Saturday, December 31, 2016

நினைவடுக்குகளில் ஒரு பயணம்


                       நினைவடுக்குகளில் ஒரு பயணம்
                     -------------------------------------------------


இப்போதெல்லாம் மிகவும்  தெரிந்தவர்களின் பெயர்கள் உடனே நினைவுக்கு வருவது இல்லை உணவு உட்கொள்ளும் போது பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளும் ஏதொ ஒன்று போல் எடுக்காவிட்டால்  அமைதி இருப்பதில்லை. அதுபொல் தான் தெரிந்தவரின்  பெயர் நினைவுக்கு வராவிட்டால் மனம் அழுந்துகிறது இது பற்றி நான்  முன்பே எழுதி இருக்கிறேன் 
சில பழைய புகைப்படங்களை நோக்கிக் கொண்டிருந்தேன்  கோயமுத்தூரில் ஒரு நண்பனின்  மகளது திருமணத்துக்குச் சென்றபோது  எடுத்தவை ஒவ்வொரு வரையும்  அடையாளம் காட்ட மனம்  விரும்பியது  அதில் ஒருவர் எனது நல்ல நண்பர் மிகவும்  தெரிந்தவர் பெயர் நினைவுக்கு வரவில்லை  இது எப்படி என்றால் நீலாம்பரி நினைவுக்கு வருவாள் அவளது இயற்பெயர் நினைவுக்கு வராது நண்பர் குறித்த பல நினைவுகள் அலை மோதின. ஆனால் அவர் பெயர் மட்டும் நினைவுக்கு வரவில்லை.  பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மனைவியின்  துணை நாடுவேன்   ஆனால் இந்த நண்பர் என்  மனைவிக்குப் பரிச்சயப்படாத அலுவலக நண்பர் எனக்கோ திலகவதி அம்மையாரின் தம்பியின் பெயர்தானோ என்னும் சந்தேகம் எழுந்தது ஆனால் ஒரு பெயர் பெற்ற படைத்தளபதியின்  பெயர் என்றும் நினைவுக்கு வந்தது ஏதோ சினிமாவில் ராதிகா தன்  கிளிக்கு இப்பெயர் சூட்டி இருந்தார் என்றெல்லாம் நினைவுக்கு வந்தது ஆனால் அந்தப் பெயர் மட்டும்  ஞாபகத்துக்கு வரவில்லை
 இரண்டு நாட்களாக இதே நினைப்பு/ அந்தப் பெயர் என்னை வாட்டிக்கொண்டு இருந்தது திடீரென்று யுரேகா என்று கத்த வேண்டும் போல் இருந்தது  பெயர் நினைவுக்கு வந்து விட்டது அந்தப் பெயரை உங்களால் யூகிக்க முடிகிறதா நண்பர்களே பரஞ்சோதி
 பெயர் நினைவுக்கு வந்தபின்  என்னால் நினைத்துப்பார்க்கப்பட்ட வர்களின் கதைகளைத் தேடிப் பார்த்தேன்   திலகவதி அம்மையாரின்  தம்பி பெயர்   மருள் நீக்கி என் அறியப்பட்ட திருநாவுக்கரசர்   பல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்தவர் கருணாகரத் தொண்டைமான்  இவருக்கு பரஞ்சோதி என்னும் பெயர் இருந்த தெரியவில்லை.  ராதிகாவின் கிளிக்குப் பெயர் பரஞ்சோதிதான் 
 அப்பாடா ஒரு வழியாகப் பெயரை நினைவடுக்குகளில் இருந்து தேடி எடுத்துவிட்டேன்
 இ AAADD Syndrome ஆக இருக்காம் என்றோன்றுகிறார்க்கையிவ
அனைவுக்கும் பத்ாண்டினல் வாழ்த்ுகள்  
 Top of Form
Bottom of Form


'

Tuesday, December 27, 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே


                                என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே
                               -------------------------------------------------[

இப்படி இருந்த நான் .....
என் சென்றபதிவு “காலைக் காட்சிகளில் ” அந்த நிகழ்வு என்னில் என்னென்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது என்று முடித்திருந்தேன்  இந்த வயதில் என்ன சிந்தனைகள்தான்  இருந்திருக்கும்  ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது  என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன்  அவை என்  அனுபவங்களைச்
சார்ந்தது. அந்த அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால் அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும்  கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி நான்  நினைக்கும் போது பிறரும் என்ன்  நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
 அப்போது
    வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
என்று தோன்றுகிறது மேலும்

 ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ

யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?

காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நீயோர்  ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
இப்படியாகி..........


என்னும் எண்ணங்களே மேல் நோக்கி வரும்   வாழ்ந்து முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும்  என்  முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன்  என்ன, யாருக்கும்  எந்த தொந்தரவும்  தராமல் போய்ச் சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது காலா என்  அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான் வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன்  என்  தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி

என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்

  
          என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
         
மூடிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.

 பதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா எனக்கு எப்படி தெரியும்  நான் இறந்து விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை மட்டுமல்ல பலவும்  என்  சிந்தனைகளின்  தொகுப்பே

இப்போது இப்படியாகி விட்டேன் ....!

.


Thursday, December 22, 2016

காலைக் காட்சிகள்

                         காலைக் காட்சிகள்
                         ---------------------------


பொழுது புலரும்  வேளை. சேவல் கூவும்  நேரம்   பறவைகள் இரைதேடக் கிளம்பும்  நேரம் அதிகாலைத் தூக்கம்  சுகமானது  இருந்தாலும்  சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும். பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம் கேட்கும்
 நிச்சயம் விடிந்து விட்டது என்பது மனைவி குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின் பாட்டுகளைக் கேட்டால் தெரிந்து விடும்  
குளிப்பதுடன் கூடவே தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது

“ அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு
என்று அவள் கூறும் ஸ்தோத்திரமும் நான்  எழவேண்டியதை உறுதிப் படுத்தும்
நான்  எழுந்து காலைக்கடன்களை முடித்து நடக்கப் போகும்  முன்  மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி பிஸ்கட்களை தருவாள் வெறும்  வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம்   காஃபி குடித்து நான் நடக்கத் தயாராவேன்    
 மருத்துவர்களின் ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான்  தினமும்  சிறிது தூரம்  நடக்க வேண்டும் நல்ல வேளை வீட்டின்  அருகிலேயே ஒரு பூங்கா போன்றதொன்று இருக்கிறது  நடை பயில ஏற்ற இடம்  நீளவாக்கில் இருக்கும் அகாக்கில் இரு பைகள் சுமார் எட்டு அடி அகத்ில்.  ஒரு முறை சென்று வந்தால் ஒரு கிலோமீட்டர்தூரம்  வரும்  தினமும் நான் இரண்டு முறை சென்று வருவேன் அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம்  நடப்பேன்  இதே தூரத்தை முன்பெல்லாம் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்  இப்போது வேகம் குறைந்து விட்டது  சுமார் 35 நிமிடங்கள் ஆகின்றன
நடக்க வருபவர்களைக் கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு எழுத சில ஐடியாக்கள் வரும்  முன்பொரு முறை இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க) போய்ச்சேர் வீடு நோக்கி என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே  என்ன நான் நடப்பது காலை வேளையில் அதையே மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான் அந்த  இடுகை
நடக்கும்  பாதையில் நாய்களின் ராச்சியம் நடக்கும்  ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு மூன்று நாய்களும் நடக்கும்  அவர் அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு  நன்றி மறக்காதவை காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பென்சுகளில்  வயதான பெண்களின்  குழுக்களும்  இருக்கும் அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க வந்தவர்களா என்னும்  சந்தேகமும்  எழும் நடக்க வருபவர்களில் சிலர் ஓடுவதும்  உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள் என்னைக் கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னருத்தி பந்தையக் கிரை போல் இருப்பாள் செருகியொண்டையில் முடியின் நுனிஆடி அசந்து கும்  ஒருமுறை என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை  உதிர்த்தாள் பின்  அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம் புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன்  அவளது அந்தப் புன்னகை என்னை ஈர்த்ததுநடக்கும் பாதையில் முன்பு ஒரு எலி வளை இருந்தது  பின் அது எறும்புப் புற்றாக மாறியது  அதற்கு பாம்புப் புற்றின்  அந்தஸ்து அளிக்கப்பட்டு  சிலர் பாலூற்றி வழிபடவும்  தொடங்கினர் . அந்த இடத்கில் சில நாகர்களின் சிலைகள்பிரதிஷ்டை செய்யப்பட்ட  முன்பு ஒரு பதிவில் யார் கனவிலாவது கடவுள் தோன்றிஅங்கு கோவில் எழுப்பச் சொல்லலாம் என்றும்  எழுதி இருந்தேன் அண்மையில் அந்த இடத்தைச் சுற்றி சிமெண்ட் பூசப்பட்டிருக்கிறது  பல நேரங்களில்  பூசைகள் நடக்கின்றன. ஒரு முறை நான் நடந்து வரும்போது ஒரு நாய் அந்த நாகர் சிலைகள் மீது பின்னங்கால்களை தூக்கி உச்சா போய் அபிேகம் ெய்வைக் கண்டேன் நம் நம்பிக்கைகளின்  மேலும்  நம் கடவுளர்களின்  மேலும்  அனுதாபம் பிறக்கிறது  
நடக்க வருபவர்களில்தான் எத்தனை வகை  சிலர் நேரம் தவறாமல் வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள்.  சில வயதானவர்களுக்கு நடைபாதைப் பென்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது  எனக்குத்தான்  யாரும் நண்பர்கள் இங்கு இல்லை.  1994-ம் வருட வாக்கில்  என்  வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில் வாக்கிங்கும் ஜாகிங்கும்  செல்வேன்  அவர் என்னைவிட மிகவும்  இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல் ஜாகிங் செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும்  குறைகிறது இந்த நடை ஒன்றுதான் எனக்கிருக்கும்  ஒரே தேகப்பயிற்சி
 ஒரு முறை நடந்து செல்லும்  போது  பாதையில் ஒருவர் விழுந்து கிடந்தார்  அவரைப் பார்த்தால் குடித்து விழுந்தவர் போல் தெரியவில்லை.  அவருக்கு ஏதாவது உதவி செய்ய மனம் விழைந்தது. என்னால் என்ன உதவி ெய்ய  முடியும்  நான்  அங்கு நின்று கவனிப்பதைப் பார்த்து ஓரிருவரும் அங்கு நின்றனர் என்னால் அவருக்கு எந்த உதவியும்  செய்ய முடியாதென்று தெரிந்து நான் என் நடையைத் தொடர்ந்தேன்  திரும்பி அதே பாதையில் வரும்போது சிலர் அவரை அருகில் இருந்த பென்ச் ஒன்றில் அமரவைத்து என்னவோ கேட்டுக் கொண்டிருந்தனர் எல்லோரும் என்னைப் போல் அகன்று விடாமல் உதவி செய்ததைப் பார்க்கும் போ என்னைவிட நல்லவர்களிருக்கிறார்கள் என்னும்  நம்பிக்கை வந்தது மேலும் அங்கு விழுந்து கிடந்தவர் கதி எனக்கும்  வரா என்பது என்ன நிச்சயம்  என்னதான்  தைரிய சாலியாக இருந்தாலும்  நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன்  நான்  அந்த நிகழ்வு என்னில் என்ன என்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது  அதுவும்  ஒரு பதிவாகிறது அடுத்து       
.