Wednesday, July 31, 2019

ஒரு சோதனை                                                 ஒரு சோதனை
                                                ------------------------

நான் என்பதிவு ஒன்றுக்கு எழுதிய ஆரம்பவரிகள் இவை  என்ன பதிவு என்று யூகிக்க முடிகிறதா முடிந்தால் பதிவுகளை  ஊன்றிப் படிப்பவர் நீங்கள்ஷொட்டு கொடுத்துக் கொள்ளலாம்
                                   ...
  என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண 
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற 
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை 
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று 
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக் 
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட 
வெளியே போக வேண்டும் போகிறபோதே 
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத் 
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை 
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும் 
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர 
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும் 
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே 
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது

பல்வேறு genre களில் எழுதியாகி விட்டது எது பற்றி  எழுத நினைத்தாலும் எங்கோ எப்போதோ  எழுதி இருப்பது தெரியவருகிறது இருந்தாலும்  என்ன எழுதியது எல்லாமே உள்வாங்கப் படுகிறதா  சோதிக்கவே இப்பதிவு  Sunday, July 28, 2019

நம்பிக்கைகள் ஒரு அலசல்
                                                     நம்பிக்கைகள் ஒரு அலசல்
                                                    --------------------------------------------

நம்பிக்கை என்னும் தலைப்பில் எழுதி இருந்தேன் இப்பதிவு இருபக்கங்களையும் கொண்டது  யார் வேண்டுமானால்  எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்

  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கைநம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.

ஒரு பதிவின் பின்னூட்டமாக வந்தது

நம்பிக்கைகளில் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று உண்டா?

உங்களது நல்ல நம்பிக்கை, எனக்கு மூட நம்பிக்கையாகப் படும். என்னுடைய நல்ல நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படும்.

நீங்கள் (உதாரணத்துக்கு) சபரிகிரீசனை விரதமிருந்து கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று வணங்குவதை 'கடவுள் நம்பிக்கை' என்று சொல்கிறீர்கள். சிலர், தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து கடவுளை வணங்குவதை 'மூட நம்பிக்கை' என்று சொல்வாங்க. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

நான் பின்பற்றும் இது 'மூட நம்பிக்கை' என்று நம்மால்தான் சொல்லமுடியும். மற்றவர்களைப் பற்றி அவ்வாறு சொல்வது சரியல்ல 

நம்பிக்கை பற்றிய ஒரு அலசல் இது தெரிந்துகொள்பவர் தெரிந்து கொள்ளட்டும் அது பற்றிஎழுதுவதை  நான் ஒரு taboo ஆக நினைக்க வில்லை 
                  
   கோவிலுக்குப் போகிறோம்   நம் துயரங்களைச் சொல்லி வேண்டுகிறோம்  அது வரை சரிதான் ஆனால் என் துயரங்களைத் தீர்த்திடு உனக்கு நானிது செய்கிறேன்  அது செய்கிறேன்  என்றுவேண்டுவதுநமது கணிப்பில் கடவுளிடம் ஒப்பந்தம்போடுவதுபோல் இருக்கிறதே இதை ஏதோ நம்பிக்கை என்று கூறுதல் சரியா பெரும்பாலோர்  கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருக்கிறார். இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.

பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
விசுவாசம் அடிமைகளுக்கும்  முட்டாள்களுக்கும் உரிமையானது
சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை.    இதற்கு இரு
கதைகள்
ஒருவன் மலை உச்சிக்குப் போகிறான்  கால் தவறி கீழே விழும் நிலையில் இருக்கிறான்  விழும்போது ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொள்கிறான் கடவுளே என்னை காப்பாற்று என வேண்டுகிறான் அப்போதுஒரு அசரீரியின் குரல் கேட்டது
அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.
மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன்பின் வானத்தில் இருந்து எந்தக் குரலும்கேட்கவில்லை
முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன்  மாமன்மகள் என்று நினைக்கிறேன்  ஜெமினி கணேசன்  நடித்தது அதில் அவர் மிகவும் கோழையாக சித்தரிக்கப்பட்டிருந்தார் அவருக்கு வீர உணர்வு ஊட்ட அவரது பாட்டி ஒரு தாயத்து கொடுத்து அது அவரது தாத்தாவுடையது என்றும்  அதை அணிந்தால் வீரனாகி விடலாம் என்றும் கூறு வார் ஜெமினி கணேசனும் அதை அணியும் போது மிகவும்வீர உணர்ச்சி வருவதுபோல் தோன்றி எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார்  ஒரு முறை சண்டையிடும்போதுதாயத்து தவறி கீழே விழவும் அவரது வீரமும்  போய்விட்டு நன்கு உதைபடுவார்   நம்பிக்கைக்கு ஒருகதை இது
 அவரிடம்  உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.  அவரது  நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.
மரக்கிளையில் அமரும் #பறவை #கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை ஏனெனில் அதன் #நம்பிக்கை கிளையில் இல்லை அதன் #சிறகுகளில் உள்ளது உன்னில் #நம்பிக்கை வை #வெற்றி உன்னை தேடி வரும்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் #நம்பிக்கை தவிர!
நம்பிக்கை குறித்து நிறைய எழுதி இருக்கிறேன்  நம்பிக்க வெறும் எண்ணங்க்களினால் ஏற்படுவதுஅல்ல நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும்
 என்  நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் இருக்கிறது பெரும்பாலும் நம்பிக்கைகள் பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது
 என்வீட்டின் அருகே ஒரு மரம்தழைத்து வள்ர்ந்திருந்தது  அதன் வேர்ப்பகுதி வீட்டின் அஸ்திவாரத்துக்கே ஊறு விளைவிக்கலாமென்று தோன்றியது அதை வெட்டி அகற்றிவிடநினைத்து ஒரு கூலித்தொழிலாளியை அணுகினேன்  அவர் மரத்தைப்பார்த்து வெட்ட மறுத்து விட்டார் அது அத்திமரமாம் கடவுள் மரமாம் வெட்டினால் அவர் உயிருக்கு ஆபத்தாம் என்ன வெல்லாமோ சொன்னார் பிறகு முதலில் நான் அந்தமரத்தை  வெட்டத்துவங்கினால் அவர் முழுதும்வெட்டுவதாகக் கூறினார்  நான்சரியென்று வெட்டுக்கத்தியால் மூன்று போடுபொட்டேன்  பிறகு அவர் அதைமுழுவதும்வெட்டினார் முதலில் நான்வெட்டியதால் எனக்குத்தான் கேடு என்றார் இது நடந்து சுமார் இருபது ஆண்டுகளாகின்றன  இன்னும்நான் உயிரோடுஇருக்கிறேன்  நம்பிக்கைகளைப்பற்றி பேசும்போது எனக்கு இச்சம்பவம் நினைவுக்கு வரும்
மழைவேண்டி  ஒரு யாகம் நடத்தினார்களாம் யாகம்முடியும்  தருவாயில் நல்ல மழைபெய்யத்தொடங்கிற்றுஎல்லோரும்திசைக்கு ஒருவராகஓடினர் ஆனால் ஒருவன்மட்டும்தன்குடையை விரித்துக்கொண்டான் யாகம்முடிந்து மழை வருமென்னும் நம்பிக்கைஅவனுக்கிருந்தது  குடை கொண்டு வந்திருந்தான் மற்றவர்களுக்குயாகம்வெறும்சடங்காயிற்று 

கொசுறு  சென்றபதிவில் சந்திராயன் விண்கலம்பற்றிய பதிவை இட்டிருந்தேன்   சரியாக வரும்  என்னும்  என்   நம்பிக்கை பொய்த்து விட்டது                                  ...
Friday, July 26, 2019

சந்திரயான் 2
                                                   சந்திரயான்  2
                                                    ------------------

சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய அனுப்பப்படும்  கலன் பற்றிய சில செய்திகள் என் மகனுக்கு வந்து அவன் எனக்கனுப்பி இருந்த தகவல்கள் 15  ஆம்நாள் ஜூலை மாதம் ஏவப்பட இருந்த கலன் ஏதோ டெக்னிகல் ப்ராப்ளம்  காரணமாக22ஆம் நாள் ஏவப்பட்டு இருக்கிறது அதன்  விவரங்கள் இணைப்பில் காணலாம் படித்து முடிந்தபின் எனக்கு ஏதும் விளங்கவில்லை  ஆனால் பதிவுலக நண்பர்கள் விளங்கிக் கொள்வார்களென்று நம்புகிறேன் யான்பெற்ற இன்பம் யாவரும் தூய்க்க  இடுகையில் எழுதுகிறேன்

இதனை அப்லோட் செய்ய நிறையவே நேரமாயிற்றுமுடியாமல் போகவே நானனுப்பி இருந்த லின்க் வழியே இதை காணலாம் தலைப்பில் இருக்கும்  சந்திரயான்  ஐ சொடுக்கவும்   
தென்று அறிந்தவர்கள் மேலு ஆய்வின்மூலம் உறுதிப் படுத்தலாம்   சந்திரனுக்கு கலன் அனுப்பி ஆய்வு செய்யும் நான்காவது நாடாகைருக்கலாம் செப்டம்பர் ஏழாம்நாள்  சந்திரனை ஆயும் கலம்  சந்திரனில் இறக்கத்திட்டமாம்  


எனக்கு என்மகன் அனுப்பியதைசேமித்துக் கொண்டு அதை பதிவிலிட முயன்றபோது எரர் என்று வந்தது அதை என் மெயிலில் இருந்து இணைக்க முயன்றேன்  சரியாக வந்தது போலிருந்தது அப்படியே பதிவிட்டு விட்டேன்  மெயிலுக்குப் போவது இணைப்பில் கிடைக்க மாட்டேன் என்கிறதுஏன் எரர் என்று வந்தது தெரியவில்லை என் தொழில் நுட்ப அறிவு போதவில்லை சந்திரயான் கலனின்  ஏவும்டிடெயில்ஸ் இருந்தது சரி செய்யமுடியாதது  வருத்தமே இதையெ சரி செய்ய முடியாமல் நான் தவிக்கும் போது ஆயிரக்கணக்கான கி மீ தூரத்தில் இருக்கும்  சந்திரனுக்கு கோள் அனுப்பி அதை இங்கிருந்தே கண்ட்ரோல்  செய்வது பிரமிக்கத்தக்கதே  சரியாக பதிவிடமுடியாமல் இருப்பதற்கு  வருந்துகிறேன் எல்லோரும்  மன்னிக்கவும்                                        ...

Tuesday, July 23, 2019

பாடல்களுக்கு இடையே பறவைக் குரல்கள்


தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம்அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள்கவிபாட
செவ்விள நீரின்கண் திறந்து 
செம்மாதுளையின்மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில்கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது
மாங்கனிக் கன்னத்தில்தேனூற சிறு மைவிழிக்கிண்ணத்தில்மீன் ஆட
தேன் தரும் போதைகள்போராட
தேவியின்பொன் மேனி தள்ளாட ஆட
இருவரும்:- தங்கரதம் வந்தது

THANGA RATHAM VANTHATHU VEETHIYILEY - movie: Kalai Kovil (கலைக்கோயில்) இரு பாடல்களுக்கு நடுவே 
பறவைகளின் குரல் கேட்க கீழி ருக்கும் சுட்டியைச் ச்சொடுக்குங்கள்
This is absolutely amazing ! 
Enlarge the pictures & touch the birds, you can listen their tunes 🦜🦜🦜
Just enlarge the frame to see the birds clearly.

Touch ( *only !*, don’t press to long) any bird and you'll hear its call.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

Enjoy ! 🦜🦜🦜


இணையத்தில்   பிடித்த பாட்டைதேடுவது வழக்கம் அப்படித்தேடும்பாடல்களில்  பிடித்தது பாலமுரளி கிருஷ்ணவின் பாடல்கள்இரண்டு பிடித்த பாடல்களைப் பகிர்கிறேன்   அநேகமாக பலரும் கேட்ட மற்றும்பலருக்கும் பிடித்த பாடல்களே  பாடல்வரிகள் உதவலாம்   

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா 
நான் பாட இன்றொரு நாள் போதுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா  

ராகமா சுக ராகமா

கானமா தேவ கானமா 
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் 
யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ.... 
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா   
                                                 ...