வியாழன், 8 டிசம்பர், 2016

இனி நீயெல்லாம் உன் நினைவுதான் அம்மா


              இனி நீயெல்லாம் உன் நினைவுதான்  அம்மா
                                                     ---------------------------------------------------------------

அம்மா ஜெயலலிதா
  
         இன்று நீ இருந்த அரசுகட்டில்  அனாதையாகி விட்டது . எங்கு   பார்த்தாலும் உன் பேச்சுஎங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்பின் எப்படித்தான் இருக்க முடியும்.? அம்மா உணவகம், அம்மாகுடிநீர்.  அம்மா மருந்தகம்  அம்மா மிக்சி, அம்மா க்ரைண்டர்  அம்மாவின் கருவூலம் டாஸ்மாக்  ஆனால்  நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.
        
அம்மா சிந்திக்க வேண்டும்ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயேநீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும்சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்   யார் இருக்கிறார்கள் எங்களுக்கு  இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறதுஎண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.
      
அதெப்படி அம்மா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டி வாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?
       
அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயே நினைவிருக்கிறதா  ஓரளவுக்காவது சீர் செய்ய மாற்ற முடியாதபடி 69% ஒதுக்கீடு என்பதை சட்டமாக்கி விட்டாயே  அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
       காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  சிந்திப்பாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயேயார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயேபலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும்   என்னவெல்லாம் வழிமுறைகள் இருக்கின்றனவோ அத்தனையும் கடை பிடித்தாயே ,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று  ீ நினைத்திருக்க வேண்டும்       அது  உன் நினைவுக்கு வராது நீதான் நீயாக இல்லாமல்  நினைவாக மாறிவிட்டாயே     
        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட  அரசியல் நெளிவு சுளுவுகளை  உன் இஷ்டத்துக்கு வளைத்துப்போடும்  லாகவம் உனக்குத் தெரிந்திருந்ததே அரசியல் நியதிகள் எல்லாம் நமக்கு  நாமே ஏற்படுத்திக் கொண்டது அதை புரிந்து செயல் படுவதே சாணக்கியத்தனம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தாய் நீ அரசியலில் நிரந்தரப் பகையும் இல்லை நிரந்தர நட்பும் இல்லை என்பதை நன்கு அறிந்து செயல் படுத்தினாயே ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் நியாயம் என்றும் செயல் படுத்தினாயே , கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு கேட்பவரையே உண்ட இல்லாமல் செய்துவிடும் வித்தை உனக்குக் கைவந்த கலையாயிற்றே அம்மா  வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று நினைத்துக் கொள்வாயே அம்மா உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாய
      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாய,  அம்மா.
     
சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் என் ஆட்சி முறை என்று நினைத்தாயோ நிரந்தர பொதுச் செயலாளர் என்று பிறர் கூறுவது கேட்டு நீ மகிழ்ந்திருக்கலாம்  ஆனால் உனக்குப் பின் யார் என்று கோடி காட்டி இருப்பாயா அரசாட்சி ஆண்டவன்  எனக்களித்த மானுடத் தொண்டு செய்யும்  வாய்ப்பு எனக் கூறி இருப்பதாக நினைவு பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ  நினைத்திருக்கலாம்  இந்த தமிழகம் நீயின்றித் தவிக்கும்  என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா , கிளை பரப்பி நிழல் தரும்  ஆலைப் போல் ஆனால் தன்னில் எையும் வளரவிடாத  தருவாகி விட்டாயே. சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.

  .   



    


20 கருத்துகள்:

  1. நான் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. அருமை. மனதில் உள்ளதைக் கொட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நானும் தங்களிடமிருந்து இதுபோன்ற பதிவினை எதிர்பார்க்கவில்லை ஐயா
    இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்

    பதிலளிநீக்கு

  3. @ ஸ்ரீராம்
    என்ன எதிர்பார்த்தீர்கள். தவறாக ஏதும் எழுதவில்லையேநான் எழுதியதில் பொருட்குற்றமோ சொற்குற்றமோ இருக்கிறதா புரியவில்லையே நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  4. மறைந்ந்தவர்களை தூற்றுவது நிச்சயம் அழகல்ல! அதே சமயத்தில் மறைந்த ஒரு நண்பரைத் தோழியை, தாயையை, மனைவியை, சகோத்அரியை இறந்த பிறகு உங்கள பதிவில் எழுதியது போல் எழுதிப் புகழ்ந்தால் அது நிச்சயம் அழகாகத் இருக்கும். ஏனென்றால் அவ்வுறவு "பர்சனல் உறவு"! ஆனால் மறைந்த ஒரு "சாதாரண" அரசியல்வாதியை இந்தளவுக்கு நீங்கள் புகழ்பாடி எழுதியிருக்கும் இப்பதிவு ஏனோ அழகாகத் தெரியவில்லை, ஜி எம் பி சார்!

    மன்னித்துக்கொள்ளுங்கள் சார்.

    பதிலளிநீக்கு

  5. @ கில்லர்ஜி
    இன்னும் உங்கள் ஃபோனில் இருந்துதான் எழுதுகிறீர்களா வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  6. @ கரந்தை ஜெயக்குமார்
    பின்னூட்டம் புரியும்படி இருந்தால் தெரிந்து கொள்வேன் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு

  7. @ வருண்
    வணக்கம் என் பதிவை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் இருப்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் அதில் புகழ் மட்டும் இல்லை.அவரது சில குறைகளையும் பதிவிட்டிருக்கிறேன் உங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள் அழகாகத் தெரியாதது என் குறையே வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  8. தங்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமான பதிவு இது என்று தோன்றியது.எங்கள் அஞ்சலிகளும்..

    பதிலளிநீக்கு

  9. @ துளசிதரன் தில்லையகத்து
    என்ன வித்தியாசம் என்று சொல்லி இருக்க வேண்டாமா. நடையிலா பொருளிலா புரிந்து கொள்ள வேண்டாமா முதல் பின்னூட்டம் போல் மற்றதும் இருப்பது சரியா

    பதிலளிநீக்கு

  10. @ துளசி கோபால்
    அதற்கு என்ன அர்த்தம் ?

    பதிலளிநீக்கு

  11. @தளிர் சுரேஷ்.
    நான் இதை ஒரு இரங்கல் பதிவாக எழுத முனையவில்லை. அவரைப் பற்றிய ஒரு விமரிசனமாகத்தான் எழுத முயன்றேன் இரங்கல் பதிவு போல் ஆகிவிட்டது வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  12. @ சோழ நாட்டில் பௌத்தம்
    வன்மம் கொண்ட பெண்மணியாகப்வே இருந்தார் என்று தோன்றுகிறது அவரும் ஒருவரின் எடுப்பார் கைப் பாவையாகி விட்டார் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  13. @ பரிவை சே குமார்
    அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் / ததாஸ்து

    பதிலளிநீக்கு
  14. ஓர் வெற்றிடம் உருவாகித் தான் விட்டது. அதை நிரப்ப யாரும் இல்லை. மற்றபடி உங்கள் பதிவு சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. உங்கள் அம்மாவோ என்று நினைத்து இருந்தேன்.:)

    பதிலளிநீக்கு

  15. @ கீதா சாம்பசிவம்
    ஒன்று மட்டும் புரிகிறது நான் எழுதுவதை ஏதோ விதத்தில் சிலர் எதிர்பார்க்கிறார்கள் என் அம்மா பற்றி எழுதி இருப்பதாக நினைத்தது ஆச்சரியம் அளித்தது இந்தப் பதிவை ஒரு விமரிசகனாகத்தான் எழுதி இருக்கிறேன் நோ பயஸ் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு