் அதைவிட  நான் கன்சீவ் ஆனதே தெரியவே நான்குமாதங்கள் ஆயிற்று மாதாந்திர செக் அப்  எல்லாம் மூச்  தெரியவே தெரியாது எப்படியோ நானுமொன்பது மாதங்கள்கழித்துதான் பிரசவத்துக்கு தாய் வீடு சென்றேன்  ஹூம் அதெல்லம் ஏதோ கனவுபோல் இருகிறது இப்போதெல்லாம் நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு எல்லாம்  தெரிந்து இருக்கின்றனர் திருமணம் என்றால் கணவனும் மனைவியும்  ஜாலியாக ஊர் சுற்றி சினிமா எல்லாம் பார்ப்பது என்ற அளவில் மட்டுமே என் ஞானம் இருந்தது அப்படி இருந்தநானெப்படி மாறி விட்டேன் உன்னால் முடியுமென்று எப்போதும் ஊக்குவிப்பார் என்கணவர் ஓரோர் சமயம்  அவர் செய்ய வேண்டியதை என்னைச்  செய்யச்சொல்லும்  சாமர்த்தியமாகவும் இருக்கலாம்  எனக்கு நோ ரிக்ரெட்ஸ் இப்போது விஜய வாடா நினைவுகள் என்னை சொல்லு என்னைச் சொல்லு என்கின்றன விஜய வாடா என்னை நான் அறிய காரணமாயிருந்தது அதற்கு என் கணவரின்  நண்பரின் மனைவியும் முக்கிய காரணம் என் வீட்டில் என்னை பேபி என்றே அழைப்பார்கள் அதேபோல் இவருடைய நண்பரின் மனைவியும் அழைப்பார் காலை ஏழுமணிக்கு இவர் சைட்டுக்குச் சென்றால்  இரவு எட்டு மணிக்கு முன்பாகவரமாட்டார் திருச்சிபோல் இல்லாமல் எனக்கு நிறையவே  நேரமிருந்தது நாங்கள் விஜயவாடா போய்ச் செர்ந்தபோது பணி புரிய மாற்றலில் வருபவர்களின் பிள்ளைகளுக்கு  பள்ளியில்சேர்க்க தேவையானதைச்செய்ய இவருக்கு கடமையாகியது எங்கள் வீட்டின் அருகே சுமார் 100 மீட்டர்தொலைவில் ஒரு தொடக்கப் பள்ளி இருந்தது சும்மா அங்கு போய்க்கேட்டேன்  பள்ளியில் பணிபுரியலமா என்று  என்னை பற்றிய விபரங்களுக்குப் பின் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் கரஸ்பாண்டண்டாகச்  சேர விருப்பமா என்று கேட்டார்கள் உடன் சம்மதம் தெரிவித்தேன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபொல்  எனக்கு வேலைக்கு வேலையும்  பிஎச் இ எல் பணியாளார்களின்குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் ஒருவாய்ப்பாக இருந்தது அப்பள்ளியின் உரிமையாளர் சற்றே வித்தியசமானவர் விஜய வாடா வெயிலிலும்  டை அணிந்தே பள்ளிக்கு வருவார் படிக்கும்பிள்ளைகளுக்கு பாடம் நடத்துபவர்களின் கை எழுத்து நன்றாக இருக்க வேண்டு என்று ஆசிரியைகளின் கையெழுத்து நன்றாக  இருக்க தினமும் அவர்களை  கர்சரி  ரைட்டிங் எழுதச்சொல்லுவார்  என்மூலம்பல பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடிந்தது  பி எச் இ எல் போன்ற நிறுவனத்தின் அதிகாரியின்  மனைவி சிம்பிளாக இருப்பது அவருக்கு ஆச்சரியம் தந்தது
 விஜயவாடாவில் பாங்க்  போவது வீட்டுக்குத்தேட்வையானவற்றைக் கவனிப்பது போன்ற  வேலைகள் எனக்கு டெலிகேட்  செய்யப்பட்டன  அதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர் இவரதுநண்பரின் மனைவி நன்றாக சமையல் செய்வார் முக்கியமாக நான்  வெஜிடேரியன்  வகைகள்
நான் முதலில் நா வெஜ் சாப்பிடுபவளாக இருந்தாலும்  திருமணத்துக்குப் பின் அறவே ஒதுக்கி விட்டேன்
இப்போது நினைத்தாலும்  சிரிப்பு சிரிப்பாக வருகிறது நானும்சிநேகிதியும் ஒரு முறைமார்க்கெட் சென்றோம்   சிநேகிதி கொஞ்சம்கருவாடு  வாங்கினாள்  அதன்பின்  நாங்களொரு ஜவுளிக்கடைக்குச்சென்றோம் ரெகுலராகப் போகும் இடம்தான்  நாங்கள் சென்ற சிறிதுநேரத்தில் கடையின் உரிமையாளர் மூக்கை சுணக்கி ”ஏமோ செச்சு போயிந்த வாசன ஒஸ்துந்தி” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என் சிநேகிதி  சைகையால் என்னைப் பேசாமல் இருக்கக் கூறி  அவரும் மூக்கைச்சுணக்கி மோப்பம்பிடிப்பதுபோல்காட்டினார் அப்போது வீட்டில் என்  தந்தைஇருந்தார்  அவரிடம் இதைக்கூறி நாங்கள்சிரித்தோம்  அதன் பின்  என் அப்பா  அந்த சிநேகிதியை  கருவாட்டு மாமி என்றே அடையாளம் சொல்வார்
 விஜய வாடாவிலும்  லேடிஸ் கிளப் தொடங்கினோம்  
விஜய வாடாவில் பென்ஸ்சர்க்கிள் என்னும் இடமுண்டு  ஆனால் அங்கிருப்பவர்களுக்கு அதுபென்ச் சர்க்கிளே
ஞாயிற்றுக் கிழமையும் இவர் வேலைக்குச் செல்வார்ஆனால்மதியம்  வந்து விடுவார் ஞாயிறுமாலை கட்டாயமொரு சினிமா உண்டு தியேட்டருக்குப் போனால் என் இரண்டாம் மகன் கண்களைப் பொத்திக் கொண்டுவிடுவான் அபோதெல்லாம்சினிமா என்றாலே அவனுக்குப்பிடிக்காது  ஆனால் இடை வேளையில் சமோசாவுடன்ஒரு கூல் ட்ரிங்கும் உண்டு தெலுங்குபேசக் கற்றுக் கொண்டதும் அங்குதான்.  ஆந்திரக்கார்களுக்கு  சினிமா என்றால் உயிர்பல நல்ல தெலுங்குப் படங்களைப் பார்த்திருக்கிறோம்  இன்னும் ஏதேதோ நினைவுகள் அவற்றை நினைவு வரும்போது சொல்கிறேன்
விஜயவாடா பள்ளி உரிமையாளருட ன் 


விஜய வாடா பள்ளியில் 











   

Sunday, March 17, 2019

நம் அரசு பற்றி அயலக ஏடு ஒன்றின் பதிவு


                             நம் அரசுபற்றி அயலக ஏடு ஒன்றின் பதிவு
                            -------------------------------------------------------------------
 எனக்கு நீண்ட நாட்களுக்குப் பின்  ஒரு மெயில்வந்தது அதில் கண்ட வரிகள்அவற்றை வலை நண்பர்களுடன்  பகிர வேண்டும் என்று நினைக்க வைத்தது
முனவர் ஜம்புலிங்கம் அவர்கள் அயலக வாசிப்பு  என்று பதிவுகள் இடுகிறார் அயலக ஏடுகளில் காண்பவற்றைபகிர்வது நன்றாயிருக்கும்   என்பதால் இதை அதில் உள்ளவாறே  பகிர்கிறேன்  நம் அரசும் நம் கான்ஸ்டிட்யூஷனும்  வேற்றுமை இல்லா அரசு என்பதையே கூறுகின்றன  ஆனால்  இப்போதைய அரசு மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களையே பலியாக்கி விடுகிறது மதம் என்றும்  சாதி என்று கூறியே வாழ்கிறோம்  இல்லை என்று கூறுபவர்கள்வெளிக்கு அப்படிச் சொன்னாலும்  உண்மையில் அதையே  நம்புகிறார்கள் அதை நான் சொல்வதை விடஅயலக ஏடு ஒன்று என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்  சிறிது நீளமுடையதானாலும்  தயை செய்து முழுதும் படியுங்கள்  ஆங்கிலம் தெரிந்தவர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள் என்னும்   நம்பிக்கையே என்  வார்த்தைகளில்  கூறாமல்  அதில் உள்ளது உள்ளபடியே  கூறுகிறேன் நம் அரசுபற்றி அயலக  ஏட்டின் கருத்தும் தெரிகிறது என்முன்னுரையே நீண்டு விட்டது

நியூ யார்க் டைம்ஸ் 


பதிவை வாசித்தீர்களா நண்பர்களே  கருத்துகளைப்பகிரலாமே 

Friday, March 15, 2019

அமைதி


                        அமைதி
                         --------------

வானில் நிலவில் ஒழுக்கொடும் ஆற்றுநீரில் மன்றத்தாடும் தென்றலில்    அமைதி
ஊரில் உலகில் உள்ளத்தில் தெளிவாய் உலவிவரும் உணர்ச்சிகளில்  அமைதி
இயலில் இசையில் இனிமை உணர்வூட்டும் நிகழ் நாட்டிய நிரலில்  அமைதி
 அன்பில் பண்பில் ஆர்வமுள்ள உழைப்பில் நிகரிலா சேவைத்திறனில் அமைதி
அமைதிதான் எத்தனை வகை ? எல்லாம் வேண்டும் 
எல்லோருக்கும் வேண்டும்  அமைதி     !

நீண்ட பதிவுகளுக்குப்பதில் இம்மாதிரி சின்ன ஸ்வீட் (ஸ்வீட்டா தெரிய வில்லை )பதிவுகள் ரசிக்கப்படுகின்றதா பார்க்க வேண்டும் 

Wednesday, March 13, 2019

இந்தியராக ஒபாமா



                                               இந்தியராக பராக் ஒபாமா
                                                ---------------------------------------


பராக் ஒபாமா  அமெரிக்காவின்   ஜனாதிபதியாக  இருந்த நேரம்   எனக்கு வந்த மின்
அஞ்சல்களில் இருந்து எடுத்தாண்ட  புகைப்படங்கள் ஒருவேளை  போட்டோ ஷாப்பாயிருக்கலாம்  இந்தியராக ஒபாமாவை சித்தரிக்கும் படங்கள் எல்லா வேஷத்துக்கு  கச்சிதமாகப் பொருந்துகிறார் பாருங்கள்







இப்போது ரசிக்க ஒரு காணொளி உன் கண் உன்னை ஏமாற்றினால்.............