Sunday, November 29, 2020

பாம்பு ஒருகருத்துதொகுப்பு

பாம்பு ஒரு கருத்து தொகுப்பு 

பாம்பைப்  பற்றிய பல நினைவுகள் நெஞ்சில் படமாக ஓடத்

துவங்குகிறதுது. பாம்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அது என்ன 

ஏழாம்  பொருத்தம்.? எனக்கும்  பாம்புக்கும்  பொருத்தமே இல்லை,

ஆகவே ஆகாது. என் கையால் பரலோகம் அல்லது சிவபதவி 

அடைந்த பாம்புகளின் எண்ணிக்கை நாலைந்து இருக்கும். பாம்பு

களை  அடிக்கக்கூடாது கொல்லக் கூடாது, என்று நம்பும் நம் 

மக்களிடையே நான் பாம்புகளைக் கொன்றது, பயத்தாலும் தற்

காப்புக்காகவும்தான்.வசிக்கும் வீடுகளில் பாம்பு வந்து விட்டால் ,
அது  இருப்பவர்களைத் தீண்டித் தொலைத்து விட்டால், என்பன
போன்ற பல சந்தேகங்கள் சிந்திக்கக்கூட நேரம் கொடுக்காமல்,
அதனை அழிப்பதிலேயே மனம் சென்று விடும். சர்ப்ப தோஷம்
சும்மா விடாது என்று பயமுறுத்துபவர்கள் மத்தியில் ,இதுவரை

எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறேன். நான் பாம்புகளைக்
கொல்வதை நியாயப் படுத்தவில்லை. தற்காப்பால்  உந்தப்
பட்டு தற்செயலாகச் செய்யும் செயலே, வீட்டில் வந்த பாம்பு
களுக்கு முக்தி கொடுத்தது. பாம்புகள் வயல்களிலோ காடு
களிலோ சுற்றுச் சூழல் சமன்பாட்டுக்கு உதவும் வகையில் உலா
வந்தால், பாம்பை நான் ஏன் அடிக்கிறேன்.அவை நகரங்களில
வீட்டுக்குள்ளும்  தோட்டத்துக்குள்ளும் வரும்போது, அவைகளை
அமைதியாய் பிடித்து, எங்கோ கொண்டுவிட நான் கற்றுக்கொண்டு
இருக்கவில்லை.

 

       
பாம்புகளை தெய்வமாக வழிபடும் பலரை நான் பார்க்கிறேன்.
எறும்புகளால் எழுப்பப்பட்ட புற்றுகளுக்குள் பாம்பிருப்பதாக நம்பி,
அந்தப் பாம்புகள் குடிக்கும் என்று எண்ணி, பாலைப் புற்றுக்குள்
ஊற்றும் ஜனங்களைக் காணும்போது, அறியாமையின் விளைவு
கள் அறியப்படாமலேயே போவது கண்டு மனம் வருந்துகிறது.
பாம்புகள் பால் குடிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்ட விஷயம்.
அந்தப் பாம்புகளுக்கு புற்றின் மேல் பால் ஊற்றி, பூவைத்து ,தூப,
தீபம் காட்டி எல்லாவற்றையும் விரயமாக்கும் மக்கள், கூடவே
தம் மக்களையும் அல்லவா சிந்திக்க விடாமல் வளர்க்கிறார்கள்.

 


       
குழந்தை பிறவாமைக்கு நாக தோஷம் ஒரு காரணம் என்று
நினைத்து, சில கோயில்களில் நாகராஜாவைக் கல்லில்
பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கி நலமுண்டாகும்  என்ற
நம்பிக்கையும் பரவலாக நம் நாட்டில் உண்டு.

        
நாங்கள் ஒருமுறை திருச்சியிலிருந்து கர்நாடக மாநில
கோயில்களை தரிசிக்க காரில் பயணித்துக் கொண்டிருந்தோம்..
மாலை இருட்டிய நேரம். காட்டுப்பகுதி; நல்ல மழை பெய்து
கொண்டிருந்தது. திடீரென்று ட்ரைவர் காரை நிறுத்தி விட்டார்.
ஏனென்று கேட்க, காரின் முன்புறம், சாலையைக் காண்பித்தார்..

 

அங்கு சுமார் ஆறேழு அடிக்கும் மேலான பாம்பு பாதையில்
படுத்திருந்தது. " பாம்பால் காருக்கு சேதமிருக்காது; ஒட்டிக்
கொண்டு போங்கள் " என்றேன். ட்ரைவர் மறுத்துவிட்டார்.
பாம்பின் மேல்  காரேற்றினால், அதனால் பாதகங்கள் மிகவும்
அதிகமாகும் என்றார். பாம்பு நகர்ந்த பிறகு போகலாம் என்று
கூறி, ஹெட் லைட்டை ஆன்  ஆப  செய்தும் ஹாரன் அடித்தும்
ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு, பாம்பு நகர்ந்து,
நாங்களும் பயணம் தொடர்ந்தோம்.


      
கேரளத்தில் பாடங்களில் ( வயல்களில்)பாம்புகள் தாரளமாக
நடமாடும். விளையும் நெல்லைத் தின்ன எலிகள் செய்யும்
அட்டகாசங்கள் பாம்புகளால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்
படுவதாக கூறுவார்கள். கேரளத்தில் பாம்பு கோயில்கள் மிகப்
பிரசித்தம். மன்னார்சாலை என்னும் இடத்திலுள்ள பாம்பு
கோயிலுக்கு போய் பாம்பைக் காணமுடியுமா என்று தேடினால்
"
அவர்கள் நம் கண்ணில் படமாட்டார்கள் " என்று மிகவும்
மரியாதையுடன்  பதில் தருகிறார்கள். அங்குள்ள " இல்லத்தில்"
(
வீட்டில்" )இருக்கும் நம்பூதிரி மூதாட்டியை தரிசித்து, குங்குமம் ,
பஸ்மம் பெற்றுத் திரும்புகிறார்கள்.


     
தமிழ் நாட்டில் நாகர்கோயிலில்  இருக்கும் நாகர்கோயிலுக்கு
நிறையபேர் வழிபாட்டுக்கு வருகிறார்கள். அந்த ஊரில்
குடும்பத்தில் ஒருவராவது நாகராஜன் என்ற பெயருடன்
இருப்பார்.

      பாம்பு பிடிக்கும் பலரை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அது
ஒரு லாகவமான செயல். பாம்பின் வால்  பகுதியைப் பிடிக்கும்
போது பாம்பு வளைந்து வரமுடியாமல் பிடிப்பார்கள்.அந்தக்

காலத்தில் HAL AERO ENGINE FACTORY துவக்கக் காலத்தில் அந்த 

இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தன. ஆங்கிலேயக் கூட்டு 

முயற்சியால் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் ஆரம்ப 

காலத்தில் நிறைய வெள்ளையர்கள் இருந்தனர்/வருவார்கள்

பாம்பு பிடிப்பதில் வல்லவராக ஒரு செக்யூரிட்டி அதிகாரி 

இருந்தார். பாம்பைப் பிடித்து தரையில் கிடத்தி, அதற்கு முன்
தன தொப்பியை அங்கும் இங்கும் ஆட்டி, கொபமூட்டுவார்.
பாம்பு சீறித் துள்ளி கொத்த வருவதை ஆங்கிலேயர்கள் பார்த்து
படம் பிடித்து மகிழ்வார்கள். ஒரு பாம்பு பிடித்து காண்பித்தால்,
அந்த செக்யூரிட்டி அதிகாரிக்கு, குறிப்பிட்ட ஒரு தொகை
வழங்கப்படும் பழக்கம் இருந்தது.


       
இந்திய புராணக் கதைகளில், பாம்பு பற்றிய கதைகள் ஏராளம்
பாம்பு  சிவனின் தோளிலும்,கையிலும் கணபதியின் இடுப்பிலும்,
முருகனின் மயிலின் காலடியிலும் இருக்கும். பாம்பு  வழிபாடு,
இந்து, புத்த மதத்தினரிடையே மட்டுமல்ல, உலகின் எல்லா
பகுதிகளிலும் பாம்பு வழிபாடும் அது சார்ந்த கதைகளும் நிறைய
இருக்கின்றன.

     இந்து மதத்தில் புகழ் பெற்ற பாம்புகள் :-1.)சேஷா.(ஆதிசேஷா,

சேஷநாகா.அல்லது 1000 தலை கொண்ட பாம்பு.)உலகைத் தன்

தலைகளால் தாங்குவதாக நம்பப்படுவது. விஷ்ணுவின் படுக்கை 

யாக இருப்பது. கண்ணனை இடி, மின்னல் மழையிலிருந்து 

காக்க, குடையாக, வசுதேவருடன் யமுனையைக் கடந்தது

2.) வாசுகி:- மந்தார மலையைச் சுற்றி கயிறாகக் கட்டப்பட்டு 

அமுதம் கடைய உதவியது

3.) காலியா ( காளிங்கன்.) யமுனையை விஷமாக்க  கண்ணனால் 

அதன் தலைமேல் ஏறி அடக்கப்பட்டது

4.)மானசா அல்லது மா மானசா:-உலகின் தாயாகக் கருதப்படுவது.

5.)அனந்தன்:-இந்த புவியை சுற்றி இருப்பதாக கருதப்படுவது

6.)பத்மநாபா அல்லது பத்மாகா:-தென் திசையைக் காப்பதாக 

நம்பப்படுவது

பாம்பு பற்றிப் எழுதத் துவங்கினால் எழுதிக் கொண்டேபோகலாம்.


     
பாம்பை ஒரு ஜீவ சக்தியாகக் கருதி, அதைக் கட்டுக்குள் 

கொண்டு வரும் முறையில் யோகா தவ யோகிகளால் பயிலப் 

படுகிறது, என்று நம்பப்படுகிறது

 

      பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வளைந்து 

வளைந்து ஓடுவதுதான் தப்பிக்கச் சிறந்த வழி என்று சிறுவயதில் 

சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த அனுபவமும் 

ஏற்பட்டதில்லை

 

EEL எனப்படுவது பாம்பினமா, இல்லை மீனினமா.?எனக்குEEL 

தோலால் செய்யப்பட்ட ஒரு கைப்பை நண்பன் ஒருவனால் 

பரிசளிக்கப்பட்டது. அதனை என்னிடமிருந்து என் மகன் எடுத்துக் 

கொண்டு விட்டான்

 


      
பாம்பு பற்றிய உண்மை நிலைகள் நன்றாக அறியப்பட்ட இந்த 

காலத்தில் பாம்பை தின்பவர்களும் இருக்கிறார்கள், பாம்பை 

வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் செளகரியம் 

மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம்

 

பாம்பு வழிபாடு என்பது மரணபயத்தையொட்டியது போல், மரணத்துக்குப் பயந்த மனிதன் மரணம் தரும் பாம்பையும் வணங்கிவிட்டான்.
இவ் வழிபாடு உலகில் ஆதி வழிபாட்டு முறையான எகிப்திய;மாயா; சீன  இந்தியா யாவற்றிலும் வியாபித்துள்ளது. சீனர் வணங்குகிறார்கள் அதே நேரம் சாப்பிடுகிறார்கள்...புரியவில்லை.

சிங்கப்பூரில் அங்குள்ள ஒரு அம்மன் கோவிலில் இருந்த இரண்டு நாகங்கள் படமெடுத்துக் கொண்டிருக்கும் சிலை (இப்படிச் சிலை நம் கோவில்கள் எங்கும் உண்டு)அருகே சீனர்கள்; முட்டையும்; பாலும் கொன்டுவந்து வைத்துக் கும்பிடுகிறார்கள்

 

. மேற்குலகில் இப்போது "பசுமைப் புரட்சி" நிறுவனங்களால் ; இவற்றின் நன்மை பற்றிய விளக்கங்கள்
மாணவப்பருவத்திலே கொடுப்பதால் , அங்குள்ள
பிள்ளைகள் இவற்றை கொல்வதில்லை.
பிரான்சில், ஒரு தொலைக்காட்சி விபரணச் சித்திரம் பாம்புகள் பற்றியது  அங்குள்ள அதி
விஷம் கொண்ட பாம்பு ,சுருட்டை இனம். அச்சித்திரத்தில் புதிய காட்டு நிலம் ஒன்றைப் விவசாயத்துக்கோ; வீடுகட்டவோ பண்படுத்துமுன்; இங்குள்ள பாம்புப் பிடாரியை(பரம்பரையாக நம் குறவர் போல்)அழைத்து அவர் பாம்புகள் இருந்தால் பத்திரமாகப் பிடித்து; அவற்றை வேறுகாடுகளில் கொண்டு சென்று விட்டுப் அதற்குக் கூலி வாங்குகிறார்.அப்பாம்புகளை விடுமுன் அவர் ஒரு பிரார்த்தனையும் செய்கிறர் "என்னை மன்னித்துக் கொள்ளவும்; உங்கள் இடம் எமக்குத் தேவையாக உள்ளது. அதனால் உங்களுக்கு வேறு ஏற்பாடு செய்கிறேன்;எங்களுக்கு கெடுதல் செய்யவேண்டாம்" என்று கூறித் தலையில் பிடித்து வைத்துள்ள பாம்பை ஒரு முத்தமிட்டு ஒவ்வொன்றாகப் பத்திரமாக விடுவார்.

 

ஐரோப்பா, அமெரிக்காவில் பாம்பைப் பலர் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். அதில் கொடிய
ராஜ நாகத்தைக் கூட வளர்போரும் உண்டு.
மருத்துவ உலகில் நாக விசத்துக்கு மிக மதிப்பு உள்ளதால்;தமிழ்நாட்டில் பல பாம்புப்பண்ணைகளுக்கு
குறவர்கள் மூலம் நாகங்களைக் கொண்டுவந்து; விசம் சேர்ப்பதும் உண்டு

.
உலகிலே அயர்லந்தில் பாம்புகள் இல்லையாம்.

சீனர்களும்; தென்கிழக்காசியர்களுமே பாம்பு சாப்பிடுவதாகப் பரவலாக நாம் நினைக்கிறோம். ஆனால் அமெரிக்க "கவ் போய்"-(cow boys) கள், அங்குள்ள கிலுகிலுப்பைப்(rattle snakes) பாம்பை அந்த மாதிரிச் சாப்பிடுகிறார்கள்.

 


வீட்டில் நாய்,பூனை; கோழி, கினிக் கோழி என்பன வளர்ப்பவர்கள் ; வசம்பு கரைத்துத் தெளித்தால்; பாம்பு
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பாம்புக்கு மண்ணெண்ணெய் தெளித்தால்; அந்த எல்லைக்கெ வராதாம்

பல பாம்பு பற்றிய மேலதிக்க  செய்திகள் அங்கும் இங்கும் திரட்டியது