Monday, March 31, 2014

என் பதிவேதுமில்லை ,ப்கிர்வே


                     என் பதிவேதுமில்லை.... பகிர்வா
                      ---------------------------------------------
எழுதுவது என்பது நினைத்த மாத்திரத்தில் முடிவதில்லை. நான் விரும்பும் தலைப்பும் அதை நான் எழுதினால் சிலராவது ரசிப்பார்கள் என்றநம்பிக்கையும் வேண்டும். , கற்பனைக்கு எங்கோ கடிவாளம் இட்டுவிட்டது போல் இருக்கிறது. இருந்தாலும் பதிவுலகில்  நான் எழுதுவதையோ இல்லை வேறு ஏதாவது பதிவிடுவதையோ சிலராவது எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இப்பதிவு எனக்கு வந்த சில படங்கள், காணொளிகள் இவற்றின் பதிவே.ரசிப்பீர்கள் என்று தெரியும்  கீழே ஒரு படம். அந்தப் படத்தை சாதாரணமாகப் பார்த்தால் தெரியாததுகவனித்துப் பார்த்தால் தெரியும் எங்கே பார்த்துச் சொல்லுங்கள்



சாது மிரண்டால் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் இங்கு ஆடு மிரண்டால்.....என்ன நடக்கிறது பாருங்கள்


நடனம் ஆடுவது கண்டிருக்கிறோம் உடலின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து அழகு பாவத்துடன் அசைப்பது ( தாளத்துக்கு ஏற்ப )என்று புரிதல் ஆனால் முகத்திலேயே , முகத்தாலேயே ஆடும் நடனமிதோ .பார்த்து ரசியுங்கள்.

மீன் வகைகளில் டால்ஃபின்கள் புத்தி கூர்மை உள்ளவை. நான் துபாய் சென்றிருந்தபோது ஒரு ஷோவுக்குப் போயிருந்தேன் டால்ஃபிகள் என்னவெல்லாம் செய்கின்றன காணீர்.



என்ன நண்பர்களே ரசித்தீர்களா. இன்னும் சில காணொளிகள் பிறிதொரு பதிவில்.
   

Friday, March 28, 2014

கன்னட கவி சர்வக்ஞா


                                    கன்னட கவி சர்வக்ஞா
                                    --------------------------------
( மயிலின் தோகை விரிப்போடு வணக்கம் கூறி வரவேற்கிறேன்)




திருவள்ளுவர் யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும் திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
“கைகள் அள்ளிய நீர் பதிவர் திரு சுந்தர்ஜி அவர்கள் சுபாஷிதம் என்னும் தலைப்பில்  இம்மாதிரி பல அறிஞர்களின் வாக்குகளை எழுதிக் கொண்டிருந்தார் அவர் சர்வக்ஞாவின் செய்யுட்கள் transliteration  translation  -உள்ள  புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார். நானும் பல்வேறு கன்னடநண்பர்களிடமும்  பதிப்பகங்களிலும் விசாரித்து ஏதும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தேன். என் இயலாமையை அவரிடமும் தெரிவித்தேன்  

இருந்தாலும் இப்படிப்பட்ட சர்வக்ஞா பற்றியும் அவரது  செய்யுட்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலோடுமுனைந்தேன். ஒருசில தகவல்களும் செய்யுட்களும் இணையத்தின் மூலம் கிடைத்தது. இணையத்தில் தேடும்போது கன்னட மொழியில் வேண்டுமானால் அவரது செய்யுட்கள் கிடைக்கலாம் ஆனால் எனக்குக் கன்னடம் தெரியாது ஆகவே எனக்குக் கிடைத்த தகவல்கள் உங்களிடம் பகிர்கிறேன் இணையத்தில் தேடும்போது ஒரு சில செய்யுட்களின் transliteration , translation  கிடைத்தது. அவற்றை எழுதியவருடனும் தொடர்பு கொண்டேன் அவர் ஒரு தமிழர். அவரும் முழுவதும் எழுத முயல்வதாகக் கூறி இருக்கிறார் இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. திரு சுந்தர்ஜி இப்பொழுதெல்லாம் வலைப் பக்கம் வருவதில்லை. முகநூலில் மும்முரமாகி விட்டார். அதில் அவர் சர்வக்ஞாவின் சில செய்யுட்களை பதிவிட்டுப் பகிர்ந்திருக்கிறார்.
புஷ்பதத்தர் என்னும் இயற்பெயர் கொண்ட சர்வக்ஞாவின் காலம் சரியாகக் கணிக்கப் படவில்லை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராக எண்ணப் படுகிறது. ஒரு சைவப் பிராம்மணத் தந்தைக்கும் , ஒரு சூத்திரவிதவைப் பெண்ணான தாய்க்கும் பிறந்தவர் என்று சொல்லப் படுகிறது ஆயிரத்துக்கும் மேற்பட்ட த்ரிபாதி(TRIPADIS) எனும் மூன்றடிச் செய்யுட்களை இவர் இயற்றி இருப்பதாகச் சொல்லப் படுகிறது மதம் ஒழுக்கம் வழக்கம் ஜோதிடம் பருவங்கள் புதிர்கள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதி இருப்பதாகக் கூறப் படுகிறது அறிஞர்கள் இவரது செய்யுட்களிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் இவர் எழுதியதாக கருதப்படும் எந்த இரு புத்தகமும் ஒருப்போல இருப்பதில்லையாம்.  ஒருவேளை இவர் இயற்றியதாகச் சொல்லப் படும் பல செய்யுட்கள் பல நகல் எழுத்தாளர்களின் இடைச் செருகலாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இனி இவர் எழுதிய சில( VACHANAGALU”)   செய்யுட்கள் சிலவற்றைக் காண்போம்


 1) சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

( எனக்குத் தெரிந்த சில கன்னட நண்பர்கள் சர்வக்ஞாவின் இந்த மூன்றடிகளைச் சொல்கிறார்கள் நாம் திருக்குறளில் “அகர முதல....சொல்வதைப்போல)

2) ஏளு கோடியே கோடி ஏளு லக்‌ஷ்வே
ஏளு சாவரித எப்பத்து வசனகள
ஹேளித்தானு  கேள  சர்வக்ஞ
..
ஏழு கோடியே ஏழு லக்ஷத்து
ஏழாயிரத்து எழுபது வசனங்கள்
சர்வக்ஞனால் கூறப் பட்டது அறிவீர் நண்பர்களே

விளக்கம் சர்வக்ஞர் கூறுகிறார். அவரால் பயனுள்ளதாஉ உலகோருக்குக் கூறப்பட்ட வாக்குகள்  ஏழு கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்து எழுபதுஎன்று. (ஆனால் 20002500 வசனங்களே கிடைத்திருக்கின்றன)

3) கெலவம் (B)பல்லவரிந்த கலது
கெலவம் மல்பவரிந்த கண்டு மத்தே
ஹலவம்தானே ஸ்வதஹா மாடி தில்லி எந்தா சர்வக்ஞா

சில அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்
சில பிறர் செய்வதைக் கண்டு அறிந்து கொள்
மற்றவை தானே அறிந்து செய்யச் சொல்கிறார் சர்வக்ஞா

விளக்கம் :- உலகில் எல்லாம் நமக்குத் தெரியாது. சர்வக்ஞா கூற்றுப்படி சில விஷயங்கள் பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் சிலவை பிறர் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவை அவரவர் அனுபவத்தில் கற்றுத் தெரிய வேண்டும்

4)மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு 
கோர்க்கல்ல மேல் மள கரெதரே 
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா

அறிவிலிக்கு  நூறாண்டு புத்திமதி சொலவது
பெருமழை கல்லில் வீழ்வதற்கொப்பாகும்
கல் ஒருக்காலும் நீரைப் பருகாது

விளக்கம் :- ஒரு முட்டாளுக்கு அறிவுரை கூறுவது கல்லின் மேல் பொழியும் மழைக்கொப்பாகும் அறிவிலி புத்திமதிகளை ஏற்கமாட்டான்  கல் நீரை  உறிய முடியாததுபோல

5) சித்தவுஇல்லதே (g)குடிய சுத்திதோடெஃபலவேனு
எத்து (g)கான்னவனு ஹொத்துத
நித்யதல்லி சுத்தி(b)பந்தந்தே சர்வக்ஞ

மனம் எங்கோ அலைய கோவிலைச் சுற்றுவதில் என்னபலன்
செக்கிழுக்கும் எருதின் சுற்றலுக்கு அது ஒப்பாகும்

 விளக்கம்ள்- கவுளிடம் மனம் லயிக்காமல் கோவிலைச் சுற்றுவதில் பலனேதுமில்லை. அச்செயல் செக்கிழுக்கும் மாடு போல் செயல் படுவதற்கு ஒப்பாகும்

6) சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே 
சாலிகரு பண்டு எலெவாக 
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா

கடன் வாங்கும்போது தேனினும் இனிக்கும் பணம்
திருப்பிக் கொடுக்கக் கேட்கப் படும்போது
முதுகெலும்பை முறிபது போல் இருக்கிறது

விளக்கம்:- கடன் வாங்குவது வரமல்ல  சாபம் என்று உணர வேண்டும் கடன் பெறுகையில் இனிக்கும் பணம் திருப்பிக் கேட்கும் போது முதுகெலும்பை முறிப்பது போல் இருக்கும் கடன் முதுகெலும்பை முறிக்கிறதோ இல்லையோ அன்பை முறிக்கும்

7) அன்னவனு இக்குவுது நன்னியனு நுடியுவுது
தானந்தே பரார (b)பாகெடொடெ
கைலாச (b)பின்ன அனவக்கு  சர்வக்ஞ 

பசித்தோர்க்கு அன்னமிடல் உணமை உரைத்தல்
தன்னைப் போல் பிறரை பாவிப்பது
வானுலகத்துக்கு உயர்த்தும்

விளக்கம்:- சொர்க்கத்துக்குப் போக அனைவரும் விரும்புவர். பசித்து வருவோர்க்கு உணவிடுதல் என்றும் உண்மைபேஅல் தன் உயிர் போல் அனைத்தையும் எண்ணுவது இவையெல்லாம் வானுலகேக வழிவகுக்கும் 

( சென்றிடுவீர் எட்டு திசையிலும்  கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )





       

Wednesday, March 26, 2014

சில அனுமானங்கள்


                                                   சில அனுமானங்கள்
                                                    ----------------------------
       ன்றைய த ஹிந்து ஆங்கில இதழில்( பெங்களூர் பதிப்பு 26-03-2014 ) Tre possibility of pilot suicide  எனும் கட்டுரையைப் படித்த போது இனம் தெரியாத நிம்மதி மனதில் தோன்றியது, என்னடா இது 239 பேரைக் காவு வாங்கிய MH370 எனும் விமானம் இந்து மஹாசமுத்திரத்தில் நொறுங்கி விழுந்த செய்தி எப்படி நிம்மதி தரமுடியும் என்று நினைக்கிறீர்களா.? அந்த விமான ஓட்டியின் எண்ணம் ஏதோ ஒரு காரணத்தால் செயல்பட முடியாத நேரத்தில் அவர் அந்த விமானத்தை கடலில் செலுத்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் பயணம் செய்த அனைவரின் உயிர்களையும்  எடுத்துச் சென்றிருக்கிறார். இதில் எனக்கு என்ன நிம்மதி என்றால் , ஒரு வேளை அந்த விமானி நினைத்ததைச் செயல்படுத்தி இருந்தால் நினைக்கவே நடுங்குகிறது. மலேஷியாவில் இருந்து வடகிழக்குப் பாதையில் சென்ற விமானம் கோபைலட்டின் “all right, good night “  என்ற அறிவிப்புக்குப் பின் திசை மாறி மேற்கு நோக்கி பயணிக்க துவங்கி இருக்கிறது.அந்த நேரத்தில் அதுவரை 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் 42000 அடி உயரத்துக்குச் செலுத்தப் பட்டிருக்கிறதுஅந்த உயரத்தில் காபின் டி ப்ரெஷரைஸ் ஆகி ஆக்சிஜன் இருக்காது. அந்நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிய கிடைக்கும் நேரம் 15 வினாடிகளுக்கும் குறைவே. நித்திரையில் இருக்கும் பயணிகள் அவர்களை அறியாமலேயே மூளைச்சாவாகி இருப்பார்கள்.விமான ஓட்டியின் எண்ணத்துக்கு தடையாய் பயணிகள் யாரும்வர வாய்ப்பில்லாதபோது விமானிஉயரத்தை குறைத்துக் கொண்டு மேற்கு நோக்கியே பயணத்தைத் தொடர்ந்திருந்தால் இந்திய எல்லைக்குள் வந்திருப்பார்.விமானம் 45000 அடி உயரத்தில் இருக்கும் போது டிப்ரெஷரைஸ் ஆகி இருந்தால் அது திடீரென 12000 அடி உயரத்த்ய்க் வந்து விடும் அப்படி வந்தால் விமானம் ஏதோ எமர்ஜென்சி யில் இருப்பதாக ராடார் கண்காணிப்பவர் நினைக்க ஏதுவாகும் இந்திய எல்லைக்குள் வந்து அமெரிக்காவில் நிகழ்ந்த மாதிரியோ அல்லது ஜனத்தொகை மிகுந்த இடத்திலோ விமானத்தைச் செலுத்தி இருந்தால்...... அப்படி ஏதும் நடக்காமல் ஏதோ காரணத்தால் விமானம் தெற்கு நோக்கிப் பறந்து இந்து மஹா சமுத்திரத்தில் வீழ்ந்திருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள விமானி நினைத்திருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்க  239 பயணிகளுடன் பயணம் செய்த்து அவனுடைய ஏதோ அல்டீரியர் மோடிவுக்கு துணை போயிருக்கும். விமானம் ஏன் திசை மாறித் தெற்கு நோக்கிச் சென்று நொறுங்கியது என்பது பல ஆண்டுகளுக்கும் விவாதிக்கப் படும் இந்தியா ஒரு இலக்காக இருந்திருக்கலாம். எப்படியோ நடக்காமல் போய் விட்டது என்பதே என் நிம்மதிக்குக் காரணம் 
                         **********************************


அண்மையில் திருமதி . கீதா சாம்பசிவம் காஃபி பற்றி மூன்று பதிவுகள் எழுதி இருந்தார். அவரது ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பெர்கொலேடர் காஃபி குடித்திருக்கிறீர்களா  என்று கேட்டிருந்தேன். அதில் காஃபியை விட நுரை அதிகம் இருக்கும் என்று மறுமொழி எழுதி இருந்தார். பெங்களூருக்கு வரும் முன் வரை பெர்கொலேடரில் காஃபி தயாரித்துக் குடிப்பது வழக்கம் நாங்கள் எந்த நுரையும் கண்டதில்லை. ஆகவே பெர்கொலேடர் பற்றிய பதிவாக இது. முதலில் பெர்கொலேடர் எப்படி இருக்கும் என்று கூறுகிறேன். அதுஅடியில் ஒரு ஜாரும் நடுவில் ஃபில்டரும் மேல் பாகத்தில் ஒரு நாஜிலுடன் கூடிய ஜக்கும் இருக்கும் கீழ் ஜாரில் நீர் ஊற்றி அத்ன் மேல் ஃபில்டர் பாகத்தை பொருத்தி  அதன் மேல் நாஜிலுடன் உள்ள மேல் பாகத்தையும் பொருத்த வேண்டும் இந்த அசெம்ப்ளியை அடுப்பில் வைத்து நீரைக் க்திக்க விட்டால் அதிலிருந்த வரும் ஆவி மேல் பாத்திரத்தில் உள்ள நாஜில் மூலம் வெளிவந்து காஃபி டிகாக்‌ஷப்னாக இருக்கும் . இந்த டிகாக்‌ஷனில் தேவையான அளவு பாலும் சர்க்கரையும் சேர்க்க காஃபி ரெடி. இந்தப் பதிவு என் பூவையின் எண்ணங்கள் தளத்தில் வந்திருக்க வேண்டும் 




( படங்களுக்கு  கூகிளுக்கு நன்றி) 

     திருமதி ரேவதி சங்கரன் ஒரு பல்கலை வித்தகி. பார்த்து ரசியுங்களேன் 
                                                                

Monday, March 24, 2014

சோதனைப் பதிவு

சோதனைப் பதிவு
----------------------------
என் கணினியில் ஒரு பிரச்சனை. என் இந்தப் பதிவு  இதில் காணும்வீடியோவைக்  காண முடிகிறதா என்று தெரிந்துகொள்ளத்தான். காண முடிந்தாலும் காண முடியாவிட்டாலும் தெரியப் படுத்துங்கள். உங்கள் ப்ரௌசர் எது என்றும் தெரியப் படுத்தினால் நன்றி யுடையவனாய் இருப்பேன் இந்த வீடியோ என் பேரன் 11 மாதத்தில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் எழுந்து நிற்க எடுத்துக் கொண்ட முயற்சி. என் ஹாண்டி கேமராவில் பதிவானதை என் மொபைல் காமிராவில் தொலைக்காட்சிப் பெட்டியயிலிருந்து பதிவு செய்தேன்




Sunday, March 23, 2014

தமிழ் தெரியுமா........?


                              தமிழ் தெரியுமா.......?
                               ---------------------
நம்மில் பலருக்கும் தாய்மொழி தமிழ். பேசுகிறோம் எழுதுகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றோம் கற்கிறோம். நானும் சிறிது தமிழ் கற்றிருக்கிறேன் ஆனால் இதில் வரும் கேள்விக்கு என்னால் உரிய பதிலைத் தரமுடியவில்லை யான் பெற்ற இன்பம் (?) நீங்களும் பெறப் போகிறீர்களா. ?பார்க்கலாம்.....!.

தமிழ் மொழியில் மொத்த எழுத்துக்கள் 247
(அவை உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 உயிர்மெய் எழுத்து216 ஆய்த எழுத்து 1)



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் எத்தன எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன? அதாவது இந்த ஓரெழுத்துச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தனியாகப் பொருள் உண்டு. எத்தனை தனிப் பொருளுடன் இருக்கும் எழுத்துக்கள் உங்களால் கூற முடியும். பார்ப்போம் யார் அதிகமாகத் தெரிந்துள்ளார்கள் என்று. விடைகள் நான் தெரிந்து கொண்டது பிறிதொரு பதிவில்.. வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..! 




Thursday, March 20, 2014

மும்பை ( பாம்பே ) நினைவுச் சிதறல்கள்


               மும்பை ( பாம்பே ) நினைவுச் சிதறல்கள்
                ------------------------------------------------------------



நான் முதன் முதல் பாம்பே சென்றது அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோதுதான் (1957-ம் ஆண்டு வாக்கில் )என் மாமா ஒருவர் மாதுங்கா அருகே  (கோலிவாடா என்று நினைக்கிறேன்) வசித்து வந்தார். அப்போது ட்ராம் சேவை இருந்தது. மாதுங்காவில் இறங்கி ஒருவர் தமிழ்நாட்டு அந்தணர் போல் இருந்தார். எனக்கு இந்தி தெரியாததால் என் மாமாவின் விலாசம் கொடுத்து வழி கேட்டேன். அவர் என்னை மேலும்கீழுமாகப் பார்த்து இந்தியில் மாலும் நஹி என்று சொல்லிச் சென்றார்...!

அடுதத முறை எனக்குப் பல் வலி இருந்ததால் என்னை பாம்பேயில் மருத்துவ மனைக்கு ரெஃபெர் செய்திருந்தார்கள்மருத்துவமனை பெயர் ( kem ஹாஸ்பிடல் என்று நினைக்கிறேன்) சரியாக நினைவில்லை பல் மருத்துவரிடம் போனேன். பல்லைப் பிடுங்க வேண்டும் என்றார்கள். நான் எப்போது வரவேண்டும் என்று கேட்டேன். இப்போதே எடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். பல்லைப் பிடுங்க ஒரு ஆசனத்தில் அமர்த்தப் பட்டேன். என் கண்களையும் மனதையும் கட்டிப்போடும்படியான ஒரு பெண் டாக்டர் என் பல்லை எடுக்க வந்தார். நான் அவரது அழகில் மயங்கி பல் எடுத்ததுதெரியாமல் அங்கேயே வீற்றிருந்தேன்....!

என் சின்ன அண்ணா நேவியில் இருந்தார். அவர் கொலாபாவில் ஒரு நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். நானும் அங்கு தீபாவளிக்கு முதல் நாள் சென்றேன் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒற்றை அறையில் இருந்தார் அவரது நண்பர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினேன்வீதிக்கே வராமல் மாடியின் வெராந்தாவில் இருந்தே பட்டாசுகளும் புஸ் வாணங்களும் கொளுத்தியது காணஎனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என் அண்ணாபணியாற்றிக் கொண்டிருந்த INS  TIR என்னும் போர்க்கப்பலுக்கு அழைத்துச் சென்று என்னை அவரது அதிகாரிகளுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தினார் இந்தியப் போர்க் கப்பலைப் பார்த்த அனுபவம் புதிது பிறிதொரு முறை அவருக்குக் குடலில் புண்ணாகி இருந்ததால் அறுவைச்சிகிச்சைமுடிந்து நேவல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சென்று பார்த்தபோது தாகம் எடுத்து நீருக்காக அவர் வேண்டிக் கொண்டபோது அங்கிருந்த செவிலியர் பஞ்சில் நீரை நனைத்து அவர் உதடு ஈரமாக இருக்கச் செய்வது கண்டு வருத்தமாக இருந்தது. அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர் நன்றாக நிறையச் சாப்பிடுவார் அவரது குடலில் பாதியை எடுத்தும் இவ்வளவு சாப்பிடுபவர் முழுக்குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவார் என்று அவரைப் பற்றி கேலியாகப் பேசுவது உண்டு

அம்பர்நாத்திலிருந்து நண்பர்கள் சிலர் எலிபண்டா கேவ்ஸ் பார்க்கத் திட்டமிட்டனர். அதிகாலை ரயிலைப் பிடித்து பாம்பே போய் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து போகும் படகுகளில் போய் வருவதாகத் திட்டம் . ஒரு பிக்னிக் போகிறோம் அங்கு போய் சாப்பிட விடுதியில் இருந்து ஏராளமான முட்டைகள் உபயோகித்து நிறையவே ஆம்லெட்டுகள் தயார் செய்து பாம்பே போய்ச் சேர்ந்தால் அங்கிருந்து செல்லும் கடைசி விசைப் படகும் சென்று விட்டிருந்தது. கையால் துழாவும் படகுகளில் போக பயம் உடனே திட்டத்தை மாற்றி பாம்பேயில் இருக்கும் போரிவில்லி நேஷனல் பார்க்குக்குச் செல்ல முடிவெடுத்தோம். எதிர்பாராத பிக்னிக் அது. இத்தனை முறை பாம்பே சென்றிருந்தும் எலிஃபண்டா குகை பார்த்ததில்லை( எலிஃபண்டா குகைப் படங்கள் கூகுளார் தயவ)ு

from google images

from google images
.
ஒரு குடியரசு தினத்தன்று விக்டோரியா டெர்மினஸிலிருந்து ஜனவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதும் வீதியெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்ததைக் கண்டதும் மறக்க முடியாத அனுபவம்
.
1974 என்று நினைவு பணி நிமித்தம் போபால் பிஎச்இஎல்சென்றிருந்தேன் நாங்கள் அவர்களிடm செய்யக் கொடுத்திருந்த பாகங்கள் தரமானதாக இருக்கிறதா என்று சோதிக்கவும் இன்னும் என்னென வசதிகள் அங்கிருக்கின்றன என்று அறிவதும் என் வேலை அங்கு பணி முடியும் தருவாயில் எனக்கு அங்கிருந்து ட்ராம்பேயில் பாபா அடாமிக் ரிசர்ச் செண்டருக்குச் செல்லவும் மற்றும் L&T சென்று வசதிகளைப் பார்க்கவும் உத்தரவு வந்தது. திருச்சியில் இருந்து புறப்படும்போது போபால் சென்று வரவே அட்வான்ஸ் வாங்கி இருந்தேன் ட்ராம்பே சென்று வர பணம் போதாது. போபால் BHEL –எனக்கு அட்வான்ஸ் தர ரூல் இல்லையென்று கூறிவிட்டார்கள். எப்படியும் பாம்பே போய் அங்குள்ள ரீஜினல் ஆஃபீசில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று பாம்பே போனேன்பாம்பே ரீஜினல் ஆஃபீசில் எனக்கு ஒரு வேலை கொடுத்தார்கள். அவர்களுக்காக ஒரு கன்சைன்மெண்டை நான் சென்னை வரை கொண்டு செல்ல வேண்டும் என்றார்கள்.கன்சைன்மெண்டின் எடை 500 கிலோவுக்கும் மேல் ரெயிலில் ஏற்றிவிட அவர்கள் உதவுவதாகவும் அதை சென்னையில் இறக்கி அங்கு வருபவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்கள் எனக்கு வேறு வழி இல்லாததால் அந்தப் பணியை செய்யஒப்புக்கொண்டு அட்வான்ஸ் பணம் பெற்றேன்  டாம்பே அடாமிக்ரிசர்ச் செண்டரில் என் தாய் மாமா டிசைன் எஞ்சினீயராகப் பணியில் இருந்தார். அவரிடம் நான் அங்கு ஒரு மீட்டிங்க்குக்காக வருகிறேன் என்று தகவல் அனுப்பினேன். அது சிடி லிமிட்டிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது . உள்ளே போக அனுமதிக்கு கெடுபிடி அதிகம் என் மாமாவுக்கு ஒரே ஆச்சரியம் BHEL கம்பனியை ரெப்ரெசெண்ட் செய்யும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன் என்று. நான் வந்த வேலை முடிந்ததும் என்னை அவர்கள் ஜீப்பிலேயே நகரத்துக்கு அருகாமை வரை கொண்டுவிடச் செய்தார். அதுவரை குடும்பத்தில் எங்களை மதிப்பவர் என்று யாருமிருந்ததில்லை. அந்த பாம்பே விஜயம் எனக்கு ஒரு அந்தஸ்தைக் கொடுத்தது.

அப்போது பாம்பேயில் நான் ஏமாற்றப்பட்ட செய்தியும்சொல்லியாக வேண்டும்  வீதியில் போய்க் கொண்டிருந்தபோது ஒருவர் இறக்குமதி செய்யப்பட்ட டெரிலின் பாண்ட் துணி என்று விற்றுக்கொண்டிருந்தார். அசல் டெரிலின் என்றும் அதை நிரூபிக்க அதிலிருந்து சில இழைகளை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தார். அசல் டெரிலின் துணியில் நெருப்பு பற்றினால் எந்த residue வும் இல்லாமல் போகுமென்று சொன்னார். அதைக் கண்டதும் ஓரிருவர் இரண்டு மூன்று பிட்டுக்களை வாங்கிப் போனார்கள். நானும் விலை சலிசாய் இருந்ததென்று இரண்டு பாண்ட் பிட்டுகள் வாங்கினேன். திருச்சி திரும்பியதும் அதை டெய்லரிடம் தைக்கச் சொன்னபோது அவர் நான் நன்றாக ஏமாந்து போய் விட்டதாகக் கூறி அதைத் தைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றார். அந்தத் துணியை நீரில் இட்டு எடுத்தால் எல்லாம் சுருங்கி ஏதோ வியாதியுடையவர் தோல் போல் இருந்தது.

அடுத்த முறை நான் மும்பை சென்றது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு. அவர்கள் வீடு உல்லாஸ் நகரிலிருந்தது,. திருமணம் மும்பையில்.. மும்பையில்  என் இரு தாய்மாமன்களுக்கும்  தகவல் அளித்தேன். மும்பையில் இரண்டு நாட்கள் தங்கி என் மனைவிக்கு ஊரைச் சுற்றிக் காடட விருப்பம் என்றும் எழுதி இருந்தேன்.அவர்களும் எங்களை வரவேற்பதாகவும் பதில் அனுப்பி இருந்தார்கள். உல்லாஸ் நகரில் இருந்து பெண்வீட்டார் ஏற்பாடு செய்திருந்த பேரூந்தில் பயணித்து மாதுங்கா ( என்று நினைவு) சென்றடைந்தோம் . திருமண நிகழ்வுகள் நன்றாக நடந்தேறியது. அப்போது என்னைக் காண ஒருவர் வந்திருப்பதாகச்செய்தி கிடைத்தது. வந்து பார்த்தால் என் தாய் மாமா. பரவாயில்லையே திருமணச் சத்திரம் வந்து எங்களைக் கூட்டிப்போக வந்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்து அவரையும் திருமண விருந்தில் பங்கேற்கச் செய்தேன். உணவு முடிந்ததும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவருக்கு எதிர்பாராத விருந்தாளிகள் வந்து விட்டதால் எங்களை அவர் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல இயலாது என்றார். மும்பையில் இரு தினங்கள் தங்கிச் செல்லவும் அது முடிந்த பின்னரே பெங்களூர் திரும்ப ரயில் பயணத்துக்கு முன் பதிவு செய்திருந்தோம். மும்பை மாதிரியான பெரிய நகரில் ஓட்டலில் அறை எடுத்துத் தங்குவது எதிர்பார்க்காதது. எங்கள் நிலைமை தெரிந்த உறவினர் அந்தேரியில் அவர் வீட்டில் நாங்கள் தங்கிச் செல்லலாம் என்று கூறி ஆறுதல் அளித்தார். பிறகென்ன..? அதற்கு மறுநாள் ஒரு டாக்சி பேசி என் மனைவிக்கு மும்பையின்  பல முக்கிய பகுதிகளைக் காட்டினேன்

அதற்கு அடுத்தமுறை சென்றது, என் மகன் மும்பையில் பணிமாற்றம் ஆகி சாந்தாக்ரூசில் இருந்தபோது  என் பேரனை ஒரு பள்ளியில் ( பொத்தார் ஸ்கூல் என்று நினைவு) சேர்த்திருந்தார்கள். அவனுடன் சில நாட்கள் மும்பையில்  இருந்தோம். நல்ல மழைக்காலம் சாலையெல்லாம் கால்முட்டு அளவுக்கு நீரோடும் அதில் பிள்ளைகள் விளையாடுவது பார்த்தது புதிய அனுபவம் அங்கிருந்து உல்லாஸ்நகருக்கு மின்சார ரயிலில் டிக்கெட் வாங்கி  எல்லோரும் ஒரே பெட்டியில் ஏறமுடியாமல் இரண்டு மூன்று ரயில்களைக் கோட்டை விட்டபின் ஒரு டாக்சி அமைத்து ஊரெல்லாம் சுற்றிப் போனதும் நினைவுக்கு வருகிறது எங்களை முதலில் வரவேற்க இயலாத மாமாவின் வீடு அருகிலிருந்தது. அவர் எங்களை அங்கிருந்த இஸ்கான் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். என் பேரனின் பிற்ந்த நாளுக்கு வர வேண்டும் என்ற என் விருப்பப்படி வந்த பாபா அடாமிக் ரிசர்ச் செண்டரில் இருந்த மாமா என் பேரனின் ஆண்டு நிறைவு என்று எண்ணியதாகவும் பள்ளிக்குச் செல்லும் சிறுவனை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்
.
மும்பை என்று சொன்னால்  மேலே கூறிய பல நினைவுகளும் வந்து மோதும். அங்கு மஹாலக்ஷ்மி கோவில் சித்தி விநாயகர் கோவில் மரீன் ட்ரைவ். ம்யூசியம் கேட் வே ஆஃப் இந்தியா என்று பல இடங்களுக்கும் போய் வந்தோம். சௌபாத்தி பீச், ஜுஹு பீச்  இவற்றை காணும்போது என்னவோ கடலோரத்தில் மணலைக் கொட்டி வைத்திருப்பதுபோல் உணர்ந்தோம் சென்னை மெரினா பீச்சுக்கு ஈடாகாது.

Tuesday, March 18, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு .?


                                      உங்கள் ஓட்டு யாருக்கு .?
                                     ------------------------------------




உங்கள் பொன்னான ஓட்டு யாருக்கு.?
அரசியல் என்பது ஒரு சாக்கடையாய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சாக்கடை என்று சொல்லும் நாம் அதை சுத்திகரிக்க ஏதேனும் செய்கிறோமா என்னும் கேள்வி மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அரசியலுக்கு நாம் செய்வதெல்லாம் தேர்தல் வரும் காலத்தில் ஓட்டுச் சாவடிக்குச் சென்று நம் வாக்கைப் பதிவு  செய்வதுதான். அரசியலைக் குறை கூறும் நம்மில் பலரும் அதையும் செய்வதில்லை. மொத்தமாக 60% ஓட்டுப் பதிவாகிவிட்டால்மகிழ்ச்சி காட்டுகிறார்கள். இப்படி ஓட்டுப் பதிவு செய்யாத 40% மக்கள் அரசியல் பற்றிக்குறை கூறுவதில் முன்னில் நிற்கிறார்கள். அல்லது தவிர்க்கப் பட முடியாதது அனுபவிக்கப் படவேண்டும் என்னும் ஸ்திதப் பிரக்ஞை உள்ளவர்களாகக் கருதப் படுகிறார்கள்
வாக்குப் பதிவு செய்த 60% ஓட்டில் பெரும்பான்மை பெற்றவர்கள் பதிவான ஓட்டுக்களில் அநேகமாக 35% வாக்குகளுக்குள் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆக எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் மொத்த வாக்காளர்களின் பெரும்பான்மை ஒப்புதல் பெற்ற வரல்ல என்பதே நிதர்சனம் இவ்வளவையும் நான் எழுதுவதே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பவர்கள் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை பெற்றவர்களலல, என்று குறிப்பிடவே.
இப்படி பெரும்பானமை இல்லாதவர்கள் சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்கள் ஒரு கட்சிக்கு உகந்தது என்று படுவது இன்னொரு கட்சிக்கு உடன்பாடில்லை எதிர்க் கட்சிகளோ எதிரிக்கட்சிகளாகவே இருக்கிறார்கள். இந்நிலையிலும் பல நலத் திட்டங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒரு சில துளிகளே மக்களைச் சென்றடைகிறது வலைத் தளத்தில் இருக்கும் பதிவர்கள் நம்நாட்டு எலைட் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனலாம் நன்கு படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள் இவர்களில் எத்தனை பேருக்கு அரசின் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கிறது என்று நெஞ்சில் கை வைத்துச் சொன்னால் பல விஷயங்கள் பற்றி தெரிந்திருக்காது. அது அவர்கள் குற்றமல்ல. சாதாரண பொதுமக்களுக்கு பல விஷயங்கள் சென்றடைவதில்லை. பரவலாகப் பேசப் பட்டும் உபயோகப்படுத்தப்பட்டும் வரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆண்டில் குறைந்தது நூறு நாட்களாவது ஊதியம் கிடைக்கச் செய்யும் NREGS படிப்புக்கு உறுதி அளிக்கும் RTE, உணவுக்கு உறுதி அளிக்கும் சட்டம் இது போன்ற சிலதே அரைகுறையாய் தெரிந்திருக்கிறது
தேர்தல் காலங்களில் கட்சிகள் கூறும் உறுதி அறிக்கைகள் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும் உதாரணமாக எல்லோருக்கும் கல்வி அளிப்போம் என்று உறுதி அளிப்பதாக அறிக்கையில் வாக்குறுதி இருக்கும். அதை எவ்வாறு செயல் படுத்தப் போகிறார்கள், அதற்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து எவ்வளவு என்பன போன்ற விஷயங்கள் இருக்காது. (இருந்தால் மட்டும் எல்லோருக்கும் எல்லாம் விளங்கி விடப் போகிறதா என்ன.?) ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு என்று இருப்பதும் அதை மாநில அரசு குறிப்பிட்ட நலனுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சாமானிய மனிதனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்
இன்னொரு விஷயம் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்களின் உதவி இல்லாமல் ஊழலில் ஈடுபட முடியுமா.?கட்சிகள் பதவிக்கு வந்தால் இன்னதை இவ்வாறு செய்வோம் என்று கூறுகிறார்கள். அரசியல் வாதிகளில் செயல்முறைபற்றி எத்தனை பேருக்குத் தெரியும்கட்சிகள் செய்ய விரும்புவதை செய்து கொடுப்பது அரசு அதிகாரிகளும் ஊழியர்களும்தானே. முதுகெலும்பில்லாத அரசு அதிகாரிகளை அரசியல் வாதிகள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது நம்பமுடியவில்லை. அரசியல்வாதிக்கு அடிவருடும் அரசு ஊழியரே ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும்  மூல காரணம் அரசியல் கட்டுமானமே அரசு (govt)  அதிகாரிகள் ( (executives)  நீதி( judiciary) ஆகிய மூன்று தூண்களால் தாங்கப்படுகிறது இந்தமுறை நன்றாக செயல் பட்டால் ஒன்றுக்கொன்று  check ஆக இருக்கும். ஆனால் நடைமுறையில் அரசும் அதிகார்களும் கை கோர்க்க நீதித்துறை அவ்வப்போது check வைக்கிறது
In spite of all these things  நாம் முன்னேறவில்லையா.? என்ன...... எதிர்பார்ப்புகள் கூடி இருக்கிறது தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. நம்மை நாம் மேலை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏமாறமடைகிறோம் என் வாழ்விலேயே நாம் அபரிமிதமான அளவுக்கு முன்னேறி இருப்பது கண்கூடாகத் தெரிகிறது நான் பள்ளியில் படிக்கும் போது காலணி என்று ஏதும் அணிந்த்தது கிடையாதுஅந்தக் காலத்தில் ஜப்பானியரின் பேனாக்கள் சலிசான விலைக்குக் கிடைக்கும். ஆனால் தரம் என்பதே இருக்காது.கட்டைப் பேனாவும் இங்க் பாட்டிலும்தான் எழுத உபயோகித்தது.என் பிள்ளைகள் அதைவிட வசதியாக வளர்ந்தார்கள் காரும் பைக்கும் தொலைக்காட்சியும் அண்மைய பிரவேசிகளே. இன்று என் மக்கள் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள் தகவல் தொழில் நுட்ப உதவியால் யாரையும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ள முடிகிறது மாநகரங்களுக்கு இடையேயான தூரத்தை எளிதில் கடக்கவும் சொகுசாக பிரயாணம் அமையவும் தேசிய நெடுஞ்சாலைகள்  முன்னேற்றமில்லையா.? மூன்றாம் தலை முறை இன்னும் நிறையவே முன்னேறும்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மக்கட்த்தொகை 40 கோடிக்கும் கீழே இருந்தது இன்று அதைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது சராசரி வயது சுமார் நாற்பதிலிருந்து அறுபத்தைந்தாகி இருக்கிறது . இத்தனையும் நலத் திட்டங்கள் நடந்ததால்தானே சாத்தியமாயிற்று, இத்தனை மக்களுக்கும் உணவு வழங்க வேண்டிய வேளாண்குடி மக்கள் இடம்பெயர்கிறார்கள். விளை நிலமும் சுருங்கிக்கொண்டே வருகிறது
எனக்குத் தெரிந்தே இந்தக் கணினி செயல்பாடுகளுக்கு வெகுவாகவே எதிர்ப்பு இருந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் என்றெல்லாம் பயமுறுத்தப் பட்டோம் அதையும் மீறி தகவல் தொழில் நுட்பங்களை அரசு கொண்டுவந்தது என்றால் அப்போது மக்களுக்கு நல்லது செய்ய அரசுக்கு பெரும்பான்மை பலமிருந்தது. இப்போது எல்லாமே தலை கீழ். இப்போதோ ஒரு திரைப் படத்தில் வரும் வசனம் போல் ‘ஆளுக்கொரு கட்சி அவனவனுக்கு ஒரு பட்டாளம் தானும் முன்னேறாது பிறரையும் முன்னேற விடாது/ இது காலத்தின் கோலம் இதிலடங்கியே நம் வாழ்வு இருக்கிறது
இப்போது அரசு என்றாலோ அதிகாரி என்றாலோ ஊழலின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது அப்படி ஒரு PERCEPTION நாம் அறியாமலேயே ஏற்பட்டு விட்டது ஆங்காங்கே எக்செப்ஷன்ஸ் இருக்கலாம்  இந்த நிலையில் தேர்தலில் நாம் ஓட்டுப் போட வேண்டியவர்களாக இருக்கிறோம். யாருக்கு நம் ஒட்டு ?அரசியல் கட்சிகள் பற்றி நாம் அறிவதெல்லாம் அவர்கள் குறிக்கோள்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்மில் சாதி மத இன வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒன்றே என்னும் கொள்கை உடையவர்களுக்கு நாம் ஒட்டு .மத(ட)வாதப் பிரிவினைச் சக்திகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் ஏழையைப் பணக்காரனாக்கும் கொள்கை உடையவர்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்பணக்காரனை ஏழை ஆக்கும் சமதர்மம் சரியாகாது. அரசியல் பூசல் மற்றும் சுய மேம்பாட்டுக்காக கட்சி துவங்கி அரசியலில் ஆதாயம் காண்பவரை ஒதுக்க வேண்டும் திரைப்படத்துறையில் பெயர் பெற்றவர்கள் அந்தப் பெயரை மூலதனமாக்கி அரசியல் செய்வதையும் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் அரசியலில் நாம் கொண்டுள்ளஎண்ணங்கள் எல்லாம் பெரும்பானமை அனுமானங்களாலும் மீடியாக்கள் எடுத்துக்காட்டும் நிகழ்வுகளின் PERCEPTION –ஆல் உண்டானதும்தான். அதுவும் படித்து வேலையிலிருக்கும் நடுத்தர மக்கள் ஏதோ அலை அடிப்பதாக நம்பி உண்மை நிலையினை கவனிக்கத் தவறுகிறார்கள் இந்தியா சுமார் 115 கோடி மக்கள் தொகை கொண்டது விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மாநகர மக்களை விட கிராமப் புற மக்களுக்கும் ஒரு PERCEPTION  அல்லது அனுமானம் உண்டு,.அவர்களும் ஓசைப்படாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்
எந்த அரசியல் கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் இன்னதை இன்னமாதிரி செய்வோம் என்கிறார்களா. ஒருவரை ஒருவர் தூற்றுவதுதான் இவர்களின் சாதனை இன்னொரு முறை நினைவு படுத்துகிறேன் நாம் ஒட்டுப் போடும்போது நமக்கு சரியென்று தோன்றுவதை எந்த அரசியல் கட்சி செய்து தருவோம் என்று கூறுகிறதோ அவர்களுக்கு ஒட்டுப் போடுவோம் சென்ற முறை அவர்களின் சாதனை என்ன நம்பிக்கைகுப் பாத்திரமானவர்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் அம்மாதிரி உறுதி அளிக்கும் கட்சியின் வேட்பாளர் நமக்கு இருக்கும் அனுமானங்களால் குறை உள்ளவரானால் நமக்கு பிரதிநிதியாக லாயக்கற்றவர் என்றால் நம் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடையாது நம் அரசியல் அமைப்புப்படி தனி மனிதனால் நாட்டை ஆளும் பணியில் எதையும் செய்ய முடியாது ஆகவே தனிப்பட்ட மனிதரை விடுத்து கட்சிக்கு ஓட்டு இடுவதே நல்லது என்கிறேன்


Sunday, March 16, 2014

எந்நன்றி கொன்றார்க்கும் ..........


         எந்நன்றி கொன்றார்க்கும்......( ஒரு சிறுகதை)
                                   =========================================


க்திவேல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான். அதிகக் கூட்டமில்லை. எதிர் இருக்கையில் ஒரு பெண்ணும் ஒரு அம்மாவும், அவளது தாயாயிருக்கலாம். இவனுக்கு அவர்களைப் பார்க்கும்போது தன் தாயையும் தான் காதலித்த பெண்ணையும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்தான். அந்தப் பெண் அவளோடு இருந்த் பெண்மணியிடம் ஏதோ குசு குசுத்தாள். அந்தப் பெண்மணிக்கு  வந்ததே ஒரு கோபம். சக்திவேலைப் பார்த்து காட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தாள்
‘ இது போல் எத்தனை பேரடா கிளம்பி இருக்கிறீர்கள்/ ஒரு பெண் கொஞ்சம் லட்சணமாய் இருக்கக் கூடாதேஎன்று என்னவெல்லாமோ சொல்லிக் கூப்பாடு போட்டாள். சக்திவேலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனே மன உளைச்சலில் இருந்தான் எல்லாத் தொல்லைகளில் இருந்தும் விடுதலை பெற எங்கோ போய்க் கொண்டிருந்தான். அந்தப் பெண் சுகுணாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மைதான் அவனுக்கு அவனது மூளையில் ஏதோ மின்னியது போல் இருந்தது
“ அம்மா, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் உங்களை கை நீட்டி அடித்தது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள். சுகுணா நீயாவது அம்மாவுக்குச் சொல்லேன் “ என்று அந்தத் தாயை காலைப் பற்றிக் கொண்டு அழுதான்

அந்த வழியே வந்த ஆர்பிஎஃப் என்ன என்று விசாரித்தனர் அந்தப் பெண்மணி சக்திவேல் தன் மகளிடம் தகாத முறையில் நடக்க எத்தனித்தான் என்று கூறினாள்.கேட்டால் என்னவெல்லாமோ பைத்தியக்காரன் போல் பிதற்றுகிறான்என்றும் கூறினாள். சக்திவேல் ஏதோ கூறி மறுப்பதற்குள் அவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்

ரயில்வே போலீஸ் இவனை அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்றனர். எங்கே இறக்கி விட்டால் என்ன. இவனே எங்கே போவது என்று தெரியாமலேதான் இருந்தான்

சக்திவேலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம் வீட்டுக்கு மூத்த மகன் தந்தை இறந்தபின் குடும்ப பாரம் இவனே சுமக்க வேண்டி வந்தது  பொறுப்புணர்ந்து தன் தாயாரையும் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டான் இவன் என்னதான் பாடு பட்டாலும் இவன் தாய்க்கு இவனை விட இவன் தம்பி மேல்தான் பரிவும் பாசமும். மெள்ள மெள்ள இவனுக்கும் தன்னை தன் குடும்பத்தினர் கருவேப்பிலை போல் ஒதுக்கு கின்றனரோ என்று சந்தேகம் எழுந்தது இவன் கஷ்டப்பட்டு உழைக்க இவன் தம்பி பட்டப் படிப்பு படித்து முடித்தான். இவனால் முடிந்தவரை தன் இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்வித்தான். இவன் என்னதான்செய்தாலும் அந்தத் தாயின் சொந்த மகனில்லையே. அது தெரிந்தே பாபுவும் இதுதான் சகஜ நிலை என்று சமாதானப் படுத்திக்கொண்டான்
எதையும் சகஜமாக எண்ணிக்கொண்டு காலங்கழித்தவனின் வாழ்விலும் காதல் எட்டிப்பார்த்தது. தன் தாயிடம் தான் காதலிப்பதாகவும் தனக்காக பெண்வீட்டுக்குச் சென்று பெண்கேட்கச் சொல்லி வேண்டினான். இவனுக்குத் திருமணம் முடிந்து சென்றால் குடும்பத்திலிருந்து ஒதுங்கி விடுவான் என்று நினைத்த் அவன் தாயார் முதலில் அவன் காதலை உறுதிப் படுத்திக் கொள்ளச் சொன்னார். அது எப்படி அம்மா தெரிந்து கொள்ள முடியும். திருமணமானபின் காதலித்ததைச் சொல்லிக் கொள்கிறேன்  என்றான் 
 சக்திவேல் சுகுணாவை விரும்பினான் அது காதலா என்று உறுதியாகத் தெரியவில்லை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு பெண்ணிடம் போய் ஐ லவ் யூ சொல்லத் தயங்கினான், சுகுணா அடுத்து வசிக்கும் தெரிந்த பெண்..பட்டப் படிப்பு படித்திருந்தாலும்  தனக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று நம்பினான். ஆகவே தாயிடம் முறையாகப் பெண்கேட்க வேண்டினான்.
 ஆனால் அவனது தாய் இப்படிச் செய்வாள் என்று சிறிதும் எண்ணவில்லை. அவர் அடுத்திருக்கும் சுகுணா வீட்டுக்குச் சென்று பெண்கேட்டு சம்மதமும் வாங்கிவந்தாள். ஆனால் அவர் பெண்கேட்டது சக்திவேலுக்கு அல்ல. அவனது தம்பிக்கு, அவரது சொந்த மகனுக்கு.. சக்திவேல் ஆடிப்போய் விட்டான். இதுவரை யாரும் அறிந்திராத ஒரு சக்திவேல் மனம் கொதிக்க கண்முன் வந்த எல்லோரிடமும் எரிந்து விழுந்தான்.அவன் தாய் சொன்ன சமாதானம் இவனுக்குப் புரியவில்லை. “ சுகுணா பட்டப் படிப்பு படித்தவள். நீயோ பத்தாங்கிளாஸ். எப்படி உனக்குப் பெண்கேட்பது. உன் தம்பி நன்றாகப் படித்திருக்கிறான். அந்தப் பெண் உன் தம்பிக்குப் பொருத்தமாய் இருப்பாள் என்று தோன்றியது. அதுதான் பேசிமுடித்து விட்டேன். உனக்கான பெண் பிறந்திருக்காமாலா இருப்பாள் . நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டியதைப் பார்என்றாள்
பாபுவுக்கு  ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆத்திரத்துடன் வெளியேறினான். நேராக அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றான். சுகுணாவின் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்தான். சக்திவேலின் தாய் இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டாள்.இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா. ?தம்பிக்குப் பார்த்த பெண்ணைக் கை பற்றி இழுத்து வந்திருக்கிறானேஎன்றெல்லாம் கத்தினாள். சக்திவேல் சுகுணாவிடம் தன்னை கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டான்.அதெப்படிங்க முடியும் . பெரியவங்க நிச்சயம் செய்திருக்காங்க . நான் ஒண்ணும் செய்ய முடியாது “ என்றாள் சுகுணாவை மீட்க வந்த தன் தாயின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு எங்கு போகிறோம் என்றே தெரியாதபடி நடந்து சென்றான்.
                                       *******************

ணியில் மும்முரமாய் இருந்த எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. புதிய எண்ணாக இருந்ததால் சற்று தயக்கத்துக்குப்பின் எடுத்தேன்
சோம சுந்தரம் ஜெனரல் மானேஜர்தானே சார்
ஆம் நான் தான். நீங்கள் யார்.?
“நாங்கள்----- போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறோம். உங்கள் கம்பனியில் சக்திவேல்  என்பவர் வேலை செய்கிறாரா.?
சிறிது பொறுங்கள். பார்த்துச் சொல்கிறேன்
பர்சொனல் துறையில் செக் செய்து பார்த்ததில் சக்திவேல்  என்பவர் வேலை செய்வதும் அவர் ஒரு வாரகாலமாயும் எந்த தகவலும் கொடுக்காமல் பணிக்கு வரவில்லை என்றும் தெரிந்தது.மேலும் சக்திவேலைப் பற்றி விசாரித்ததில் ஏழெட்டு வருடங்களாகப் பணியில் இருப்பவர் என்றும் எந்தக் குறையும் இல்லாதவர் என்றும் தெரிந்தது சற்று நேரத்தில் மீண்டும் போலீசிடமிருந்து அழைப்பு வந்தது. சக்திவேல்  என்பவர் ----ரயில்வே நிலையத்தில் ஆர்பிஎஃப் போலீசால் சக பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இறக்கி விடப்பட்டு போலீசுக்குத் தகவல் தரப்பட்டு இப்போது அவர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறினார்கள்.
உடனே எங்கள் மனிதவளத்துறை அதிகாரி ஒருவரை அழைத்து வேண்டது செய்யச் சொல்லி அனுப்பி வைத்தேன்
மறுநாள் எங்கள் அதிகாரி சக்திவேலின் மனநிலை பிறழ்ந்து இருப்பதுபோல் இருக்கிறது என்றும் சில நேரத்தில் கட்டுப்பாடற்று நடந்து கொள்வதுமாகத் தகவல் தந்தார். அவரை  ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்க்கச் சொல்லி தகவல் அனுப்பினேன்
இது நடந்து முடிந்த சமயத்தில் உள்ளூர் போலீஸ் நிலையத்திலிருந்து சக்திவேலை விசாரித்துக் கேட்டார்கள். அவரைச் சில நாட்களாகக் காணோம் என்றும் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை அவரது குடும்பத்தார் கொடுத்திருப்பதால் போலீஸ் விசாரணை என்றும் தெரிய வந்ததுபோலீசிடம் எனக்குக்கிடைத்த தகவல் பற்றியும் சக்திவேலை மருத்துவ மனையில் சேர்த்திருப்பது பற்றியும் கூறி விலாசமும் கொடுத்தேன்.
சக்திவேலின் தாயாரும் தம்பியும் அவனைபற்றிய செய்திகள் அறிந்ததும் மருத்துவ மனைக்குச் சென்றனர். அவனுக்கு அவர்களை சந்திக்கவே விருப்பமிருக்கவில்லை. மாறாக ஆவேசம் அடைந்தவனாகக் கூச்சல் போட்டான்விஷயம் கேள்விப்பட்டு மருத்துவ மனைக்குப் போனேன். மருத்துவர்கள் அவனுக்குச் சித்தப் பிரமையின் துவக்கக் கட்டம் என்றும் அவன் சில நாட்கள் எந்த தொந்தரவும் இன்றி ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறினர். மருத்துவச் செலவைக் கேட்டதும் சக்திவேலின் தாயும் தம்பியும் ஏதும் பேசாமல் “ சரிங்க. சக்தி இங்கேயே ஓய்வில் இருக்கட்டும்என்று கூறி ஓசையில்லாமல் வெளியேறினர்
“ என்ன சார்; இப்படியா ஒருவனைவிட்டுப் போவார்கள் “ என்று எங்கள் கம்பனி மனித வள மேலாளர் என்னிடம்கேட்டார்.
“ இதப் பாருங்க. சக்திவேல் நன்றாய் இருந்தபோது அவர்களைப் பராமரித்திருக்கிறான். அதேபோல்நன்றாய் இருந்தபோது நம் கம்பனிக்காக எட்டு வருடங்கள் நன்றாகவே உழைத்திருக்கிறான் நாமாவது நன்றி உள்ளவர்களாக இருப்போம். அவன் பூரண குணம் அடையும் வரை கம்பனியின் பராமரிப்பிலேயே இருக்கட்டும்” என்றேன்
------------------------------------------------------------------------
( இந்தக் கதையில் ஒரு பிழை செய்திருக்கிறேன் கண்டு பிடியுங்கள்பார்க்கலாம்)                   

Thursday, March 13, 2014

காதல் போயின் முடிவுகள்


                                 காதல் போயின்  மீதிக்கதை போட்டி முடிவுகள்
                                  ----------------------------------------------------------------
காதல் காதல்காதல் காதல் போயின்” என்று ஒரு சிறுகதை எழுதி பாதியில் நிறுத்தி இருந்தேன்  மீதிக்கதை வாசகர்களிடம் எழுதக் கேட்டிருந்தேன் நான் எழுதி வைதிருந்த முடிவோடு ஒத்துப் போகிற கதை எழுதுகிற வாசகருக்குப் பரிசு என்றும் கூறி இருந்தேன். போட்டியில்  எந்தக் கதையும் என் முடிவுடன் ஒத்துப்போகாத நிலையில் திரு பால கணேஷிடம் அவர் சிற்ந்த முடிவு என்று தேர்வு செய்யும் கதைக்கு பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டி கேட்டிருந்தேன். அவரது முடிவினைக் கீழே பிரசுரிக்கிறேன் பங்கு கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு என் மன் நிறைந்த வாழ்த்துக்கள். இனி கணேஷ்

காதல் என்கிற விஷயத்தைப் பொறுத்தமட்டில் ஆணின் பார்வையில் பெண் அழகாக இருந்தால் மட்டுமே போதுமானது. காதல் பிறந்துவிடும். நெருங்கிப் பழக ஆரம்பித்ததும் அவள் குணங்கள் பிடித்திருந்தால் சகித்துப் போவதும் இல்லையேல் காதல் முறிதலும் நடத்தல் இயற்கை. பெண்ணின் பார்வையில் என்றால் ஆணின் உருவ அழகு மட்டுமே காதலுக்கான தகுதியாகி விடாது. அவன் என்ன படித்திருக்கிறான், பின்னாளில் எவ்வளவு சம்பாதிப்பான், தங்கள் வளமான வாழ்வுக்கு அது போதுமா என்றெல்லாம் ஒரு மினி சர்வேயே மனதில் நடத்திவிட்டுத்தான் பின் காதலுக்கு ஓ.கே. சொல்வார்கள். அதேபோல காதல் என்பது மறுக்கப்பட்டால் அதையே வாழ்வின் மிகப்பெரிய தோல்வியாக எண்ணி தற்கொலை செய்து கொள்ளும் மடத்தனத்தை (பெரும்பாலும்) செய்வது ஆண்கள்தான். மெண்கள் அம்மட்டில் உறுதியாகவே இருப்பார்கள். ‘ஐயோ, பாவம்’ என்று ஒருநாள் அவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினால் அவன் புண்ணியம் செய்தவன்.

----///இந்த என்னுடைய கருத்துக்கள் எல்லாம் நான் பார்த்த மற்றும் படித்த காதல்களின் அடிப்படையில் என்னுள் முகிழ்த்தவை. நிஜத்துல காதலைச் சந்திக்க வாய்ப்பு அமையாத (அ)பாக்கியவான் நான். நம்புங்க ஸாமிகளா... ஹி,,, ஹி,,, ஹி,,,! கேர்ள்ஸ் ஆர் பிராக்டிகல் என்கிற ஜி.எம்.பி. ஸாரின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆக காதலிக்கிற ஆண் உணர்ச்சி வயப்பட்டு வாழ்வைத் தொலைக்க முடிவெடுக்கிறான் என்கிற ஜி.எம்.பி ஸாரின் முடிவையொட்டி யாருடைய முடிவு அமையப் போகிறது என்பதைப் படிப்பத்ற்கு மிக ஆர்வமாகக் காத்திருந்தேன் நான். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெகடிவ் முடிவு பிடிக்கவில்லை போலிருக்கிறது. அனைவரின் முடிவுமே பாஸிட்டிவ் ஆக அமைந்து விட்டது. அதிலும் மகளிருக்கு 95 சத இடஒதுக்கீடு தந்த மாதிரி... போட்டியாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள் என்பது வெகுசிறப்பு.

போட்டிக்கு வந்த முடிவுகளை நான் அலசி தேர்வு செய்த விதத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். என்னுடைய கோணத்தில் சிந்தித்ததன் மூலமே முடிவெடுத்துள்ளேன். ஆக கருத்து வேறுபாடு (ஒருவேளை) இருந்தால்... என்னை நடுவர் என்று ஜி.எம்.பி. ஸார் (ஏதோ நம்பிக்கையில்) தேர்ந்தெடுத்து விட்டதால் (வேறுவழியின்றி) நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இனி... இந்த முடிவுகளை நான் எவ்விதம் அலசினேன் என்பதைப் பார்க்கலாம்.

ஜி.எம்.பி.ஸாரின் முடிவுக்கு ஒத்துப்போகும் முடிவு எதுவும் இல்லாதபட்சத்தில் வேறொரு சிறந்த முடிவாகவோ அல்லது அதைவிடச் சிறந்த முடிவையோ தருபவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசு தரலாம் என்று முன்பே அவர் சொல்லியிருந்தார். அந்த அடிப்படையில் அலசினால் அவன் சொன்ன காதலை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்கிற அம்பாளடியாள் மற்றும் தமிழ்முகில் ஆகியோரின் முடிவினால் கதை சிறப்படையவில்லை. சாதாரணக் கதைகளில் ஒன்றாகி விடுகிறது. சிறுகதையின் முத்தாய்ப்பு என்பது படிப்பவரை ஏதாவது ஒரு வகையில் பாதித்தால்தான் அது நல்ல சிறுகதை என்கிற அடிப்படையில் இந்த இரு முடிவுகளைத் தவிர்த்தால் எஞ்சியிருப்பது கீதா சாம்பசிவம், ராஜலக்ஷமி பரமசிவம், கீதமஞ்சரி ஆகிய மகளிர் அணிப் போட்டிதான்.

கீதமஞ்சரி தந்த முடிவு புதிய கோணத்தில் அமைந்திருந்தது என்னை வெகுவாக ரசிக்க வைத்தது. ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடிவெடுத்தவன், இவளே அழகாக இருக்கிறாளே என்று கணத்தில் தோன்றி இவளைக் கைப்பற்றிக் கொள்கிறான் என்றால் அவனுக்கு வந்தது காதலே அல்ல...! பெண் என்ன ஐஸ்க்ரீமா இந்த ப்ளேவர் பிடிக்காவிடில் அந்த ப்ளேவர் பெட்டர் என்று தேர்ந்தெடுக்க..? ஆயின் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஏற்ற திடீர் திருப்பம் அடங்கியதாக மாற்றிய விதம் நன்று. ஆக எழுத்து நடை மற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றில் ரசிக்க வைத்த கீதமஞ்சரிக்கு கைகுலுக்கலும் பாராட்டுகளும்!

ராஜலபக்ஷ்மி மேடம் தந்துள்ள முடிவு எனக்கு ஏற்புடையதாக இருந்தது. காதலித்த பெண்ணினால் ஒருத்தன் லட்சியவாதி ஆகிறான்,. கலெக்டராகவே ஆகிறான் என்பது அழகுதான். ஆனால் லட்சியம் என்று அவள் சொல்லி விட்டதற்காக அவன் அதை மட்டுமே பற்றிக் கொண்டு அவளைக் கோட்டை விடுவது சரியாகப் படவில்லை. ‘ஐ.ஏ.எஸ் தேர்வில் செலக்ட் ஆனவுடனே அவளைப் பெண் கேட்டுப் போயிருக்கலாமே...?‘ என்கிற கேள்வியும் எழுந்தது. இவர் எழுத்தில் காட்டிய பாஸிட்டிவ் ஆங்கிள் ரொம்பவே பிடிச்சிருந்தது.

கீதா சாம்பசிவம் மேடம் தந்துள்ள முடிவு Down to Earth மிக இயல்பானதாக, ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது. ஒருவேளை நீயே பெண் கேட்டு வந்து என் பெற்றோர் ஒத்துக்கிட்டா உன்னை ஏத்துப்பேன் என்கிற அவளின் தெளிவான ப்ராக்டிகலான முடிவும் சரி... அவள் மற்றும் அவள் பெற்றோர் விரும்பும் வண்ணம் ஒரு நல்ல நிலைக்கு வந்து அவளை அடைவேன் என்று அவன் எடுக்கும் உறுதியும் சரி... வெகு அழகு! அதன்பின் அவன் என்ன நிலைமைக்கு வந்தான் என்பதை படிப்பவரின் மனோபாவத்திற்கேற்ப கற்பனை செய்து கொள்ளட்டும் என்று விடுவது பெஸ்ட். (கீதா மேம் முதலில் ஒரு முடிவு எழுதி பின் அதை மாற்றி இதை எழுதி அனுப்யினதா சொல்லிருக்காங்க. நல்லவேளை... அந்த முதல் முடிவை அனுப்பலை.)

ஆக,,, என் கண்ணோட்டத்தின் படி போட்டோபினிஷிங்கில் கணநேர இடைவெளியில் முந்தி வெற்றிக் கோட்டைத் தொட்ட குதிரை எனில் கீதா சாம்பசிவம் அவர்களின் முடிவுதான். காதல் தோல்வியால் கதைநாயகன் தற்கொலை முடிவு எடுக்கிறான் என்கிற ஜி,எம்,பி, ஸாரின் நெகடிவ் எண்ட் முடிவுக்கு மாற்றாகச் சிந்தித்தால் பாஸிடிவ் எண்ட் கொண்ட இந்த முடிவு சரியாக இருப்பதாக என் உறுதியான கருத்து

பரிசை வென்ற கீதா சாம்பசிவம் மேடத்துக்கு என் மகிழ்வான நல்வாழ்த்துக்கள்..!. தங்கள் பங்களிப்பின் மூலம் போட்டியைச் சிறப்பாக்கிய போட்டியாளர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளும்., கை குலுக்கல்களும்..! என் மீது நம்பிக்கை வைத்து கு.த,பனங்காய் போல இப்படி ஒரு  பெரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த ஜி.எம்.பி ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும்  நமஸ்காரங்களும்