Sunday, November 22, 2020

அர்த்தம் தெரியுமா

 கந்த சஷ்டி கவசம்  

சம்ஸ்கிருத துதிகள் புரியாது இருக்கலாம் என்று சில துதிகளின் தமிழ் வடிவம்  பகிர்ந்து வருகிறேன்   ஆனால் சிலதமிழ் துதிகள்  தமிழில் இருப்பவற்றின்  பொருளே புரிவதில்லை இணையத்தில் தேடியும்  பலனில்லை பொருள்  தெரிந்தவர்  சொல்லலாமே

ரஹண பவச
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

தமிழில் எல்லாவற்றுக்க்கும் பொருள் இருக்குமே நானும்பொருள் தெரியாமல் கந்த சஷ்டி கவசம்சொல்லி வந்திருக்கிறேன்பல பதிவுகளிலும்  கண்டசஷ்டி கவசம்  பேசப்படுகிறது   

 
 


35 comments:

 1. கந்த சஷ்டி கவசம் பொருளுடன் நண்பர் ஒருவரால் சொல்லப்பட்டு முகநூலில் பகிரப்பட்டுச் சில ஆண்டுகள் ஆகின்றன.

  ReplyDelete
 2. ஷ்டாக்ஷர மந்திரம் எழுத்துக்கள் மாறி நின்றதால் அதாவது சரஹணபவ என்பது விணபவசரஹ என்று இதில் ரிஹண என்பதில் இருந்து எல்லாமே மந்திர உபதேசங்கள். குரு மூலமாகவே பெற வேண்டும். இதன் பொருளைப் பலரும் அறியச் சொல்லுவதில்லை.

  ReplyDelete
 3. முருகனே அனைத்துக்கும் ஆதிகாரணன் என்னும் பெயரில் அவனை இங்கே "விந்து" எனக் குறிப்பிட்டுள்ளார். அதை ஒட்டியே முந்து முந்து முருகவேள் முந்து என்னும் சொற்றொடர் வந்திருக்கலாம். மற்றவை மந்திரக் குறிப்புகள். யோகமார்க்கத்தின் சம்பந்தமானவை. குரு மூலமே உபதேசம் பெற வேண்டும்.
  நீங்கள் நேரம் இருக்கையில் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கந்த சஷ்டி கவசத்தின் பொருளைப் படித்தால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

  ReplyDelete
 4. அல்லது முகநூலிலும் தேடிப் பார்க்கலாம். நான் அறிந்த வரை நக நக நகென, டிகுகுண போன்றவை ஒலிக்குறிப்புக்களாகவே சொல்லப்படுகின்றன. அவற்றின் பொருளைப்பலர் அறியச் சொல்லுவதில்லை. சரஹணபவ என்னும் சொல்லின் மூலப் பொருள் அறிந்தவர்களுக்கே குரு மூலமாக உபதேசிக்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. கன்னாபின்னா என்று எழுதியதற்கே பொருள் கூறி பரிசில் பெறவைத்த கதைகளுலாவும் இங்கு பெயர்பெற்ற ஒருவர் நுதிய துதிக்கு பொருள் இல்லாமலா போய்விடும் ஆனல் எல்லாமே சப்பைக்கட்டாகவே தெரிகிறது ஒரு பாடலுக்கு பொருள் புரிய எங்கே தேடுவது குருவை இப்படியெல்லாம் சொல்லியே வாய் அடைக்கப் படுகிறதுஅட் லீஸ்ட் புரிய வைக்க முயன்றதற்கு நன்றி மேம்

   Delete
  2. சொன்னதே தப்புனு நினைக்கிறேன். முதல்லே நீங்க தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் அடங்கிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிலது மந்திரம். சிலது ஒலியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது. குருவை நீங்கள் தேடவேண்டாம். உங்களுக்குத் தெரியணும்னு இருந்தால் குரு தானாகக் கிடைப்பார். இதெல்லாம் சப்பைக்கட்டு என்றால் ஏன் கேட்டீர்கள்? பதில் சொன்னது என் தப்பு! சரஹணபவ என்பதே ரஹண பவச, ரிஹண பவச என்றெல்லாம் மாறி மாறி வரும். மாறி வரும்போது பொருளும் மாறுபடும். நமசிவாயா என்பது எப்படி சிவாய நம, வாசியா என்றெல்லாம் மாறிப் பொருள் அடங்கி வருமோ அதே போல்

   Delete
  3. நீங்கள் படில் தருவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதே என்மறுமொழி உங்களை புண்படுத்திஇருந்தால் மன்னிக்கவும் வெர்சுவல் பல்கலை கழகத்தில் தேடினென் ஏதும்கிடைக்கவில்லை நேராக பதில் சொலி இருந்தால் நன்றாய்இருந்திருக்கும் சிலது ஒலியின் மூலம் புரிய வேண்டியது என்ப்தே எனக்கு முடியாதது மீண்டும்வருத்தி இருந்தால் மன்னிக்கவும்

   Delete
  4. கந்த சஷ்டிக் கவசம்பொருளுடன் எனத் தட்டச்சினால் சுலபமாக வரும். https://tinyurl.com/y5cbz46x இந்தச் சுட்டியில் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தின் பொருளுரை வரும்.

   Delete
  5. https://tinyurl.com/y58gmyv5 இது முகநூலில் உள்ள பொருளுரை. யாராக இருந்தாலும் நீங்கள் கேட்டிருக்கும் வரிகளுக்குப் பொருளை நேரடியாகத் தர மாட்டார்கள். சம்ஸ்கிருத மந்திரங்களின் சப்தம் எப்படி மனதில்/உடலில் அதிர்வலைகளை உருவாக்குமோ அதே போல் இவையும் பொருள் பொதிந்த மந்திர ஒலிகள். இவற்றின் பொருள் அறிய வேண்டுமானால் உங்களுக்கு யோகம் தெரிந்திருக்க வேண்டும். யோகம் எனில் இப்போ எல்லோரும் செய்யும் யோகாசனம் அல்ல. உண்மையான யோகம். அதில் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி பெற்று யோகக்கலையில் கொஞ்சமானும் தேறினால் இவற்றின்பொருளை அறிய முடியலாம். சும்மாவானும் சப்பைக்கட்டு, பொருள் சொல்ல முடியலைனு எல்லாம் சொன்னால் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

   Delete
  6. நீங்கள் கொடுத்த சுட்டிக்கு சென்று பார்ட்தேன்ஏறத்தாழ நீங்கள்கூறியதே தான் இருக்கிறது நன்றி இனி யோகமெல்லாம் பயில்வது நடக்கிற் காரியம் அல்ல’ பொருள் சொல்ல முடியலைனு எல்லாம் சொன்னால் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் அப்படியே ஆகட்டும் மேம் .

   Delete
  7. டகு டகு....
   முருகன் தேரில் வருவதைப் பாடுகிறார் தேவராயன் என்று என் பிளாகில் ஒரு முறை கருத்து வந்தது :-)

   Delete
  8. நீண்ட நாட்களுக்குப்பின்ங்கள் வருகை நல்வரவாகுக

   Delete
 5. இவையனைத்திற்கும் பொருள் இருக்க வாய்ப்புள்ளது. தவிரவும் இவை போன்ற சொற்கள் கூறக்கூற மனதிற்கு ஒருமைப்பாட்டைத் தந்து, நிறைவைத் தரும் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. அதற்காகத்தானே கவசங்களும் ஆன்மீகப்பாடல்களும் என்பது எனது அநுபவ உண்மை. உணர்ந்து பாடும்போது அல்லது கேட்கும்போது மனதை ஒருமைப்படுத்தி வேண்டாத சிந்தனைகளிலிருந்து விலக்கிவைத்து மனவலிமையை அதிகரிக்க செய்கின்றன. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   Delete
 6. என்னவென்று சொல்ல சந்த வார்த்தைகளின் ம்கிமையை

  ReplyDelete
 7. ஆகக்கூடிப் பொருளை அறிவது எளிதல்ல.

  ReplyDelete
 8. அதனால் தான்பதிவு மூலம் அறிய முயன்றேன்

  ReplyDelete
 9. பொருளில்லாமல் ஒரு பாடல் இருக்க வாய்ப்பில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆனால் பொருள்தான் தெரியவில்லையே

   Delete
 10. இதற்கான பொருள் தெரியாது சார். ஆனால் அந்த ஒலிகள் கேட்க இதம் தருபவை. சந்தம் ரிதம். இதற்கு என் உறவினர் ஒருவர் அபிநயம் பிடித்ததும் அழகாக இருந்தது. ஆனால் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. அவர் அர்த்தம் தெரிந்து அபிநயம் பிடிக்கவில்லை அந்த சந்தத்தின் ரிதம் சார்ந்து காலில் சலங்கை ஒலி மற்றும் கை அபிநயத்தின் மூலமும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சந்தம் இருக்கிறதுஆனால் அர்த்தம் தெரியாததால்ன் இப்பதிவு எழுதினேன்

   Delete
  2. கீதாக்கா எழுதிட்டு வராங்க சார். அவங்க சொல்வதிலிருந்து தான் தெரிந்து கொள்கிறேன். இங்கயும் சொல்லிருக்காங்க.

   கீதா

   Delete
  3. திருமதி கீதா ஆன்மிக கேள்விகளுக்கு பதில் தெரிந்தவர்அனல் ஒருஜ் சிக்கல் எல்லோர் வேவ் லெங்தும் ஒருபோல் இருக்கும் என்று நினைக்கிறார்

   Delete
  4. நான் மறந்தும் உங்களை அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் ஜிஎம்பி ஐயா! ஆகவே எனக்குச் சிக்கல் ஏதும் இல்லை. குரு மூலமாய்த் தெரிஞ்சுக்க வேண்டிய ஒன்றை, அதுவும் எத்தனையோ மனப்பக்குவம் அடைந்த பின்னர் அடைய வேண்டிய ஒன்றை இங்கே சொல்லாதது "சப்பைக்கட்டு வேலை" என்றீர்களே! அதான் உங்களிடம் நான் எதிர்பார்த்ததும்! வேறே விதமாய் நீங்கள் சொல்ல மாட்டீர்கள்!

   Delete
  5. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் இல்லை வம்பு

   Delete
 11. கீதா அக்கா வந்து எப்படியும் பதில் சொல்வார் என்று தெரியும்.  அவர் சொன்னதிலிருந்து நானும் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 12. அவரை சும்மாவா துறைபோகியவரென்றார்கள் ஆனால் அவர் சொன்னால் அப்படியே ஒப்புக்கொள்ள் வேண்டும் வேறு கருத்துகள் சொல்லக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. நான் வேறு கருத்துக்கள் சொல்லக் கூடாது என்கிறபோதே நீங்க இத்தனை மாற்றுக் கருத்துகள் சொல்லி இருக்கீங்களே? சிலவற்றிற்கு மறைபொருள் உண்டெனில் அதை ஒத்துக் கொள்ள வேண்டும். உங்களால் யோகக் கலையில் இப்போது பயிற்சி பெற முடியுமா? இவற்றின் பொருள் அறிந்தாலும் அதைப் பயன்படுத்த முடியுமா? தெரிந்து கொண்டாலும் பயன்படுத்தும்போது தவறு நேர்ந்தால் வேறே பிரச்னைகள் உருவாகும். எங்களுக்கெல்லாம் இது உங்களுக்கு வேண்டாம்; இதோடு போதும் என எங்கள் குருநாதர் சொன்னார். அதை அப்படியே மறுபேச்சுப் பேசாமல் ஏற்றிருக்கிறோம்.

   Delete
  2. //அவரை சும்மாவா துறைபோகியவரென்றார்கள்.// துறையும் போகலை; எங்கேயும் போகலை. உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது. எங்க குரு சொல்லுகிறபடி கேட்டுக் கொள்வேன். அவ்வளவே! அதுவும் இப்போக் கிடைக்கறதில்லை! :(

   Delete
  3. மாற்று கருத்துகள் ஏது சொல்லவில்லை என்னால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியாது புரியாததை புரியவில்லை விளக்கமாக சொல்லக் கேட்கிறேன்

   Delete
  4. புரியாதது எல்லோருக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள இயலாது. அதுவும் இது முழுக்க முழுக்க ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. கந்தர் சஷ்டி கவசமே யோக முறைப்படி எழுதப்பட்டது. சரஹணபவ என்னும் மந்திரமே யோக நிலையில் சொல்ல வேண்டியது! ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. மறைபொருளாக இருப்பனவற்றைப் பொது வெளியில் முறையான மனப்பக்குவம் இல்லாமல் நானும் சொல்ல முடியாது/நீங்களும் கேட்க முடியாது!

   Delete
 13. எனக்குத்தான் காம்ப்ரெஹென்ஷன் போதாது

  ReplyDelete
  Replies
  1. எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுதல் கஷ்டம். இவற்றிற்குப் பொருள் உண்டு. மந்திர உச்சாடனம் போலப் பிரயோகிக்கக் கூடியவை! அவ்வளவில் உங்களுக்குப் புரிதல் இல்லாமல் போகாது.

   Delete
 14. தமிழுக்கு பொருள் உண்டு... மற்றவை கலந்து தமிழை கெடுத்ததும் உண்டு...

  ReplyDelete
 15. எனக்கு புரியவில்லை

  ReplyDelete