புதன், 27 ஜூன், 2018

SEARCH FOR TRUTH



                                              SEARCH  FOR TRUTH
                                              -------------------------------
(பதிவு சற்றே நீண்டு விட்டது  அதனால்  பொறுமை காத்து வாசிக்க வேண்டுகிறேன்  )

 பொழுதுபோகாதபோது நான் எழுதி இருந்த பழைய பதிவுகளையும்  பின்னூட்டங்களையும் படிப்பது வழக்கம் ஒரு பதிவுக்குபின்னூட்டமாக வந்திருந்த வரிகளே இப்பதிவுக்கு  காரணி
THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH என்று காந்தியார் சொன்னதாக எழுதி இருந்தீர்கள்.
இதற்கான விடையை யாராவது கண்டு சொல்லி உள்ளார்களா?இது ஒரு முடிவான கருத்தா?
நீங்கள் இது பற்றி ஒரு பதிவு போட்டால் உங்கள் அனுபவம் பலருக்கு உதவும்.

ஆம் பதிவு எழுத  ஒரு விஷயம்கிடைத்து விட்டது கருத்திட்டவரின் கேள்வி என்னுள்ளும்   ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது  உண்மை  இதைப் படிக்கும்போது ஒரு குறளும்நினைவுக்கு வருகிறது
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின்  தோன்றாமை நன்று
SEARCH FOR TRUTH  முடிவு பெறக்கூடியதா ஆனால் பல கேள்விகளுக்கு விடை காண விழைந்திருக்கிறேன் என்பது மட்டும் நிஜம் எந்த கேள்விக்கும் விடைகள்தானாக வருவதில்லை ஒரு தேடல் இருக்க வேண்டும்  தேடும்போதே தெரியாததால்தான் தேடுகிறோம்என்னும் உணர்வு வேண்டும்   ஒருவர் தேடிக் கண்ட விடைempirical ஆக இருப்பதில்லை இருக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் தேடிக்கண்டவிடைகளுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு
இந்த தேடலின் விளைவாக எழும் கருத்துகளை நான் அவ்வப்போதுபகிர்ந்துகொண்டிருக்கிறேன்  ஆனால் என்  அனுபவப்படி நான்  தேடிக் கண்ட விஷயங்கள் நான்பகிர்ந்தபடி புரிந்துகொள்ளப்படுவதில்லைஎன்றே தோன்று கிறது எழுதியதை விட யாரெழுதி இருக்கிறார் என்பதே புரிதலை திசை மாற்றிவிடுகிறதோ என்னும் சந்தேகமெனக்குண்டு  உதாரணத்துக்கு  வள்ளுவர்  தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின்  தோன்றாமை நன்று  என்று கூறி இருக்கிறார் பல அறிஞர்களும் உரை எழுதி இருக்கிறார்கள் ஆனால் படித்தவுடன் நினைவுக்குஅதில் கண்டபடி வரும் உரை 
 பிறந்தால் புகழுடன்  பிறக்க வேண்டும்  இல்லையென்றால் பிறக்காமல் இருத்தல் வேண்டும் புகழ்பெற முயற்சி செய்தல் அவசியம் ஆனால் பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது இதை நான்  எழுதினால் தர்க்கம்  செய்கிறேன் என்பர்  நான் இவ்வாறு கூறுவதே என்தேடலின் படியாகும்  எதையும்  எப்படியும்  ஏற்றுக் கொள்ளும்  மனோபாவம் எனக்கில்லை ஆனால் பொதுவாக கேள்வி கேட்காமல் வழக்கத்தில் நிலவி வருவதை ஏற்றுக் கொண்டால்  தேடல் எங்கிருந்துவரும் உண்மையைத் தேடும்போது அது மனம் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்ல வேண்டும்  அப்போதுதான் அந்த தேடல் முற்றுப் பெறும்
பொதுவாக ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் சொல்கிறார்கள் என்ன என்று தெரியாமலேயே  நாமும்  வழிமொழிகிறோம்   எனக்குள் அது வேறு கேள்விகளை எழுப்பியதுஅதுவே என்னை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்னும் பதிவைஎழுத வைத்தது      
சுட்டி இதோ ஜீவாத்மா  வலையில் படிப்பவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை  சுட்டி தேடிப் போகமாட்டார்கள் அவர்களுக்காக அந்தப் பதிவ்ன் சாராம்சம்
உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
 மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள்.
நான் தேடியபோது மனதில் பட்டதைக் கூறினேன் ஒரு பின்னூட்டம் ரசிக்க வைத்தது

ஜீ“வாத்மா பரமாத்மா தத்துவத்துக்கு மிக அற்புதமாக எளிமையான வியாக்யானம் கொடுத்துவிட்டீர்கள் பாலு சார்.

இன்று பூராவும் ஊதுவத்தி அணைந்தபின்னும் வெளியெங்கும் கமழும் சுகந்தமாய் உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைச் சூழ்ந்திருக்கும்.

நல்ல எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்.
என் எண்ணங்கள் பலருக்கும்  ஒவ்வாமல்  போகலாம்  ஏன்  என்றால் அவர்களால் சுயமாக சிந்திக்க முடியவில்லை  காந்திஜியின்  search  for truth  என்பதற்கு என் வழியில் தேடிகண்டது
 என் சிந்தனைகள் சற்று வித்தியாசமாய் இருக்கும்  பொதுவான பீட்டென் ட்ராக்கில் இல்லாமல் வேறு மாதிரி இருக்கும்  என்று சிலருக்குப் புரியும் மரணத்துக்குப்பின்   என்ன என்னும்  விதத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார்
 சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேரகாத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject 
இதற்கு பதிலாக நானும் ஏதாவது எழுதி மழுப்பி இருக்கலாம்  ஆனால் என்னுள் உறையும்   சில கேள்விகளுக்கு விடை காண முயலும் பதிவாக உரதத சிந்தனை சில தேடல்கள்  என்று பதிவு  எழுதினேன்  பொதுவாகவே  தேடல் என்றாலேயே உண்டா இல்லையா என்று தெரியாத ஒருகடவுளைப் பற்றிய தேடலாகதான்   பலரும்  எண்ணுவார்கள்  சுட்டிகள் தருகிறேன்   படித்துப் பாருங்கள் உரத்த சிந்தனைகள்  
   தொடரும்    பதிவில் வரும் சில வரிகள் உங்களுக்காக

          எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
          ஆக்கலும்  அழித்தலும் வெறும் தோற்றமே.,
           உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
           இது விஞ்ஞானம்  கூறும் தேற்றமே. 

இருளும் ஞாயிறும் விடியலும் 
மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும்
நேற்று போல் இன்றில்லைஇன்று போல் 
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே. 

           விஞ்ஞானக் கூற்று உண்மையாயின்
            நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
            யாதாக மாறினான்.?உடலம் வெந்து 
            சாம்பலாயிருக்கலாம்இல்லை மண்ணில் 
            மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
           அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் 

            எங்கே என்னவாக மாறினான்,?


இன்று  நானாக அறியப்படும் நான் நாளை 
என்னாவேன்சாம்பலோ மண்ணோ  அல்லாமல்.
உயிர் என்ற ஒன்று இருந்ததால்தானே 
என் அப்பன்  அப்பனாகவும்நான் 
நானாகவும் அறியப்படுகிறோம்.?



அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா என்றழைப்பின்  அதுவும் எங்கே  உள்ளது. ?
யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள் 
எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே
விஞ்ஞானக் கூற்றுப்படிவிஞ்ஞானம்  விளங்க வில்லை

            ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்
            ஆயிரம்தான் கூறினாலும்அதெல்லாம் ஒன்றின் 
            வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது. 

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன். 
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான்.அதுவரை ஹேஷ்யங்கள்தான் 

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம். 

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு 
அதில்  ஒளி  தருவதே ஞாயிறின் ஜொலிப்பு 
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.


             ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க 
             ஞாயிறின்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.
மேலே நான் குறிப்பிட்டு  இருக்கும் நம்பிக்கைக்கு  வெகு ஜனப் புரிதல்   வித்தியாசப் படுகிறது

தேடல் இன்னும்  முற்றுப்பெறவில்லை ஆனால் ஏன்  நாம் ஒரு வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம்   என்னும் கேள்விக்கு பதில் காண முயலுகையில் நாம் நம்மை அறியாமலேயே சின்ன வயதிலேயே மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை திரு அப்பாதுரை அவர்களின் ஒருபதிவின் மூல்ம்தெரிந்துகொண்டேன்
மனதளவில் நாம் அடிமைகள் ஆகி விட்டோம்   காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் செய்திகளுக்கு நம்மை அறியாமலேயே அடிமையாய் இருக்கிறோம்

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளைஇனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறைஅறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

பதிவின் நீளம் அதிகமாகிப்போகிறதுவாசிக்க மாட்டார்கள் என்னும் பயமும்  உண்டு  இருந்தாலும்  ஒரு செய்தியோடு முடிக்கிறேன்  செர்ச்  ஃபர் ட்ருத்  என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று  அதற்கு

When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.






47 கருத்துகள்:

  1. // ஆனால் பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது இதை நான் எழுதினால் தர்க்கம் செய்கிறேன் என்பர்// இல்லை, நீங்கள் சொல்வது சரியே! இதையே நான் வேறு விதமாய்க் கூறினேன். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறக்கும்போது சில குழந்தைகள் கருப்பாகவும், சில குழந்தைகள் சிவப்பாகவும் பிறப்பதோடு சில குழந்தைகள் ஏழைகள் வீட்டிலும் சில பணக்காரர் வீட்டிலும் சில நடுத்தரக்குடும்பத்திலும் பிறக்கின்றன. ஆகப் பிறக்கும்போது எப்படிப் புகழுடன் பிறக்க முடியாதோ அதே போல் தான் ஏற்றத் தாழ்வும் பிறக்கும்போதே தவிர்க்க முடியாத ஒன்று. அது நம் கையில் என்றுமே இருக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணங்களைத் தேடுவதுதான் என்வழி கடவுளைப் பார்த்ததுண்டா என்னும் கேள்விக்கு மின்சாரத்தைக் கண்டதுண்டா என்று எதிர்க் கேள்விகள் தேடலுக்கு முக்கிய எதிர்வாதம்

      நீக்கு
  2. மற்றவற்றுக்குப் பின்னர் வரேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஆனால் இவன் இப்படித்தான் என்ற எண்ணத்தோடு வேண்டாமே

      நீக்கு
    2. உங்கள் கருத்துகள் தான் இங்கே சொல்கிறேன். நீங்க எப்படினு எனக்குத் தெரியாது. பதிவின் மூலம் தீர்மானிக்கவும் மாட்டேன். முடியவும் முடியாது!

      நீக்கு
    3. ஏனோ நான் சொலதற்கு எதிர் வாதம்போல் தோன்றியது என் கருத்துகளையே சொல்வதற்கு நன்றி

      நீக்கு
  3. தந்தை பெரியாரும்கூட எதையும் ஆராயாமல் கேள்வி கேளாமல் பிறருடைய கருத்தை ஏற்காதே என்று...

    மிகவும் ஆழமான அலசல் சுட்டிக்கு சென்று 2015-ல் படித்ததை மீண்டும் படித்து கருத்திட்டேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவின் காரணம் பற்றி எழுதி இருக்கிறென் பெரியார் சொன்னதை கேட்டதில்லை

      நீக்கு
  4. பிறக்கும் போதே புகழுடன் பிறப்பது என்பதெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

    மற்றபடி செர்ச் ஃபார் ட்ரூத் என்பது என் சிறிய மூளைக்கு இது மிக மிக மிக மிக மிகப் பெரிய சப்ஜெக்ட். இப்படித் தேடும் அறிவு எல்லாம் எனக்கில்லை ஸார். எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் அன்பே சிவம். அதையும் கூட ஃபாலோ செய்ய முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறளுக்கு உரை எழுதியவர் சற்றே வித்தியாசமாய்க் கூறு கின்றார் உண்மையைத் தேட மூளையின் முனைவு முக்கியம் எதைச்சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பவர்களால் முடியும் ஒன்றல்ல அன்பேசிவம் என்னும் கொள்கையும் நல்லதே ஆனாலொ அது மற்ற வற்றை ஏற்கக் கூடாது என்று கூறவில்லையே

      நீக்கு
  5. ஜிஎம்பி சார் - முழுவதும் படித்துப்பார்த்தேன்.

    //"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"// - பொதுவா நீங்க சொல்வது, எதையும் ஆராய். மற்றவர் சொல்கிறார்கள் என்பதற்காக நடக்காதே.

    இதை, ஒரு மகன், அப்பாவிடம், 'ஏன் படி படி என்று சொல்றீங்க.. என் போக்குல விடவேண்டியதுதானே, மார்க் அதிகமா வாங்கலைனா என்ன, காமராசர் படித்தாரா இல்லை நிறையபேர் படித்தார்களா, அவர்களெல்லாம் நல்ல நிலைமைக்கு வரலை?' என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதுக்கு முடிவு உண்டா? ஒருவர், 'ஆட்டைப் பலி கொடுக்கிறேன் என் குல தெய்வத்துக்கு.. அதனால் எனக்கு நன்மை' என்று சொல்கிறார். என் மனதில் அது ஏற்புடையதாக இல்லை, அதனால் நான் அதனைச் செய்வதில்லை. அவர் சொல்வது சரியா, இல்லை நான் எண்ணுவதுதான் சரியா என்று ஆராய எனக்கு காலம் இல்லை. 'என் குடும்ப வழக்கம் இப்படி இருக்கிறதா, என் அப்பா/பெரியவர்களின் கருத்து என்ன' அதனை நாமும் தொடருவோம் என்றுதான் நினைக்கத் தோன்றும். 'ஏன் மூடத்தனமாக அவர்களைத் தொடருகிறார், ஏன் ஆராய்ச்சி செய்துபார்க்கவில்லை' என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது?

    ஆன்மீகமும் மற்ற பழக்கங்களும் அப்படித்தான். அப்பா, நம்மை விடப் பெரியவர், அவர் செய்வது, பல பெரியவர்கள் செய்யும் முறை, வழிதான், அதனால் அந்தப் பாதையிலேயே போவோம் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். அபூர்வமாக ஓரிருவர், 'ஏன்' என்ற கேள்வி கேட்டு ஆராய முற்படுவர். அது அவர்களை வேறு பாதைக்கு இட்டுச் செல்லலாம் இல்லை அவர்களது காலத்தை வீண்விரயம் செய்யவைக்கலாம். 99% மனிதர்கள் வீண் ரிஸ்க் எடுப்பதில்லை, அதற்கான நேரம் இல்லை.

    //சின்ன வயதிலேயே மூளை சலவை செய்யப் பட்டிருக்கிறோம்// - நமக்கு அவகாசம் இல்லாததனால் பெரியவர்கள் இதை இதைச் செய், இதை இதைச் செய்யாதே என்று சொல்கிறார்கள். புத்தகத்தை மிதிக்காதே, அது சரஸ்வதி என்று சொல்கிறார்கள். அதை நம்பினால் அதில் என்ன கேடு வந்துவிட்டது? சிலர், 'புத்தகம் என்பது பலரின் எண்ண உழைப்பு, பொருள் உழைப்பு நேர உழைப்பு' இவற்றால் வந்தது, அதனால் அதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்று நினைத்து 'மிதிக்காமல் இருந்தாலும் அதுவும் சரியே. அல்லது இப்படி எல்லாம் ஆராயாமல், என் அப்பா, வாத்தியார் சொல்லித்தந்தது, அதனால் அதனையே ஃபாலோ பண்ணுவோம் என்று நினைத்தால் அதனால் என்ன கேடு? எனக்குப் புரியவில்லை.

    முன்னோர்களில் பலர், 'இவர் நம் வீட்டுக்குள் நுழையக்கூடாது', 'இந்தக் குலத்துடன் பழகக்கூடாது' என்றெல்லாம் சொன்னதை, நம் பட்டறிவினால் புறம் தள்ளியிருக்கோம், காரணத்தை ஓரளவு அனுமானித்துக்கொண்டிருக்கோம், அதற்கு ஏற்றபடி நாம் இப்போது நடந்துகொள்கிறோம். இதிலும் நாம் ஆராய்ச்சி செய்யவில்லை, ஆனால் நம் பட்டறிவை உபயோகப்படுத்தியிருக்கோம். சிலவற்றை நாம் செய்கிறோம், பலவற்றை சமூகம் செய்யவைக்கிறது. அப்படித்தான் முன்னேற்றம் நிகழும்.

    'தோன்றிற் புகழொடு தோன்றுக' - இதை, நீ எப்படி இந்த உலகில் கானப்படவேண்டும் என்பதற்கான அறிவுரையாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? நீ வாழும் முறை மூலம், உன் அப்ஜெக்டிவ் ஆஃப் லைஃப், 'புகழொடு இருப்பது' என்று வைத்துக்கொண்டு அதை நோக்கி பிரயாணப்படு, அப்படி இல்லாவிட்டால், உன் வாழ்க்கை வீணாகிப்போனதுதான் என்று சொல்வதுபோல் எடுத்துக்கொள்ளக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் என் பதிவு முழுவதையும் படித்ததற்கு நன்றி நான் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோமென்பதை விளக்கவே அடிமைத்தனம் என்று குறிப்பிட்டு பல விஷயங்களை எப்படி என்று சொல்லி இருக்கிறேன் பெற்றோர் கூறுவதைக்கேட்கக் கூடாதுஎன்று சொல்லவில்லை
      "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது பற்றியே கூறி இருக்கிறேன் பட்டறிவு என்பதன் படி மாறி வருகிறோம் என்கிறீர்கள் நான்விளக்க முயன்றிருக்கும் விஷயங்களும் பட்டறிவாக வரும் என்பதும் என் நம்பிக்கை உதாரணத்துக்கு இப்போதெல்லாம் நியூக்லியஸ் ஃபாமிலி வந்து விட்டது அதுவும்பட்டறிவின் பலன்தானே தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதே விமரிசனத்துக்கு உட்பட்டது என்பதே என் கருத்து

      நீக்கு
    2. //இப்போதெல்லாம் நியூக்லியஸ் ஃபாமிலி வந்து விட்டது அதுவும்பட்டறிவின் பலன்தானே //

      அது எப்படி பட்டறிவின் பலன் என்று சொல்றீங்க? 5+ குழந்தைகள் பெற்றுக்கொண்ட முன்னோர் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தனர். கஷ்டம் நஷ்டம் பகிர்ந்துகொண்டனர். இப்போ தனிக்குடித்தனம் என்று ஆரம்பித்து, சவுகரியமா வாழ குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டுள்ளோம். காலம் செல்லச் செல்ல, ஒரு குழந்தையும் எதுக்கு, குழந்தையே வேண்டாமே என்று பலர் நினைக்கும் காலமும் வரும். அது பட்டறிவில்லை, சுயநலம் என்பது என் எண்ணம். (அதாவது மூன்று, இரண்டு, ஒன்று, ஒண்ணுமே தேவையில்லை என்று குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துவருவது. ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. உங்களுக்கு ஒரு உதாரணம் என் வாழ்வில் இருந்தே தருகிறேன் என் தந்தையார் திருமணம் செய்து மனைவி மூலம் ஆறு குழந்தைகள் பெற்று ஒன்று இறந்து ஐந்து நின்றது மறு மணம்செய்டார் அந்த மனைவி மூலம் ஏழு குழந்தைகள் பெற்று அதில் மூன்று இறக்க நான்கு மிஞ்சியது அவர் தனது 49ம் வயதில் போய்ச் சேர்ந்து விட்டார் 49 வயதுக்குள் 13 குழந்தைகளைப் பெற்று அவர் சென்று விட்டார் குழந்தைகள் தெய்வம் தருவது என்று சொல்லியே பிறக்கவிட்டு அவர்களை வளர்க்க வில்லை அவரது செயலால் பாதிக்கப் பட்டவர் அவரது குழந்தைகளே அந்த நிலைகண்டு அதில் பாடம் கற்று அவரது குழந்தைகள் இரண்டுக்கு மேல் பெற்று கொள்ளவில்லை இதில் சுயநலம் எங்கு வந்தது அவர் வாழ்வில் இருந்துபாடம் கற்றனர் இதுதான் பட்டறிவு காலத்துக்கு தக்கபடி பாடம்கற்க வேண்டும்என் தந்தைபெற்றவைகளை குடும்பத்தார் பகிரவில்லை / குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துவருவது. ஹா ஹா ஹா/ பட்டறிவின் பலன் நகைப்புக்குரியது அல்ல இன்னும் எழுதினால் மறு மொழியே நீண்டுவிடும்

      நீக்கு
    4. தி.தனபாலன் அவர்களில் புது இடுகையின்மூலம் மீண்டும் இங்கு வந்தேன். அன்று பதில் சொல்லலை. இன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

      பழைய காலத்தில் அளவுக்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். நம்மிடம் எவ்வளவு இருக்கு, நாம் வளர்க்கமுடியுமா என்றெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. இது என்னைப் பொறுத்தவரையில், 'அறியாமை'தான் காரணம். 'நாம் பெறும் குழந்தைகளுக்கு' அதாவது அவர்களை நல்ல முறையில் அடல்ட் ஆகும் வரை வளர்ப்பதற்கு நாம்தான் காரணமாயிருக்கணும் என்ற பொறுப்பு அவர்களுக்குத் தோன்றவில்லை. உலகில் நிலையாமை அதிகம். அதனால் நாம் உருவாக்கும் குழந்தைகளை நாம் முடிந்த அளவு வளர்க்கவேண்டும், அதற்கான பொருள் வைத்திருக்கவேண்டும்.

      இஸ்லாமிய தத்துவம் என்னவென்றால் (இந்துக்களில் மூலத் தத்துவமும் இதுதான்), குழந்தை என்பது கடவுள் கொடுப்பது. கொடுத்தவனுக்குத் தெரியும் அவைகளை எப்படி வளர்ப்பது என்று. அதனால் நாம் சந்ததிகள் பெறுவது நம் கடமை, அதைக் கட்டுப்படுத்துவது இறைவனுக்கு ஏற்புடையது அன்று.

      கோடி கோடியாகச் செல்வமிருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியமே இல்லை. வாய்ப்பிருந்தால் அவர்கள் 10-15கூட பெற்றுக்கொள்வார்கள். ஹா ஹா ஹா. நீங்கள் சொல்லியிருப்பது மத்திய தர மற்றும் ஏழை வகுப்பினருக்கு. ஏனென்றால், நமக்கு, நம் குழந்தைகளையும் வளர்க்கணும், நாமும் நல்லா சவுகரியமா இருக்கணும் (இதுதான் சுயநலம்).

      நீக்கு
    5. நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் சிந்திக்கவில்லை பொழுதுபோக்காகவே பிள்ளைகள் பெறுவதை நினைத்தார்களோ என்னவோ செயல் நம்முடையது கடவுள் மேல் பொறுபொபை சுமத்துறோம் போதாததற்கு மரம் வைத்டவன் தண்ணீர் ஊற்றுவானென்னும் சப்பைக்கட்டு வேறு நாமும் நம் குழந்தைகளும் நலமாக இருக்கவேண்டும் என்று நினைப்பது சுய நலமல்ல பொறுப்புணர்ச்சி

      நீக்கு
  6. Sorry, Sir, I am going to look at this issue in a completely different angle/perspective! :)

    ****தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று****

    என்னைப் பொருத்தவரையில் இது ஒரு அரைவேக்காட்டுத்தனமான திருக்குறள். உடனே திருவள்ளூவரை எல்லாம் விமர்சிப்பது தப்பு என்பார்கள்? திருவள்ளூவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல!

    புகழ் என்பது மனிதர்கள் மற்றவரை தன் அறீவால் மதிப்பிடல்.
    சாதாரண புழு, பாக்டீரியாக்கள் உலகுக்கு செய்யும் நன்மைகள் புகழ் பெற்ற மனிதன் செய்வதைவிட பலமடங்கு.மனிதனின் மதிப்பீட்டில் புழு, பாக்டீரியா என்பது அருவருக்கத்தக்க ஒரு இழிபிறவி. ஆனால் உண்மையில் அவைகள் வாழ்ந்து ஆற்றூம் பணீ தாவரங்கள் ஆற்றூம் நன்மைகளவிட பலமடங்கு. மனிதன் வாழும் சுயநலவாழ்வைவிட பலமடங்கு நன்மை பயக்கும் வாழ்வு அவைகள் வாழ்வது.

    மனிதன் ஒரு சின்ன உலகில் தனக்குத்தானே நிதி முறகள வகுத்துக்கொண்டு கண்மூடித்தனமாக வாழ்கிறான் என்பதே உண்மை. அவனுடைய மதிப்பீடு பல சமயங்களீல் அரைவேக்காட்டுத்தனமானது.

    உலககறீயாமல் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்து பல நன்மைகள் செய்து இறக்கும் ஜீவராசிகள், மனித மதிப்பீட்டில் புகழுடன் வாழ்ந்து சாகும் மனிதனைவிட பலமடங்கு மேலானவைகள். அவைகல் எப்புகழுடனும் பிறக்கவில்லை! மனிதனின் மதிப்பீடில் எப்புகழும் பெறூவதும் இல்லை. சாதாரணமாக வாழ்ந்து சாகின்றன.

    Human judgment does not have absolute value because human beings are ignorant about lots of things.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது மனிதனை விடநலம்பயக்கும் பலதுமுண்டு என்பதை நானும் ஏற்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி சார் உங்கள் விளக்கமும் உண்மையைக் கண்டறியும்போது வந்ததுதானே

      நீக்கு
  7. ஒரு குறளுக்கான விளக்கம் மற்றோரு அதிகாரத்தில் ஒரு குறளில் இருக்கும் அல்லது அதற்கு அடுத்த குறளில் இருக்கும்... 24.புகழ் அதிகாரத்தை முழுமையாக அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால்... தேடல் இன்னும் அதிகமாகும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்பதிவில் ஒரு குறள் வந்தது எனக்கு எல்லாக் குறளுமே தெரியாது மேலும் பதிவு குறளை குறை சொல்ல அல்ல கற்பவற்றை உணர்ந்துகற்க வேண்டுமென்பதே செய்தி உண்மைநிலை நோக்கித்தேடுவதே நோக்கம்

      நீக்கு
  8. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்.

    இந்த குறளின் விளக்கத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்திராத குறள். மிகுந்த அர்த்தம் பொதிந்தது திண்டுக்கல் தனபாலன். பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு/குணம் இருக்கும். (பிறந்த குணத்தை மட்டையால அடித்தாலும் போதாது என்று பெரியவர்கள் சொல்லுவர், பசங்க வம்பு பண்ணும்போது).

      இதை வெறும் ஜீன் காம்பினேஷன் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஊழ்வினை என்று வள்ளுவர் இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

      நீக்கு
    2. @டிடி குறளில் தேர்ச்சி பெற்றவர் நீங்கள் நான் கூறவந்ததை குறளே சொல்கிறது என்று நினைக்கிறேன்

      நீக்கு
    3. @நெத விளக்க முடியாதவற்றுக்குக் காரணமாக ஊழ்வினை என்று கூறி செல்லல் நம் குணம் மேல் நாட்டு அறிஞர்கள் குழந்தைகளின் குணம் அவர்களது மூன்று வயதுக்குள்ளேயே நிர்ணயிக்கப்படுவதாக எண்ணுகின்றனர் நானும் அதை ஒட்டியே வாழ்வியல் பரி மாற்றங்கள் என்றுஒருபதிவு எழுதி இருக்கிறேன்

      நீக்கு
    4. மேல்நாட்டு அறிஞர்களிலும் பலர் விதி fate என்று கூறுவது உண்டு! அங்கேயும் கடவுள் நம்பிக்கை உண்டு. பாவமன்னிப்புக் கேட்டால் பாவம் போயிடும்னு சொல்வாங்க! ஆனால் நம்முடைய தர்மம் செய்த குற்றத்துக்கு வருந்தச் சொல்லும். வருந்தித் திருந்தினால் உனக்கு நல்லது என அறிவுறுத்தும். பாவம் போகாது. அதற்கான பலனை நீ அனுபவிச்சே ஆகணும். ஆனால் அதன் தாக்கம் உன்னிடம் இருக்காது என்று சொல்லும். அதாவது தாங்கும் மனோபலம் அதிகரிக்கும் என்றே இங்கே நான் பொருள் கொள்கிறேன்.

      நீக்கு
    5. //குழந்தைகளின் குணம் அவர்களது மூன்று வயதுக்குள்ளேயே நிர்ணயிக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.// பதினைந்து வயது வரை நியம, நிஷ்டைகளோடும், கடவுள் நம்பிக்கையோடும் இருந்து விட்டுப் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் மாறியவர்கள் உண்டு. 40 வயது வரை கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் தீவிர பக்திமானாகவோ, ஆன்மிகவாதியாகவோ (பக்தி வேறு, ஆன்மிகம் வேறு) ஆனவர்களும் உண்டு.

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் நான் எழுதுவது பல நூல்களையும் வழக்கங்களையும் பார்த்துஅடன் பின்மனதில் தோன்றுவதை எழுதுகிறேன் நான் எங்கும் மேலை நாட்டு விஷயங்களெல்லாம்சிறந்தது என்று கூற வில்லையே /பாவமன்னிப்புக் கேட்டால் பாவம் போயிடும்னு சொல்வாங்க! ஆனால் நம்முடைய தர்மம் செய்த குற்றத்துக்கு வருந்தச் சொல்லும். வருந்தித் திருந்தினால் உனக்கு நல்லது என அறிவுறுத்தும். பாவம் போகாது. அதற்கான பலனை நீ அனுபவிச்சே ஆகணும். ஆனால் அதன் தாக்கம் உன்னிடம் இருக்காது என்று சொல்லும். /பாவமன்னிப்பு என்பதும் செய்த செயல்களுக்கு வருந்தச் சொல்வதும் ஒன்றுதான் என்று தோன்று கிறது பாவ மன்னிப்பு கேட்டாலோ செய்த செயல்களுக்கு வருந்தினாலோ மன பாரம்குறையுமல்லவாஇது குறித்து நானெழுதீருக்கிறேப் தொடரும் என்னும் சுட்டியை சொடுக்கினால் தெரியும்

      நீக்கு
    7. Iam ok you are ok என்னும் உளவியல் நூலில் கண்டதை எழுதினேன் பேசிக் குவாலிடிஸ் பற்றி கூறும் நூல் அது நம்மை திருத்திக் கொள்ள நம்மைப்பற்றி அறிதல் அவசியம்அல்லவா கடவுள் பக்தி ஆன்மீகம் என்பதுப்பற்றிநானெங்கும் எழுதவில்லை இப்பதிவில்

      நீக்கு
  9. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.

    இந்த குறளின் விளக்கம் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்...?

    தேடுங்கள்... விடை கிடைக்கும்... அடுத்த சிந்தனை பதிவு தங்களிடமிருந்து எங்களுக்கும் கிடைக்கும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் 'கற்றோர்' என்பதையே எப்படி விளங்கிக்கொள்வது? வெறும் நூல் படிப்பா? அல்லது அதனைப் புரிந்துகொண்டு அதன் கண் ஒழுகுதலா? எத்தகைய புத்தகங்களைக் கற்பது? வாழ்க்கையில் முனைவர் படிப்பெல்லாம் படித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்துபவர், கொலை செய்பவர் போன்றவர்களைச் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

      திண்டுக்கல் தனபாலன் விளக்கம் என்ன?

      நீக்கு
    2. அல்லது, நூல்கள் கற்றவனுக்கு கண்கள் இருப்பதாக அர்த்தம். அதனால் அவனால் சிந்தித்து அதனைப் பயன்படுத்தி முன்னேற இயலும். (அவன் அதை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அது அவனுடைய பிரச்சனை). ஆனால் நூல்களைக் கல்லாதவனுக்கு பகுத்தறியும் திறனே இருக்காது என்ற பொருள் வருமா?

      நீக்கு
    3. கண்கள் என்பது இங்கே எதைக் குறிக்கும்? முகத்தில் இருக்கும் இரு கண்களை மட்டுமா? அந்தக் கண்களால் பார்க்கும், படிக்கும் எல்லோரும் கற்றோரா? இங்கே கற்றோர் என்பதன் பொருளே வேறே என நினைக்கிறேன்.

      நீக்கு
    4. @டி டி ஒரு குறளே எததனை சந்தேகங்களை கிளப்புகிறது சிந்தித்து தேடுங்கள் என்று தான் நான்கூற வந்தேன்

      நீக்கு
    5. நெத. ஒரு விதத்தில் எனக்கு மகிழ்வு தருவது கேள்விகளை ஆராயவிரும்புகிறீர்கள் என்னும் எண்ணமே கற்பது என்பதுவெறு நூல் அறிவால் மட்டும் வருவதல்ல நூல்களும் உதவலாம் என்பதுதான் என் எண்ணம்

      நீக்கு
    6. @கீதா சிந்திக்க துவங்கி இருக்கிறீர்கள் ஆனால் அதற்கு முன் எந்த முடிவுக்கும் வரக் கூடாது என்பதும் என் எண்ணமாகும்

      நீக்கு
    7. நீங்க வேறே ஜிஎம்பி சார், சிந்திக்கிறது தான் என்னோட பிரச்னையே! ராத்திரி இந்தச் சிந்தனைகள் அதிகம் ஆகும்போது தூக்கம் வராது! :)))) நீங்க என்னடான்னா இப்போத் தான் சிந்திக்கவே ஆரம்பிச்சிருக்கிறதாச் சொல்றீங்க! :)))))))

      நீக்கு
    8. சிந்தில்லிறீர்கள் என்று நான்சொன்னதன் காண்டெக்ஸ்ட்புரிந்துகொள்ளுங்கள் ஒரு குறளின் பொருளே அதுவா இதுவா என்று நினைக்க வைப்பதையே கூறி இருந்தேன் நீங்கள் சிந்திக்கிறீர்கள் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் மாத்தியோசி என்பதுபோல் இருக்கிறதா இல்லை அதே பீட்டென் ட்ராக்கா என்பதுதான்கேள்வி

      நீக்கு
  10. கர்மா,ஆன்மா, ஆத்மா, மறுப்பிறப்புன்னு சொல்லி என்னை ஒரு உறவு பிரிந்தது. அன்றிலிருந்து எனக்கு இதில் நம்பிக்கை இல்லாம போயிட்டுதுப்பா...

    ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினைன்ற அறிவியல் காரணத்தை நம்பியே என் வாழ்க்கை பயணம் போகுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு நிகழ்வு சிந்தனையை திசை திருப்பக் கூடாதுமேம்

      நீக்கு
    2. @ராஜி, பிரிவினால் அவங்களுக்குத் தாக்கம் ஏதும் இல்லைனா நீங்க அதுக்காக வருந்தத் தேவை இல்லை. பிரியணும்னு இருந்ததால் தான் பிரிவே ஏற்பட்டிருக்கும்! நமக்கு யார் தேவையோ, எது தேவையோ அது தான் நம்மிடம் இருக்கும். இதையும் நான் பலமுறை பார்த்துட்டேன்! :)))))

      நீக்கு
    3. ராஜி அவர்கள் வருந்துவதுபோல் இல்லைஒருபாடம் கற்றதுபோல் இருக்கிறது

      நீக்கு
  11. பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும் இல்லையென்றால் பிறக்காமல் இருத்தல் வேண்டும் புகழ்பெற முயற்சி செய்தல் அவசியம் ஆனால் பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது இதை நான் எழுதினால் தர்க்கம் செய்கிறேன் என்பர்

    ஒருவன் பிச்சைக் காரனாய் பிறப்பது தவறல்ல, ஆனால் பிச்சைக்காரனாகவே இறப்பதுதான் தவறு என்பர்.
    உழைப்பு வேண்டும்
    எல்லாம் என் நேரம்
    எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்குவது தவறு,
    தான் செய்யும் தவறுக்கெல்லாம், முன்வினைப் பயன் எனப் பொய் காரணம் கற்பித்துக் கொண்டு, வீனில் காலத்தைக் கழிப்பதுதான் தவறு என்று எண்ணுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /தவறுக்கெல்லாம், முன்வினைப் பயன் எனப் பொய் காரணம் கற்பித்துக் கொண்டு, வீனில் காலத்தைக் கழிப்பதுதான் தவறு என்று எண்ணுகின்றேன்./.

      சரியான சிந்தனை என்றே நினைக்கிறேன்

      நீக்கு
  12. தேடிக் கண்ட விடைகளுக்கு மதிப்பு ஒரு புறம் இருக்கின்றபோதிலும், அதனைப் பெறும்போது நாம் பெறும் நிம்மதி அளவிடற்கரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ செர்ச் ஃபர் ட்ரூத் என்னும் வாசகம் எனக்குள் ஆழ்ந்து விட்டது

      நீக்கு
  13. பதிவு நேற்றே படித்து விட்டேன். என்ன கருத்துச் சொல்ல என்ற மயக்கத்தில் வந்த கமெண்ட்டுகளை அவ்வப்போது படித்து வந்தேன். கீதா அக்கா, நெல்லை கமெண்ட்டுகள் கவர்ந்தன. தனபாலன் கமெண்ட்டும் கவர்ந்தது. நன்றாக யோசித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பொதுவாக பிறர்கருத்துகளைப் படித்தாலும் அவை என் மனதில் பட்டதை சொல்லவைக்க தடையாகாது யார் என்ன சொன்னாலும் என்கருத்து என்றுஒன்று இருக்குமல்லவா

      நீக்கு